கிழக்கு ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள்
1989, நவம்பர் மாதம் பெர்லின் மதில் சரிந்து விழுந்தபோது, “சுமார் 20 லட்சம் கிழக்கு ஜெர்மானியர்கள், கிழக்கு பெர்லின், எல்லைப் பகுதியை திறந்துவிட்ட பின் இரண்டே நாட்களில் துண்டாக்கப்பட்டிருந்த தங்கள் தேசத்தின் மேற்கு பாதிக்குள் திரளாக வந்து சேர்ந்தனர்” என்பதாக ஏஷியாவீக் அறிவிப்பு செய்தது. அவர்களுடைய குறிக்கோள் என்னவாக இருந்தது?
அதிக செல்வந்தர்களுக்கு அது பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும் ஒரு வெறியாக இருந்தது. மற்றவர்களுக்கு, அது முக்கியமாக கடை ஜன்னல்களை வேடிக்கைப் பார்ப்பதும் புதிதாக கிடைத்த சுதந்திரத்தை ருசி பார்ப்பதுமாக இருந்தது. அநேகர் யெகோவாவின் சாட்சிகளை பெர்லினிலும் மற்ற நகரங்களிலும் தெருக்களில் கண்டனர், அவர்களிடமிருந்து பிரசுரங்களை ஏற்றுக்கொண்டனர். அப்போது முதற்கொண்டு, சிலர் ஃப்ராங்க் ஃபோர்ட் அம் மேய்னுக்கு அருகில் செல்டர்ஸிலுள்ள காவற்கோபுர கிளைக்காரியாலயத்துக்கு எழுதி ஒரு சில குறிப்பிடத்தக்க பிரதிபலிப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு கடிதம் இவ்வாறு சொன்னது: “என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் மேற்கு பெர்லினுக்குச் சென்றிருந்த போது, தெருவில் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து ஒரு காவற்கோபுரம் பிரதியை பரிசாகப் பெற்றுக்கொண்டேன். அப்போது முதற்கொண்டு, பைபிளை மறுபடியுமாக ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அநேகமநேக பிரச்னைகள் எனக்கிருந்தபோதிலும், மறுபடியுமாக வாழ்க்கையில் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எனக்கு கொடுக்கும் ஒருவர் இருக்கிறார். உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தை நான் வாசிக்க முடிந்தால் நான் பெரு மகிழ்ச்சியடைவேன். யெகோவாவின் சாட்சிகளோடு நான் தொடர்பு கொள்ளவும்கூட விரும்புகிறேன்.”
மற்றொரு பார்வையாளர் இவ்விதமாக எழுதினார்: “நியுரெம்பர்க்கில் முக்கிய நிலையத்துக்கு குகையின் வழியாக நான் கடந்து சென்ற போது, ஒரு பெண்மணி எனக்கு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பிரதிகளை கொடுத்தாள். அவைகளை வாசித்த போது நான் கிளர்ச்சியடைந்தேன். கொஞ்ச நாட்களாக நான் மறுபடியும் பைபிளை தினந்தோறும் உபயோகித்து வருகிறேன்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் 1990 கோடயில் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டன. அப்போது மேற்கு பெர்லினாக இருந்த ஒலிம்பியா விளையாட்டரங்கம், கிழக்கு ஜெர்மனி உட்பட அநேக தேசங்களிலிருந்து வந்த சாட்சிகள் ஆஜரான மாநாடு இடங்களில் ஒன்றாக இருந்தது. ஆஜராயிருந்த 44,532 பேரில் சுமார் 30,000 பேர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வந்தவர்கள் என கணக்கிடப்படுகிறது. ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் 1,017 புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டதாக செய்தித்தாள் பெர்லினர் மார்ஜன்போஸ்ட் அறிவித்தது. இவர்கள் தண்ணீரில் முழுமையாக முழுக்காட்டப்பட்டனர், இம்முறையினால் இதில் “கலந்துகொண்டவர்கள் ஆரம்பக் கால கிறிஸ்தவர்களின் மாதிரியை நெருக்கமாக கடைப்பிடித்தனர்.”
