உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?—சிற்றேட்டிற்கான படிப்புக் கேள்விகள்
இந்தப் படிப்புகளில் சில இடங்களில் பக்கங்கள் 27-31-லுள்ள பிற்சேர்க்கைக்கு மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட பாராக்களில் உள்ள குறிப்புகளை படிப்பில் சேர்த்து சொல்லலாம்; நேரம் இருந்தால் பிற்சேர்க்கை பாராக்களையும் வாசிக்கலாம்.
முதல் வாரம்
பக்கம் 2
1-4. உயிர்களை இரத்தம் எப்படி காப்பாற்ற முடியும் என்பதை சிந்திப்பது ஏன் காலத்திற்கேற்றது? (பக்கம் 27, பாராக்கள் 1-3-ஐ பாருங்கள்.)
பக்கம் 3
1, 2. உயிரை இரத்தத்துடன் சம்பந்தப்பட்டதாக நோக்குவது ஏன் இயல்பானது, இந்த விஷயத்தில் கடவுள் எப்படி உட்பட்டிருக்கிறார்?
3, 4. இரத்தத்தைப் பற்றி கடவுள் சொல்வதைக் குறித்து நாம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
5. என்ன காரணத்திற்காக நாம் ஆதியாகமம் 9:3-6-க்கு கவனம் செலுத்த வேண்டும், அதன் முக்கியத்துவம் என்ன?
6. இரத்தத்தைக் குறித்து இஸ்ரவேலர்கள் என்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருந்தார்கள்?
பக்கம் 4
1, 2. கடவுளுடைய சட்டங்கள் பூர்வ இஸ்ரவேலருக்கு எப்படி நன்மை அளித்தன, ஆனால் இஸ்ரவேல் இரத்தத்திலிருந்து விலகியிருந்ததற்கு முக்கிய காரணம் என்ன?
3. அவசரநிலை ஏற்பட்டாலுங்கூட இரத்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய சட்டத்தை எப்படி நோக்க வேண்டியிருந்தது?
பக்கம் 5
1, 2. இரத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்ட சட்டத்தைக் குறித்ததில், இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்?
3, 4. (அ) கிறிஸ்தவர்களைக் குறித்தும் இரத்தத்தைக் குறித்தும் அப்போஸ்தலர் குழு என்ன தீர்மானித்தது? (ஆ) இரத்தத்திலிருந்து விலகியிருப்பது வெறுமனே ஒரு தற்காலிக சட்டமா என்று நாம் எப்படி அறிய முடியும்?
5. இயேசுவின் அப்போஸ்தலர்களின்படி, இரத்தத்திலிருந்து விலகியிருப்பது எவ்வளவு முக்கியமானது?
6, 7. இரத்தத்தைப் பற்றிய ஆணை நிரந்தரமானது என்பதை என்ன கூடுதலான அத்தாட்சி காண்பிக்கிறது?
பக்கம் 6
1, 2. கிறிஸ்துவுக்கு முந்திய காலங்களில் இரத்தம் எப்படி மருந்தாக பயன்படுத்தப்பட்டது?
3. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரத்தத்தை பயன்படுத்துவதைக் குறித்து, மருந்தாக அதை பயன்படுத்துவதைக் குறித்துங்கூட எப்படி பிரதிபலித்தார்கள்?
4-6. (அ) இரத்தமேற்றி சிகிச்சை அளிப்பது எப்படி துவங்கியது? (ஆ) கடவுளுடைய சட்டத்தின் நோக்குநிலையில் இரத்த நாளங்களின் வழியாக இரத்தமேற்றுவது ஏன் தவறாகும்?
7. யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்கள்? (பக்கம் 27, பாராக்கள் 4-7-ஐ பாருங்கள்.)
பக்கம் 7
1. கிறிஸ்தவர்கள் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதற்கு அடிப்படைக் காரணம் மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும், இரத்த சிகிச்சை முறையின் மருத்துவ அம்சங்களை நாம் ஏன் ஆராய வேண்டும்?
