மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது ஏன்?
“மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது” என்பதன் பேரில் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியிடுவதை அறிவிப்பதில் விழித்தெழு! சந்தோஷம்கொள்கிறது
அரசாங்கங்களின் செல்வாக்கு—நம் கலந்தாலோசிப்பை அரசியலுக்கு மட்டும் கட்டுப்படுத்துவோம்—உலக சரித்திரத்தின் மீதும் தனிப்பட்ட விதமாக நம் ஒவ்வொருவரின் மீதும் இருக்கிறது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. நீங்கள் பேசும் மொழி, நீங்கள் கொண்டிருக்கும் வாழ்க்கைத் தராதரம், நீங்கள் செய்யும் வகையான வேலை, நீங்கள் அனுபவிக்கிற சமூக முறை, ஒருவேளை நீங்கள் அப்பியாசிக்கிற மதமும்கூட, குறைந்தபட்சம் ஒரு பாகமாவது அரசியல் மாற்றத்தின் தற்போக்கெண்ணத்தினால் உங்களுக்கு வற்புறுத்தப்பட்டிருக்கும்.
அரசாங்கம் அவசியமாக இருப்பதன் காரணமாக, நம்முடைய தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் ஒரு விதமான அரசாங்கத்தின் கீழிருக்க நம்மில் யாருக்கு பிரியமில்லை? ஆனால் எந்த வகையான அரசாங்கம் சிறந்ததாயிருக்கும்? அரசாட்சி விஷயத்தில் தெரிவு செய்யவும் கூட நமக்கு ஏதாவது இருக்கிறதா?
“மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது” என்பதன் பேரில் தொடர்ந்து வரும் கட்டுரைகளை அறிவிப்பதில், விழித்தெழு! சந்தோஷம்கொள்கிறது—இனி வரப்போகும் இப்பத்திரிகையின் கட்டுரைகளில் அவைகள் தொடர்ந்து வரும். முடியரசு, உயர்குடிஞர் ஆட்சி, சிலவராட்சி மற்றும் செல்வராட்சி போன்ற ஆட்சிமுறைகளின் சரித்திர பின்னணியைப் பற்றி அது 1992-ல் இனி வெளிவரும் கட்டுரைகளின் பேரிலும் கையாளும். ஜனநாயக ஆட்சிமுறையின் பரந்த பல்வேறு வர்ணங்களையும், குடியரசுகளின் வித்தியாசமான பல வகைகளோடுகூட தீர ஆலோசிக்கும். உயர்குடிஞர் ஆட்சிகள் பேரிலும் சர்வாதிகார ஆட்சியின் பேரிலும், இரண்டாவது உலக மகா யுத்தத்தின் அம்சங்களான பாஸிஸம், நாஸிசம் போன்ற சர்வாதிகார அரசாங்கங்களின் பேரிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தும். பொதுவுடைமை, சமதருமம் போன்றவைகளும் ஆலோசிக்கப்படும்.
மனித அரசாட்சியின் நுணுக்கங்கள் அநேகம், மற்றும் சிக்கலானவை, ஆகவே அரசாங்கத்தைப் பற்றி தெரிய வேண்டிய அனைத்தையும் தர முடியாது. அரசியலின் பேரிலான பரந்த அகராதியாக இக்கட்டுரைகள் திட்டமிடப்படவில்லை. பொதுவாக மனித அரசாங்கங்களின் அல்லது குறிப்பாக எந்த ஒரு வகையான அரசாங்கத்தையும் ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிப்பதாகவோ அவைகள் இருக்கமாட்டாது. பலவிதமான ஆட்சிமுறைகளை ஒத்துப்பார்ப்பது, ஒன்றிற்கு மேலாக ஒன்றை உயர்த்திப் பேசும் நோக்கத்தோடு அல்ல. 5-வது பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிநடத்தும் குறிப்புகளோடு விழித்தெழு! வெகுவாக ஒத்திசைந்துபோகும், அங்கு இவ்விதமாக வாசிக்கிறோம்: “இது மேலீடாக இல்லாமல் காரியங்களை ஆழ்ந்து ஆய்வுசெய்து, தற்கால நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. என்றாலும் இது அரசியல் சம்பந்தமாக நடுநிலை வகிக்கிறது.”
“மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது” என்ற கட்டுரைகள் “மேலீடாக அல்லாமல் ஆழ்ந்து ஆய்வு செய்வதன்” பாகமாக திட்டமிடப்பட்டுள்ளது. அவை “தற்கால நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தத்தை,” மனித அரசாட்சி ஒரு நெருக்கடியை எதிர்ப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டுகிறதாயிருக்கும்.
