நம்முடைய சபை புத்தகப் படிப்புநடத்துபவரோடு ஒத்துழைத்தல்
1 நற்செய்தியின் ஊழியர்களாக நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதில் சபை புத்தகப் படிப்பு ஓர் இன்றியமையாத பாகத்தை வகிக்கிறது. பைபிளையும் சங்கத்தின் பிரசுரங்களில் ஒன்றையும் படிப்பதற்கு ஓர் அனலான, குடும்பம்போன்ற சூழமைவை உற்சாகப்படுத்துவதற்காகவே இந்தத் தொகுதிகள் சிறியவையாக வைக்கப்படுகின்றன. வெளி ஊழியத்தில் அதிக பலன்தரக்கூடியவர்களாக நாம் பயிற்றுவிக்கப்பட இத்தகைய சிறிய தொகுதிகள் அதற்குத் தகுந்த சூழ்நிலைமைகளையும் ஏற்படுத்துகின்றன. புத்தகப் படிப்பு ஏற்பாட்டின் மூலம் நபர்களுக்கு வேண்டிய தனிப்பட்ட உற்சாகமும் கவனமும் உடனடியாக கிடைக்கிறது. நாம் எவ்வாறு படிப்பு நடத்துபவரோடு முழுமையாக ஒத்துழைத்து இந்தச் சிறந்த ஏற்பாட்டிலிருந்து நன்மைபெறலாம்?
2 வெளி ஊழியத்தில் ஓர் ஆர்வமிக்க பங்கைக் கொண்டிருப்பது: சபை புத்தகப் படிப்பு நடத்துபவருக்கு இருக்கும் ஒரு மிக முக்கியமான உத்தரவாதம் என்னவெனில், அந்தத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஊழியத்தில் ஓர் ஆர்வமிக்க பங்கைக் கொண்டிருப்பதற்கு உதவி புரிவதேயாகும். இதன் சம்பந்தமாக, நம் ஊழியம் புத்தகம் பக்கம் 44-ல், “வெளி ஊழியத்தில் அவர் தவறாமல் பங்கெடுப்பதும் அதில் அவர் காட்டுகிற ஆர்வமும் ஊக்கச் சுறுசுறுப்பும் பிரஸ்தாபிகளில் பிரதிபலிக்கும்,” என்று நமக்கு நினைப்பூட்டுகிறது. சிலசமயங்களில், நடத்துபவர் ஊழியத்தில் தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினர்களோடு வேலை செய்வார், ஆனால் அவருடைய சூழ்நிலைமைகள் அனுமதிப்பதற்கேற்ப, ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் மற்றவர்களோடுகூட சேர்ந்து செல்வதற்கும் அவர் சந்தோஷப்படுவார். நீங்கள் வெளி ஊழியக் கூட்டங்களுக்கு ஒழுங்காக உங்களுடைய ஆதரவைத் தரமுடியுமா? உங்களுடைய புத்தகப் படிப்பு நடத்துபவரும் மற்ற பிரஸ்தாபிகளும் நீங்கள் ஆதரிப்பதை மிகவும் போற்றுவர்.
3 அனைவரும் பிரசங்க வேலையில் ஓர் ஆர்வமிக்க பங்கைக் கொண்டிருப்பதற்கு வெளி ஊழியக் கூட்டங்கள் செளகரியமான இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. உள்ளூர் சூழ்நிலைமைகளைச் சிந்தித்துப்பார்த்து, ஒவ்வொரு தொகுதியும் ஊழியத்தைச் சீக்கிரமாகத் துவங்கவேண்டும். அநேக பிரஸ்தாபிகளும் பயனியர்களும் வார இறுதியில், மத்தியான வேளைக்குப் பிறகும் ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபடும்போது நல்ல வெற்றியைக் காண்கின்றனர்.
4 ஊழியத்தின் ஏதாவது அம்சத்தில் உங்களுக்கு உதவி வேண்டுமா? ஒருவேளை உங்களுடைய புத்தகப் படிப்பு நடத்துபவர், தொகுதியிலிருக்கும் ஒரு திறம்பட்ட பிரஸ்தாபியை உங்களோடு வேலைசெய்ய ஏற்பாடு செய்வார். மாத கடைசியில், தவறாமல் உங்களுடைய வெளி ஊழிய அறிக்கையை எழுதிக் கொடுப்பதற்கு நிச்சயமாயிருங்கள். நீங்கள் இந்த முக்கியமான அம்சத்திலும் ஒத்துழைப்பதைப் புத்தகப் படிப்பு நடத்துபவரும் செயலரும் போற்றுவர்.—லூக். 16:10-ஐ ஒத்துப்பாருங்கள்.
5 ஊழியக் கண்காணி தொகுதியைச் சந்திக்கையில்: வெளி ஊழியத்தில் இன்னும் அதிகமாகவும், மிகவும் அர்த்தமான முறையிலும் ஈடுபட உற்சாகப்படுத்துவதற்கு, ஊழியக் கண்காணி சாதாரணமாக மாதந்தோறும் ஒரு புத்தகப் படிப்புத் தொகுதியைச் சந்திக்கிறார். புத்தகப் படிப்பின் முடிவில் அவர் கொடுக்கும் அந்த 15-நிமிட பேச்சுக்குக் கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள், இது பிரசங்க வேலையின் வெவ்வேறுபட்ட அம்சங்களில் அந்தத் தொகுதி முன்னேற உதவுவதற்குக் குறிப்பான ஆலோசனையை அளிக்கக்கூடியதாயிருக்கும். வார இறுதியில் அந்தப் புத்தகப் படிப்பிலுள்ள வித்தியாசப்பட்ட உறுப்பினர்களோடு வேலைசெய்யவுங்கூட ஊழியக் கண்காணி ஆவலுள்ளவராயிருக்கிறார். ஊழியத்தில் அவருடைய அனுபவத்திலிருந்தும் திறமையிலிருந்தும் நன்மைபெற இந்த விசேஷ ஏற்பாட்டை அனுகூலப்படுத்திக்கொள்ள நிச்சயமாயிருங்கள்.
6 “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்”பவர்களாக, ஒத்துழைப்பதில் நம்முடைய தனிப்பட்ட முன்மாதிரியும் அனுபவம் குறைந்த ஆட்களுக்கு நாம் மனமுவந்து உதவி செய்வதும் சபை புத்தகப் படிப்பில் ஓர் அனலான, சிநேகப்பான்மையான சூழமைவை உண்டுபண்ண உதவி செய்வதாயிருக்கும்.—கலாத். 6:10.