தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 27, 2011-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 2 முதல் ஜூன் 27, 2011 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. யோபுவுக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களுக்காக ஜெபம் செய்யும்படி யெகோவா அவரிடம் சொன்னதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (யோபு 42:8) [w98 8/15 பக். 30 பாரா 5]
2. கிறிஸ்தவர்கள் இன்று செலுத்துகிற ‘நீதியின் பலிகள்’ எதைக் குறிக்கின்றன? (சங். 4:5) [w06 5/15 பக். 18 பாரா 10]
3. தாவீதின் உள்ளிந்திரியங்கள் அவரை எவ்வாறு திருத்தின? (சங். 16:7, NW) [w04 12/1 பக். 14 பாரா 9]
4. “வானங்கள் தேவனுடைய மகிமையை” எவ்வாறு “வெளிப்படுத்துகிறது”? (சங். 19:1) [w04 10/1 பக். 10 பாரா 8]
5. நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை சங்கீதம் 27:14 (NW) எவ்வாறு விளக்குகிறது? [w06 10/1 பக். 26-27 பாரா. 3, 6]
6. சக கிறிஸ்தவர்களுடன் பழகும்போது சங்கீதம் 37:21-ல் உள்ள நியமத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? [w88 8/15 பக். 17 பாரா 8]
7. நாடுகடத்தப்பட்ட லேவியனின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்? (சங். 42:1-3) [w06 6/1 பக். 9 பாரா 3]
8. நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும் நமக்கு எது உதவும்? (சங். 45:7) [cf பக். 58-59 பாரா. 8-10]
9. யாருடைய ‘உற்சாகமான ஆவியினால்’ அதாவது மனப்பூர்வமான ஆவியினால் தன்னைத் தாங்கும்படி தாவீது கேட்கிறார்? (சங். 51:12) [w06 6/1 பக். 9 பாரா 10]
10. தேவனுடைய ஆலயத்தில் நாம் எப்படி ஓர் ஒலிவ மரத்தைப் போல இருக்க முடியும்? (சங். 52:8) [w00 5/15 பக். 29 பாரா 6]