வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஏப்ரல் 2011
2011 ஊழிய ஆண்டில், இந்தியாவில் செய்த ஊழியத்தை யெகோவா தேவன் ஆசீர்வதித்திருக்கிறார் என்பது பளிச்செனத் தெரிகிறது. நினைவுநாள் அனுசரிப்புக்கு 94,954 பேர் வந்திருந்தார்கள், இது கடந்த வருடத்தைவிட 8.5 சதவீத அதிகரிப்பு. ஏப்ரல் மாதத்தில் செய்யப்பட்ட விசேஷ ஏற்பாட்டிற்கு ஆதரவு தந்து 17,222 பேர் துணைப்பயனியர் ஊழியம் செய்தார்கள். அதோடு, 34,912 பிரஸ்தாபிகள்... 3,206 ஒழுங்கான பயனியர்கள்... 41,554 பைபிள் படிப்புகள்... என புதிய உச்சநிலையை எட்டியிருக்கிறோம்.