என்றும் வாழலாம் புத்தகத்தைத் திறம்பட்டவகையில் அறிமுகப்படுத்துதல்
1 அறிமுகங்களைப் பயன்படுத்துவதில் இயேசு ஈடிணையற்றவராக இருந்தார். ஆர்வத்தைக் கிளறிவிட எதைச் சொல்லவேண்டும் என்பதை அறிந்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் வெறுமனே குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கேட்பதன் மூலமாகவே சமாரியப் பெண் ஒருத்தியிடம் உரையாடலைத் தொடங்கினார். இது உடனடியாக அவளது கவனத்தைக் கவர்ந்தது. ஏனென்றால் ‘யூதர்கள் சமாரியருடன் தொடர்பே கொள்ளாதவர்களாக’ இருந்தனர். அதைப் பின்தொடர்ந்து வந்த உரையாடல் இறுதியில் அவளும் மற்ற அநேகரும் விசுவாசிகளாவதற்கு உதவிற்று. (யோவா. 4:7-9, 41, NW) அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
2 என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்பற்கு தயாரிக்கையில், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், ‘நம் பிராந்தியத்தில் உள்ள மக்களின் உடனடி அக்கறைகள் யாவை? ஒரு பருவவயதினருக்கு, வயதானவருக்கு, கணவனுக்கு, அல்லது ஒரு மனைவிக்குக் கவர்ச்சியூட்டுவதாய் இருப்பது எது?’ ஒன்றுக்கு மேற்பட்ட அறிமுகங்களைத் தயாரித்து வைத்திருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு எது மிகவும் பொருத்தமானதாக தோன்றுகிறதோ அதை உபயோகியுங்கள்.
3 குடும்ப வாழ்க்கை சீர்குலைவதைப்பற்றி அநேகர் அக்கறையுடையவராய் இருப்பதனால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“வாழ்க்கையின் அனுதின அழுத்தங்கள் குடும்பங்களின்மீது இன்று பேரளவு இறுக்கத்தைக் கொண்டுவந்திருக்கின்றன. நீங்கள் எங்கிருந்து உதவியைப் பெறமுடியும்? [பதிலுக்காக காத்திருங்கள்.] பைபிள் நமக்கு ஒரு உண்மையான உதவியாக இருக்கக்கூடும். [2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசிக்கவும்.] குடும்பங்கள் தப்பிப் பிழைக்க உதவிசெய்யும் பலனளிக்கும் வழிநடத்துதல்களை வேத எழுத்துக்கள் அளிக்கின்றன. நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் பிரசுரத்தின் பக்கம் 238-ல் 3-வது பாரா என்ன சொல்லியிருக்கிறது என்பதை கவனியுங்கள்.” பாரா 3-ஐ வாசித்து, புத்தகத்தை அளிக்கவும்.
4 உள்ளூர் செய்தி ஒன்றை உபயோகிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “[உள்ளூர் மக்களின் அக்கறைக்குரிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி] இதைப் பற்றிய செய்தியை நீங்கள் கேள்விப்பட்டீர்களா? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக காத்திருங்கள்.] இதெல்லாம், இந்த உலகம் எங்குதான் போய் முடியுமோ என்று உங்களை யோசிக்கவைக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட காரியங்கள் நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சியாக இருக்கின்றன என்று பைபிள் முன்னுரைத்தது.” பின்னர் என்றும் வாழலாம் புத்தகத்தில் 150-3-ம் பக்கங்களிலுள்ள தகவல்களைக் கலந்தாலோசியுங்கள்.
5 அதிகரித்துக்கொண்டு போகும் குற்றச்செயல் பிரச்சினையைப்பற்றி அநேகர் கவலையடைகின்றனர். “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகத்தில் பக்கம் 10-ல் உள்ள “குற்றச்செயல்களும்/பாதுகாப்பும்” என்ற தலைப்பின்கீழ் உள்ள முதல் அறிமுகத்தை நீங்கள் பயன்படுத்தலாம்:
◼ “ஆட்களின் சொந்தப் பாதுகாப்புக்குரிய காரியத்தைப்பற்றி நாங்கள் எல்லாரிடமும் பேசி வருகிறோம். நம்மைச் சுற்றிக் குற்றச்செயல்கள் பேரளவாய் நடந்துகொண்டிருக்கின்றன. இது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது. உங்களையும் என்னையும் போன்ற ஆட்கள் இரவில் தெருவில் பாதுகாப்பாக உணரவேண்டுமானால் என்ன செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” சங்கீதம் 37:10, 11-ஐ நீங்கள் வாசித்துக் காட்டலாம். பின்னர் என்றும் வாழலாம் புத்தகத்தின் 156-8-ம் பக்கங்களை உபயோகித்து கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும் ஆசீர்வாதங்களைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.
6 ஒரு எளிய அணுகுமுறையை விரும்புவீர்களானால், “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகம் பக்கம் 12-ன் மேற்பகுதியில் காணப்படுவதைப் போன்ற ஒரு அறிமுகத்தை நீங்கள் பயன்படுத்தலாம்:
◼ “பைபிள் நமக்கு அளிக்கக்கூடிய மகத்தான எதிர்காலத்திற்குக் கவனம் செலுத்தும்படி எங்களுடைய அயலகத்தாரை நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். [வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.] இது நல்லதாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? [பதிலுக்காக காத்திருங்கள்.] கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் அனுபவிக்கவிருக்கும் மற்ற ஆசீர்வாதங்களைப்பற்றி இந்தப் புத்தகத்தின் 19-ம் அதிகாரம் சிறப்பித்துக் காட்டுகிறது.” அதன் பின்னர் என்றும் வாழலாம் புத்தகத்தை அளியுங்கள்.
7 பலன்தரத்தக்க ஒரு அறிமுகத்தைத் தயார்செய்தலானது, நீதிக்காக பசிதாகமுள்ளவர்களைச் சென்றெட்ட உங்களுக்கு உதவிசெய்யக்கூடும்.—மத். 5:6.