நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
நவம்பர் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5 (104)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். பிரஸ்தாபிகள் ராஜ்ய பிரசங்க வேலையில் வகிக்கும் பாகத்திற்காக அவர்களுக்குப் போற்றுதல் தெரிவியுங்கள்.
10 நிமி:“கனவுகள்,” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 104-6. பைபிள் மாணாக்கரோடு கலந்துரையாடுவதுபோல் கையாளப்படவேண்டும். நம்முடைய கனவுகளால் வழிநடத்தப்படுவதன் ஞானத்தைக்குறித்து மாணாக்கர் கேட்கிறார். இதன் ஆபத்தையும் இது எவ்வாறு உலகப்பிரகாரமான நியாயங்களுக்கும் பேய்களுக்கும் இரையாக வீழ்ந்துவிடச் செய்யும் என்பதையும் கலந்துரையாடுங்கள். கடவுளுடைய வார்த்தையின் நியமங்களினால் வழிநடத்தப்படுவதன் முக்கியத்துவத்தைக் காண்பியுங்கள்.
10 நிமி:சபை தேவைகள் அல்லது “பேச்சுத்தொடர்பு—வெறும் பேச்சைவிட அதிகத்தை உட்படுத்துகிறது.” ஆகஸ்ட் 1, 1993 காவற்கோபுரம், பக்கங்கள் 3-8-லுள்ள கட்டுரைகளின் அடிப்படையிலான பேச்சு.
15 நிமி:“இன்றைய உலகில் பைபிளின் மதிப்பு.” வீட்டுக்கு வீடு வேலையில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புகிற பிரஸ்தாபிக்கும் ஊழியக் கண்காணிக்குமிடையே கலந்துரையாடல். பாரா 3-ஐ கலந்தாலோசித்தப் பிறகு, வீட்டுக்காரராக இருக்கிற ஊழியக் கண்காணியோடு கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கத்தை சொல்லிபார்க்க முயற்சிசெய்யும்படி பிரஸ்தாபியை ஊழியக் கண்காணி கேட்கிறார். பாரா 4-ஐ சிந்தித்தப் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கத்தை ஊழியக் கண்காணி பிரஸ்தாபிக்குக் கொடுக்கிறார். புதிய உலக மொழிபெயர்ப்பின் மதிப்பை மதித்துணர அக்கறையுள்ளவர்களுக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கும் உதவிசெய்யும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 52 (59), முடிவு ஜெபம்.
நவம்பர் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 7 (93)
10 நிமி:சபை அறிவிப்புகள். இந்த வார இறுதியில் வெளி ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய கட்டுரையைச் சிறப்பித்துக் காண்பித்து, தற்போதைய பத்திரிகைகளின் அளிப்பை நடித்துக்காட்டுங்கள். “வெளி ஊழியத்திற்கான ஒரு விசேஷித்த மாதம்” என்பதற்கு கவனத்தைத் திருப்பி, துணைப் பயனியர்களாக அல்லது பயனியர்களோடு வேலைசெய்வதன் மூலம் டிசம்பரில் தங்களுடைய வெளி ஊழியத்தை அதிகரிப்பதன் சாத்தியத்தை பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பார்க்கும்படி அனைவருக்கும் அழைப்புக்கொடுங்கள்.
15 நிமி:“உண்மையான வழிநடத்துதலை அளிக்கும் புத்தகம்.” கட்டுரையைக் கேள்வி பதில் முறையில் கலந்தாலோசித்தல். பாரா 3-ல் கொடுக்கப்பட்டுள்ள மறு சந்திப்பை நடித்துக்காட்டுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மக்களோடு பேசும்போதும் மறு சந்திப்புகள் செய்யும்போதும், பைபிளின் நடைமுறையான மதிப்பைக் குறித்ததில் ஆர்வத்தோடு இருக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“இளைஞரே—யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்.” 1-18 வரையான பாராக்களை முழுக்காட்டப்பட்ட ஒன்றிரண்டு இளம் பிரஸ்தாபிகளுடன் மூப்பர்கள் கலந்துரையாடுகிறார்கள். இளைஞர் தங்களுடைய நல்ல முன்மாதிரியினால் அறுவடைசெய்கிற நன்மைகளையும் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளின் மதிப்பையும் வலியுறுத்திக் காட்டுங்கள். நேரம் அனுமதிக்கிறபடி வேதவசனங்களைச் சிந்தியுங்கள்.
பாட்டு 80 (71), முடிவு ஜெபம்.
நவம்பர் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 73 (18)
5 நிமி:சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை மற்றும் நன்கொடை ஒப்புகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உள்ளூர் சபைக்கும் சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதிக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் அளித்த சபையின் பொருளாதார ஆதரவுக்காகச் சபையைப் பாராட்டுங்கள். வரக்கூடிய உலகப்பிரகார விடுமுறை காலத்திற்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் சொல்லுங்கள்.
