பெருமளவு விதையுங்கள், ஆனால் விவேகத்தோடு
1. விதைகளைப் பெருமளவு விதைக்கையில் பெரும்பாலும் அமோக விளைச்சல் கிடைக்கும், கொஞ்சமாக விதைத்தால் கொஞ்ச விளைச்சலே கிடைக்கும் என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும். (2 கொ. 9:6) விளையாத இடத்தில் விதைகளைத் தூவி வீணாக்கிவிடக் கூடாது என்பதில் விவசாயிகள் கவனமாக இருக்கிறார்கள். ஊழியத்தில் பிரசுரத்தை அளிக்கையிலும் அதே போன்ற விவேகம் நமக்கு வேண்டும். வாசிக்க ஆர்வம் காட்டுகிறவர்களிடம் பிரசுரத்தைக் கொடுக்கவே நாம் விரும்புகிறோம். தகுதியான ஜனங்கள் யெகோவாவின் கிருபையையும் ராஜ்ய நம்பிக்கையையும் பற்றி கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க விரும்புகிறோம்.
2. உங்கள் பிராந்தியத்திலுள்ள தகுதியானவர்கள் சத்தியத்தின் அறிவைப் பெற உதவுகிற பத்திரிகைகளும், சிற்றேடுகளும், மற்ற பிரசுரங்களும் உங்கள் வீட்டு அலமாரியில் தேங்கிக் கிடக்கின்றனவா? (மத்தேயு 25:25-ஐ ஒப்பிடுக.) ராஜ்ய பிரசங்க வேலை நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது என்பதை முதல் சந்திப்பில் சொல்ல கஷ்டப்பட்டுக்கொண்டு சில சமயங்களில் பத்திகைகளையோ பிரசுரங்களையோ அளிக்காமாலேயே வந்திருக்கிறீர்களா? ராஜ்ய வேலைக்கான நன்கொடைகள் பயன்படுத்தப்படுகிற விதங்களை புரியும்படி, நேரடியாக சொல்கையில் போற்றுதல் காட்டும் வீட்டுக்காரர்கள் நன்கொடை அளித்திருப்பதை அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் கண்டிருக்கிறார்கள்.
3. நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “பிரசுரங்களை விலையில்லாமல் எங்களால் எப்படி கொடுக்க முடிகிறதென நீங்கள் யோசிக்கலாம். உலகளாவிய கல்வி புகட்டும் இந்த வேலை மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் நடைபெறுகிறது. இந்த வேலைக்காக நீங்கள் சிறிய நன்கொடை அளிக்க விரும்பினால் அதை ரொம்ப சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.”
4. பிரசுரத்தின் விலை என்னவென்று அநேக வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்.
நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்:
◼ “இந்த பிரசுரத்திற்கு விலையில்லை, ஏனென்றால் எங்கள் வேலை மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளால் நடைபெறுகிறது. இன்று நீங்கள் சிறிய நன்கொடை அளிக்க விரும்பினால் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு உலகளாவிய கற்பிக்கும் வேலைக்காக அதை அனுப்புவோம்.”
அல்லது இவ்வாறு சொல்லலாம்:
◼ “பைபிளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு எங்கள் பிரசுரத்தைக் கொடுக்கிறோம். இந்த உலகளாவிய வேலைக்காக நீங்கள் சிறிய நன்கொடை அளிக்க விரும்பினால் உங்களுக்காக அதை நான் அனுப்பி வைப்பேன்.”
5. பத்திரிகை ஊழியத்தில் சில பிரஸ்தாபிகள் பத்திரிகையின் உட்பக்கத்தைக் காட்டி இவ்வாறு சொல்கிறார்கள்:
◼ “இங்கே சொல்லப்பட்ட விதமாக எங்களுடைய வேலை மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்த வேலையை ஆதரிக்க நீங்கள் சிறிய நன்கொடை அளிக்க விரும்பினால் அதை நான் பெற்றுக்கொள்கிறேன்.”
இதோ, மற்றொரு எளிய முறை:
◼ “எங்களுடைய பிரசுரத்தை விலையில்லாமல் கொடுத்தாலும் எங்கள் உலகளாவிய வேலைக்காக கொடுக்கப்படும் சிறிய நன்கொடைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”
6. நம்முடைய வேலைக்கு எவ்வாறு பண ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை சொல்ல தயங்கிக் கொண்டு, ராஜ்ய விதையை விதைப்பதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதே சமயத்தில் நம்முடைய பிரசுரம் “கற்பாறை நிலத்தில்” விழுந்து வீணாகாதிருக்க விவேகமும் தேவைப்படுகிறது. (மாற். 4:5, 6, 16, 17) நாம் சொல்லும் நற்செய்திக்குப் போற்றுதல் காட்டுகிறவர்கள் அதற்கு பண உதவி அளிக்க கிடைத்த வாய்ப்புக்காக சந்தோஷப்படுகிறார்கள்.—மத்தேயு 10:42-ஐ ஒப்பிடுக.