மார்ச் மாதத்துக்கு உங்களுடைய அளிப்பை தயாரியுங்கள்
1 இந்த மாதத்தின் போது, ஏதாவது இரண்டு பழைய 192-பக்க புத்தகங்களை நாம் சிறப்பித்துக் காட்டுகிறோம். இப்படிப்பட்ட சிறந்த பிரசுரங்களில் ஏதாவது ஒன்று நற்செய்தியை பல்வேறு வழிகளில் அளிக்க உபயோகப்படுத்தப்படலாம். கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் அளிப்புகளில் ஒன்று அல்லது எல்லா அளிப்புகளையும் கற்றுக்கொண்டு உபயோகிப்பதை நீங்கள் நடைமுறையானதாக காண்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
2 பூமி—மனிதனின் நிரந்தரமான வீடு: பூமியைப் பற்றியும் அதன் சுற்றுப்புறச்சூழலைப் பற்றியும் அக்கறையாயிருக்கும் ஆட்களோடு சம்பாஷணைகளை ஆரம்பிக்க நீங்கள் விரும்பினால், “மனிதவர்க்கத்தின் வீடாக பூமி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்ற பொருளை முயற்சி செய்து பாருங்கள். குடும்பத்தில் அக்கறையுடைய ஆட்கள், இயற்கையை ரசிப்பவர்கள், சுற்றுப்புறச்சூழலின் தன்மையைக் குறித்து அக்கறையாயிருப்பவர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்தப் பொருள் போதுமான வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாய் இருக்கிறது. உபயோகிக்க வேண்டிய வசனம் பிரசங்கி 1:4. பொருளும் வேதவசனமும் சத்தியம் புத்தகம், பக்கம் 101, பாராக்கள் 13, 14-ல் விளக்கப்பட்டிருக்கின்றன.
3 உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “நம்மில் அநேகருக்கு ஆழ்ந்த அக்கறைக்குரியதாய் இருக்கும் விஷயத்தைப் பற்றி கலந்து பேச நான் சுருக்கமாக சந்திக்கிறேன். பூமி நம்முடைய வீடாக இருக்கிறது, நீங்களும்கூட அது பாழாக்கப்பட்டுவரும் விதத்தைக் குறித்து கவலையாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. தூய்மைக்கேடு தொடருமேயானல், பூமி வசிக்க முடியாத இடமாக மாறிவிடக்கூடும் என்பதாக விஞ்ஞானிகளும் சுற்றுப்புறச்சூழலில் அக்கறையுள்ளவர்களும் எச்சரித்த வண்ணமாகவே இருக்கிறார்கள். பிரச்னைக்கு ஏதாவது ஒரு தீர்வை உங்களால் காணமுடிகிறதா? [வீட்டுக்காரர் குறிப்பு சொல்ல விரும்பினால் நிறுத்தவும்.] சுருக்கமாக, பிரசங்கி 1:4-ல் பூமியினுடைய எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.” வசனத்தை வாசித்து, சத்தியம் புத்தகத்தில் பக்கம் 101-ல் பாரா 13 மற்றும் 14-லுள்ள குறிப்புகளைக் காண்பிக்கவும்.
4 பொல்லாங்கு நீக்கப்பட இருக்கிறது: குற்றச்செயல், வன்முறை மற்றும் போர் குறித்து கவலையுள்ளவர்களாக இருப்பவர்களை கவனிக்கும்படி செய்ய, “கடவுளை நேசிப்பவர்கள் ஜீவனையும் சமாதானத்தையும் அனுபவிக்கும் பொருட்டு பொல்லாங்கு நீக்கப்பட இருக்கிறது” என்ற பொருளின் பேரில் நீங்கள் அவரோடு கலந்து பேச விரும்பலாம். சங்கீதம் 37:9-11 இந்தக் குறிப்பைக் கொடுக்கிறது. நற்செய்தி புத்தகம், பக்கம் 106, பாரா 2 மற்றும் 3, காரியங்களை பொறுமையாக தீர்க்கும் கடவுளுடைய வழி நடைமுறையான ஞானமாக இருப்பதை காண்பிக்கிறது.