20 நிமி:“பைபிள் மாணாக்கர் கடவுளுடைய அமைப்போடு தொடர்புகொள்ள உதவுதல்.” கேள்வி பதில்கள். பாரா 8-ஐ நடித்துக்காட்டி, பாரா 9-ல் காட்டப்பட்டிருக்கிறபடி, ராஜ்ய மன்றத்திற்கு வரும்படியான அழைப்போடு முடியுங்கள்.
20 நிமி:“இளைஞரே—யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்.” உட்சேர்க்கையிலுள்ள பாராக்கள் 19-33-ஐ கேள்வி பதில்மூலம் கலந்தாலோசித்தல். ஒன்றிரண்டு இளம் பிரஸ்தாபிகளைப் பேட்டிகாணுங்கள். அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் சபையானது எவ்வாறு உதவியாய் இருந்திருக்கிறது என்பதன்பேரில் குறிப்புகளை வரவழையுங்கள்.
பாட்டு 90 (102), முடிவு ஜெபம்.
நவம்பர் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 74 (44)
10 நிமி:சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். இந்த வார இறுதியில் சாட்சிகொடுக்கையில் தற்போதைய பத்திரிகைகளைப் பயன்படுத்துவதைக் குறித்து உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“பைபிள் மாணாக்கர் தங்கள் படிப்புக்குத் தயார்செய்ய உதவுங்கள்.” கேள்வி பதில்கள். நேரம் அனுமதிக்கிறபடி பாராக்களை வாசியுங்கள்.
20 நிமி:“நீங்கள் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுகிறீர்களா?” வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மறு சந்திப்பு வேலையிலும் பலன்தரத்தக்கவராய் இருக்கிற சகோதரரால் கையாளப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்தித்த பிறகு, வீட்டுக்காரர் அதிக வேலையாக இருக்கையில் எவ்வாறு ஒரு பிரஸ்தாபி ஞாபகத்திலிருந்து வசனத்தைச் சுருக்கியோ மேற்கோள் காண்பித்தோ பேசலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள். நடிப்புக்குப் பின்பு, அநேக மக்கள் எப்பொழுதும் அதிக வேலையாகவோ அனுதின வேலைகளில் ஆழ்ந்திருக்கிறவர்களாகவோ உள்ள பிராந்தியங்களில் “திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு”வதற்கு நாம் முயற்சிசெய்கையில் இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதன் மதிப்பை வலியுறுத்துங்கள். (2 தீ. 4:2) பாரா 6-ஐ சிந்தித்தப் பிறகு, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்துவதில் திறம்பட்டவராக இருக்கிற ஒரு பிரஸ்தாபி சாட்சிகொடுப்பதில் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை விவரிக்க அவரை அழையுங்கள்.
பாட்டு 108 (69), முடிவு ஜெபம்.
நவம்பர் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 83 (2)
10 நிமி:சபை அறிவிப்புகள். டிசம்பரில் துணைப் பயனியர் ஊழியம் செய்யக்கூடியவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“பைபிள்—நவீன மனிதனுக்கான நடைமுறையான ஒரு வழிகாட்டி.” ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1993 கட்டுரையின் அடிப்படையில் குடும்பத் தலைவரால் கொடுக்கப்படும் பேச்சு. பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது சமாதானமான, அன்பான குடும்ப சூழ்நிலையை முன்னேற்றுவிக்கும் என்பதை சிறப்பித்துக்காட்டுங்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆலோசனை கொடுப்பது ஒரு குடும்பத்துக்கு அல்லது தனிப்பட்ட நபருக்கு எவ்வாறு உதவியிருக்கிறது என்பதைக் காட்டுகிற நன்கு தயார்செய்யப்பட்ட ஒன்றிரண்டு குறிப்புகளை சபையாரிடமிருந்து வரவழையுங்கள்.
20 நிமி:செம்மறியாடுகள் போன்றவர்களுக்கு உதவிசெய்ய டிசம்பரில் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைப் பயன்படுத்துதல். சபையாரோடு கலந்தாலோசித்தல். இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள்: இயேசுவின் ஊழியம் அல்லது மற்றவர்களோடு அவருடைய செயல்தொடர்புகள் பற்றிய எந்த ஒரு விவரப்பதிவு அதிகமாக உங்களுடைய மனதைக் கவர்ந்தது? இந்த விவரப்பதிவு ஏன் உங்களைக் கவர்ந்தது? இந்தப் பிரசுரம் உங்களுக்கு என்ன மதிப்புடையதாய் இருந்திருக்கிறது? இதைப் படிப்பதன்மூலம் யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? இதை அளிக்கும்போது எந்தக் குறிப்புகளை நீங்கள் முக்கியப்படுத்திக் காட்டினீர்கள்? அனுபவமுள்ள பிரஸ்தாபி புத்தகத்தை அளிப்பதை நடித்துக்காட்டும்படிச் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 94 (22), முடிவு ஜெபம்.