சந்தர்ப்பத்திற்கேற்ப அணுகிப் பாருங்களேன்
ஜனங்களின் மீது நமக்கிருக்கும் உள்ளார்ந்த அக்கறை, முதலில் அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்ளவும், அதன் பிறகு அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முற்றிலுமான தீர்வை கடவுளுடைய ராஜ்யம் எப்படி அளிக்கப் போகிறது என்று விளக்கவும் நம்மை உந்துவிக்கும். (பிலி. 2:4) அநேக பிரஸ்தாபிகள் இதுபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு பலனடைந்திருக்கின்றனர்; எவ்வாறெனில், நம் பிரசுரங்களிலுள்ள பரதீஸ் காட்சிகளைச் சித்தரிக்கும் படங்களைக் காட்டி, குறிப்புகள் சொல்லும்படி வீட்டுக்காரரிடம் கேட்கின்றனர். அதற்கான உதாரணங்கள் இந்தப் பக்கத்திலேயே வலது பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் பின்வருவனவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:
◼ “இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பதைப் போன்ற நிலைமைகளை மனிதர் அனுபவிப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?”
◼ “இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு உலகில் நம் பிள்ளைகள் ஓடியாடி மகிழ்வதைப் பார்க்கவே நாம் விரும்புவோம். இப்படிப்பட்ட நிலைமை வருவதற்கு என்ன மாற்றம் செய்யப்பட வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?”
◼ “கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதைப் போலவே பூமியிலும் செய்யப்படும்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. இன்றுள்ள நிலைமைக்கும் இதில் உள்ள நிலைமைக்கும் என்ன வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்?”
◼ “இது போன்ற சூழ்நிலையில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நம் வாழ்நாளில் இது நடக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
அந்நபர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனமாகக் கேளுங்கள்; ஓரிரு கேள்விகளைக் கேட்டு அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள நிலைமைகளில் வாழ தங்களுக்கு விருப்பமில்லை என்பதாகச் சிலர் சொல்லலாம்; அப்படிப்பட்ட நிலைமை வருமென தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றுங்கூட சொல்லலாம்; அதனால், அவர்களுக்கு ஆர்வமில்லை என சட்டென்று முடிவு செய்துவிடாதீர்கள். அவர்கள் ஏன் அப்படி உணருகிறார்கள் என சாதுரியத்துடன் கேளுங்கள். மனிதகுலம் எதிர்ப்படுகிற, தீர்க்க முடியாதது போல் தோன்றுகிற பிரச்சினைகளைக் குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.—எசே. 9:4.
வீட்டுக்காரரின் கவலையைப் புரிந்துகொண்டவுடன், உங்கள் பிரசங்கத்தை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். ராஜ்ய செய்தியில் அவருக்குத் தேவையான அம்சத்தை முதலில் பேசுங்கள். அவரது கவலையை ஆற்றும் அருமருந்தாய் உள்ள ஓரிரு வசனங்களை வாசித்து விளக்கமளியுங்கள். (வலது பத்தியில் உள்ள ஆலோசனைகளைக் காண்க.) கடவுளுடைய வார்த்தை சொல்வதை நேரடியாகவே அவர் தெரிந்துகொள்ளட்டும். அவரிடம் ஆர்வம் தென்பட்டால், பிரசுரத்தைக் கொடுத்து மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறு செல்லும்போது, முதல் முறை பேசிய விஷயத்தின் மீது கூடுதலான தகவலைச் சொல்லுங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
பரதீஸ் காட்சிகளுக்கான உதாரணங்கள்
படைப்பு புத்தகம்: பக்கங்கள் 237, 243, 251
போதகர் புத்தகம்: பக்கங்கள் 251-4
அறிவு புத்தகம்: பக்கங்கள் 4-5, 188-9
தேவைப்படுத்துகிறார் சிற்றேடு: பக்கங்கள் 11, 13
உண்மையான சமாதானம் புத்தகம்: பக்கம் 98
கடவுளை வணங்குங்கள் புத்தகம்: பக்கங்கள் 92-3
[பக்கம் 6-ன் பெட்டி]
மக்கள் கவலைப்படும் விஷயங்கள்
உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைவு
ஊழல், அநீதி
ஒழுக்கச் சீர்குலைவு
குற்றச்செயல், வன்முறை
தப்பெண்ணம், ஏற்றத்தாழ்வு
திறனற்ற அரசாங்கம்
நோய், ஊனம்
பூமியைக் கெடுத்தல்
போர், பயங்கரவாதம்
மரணம், துக்கம்
மனச்சோர்வு
மிருக வதை
வறுமை, கொடுமை
வீட்டு வசதி, பணப் பிரச்சினைகள்