உலகத்துடைய கொலம்பிய சரித்திரம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் நெருக்கடியை இவ்விதமாக விவரிக்கிறது: “அரசாங்கம், மதம், ஒழுக்கநெறி, சமூக கூட்டுறவு, மொழி, கலைகள், நாகரிக வாழ்கைக்கான மூலாதாரம், பொது மக்களின் நம்பிக்கை, ஆகியவற்றின் நிலை, தற்பொழுதுள்ள சகாப்தத்தின் பெரிய அளவைப்பற்றி குறைந்தபட்சமாவது ஓரளவு தீர்மானத்துக்கு வரும்படி நம்மை அனுமதிக்கிறது. பட்டியலில் அரசாங்கம் முதலாவதாகவும், முக்கியத்துவத்திலும் முதலாவதாக இருக்கிறது. . . . சட்டம் வெறுக்கப்படுகிறது அமுல்படுத்துகிற அரசாங்கமும் சரி, இரண்டிலும் நம்பிக்கை வைத்திருக்கிற ஆளுநர்களும் சரி. . . . தற்பொழுதுள்ள நோக்குநிலை ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப் பார்க்கிலும் வெகு வித்தியாசமானதாக இருக்கிறது . . . உலகத்தின் அநேக பகுதிகளில் நகர் மன்றத்தினுள் புகுந்து சீர்குலைக்கவோ, ஒரு பொதுப்பேச்சை கலைத்துவிடவோ, சர்வகலாசாலையை அடித்து நொறுக்கவோ ஸ்தானாதிபதிகளின் காரியாலயத்தை வெடிவைக்கவோ, சக்திகள் தயாராக ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்ற நிலையில் இருக்கின்றன. . . . முழுமையான சுயாதீனத்துக்காக கோபம் பற்றியெரிகிறது . . . சுருங்கச் சொன்னால், அரசியல், சமூக குறிக்கோள்களில் ஒன்று, காலத்தின் உந்தும் சக்தியானது அது எந்தப் பழைய தத்துவங்களின் கிழிந்த துணிகளின் கீழே மறைந்துகொண்டிருந்தாலும் சரி, பிரிந்துபோதலேயாகும். இது செயலற்ற நிலையாக இல்லையென்றால், மறுக்கமுடியாதபடி முறிவேதான்.”
‘முறிவு’ சீக்கிரத்தில் “செயலற்ற நிலைக்கு” வழிநடத்துமா, அப்படியானால் நாம் வசிக்கும் உலகத்துக்கு எப்படிப்பட்ட விளைவுகளுடன்? உண்மையென்னவெனில், மனித ஆட்சி நியாயத்தீர்ப்புக்கென்று இருக்கிறது, அநேக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்களுடைய அரசாங்கங்களை நிறுத்துக்கொண்டு, தொடர்ந்து குறைவைக் காணும் வெறும் மனிதர்களினால் அல்ல. இப்போது, சர்வலோக சிருஷ்டிகர் தாமே கணக்கெடுக்கிறார். நூற்றாண்டுகளாக மனித ஆட்சியின் பதிவு, அதைத் தொடர்ந்து அனுமதிப்பதை நியாயமுள்ளதாக செய்கிறதா? அல்லது தெய்வீக நியாயத்தீர்ப்பின் தராசிலே நிறுக்கப்படும்பொழுது அது நீக்கப்பட வேண்டும் என்று காட்டுமா? அப்படியானால், எது அதை மாற்றியமைக்கும்?
“மனித அரசாட்சி தராசில் நிறுக்கப்பட்டுள்ளது,” என்ற தொடர் கட்டுரைகள் அரசாங்கத்தைப் பற்றிய உங்கள் அறிவை பெருகச் செய்யும். அது உங்களை நம்பிக்கையினால் நிரப்பும், ஏனென்றால் நல்லவைகளை எதிர்பார்க்க உங்களுக்கு எல்லா காரணமும் இருக்கிறது. சிறந்ததோர் அரசாங்கம் வந்துகொண்டிருக்கிறது. சிறந்த காரியம் என்னவெனில், அதை அனுபவிக்க நீங்கள் வாழலாம்! (g90 8/8)
[பக்கம் 9-ன் படங்கள்]
மனித அரசாட்சியின் பதிவு, தெய்வீக நீதியின் தராசிலே நிறுக்கப்படும்பொழுது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு சாதகமாக இருக்குமா?