முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள் —காவற்கோபுர படிப்பு நடத்துபவர்
1 காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது பத்திரிகை “ஏற்றவேளையில் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” அளிக்கும் அடிப்படையான ஆவிக்குரிய உணவாகும். (மத். 24:45) காவற்கோபுர படிப்பு நடத்தும் மூப்பர் தகுதிவாய்ந்த போதகராக இருக்கிறார்; அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது. அவர் கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் நல்ல முன்மாதிரியை வைக்கிறார்.—ரோ. 12:7; யாக். 3:1.
2 திறம்பட்ட விதமாக படிப்பை நடத்துவதற்கு காவற்கோபுர படிப்பு நடத்துனர் ஒவ்வொரு வாரமும் அதிக அதிகமாக முயற்சி எடுத்து தயாரிக்கவேண்டும். இதை அவர் ஜெபத்தோடும் கவனத்தோடும் செய்யவேண்டும். சபையின்மீது அவருக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை கலந்தாலோசிக்கப்படும் விஷயம் கூடியிருப்போரின் இருதயத்தைச் சென்றெட்ட அவர் எடுக்கும் உண்மையான முயற்சியிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பாடத்தின் முக்கிய குறிப்புகளுக்கு நமது மனதை அவர் ஒருமுகப்படுத்துகிறார். கட்டுரையின் தலைப்பிற்கு பாடம் எந்தவிதத்தில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டுபிடிக்கவும் உதவுகிறார்.
3 நடத்துனரும் பாடத்தை முழுமையாக தயாரிக்க வேண்டும். இதில் என்ன உட்பட்டிருக்கிறது? குறிப்பிடப்பட்ட வசனங்களை முன்கூட்டியே எடுத்துப் பார்த்து, அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். ஆகவே நடத்துனர் வசனங்களை முன்கூட்டியே எடுத்துப்பார்ப்பதை இது உட்படுத்துகிறது. படிப்பின்போது பைபிளைப் பயன்படுத்தி குறிப்புகள் சொல்லும்படியாக சபையாரை உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர் கடவுளுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். சில சமயங்களில் சபையாரிடமிருந்து முக்கியமான குறிப்பு வராமல் இருக்கலாம் அல்லது மிக முக்கியமான வசனமும்கூட கவனியாமல் விடப்படலாம். இந்த சந்தர்ப்பத்தில் நடத்துனர் திட்டவட்டமான துணைக் கேள்விகள் மூலமாக குறிப்புகளை வரவழைக்கலாம். இவ்விதமாக செய்வதன் மூலம் நாம் சரியான தீர்மானத்தை எடுக்க உதவுகிறார். கற்றுக்கொண்ட விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் எவ்விதமாக பொருத்துவது என அறிந்து கொள்ளவும் உதவுகிறார்.
4 காவற்கோபுர படிப்பு நடத்துனர் தன்னுடைய சொந்த போதனா திறமையை படிப்படியாக அபிவிருத்தி செய்ய கடும் முயற்சி செய்கிறார். படிப்பின்போது சபையாரை பதில் சொல்லும்படி உற்சாகப்படுத்தி, தான் அதிகமாக பேசுவதை தவிர்க்கிறார். நம் சொந்த வார்த்தையில், சுருக்கமாக, சுற்றிவளைத்துப் பேசாமல் குறிப்பாக பதில் சொல்லும்படியாக சபையாரை உற்சாகப்படுத்துகிறார். இப்பொழுது ஒரு பாராவை கலந்தாலோசிப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் கேள்விக்கு முதலாவதாக பதில் சொல்பவர்கள் வளவளவென்று நீளமான பதிலைச் சொல்லாமல் சுருக்கமான, நேரடியான பதிலைச் சொல்லும்படி அவர் நமக்கு ஞாபகப்படுத்தலாம். அதை விளக்கிச் சொல்லுபவர்கள் வசனங்களைப் பயன்படுத்திச் சொல்லலாம்; விஷயத்தை ஆதரிக்கும் வேறு சான்றுகளை குறிப்பிடலாம் அல்லது அவைகள் நடைமுறையில் எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதையும் குறிப்பிட்டு பதில் சொல்லலாம். தனிப்பட்ட விதமாகவோ குடும்பமாகவோ தயாரித்து வருமாறு சபையாரை உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி காவற்கோபுர படிப்பு நடத்துனர் பெருமளவில் உதவி செய்கிறார்.
5 ‘கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பவர்களாகிய’ நாம், ‘உபதேசத்தி[ல்] பிரயாசப்படும்’ ‘மனித வடிவில் வரங்களாகிய’ காவற்கோபுர படிப்பு நடத்துனர்களை பாராட்டுவோமாக.—ஏசா. 54:13; எபே. 4:8, 11, NW; 1 தீ. 5:17.