கிறிஸ்தவ ஊழியம்—நமது முக்கிய வேலை
1 செய்வதற்கு பல்வேறு வேலைகள் நம் அனைவருக்குமே இருக்கின்றன. ஒரு நபர் தன் வீட்டாருக்குத் தேவையானவற்றை அளிக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார். (1 தீ. 5:8) என்றாலும் அவ்வேலைகள், ராஜ்ய பிரசங்கிப்பையும் சீஷராக்குவதையும்விட முக்கியமானதாகி விடக்கூடாது.—மத். 24:14; 28:19, 20.
2 ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுவது’ சம்பந்தமாக இயேசு நமக்கு முன்மாதிரி வைத்தார். (மத். 6:33; 1 பே. 2:21) அவர் பொருளாதார ரீதியில் அதிக வசதியுள்ளவராக இருக்கவில்லை, ஆனாலும் முழுக்க முழுக்க தம் பிதாவின் சித்தத்தை செய்வதிலேயே மூழ்கியிருந்தார். (லூக். 4:43; 9:58; யோவா. 4:34) தமக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மும்முரமாக சாட்சி கொடுத்தார். (லூக். 23:43; 1 தீ. 6:14) அவ்வாறே தம் சீஷர்களும் அறுவடை வேலையில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்று ஊக்கமளித்தார்.—மத். 9:37, 38.
3 இன்று இயேசுவை பின்பற்றுதல்: நாமும் கிறிஸ்தவ ஊழியத்தை மையமாக வைத்து எளிய வாழ்க்கை வாழ பாடுபடுவதன் மூலம் இயேசுவின் மாதிரியை பின்பற்றலாம். வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நமக்கு இருக்கிறதெனில், இந்த உலகத்துப் பொருட்களை மேலும் மேலும் வாங்கிக் குவிக்காதிருக்கும்படியான பைபிள் புத்திமதிக்கு நாம் கீழ்ப்படிவோமாக. (மத். 6:19, 20; 1 தீ. 6:8) பிரசங்க வேலையில் நம் பங்கை விஸ்தரிக்க வழிதேடுவது எவ்வளவு சிறந்தது! கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்ப்பட்டால், இயேசு செய்ததைப் போலவே நாமும் செய்வோமாக; அதாவது வாழ்க்கைக் கவலைகள் ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கும் மிக முக்கிய வேலையை மழுங்கடித்து விடாதபடி அதில் மும்முரமாக ஈடுபடுவோமாக.—லூக். 8:14; 9:59-62.
4 அநேக பொறுப்புகளை உடையவர்களும்கூட பிரசங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரிய குடும்பஸ்தரான ஒரு சகோதரர் அதிக பொறுப்புள்ள ஒரு வேலையும் செய்கிறார், கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகவும் சேவை செய்கிறார்; அவர் சொல்கிறார்: “நான் ஊழியத்தையே என்னுடைய முக்கிய வேலையாக கருதுகிறேன்.” பயனியர் சகோதரி ஒருவர் சொல்வதாவது: “பயனியர் சேவை, ஒரு வெற்றிகரமான உலகப்பிரகார வேலையைவிட பெருமதிப்புடையது.”
5 நம் சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் சரி, இயேசுவின் மாதிரியை நாம் பின்பற்றுவோமாக. எப்படி? கிறிஸ்தவ ஊழியத்தை நமது முக்கிய வேலையாக்குவதன் மூலம்.