ஆகஸ்ட் மாத ஊழியக் கூட்டங்கள்
கவனிக்கவும்: மாநாட்டு காலப்பகுதியின்போது ஒவ்வொரு வாரத்துக்கும் ஊழியக்கூட்ட திட்டத்தை நம் ராஜ்ய ஊழியம் அளிக்கும். மாநாட்டுக்கு ஆஜராவதற்கு அனுமதிப்பதற்கும் பின்பு அதைப் பின்தொடரும் வார ஊழியக் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சிநிரலின் முக்கியக் குறிப்புகளை 30-நிமிட விமரிசனம் செய்யவும், சபைகள், தேவைப்படுகையில் தக்கவாறு சரிப்படுத்தல்களைச் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு நாளின் குறிப்புகளையும் விமரிசனம் செய்வதை, முக்கிய குறிப்புகளின்மேல் கவனத்தை ஊன்றவைக்கக்கூடிய தகுதிபெற்ற இரண்டு அல்லது மூன்று சகோதரர்களுக்கு முன்னதாகவே நியமனம் செய்யலாம். நன்றாய்த் தயாரிக்கப்பட்ட இந்த விமரிசனம் சகோதரர் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் வெளி ஊழியத்திலும் பொருத்திப் பயன்படுத்துவதற்கு முக்கிய குறிப்புகளை நினைவில் வைக்க உதவிசெய்யும். சபையார் சொல்லும் குறிப்புகளும் கூறப்படும் அனுபவங்களும் சுருக்கமாயும் தேவைக்குப் பொருத்தமாயும் இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 123 (63)
10 நிமி: நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும் சபை அறிவிப்புகளும். மேலும், ஆகஸ்ட் 1, 1992, காவற்கோபுரத்தை அளிக்கையில் பயன்படுத்தக்கூடிய திட்டமான இரண்டு பேச்சுக் குறிப்புகளையும் எடுத்துக் கூறுங்கள்.
20 நிமி: “உங்கள் ராஜ்ய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள புரொஷூர்களை முக்கிய அளிப்பாகக் கொடுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு; நடிப்புகள். சபை இருப்பிலிருக்கும் கிடைக்கக்கூடிய புரொஷூர்களைப்பற்றி சபைக்குத் தெரிவித்து, உள்ளூர் பிராந்தியத்துக்கு முக்கியமாய்ப் பொருத்தமாயிருக்கும் புரொஷூர்களின்பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். பாரா 3-ஐக் கவனிக்கையில், நம்முடைய பிரச்னைகள் புரொஷூரை இயல்பான சூழமைவில் ஓர் அயலாருக்கு, வேலை செய்யுமிடத்தில் கூட்டாளி ஒருவருக்கு, அல்லது வேறு எவ்விடத்திலாவது எவ்வாறு அளிக்கலாமென்பதை நடித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதிப்பதற்கேற்ப, முன்னதாகவே நியமிக்கப்பட்ட பிரஸ்தாபிகள் புரொஷூர்களைப் பயன்படுத்துவதில் தங்களுக்கு உண்டான அனுபவங்களைச் சொல்லும்படி செய்யுங்கள். ஆகஸ்ட் மாதத்தின்போது புரொஷூர்களை அளிப்பதில் முழு பங்கு கொள்ளும்படி சகோதரர்களை ஆர்வத்துடன் ஊக்குவியுங்கள்.
15 நிமி: விடுமுறையில் உங்கள் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்துங்கள். தேவராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க விடுமுறை மற்றும் மாநாடு நடக்கும் மாதங்களின்போது கூடுதலான நேரத்தைப் பயன்படுத்துவதற்கு இப்பொழுதே திட்டம் போடும்படி பிரஸ்தாபிகளை ஊக்குவியுங்கள். பயணஞ்செய்கையில சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான ஆலோசனைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாராந்தர பைபிள் வாசிப்பு, சங்கத்தின் பிரசுரங்களை வாசித்தல், மற்றும் விடுமுறை காலத்தின்போதுள்ள கூடுதலான நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்துதல் ஆகியவை உட்பட, அவரவர் சொந்த இலக்குகளை வைக்கும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.
பாட்டு 165 (81), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 193 (103)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்குவிவர அறிக்கை. தேவராஜ்ய செய்திகள். வெளி ஊழியத்துக்கான ஏற்பாடுகளைப்பற்றி சபைக்கு நினைப்பூட்டுங்கள்.