கிழக்கு ஜெர்மனியில் காரியங்கள் எவ்வாறு மாறியிருக்கின்றன? மார்ச் 1990-ல் கிழக்கு ஜெர்மன் செய்தித்தாள், யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி அங்கீகாரம் பெற்றதை அறிவிப்பு செய்தது. “யெகோவாவின் சாட்சிகள் மறுபடியும் சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பின் கீழ் கிழக்கு ஜெர்மன் செய்தித்தாள் மிட்டல்டியூஷ் ஸுட்டிங் சொன்னதாவது: “மார்ச் 14-ம் தேதி, நான்கு பத்தாண்டு காலம் நீடித்த தடையுத்தரவின் முடிவை அர்த்தப்படுத்தியது. இந்த நாளில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஜெர்மன் பிரதிநிதிகள், மறுபடியுமாக அவர்களுடைய விசுவாசத்திலுள்ள சமுதாயத்தினர் ஜெர்மன் மக்களாட்சி குடியரசின் எல்லைக்குள்ளே மத சுயாதீனத்தை அப்பியாசிப்பதை அனுமதிக்கும் ஓர் அதிகாரப்பூர்வமான பத்திரத்தை தங்கள் ஜேப்பிகளில் வைத்துக் கொண்டு ஜெர்மன் மக்களாட்சி குடியரசு செயலகக் கட்டிடத்தைவிட்டு புறப்பட முடிந்தது.”
கடந்த வசந்த காலத்தில் லீப்சிக்கில் ஒரு சாட்சியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதம் விவரத்தைக் கூறுகிறது: “ஒரு வாரத்துக்கு முன்பாக, இன்னும் நாங்கள் சிறிய அளவுகளில் ஆவிக்குரிய உணவை இரகசியமாக இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். இப்பொழுது [மார்ச் 14, 1990] நாங்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்! விரைவில் நாங்கள் நான்கு டன்கள் பிரசுரங்களை ஒரு பாரக்கட்டை வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருப்போம்!” உண்மையில், கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்ட முதல் பாரக்கட்டை வண்டி, 25 டன்கள் பைபிள் பிரசுரங்களை ஏற்றிச் சென்றது, அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே இன்னும் 250 டன்கள் அனுப்பப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட வருடங்களாக சுதந்திரம் பறிக்கப்பட்ட அந்தச் சாட்சிகளின் ஆவிக்குரிய பசி அப்பேர்ப்பட்டதாக இருந்தது!
நாசிக் கொள்கையும் (1933–45) கம்யூனிஸமும் ஜெர்மனியில் சாட்சிகளுடைய வேலையை ஒழித்துவிட முயற்சி செய்ததை நாம் மனதுக்கு கொண்டு வருகையில், அவர்களுடைய கடந்த கால மற்றும் தற்கால சுறுசுறுப்பான நடவடிக்கைகள், அவர்களுடைய உத்தமத்துக்கும் அவர்கள் மீது கடவுளுடைய ஆசீர்வாதத்துக்கும் நேர்த்தியான அத்தாட்சியாக இருக்கின்றது.
சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள்
1989 டிசம்பரில் மிக்கேல் கொர்பச்சேவ் இரண்டாம் போப் ஜான் பாலை வத்திக்கனில் சந்தித்துப் பேசினார். சோவியத் செய்தித்தாள் ப்ரவேதா இந்தப் பேச்சு வார்த்தையை குறித்து கொர்பச்சேவ் பின்வருமாறு சொன்னதாக அறிக்கை செய்தது: “நாங்கள் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள பேச்சைக் கொண்டிருந்தோம். . . . மதத்தைப் பற்றியும் ஐரோப்பாவில், உலகில் மற்றும் சோவியத் யூனியனில் இது சம்பந்தமாக நடைபெற்று வரும் செயற்பாடுகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம்.” எல் ஆஸர்வேட்டோர் ரோமானோ என்ற வத்திக்கனின் அதிகாரப்பூர்வமான செய்தித்தாள் போப்பிடமாக திரு. கொர்பச்சேவ் பின்வருமாறு சொன்னதாக அறிவிப்பு செய்திருந்தது: “கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், யூதர்கள், புத்தமதத்தினர் இன்னும் மற்றவர்கள் உட்பட அநேக சமயப் பிரிவினர் சோவியத் யூனியனில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தங்கள் ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்துகொள்வதற்கு உரிமை இருக்கிறது. விரைவில், நம்முடைய தேசத்தில், மனச்சாட்சி உரிமைகளின் மீது சட்டம் மேற்கொள்ளப்படும்.”
அந்தச் சொல்லுக்கு உண்மையாக, செப்டம்பர் 1990-ல் சோவியத் சட்டமன்றம், மனச்சாட்சி சுயாதீனத்தை அனுமதிக்கும் சட்டத்தை அங்கீகாரம் செய்தது. எழுத்துப் படிவத்திலுள்ள சட்டத்தின் 3-வது பிரிவு இவ்விதமாகச் சொல்கிறது: “மனச்சாட்சியின் சுயாதீன உரிமைக்கு இசைவாக, ஒவ்வொரு குடிமகனும், மதத்தினிடமாக தன்னுடைய உறவு பற்றி தானே தீர்மானிக்கிறவனாகவும் தனிப்பட்டவராகவோ மற்றவர்களோடு சேர்ந்தோ எந்த மதத்தையும் கடைப்பிடிக்கவோ அல்லது எதையும் கடைப்பிடிக்காமலிருக்கவோ, மதத்தினிடமாகத் தன்னுடைய உறவின் சம்பந்தமான நம்பிக்கைகளை வெளியிடவும் பரப்பவும் உரிமையுடையவனாகவும் இருக்கிறான்.”
மத சுயாதீனத்தை பிரயோகிப்பதை எதிர்நோக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் சோவியத் யூனியனில் இருக்கின்றனர். 1990 “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளுக்கு, சோவியத் யூனியன் முழுவதிலும் பரவியிருக்கும் எல்லாச் சாட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வார்சாவில் ருஷ்ய மொழி நிகழ்ச்சிகளுக்கு சோவியத் யூனியனிலிருந்து 17,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். சோவியத் யூனியனில் மாநாடுகளை நடத்துவது சாத்தியமாக இருக்கப் போகும் நாளை அவர்கள் எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றனர்.
போலந்தில் முன்னேற்றம்
யெகோவாவின் சாட்சிகள் 1989, மே மாதம் போலந்தில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டனர். அப்போது முதற்கொண்டு கிளைக்காரியாலயம் ஒன்று நிறுவப்பட்டு, வார்சாவுக்கு அருகே விரிவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முற்காலங்களில், கிறிஸ்தவ நடுநிலைமை விஷயத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான இளம் சாட்சிகள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் பொருத்தமான சான்றிதழை காண்பிப்பார்களேயானால், இராணுவ சேவையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் விலக்குதல் அளிக்கப்படுகின்றனர்.
1989 மற்றும் 1990-ல் போலந்தில் நடத்தப்பட்ட மாநாடுகள் அங்குள்ள சாட்சிகளுக்கு மற்றொரு மாபெரும் தூண்டுதலாக இருந்திருக்கிறது. போலந்திலுள்ள சுறுசுறுப்பான சாட்சிகளின் எண்ணிக்கை 97,000-க்கும் மேலான புதிய உச்சநிலையோடு கடந்த ஆண்டின் போது ஒவ்வொரு மாதமும் அதிகரித்திருப்பதை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. வெகு விரைவில் போலந்து, 1,00,000-க்கும் மேற்பட்ட சாட்சிகளைக் கொண்ட 12-வது தேசமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.a ஏப்ரலில் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள் 1,88,861 பேராகும்.
