ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஏப்ரல் 8 விழித்தெழு!-வையும் ஏப்ரல் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிக்க வேண்டும். ‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்’ என சொல்லி நம் உரையாடலை நிறுத்த முயலுபவர்களிடம் வெவ்வேறு விதங்களில் பதிலளிப்பதை ஒவ்வொரு நடிப்பிலும் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 19-20-ஐக் காண்க.
15 நிமி: “யெகோவாவுக்கு மிகச் சிறந்ததை செலுத்துதல்.”a பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கையில் ஊழியம் செய்யும்போது ஜனங்கள் மீதுள்ள அன்பை எந்தக் குறிப்பிட்ட வழிகளில் காட்டலாம் என்பதன் பேரில் சபையாரை குறிப்பு சொல்லச் சொல்லுங்கள்.
20 நிமி: “2004 ‘கடவுளோடு நடவுங்கள்’ யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.” சபை செயலர் நடத்த வேண்டும். பாரா 5-ஐக் கலந்தாலோசிக்கையில் பக்கம் 4-லுள்ள பெட்டியில் காணப்படும் குறிப்புகள் அனைத்தையும் சபையாரில் பலரை வாசிக்கச் சொல்லுங்கள். பாராக்கள் 5-8-ஐக் கலந்தாலோசிக்கையில், உள்ளூர் சபைக்கு மாநாட்டு ஒருங்கமைப்பாளராக செயலர் செயல்படுகிறார் என்பதை வலியுறுத்துங்கள். முடிந்த மட்டும் சீக்கிரத்திலேயே மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 91, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 19-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள்.
17 நிமி: “கிறிஸ்துவின் சிந்தையை பின்பற்றுங்கள்.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கையில் துணைப் பயனியர் செய்பவர்களிடம், ஊழியத்தில் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து சொல்லச் சொல்லுங்கள்.
20 நிமி: “ராஜ்ய மன்ற கட்டுமான திட்டம் முன்னேறுகிறது.” பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 80, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 26-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஏப்ரல் மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். மே மாதத்திற்கான பிரசுர அளிப்பைப் பற்றி சொல்லுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஏப்ரல் 8 விழித்தெழு!-வையும் மே 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிக்க வேண்டும். ஒரு நடிப்பு சக பணியாளரிடமோ சக மாணவரிடமோ சாட்சி கொடுப்பது போல் இருக்கட்டும்.
15 நிமி: சபை தேவைகள்.
18 நிமி: “சத்தியத்தில் இல்லாத துணைக்கு நாம் எப்படி உதவலாம்?”c சத்தியத்திலிருக்கும் மணத்துணையின் அருமையான முன்மாதிரியைப் பார்த்து யெகோவாவை சேவிக்க ஆரம்பித்த ஓரிருவரை பேட்டி காணுங்கள்.
பாட்டு 38, முடிவு ஜெபம்.
மே 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பொதுவாக கோடை மாதங்களில் திட்டமிடப்படும் ஏற்பாடுகளைப் பற்றி சுருக்கமாக சொல்லவும்: துணைப் பயனியர் சேவை, வீட்டைப் பராமரித்தல், சில பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழ்தல். சபை பிராந்தியத்தில் எப்போதாவது மட்டுமே ஊழியம் செய்யப்படும் பகுதி இருந்தால் முழுமையாக செய்து முடிப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பற்றி அறிவிப்பு செய்யுங்கள். பயணம் செய்வதாலோ கோடை கால ஏற்பாடுகளாலோ குடும்ப படிப்பு, சபைக் கூட்டங்கள், வெளி ஊழியம் போன்று கிரமமாக செய்யப்படும் காரியங்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் விதத்தில் கவனமாய் திட்டங்களைப் போடுவது அவசியம். (நீதி. 21:5) உள்ளூரிலிருந்தாலும் சரி, வேறெந்த ஊருக்குச் சென்றாலும் சரி, தங்கள் வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.
20 நிமி: “இளைஞர்களே—கடவுளுடைய வார்த்தையை வாசியுங்கள்!”d தங்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தையும் அதிலிருந்து எப்படி பயனடைகிறார்கள் என்பதையும் பற்றி ஓரிரு இளைஞர்கள் சொல்வதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். முழு பைபிளையும் வாசிப்பதை தங்கள் இலக்காக வைக்கும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 10, பாரா 4-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: சபையாரின் அனுபவங்கள். பின்வரும் அம்சங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விசேஷ முயற்சி எடுத்ததால் பெற்ற ஊக்கமளிக்கும் சில அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்: (1) நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டும் ஒருவருக்கு உதவுதல், (2) துணைப் பயனியர் சேவை செய்தல், (3) செயலற்ற பிரஸ்தாபி மீண்டும் சபை காரியங்களில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்துதல், (4) புதியவர் ஒருவர் முதன்முதலாக பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ள உதவுதல், (5) நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் ஆர்வத்தை வளர்த்தல், அல்லது (6) இதுவரை கோடை காலத்தில் பிற ஆவிக்குரிய காரியங்களில் பங்கெடுத்தல். இதற்கான சில பதில்களை சொல்லும்படி முன்கூட்டியே சிலரை ஏற்பாடு செய்யுங்கள். பாராட்டு தெரிவியுங்கள், எதிர்காலத்திலும் இதுபோன்ற அம்சங்களில் தொடர்ந்து ஈடுபடும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு எண் 164, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.