உலகத்திலேயே மிகச் சிறந்த பத்திரிகைகளை அளியுங்கள்
1 காவற்கோபுர பத்திரிகையின் கூறப்பட்ட நோக்கமானது “யெகோவா தேவன் இந்தச் சர்வலோகத்தின் கர்த்தராகிய பேரரசர் என்பதை மேன்மைப்படுத்துவதாகும்.” விழித்தெழு! “முழு குடும்பத்துக்கும் அறிவொளியூட்டுவதாய் இருக்கிறது. . . . சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.” இந்த மேற்கோள்கள் அந்தப் பத்திரிகைகளிலிருந்தே எடுக்கப்பட்டவை. இந்த இலக்குகளைப் பின்தொடருவதே அவற்றை லட்சக்கணக்கான வாசகருக்கு ஆறுதலின் ஊற்றுமூலமாக்கியிருக்கின்றன.
2 ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது, வீடு வீடாகச் செய்யும் நம் ஊழியத்தில் கூடிய அளவாக இந்தப் பத்திரிகைகளுக்குச் சந்தாக்களை ஏற்கும்படி நாம் அளித்து வருவோம். இதைப் பலன்தரத்தக்க முறையில் செய்ய, அவற்றில் அடங்கிய விஷயங்களோடு நாம் நன்றாய்ப் பழக்கப்பட்டோராக இருக்க வேண்டும். ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து, அவற்றை அளிக்கையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய குறிப்புகளைக் குறித்து வையுங்கள். ஆட்களின் அக்கறைக்குரியதாக இருப்பதைப்பற்றி சிந்தியுங்கள். சமுதாய, குடும்ப, அல்லது உணர்ச்சி சம்பந்தமான என்ன பிரச்னைகள் உங்கள் அயலார் பெரும்பான்மையரின் சிந்தனையை ஆட்கொள்கின்றன? அவர்கள் இருதயத்தைத் தொட்டு மேலும் கற்றுக்கொள்ளும்படியான ஓர் ஆவலைத் தூண்டும் ஒன்றை நீங்கள் சொல்லும்படி சிந்தித்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள். போதியளவான சந்தா சீட்டுகளை உங்களுடன் எடுத்துச்செல்ல நிச்சயமாயிருங்கள்.
3 ஏப்ரல் 1 காவற்கோபுரத்தை முனைப்பாகக் காட்டுதல்: (மாதம் இருமுறை வரும் பதிப்புகள்.) பெரும்பான்மையான மக்கள் மேம்பட்ட ஓர் உலகத்துக்காக ஏங்குகின்றனர், மிக அடிக்கடி தற்போது தங்கள் மகிழ்ச்சியைக் கெடுத்துப்போடும் பல பிரச்னைகள் இல்லாத ஒன்றை விரும்புகின்றனர்.
உங்களை அறிமுகப்படுத்தின பின்பு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “‘ஒரு மேம்பட்ட உலகம்—வெறும் ஒரு கனவா?’ என்ற தலைப்பையுடைய இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட அக்கறையைத் தூண்டும் ஒரு குறிப்பை உங்களுக்குக் காட்ட நான் விரும்புகிறேன். அது சொல்வதாவது: ‘இந்த உலகம், நம்முடைய உலகம், நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த இடம் அல்ல. . . . தற்கால கஷ்டங்களின் பட்டியல் முடிவு பெறாததாகத் தோன்றுகிறது.’ (இந்தக் கட்டுரையின் 3-வது பாராவைப் பார்க்கவும்.) இந்த நிலைமை எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையோடிருப்பதைக் கடினமாக்குகிறதல்லவா? எனினும், எதிர்காலத்தைப்பற்றி சங்கீதம் 37:11 சொல்வதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.” இந்த வசனத்தை வாசித்த பின்பு, இந்த வாக்கைப்பற்றி தான் எவ்வாறு உணருகிறாரென வீட்டுக்காரரைக் கேளுங்கள். அவர் சாதகமாய்ப் பதிலளித்தால், 4-ம் பக்கத்திலுள்ள “ஒரு மேம்பட்ட உலகம்—அருகாமையில்!” என்ற கட்டுரைக்குத் திருப்பி, பின்வருமாறு சொல்லுங்கள்: “சங்கீதம் 37:11-லிருந்து நாம் இப்போதுதான் வாசித்தது உட்பட, வேதவாக்கியங்களின் பல வசனங்களின் இடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளைத் தவறாமல் வாசித்துவருவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களென்று நான் நம்புகிறேன்.” பின்பு காவற்கோபுர பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தாவாக 60.00 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள்.
