யெகோவாவின் உதவிக்காக ஜெபியுங்கள்
1 ஊழியத்தின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் மிக அவசியம் என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அறிவுறுத்தினார். (மத். 9:37, 38) நம் ஜெபங்கள் இருதயத்தில் இருந்து வர வேண்டும். ஊக்கமான வேண்டுதல்கள், கோரிக்கைகளோடு துதியும் நன்றியும் கலந்த ஜெபங்களாக இருக்க வேண்டும். யெகோவாவின் உதவிக்காக நாம் அவர்மீது முழுமையாக சார்ந்திருக்கிறோம் என்பதை இந்த ஜெபங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (பிலி. 4:6, 7) “சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபம் பண்ணும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. நம் ஊழியத்திற்காக செய்யும் ஜெபங்களுக்கும் இது பொருந்தும்.—எபே. 6:18.
2 ஈடிணையற்ற அவருடைய குணங்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் நாம் யெகோவாவை துதிக்கிறோம். நாம் பிரசங்கிக்கிற நற்செய்தியைக் கொடுத்ததற்காகவும் அவரை துதிக்கிறோம். நம் துதிக்கு ஏற்றவர் அவரே. ஏனென்றால், அவரால் மட்டுமே நம் ஊழியத்திற்கு வெற்றி தேடித்தர முடியும்.—சங். 127:1.
3 அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் பற்றிய புரிந்துகொள்ளுதலை யெகோவா தந்திருக்கிறார். இதற்கான போற்றுதலை நம்முடைய நன்றி செலுத்தும் ஜெபங்கள் வெளிப்படுத்த வேண்டும். ராஜ்ய சத்தியங்களை மற்றவர்களுக்கு சொல்வது ஒரு சிலாக்கியம் அல்லவா? ஊழியத்தை கிரமமாக செய்து முடிப்பதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம்.—சங். 107:9; எபே. 5:20.
4 பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும் மக்களை கண்டுபிடிக்கும் நம் முயற்சியில் யெகோவாவின் உதவியை கேட்பது பொருத்தமானது. சத்தியம் மக்களுடைய இருதயங்களை சென்றெட்டவும் அவருடைய சகாயத்தை கேட்கிறோம். இப்படிப்பட்ட வேண்டுதல்கள் மூலம், கடவுள் மட்டுமே நம் ஊழியத்தை பலன்தரத்தக்கதாக ஆக்கமுடியும் என ஒப்புக்கொள்கிறோம்.—1 கொ. 3:5-7.
5 தன்னிடமிருந்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் ஒரு பெண் அவற்றை படிப்பதில்லை என்பது ஒரு சகோதரிக்கு தெரிந்தது. இந்த அருமையான பத்திரிகைகள் வீண்போவதை அவர் விரும்பவில்லை. எனவே, உண்மையிலேயே, இந்தப் பத்திரிகைகளை அந்தப் பெண் படிக்கவில்லை என்றால், இவற்றை இனி கொண்டுபோய் கொடுக்கப்போவதில்லை என ஜெபத்தில் யெகோவாவிடம் தெரிவித்தாள். அடுத்த தடவை அந்தப் பெண்ணைப் பார்க்க சென்றார் நம் சகோதரி. “இந்தப் பத்திரிகைகளை நீங்கள் தவறாமல் கொண்டுவந்து கொடுப்பதற்காக நான் உங்களுக்கு மிக்க நன்றி சொல்லுகிறேன். நான் இவற்றைப் படிக்கிறேன். எனக்கு இவை ரொம்ப பிடித்திருக்கிறது” என அந்தப் பெண்ணின் கணவர் சொன்னார்.
6 மற்றவர்களுக்கு தைரியமாக பிரசங்கிக்க வேண்டுமென்றால், மனிதபயம், ஏளனம், பொதுமக்களின் மெத்தனம் போன்றவற்றை நாம் சமாளிக்க வேண்டும். இதற்கு உதவும்படி நாம் யெகோவாவிடம் தாழ்மையோடும் ஊக்கமாகவும் மன்றாடலாம். (அப். 4:31) “சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” கீழ்ப்படிதலோடு நம்முடைய பரிசுத்த சேவையை தொடர்ந்து செய்தோமானால், யெகோவாவின் உதவி நமக்கு கிடைக்கும் என நிச்சயமாய் இருக்கலாம்.—1 யோ. 3:22.