5 வழக்கமான முன்னுரையைத் தொடர்ந்து, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “வன்முறையோடும் குற்றச்செயலோடும் நாம் போராட வேண்டிய அவசியமில்லாத ஒரு காலம் எப்போதாவது வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [வீட்டுக்காரரின் பதிலுக்காக அனுமதிக்கவும்.] பைபிள் இங்கே சங்கீதம் 37:9-11-ல் நிரந்தரமான பரிகாரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.” வசனத்தை வாசித்து நற்செய்தி புத்தகத்தை பக்கம் 106-ல் பாரா 2 மற்றும் 3-ன் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை வாசிப்பதற்காக திருப்புங்கள்.
6 உயிர்த்தெழுதல் நம்பிக்கை: ஏதாவது ஒரு சமயத்தில் எல்லாருமே அன்பார்ந்த ஒருவரை மரணத்தில் இழந்திருப்பதன் காரணமாக, “ராஜ்ய ஆட்சி பரதீஸிய நிலைமைகளின் கீழ் மரித்த அன்பார்ந்தவர்களுக்கு ஜீவனை மீட்டுத்தர இருக்கிறது” என்ற பொருளின் பேரில் சம்பாஷணையை நாம் ஆரம்பிக்கலாம். நீங்கள் யோவான் 5:28, 29 அல்லது லூக்கா 23:43-ஐ பயன்படுத்தி பொருளின் பேரில் நற்செய்தி புத்தகத்தில் பக்கம் 186, பாரா 8 மற்றும் பக்கம் 151, பாரா 1-லுள்ள குறிப்புகளையும் வேதவசனத்தையும் காண்பிக்கலாம். (இந்த வாழ்க்கை புத்தகம், பக்கம் 167).
7 “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகத்தில் பக்கம் 14-லுள்ள மூன்றாவது அறிமுகத்தோடு உங்கள் சம்பாஷணையை ஆரம்பித்துவிட்டு பின்னர் இவ்வாறு சொல்லலாம்:
▪ “நம்மில் அநேகர் அவ்வப்போது நாம் மரணத்தில் இழந்துவிட்டிருக்கும் அன்பார்ந்தவர்களை நினைத்துக்கொள்கிறோம். ஆனால் நாம் மறுபடியும் அவர்களைக் காண்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [வீட்டுக்காரர் தன் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளியுங்கள்.] நாங்கள் அணுகி பேசியிருக்கும் அநேக ஆட்கள் கடவுளுடைய வார்த்தை என்ன வாக்களித்துள்ளது என்பதையும் இந்த எதிர்பார்ப்பு இங்கே பூமியில்தானே நிறைவேற இருக்கிறது என்பதையும் அறியும்போது ஆச்சரியப்படுகின்றனர். இங்கே . . . பைபிளுடைய வாக்குறுதியை கவனியுங்கள்.” யோவான் 5:28, 29 அல்லது லூக்கா 23:43-ஐ பயன்படுத்தி, நற்செய்தி புத்தகத்தில் பக்கம் 186 அல்லது பக்கம் 151, பாரா 1-லுள்ள குறிப்புகளை இணைக்கவும்.
8 இந்த அளிப்புகளில் ஒன்றை அல்லது அனைத்தையும் தயார் செய்து இம்மாதம் உபயோகியுங்கள். நீங்கள் உபயோகிக்கும் எந்தப் பிரசுரங்களிலும் பொருத்தமான மேற்கோள்களை அல்லது படங்களை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கக்கூடாது. குறைவான அக்கறையே காண்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒரு பொருளை சிந்திக்கும் ஒரு துண்டுப்பிரதியை அளியுங்கள்.