ருமேனியாவில் மத சுயாதீனம்
ருமேனியாவிலுள்ள சாட்சிகள், 1990 ஏப்ரலில் தங்கள் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதை கேள்வியுற்று கிளர்ச்சியடைந்தனர். (பெட்டி பக்கம் 13 பார்க்கவும்.) விரைவில் தேசம் முழுவதிலும் வட்டார மாநாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஒரு தொடர் மாநாட்டில் 44,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராயிருந்தனர். என்றபோதிலும் அந்தச் சமயம் தேசம் ழுழுவதிலுமே சுமார் 19,000 சாட்சிகள் மாத்திரமே இருந்தனர். நிச்சயமாகவே ருமேனிய நாட்டவர் அநேகர் ராஜ்ய செய்திக்கு பிரதிபலித்து வருகின்றனர்.
உலகம் முழுவதிலும், 1990-க்கு “சுத்தமான பாஷை” என்ற பொருள் கொண்ட மாவட்ட மாநாடுகள், ப்ராசாவ் மற்றும் க்ளுஜ்–நப்போக்கா நகரங்களில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி ருமேனிய மொழியிலும் ஹங்கேரி மொழியிலும் அளிக்கப்பட்டது. 36,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர், 1,445 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
1991 ஜனவரி 1, பிரதி முதற்கொண்டு, காவற்கோபுரம் ருமேனிய மொழியில், ஆங்கிலத்தோடுகூட அதே சமயத்திலும் முழு வண்ணத்திலும் பிரசுரிக்கப்பட ஆரம்பித்தது.
கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மதத்தினர் பெரும்தொகயினராயிருக்கும் அருகாமையிலுள்ள பல்கேரியாவில், சாட்சிகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் இன்னும் இல்லை, ஆனால் அவர்கள் தங்கள் சபை கூட்டங்களுக்கு இடங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள், பல்கேரிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் நடத்தப்பட்ட “சுத்தமான பாஷை” மாநாட்டுக்கு கிரீஸிலுள்ள சலோனிக்கா வரை பிரயாணப்பட்டு வந்தனர்.
ஹங்கேரியிலிருந்து நற்செய்தி
1989, ஜூன் 27-ம் தேதி ஹங்கேரியிலுள்ள சாட்சிகளுக்கு ஒரு வரலாற்று புகழ் பெற்ற நாளாக இருந்தது. செய்தித்தாள் மக்யார் நெம்செட் அறிவித்ததாவது: “சர்ச் விவகாரங்களுக்கான அரசு அலுவலகம், மத சுயாதீன சட்டத்தின் பிரகாரம், ஹங்கேரியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் மத சங்கத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதப்பிரிவாக அறிவித்திருக்கிறது.” வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக செய்தி அறிவிக்கப்பட்டது. கடைசியாக, யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதை ஹங்கேரி மக்கள் அறிந்துகொண்டனர்.
தேசத்தின் முக்கிய பிராந்தியங்களை உள்ளடக்குவதற்கு, “சுத்தமான பாஷை” மாநாடுகள் பெக்ஸ், மிஸ்கால்க், டெப்ரிசன் மற்றும் புடப்பெஸ்ட்-ல் நடத்தப்பட்டன. ஹங்கேரி மொழி பேசிய சுமார் 2,000 பேர் செக்கோஸ்லோவாக்கியா மற்றும் சோவியத் யூனியனிலிருந்து வந்திருந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேசீய ஒற்றுமையை வலியுறுத்திக் காண்பிக்க, 700 பிரதிநிதிகளின் ஒரு குழு பின்லாந்திலிருந்து வந்திருந்தனர். 2,000-க்கும் மேற்பட்ட ருமேனிய பிரதிநிதிகள் உட்பட ஹங்கேரியில் மொத்த ஆஜர் எண்ணிக்கை 21,568 ஆக இருந்தது.
