யெகோவாவின் சாட்சிகளாக நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்
1 யெகோவாவின் சாட்சிகளாக பூமியில் நமக்கு மிகப்பெரிய சிலாக்கியம் இருக்கிறது. நாம் ஒரு சர்வலோக நீதிமன்ற வழக்கில் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்கிறோம். இவ்வழக்கு கடவுட்களாக வணங்கப்படும் எல்லாவற்றையும் விசாரணையில் வைக்கிறது. (ஏசா. 41:1, 23; 43:12) நம் நம்பிக்கையை தகுந்த விதத்தில் தற்காத்துக் கொள்வதில் நமக்கு உதவி செய்ய யெகோவா நன்கு சேகரித்து வைக்கப்பட்ட பிரசுரங்களாலான ஒரு நூலகத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். (1 பேதுரு 3:15) நமக்கு தேவையான தகவலை கண்டுபிடிப்பதற்கு காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் ஒரு முக்கியமான திறவுகோலாயிருக்கிறது. அதன் முக்கியமான அம்சங்களில் சிலவற்றோடு பழக்கப்பட்டிருப்பது, அதை உபயோகிப்பதில் நம்மை அதிக திறமையுள்ளவர்களாக ஆக்கும்.
2 “யெகோவா” என்ற முக்கிய தலைப்போடு நாம் அனைவரும் நன்கு அறிமுகமாயிருக்க வேண்டும். 1986–1989 இன்டெக்ஸ்-ல் அந்தத் தலைப்பின் கீழ், தீமையை யெகோவா தற்காலிகமாக அனுமதித்திருப்பதை விளக்கும் மேற்கோள்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? 1930–1985 இன்டெக்ஸ் மற்றும் தற்போதைய இன்டெக்ஸ்-ல் மத்திபமாக்கப்பட்ட “பெயர்” என்ற தலைப்பை நீங்கள் காண்பீர்கள். யெகோவா என்ற பெயரை பற்றி பிரசுரிக்கப்பட்ட எல்லாவற்றையுங் குறித்த மேற்கோள்கள் இங்கு ஒன்று சேர்க்கப்பட்டிருக்கின்றன.
3 மற்றொரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு “யெகோவாவின் சாட்சிகள்” என்பது. ஓர் அமைப்பாக யெகோவாவின் சாட்சிகள் என்பதைப் பற்றிய மேற்கோள்களை அது ஒன்று சேர்த்து கொண்டுவருகிறது. உயர் கல்வி, சாவின் பின் ஆய்வு, தற்காப்புக்காக கொலை செய்வது அல்லது பொது நல உதவி ஆகியவற்றின் பேரில் நமது முறைமையான நோக்கு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பேர்ப்பட்ட கேள்விகளுக்கான மேற்கோள்களை “—சம்பந்தமாக நோக்குநிலை” என்ற உபதலைப்பின் கீழ் நீங்கள் காணலாம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் நவீன கால சரித்திரங்கள் அதோடு பட்டியலிடப்பட்டிருக்கின்றன. “மற்றவர்களால் கூறப்பட்ட கூற்றுகள்” என்ற மத்திய தலைப்பின் கீழ் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய ஒரு விரிவான குறிப்புகளாலான பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
4 யெகோவாவின் ஜனங்கள் நவீன காலங்களில் எவ்வாறு தங்கள் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதைப் பற்றிய தகவலை பல பிரதான தலைப்புகளை உபயோகித்து தேடிக்கண்டுபிடிக்கலாம். “தேதிகள்” என்ற தலைப்பின் கீழ் “நம்பிக்கைகளைத் தெளிவாக்குதல்” என்ற ஒரு மத்திபமாக்கப்பட்ட தலைப்பு இருக்கிறது. கோட்பாடுகள், தீர்க்கதரிசனம், தீர்க்கதரிசன மாதிரிகள் ஆகியவற்றின் நம் புரிந்துகொள்ளுதலின் பேரிலான பெரிய தெளிவாக்குதல்களுக்கான மேற்கோள்கள் ஒழுங்காக, வருடமாக பட்டியலிடப்பட்டிருக்கின்றன. “தீர்க்கதரிசன முக்கியத்துவம் வாய்ந்த தேதிகள்” ஏறக்குறைய உடனடியாக பின்தொடருகிறது. இவை தீர்க்கதரிசனங்கள் அல்லது தீர்க்கதரிசன மாதிரிகள் நிறைவேற்றமடைந்த அல்லது நிறைவேற ஆரம்பித்த வருடங்கள்.
5 யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களின் வாழ்க்கைச் சரிதைகள் நமக்கு உற்சாகத்துக்கும் போதனைக்கும் ஓர் ஊற்றுமூலமாய் இருக்கிறது. நம் பிள்ளைகளிலும் பைபிள் மாணாக்கர்களிலும் எதிர்காலத்துக்கான ஓர் உறுதியான அஸ்திபாரம் போட அவைகள் நமக்கு உதவிசெய்யும். இந்த வாழ்க்கை சரிதைகள் தனிப்பட்ட பெயரால் பட்டியலிடப்பட்டிருப்பதையும் கட்டுரை தலைப்பு “யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதைகள்” என்பதன் கீழிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.
6 யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முடிவுகளைப் பற்றிய வேதாகம போதகம், யெகோவாவின் மக்களுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது—பரலோகத்துக்குரிய ஒன்று மற்றும் பூமிக்குரிய ஒன்று. “பரலோக அழைப்பை” பெற்றிருப்பவர்களைப் பற்றிய மேற்கோள்களை “கடவுளின் சபை” என்ற முக்கிய தலைப்பின் கீழ் நாம் காணலாம். (எபி. 3:1; அப். 20:28; 1 தீமோ. 3:15) “மீதியானோர்,” “1,44,000” போன்றவை மற்ற தலைப்புகள். “திரள் கூட்டம்” மற்றும் “வேறே ஆடுகள்” என்ற இரண்டு தலைப்புகள் பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையுடையவர்களைப் பற்றிய தகவலை சுட்டிக் காட்டும் முக்கிய தலைப்புகளாகும்.—வெளி. 7:9; யோ. 10:16.
7 நாம் இளைஞராயிருந்தாலும், வயதானவராயிருந்தாலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருக்கும் சிலாக்கியம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உட்படுத்துகிறது. நம் ராஜ்ய ஊழியம் பிரதியின் எதிர்கால கட்டுரைகள் இன்டெக்ஸ் எவ்வாறு நம் ஊழியத்தில், சபையில், குடும்பத்துக்குள், வெளி ஊழியத்தில் நமக்கு உதவி செய்யும் என்பதை காண்பிக்கும்.