பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 15-16
யெகோவாவைப் பாடிப் புகழுங்கள்
இசை நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பாதிக்கும். பாட்டுப் பாடுவது யெகோவாவை வணங்குவதில் முக்கியமான ஒன்று.
மோசேயையும் இஸ்ரவேல் மக்களையும் யெகோவா செங்கடலில் அற்புதமாகக் காப்பாற்றியபோது, அவர்கள் யெகோவாவைப் புகழ்ந்து பாட்டுப் பாடினார்கள்
ஆலயத்தில் இசைக் கருவிகளை வாசிப்பதற்காகவும் பாட்டுப் பாடுவதற்காகவும் 4,000 ஆண்களை தாவீது ராஜா நியமித்தார்
இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, அவரும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களும் யெகோவாவைப் புகழ்ந்து பாட்டுப் பாடினார்கள்
யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்கு எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?