ஜனவரி, 1990 முதற்கொண்டு, ஹங்கேரியிலுள்ள சாட்சிகள், ஒழுங்காக தங்கள் நான்கு–வண்ண பத்திரிகைகளைப் பெற்று வருகின்றனர். இவை மூல ஆங்கில மொழியிலிருந்து ஒரே சமயத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை.
செக்கோஸ்லோவாக்கியாவில் முன்னேற்றம்
கரடுமுரடான மலைகளையும் செழிப்பான சமவெளிகளையும் கொண்ட இந்த அழகான தேசத்தில் யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி அங்கீகாரம் பெற்றில்லாத போது, அறிக்கை ஒன்று இவ்விதமாகச் சொல்கிறது: “வேலை பகிரங்கமாகச் செய்யப்பட்டு வருகிறது, பெரிய கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.” சட்டப்படி அங்கீகாரம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
1989-ன் பிற்பகுதி முதற்கொண்டும், கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குப் பிறகு, செக்கோஸ்லோவாக்கியாவிலுள்ள சாட்சிகள் வெகு விரைவாக செயல்பட்டு ஏப்ரல் முதல் ஜூன் 1990 வரையான மாதங்களின் போது தொடர்ச்சியாக வட்டார அசெம்பிளிகளை ஒழுங்குபடுத்தினார்கள். இதன் விளைவாக முதல் முறையாக, செய்தி அறிக்கைகளில் சாட்சிகளைப் பற்றி உடன்பாடான அறிக்கைகள் வந்தன. தற்போது, செக்கோஸ்லோவாக்கியாவில் 21,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கின்றனர். 1990-ல் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்தத்திற்கு 40,295 பேர் ஆஜராயிருந்தனர். சபைகளில் பாதி ஏற்கெனவே கூட்டங்களை நடத்துவதற்கு இடங்களை வாடகைக்கு எடுத்திருக்கின்றன. 12 சபைகள் தங்கள் சொந்த ராஜ்ய மன்றங்களையும்கூட உடையனவாக இருக்கின்றன.
1990 ஆகஸ்ட் மாதம் ப்ராகில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது, 23,876 பேர் ஆஜராயிருந்தனர். 1,824 பேர் முழுக்காட்டப்பட்டனர். அரங்கத்தை மாநாட்டுக்காக பார்வையாகச் செய்வதற்கு 9,500 மேற்பட்ட சாட்சிகள், சுத்தம் செய்வதிலும் வண்ணம் பூசுவதிலும் 58,000-ற்கு மேற்பட்ட மணிநேரங்களை தாங்களாகவே முன்வந்து செலவழித்தனர். செக்கோஸ்லோவாக்கியா தொலைக்காட்சி நிருபர் குறிப்பிட்டதாவது: “நாங்கள் அநேக சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறோம், ஆனால் இங்கே அரங்கத்தில் உங்கள் அமைப்பை நாங்கள் வியப்புடன் பார்க்கிறோம். இப்பேர்ப்பட்ட ஒரு கூட்டத்தை நீங்கள் முதல் முறையாக ஏற்பாடு செய்வதை நம்புவது கடினமாக உள்ளது.” பார்வையாளர் ஒருவர் சொன்னதாவது: “ஆவிக்குரிய சூழ்நிலையையும் உளங்கனிந்த உறவுகளையும் உங்கள் சகோதரர்கள் மத்தியிலுள்ள அன்பையும் நான் வியந்து பாராட்டுகிறேன். நண்பனாக வந்தேன்; அதைவிட மேம்பட்ட ஒருவனாக நான் புறப்பட்டு போகிறேன்.”
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் செக் மற்றும் ஸ்லாவாக் மொழிகளில் முழு வண்ணத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. இரு மொழிகளிலும் காவற்கோபுரம் ஆங்கில பிரசுரத்தோடு அதே சமயத்தில் வெளியாகின்றன. ஓர் ஆண்டுக்கு முன்பிருந்த ஒடுக்கப்பட்டிருந்த நிலைமையை நாம் நினைவுபடுத்திப் பார்க்கையில், இவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.
