சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “நினைப்பூட்டும் லில்லி மலர்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீது பாடியது. போதிப்பதற்குரியது. அராம்-நகராயிம் ஜனங்களோடும் அராம்-சோபா ஜனங்களோடும் தாவீது போர் செய்த சமயத்தில், யோவாப் திரும்பி வந்து ஏதோமியர்களில் 12,000 பேரை உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தபோது பாடப்பட்டது.+
60 கடவுளே, நீங்கள் எங்களை ஒதுக்கித்தள்ளினீர்கள்; எங்களைச் சிதறடித்தீர்கள்.+
எங்கள்மேல் கோபமாக இருந்தீர்கள்; ஆனால், மறுபடியும் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
2 நீங்கள் பூமியை அதிர வைத்தீர்கள்; அதை இரண்டாகப் பிளந்தீர்கள்.
அதன் விரிசல்களைச் சரிசெய்யுங்கள், அது இடிந்து விழுந்துகொண்டிருக்கிறது.
3 உங்களுடைய மக்களைத் துன்பப்பட வைத்தீர்கள்.
தள்ளாட வைக்கிற திராட்சமதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.+
4 உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்காக ஒரு கம்பத்தை* நாட்டுங்கள்.*
அம்புகளிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அதனிடம் ஓடி வரட்டும். (சேலா)
5 உங்களுக்குப் பிரியமானவர்கள் விடுவிக்கப்படும்படி,
உங்கள் வலது கையால் எங்களைக் காப்பாற்றி, எங்களுக்குப் பதில் கொடுங்கள்.+
6 பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்:
“நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச் சொத்தாகக் கொடுப்பேன்.+
சுக்கோத் பள்ளத்தாக்கைப் பங்காக அளந்து கொடுப்பேன்.+
8 மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+
ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+
பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+
9 முற்றுகை போடப்பட்ட* நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்?
ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+
10 கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?
ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!
எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+