பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 17-18
அடக்கமுள்ள ஆண்கள் பயிற்சி கொடுத்து பொறுப்புகளைக் கொடுப்பார்கள்
அனுபவமுள்ள சகோதரர்கள் தாங்கள் அடக்கமானவர்கள், அன்பானவர்கள், எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுபவர்கள் என்பதை இளம் சகோதரர்களுக்கு பயிற்சியையும், பொறுப்புகளையும் கொடுப்பதன் மூலம் காட்டுகிறார்கள். அதை எப்படிச் செய்கிறார்கள்?
யாரால் அதிக பொறுப்பை எடுத்து செய்ய முடியும் என்பதைப் பார்ப்பார்கள்
ஒரு வேலையைச் செய்து முடிக்க எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்வார்கள்
வேலையைச் செய்து முடிப்பதற்கு தேவையான பணத்தையும் பொருளையும் கொடுப்பார்கள். உதவியையும் செய்வார்கள்
கொடுத்த வேலையை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்பார்கள், அவர்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுவார்கள்
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள், ‘நான் மற்றவர்களிடம் என்னென்ன பொறுப்புகளைக் கொடுக்கலாம்?’