எதிர்கால எதிர்பார்ப்புகள்
நாத்தீகத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் புதிய தலைமுறைகள் இருக்கும் தேசங்களில் சாட்சிகளின் எதிர்பார்ப்புகள் என்ன? அறிக்கை ஒன்று சொல்வதாவது: “பைபிளையும் கடவுளையும் பற்றியதில் அங்கு மிகப் பெரிய அளவில் அறியாமை இருந்து வருகிறது. என்றபோதிலும் களையப்பட வேண்டிய பொய்மதப் போதனைகளால் மக்கள் குழப்பமடைந்தவர்களாய் இராதது நம்பிக்கைத் தருவதாக இருக்கிறது. அறுவடை மிகுதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.”
ஆகவே கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு பைபிளிலிருந்து என்ன செய்தியை யெகோவாவின் சாட்சிகள் அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்? பின்வரும் கட்டுரை பதிலளிக்கும். (g91 1/8)
[அடிக்குறிப்புகள்]
a பிரேஸில், பிரிட்டன், கானடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிக்கோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் மற்ற 11 தேசங்களாகும்.
[பக்கம் 8, 9-ன் பெட்டி]
கடைசியாக மத சுயாதீனம்!
பின்வருவது, முன்னாள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து 1990 ஜூலை மாதம் பெர்லினில் நடைபெற்ற “சுத்தமான பாஷை” மாநாட்டுக்கு வருகைத் தந்திருந்த சாட்சிகளின் குறிப்புகள்.
“என்னுடைய பெயர் லிடியா. எனக்கு வயது எட்டு. நான் ஜெர்மன் குடியாட்சி குடியரசிலிருந்து வருகிறேன். இந்த மாவட்ட மாநாட்டில் ஆஜராயிருப்பது குறித்து நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் ஓராண்டுக்கு முன்பாக எல்லை திறந்திருக்கவில்லை. நாங்கள் இரகசியமாக ஞாபகார்த்த தினத்தை ஆசரிக்க வேண்டியிருந்தது. இம்முறை தடை விலக்கப்பட்டு விட்டது! அனைவரும் பாட ஆரம்பிக்கும் போது, கண்ணீர் வருகிறது. நான் அத்தனை கிளர்ச்சியடைந்திருப்பதால், பள்ளியில் இதைக் குறித்து நான் சொல்லியே ஆக வேண்டும்!”
“ஒரு சர்வதேசீய சகோதரத்துவத்தின் மத்தியில் இங்கே பெர்லினில் யெகோவாவின் விருந்தினராக இருப்பதற்காக நாங்கள் நன்றியுணர்வினாலும் போற்றுதலினாலும் நிரம்பியிருக்கிறோம்.”—பெர்ன்ட்.
“ஜெர்மன் குடியாட்சி குடியரசு சகோதரர்களும்கூட நிகழ்ச்சிநிரலில் பங்கேற்றது, விசேஷமான ஓர் அம்சத்தை எடுத்துக் காண்பிக்கிறது: தம்முடைய மக்கள் தடையுத்தரவின் கீழிருக்கையிலும்கூட யெகோவா அவர்களை பயிற்றுவித்து தகுதியுள்ளவர்களாக்குகிறார்.”—காட்ஃபிரீட்.
“கைத்தட்டலும் பாடலும் அனைவரும் மகிழ்ச்சியாயிருந்ததைக் காண்பித்தது. அது உள்ளூர ஒரு நபரை அடித்துக்கொண்டுச் சென்ற ஒரு முழக்கமாக இருந்தது. யெகோவா எப்படி களிகூர்ந்திருக்க வேண்டும்!”—ஈகான்.
