1987 “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்” மாவட்ட மாநாட்டுக்கு வருகை தாருங்கள்
1987 மாவட்ட மாநாடுகளுக்கு எப்பேர்பட்ட சிறந்த பொருள் நமக்குத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது: “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்!” நிச்சயமாகவே நாம் யெகோவாவில் நம்பிக்கையுள்ளவர்களாய் இருப்பதானது, நம்மை உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக்குகிறது. மற்றவர்கள் எல்லோரும் தங்கள் செல்வம், தங்கள் ஞானம், தங்கள் வல்லமை, அல்லது தங்கள் அரசியல் ஆட்சியாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரில் நம்பிக்கை வைக்கிறார்கள். சீக்கிரத்தில் இவர்கள் யாவரும் அதிக வருத்தத்திற்குரிய விதத்தில் ஏமாற்றமடைவார்கள்.—சங் 146:3, 4.
ஒருவர் மீது அல்லது ஒரு பொருளின் பேரில் நம்பிக்கை வைப்பதன் அர்த்தமென்ன? அகராதி தயாரிப்பாளரின் பிரகாரம் அதன் அர்த்தம் “ஒருவர் மீது அல்லது ஒரு பொருளின் பேரில் முழு நம்பிக்கையோடு சார்ந்திருத்தல்” என்பதாகும்.a ஆம் நாம் அவ்வாறுதான் உணருகிறோம். யெகோவாவின் பேரில் முழுவதுமாகவும் முழு உறுதியுடனும் நம்முடைய நம்பிக்கையை வைத்திருக்கிறோம்.
யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதன் முக்கியத்துவம் அநேக தடவைகள் கடவுளுடைய வார்த்தையில் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. யெகோவாவில் நம்பியிருப்பதைப்பற்றி சங்கீதக்காரர் சொல்லுகிறார்கள்: “என் நம்பிக்கையோ யெகோவாவிலே இருக்கிறது,” “நானோ யெகோவா, உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.” அவர்களுடைய வார்த்தைகள் நம்முடைய ராஜ்ய பாட்டுகளில் ஒன்றின் வார்த்தைகள் நம்முடைய நினைவுக்குக் கொண்டுவருகின்றனர்: “யெகோவா அடைக்கலம்/நம்பு அவர் பலம் . . .நம் கோட்டையும் அவரே/புகலிடமாவாரே.”—சங்கீதம் 31:6, 14, தி.மொ.
வேதவாக்கியங்கள் நாம் கடவுளின் நம்பியிருக்கும்படி நம்மை மறுபடியும் மறுபடியும் கட்டளையிடுகின்றன: “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்.” “உன் முழு நெஞ்சோடும் யெகோவாவை நம்பு. உன் எல்லா வழிகளிலும் அவரை நினை.” (சங்கீதம் 37:3, நீதி. 3:5) அதிக துன்பத்தின் சமயத்திலும் அவரில் நம்பிக்கை வைத்த யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றியும் கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. ராஜாவாகிய எசேக்கியா, எபேத்மெலேக், மூன்று எபிரேயர்கள், தானியேல் ஆகியோர் அவர்களில் சிர்.—1 இராஜாக்கள் 18:5; எரேமியா 39:18; தானியேல் 3:28; 6:23.
நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை எப்படி காட்டுகிறோம்? ஒரு வழி அவரை அறியவருவதன் மூலமும் அவருடைய வார்த்தையை நம்புவதன் மூலமும். இயேசு கிறிஸ்து ஒரு சுலபமான வழியைக்கூறினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” ஆம் நாம் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பியிருந்தால், நம்முடைய வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை நாம் முதலாவது வைப்போம், மேலும் நேர்மையுள்ள நடத்தை போக்கைப் பின்பற்றுவோம்,—மத்தேயு 6:33.
யெகோவாவில் நம்பிக்கை ஏன் பலத்ததாக இருக்கவேண்டும்? எல்லா பக்கமும் நம்மேல் கொண்டுவரப்படும் அழுத்தங்களின் நிமித்தமாக. சிலருக்கு நேரடியான துன்புறுத்தல் வருகிறது, மற்றவர்களுக்குத் தவறு செய்யும்படியான சோதனைகள் ஏற்படுகின்றன, வேறு சிலருக்கு தங்களுடைய சகிப்புத் தன்மையைத் தேவைப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. வரப்போகும் நம்முடைய மாவட்ட மாநாடு, இந்தக் கடைசி நாட்களில் யெகோவா நமக்கு ஏற்பாடு செய்திருக்கும் அநேக உதவிகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்த ஆண்டு மாநாடு மூன்று நாட்கள் நீடிக்கும், வெள்ளி, சனி, ஞாயிறு, நிகழ்ச்சிநிரலின் நேரங்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம், கடந்த ஆண்டு நிகழ்ச்சி நிரலைப் போலவே, ஏறக்குறைய அதே அளவான விஷயங்கள் சிந்திக்கப்படும். நிகழ்ச்சிநிரலின் எல்லா அம்சங்களின் நோக்கம் யெகோவாவிலும் இக்காலத்தில் அவர் உபயோகித்துவரும் அவருடைய காணக்கூடிய அமைப்பிலும் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவது என்பதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்.
ஆகையால் கிறிஸ்தவ சாட்சிகளில் ஒவ்வொருவரும் இந்த மாநாடுகளில் ஒன்றில் ஆஜராயிருக்க தீர்மானமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பிள்ளைகளும் அழைத்துக்கொண்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை காலை ஆரம்பபாட்டு, ஜெபத்துக்கு அங்கே இருங்கள், ஞாயிறு மாலை முடியும் பாட்டு, ஜெபம் வரை தங்கியிருங்கள். உங்கள் பைபிள், பாட்டு புத்தகம், குறிப்பு எடுக்க ஒரு புத்தகம், பேனா ஆகியவற்றுடன் ஆயத்தமாக வாருங்கள். பாட்டு, ஜெபம் உட்பட அளிக்கப்படும் விஷயங்களின் ஆவியுடன் முழுவதுமாக உங்களை ஈடுபடுத்துங்கள், சொல்லப்படும் விஷயங்களுக்குக் கூர்ந்து கவனம் செலுத்துங்கள். மேலும் எப்பொழுதுமே நம்முடைய உடை மற்றும் நடத்தை குற்றப்படுத்தப்படாததாய் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்வோமாக.
“சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” என்ற வேதப்பூர்வ நியமம் “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்” மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராயிருப்பதற்கும் பொருந்துகிறது. முழு நிகழ்ச்சிநிரலையும் எடுத்துக்கொள்வதில் நாம் எவ்வளவு அதிகம் ஊக்கமுள்ளவர்களாய் இருக்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆசீர்வாதங்களை நாம் மாநாட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், மற்றவர்களுக்கும் அவ்வளவுக்கு அதிக ஆசீர்வாதமாய் இருப்போம்—2 கொரிந்தியர் 9:6.
[அடிக்குறிப்பு]
a Websters New Dictionaryms