சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு
பகுதி 3: ஒரு வெளி ஊழிய மையம்
1 தொகுதியாக படிப்பதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்வதோடுகூட, சபை புத்தகப்படிப்பு இடம் வெளி ஊழியத்துக்கு கூடும் இடமாகவும் சேவிக்கலாம். இப்படிப்பட்ட கூட்டங்களுக்கான நேரங்கள் பிரஸ்தாபிகளில் அநேகருக்கு வசதியாக இருக்க வேண்டும், வெளி ஊழியத்துக்காக பிரஸ்தாபிகளை ஒழுங்கமைப்பதில் அந்தக் கூட்டங்கள் நடைமுறையான உதவியை அளிக்க வேண்டும்.
2 படிப்புக்காகவும், ஊழியத்துக்காகவும் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் ஆவிக்குரிய தன்மையை வளர்க்கின்றன. எதிர்ப்புகளை எவ்வாறு கையாளுவது, ஒரு சம்பாஷணையை எவ்வாறு ஆரம்பிப்பது, ஒரு பைபிள் படிப்பை எவ்வாறு அளிப்பது அல்லது ஒரு மறுசந்திப்பின் போது என்ன சொல்வது ஆகியவைகளின் பேரில் உற்சாகம் அல்லது ஆலோசனைகளிலிருந்து யார் பயனடையாமல் இருக்கின்றனர்? புத்தகப்படிப்பு இடத்தில் கூடிவரும் உடன் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் அப்படிப்பட்ட உதவியை அளிக்கின்றனர்.—கலா. 6:9, 10.
3 நடத்துபவரின் பங்கு: சபை புத்தகப் படிப்பு நடத்துபவர் தலைமைத் தாங்கி, தொகுதியின் வேலையை ஒழுங்கமைப்பதற்கு உத்தரவாதமுள்ளவராய் இருக்கிறார். அவர் பிரஸ்தாபிகளோடு வெளி ஊழியத்தில் ஒழுங்காக வேலை செய்கிறார். (1 பேதுரு 5:2, 3) ஊழியத்துக்காக நன்கு தயாரிக்கப்பட்ட கூட்டங்கள், வெளி ஊழியத்துக்காக தொகுதியை தகுதியாக்குவதற்கு வேதப்பூர்வ, நடைமுறையான போதனையை அளிக்கிறது. எல்லாத் தொகுதிகளும் ஓர் இடத்தில் கூடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு புத்தகப்படிப்பு தொகுதியும் தன்னுடைய சொந்த வெளி ஊழியத்திற்கான கூட்டத்தைக் கொண்டிருப்பது பொதுவாக விரும்பத்தக்கதாயிருக்கிறது. என்றபோதிலும், தேவைப்படுமேயானால் இரண்டு சிறிய தொகுதிகள் ஒன்றாக சேர்க்கப்படலாம். காவற்கோபுரம் படிப்பை தொடர்ந்து வெளி ஊழியம் இருந்தால், வெளி ஊழியத்திற்கான கூட்டம் சுருக்கமாக இருக்க வேண்டும். அதற்கு பின்பு, ஒவ்வொரு புத்தகப்படிப்பு நடத்துபவரும் தன் சொந்த தொகுதியை கவனித்துக் கொள்வார்.
4 நிலையான வெளி ஊழிய ஏற்பாடுகள், ஊழியத்தில் ஒழுங்காக பங்கு கொள்வதற்கு உற்சாகப்படுத்துகின்றன. அட்டவணையிடப்பட்டுள்ள நேரத்திலும் இடத்திலும் ஊழியத்திற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டால், பிராந்தியமும் இருக்கும், அவர்களோடு வேலை செய்வதற்கு மற்றவர்களும் இருப்பார்கள் என்பதை அறிந்து உற்சாகப்படுத்தப்பட்டு, அதற்கேற்றபடி பிரஸ்தாபிகள் திட்டமிடுவர். (லூக். 10:1-ஐ ஒப்பிடுங்கள்.) படிப்பு நடத்துபவர் ஆஜராயிருக்க முடியாவிட்டாலும், அவர் பிராந்தியம் மற்றும் தொகுதிக்கான ஏற்பாடுகளையும் செய்கிறார். (om பக். 44–5) ஊழியத்துக்கான கூட்டத்தை நடத்துவதற்கு தகுதிவாய்ந்த சகோதரர் கிடைக்காவிட்டால், இதை செய்வதற்கு நடத்துபவர் ஒரு சகோதரியை நியமிக்கலாம். (om பக். 77–8; km 4/88 பக். 3) ஊழியத்துக்கான வழக்கமான நேரத்திலும், இடத்திலும் தொகுதி ஒழுங்காக கூடினால் குழப்பம் தவிர்க்கப்படுகிறது. இதில் ஏதாவது தற்காலிக மாற்றங்கள் இருந்தால், கூடுமானால் ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும்.
