“சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டுக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்
1989 நவம்பர் முதற்கொண்டு, சுயாதீனம் என்ற தலைப்பு முன்னொருபோதும் இராத அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகச் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய தேசங்களிலுள்ள மக்கள், 40 மற்றும் அதிகமான வருடங்களாகவும் அவர்கள் கொண்டிருந்ததைவிட அதிகமான அரசியல் சுயாதீனத்தை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் எந்த ஓர் அரசியல் சுயாதீனத்தையும்விட மிக அதிகமான முக்கியத்துவமுள்ள சுயாதீனம் ஒன்று இருக்கிறது. நாம் அதைக் குறித்து கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் வாசிக்கலாம். இயேசு கிறிஸ்து ஒருசமயம் சொன்னார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) ஆம், ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மனுஷனுக்குப் பயப்படுகிற பயத்திலிருந்தும் ரோமர் 6:18, 22-ல் வாசிக்கிறபடி, பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாகியிருக்கிறார்கள். “யெகோவாவுடைய ஆவி (NW) எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என்றும்கூட நாம் வாசிக்கிறோம். (2 கொரிந்தியர் 3:17) உண்மையில், கடவுளுடைய வார்த்தை, “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்ற பிரகாசமான எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது.—ரோமர் 8:20.
தற்காலத்தில் எவரேனும் கிறிஸ்தவ சுயாதீனத்தை முயன்றுப் பெற விரும்புவாரேயானால், அவர் உண்மையான முயற்சியை எடுக்க வேண்டும். வெறுமென குறைந்தபட்ச எதிர்ப்பையுடைய போக்கைப் பின்தொடரும் ஒரு காரியமாக இது இல்லவே இல்லை. சுயாதீனத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் மனச்சாய்வுடைய சக்திகளை முன்னிட்டுப் பார்க்கையில், இந்தச் சுயாதீனத்தைத் தொடர்ந்து அனுபவித்துக் களிப்பது கூடுதலான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது: பிசாசாகிய சாத்தானும், அவனுடைய பொல்லாத உலகமும், நம்முடைய சொந்த சுதந்தரிக்கப்பட்ட பாவமுள்ள மனச்சாய்வுகளும். யெகோவா தேவன் அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையின் மூலமும், அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமும், அவருடைய காணக்கூடிய அமைப்பின் மூலமும் உதவியை அளித்திருக்கிறார்.—லூக்கா 11:13.
சுயாதீனத்தைப் பற்றிய தங்கள் புரிந்துகொள்ளுதலைப் பலப்படுத்திக் கொள்ள, சுயாதீனப் பிரியர் அனைவருக்கும் உதவி செய்ய, யெகோவாவின் சாட்சிகளின் இந்த ஆண்டு மாவட்ட மாநாடுகள், “சுயாதீனப் பிரியர்” என்ற பொருளை தகுந்தவிதத்தில் கையாளும். வெள்ளிக்கிழமை காலை 10.20-க்கு ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 வரையாக இந்த மாநாடுகள் மூன்று நாட்கள் நீடிக்கும். வருகைத் தரும் அனைவரும், கிளர்ச்சியூட்டும் பேச்சுகள், அக்கறையூட்டும் பேட்டிகள், பயனுள்ள நடிப்புகள் மற்றும் பைபிள் அடிப்படையில் அமைந்த கருத்தைக் கவரும் ஒரு நாடகம் ஆகியவற்றால் ஆவிக்குரியப் பிரகாரமாய் புத்துயிர் பெற்று கட்டியெழுப்பப்படுவார்கள்; பழைய மற்றும் புதிய நண்பர்களோடு இருதயத்துக்கு அனலூட்டும் கூட்டுறவின் மகிழ்ச்சியையும் நம்முடைய ராஜ்ய பாடல்களைப் பாடுவதில் ஆயிரக்கணக்கான மற்றவர்களோடு சேர்ந்து கொள்ளுவதாலும் இருதயப்பூர்வமான பொது ஜெபங்களில் பங்கு கொள்வதாலும் வரும் மகிழ்ச்சியையும் நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது.
யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் அனைவரும், வெள்ளிக்கிழமை காலை இந்த மாநாடுகள் ஆரம்பமாகையில் தாங்கள் அங்கே இருப்பதோடு நிச்சயமாக எதுவுமே குறுக்கிட அனுமதியாதிருப்பார்களாக. பைபிள் மற்றும் பாட்டுப் புத்தகத்தோடு மாத்திரமல்லாமல், குறிப்பெடுக்க பென்சிலையும் நோட்டுப் புத்தகத்தையும்கூட எடுத்துவர நிச்சயமாயிருங்கள். சுயாதீனமான ஒரு ஜனத்தின் பாகமாக, உங்கள் ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உண்மையான உணர்வுடனும்கூட வாருங்கள்.—மத்தேயு 5:3.