நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பைபிள் படிப்புகளின் மூலம்
1 இந்தியாவில் இந்தக் கடந்த ஊழிய ஆண்டின்போது ஒவ்வொரு மாதமும் 6,200 வேதப்படிப்புகள் நடத்தப்பட்டன. இந்த நாட்டிலுள்ள 8,784 பிரஸ்தாபிகளில் ஒருவேளை சுமார் பாதிபேர் இந்த மகிழ்ச்சியான நடவடிக்கைகளில் ஏதோ ஒரு பங்கு பெற்றிருக்கின்றனர். இந்த நடவடிக்கையில் சுமார் பாதி பிரஸ்தாபிகள் பங்கு பெற்றிருக்கின்றனரென்றால், மற்ற பாதிபேர் அதில் பங்குபெறவில்லை என்பதை இது குறிக்கும். மற்றொருவருக்கு சத்தியத்தை கற்றுத் தருவதனால் வரும் அந்த விசேஷித்த மனநிறைவை நம்மில் அதிகமானோர் எப்படி அனுபவித்துக்களிக்கலாம்?
2 நாம் கடவுளையும் அயலாரையும் நேசிப்பதன் காரணமாக, மற்றவர்களோடு சத்தியத்தை பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஆனால் நமது ஊழியத்தில் யெகோவாவிடமிருந்து நமக்கு உதவி தேவை. (1 கொரி. 3:6, 7) எனவே, ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு நமக்கு உதவி செய்யும்படி யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகி கேட்பது ஒரு நன்மையான காரியமாக இருக்குமல்லவா? (1 யோவான் 5:14, 15) பின்பு நமது வேண்டுதலுக்கு இசைவாக நாம் செயல்பட வேண்டும். நமது சூழ்நிலைமை அனுமதிக்கும் அளவுக்கு முழுவதுமாக வெளி ஊழியத்தில் பங்குபெற்று சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஒரு வீட்டு பைபிள் படிப்பைக் குறித்து பேசலாம்.
அநேக வாய்ப்புகள்
3 கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் புரோஷுர்களையும் பிராந்தியத்திலுள்ள மக்களிடம் விநியோகித்திருக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளாயிராத ஆயிரக்கணக்கான மக்களுடைய வீடுகளிலே மற்ற புத்தகங்களுள் என்றும் வாழலாம், மெய்ச் சமாதானம், மற்றும் சத்தியம் ஆகிய புத்தகங்கள் காணப்படுகின்றன. ஒரு புதிய பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு இது ஒரு பரந்த ஊழிய வாய்ப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது.
4 நம்முடைய வேலையைப் பற்றி அறிந்திருப்பதாக அல்லது நமது பிரசுரம் ஏற்கெனவே அவரிடம் இருப்பதாக ஒரு வீட்டுக்காரர் நம்மிடம் சொல்லும்போது, அதைக் குறித்து நாம் எவ்வளவு சந்தோஷமடைகிறோம் என்பதை நாம் அவரிடம் சொல்ல வேண்டும். (நியாயங்கள் புத்தகம், பக். 20 பார்க்கவும்.) அவரிடம் ஒரு பிரசுரம் இருக்குமானால், அதை அவர் எடுத்துவரும்படி தயவாக கேட்கலாம். பின்பு அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நன்மை பயக்கக்கூடிய ஆர்வத்துக்குரிய சில அம்சங்களை நாம் சுட்டிக் காட்டலாம். பிரதிபலிப்பு சாதகமாக இருக்குமானால் நாம் ஒரு வீட்டு பைபிள் படிப்பைக் குறித்து அவரிடம் பேசலாம்.
5 மேற்சொல்லப்பட்டவற்றிலிருந்து ஒரு வேறுபாடானது வீட்டுக்காரரிடம் நமது பிரசுரம் இருக்கிறதா என்பதை விசாரிப்பதில் நாமாகவே முந்திக்கொள்வதாகும். இது முக்கியமாக நாம் அதிகமாக பிரசுரங்களை அளித்திருக்கும் பிராந்தியங்களில் பலனுள்ளதாக இருக்கலாம். சிநேகப்பான்மையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட பின்பு, நாம் பின்வருமாறு சொல்லாம்: “நாங்கள் அடிக்கடி சந்திப்பதன் காரணமாக அயலகத்தாரில் அநேகர் எங்களுடைய பிரசுரங்களில் சிலவற்றை வைத்திருக்கின்றனர். பிரசுரிக்கப்பட்ட அந்தத் தகவல்களிலிருந்து மக்கள் நன்மையடைவதைக் காண்பதில் நாங்கள் அக்கறைகொண்டிருக்கிறோம்.” அதன்பின்பு நமது பிரசுரங்கள் அவரிடம் ஏதாவது இருக்கிறதா என்று நாம் வீட்டுக்காரரிடம் கேட்கலாம். அவரிடம் இருக்குமானால், அதைப் பார்க்கலாமா என்று தயவாகக் கேட்டு, நாம் அதைப் படிக்கும் முறையை அவருக்குக் காட்ட விரும்புவதாகக் கூறலாம். ஒரு சுருக்கமான நடிப்பைச் செய்து காட்டவும். ஒரு வீட்டு பைபிள் படிப்பில் விளைவடையக்கூடும். அவரிடம் நமது பிரசுரம் இல்லையென்றால் நாம் இந்த மாத அளிப்பை அவருக்கு அளித்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க விரும்புவாரா என்று அவரிடம் நேரடியாக கேளுங்கள்.
பகுத்துணர்வை பயன்படுத்துங்கள்
6 மக்கள் அதிக வேலையாக இருப்பதன் காரணமாக, நம்மை வரவேற்பவர்கள் விரும்பும் அளவுக்கும் அதிகமான நேரம் அங்கு தங்கிவிடாதபடிக்கு பகுத்துணர்வோடு நடந்துகொள்வது ஞானமானது. முதல் ஒரு சில படிப்புகள் சுமார் 15 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம். தன்னுடைய பெருமளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை வீட்டுக்காரர் அறிவாரானால் நமது தொடர்ச்சியான சந்திப்பை ஏற்க அவர் மனமுள்ளவராக இருக்கக்கூடும். எப்பொழுது பைபிள் படிப்பு உறுதியாக நிலைநாட்டப்பட்டு, வீட்டுக்காரரின் ஆர்வம் வளர்ந்து விட்டதோ அப்பொழுது படிப்பிற்கு சற்று நீண்டநேரம் செலவிடப்படலாம். மெய்தான், ஒரு சிலர் ஆரம்பத்திலிருந்தே நீண்ட நேரம் படிப்பதை விரும்பக்கூடும்.
7 நமது உதவி தேவைப்படக்கூடிய செம்மறியாட்டைப் போன்ற ஜனங்கள் வெளி ஊழியத்திலிருக்கின்றனர். அநேகரிடம் நமது பிரசுரங்கள் இருக்கின்றன. சந்தேகமின்றி ஒரு சிலர் இன்று பூமியில் நடைபெறும் அருவருப்பான காரியங்களைக் கண்டு பெருமூச்சு விட்டழுகின்றனர். (எசே. 9:4) ஆகவே, மனித குலத்தின் தொல்லைகளுக்கு பரிகாரம் கொண்டுவரக்கூடிய ராஜ்யத்தைப் பற்றிய பிரசுரங்களை விநியோகிப்பது மட்டுமல்ல, ஆனால் பைபிள் படிப்புகள் மூலமாக, நேர்மையான இருதயமுள்ளோரை சத்தியத்துடன் எட்டுவதும் நமது சிலாக்கியமாக இருக்கிறது.—மத். 28:19, 20.