உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 30
  • எமதுவாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமதுவாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • பாலினத் தொல்லை—ஓர் உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—1996
  • செக்ஸ் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?
    விழித்தெழு!—2000
  • பாலினத் தொல்லை—உங்களைப் பாதுகாப்பது எப்படி
    விழித்தெழு!—1996
  • கழுத்தில் அணியும்டையை—கண்டுபிடித்தது யார்?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 30

எமதுவாசகரிடமிருந்து

சமநிலை “கடவுளின் பரிசாகிய சமநிலை” (மார்ச் 22, 1996) என்ற கட்டுரையை வாசித்த பிறகு, உங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நான் தற்போது ஆடியாலஜி படித்துவருகிறேன்; என் பாடப் புத்தகங்கள் ஒன்றும்கூட விழித்தெழு! கட்டுரையைப் போல் முழு தகவலோடும் புரிந்துகொள்ள எளிதாகவும் இல்லை. காதின் வரைபடமும் சிறப்பாக இருந்தது.

ஜே. பி. ஏ., பிரேஸில்

டைகள் “கழுத்தில் அணியும் டையை கண்டுபிடித்தது யார்?” (மே 8, 1996) என்ற கட்டுரைக்காக மிக்க நன்றி. யெகோவாவின் சாட்சிகளின் ஊழியனாக, 90 டிகிரி உஷ்ணத்திலும் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலை செய்யும்போது நான் டையை அணிந்திருக்கிறேன். ஏதோவொரு ஈவு இரக்கமற்ற 13-வது நூற்றாண்டு ஒடுக்கு விசாரணையாளர்தான் டையை கண்டுபிடித்திருப்பார் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; திருச்சபைக்கு முரணான கோட்பாடுள்ளவரை கட்டாயப்படுத்தி பாவ அறிக்கை செய்யவைக்க, ஒரு சித்திரவதைக் கருவியை அல்லது கட்டைவிரலை நசுக்கும் கருவியைக் காட்டியோ, கொதிக்கும் எண்ணெய்யில் போடுவதாகச் சொல்லியோ, கோடைகால பிற்பகலில் டையை அணிந்துகொள்ள வேண்டுமென சொல்லியோ அந்த ஒடுக்கு விசாரணையாளர் அச்சுறுத்தியிருப்பாரென நான் ஊகித்தேன்.

டபிள்யு. பி., ஐக்கிய மாகாணங்கள்

சீதோஷ்ண நிலை எவ்வாறிருந்தாலும் டையை அணிந்துகொள்வதை சிலர் சித்திரவதையாக யோசிக்கலாம். எனினும், போற்றத்தக்க விதத்தில், டை அணிந்துகொள்வது சரியான உடையலங்காரமாக இருக்கும் கலாச்சாரங்களில், யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் செய்யும்போதும் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லும்போதும் டை அணிந்துகொள்வதால் ஏற்படும் அசௌகரியத்தைப் பொறுத்துக்கொள்கின்றனர்.—ED.

புகைவிடாத புகையிலை எங்கள் பள்ளியில் உடலாரோக்கிய வகுப்பின்போது நாங்கள் போதைப் பொருட்களைப் பற்றி படித்துக்கொண்டிருந்தோம். “இளைஞர் கேட்கின்றனர் . . . புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?” என்ற கட்டுரை இடம்பெற்றுள்ள ஏப்ரல் 22, 1996 விழித்தெழு! பிரதியை நான் என் ஆசிரியரிடம் காண்பித்தேன். அந்தக் கட்டுரையை 30 நகல்கள் எடுத்துத் தருமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்; அவற்றை மாணாக்கர்களோடு சேர்ந்து தன் வகுப்புகளில் வாசிப்பதற்காக இவ்வாறு செய்ய சொன்னார். என் வகுப்பு மாணவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது, அவர்களுக்கு நான் சில பத்திரிகைகளையும் அளித்தேன்.

எம். ஸி., ஐக்கிய மாகாணங்கள்

பாலினத் தொல்லை “பாலினத் தொல்லை இல்லாமற்போகையில்!” (மே 22, 1996) என்ற தொடர்கட்டுரைக்காக நன்றி. மற்றவர்களுக்கு இந்தப் பத்திரிகையை அளிக்கையில், இத்தொல்லையை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றியும் அவ்வாறு தொல்லைப்படுத்தப்படும்போது என்ன செய்வதென்பதைப் பற்றியும் அளிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அநேக பெண்கள் நன்றி சொன்னார்கள். சில வாரங்களுக்குப் பிற்பாடு நானே வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லையை எதிர்ப்பட்டு போலீஸில் புகார் செய்தேன். அந்தச் சூழ்நிலையை கையாண்ட விதத்திற்காக நான் போற்றப்பட்டேன்.

பெயர் குறிப்பிடப்பட்டில்லை, ஜெர்மனி

அந்தக் கட்டுரைகளுக்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாயிருக்கிறேன். இப்போது நான் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்; பாலியல் தொல்லையை எதிர்ப்பட்டிருக்கிறேன் ஆனால் மற்ற எவருக்கும் நான் இதைச் சொல்லவில்லை. என் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் இதைக் குறித்து பேச இந்தக் கட்டுரைகள் என்னை உற்சாகப்படுத்தின. இப்போது தொல்லை கொடுப்பவர்களை தைரியமாய் என்னால் சமாளிக்க முடிகிறது.

கே. ஒய்., ஜப்பான்

நான் 21 வயது செக்ரட்டிரி, சமீபத்தில் என் முதலாளி என்னை பாலினத் தொல்லைப்படுத்தினார். என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட அவரை எவ்வாறு அணுகுவது என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கையில், விழித்தெழு! பத்திரிகையின் இந்த இதழை பெற்றுக்கொண்டேன். என் முதலாளிக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தேன், அவர் அதை வாசித்தார். பின் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, அவர் என்னிடம் நடந்துகொண்ட விதமாக இனி ஒருபோதும் நடந்துகொள்ளப்போவதில்லை என வாக்களித்தார்.

டி. என். ஐ., நைஜீரியா

இந்த முக்கியமான விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்காக நான் உங்களைப் போற்றுகிறேன்; ஆனால் உங்களது போட்டோக்களின்படி ஆண்கள் மாத்திரம்தான் தொல்லைப்படுத்துகின்றனர். தெளிவாகவே, நீங்கள் பட்சபாதம் காட்டுகிறீர்கள்.

ஹெச். டி., ஐக்கிய மாகாணங்கள்

பாலினத் தொல்லைக்கு ஆளாகும் நபர்களில் பெண்களே ஆண்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையானோர் என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும், அந்தக் கட்டுரைகள் ஆண்களும் தொல்லைக்கு ஆளாகலாம் என்பதை ஒப்புக்கொண்டு குறிப்பிட்ட உதாரணங்களை அளித்திருந்தன.—ED.

இந்தத் தலைப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள், பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதைத்தான் அழுத்திக்காண்பிக்கின்றன, ஆனால் பெண்களுக்கு எவ்வாறு மரியாதை காட்டுவதென்பதை ஆண்களுக்குக் கற்பிப்பதில்லை. என்னயிருந்தாலும், தொல்லைப்படுத்துபவர்கள் இல்லையென்றால், தொல்லையே இருக்காதே. உங்கள் கட்டுரை “ஆண்களுக்கான சரியான நடத்தை” என்ற பகுதியை அளித்திருந்தது. இதற்காக, பாராட்டியேதீர வேண்டும்.

ஓ. சி., தைவான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்