“ஒளி ஏந்துகிறவர்கள்” மாவட்ட மாநாட்டுக்கு நல்வரவு
சிருஷ்டிப்பு நாட்களின் முதல் நாளிலேயே பூமியின் சம்பந்தமாக ஒளி சிருஷ்டிக்கப்பட்டது. யெகோவா தேவன் இவ்விதமாகச் சொன்னதாக நாம் வாசிக்கிறோம்: “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.” (ஆதியாகமம் 1:3) இது அப்போஸ்தலனாகிய யோவான் எழுதியதோடு ஒத்திருக்கிறது: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.”—1 யோவான் 1:5.
கடவுளுடைய குமாரன் தம்முடைய தகப்பனோடு ஐக்கியமாக இருப்பதன் காரணமாக இயேசு ஒரு சமயம் இவ்விதமாகச் சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோவான் 9:5) யெகோவா தேவனிலும் அவருடைய குமாரனிலும் விசுவாசம் வைப்பதன் மூலம் நாம் இருளிலிருந்து ஒளியினிடத்துக்கு வரலாம். இயேசுவும்கூட இவ்வாறு அறிவித்தார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.”(யோவான் 12:46) ஆகவே இயேசு கிறிஸ்து தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களிடம் சரியாகவே இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:14, 16.
“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யினால் தெளிவுபடுத்தப்படுகின்ற சத்தியத்தை, கடவுளுடைய வார்த்தையின் புரிந்துகொள்ளுதலை கொண்டிருப்பது என்னே ஓர் ஆசீர்வாதம்! (மத்தேயு 24:45-47) ஒரு திரித்துவத்தில் நம்பிக்கையினால் நாம் இனிமேலும் மனங்குழம்பியில்லை; சர்வ வல்லமையும் அன்புமுள்ள ஒரு கடவுள் ஏன் அக்கிரமத்தையும் வன்முறையையும் அனுமதிக்கிறார் என்பது குறித்து நாம் இனிமேலும் குழம்பிய நிலையில் இல்லை. மரித்தோரின் நிலைக் குறித்து நாம் இனிமேலும் சந்தேகத்தில் இல்லை. ஒளி நமக்கு நம்பிக்கையை, ராஜ்ய நம்பிக்கையை அளித்திருக்கிறது. சிருஷ்டிகர் என்னே ஒரு மகத்தான கடவுள் என்பதை அது நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. சத்தியத்தின் ஒளி வாழ்க்கையில் நமக்கு நோக்கத்தை அளித்திருக்கிறது, அது முதலிடத்தில் நாம் சிருஷ்டிக்கப்பட்டதன் நோக்கத்தை—நம்மை உண்டாக்கின யெகோவா தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை—நிறைவேற்றுவதாக இருக்கிறது. ஒளிதாங்கிகளாக இருப்பதன் மூலம் இதை நாம் செய்கிறோம். ஒளிதாங்கிகளாக இருப்பது பெரிய பாக்கியமாகவும் சிலாக்கியமாகவும் இருக்கிறது, ஆனால் அது ஒரு முக்கியமான உத்தரவாதமாகவும் இருக்கிறது. அந்தப் பொறுப்பை செம்மையாக நிறைவேற்ற யெகோவா அளிக்கும் எல்லா உதவிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஆகவே நம்முடைய 1992 மாவட்ட மாநாடு “ஒளி ஏந்துகிறவர்கள்” மாவட்ட மாநாடுகள் என்று அழைக்கப்படுவது எத்தனைப் பொருத்தமாக உள்ளது!
ஒளி ஏந்துகிறவர்களாக நம்முடைய கடமைக்கு நம்முடைய திறமைகளையும் போற்றுதலையும் மேம்படுத்த, இந்த மாநாடுகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது ஆஜராயிருக்க, ஆரம்ப பாட்டிலிருந்து முடிவு ஜெபம் வரையாக இருக்க நாம் விரும்ப வேண்டும். அது பேச்சாக, பேட்டிகளாக, அனுபவங்களாக அல்லது நாடகமாக, அது எதுவாக இருப்பினும் மேடையிலிருந்து சொல்லப்படும் அனைத்துக்கும் நாம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்புகளை எடுப்பது, நம்முடைய ஞாபக சக்தியை புதுப்பித்துக் கொள்வதற்கு பின்னால் எடுத்துப் பார்க்க மட்டுமல்லாமல், ஆனால் அளிக்கப்படும் காரியங்களில் கவனத்தை ஊன்ற வைக்க பெரும் உதவியாக இருக்கிறது. ஆம், மாநாடு நிகழ்ச்சிநிரல் முழுவதிலுமாக நாம் “கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனிக்க” வேண்டும்.—லூக்கா 8:18.