நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—நேரடியான அணுகுமுறையோடு படிப்புகளை ஆரம்பித்தல்
1 “சீஷராக்கும்படி” இயேசு நமக்கு கட்டளையிட்டார். (மத். 28:19) இதை நிறைவேற்றுவதற்கு, அக்கறை காண்பிப்பவர்களோடு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதை இது பொதுவாக தேவைப்படுத்துகிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நேரடியான அணுகுமுறையை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது இதை விரைவில் நிறைவேற்றுவதற்கு நமக்கு உதவி செய்யும். ஜனங்களை சந்திப்பதில் இருக்கும் ஒரு முக்கிய நோக்கத்தை தெளிவாக்கவும் உதவும்.
2 பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் நேரடியான அணுகுமுறையை உபயோகிக்கும் போது நாம் என்ன சொல்வோம்? மிகவும் எளிதான அணுகுமுறை சிறந்தது. நாம் இவ்வாறு சொல்லலாம்: “பைபிளை புரிந்து கொள்வதற்கு ஜனங்களுக்கு உதவி செய்வதில் நான் அக்கறையுள்ளவனாய் இருக்கிறேன். நான் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் உங்கள் வீட்டில் கட்டணமோ அல்லது நிபந்தனையோ இன்றி அதை படிக்க நான் சந்தோஷப்படுவேன். நாம் உங்களுடைய பைபிளை உபயோகிக்கலாம். உங்களிடம் ஒரு பைபிள் இல்லாவிடில், நான் ஒன்றை உங்களுக்குத் தருகிறேன்.”
3 மற்றொரு அணுகுமுறை இவ்விதமாக இருக்கலாம்: “இன்று நான் சந்திப்பதன் நோக்கம், வீட்டு பைபிள் படிப்பை உற்சாகப்படுத்துவதற்கு ஆகும். இது இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதையும் வருங்காலத்தில் கடவுள் நமக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவிசெய்யும். உங்களுடைய பைபிளிலிருந்து நீங்கள் எவ்வாறு அதிகத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் காண்பிக்க நான் சந்தோஷப்படுவேன். உங்களுடைய பங்கில் நிபந்தனையோ அல்லது கட்டணமோ இல்லை.” வீட்டுக்காரர் ஒத்துக்கொள்வாரேயானால், சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை துண்டுப்பிரதியையாவது அல்லது படைப்பு புத்தகத்தையாவது நீங்கள் உபயோகிக்கலாம், பக்கம் 234-ல் பாரா 6-லிருந்து ஆரம்பிக்கலாம். பரதீஸை திரும்ப நிலைநாட்டுவதற்கு யெகோவாவின் வாக்கை இந்த அதிகாரத்தின் ஆரம்ப பக்கங்கள் சிறப்பித்துக் காட்டுகின்றன.
4 பைபிள் துண்டுப்பிரதிகளை உபயோகியுங்கள்: நேரடியான அணுகுமுறையை உபயோகிக்கும்போது, துண்டுப்பிரதிகள் உதவியாயிருப்பதை அநேகர் கண்டிருக்கின்றனர். வீட்டுக்காரர் கதவண்டை வருகையில், சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை துண்டுப்பிரதியை மடிக்காமல் அவரிடம் கொடுங்கள், அப்போது அவர் முழு விளக்கப்படத்தையும் காணமுடியும். இன்னொரு துண்டுப்பிரதியை உங்கள் கையில் வைத்திருங்கள், முதல் இரண்டு பாராக்களில் உள்ள கேள்விகளை வாசியுங்கள் அல்லது அவைகளை வேறு வார்த்தைகளில் கேளுங்கள். பதில்களை கலந்தாலோசியுங்கள், அதை ஆதரிக்கும் ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசியுங்கள். பின்பு கலந்தாலோசிப்பை நீங்கள் அனுபவித்தீர்கள் என்று குறிப்பிடுங்கள், திரும்பி வருவதற்கும் ஏற்பாடு செய்யுங்கள். பொருத்தமாயிருந்தால், நம்முடைய இலவச வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாட்டை சுருக்கமாக விளக்குங்கள், அல்லது மறுபடியும் சந்திப்பதற்கு வெறுமென ஏற்பாடு செய்து, துண்டுப்பிரதியில் உள்ள கூடுதலான குறிப்பை சிந்தியுங்கள்.
5 திரும்பவும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும் போது, வீட்டுக்காரருக்கு அக்கறையூட்டுவதாய் இருக்கும் என்று நீங்கள் உணரும் ஏதோவொன்றை குறிப்பிடுவது நல்லது. இது ஒரு கேள்வி வடிவத்தில் இருக்கலாம். வீட்டுக்காரர் அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கப்போகும் உங்களுடைய அடுத்த சந்திப்புக்காக ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்படி இது செய்யும்.
6 படைப்பு புத்தகம் அநேக வழிகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாய் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு அது வலுவான அத்தாட்சியை அளிக்கிறது. பரிணாமம் ஏன் உண்மையாக இருக்க முடியாது என்பதை அது காண்பிக்கிறது. பைபிளை கடவுளுடைய வார்த்தையாக நாம் ஏன் நம்பலாம் என்பதை அது காண்பிக்கிறது. அதிகாரங்கள் 18 மற்றும் 19-ல் உள்ள விளக்கப் படங்கள் நேர்மை இருதயமுள்ள ஜனங்களின் கவனத்தை ஈர்த்து, பைபிளிலும், யெகோவாவின் நோக்கங்களிலும் அக்கறையை உண்டாக்கும். ஆகையால் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் அனைவரும் அனுகூலப்படுத்திக் கொள்வோம், மேலும் “சீஷராக்கும்” வேலையில் பங்கு கொள்வோம்.—மத். 24:14; 28:19, 20; மாற்கு 13:10.