4 ஏப்ரல் 15-ன் காவற்கோபுரத்தை முனைப்பாகக் காட்டுதல்: மாதம் இருமுறை வரும் பதிப்புகளின் 4-ம் பக்கத்திலுள்ள கட்டுரை இவ்வாறு கேட்கிறது: “நம்பகமான வழிநடத்துதலை நீங்கள் எங்குக் கண்டடையலாம்?”
உங்களை அறிமுகப்படுத்தின பின்பு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இன்று உலகத்தில் மிகப்பல பிரச்னைகள் இருக்கின்றன, இதைப்போன்று [அந்தச் சமுதாயத்தைப் பாதிப்பதாயுள்ள ஒன்றை அல்லது ஒரு தலைப்புச் செய்தியைக் குறிப்பிடுங்கள்]. இந்தக் குழப்ப நிலையிலிருந்து வெளியேற எவராவது வழியைக் கண்டுபிடிப்பார்களா என நாம் ஏங்கி சிந்திக்கும்படி இது செய்கிறது. மகிழ்ச்சியுண்டாக, பைபிள் மகிழ்ச்சியும் பாதுகாப்புமுள்ள ஒரு வாழ்க்கைமுறைக்கு ஒரு வழிகாட்டியென 2 தீமோத்தேயு 3:16, 17 நமக்கு உறுதியளிக்கிறது.” இந்த வசனங்களை வாசித்தப் பின்பு, பைபிள் ஏன் நம்பத்தக்க வழிகாட்டி என்பதைப் புரிந்துகொள்வதற்கு காவற்கோபுரம் எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறதெனக் காட்டுங்கள். காவற்கோபுர பத்திரிகையின் மாதாந்தர வெளியீடுகளுக்குச் சந்தாக்கள் அளிக்கையிலும் இதைப்போன்ற பிரசங்கங்களைப் பயன்படுத்தலாம்.
5 விழித்தெழு! பத்திரிகையை காட்ட நீங்கள் விரும்பினால், மே 8-ன் வெளியீட்டில் “பிள்ளைகளுக்கு உண்மையான நம்பிக்கை” என்ற கட்டுரையைப் பயன்படுத்தலாம். பெற்றோர் பிள்ளைகளின் தேவைகளைக் கூர்ந்துணருவோராக அவர்களுக்கு உதவிசெய்ய என்ன செய்யக்கூடுமென்று அறிய ஆவலுடன் இருப்பதாக நீங்கள் பெரும்பாலும் காணலாம். பத்திரிகைகளின் வெவ்வேறு பல வெளியீடுகளைக் கொண்டுசெல்வதன்மூலம், பிரசுரிக்கப்பட்டிருக்கிற பல்வேறு கட்டுரைகளைக் கவனிக்கச் செய்யலாம், இது சந்தாவை ஏற்கும்படி ஆட்களை ஊக்குவிக்கக்கூடும். சந்தா ஏற்க மறுத்துவிட்டால், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப் பிரதிகள் சிலவற்றை அல்லது ஒவ்வொரு பிரதியையாவது ஏற்கும்படி ஆலோசனை கொடுக்க நிச்சயமாயிருங்கள்.
6 உலகத்திலேயே மிகச் சிறந்த நம்முடைய பத்திரிகைகளைப்பற்றி நாம் ஆர்வ அக்கறையுடையோராக இருந்தால், மற்றவர்களும் ராஜ்ய நம்பிக்கையை அடைந்து, யெகோவாவை, சர்வலோகத்தின் ஈடற்றப் பேரரசரான கர்த்தராகப் போற்றிப் புகழ்வதில் பங்குகொள்ளக்கூடும்படி அவற்றை அவர்களிடம் விட்டுவருவதில் ஆவலுடையோராக இருப்போம்.—சங். 83:17.