5 ஒத்துழைப்பு தேவைப்படுகிறது: வெளி ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் ஓர் அர்த்தமுள்ள பங்கை கொண்டிருக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். சபை பிராந்தியத்தில் உண்மையில் எழும்பக்கூடிய எதிர்ப்புகளையும், சூழ்நிலைமைகளையும் உபயோகித்து பயிற்சி பகுதிகளோடு ஒன்றாக தயாரிப்பதற்கு பிரஸ்தாபிகள் முதற்படி எடுக்கலாம்.—நீதி. 27:17.
6 சீஷராக்கும் வேலையில் நீங்கள் அதிக திறம்பட்டவராக ஆவதற்கு, ஓர் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி உங்களுக்கு உதவி செய்ய நீங்கள் வீரும்புவீர்களா? அப்படியென்றால், உங்களுடைய சபை புத்தகப்படிப்பு நடத்துபவரோடு பேசுங்கள். உங்களுக்கு உதவிசெய்ய ஒரு தகுதிவாய்ந்த பிரஸ்தாபியை அவர் ஏற்பாடு செய்வார். நன்மையடைவதற்கு, ஆலோசனைகளை ஊக்கமாக பொருத்துங்கள், செய்யப்படும் திட்டங்களை ஆதரியுங்கள்.
7 உதவி செய்வதற்கு புத்தகப்படிப்பு நடத்துபவரால் நியமிக்கப்பட்டவர்கள் உதவியளிப்பவர்களாகவும், தங்கள் எதிர்பார்ப்புகளில் நியாயமானவர்களாகவும் இருக்க வேண்டும். வெளி ஊழியத்தைப் பற்றி உடன்பாடான, சமநிலையான எண்ணமும், நடைமுறையான அணுகுமுறையையும் உடையவர்கள் மற்றவர்களை பயிற்றுவிக்க சிறந்தவர்களாயிருக்கின்றனர். (km 8/79 பக். 3–4; km 9/79 பக். 3–4) முன்னேற்றம் செய்யப்படுகையில், பாராட்டு எப்போதும் தெரிவிக்கப்பட வேண்டும். பின்னர் மற்ற இலக்குகள் வைக்கப்படலாம்.—லூக். 19:17–19-ஐ ஒப்பிடுக.
8 நற்செய்தியை பிரசங்கிப்பதிலும், சீஷராக்கும் வேலையிலும் திறம்பட்டவர்களாக இருக்க நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய விரும்புவோம். அதிக மோசமாகிக்கொண்டே செல்லும் உலக நிலைமைகள், இந்த வேலையின் அவசரத்தன்மைக்கு சான்றாயிருக்கிறது. ஜீவன்கள் உட்பட்டிருக்கிறது, கூட்டிச் சேர்க்கும் வேலையை யெகோவா தீவிரப்படுத்திவருகிறார். (ஏசா. 60:22) நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை மனதில் வைத்தவர்களாய் நம்முடைய நியமிப்பை முழுமையாக நிறைவேற்றுவதற்கு ஒருவருக்கொருவர் புத்திசொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டு நம்முடைய சபை புத்தகப்படிப்பு தொகுதியோடு நாம் நெருக்கமாக வேலை செய்வோம்.—ரோமர். 12:6–8; 2 தீமோ. 4:1, 2, 5.