20 நிமி: “நம்முடைய அறிமுகத்தை அளிப்புடன் இணைத்தல்.” சுருக்கமான பேச்சும் நடிப்புகளும். இளம் பிரஸ்தாபி பாரா 2-ல் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி வேதப்பூர்வ பிரசங்கத்தை நடித்துக் காட்டும்படி ஏற்பாடு செய்யுங்கள். ஏசாயா 65:21-23-ஐ அறிமுகம் செய்கையில், பாரா 6-ல் கொடுத்துள்ள அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள். மற்றொரு பிரஸ்தாபி, பாரா 3-ல் கொடுத்துள்ள ஆலோசனைகளை இணைத்து நம்முடைய பிரச்னைகள் புரொஷூர் அளிப்பதை நடித்துக் காட்டலாம். இரண்டு நடிப்புகளிலும் பிரசங்கம் புத்தக அளிப்போடு இணைக்கப்பட்ட முறையை அக்கிராசனர் வலியுறுத்த வேண்டும். தேவையான புரொஷூர்களையும் பத்திரிகைகளையும் எடுத்துச் செல்லும்படி சபைக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: அர்மகெதோனைப் பற்றிய கேள்விகள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 44-9-லுள்ள பொருளின்பேரில் பேச்சு.
பாட்டு 137 (105), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 8 (88)
15 நிமி: சபை அறிவிப்புகள். சபையின் ஜூலை வெளி ஊழிய அறிக்கையைக் கலந்தாலோசியுங்கள், பாராட்டுதலையும் அதோடுகூட முன்னேற்றஞ்செய்வதற்கான ஊக்கமூட்டுதலையும் கொடுங்கள். வெளி ஊழியத்தில் நாம் பங்குகொள்கையிலும் சபையோடு கூட்டுறவு கொள்கையிலும் வருடாந்தர வாக்கியத்தை அதன் சூழமைவோடுகூட ஆழ்ந்து சிந்திப்பது எவ்வாறு மெய்யான மகிழ்ச்சியைக் கண்டடையும்படி நமக்கு உதவிசெய்கிறதென்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். (ரோ. 12:9-16) நேரமிருந்தால், இந்த வார இறுதியில் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஒன்று அல்லது இரண்டு பொருத்தமான பேச்சுக் குறிப்புகளை ஆலோசனையாகக் கூறுங்கள்.
15 நிமி: “பைபிள் படிப்புகளை நடத்த முன்வந்து தெரிவிக்கிறீர்களா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு, இதைப் பின்தொடர்ந்து முதல் சந்திப்பிலேயே அல்லது மறுசந்திப்பில் பைபிள் படிப்புகளை எவ்வாறு தொடங்கலாம் என்று காட்டும் தேர்ந்தெடுத்த அனுபவங்கள்.
15 நிமி: சபைக்குரிய தேவைகள், அல்லது சத்தியத்தினிடமாகத் தங்களை மனம் கவரச்செய்தது என்னவென்பதன்பேரில் மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளைப் பேட்டிகாணுங்கள். அவர்கள் மேற்கொள்ளவேண்டியிருந்த ஏதாவது இடையூறுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பாட்டு 184 (41), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 180 (100)
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. ஊழியக் கண்காணி இந்தப் பாகத்தைக் கையாளும்படி நியமிக்கப்படலாம்.
20 நிமி: “நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் படிப்புகள் தொடங்குதல்.” சுருக்கமான அறிமுகத்துக்குப் பின், கீழ்வரும் சந்தர்ப்பத்தில் மறுசந்திப்பை நடித்துக் காட்டுங்கள்: (1) நம்முடைய பிரச்னைகள் புரொஷூரை ஏற்றுக்கொண்ட ஆள், (2) அக்கறை காட்டின ஆனால் புத்தகம் ஏற்காத ஆள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் மற்றொரு மறுசந்திப்புக்கு ஆதாரம் போடுங்கள்.
15 நிமி: “கடவுளுடைய வார்த்தையை ஏற்பதும், பயன்படுத்துவதும், அதிலிருந்து பயனடைவதும்.” பொதுவில் வட்டார மாநாடுகளுக்காக நன்றிமதித்துணர்வைத் தெரிவிக்கும் தயாரித்த சுருக்கமான கூற்றுகளைக் கூறும்படி அழையுங்கள். முந்தின வட்டார மாநாட்டில் கற்ற மதிப்புவாய்ந்த குறிப்புகளுக்குக் கவனத்தை இழுக்கலாம். பின்பு, 1-ம் பக்கத்திலுள்ள கட்டுரையைக் கேள்வி-பதில் மூலம் கலந்தாலோசியுங்கள். அடுத்த வட்டார மாநாட்டின் தேதி தெரிந்திருந்தால், அதை அறிவித்து, எல்லாரும் அதற்கு ஆஜராகும்படி ஊக்குவியுங்கள்.
பாட்டு 157 (73), முடிவு ஜெபம்.