ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 8-ல் துவங்கும் வாரம்
7 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
18 நிமி: “உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது.”a 1997, ஜூன் 1, காவற்கோபுரம் பக்கம் 15, பாராக்கள் 12-13-ல் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சாட்சி கொடுப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: நம் உடல் ஆரோக்கியத்திற்கு அன்பான ஏற்பாடு. தகுதிவாய்ந்த மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. நம் விருப்பமில்லாமல் இரத்தமேற்றுவதை தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பூர்த்திசெய்து நம்முடன் வைத்துக்கொள்வதுதான் என்பதை வலியுறுத்துங்கள். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவருக்கும் இந்த அட்டை கொடுக்கப்படும், ஆனால் அதை அப்போதே பூர்த்தி செய்யக்கூடாது. சபையாருக்கு கொடுப்பதற்குத் தயாராக போதியளவு அட்டைகள் சபையில் இருக்க வேண்டும். அந்த அட்டையில் கையெழுத்திடுவது, சாட்சி கையெழுத்திடுவது, தேதி எழுதுவது போன்றவை அடுத்த சபை புத்தகப் படிப்பு முடிந்த பிறகு, தேவைப்பட்டால் புத்தகப் படிப்பு நடத்துனரின் உதவியுடன் செய்யப்பட வேண்டும் என்பதை சொல்லுங்கள். அட்டையில் அந்த நபர் கையெழுத்திடும்போது, சாட்சி கையெழுத்து போடுபவர்கள் அதை நேரில் பார்க்க வேண்டும். புத்தகப் படிப்பு நடத்துனர்களும், தங்கள் தொகுதியிலுள்ள எல்லா அங்கத்தினர்களும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பூர்த்தி செய்வதற்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். பிள்ளைகளுக்குரிய அடையாள அட்டைகளும் கூட்டம் முடிந்தபின் பெற்றோர்களிடம் கொடுக்கப்படும். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், இந்த அட்டையின் மொழிநடையைப் பின்பற்றி தங்களுடைய சூழ்நிலைக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மருத்துவ கோரிக்கை அட்டையை எழுதி வைத்துக் கொள்ளலாம்.
பாட்டு 1, முடிவு ஜெபம்.
ஜனவரி 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி: “எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாடு.” கட்டுரையிலுள்ள குறிப்புகளை ஒரு தகுதிவாய்ந்த மூப்பர் சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி ஒருவரைக் கொண்டு, நன்கு தயாரித்த சுருக்கமான மூன்று நடிப்புகளை செய்து காட்டுங்கள். முதல் நடிப்பு, அந்த மாதத்திற்குரிய பிரசுர அளிப்பை, டிசம்பர் 1999, நம் ராஜ்ய ஊழியத்தின் பக்கம் 3, பாரா 4-ல் உள்ள ஆலோசனைப்படி எப்படி கொடுப்பது என்பதை காண்பிக்க வேண்டும். முடிவில் பிரஸ்தாபி மறுசந்திப்பிற்கு ஏற்பாடுகளை செய்கிறார், பிறகு வீட்டுக்காரர் கொடுக்கும் மனமுவந்த நன்கொடையை ஒரு கவரில் பெற்றுக்கொள்கிறார். இரண்டாவது நடிப்பு, வீட்டுக்காரர் சம்பாஷிக்க தயாராக இருந்தும் ராஜ்ய செய்தியில் அக்கறை காட்டாதவர் என்பதால் அவரிடம் பிரசுரம் ஏதும் அளிக்காமல் பிரஸ்தாபி சாதுரியமாக சம்பாஷணையை முடிப்பதைப்போல் காட்ட வேண்டும். மூன்றாவது நடிப்பு, உண்மையான அக்கறையுடைய ஆனால் பிஸியாக இருக்கும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு துண்டுப்பிரதியை அளித்துவிட்டு வரலாம் என்பதை காட்ட வேண்டும். அந்த நபரை மீண்டும் சென்று சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளை பிரஸ்தாபி செய்கிறார்.
15 நிமி: நீங்கள் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்கிறீர்களா? பேச்சும் பேட்டிகளும். டிசம்பர் 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 17-18, பாராக்கள் 12-14-ல் உள்ள குறிப்புகளை சிந்தியுங்கள். தினந்தோறும் குடும்பமாக வேதவாக்கியத்தை சிந்திப்பது ஞானமான காரியம் என்பதை முக்கியப்படுத்துங்கள். சமீபத்தில் சிந்தித்த தினவாக்கியம் எவ்வாறு தங்களுக்கு விசேஷமாக பயனுள்ளதாக இருந்தது என்பதை குடும்ப அங்கத்தினர்கள் சிலரிடம் பேட்டி காணுங்கள். இது குடும்ப அங்கத்தினர்களை ஒன்றாக பிணைப்பதற்கும் எல்லாரும் ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கான குடும்பப் படிப்பின் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துங்கள்.
பாட்டு 67, முடிவு ஜெபம்.
ஜனவரி 22-ல் துவங்கும் வாரம்
7 நிமி: சபை அறிவிப்புகள்.
