சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு
பகுதி 1: படிப்பு நடத்துபவரின் உத்தரவாதம்
1 யெகோவாவின் ஜனங்களின் ஆவிக்குரிய முன்னேற்றத்தில் சபை புத்தகப்படிப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. சபை புத்தகப் படிப்பு ஏற்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும், நாம் எவ்வாறு நன்மையடையலாம் என்பதைப் பற்றியும் வரப்போகும் மாதங்களில் நாம் ஆராய்வோம். புத்தகப்படிப்பு நடத்துபவர் படிப்பை எவ்வாறு உற்சாகமூட்டுவதாயும், விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் ஆக்கலாம் என்பன் பேரில் இந்த இதழில் நாம் கவனத்தை ஒருமுகப்படுத்த விரும்புகிறோம்.
2 தன் கற்பித்தலில் திறம்பட்டவராயிருக்க வேண்டுமென்றால், நடத்துபவர் நன்கு தயாரிக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையின் கருத்தார்ந்த மாணாக்கனான, ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், அந்தப் பதில் ஏன் சரியானது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் இருக்கும் அனைவரும் பதில்களுக்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கு அவர் உதவி செய்யவேண்டும். (1 பேதுரு 3:15) இது அந்த விஷயத்துக்கான அவர்களுடைய போற்றுதலை ஆழப்படுத்தும்.
படிப்பை நடத்துவதில் இலக்குகள்
3 ஆஜராயிருக்கும் எல்லாரின் விசுவாசத்தையும் பலப்படுத்துவதற்கு படிப்பில் இருக்கும் பொருளை உபயோகிப்பதும் அவர்கள் கடவுளுடைய சித்தத்தை முழுமையாக செய்வதற்கு உந்துவிப்பதும் நடத்துபவரின் ஓர் இலக்காகும். (சங். 110:3; 2 தெச. 1:3–5) இதை நிறைவேற்றுவதற்கு, யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் அவருடைய அமைப்பிலும் இருதயப்பூர்வமான நம்பிக்கையை வளர்க்கும் குறிப்புகளை ஆழமாகப் பதிய வைக்க நடத்துபவர் பொருத்தமான இடங்களில் கட்டாயம் நிறுத்த வேண்டும். (கலா. 6:6, Ref. Bi. ftn.) நேரம் அனுமதிக்குமேயானால் இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை வளர்க்கும் விவரங்களை வரவழைப்பதற்கு திறம்பட்ட விதமாக அமைக்கப்பட்ட கேள்விகள் உபயோகப்படுத்தப்படலாம்.
4 நடைமுறையான விதத்தில் விஷயங்களை அவர்கள் எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் காண உதவி செய்வது மற்றொரு இலக்காகும். அதை அவர்கள் வெளி ஊழியத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம்? சகோதரர்களையும், புதியவர்களையும் உற்சாகப்படுத்துவதில்? அவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் பலப்படுத்துவதில்? சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் தயாரிக்கையில், படிப்பில் இருக்கும் திட்டவட்டமான குறிப்புகளின் நடைமுறையான உபயோகத்தை தெளிவாக அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
5 சில தகவல்கள் விசுவாசத்தில் இல்லாத உறவினர்கள், பள்ளித் தோழர்கள் அல்லது உடன் வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு உதவி செய்ய உபயோகிக்கப்படலாம். பிளவுபட்ட குடும்பங்களில் இருப்பவர்கள் அல்லது ஒருவேளை ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு வேறு சில விஷயங்கள் உதவலாம். அவர்கள் காரணத்தோடு விளங்கிக் கொள்ள உதவி செய்து, சிந்திக்கப்படும் விஷயத்தை அவர்கள் எவ்வாறு நடைமுறையான பொருத்தம் செய்யலாம் என்பதை நடத்துபவர் ஆஜராயிருப்பவர்களிடமிருந்து வரவழைக்கலாம். விஷயங்களை வெறுமென கேள்வி–பதில் மூலமாக சிந்திப்பதை விட படிப்பை அதிக ஆர்வமுள்ளதாக வைக்க நடத்துபவர் முயற்சி செய்ய வேண்டும்.—1 கொரி. 14:9, 19-ஐ ஒப்பிடுக.
தனிப்பட்ட அக்கறை காண்பியுங்கள்
6 தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட அக்கறையை எடுப்பதன் மூலம், நடத்துபவர் முழு பங்கெடுப்பை உற்சாகப்படுத்தலாம். பயந்த சுபாவமுடையவர்கள் வசனங்களை வாசிப்பதற்கு முன்னதாகவே நியமிக்கப்படலாம், அல்லது பதில் சொல்வதற்கு தயாரிக்க முன்னதாகவே அவர்களுக்கு ஒரு கேள்வி கொடுக்கப்படலாம். தங்கள் சொந்த வார்த்தைகளில் குறிப்பு சொல்ல எல்லாரும் முயற்சி செய்ய வேண்டும். குறிப்புகளுக்கு கவனமாக செவி கொடுப்பதன் மூலம், தனிப்பட்ட உதவி தேவைப்படும் சிலர் இருக்கிறார்களா என்பதை நடத்துபவர் முடிவுசெய்யலாம். அப்பேர்ப்பட்ட தனிப்பட்ட கவனிப்பை கொடுப்பதற்கு உதவி செய்ய தொகுதியில் இருக்கும் அனுபவமுள்ள மற்றவர்களை உபயோகிக்கலாம்.
7 சபை புத்தகப் படிப்பு நமக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறது. இது சிறிய தொகுதிகளில் கூடிவரவும், அதிகமான தனிப்பட்ட கவனத்தைப் பெற்றுக்கொள்ளவும் நமக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. மற்ற கூட்டங்களைக் காட்டிலும் இது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. யெகோவாவில் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கும், கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்காக உங்கள் போற்றுதலை வளர்ப்பதற்கும் ஒவ்வொரு படிப்பையும் உபயோகிக்க உங்களுடைய சபை புத்தகப் படிப்பு நடத்துபவர் தன் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக் கொள்கிறார்.