வீல் ஸ்டாண்ட் ஊழியத்தை செய்வது எப்படி?
நல்ல ஜனங்களை சத்தியத்திடம் ஈர்ப்பதற்கு வீல் ஸ்டாண்ட் ஊழியம் அல்லது மேஜை ஊழியம் ரொம்ப உதவியாய் இருக்கிறது. (யோவா. 6:44) அதனால்தான், அந்தந்த சபை பிராந்தியத்தில் உள்ள ஜனநடமாட்டம் அதிகமான இடங்களில் பொது ஊழியத்தை ஏற்பாடு செய்யுமாறு சபை மூப்பர்களுக்கு அமைப்பு சொல்லியிருக்கிறது. வீல் ஸ்டாண்டை பொதுவாக நாம் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டிருக்க மாட்டோம். அதனால், அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. இந்த ஊழியத்தில் யார் கலந்துகொள்ளலாம்? நன்றாக யோசித்துப் பேசுபவர்கள், கண்ணியமாக நடந்துகொள்பவர்கள், மற்றவர்களுடன் நன்றாக பேசும் திறமையுள்ளவர்கள் இந்த ஊழியத்தில் கலந்துகொள்ளலாம். இந்த ஊழியத்தை எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்யக் கூடாது? இதோ சில ஆலோசனைகள்...