உங்களுடைய நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிப்பதில் தடுமாற்றமில்லாமல் உறுதியாயிருங்கள்
1 காவற்கோபுர படிப்பே, இன்று கடவுளுடைய மக்களுக்கு ‘ஏற்றவேளையில் ஆவிக்குரிய உணவை’ அளிக்கிற பிரதான வழிமுறையாக இருக்கிறது. (மத் 24:45, NW) இந்த முக்கியமான கூட்டத்திற்கு இரண்டு முக்கிய நோக்கங்களுடன் நாம் ஆஜராகிறோம்: ஆவிக்குரிய விதமாக கட்டியெழுப்பப்படுவதற்கும் மற்றவர்களுக்கு நம்முடைய நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிப்பதற்குமாகும்.—எபி. 10:23-25.
2 நாம்தாமே நன்மையடைதல்: பெரும்பாலான சபைகளில், கேட்போரில் மூன்றில் ஒரு பாகத்தினரே பாடத்தை முன்கூட்டியே படிக்கிறார்கள் என்பதாக கணக்கிடப்படுகிறது. ஏறக்குறைய அதே எண்ணிக்கையினரே குறிப்புசொல்வதில் பங்குகொள்கிறார்கள். காவற்கோபுர படிப்பில் அளிக்கப்படுகிற பலமான ஆவிக்குரிய உணவை கூட்டம் நடக்கையிலேயே முழுமையாக கிரகிக்க முடியாது. பகுதியை முன்கூட்டியே படிப்பதற்கு நீங்கள் நேரத்தை ஒதுக்குவது அவசியம்.
3 படிப்புக்காக தயார்செய்கையில், முதலாவதாக வாசித்து கட்டுரையின் முடிவுக்கு அருகில் பெட்டியிலுள்ள கேள்விகளைப் பற்றி சிந்திப்பதை நீங்கள் பயனுள்ளதாகக் காணலாம். அந்தப் பாடத்தில் சிந்திக்கப்படப்போகிற முக்கிய குறிப்புகளின்மீது உங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு இவை உங்களுக்கு உதவக்கூடும்.
4 படிப்பு நடக்கும்போது என்ன சொல்லப்படுகிறதோ அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள். நடத்துனரின் ஆரம்பக் குறிப்புரைகளுக்குக் கவனம்செலுத்துங்கள்; இந்தக் குறிப்புகள் படிப்புக்குத் தயார்படுத்துவதாக இருக்கின்றன. பதிலளிக்கப்படுகிற மூன்றோ நான்கோ கேள்விகளை அவர் எழுப்பலாம், அல்லது இந்த வார படிப்பு கடந்த வார பொருளின் தொடர்ச்சியாக இருக்குமானால், அவற்றிலிருந்து முக்கிய குறிப்புகள் சிலவற்றை அவர் மறுபார்வை செய்யலாம். ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் அல்லது வேதப்பூர்வ நியமத்தின்பேரில் நம்முடைய புரிந்துகொள்ளுதலில் ஏதாவது சரிப்படுத்துதல் இருக்குமானால், இதை அவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருவார். நிச்சயமாகவே, நடத்துனரின் குறிப்புகள் சுருக்கமாக இருக்கவேண்டும், ஏனென்றால் இந்தப் படிப்பினுடைய ஒரு நோக்கமானது சபையார் தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்திக் கூறுவதற்கு வாய்ப்பளிப்பதாகும். தாங்கள் கற்றிருப்பவற்றின்பேரில் மற்றவர்கள் குறிப்புசொல்கையில், கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள்; இது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த உதவிசெய்யக்கூடும்.
5 உங்களுடைய நம்பிக்கையை அறிவியுங்கள்: படிப்பு நடக்கும்போது நீங்கள் தவறாமல் குறிப்புகள் சொல்கிறீர்களா? சுருக்கமான, பொருத்தமான குறிப்புரைகள் விரும்பத்தக்கவை. (லூக்கா 21:1-4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) இருதயத்திலிருந்து வருகிற எளிய ஒரு குறிப்பு அனைவராலும் போற்றப்படுகிறது. பொதுவாக கேள்வியின்பேரிலான முதல் குறிப்பு சுருக்கமாகவும் நேரடியாகவும் இருக்கவேண்டும். இது, மற்றவர்கள் ஒரு வசனத்தைக் குறிப்பிடவோ பாராவிலுள்ள விளக்கத்திற்கு கவனத்தைத் திருப்பவோ அனுமதிக்கிறது. இந்த முறையில் அநேகர் தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்க முடியும். குறிப்புகள் எப்பொழுதும் நம்பிக்கையூட்டுவதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்கவேண்டும்.
6 நீங்கள் இப்பொழுதுதானே படிப்பிற்கு ஆஜராகத் தொடங்கியிருந்தால், அல்லது நீங்கள் குறிப்புசொல்வதைக் குறித்ததில் கூச்சப்படுகிறவர்களாக இருந்தால், உதவிக்காக நடத்துனரைக் கேட்க விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு பாரா சிந்திக்கப்படுகையில் நீங்கள் கைதூக்கியிருப்பதைப் பார்க்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவேளை இடக்குறிப்புக் கொடுக்கப்பட்ட வசனத்தை வாசிப்பதற்கு நீங்கள் முன்வந்து, அதன் அர்த்தத்தைச் சுருக்கமாகப் பொருத்திக் காண்பிக்கலாம். நீங்கள் குறிப்புசொல்லும்போது சொல்ல விரும்புவதை நினைவுபடுத்திக்கொள்ள உதவியாக பக்க ஓரத்தில் குறிப்புகள் சிலவற்றை எழுதிவைத்துக்கொள்ளலாம். நீங்கள் ஓர் இளம் பிள்ளையாக இருந்தால், உங்களுடைய குறிப்புகள் வரவேற்கப்படுகின்றன மற்றும் போற்றப்படுகின்றன என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.—மத். 21:16.
7 நம்முடைய விசுவாசத்தைத் தெரியப்படுத்துவது இன்றியமையாதது, அவ்விதமாகச் செய்வதற்கு காவற்கோபுர படிப்பு சிறந்த வாய்ப்பளிக்கிறது. ஊழியராக தகுதிபெற்றிருத்தல் என்ற புத்தகம் [ஆங்கிலம்] இதைக்குறித்து இவ்வாறு சொல்லியது: “பிரச்னை எதுவாக இருந்தாலும்சரி, அதை மேற்கொண்டு ஒரு பதிலாவது சொல்ல உங்களைத் தயார்செய்யுங்கள். கூட்டத்தில் நீங்கள் பங்குகொண்டிருந்திருப்பீர்கள், அதற்காக நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள்.” (பக்கம் 99) ஆகையால், அடுத்த காவற்கோபுர படிப்பிலேயே ஒரு குறிப்பாவது சொல்ல ஏன் நீங்கள் திட்டமிடக்கூடாது?—நீதி. 15:23.