எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் படிப்பது
1 நம்முடைய சபை புத்தகப் படிப்புகளில் மே 10-இல் துவங்கும் வாரத்தின்போது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தைப் படிக்கத் துவங்குவோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும்பற்றி திரும்பவும் சிந்திப்பது என்னே ஆனந்தமாக இருக்கும்! நாம் படித்த மற்ற புத்தகங்களிலிருந்து இது ஒருவாறு வித்தியாசமாகத் திட்டமிடப்பட்டிருப்பதால், ஒருசில துணைக்குறிப்புகள் உதவியாயிருக்கும்.
2 அந்தப் புத்தகத்தில் பக்க எண்கள் கிடையாது, ஆகவே நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்படுகிற அட்டவணை படிக்கவேண்டிய அதிகாரங்களைப் பட்டியலிடும், சாதாரணமாக ஒரு வாரத்திற்கு மூன்றோ நான்கோ இருக்கும். அதிகாரங்கள் 35, 111 மேலும் 116 பெரியவையாக இருக்கின்றன, ஒவ்வொரு வாரத்திற்கும் இரண்டு படிப்புகளாக அவை பிரிக்கப்படும். தகுதிபெற்ற ஒரு சகோதரர் ஒரு முழு அதிகாரத்தை (அல்லது அதிகாரங்கள் 35, 111 மேலும் 116-இல் இருக்கிறதுபோல ஒரு முழு உபதலைப்பு) வாசித்துவிட்ட பிறகு படிப்பு நடத்துபவர் அப்போது வாசிக்கப்பட்ட அதிகாரத்திற்கோ பகுதிக்கோ ஒத்திருக்கக்கூடிய அதிகாரத்தின் முடிவில் உள்ள கேள்விகளைக் கேட்பார். அவ்வதிகாரத்தில் பதில்கள் அடுத்தடுத்து எப்போதும் காணப்படாது. சுருக்கமான, குறிப்பான பதில்கள் அப்பாடத்தின்பேரில் உள்ள விஷயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
3 அதற்குப் பிற்பாடு, நேரத்தைப் பொருத்து, அவ்வதிகாரத்தின் முடிவில் உள்ள எல்லா வேதவசனங்களும் வாசிக்கப்படவேண்டும். இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்கள் அநேகம் இருந்தால் அவை சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படும், அப்போது வாசிப்பதில் வித்தியாசப்பட்ட பிரஸ்தாபிகள் பங்குகொள்ளலாம், பின்னர் வாசித்ததன்பேரில் குறிப்புகள் கொடுக்கவேண்டும். நடத்துபவர் குறிப்பான கேள்விகளைத் தயாரித்தாரேயானால் அர்த்தமுள்ள குறிப்புகள் சொல்வதற்கு உதவும், நாம் படித்த வசனங்கள் எப்படிப் புத்தகத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள குறிப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அவை காட்டும். கேள்விகள், குறிப்புகள் ஆகிய யாவுமே ஆஜராயிருப்பவர்கள் இயேசு கிறிஸ்துவின்மீதும் அவருடைய வாழ்க்கை முறையின்மீதும் அவருடைய போதகங்களின்மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவிசெய்யவேண்டும்.
4 மிகப்பெரிய மனிதர் புத்தகம் இயேசுவின் வாழ்க்கையைக் காலமுறைப்படி சிந்திக்கிறது. சம்பவங்களைக் கற்பனை செய்து அவை எங்கே நடைபெற்றன என்பதை மனதில் பதிய வைப்பது அவற்றை நினைவில் வைப்பதற்கு உண்மையிலேயே உதவும். ஆகவே, வண்ணமயமான விளக்கப்படங்களைச் சிந்திப்பதற்கு நிச்சயமாயிருங்கள், அறிமுகத்தைப் பின்தொடர்ந்து புத்தகத்தின் துவக்கத்தில் தோன்றும் வரைபடத்தை அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
5 முதல் வாரம் புத்தகத்தின் அறிமுகம் சிந்திக்கப்படும். உபதலைப்பின் கீழிருக்கிற எல்லா பத்திகளையும் வாசித்தப் பிறகு நடத்துபவர் தான் தயாரித்திருக்கிற பொருத்தமான கேள்விகளைக் கேட்பார். இந்த முதல் கலந்தாலோசிப்பு பின்வரும் படிப்புகளுக்கு ஆதாரத்தை ஸ்தாபிக்கும். கொடுக்கப்பட்டிருக்கிற பொருளை வெற்றிகரமாகச் சிந்திப்பது ஆஜராயிருக்கிற எல்லாருடைய தயாரிப்பின்பேரிலேயே பெரிதும் சார்ந்திருக்கும். விசேஷமாக நடத்துபவர் ஒவ்வொரு வாரமும் நன்கு தயாரித்திருக்கவேண்டும், அப்போது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவைப் பற்றி தொகுதி நன்கு அறிந்துகொள்ள உதவியாயிருக்கும்.