இரண்டாவது வாரம்
பக்கம் 7
2, 3. நவீன மருத்துவத்தில் இரத்தம் ஏற்றுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
4, 5. இரத்தம் ஏற்றுவதால் ஆபத்து ஏதும் உள்ளதா என்பதைச் சிந்திப்பது ஏன் நியாயமானது?
பக்கம் 8
1. இரத்தமேற்றுதல்கள் பற்றி நாம் ஞானமாக என்ன கேட்கிறோம்?
2, 3. இரத்தவகைகள் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றனவா பொருந்தவில்லையா என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமாய் இருந்தாலும், ஏன் அது மட்டுமே போதுமானதல்ல?
4, 5. ஒருவருக்கு இரத்தம் ஏற்றுகையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எவ்வாறு ஏற்படலாம்?
6, 7. புற்றுநோய்க்கு இரத்தமேற்றி அறுவைசிகிச்சை செய்த பின் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
பக்கம் 9
1. புற்றுநோய்க்கான இரத்தமேற்றுதல் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய அத்தாட்சிகள் வழங்கும் ஆலோசனை என்ன?
2, 3. இரத்தம் ஏற்றுவதால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட வேறு என்ன தீங்கு வரலாம்?
4, 5. இரத்தம் ஏற்றுவதால் வரக்கூடிய நோயின் ஆபத்தைப் பற்றி மக்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
பக்கம் 10 (பெட்டி)
1, 2. இரத்தமேற்றுதலால் வரும் கல்லீரல் அழற்சி எந்தளவு ஆபத்தானது?
3. ஒரு சமயம், இரத்தத்திலிருந்து வரக்கூடிய கல்லீரல் அழற்சியின் அபாயம் மேற்கொள்ளப்படுவதாக ஏன் தோன்றியது?
4, 5. அதற்குப் பின்னரும், இரத்தத்திலிருந்து வரக்கூடிய கல்லீரல் அழற்சியின் அபாயத்தை அசட்டைசெய்ய முடியாது என்பதை என்ன கண்டுபிடிப்புகள் நிரூபித்தன?
6-8. கல்லீரல் அழற்சியைப் பற்றிய கவலை ஏன் ஒரு கடந்தகால காரியமல்ல?
பக்கம் 11
1. இரத்தத்தினால் வரும் நோயின் அபாயங்கள் மறைவதற்கில்லை என்பதை எது எடுத்துக் காட்டுகிறது?
2-4. தான் வாழும் பகுதியில் பொதுவாக இல்லாத நோய்களுக்கு ஒருவரை இரத்தம் எவ்வாறு ஆளாக்கும்? (பக்கம் 11-ல் உள்ள பெட்டியையும் பாருங்கள்.)
5-7. மரணத்திற்கேதுவான புதுப்புது நோய்கள் இரத்தத்தால் கடத்தப்படுகின்றன என்பதை மிகப் பரவலான தொற்று நோயாகிய எய்ட்ஸ் எப்படி காண்பித்துள்ளது?
பக்கம் 12
1, 2. எய்ட்ஸ் வைரஸோடு சம்பந்தப்பட்ட எதிர் உயிரிகளைக் கண்டுபிடிக்க ஏதேதோ சோதனைகள் செய்யப்பட்டாலும் இரத்தத்தால் ஆபத்தில்லை என்று அவை ஏன் இன்னும்கூட உறுதி அளிப்பதில்லை?
3-5. இந்த விஷயத்தில் நம்மை பயமுறுத்துவது எய்ட்ஸ் வைரஸ் மட்டுமே அல்ல என எப்படி சொல்லலாம்?
6, 7. இரத்தத்தால் கடத்தப்படும் வைரஸ்களைப் பற்றி நிபுணர்களுக்கு என்ன நியாயமான கவலை உள்ளது?
மூன்றாவது வாரம்
பக்கம் 13
1, 2. தரமான மருத்துவ கவனிப்பை யார் விரும்புகிறார்கள், இது எதை உட்படுத்தும்?
