சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜூலை 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 137 (76)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வாரக் கடைசியில் எல்லாரும் வெளி ஊழியத்தில் பங்குபெறும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “சாட்சிகொடுப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்—பகுதி 1.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றும்படியும், துண்டுபிரதிகளை சிறந்தவிதத்தில் பயன்படுத்தும்படியும் சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள். வேத வசனங்களையும் சொல்லப்பட்ட குறிப்புகளை வசனங்கள் எப்படி ஆதரிக்கின்றனவென்பதையும் கலந்தாலோசியுங்கள். நியாயங்கள் புத்தகம் பக்கம் 14-ல், போர்/சமாதானம் என்ற தலைப்பின் கீழ் காணப்படும் முன்னுரைகளை விமர்சியுங்கள். “மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் பற்றி அறிவியுங்கள்” என்ற கட்டுரையில் பாரா 5-ல் காணப்படும் குறிப்பின் பேரில் நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பு ஏற்பாடு செய்யவும்.
பாட்டு 139 (74), முடிவு ஜெபம்.
ஜூலை 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 158 (85)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. கொடுக்கப்பட்ட பொருளாதார ஆதரவுக்காக சபையை பாராட்டவும் மற்றும் சபை அனுப்பிய நன்கொடையை சங்கம் பெற்றுக்கொண்டதைப்பற்றி தெரிவியுங்கள். இந்த வார கடைசியில் செய்யப்படும் ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். நான்காவது சனிக்கிழமை பத்திரிகை நாளன்று அளிக்கப்படும் புதிய பத்திரிகையிலுள்ள முக்கிய குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “தேவராஜ்ய கூட்டுறவை அனுபவித்துக்களித்தல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நல்ல கூட்டுறவிலிருந்து அடையப்பெறும் பயன்களைப்பற்றிய பொருத்தமான கூற்றுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் பற்றி அறிவியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. மெய்ச் சமாதானம் புத்தகம், பக்கம் 8-ல் சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளையும் அல்லது சபை பிராந்தியத்துக்குப் பொருத்தமான வேறு ஏதாவது குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
பாட்டு 31 (3), முடிவு ஜெபம்
ஜூலை 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 78 (55)
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரக் கடைசியில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மெய்யெனக்காட்டி நம்பவைப்பதன் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கட்டுரையை சிந்தித்தப்பின்பு, பாரா 4-ல் உள்ள உதாரணத்தையோ அல்லது மற்ற நடைமுறையான பொருளையோ பயன்படுத்தி இது எவ்வாறு செய்யப்படலாம் என்பதை நன்கு தயார் செய்த பிரஸ்தாபி ஒருவர் நடித்துக்காட்ட செய்யுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “இளைஞர் கேட்கின்றனர் . . . வெற்றிகரமான மண முன்னிட்ட சந்திப்புகள்—அவை எவ்வளவு முக்கியமானவை? பிப்ரவரி 22, 1989 ஆங்கில விழித்தெழு! (இந்திய மொழிகளில்: “பைபிளும் பருவ வயது ஒழுக்கமும்” மே 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 197 (57), முடிவு ஜெபம்.
ஜூலை 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 210 (74)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வாரக் கடைசி ஊழியத்துக்காக ஏற்பாடுகள் செய்யவும். தினவசனத்தின் பேரில் குறிப்புகளை ஆராயலாம்.
15 நிமி: “வட்டார கண்காணியின் சந்திப்புக்கு ஆதரவு கொடுங்கள்.” கேள்வி-பதில். பாரா 2-ஐ கலந்தாலோசிக்கையில், வட்டார ஊழியரின் சந்திப்புக்கு ஆயத்தம் செய்வதற்கு தேவையானவற்றின் சம்பந்தமாக நடத்தும் கண்காணியை பேட்டிக்காணவும். சந்திப்பை வெற்றிகரமானதாக ஆக்குவதற்கு சபை எவ்வாறு உதவலாம் என்பதை வலியுறுத்தவும். கடந்த சந்திப்புகளின்போது தாங்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதை பயனியர்களிடமிருந்தும் பிரஸ்தாபிகளிடமிருந்தும் இரண்டு அல்லது மூன்று தனிப்பட்ட குறிப்புகளை வரவேற்கவும். வட்டார ஊழியரின் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கியிருக்க ஆர்வத்தைத் தூண்டவும்.
10 நிமி: “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் என்னுடைய பணத்தை எவ்வாறு ஞானமாக பயன்படுத்தலாம்?” ஜனவரி 22, 1989 ஆங்கில விழித்தெழு! கட்டுரையின் சிறப்புக் குறிப்புகளை இரண்டு அல்லது மூன்று இளைஞரோடு தகுதிவாய்ந்த சகோதரர் ஒருவர் கலந்தாலோசிக்கிறார். ராஜ்ய அக்கறைகளை விருத்தி செய்வதற்கு இளைஞர் தங்கள் பணத்தை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதன்பேரில் நடைமுறையான ஆலோசனைகளை அளிக்கலாம். (இந்திய மொழிகளில்: “இளைஞர்களே, வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” செப்டம்பர் 1988 காவற்கோபுரம்.)
10 நிமி: “சீஷராயிருப்பதன் உத்தரவாதம்.” ஜனவரி 1, 1989 ஆங்கில காவற்கோபுர கட்டுரையின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: “ஜீவனுக்குச் செல்லும் வழி” ஏப்ரல் 1989 காவற்கோபுரம்.) வாரக் கடைசி வெளி ஊழியத்தில் பங்குகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்தவும்.
பாட்டு 16 (101), முடிவு ஜெபம்.