“சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்கு வருகைத் தாருங்கள்
பாபேல் முதற்கொண்டு பாஷை வித்தியாசம் பிரிவினை உண்டாக்கும் ஒரு சக்தியாகவே இருந்து வந்திருக்கிறது. அங்கே யெகோவா மனிதவர்க்கத்தின் பாஷையைத் தாறுமாறாக்கி ‘ஒரு கோபுரத்தைக் கட்டி, அவர்களுக்குப் பேர் உண்டாகப் பண்ண வேண்டும்’ என்ற மனிதர்களின் நோக்கத்தை இடையில் குறுக்கிட்டு தடை செய்துவிட்டார். (ஆதியாகமம் 11:4) பாஷை வித்தியாசம் எத்தனை பிரிவுண்டாக்குவதாக இருக்கக்கூடும் என்பது பெல்ஜியத்தில் நடைப்பெற்ற சம்பவத்திலிருந்து தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக லூவேனில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பாஷையின் காரணமாக இரண்டாகப் பிளவுற்றது.
மனிதர்களிடையே பிரிவினைக்கான காரணங்களில் பாஷை ஒரு காரணமாக மாத்திரமே இருக்கிறது. மற்றவை தேசம், இனம், கல்வி மற்றும் பொருளாதார நிலையாகும். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் பிரிவினை உண்டாக்கும் இந்த எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள உழைத்து, உண்மையில் ஐக்கியமாக இருக்கிறார்கள்.
கடந்த கோடைக்காலம், போலந்திலுள்ள கார்செள (கட்டோவிஸ் அருகில்) போஸ்நான் மற்றும் வார்சா நகரங்கள் இந்த ஐக்கியத்தை மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் கண்டன. குறைந்தபட்சம் 20 வித்தியாசமான பாஷைகளைப் பேசும் சாட்சிகள் சுமார் 37 தேசங்களிலிருந்து வந்திருந்தனர். என்றபோதிலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை அனைவராலும் காண்பிக்கப்பட்டது. இதற்கு காரணமென்ன? அனைவருமே வேதபூர்வமான சத்தியத்தின் “சுத்தமான பாஷை”யைப் பேசினர். இது செப்பனியா 3:9-ல் (NW) தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. “அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று ஆராதனை செய்யும்படிக்கு, யெகோவாவினுடைய நாமத்தை நோக்கி அவர்கள் அனைவரும் கூப்பிடும்படிக்கு நான் [யெகோவா தேவன்] அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.”
ஆகவே நல்ல காரணத்தோடு, 1990 மாவட்ட மாநாடுகளின் பொருள் “சுத்தமான பாஷை” என்பதாக இருக்கும். மனித அபூரணம், சாத்தானின் பொல்லாத உலகத்தின் செல்வாக்கு, பிசாசினுடைய மற்றும் பேய்களுடைய தந்திரமான செயல்கள் காரணமாக, “சுத்தமான பாஷை” பேசுவது எப்போதும் எளிதாயிருப்பதில்லை. நம்மை பிரிக்கக்கூடிய சுயநல மனச்சாய்வுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.
கடவுள் நமக்கு ஏன் இந்தச் சுத்தமான பாஷையைக் கொடுத்திருக்கிறார்? நாம் “தோளோடு தோள்” நின்று யெகோவாவை சேவிப்பதற்காக. “ஒரே நுகத்தின் கீழ்” கடவுளைச் சேவிப்பதை இது அர்த்தப்படுத்துவதாக மற்ற மொழிபெயர்ப்புகள் சுட்டிக் காண்பிக்கின்றன. (எருசலேம் பைபிள்); “ஒரு மனதாக” (மொஃபட்); “ஒரு மனப்பட்டு” (ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பு); “ஒரே கருத்தாய்” (தி.மொ.) மற்றும் “அவருடைய சேவையில் ஒத்துழைத்து.”—பையிங்டன்.
இந்த மாநாடுகளில் பேச்சுகள், நடிப்புகள், அனுபவங்கள், கருத்தரங்குகள் மற்றும் பைபிள் நாடகங்கள் மூலமாக, நாம் சுத்தமான பாஷையை அதிக சரளமாகப் பேசுவதற்கு ஊக்குவிக்கவும் உந்தவும்படுவோம். அவை நம்முடைய சகோதரர்களோடுகூட அதிக திறமையோடும் ஒத்திசைவோடும் சேவிப்பதற்கும்கூட நம்மைத் தூண்டுவதாக இருக்கும்.
இந்த மாநாடுகள் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குச் சற்றுப்பின் துவங்கி ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணிக்கு முடிவடையும். ஆரம்பப் பாட்டுக்கு இருக்கவும் ஞாயிறு மதியம் முடிவான ஜெபம் வரையாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆஜராகவும் இப்போதே திட்டமிடுங்கள்.
தேதி மற்றும் மாநாடு விலாசம் சம்பந்தப்பட்ட தகவலுக்கு தயவு செய்து நீங்கள் வாழுமிடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு எழுதுங்கள்.
உங்கள் பைபிள் மற்றும் பாட்டு புத்தகத்தோடு வந்து குறிப்புகளை எடுக்க தயாராக இருங்கள். நல்ல ஆவிக்குரிய பசியார்வத்தோடுகூட வாருங்கள், அப்போது நீங்கள் சுத்தமான பாஷையைப் பேசவும் யெகோவாவை சேவிக்கவும் அதிக முழுமையாக ஆயத்தமுள்ளவர்களாய் அங்கிருந்து செல்வீர்கள். (w90 2/15)