3-5. இரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக மாற்று சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை நீங்கள் எப்படி விளக்கிக் காட்டலாம்?
6-8. பொதுவாக இரத்தம் எப்போது ஏற்றப்படுகிறது, ஆனால் இந்த சிகிச்சை முறைக்கு ஏன் சரியான ஆதாரமில்லை?
பக்கம் 14
1. பொதுவாக தேவைப்படும் ஹிமோகுளோபின் அளவு குறைந்துவிட்டாலும் சமாளிக்கலாம் என்பதை எது காண்பிக்கிறது?
2, 3. விரைவாக இரத்தம் இழக்கப்படும்போது என்ன தேவைப்படுகிறது, இந்த சந்தர்ப்பத்தில் எப்படி சிகிச்சையளிக்கலாம்?
4. இரத்தத்தின் கன அளவை ஈடுசெய்யும் இரத்தம் சாராத திரவங்கள் ஏன் பயன்மிக்கவை?
5. சிவப்பணுக்களின் இழப்பை சமாளிக்க மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு எப்படி உதவ முடியும்?
பக்கம் 15
1. சிவப்பணுக்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்த என்ன செய்யப்படலாம்?
2-4. அறுவை சிகிச்சையின்போது இரத்த இழப்பை எப்படி குறைக்கலாம்?
பக்கம் 16
1-3. இரத்தம் ஏற்றாமலேயே பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதை என்ன அத்தாட்சி காண்பிக்கிறது?
4-6. இரத்தம் உபயோகிக்காமல் என்ன பல விதமான அறுவை சிகிச்சை முறை சாத்தியமாகும்? (பக்கம் 28, பாராக்கள் 1-3-ஐ பாருங்கள்.)
பக்கம் 17
1. இரத்தம் செலுத்தப்படாத இருதய அறுவை சிகிச்சையில் என்ன நல்ல பலன்கள் கிடைத்தன?
2-4. இரத்தமற்ற அறுவை சிகிச்சையால் அடிக்கடி கிடைக்கும் அபாரமான நன்மைக்கு நோயாளிகளாய் உள்ள சாட்சிகளும் எப்படி ஒத்துழைக்கிறார்கள்?
நான்காவது வாரம்
பக்கம் 17
5, 6. ஆபத்து/நன்மை பகுப்பாய்வு என்பதென்ன, அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது?
பக்கம் 19
1, 2. ஆபத்து/நன்மை பகுப்பாய்வில் நோயாளி என்ன பங்கு வகிக்கிறார்?
3-5. ஆபத்துகளையும் நன்மைகளையும் எடைபோடுவதில் இரத்த சிகிச்சை முறையும் உட்படுத்தப்பட்டது ஏன் சரியானது? (பக்கம் 31, பாராக்கள் 2, 3-ஐ பாருங்கள்.)
6. மருத்துவ சிகிச்சை முறைகளைத் தெரிவு செய்வதில் உங்கள் உரிமையின்மீது என்ன சட்டப்பூர்வமான கோட்பாடு வருகிறது? (பக்கம் 30, பாராக்கள் 1-7-ஐயும், பக்கம் 31, பாரா 1-ஐயும் பாருங்கள்.)
பக்கம் 18 (பெட்டி)
1-4. மருத்துவ அலுவலரின் சட்டம் சம்பந்தமான கவலைகளைப் போக்க சாட்சிகளாக இருக்கும் நோயாளிகள் என்ன செய்கிறார்கள்? (பக்கம் 28, பாரா 4-ஐ பாருங்கள்.)
5-7. சட்டம் சம்பந்தப்பட்ட கவலைகளைப் போக்க சாட்சிகள் செய்வதைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களும் மருத்துவமனைகளும் ஒத்துழைப்பது ஏன் நியாயமான ஒன்றாக இருக்கிறது?
