கேள்விப் பெட்டி
◼ ஒரு வீட்டுக்காரர் பிரசுரத்துக்கான நன்கொடைக்கு மேல் அதிகமாக, தாராளமாக நன்கொடை கொடுத்தால், கூடுதலான பிரசுரங்களை அவருக்கு கொடுக்க நாம் உந்தப்பட வேண்டுமா?
அவசியமில்லை. நம்முடைய வேலையில் அந்த நபர் காண்பிக்கும் அக்கறையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த விஷயத்தில் நீங்கள் உங்கள் நல்ல நிதானிப்பை பயன்படுத்தலாம். வீட்டுக்காரரின் ஒரு குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்யும் பிரசுரத்தை அதற்குப் பின் செய்யும் சந்திப்புகளில் அளிக்கலாம். நம்முடைய உலகளாவிய வேலையின் பல்வேறு அம்சங்களை நன்கொடைகள் ஆதரிக்கின்றன என்பதை மனதில் வையுங்கள், நம்முடைய பிரசுரங்களை பிரசுரிப்பதற்கு மட்டுமல்லாமல், நம்முடைய கட்டிட வேலைகள், மிஷனரிகள், விசேஷ பயனியர் வேலை ஆகியவற்றுக்கும் நன்கொடைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.