-
எபேசியர் 5:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனோ,+ அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ,+ அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்*+ என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால், அதை நன்றாகப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்கள்.
6 இப்படிப்பட்ட காரியங்களால்தான், கீழ்ப்படியாதவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம் வரப்போகிறது. அதனால், ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளால் ஏமாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
-
-
எபிரெயர் 10:26, 27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 சத்தியத்தைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு+ வேண்டுமென்றே நாம் பாவங்கள் செய்துவந்தால் அந்தப் பாவங்களுக்காக நாம் வேறெந்தப் பலியும் கொடுக்க முடியாது.+ 27 நாம் பயத்தோடு எதிர்பார்க்கிற நியாயத்தீர்ப்பையும், எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கப்போகிற கடவுளுடைய பயங்கர கோபத்தையும்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.+
-