பக்கம் 20
1-3. சாட்சிகள் எடுக்கும் நிலைநிற்கையைக் குறித்து சில மருத்துவ அலுவலர்கள் எப்படி பிரதிபலித்துள்ளார்கள்?
4, 5. சாட்சிகளாக இருக்கும் சில நோயாளிகளின் வழக்கில் எப்படி நீதிமன்றங்கள் தலையிடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது?
பக்கம் 21
1, 2. சாட்சிகளும் இரத்தமும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாள நீதிமன்றங்களுக்குச் செல்வது ஏன் சிறந்த வழியல்ல?
3, 4. நோயாளி சிறுபிள்ளையாக இருந்தபோதிலும் நீதிமன்றங்களிடம் உதவி கேட்டுச் செல்வது என்ன காரணங்களால் சரியாகாது?
5, 6. சிறுபிள்ளைகளுக்குச் சிகிச்சைமுறையை தெரிவுசெய்வதில் பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது? (பக்கம் 28, பாரா 5, மற்றும் பக்கம் 29, பாரா 1-ஐ பாருங்கள்.)
பக்கம் 22
1-3, மற்றும் பக்கம் 21, பாரா 7. தங்களுடைய பிள்ளைகளுக்கான மருத்துவ சிகிச்சை பற்றிய தீர்மானங்களைச் செய்ய பெற்றோர் சுயாதீனமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்துக்காட்டும் சில குறிப்புகள் யாவை?
4. சாட்சிகளாய் இருக்கும் பெற்றோரும் மருத்துவ அலுவலர்களும் ஏன் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்?
ஐந்தாவது வாரம்
பக்கம் 22
5, 6. இரத்தத்தைக் குறித்தும் இரத்தமற்ற மருத்துவ சிகிச்சை பற்றிய சாட்சியின் வேண்டுகோள் குறித்தும் என்ன முக்கியமான விவரங்களை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும்?
பக்கம் 23
1-3. இரத்தத்தை மறுத்ததால் சிலர் இறந்தாலும், நாம் எதை கவனியாமல் இருக்கக் கூடாது? (பக்கம் 29, பாராக்கள் 2-5, மற்றும் பக்கம் 31, பாராக்கள் 4-6-ஐ பாருங்கள்.)
4, 5. மரணம் மற்றும் இரத்தம் பற்றிய ஓர் உண்மை என்ன?
பக்கம் 24
1, 2. இரத்தம் உண்மையிலேயே உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதைப் போற்றுவதற்கு நமக்கு எது உதவும்?
3, மற்றும் பக்கம் 25, பாரா 1. கிறிஸ்துவுக்கு முந்திய காலங்களில், இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கருத்து என்ன, ஏன்?
பக்கம் 25
2. பாவநிவாரண நாளன்று இரத்தம் எப்படி பயன்படுத்தப்பட்டது, நாம் ஏன் இதில் அக்கறை காட்ட வேண்டும்?
3, 4. பாவநிவாரண நாளிற்கும் இயேசு வகித்த பாகத்திற்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்கிறது?
5. (அ) கிறிஸ்தவர்கள் இரத்தத்தைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணமென்ன? (ஆ) இரத்தம் ஏற்றுவதால் வரும் ஆபத்துக்களைப் பற்றியே நாம் ஏன் அதிகமாக அழுத்தி கூறக்கூடாது?
6, 7. (அ) கடவுளுடன் நாம் கொண்டிருக்கும் நிலைநிற்கையுடன் இரத்தம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது? (ஆ) இரத்தத்தைப் பற்றிய நம் நோக்குநிலைக்கு அடிப்படையாக என்ன போதனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்?
8. இரத்தத்தைப் பற்றிய சாட்சிகளின் நிலையானது உயிருக்கு மதிப்பை காண்பிக்கிறது என்று நாம் ஏன் சொல்லலாம்?
பக்கம் 26
1, 2. நம்முடைய நித்திய எதிர்காலத்தைக் குறித்ததில் இரத்தம் எப்படி உட்பட்டிருக்கிறது?