◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்க போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லோரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக இது உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:50 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ சர்வதேச மாநாடுகள்: சில இடங்களில் சர்வதேச மாநாடுகள் நடைபெறும். இருக்கைகள், வாகனம் நிறுத்துவதற்கான இடம், ஓட்டல் ரூம்கள் ஆகியவற்றை வைத்துக் குறிப்பிட்ட சபைகளையும் வெளிநாட்டு சகோதர சகோதரிகளையும் கிளை அலுவலகம் அழைக்கிறது. அழைக்கப்படாமலேயே பிரஸ்தாபிகள் மாநாட்டிற்குச் சென்றால் அங்கே கூட்டம் நிரம்பி வழியும். ஒருவேளை உங்களுக்கு நியமிக்கப்பட்ட மாநாட்டில் உங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டால் வேறொரு மாநாட்டிற்குச் செல்லலாம், ஆனால் சர்வதேச மாநாட்டிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே இருக்கும் என்பதால் ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும். லைசென்ஸ் பிளேட் உள்ளவர்கள் அல்லது ஊனமுற்றவர்களுக்கான கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: காலையில் கதவுகள் திறக்கப்பட்டதும் உங்களுக்கு வசதியான இருக்கைகளை பிடிக்க மற்றவர்களை முந்திக்கொண்டு செல்லாதீர்கள். சகோதர சகோதரிகள் மத்தியில் போட்டி மனப்பான்மையைத் தூண்டும். நமக்குச் சுயதியாக மனப்பான்மை இருந்தால் மற்றவர்களுடைய நலனில் அக்கறையுள்ளவர்களாக இருப்போம். நாம் உண்மை கிறிஸ்தவர்கள் என்பதை இது மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும், யெகோவாவுக்கும் புகழ் சேர்க்கும். (யோவா. 13:34, 35; 1 கொ. 13:4, 5; 1 பே. 2:12) உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு அல்லது தற்போது உங்களுடன் பைபிளைப் படித்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம். முதியவர்களுக்கும் சுகவீனர்களுக்கும் விசேஷ இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களைக் கவனித்துக்கொள்ள ஓரிரு நபர்கள் மட்டுமே அவர்களோடு உட்காரலாம்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து மதிய உணவை எடுத்து வாருங்கள். இருக்கைக்குக் கீழே வைக்கும் அளவுக்கு சிறிய டிஃபன் பாக்ஸுகளை எடுத்து வாருங்கள். பெரிய டிஃபன் பாக்ஸுகளோ கண்ணாடி பொருட்களோ மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்படாது.
◼ நன்கொடைகள்: மாநாட்டு மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் போடுவதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். ஒருவேளை செக் மூலம் நன்கொடை கொடுக்க விரும்பினால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் செக் கொடுக்கவும்.
◼ மருத்துவ உதவி: நீங்கள் ஏதாவது மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டியிருந்தால், உங்களுக்குத் தேவையானவற்றைத் தயவுசெய்து கையோடு எடுத்து வாருங்கள். மாநாட்டு மன்றத்தில் அவை உங்களுக்குக் கிடைக்காது. சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஊசிகளை மற்ற குப்பைகளோடு சேர்த்து மாநாட்டு மன்றங்களிலும் ஓட்டல்களிலும் போடக்கூடாது. அதைத் தனியாக அப்புறப்படுத்த வேண்டும்.
◼ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்: நாம் நடக்கும்போது தடுக்கி விழாமலிருக்க நம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலணிகள் அணிவதால் ஒவ்வொரு வருடமும் மாநாட்டின்போது நிறையப் பேருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, உங்களுடைய கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்பு சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ பிள்ளைகளுக்கான தள்ளு வண்டிகள் மற்றும் லான் சேர்கள்: இவற்றை மாநாட்டிற்கு எடுத்த வரக்கூடாது. என்றாலும், பெற்றோர்களின் இருக்கைகளுக்கு அருகில் வைத்துக்கொள்ள முடிந்தால் சைல்ட்-சேஃப்டி சீட்டுகளை (child-safety seats) எடுத்து வரலாம்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலாபக்கமும் மூடியிருக்கும் அரங்குகளில் நடைபெறுகின்றன. அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. எனவே, சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது ஆர்வமுள்ள ஒருவரை நாம் சந்தித்திருந்தால், தயவுசெய்து போய் பார்க்கவும் படிவத்தைப் பூர்த்தி செய்து மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது உங்களுடைய சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.
◼ உணவகங்கள்: உணவகங்களில் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ப நேர்த்தியாக உடை அணியுங்கள். உள்ளூர் வழக்கப்படி டிப்ஸ் கொடுக்க வேண்டியிருந்தால் கொடுங்கள்.
◼ தங்கும் ஓட்டல்கள்:
தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை முன்பதிவு செய்யாதீர்கள். அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள்.
நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை அநாவசியமாக ரத்து செய்யாதீர்கள்; அப்படி ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (மத். 5:37) ரத்து செய்யும்போது அதற்குரிய எண்ணையும் கண்டிப்பாகப் பெறுங்கள். உங்களுடைய அறையை 48 மணிநேரத்திற்கு முன்னால் ரத்து செய்யாவிட்டால் அறைக்கான முன்தொகை திருப்பித் தரப்படாது.
ஓட்டலில் ரிஜிஸ்டர் செய்யும்போது நீங்கள் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக்கொள்வது பொதுவான வழக்கமாகும். இது, தங்கும் அறைக்கான மொத்த வாடகைக்காகவும், தெரியாத்தனமாக நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் அதற்காகவும் எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் அங்கிருந்து சென்ற பிறகு கொஞ்ச நாட்களுக்கு, அதாவது உங்களுடைய அக்கவுண்ட் செட்டில் ஆகும்வரை, அந்தத் தொகையை உங்களால் பயன்படுத்த முடியாது.
லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள்.
டிப்ஸ் கொடுப்பது அவரவருடைய விருப்பம் என்றாலும், ஓட்டலில் சௌகரியமாகத் தங்க உதவுகிற பணியாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது அன்பான செயலாகும்.
சமைப்பதற்கு அனுமதியில்லாத அறைகளில் சமைக்காதீர்கள்.
ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றை மாநாட்டு வளாகத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
ஓட்டல் பணியாளர்களிடம் எல்லாச் சமயத்திலும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவாக, பொறுமையாக, நியாயமாக நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள்.
ஓட்டல் வளாகத்திலுள்ள லிப்ட், நீச்சல் குளம், வரவேற்பு அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் இருக்கும்போது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒருநாள் வாடகையாகும். கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், மாநாட்டு வளாகத்தில் இருக்கும்போதே அறை வசதி இலாகாவிடம் மறக்காமல் தெரிவியுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
◼ வாலண்டியர் சேவை: வாலண்டியர் சேவையில் ஈடுபட யாருக்காவது விருப்பமிருந்தால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட தங்களுடைய பெற்றோர் அல்லது தங்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பொறுப்புள்ள ஒருவரின் மேற்பார்வையில் சேவை செய்யலாம்.