நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—திறம்பட்ட விதத்தில் துண்டுப் பிரதிகளைப் பயன்படுத்துவதன் மூலம்
1 1987-ம் ஆண்டு “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்” மாவட்ட மாநாட்டில் நான்கு புதிய துண்டுப்பிரதிகள் வெளியிடப்பட்டன. நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம், யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, மற்றும் மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? நீங்கள் இந்தத் துண்டுப்பிரதிகளை வெளி ஊழியத்தில் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்களா?
2 அநேக பிரஸ்தாபிகள் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் அவற்றை கதவண்டை விட்டுவருகின்றனர். மற்றும் அவர்கள் சந்திக்கும் சமயத்தில் செவிகொடுப்பதற்கு அதிக வேலையாக இருக்கும் ஆட்களுடைய வீடுகளில் அதை விட்டு வருகின்றனர். ஒரு சிலர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு ஒரு துண்டுப்பிரதியை பயன்படுத்துகையில் வீட்டுக்காரரின் ஆர்வத்தை தூண்டுவதற்கு உதவியாக இருப்பதாய் காண்கின்றனர். மற்றவர்கள் எந்தப் பிரசுரமும் கொடுக்கப்படாத வீடுகளில், ஆனால் அக்கறை காண்பிக்கப்படும் வீடுகளில் இதை இலவசமாக விட்டு வருவதை விரும்புகின்றனர்.
எப்பொழுது, எப்படி அதைப் பயன்படுத்துவது?
3 கிடைக்கும் வாய்ப்புகளுக்குப் பல வழிமுறைகளை கையாளுபவர்களாகவும் மற்றும் விழிப்புள்ளவர்களாகவும் இருப்பதன் மூலம் இந்தத் துண்டுப்பிரதியை அளிப்பதற்கான அநேக சந்தர்ப்பங்களை நீங்கள் காணக்கூடும். உதாரணமாக, உறவினர்களுக்குச் சாட்சி கொடுக்கும்போது துண்டுப்பிரதிகள் உதவியாக இருக்கக்கூடும். நீங்கள் விடுமுறை நாட்களை கழிக்கையில், கடைக்குச் செல்லுகையில், பயணஞ்செய்கையில், பள்ளியில் அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தில் துண்டுப்பிரதிகளை பயன்படுத்தலாம். துண்டுப்பிரதிகளை எளிதாக வெளியே எடுக்கும் வகையில் வைத்திருக்கிறீர்களா? ஒருவேளை உங்கள் மேற்சட்டையிலோ ஜோபியிலோ பணப்பையிலோ கைப்பையிலோ வைத்திருக்கிறீர்களா? எல்லாச் சமயங்களிலும் நீங்கள் துண்டுப்பிரதிகளை வைத்திருப்பதானது சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்படி உங்களை உற்சாகப்படுத்தக்கூடும். துண்டுப்பிரதிகளை அளிப்பதற்கான சந்தர்ப்பங்களுக்காக ஏன் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது?
4 சந்தர்ப்பம் எதுவாக இருந்தபோதிலும் பலன்தரத்தக்க திறம்பட்ட சாட்சி கொடுப்பதற்கு நீங்கள் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தலாம். அவற்றிலிருக்கக்கூடிய தகவல்கள் சுருக்கமானதாக இருந்தபோதிலும் அதிக நம்பவைக்கும் ஒன்றாகவும் தெளிவான வேதப்பூர்வ விவாத குறிப்புகளால் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றன. இந்தத் துண்டுப்பிரதிகள் வண்ணப்படங்களால் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே வெளி ஊழியத்தில் அதிகப்படியான நன்மைகளை சாதிக்கக்கூடிய பயனுள்ள உபகரணங்களாக இருக்கின்றன. எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கு அளிக்க விழிப்புடனிருங்கள்.
வெளி ஊழியத்தில்
5 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் வேலை செய்யும்போது இந்தத் துண்டுப்பிரதிகளின் சிந்தனைத் தூண்டும் தலைப்புகளை அனுகூலப்படுத்திக் கொண்டு ராஜ்ய செய்தியில் அவர்களுடைய அக்கறையை விருத்திச் செய்திருக்கிறீர்களா? சில பிரஸ்தாபிகள் தங்களுடைய முன்னுரையில் ஒரு துண்டுப்பிரதியின் தலைப்பை உயர்த்திக் காட்டுகின்றனர். இந்த அணுகுமுறையை நீங்கள் ஏன் முயற்சிசெய்து பார்க்கக்கூடாது? நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “வணக்கம், உங்களை வீட்டில் காண்பதில் நான் சந்தோஷமடைகிறேன். மிக முக்கியமான ஒரு செய்தியை தெரியப்படுத்தும் ஒரு வேலையில் நான் மனமுவந்து ஈடுபட்டிருக்கிறேன். அது சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற இந்தத் துண்டுப்பிரதியில் காணப்படுகிறது. இது உங்கள் பிரதி. இது இலவசம். [வீட்டுக்காரரிடம் கொடுத்து, முதல் பக்கத்தினிடமாக அவருடைய கவனத்தைத் திருப்புங்கள்.] இப்பேர்ப்பட்ட சமாதானமுள்ள ஒரு சூழ்நிலையின் கீழ் வாழ்வதற்கு நீங்கள் விரும்பமாட்டீர்களா?” பின்பு, சந்தர்ப்பம் அளிக்குமானால் சம்பாஷணைக்குப் பேச்சு பொருளுடன் தொடருங்கள். அதன்பின் இந்த மாத அளிப்புடன் அதை இணைத்திடுங்கள்.
6 நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்து, நீங்கள் சொல்லும் செய்தி பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடுவது பயனுள்ளதாக காணக்கூடும். நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதி உங்கள் பிராந்தியத்தில் அதிக பயனுள்ளதாக இருக்கக்கூடும். உதாரணமாக, நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “இன்று நாங்கள் அயலாளர்களிடம் பைபிள் செய்தி அடங்கிய ஓர் இலவச துண்டுப்பிரதியை விட்டு வருகிறோம். இதோ உங்கள் பிரதி. [வீட்டுக்காரரிடம் கொடுங்கள்.] இது பைபிளைப் பற்றிய தகவல் என்பதைக் கவனியுங்கள். இன்று மக்கள் பைபிள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்.] பைபிள் சொல்வதை நாம் ஏன் நம்பலாம் என்பதைக் காண இந்தத் துண்டுப்பிரதி உங்களுக்கு உதவக்கூடும்.” சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் தொடர்ந்து, இந்தப் பூமிக்காக கடவுள் நோக்கம் கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களை காண்பியுங்கள்.
7 பைபிள் துண்டுப்பிரதிகளை விநியோகிப்பதானது நற்செய்தியை அறிமுகப்படுத்துவதில் பலகாலங்களாக சோதித்துப் பார்க்கப்பட்ட திறம்பட்ட வழிவகையாக இருக்கிறது. (மத். 24:14) நம்முடைய பகிரங்க ஊழியத்தில் மிக முக்கியமான பாகத்தை அவை வகிக்கின்றன. மேலும் நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது நமது அழகிய துண்டுப்பிரதிகளை சிறந்த சாட்சி கொடுப்பதற்கு திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவோமாக. இவ்வாறாக மற்றவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்க நாம் உதவுவோமாக.