18 நிமி: அறிமுகங்களை எவ்வாறு தயாரிப்பது. பேச்சும் நடிப்புகளும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 9-ல் உள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். நமக்குப் பொருத்தமான, நம்முடைய பிராந்தியத்திற்கு ஏற்ற அறிமுகங்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பதை காண்பியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிப்பதற்கு ஏற்ற சில அறிமுகங்களை மறுபார்வை செய்யுங்கள்; அவற்றில் ஓரிரு அறிமுகங்களை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். (ஏப்ரல் 1997, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ஐ பார்க்கவும்.) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலும் நம் ராஜ்ய ஊழியத்திலும் கொடுக்கப்படும் அருமையான ஆலோசனைகளை வெளி ஊழியத்தில் முடிந்தளவு நன்றாக பயன்படுத்தும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நன்கு செவிகொடுத்து கேளுங்கள்.” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பள்ளி துணைநூல் பக்கங்கள் 27-28, பாராக்கள் 15-17-ல் உள்ள குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். நாம் கேட்டவற்றில் எவ்வளவு நமக்கு நினைவிருக்கிறது என்பதைப் பொருத்து நாம் கேட்பதில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ளலாம். இன்றைய தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டவர்கள் சொன்ன சில முக்கிய குறிப்புகளை நினைவிற்கு கொண்டுவரும்படி சபையாரை அழையுங்கள்.
பாட்டு 96, முடிவு ஜெபம்.
ஜனவரி 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாத வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள். பிப்ரவரி மாத பிரசுர அளிப்பை குறிப்பிட்டு, அதில் என்னென்ன புத்தகங்கள் சபையில் உள்ளன என்பதை சொல்லுங்கள்.
15 நிமி: படைப்பாளரை நன்கு அறிந்துகொள்ளுங்கள். ஜூன் 15, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 24-26-ஐ சார்ந்த பேச்சு. புத்தகப் படிப்பில், உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தை படிக்கப்போகிறவர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் பேச்சாக இது இருக்க வேண்டும். வாராந்தர புத்தகப் படிப்பு கலந்தாலோசிப்பில் அதிக ஆர்வம் காட்டும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். நம் மகத்தான படைப்பாளரைப் பற்றி நம்மால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்ள ஆவலுள்ளவர்களாய் எல்லாரும் புத்தகப் படிப்புகளில் தவறாமல் கலந்துகொள்ள விரும்புவர். புத்தகப் படிப்பில் படைப்பாளர் புத்தகத்தை படிக்காத சபைகள் ஏற்கெனவே குறிப்பிட்ட ஐந்து சிற்றேடுகளிலிருந்து குறிப்புகளை எடுத்து இந்தப் பேச்சை அளிக்கலாம்.
20 நிமி: “பெற்றோரே—பயனுள்ள பழக்கங்களை பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.” பேச்சு; ஆவிக்குரிய விஷயங்களில் நல்ல நிலையிலுள்ள பிள்ளைகளுடைய பெற்றோரை பேட்டி காணுங்கள். தங்கள் பிள்ளைகள் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள தாங்கள் என்னென்ன சரியான நடவடிக்கைகளை எடுத்தனர் என்பதை பெற்றோர் இதில் விவரிக்கின்றனர். நேரம் அனுமதிக்குமேயானால், குடும்ப மகிழ்ச்சி புத்தகம் பக்கங்கள் 55-59 வரையுள்ள குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 149, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “சந்தோஷத்துடன் செய்யுங்கள்.”b ஆங்கிலத்தில் உட்பார்வை புத்தகம், தொகுதி 2, பக்கம் 120, பாராக்கள் 6-8-ல் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின்படி, கடவுளுடைய சேவையில் நம் சந்தோஷத்தை அதிகரிப்பது எது என்பதை காண்பியுங்கள்.
20 நிமி: நீங்கள் தரமான பொழுதுபோக்கை கண்டடையலாம். மே 22, 1997, விழித்தெழு!-வில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை ஒரு குடும்பம் கலந்தாலோசிக்கிறது. குடும்ப அங்கத்தினர்கள் எப்படிப்பட்ட பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைக் குறித்து குடும்பத் தலைவர் அக்கறை கொள்கிறார். “பொழுதுபோக்குக்கு என்ன நேர்ந்திருக்கிறது?” (பக்கங்கள் 4-7) என்பதை சுருக்கமாக மறுபார்வை செய்தபின், தரமான அதேசமயத்தில் பலனளிக்கும் பொழுதுபோக்குகளை கலந்தாலோசிக்கிறார்கள். நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 131-2-ல் “ஓய்வுநேர பொழுதுபோக்கு” மற்றும் பக்கங்கள் 135-6-ல் “எல்லாவற்றையும் கடவுளின் மகிமைக்கென்று செய்யுங்கள்” என்ற உப தலைப்புகளிலுள்ள குறிப்புகளை சிந்தியுங்கள். பொழுதுபோக்கு விஷயத்தில் பெற்றோர் எவ்வாறு தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்றும் முழு குடும்பமும் பலனடையும் விதத்தில் எல்லா குடும்ப அங்கத்தினர்களும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறுங்கள்.
பாட்டு 190, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a முன்னுரை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். அதன்பிறகு கேள்வி பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
b முன்னுரை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். அதன்பிறகு கேள்வி பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.