ராஜ்ய பாடல்களை ரசிக்க...
கடவுளுடைய ஊழியர்கள் இசையை அவர் கொடுத்த ஒரு அருமையான பரிசாக நினைக்கிறார்கள். (யாக். 1:17) நிறைய சபைகளில் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் ராஜ்ய பாடல்களைக் குறைவான சத்தத்தில் வைத்துக் கேட்கிறார்கள். கூட்டங்களுக்கு முன்பு ராஜ்ய இசையைப் போடுவது நம்மை இனிமையாய் வரவேற்பதுபோல் இருக்கிறது. வழிபாட்டிற்காக நம் மனதைத் தயார்ப்படுத்த உதவுகிறது. அதோடு, நம் பாட்டு புத்தகத்தில் உள்ள புதிய மெட்டுகளைக் கேட்பது, அவற்றின் இசையைத் தெரிந்துகொள்ளவும் சரியாகப் பாடவும் உதவுகிறது. கூட்டங்கள் முடிந்த பிறகு இந்த இசையைப் போடுவது உற்சாகமான சூழலை உருவாக்குகிறது, நம் சகோதர சகோதரிகளோடு நல்ல நட்புறவை அனுபவிக்கத் தூண்டுகிறது. எனவே, கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—பியானோ இசையைப் போட மூப்பர் குழு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், அமைப்பு வெளியிடாத பாடல் பதிவுகளைப் போடுவது சரியானதாக இருக்காது. சகோதரர்களின் உரையாடலுக்கு இடையூறாக இல்லாத அளவுக்கு இசையின் சத்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மூப்பர்களின் பொறுப்பு.