“என்னுடைய முழுக்காட்டுதலுக்குப் பிறகு, தண்ணீர் மிகவும் குளிராக இருந்ததா என்பதாக சில சகோதரர்கள் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை என்று மாத்திரமே என்னால் பதிலளிக்க முடிந்தது. யெகோவாவின் ஆசீர்வாதம் அத்தனை அனலாக இருந்ததால், நான் தண்ணீரின் வெப்பநிலையை கவனிக்கவே இல்லை.”—ஹீட்ரன்.
“தங்குவதற்காக இருந்த பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடத்தில், சூழ்நிலைமை விவரித்துக்கூற இயலாததாக இருந்தது! டென்மார்க், மொசாம்பிக், இங்கிலாந்து, கலிஃபோர்னியா, தெற்கு ஜெர்மனி, ஸ்பெய்ன், ஜெர்மன் குடியாட்சி குடியரசிலிருந்து வந்த நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடினோம், அனைவருமே ‘சுத்தமான பாஷை’ பேசிக்கொண்டிருந்தோம்.”—ஜட்டா.
“நாங்கள் கடைசியாக ஆஜரான 1958 மற்றும் 1960 பெர்லின் மாநாடுகளைப் பற்றிய நினைவுகளை எப்பொழுதும் எங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது நாங்கள் அனுபவித்தது, எங்களுடைய எல்லா நினைவுகளையும் எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிட்டது.”—உல்ஃப்காங்.
“எங்களை வெகுவாகக் கவர்ந்தது என்னவென்றால் விசேஷமாக முடிவான பாட்டு மற்றும் ஜெபத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் யெகோவாவை பாடவும் துதிக்கவும் எழுந்து நின்ற அந்தச் சமயமாக இருந்தது. எங்கள் கண்ணீரை இனிமேலும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.”—மோனிக்கா மற்றும் ரேன்ஹார்ட்.
[பக்கம் 13-ன் பெட்டி]
“ஓர் அநீதி திருத்தப்பட்டது”
அந்தத் தலைப்பின் கீழ் 1990 ஆகஸ்ட் 11 ருமேனிய பத்திரிகையான சுதந்திர இளைஞன்-ல் (Tineretul liber) ஒரு செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. அது சொன்னதாவது: “ஆம், ஓர் அநீதி திருத்தப்பட்டது. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக 40-க்கும் மேலான ஆண்டுகள் தங்கள் உத்தமத்தைக் காத்து கொண்டுவந்த வெகுவாக நிந்திக்கப்பட்ட ‘யெகோவாவின் சாட்சிகளின்’ அமைப்பு சட்டப்படி அங்கீகாரம் பெற்று சட்டப்பூர்வ சலுகையைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு, உலகளாவிய ஓர் அமைப்பாக ஆளும் குழுவின் கண்காணிப்பு மற்றும் அதிகாரத்தின் கீழ் அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இது 210 தேசங்களிலும் தீவுகளிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது.” செய்தி ப்ராசாவ் மற்றும் க்ளஜ்–நப்போக்கா-வில் நடைபெறவிருந்த மாநாடுகளின் அறிவிப்போடு முடிந்தது.
[பக்கம் 9-ன் படங்கள்]
மாநாடு நடவடிக்கைகள்: (கீழே இடது பக்கத்திலிருந்து, இடமிருந்து வலது பக்கமாக) வார்சாவில் புதிய புரோஷுரை அளித்தல்; புடபெஸ்ட், ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் மேடைகள்; பெர்லினில் குறிப்பெடுத்தல்; ப்ராகில் மாநாட்டுக்கு முன்பு அரங்கம் புதுப் பொலிவு பெறுகிறது
[பக்கம் 10-ன் படங்கள்]
மாநாடு நடவடிக்கைகள்: (இடது பக்கத்திலிருந்து, இடமிருந்து வலது பக்கமாக) ருமேனியாவில் முழுக்காட்டுதல்; ப்ராகில் அரங்கம்; பெர்லினில் “மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல்” புத்தகத்தோடு குடும்பம்; புடபெஸ்டில் பேச்சாளர்; போலந்தில் பைபிளை ஆராய்தல்