உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உன்னதப்பாட்டு 4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

உன்னதப்பாட்டு முக்கியக் குறிப்புகள்

    • எருசலேமில் சூலேமியப் பெண் (3:6–8:4)

உன்னதப்பாட்டு 4:1

இணைவசனங்கள்

  • +எண் 32:1; உபா 3:12; உன் 6:5-7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2006, பக். 19

உன்னதப்பாட்டு 4:4

இணைவசனங்கள்

  • +உன் 1:10
  • +2சா 8:7; 2ரா 11:10
  • +நெ 3:25; உன் 7:4

உன்னதப்பாட்டு 4:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நவ்வி மானின்.”

இணைவசனங்கள்

  • +உன் 7:3

உன்னதப்பாட்டு 4:6

இணைவசனங்கள்

  • +பிர 2:5

உன்னதப்பாட்டு 4:7

இணைவசனங்கள்

  • +உன் 4:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2015, பக். 30

    11/15/2006, பக். 20

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 259-260

உன்னதப்பாட்டு 4:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கிழக்கு லீபனோன் மலைத்தொடர்.”

இணைவசனங்கள்

  • +உபா 3:25
  • +உபா 3:8, 9; சங் 133:3

உன்னதப்பாட்டு 4:9

இணைவசனங்கள்

  • +நீதி 5:18, 19

உன்னதப்பாட்டு 4:10

இணைவசனங்கள்

  • +உன் 7:12
  • +உன் 1:2, 4
  • +எஸ்தர் 2:12; உன் 1:12

உன்னதப்பாட்டு 4:11

இணைவசனங்கள்

  • +நீதி 16:24
  • +உன் 5:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2015, பக். 30

    11/15/2006, பக். 19

உன்னதப்பாட்டு 4:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2015, பக். 32

    11/15/2006, பக். 20

    11/1/2000, பக். 11-12

    1/1/1988, பக். 8-9

உன்னதப்பாட்டு 4:13

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “சருமம்.”

உன்னதப்பாட்டு 4:14

இணைவசனங்கள்

  • +யோவா 12:3
  • +ஏசா 43:24
  • +நீதி 7:17
  • +சங் 45:8
  • +யாத் 30:23, 24, 34; எசே 27:2, 22

உன்னதப்பாட்டு 4:15

இணைவசனங்கள்

  • +எரே 18:14

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

உன். 4:1எண் 32:1; உபா 3:12; உன் 6:5-7
உன். 4:4உன் 1:10
உன். 4:42சா 8:7; 2ரா 11:10
உன். 4:4நெ 3:25; உன் 7:4
உன். 4:5உன் 7:3
உன். 4:6பிர 2:5
உன். 4:7உன் 4:1
உன். 4:8உபா 3:25
உன். 4:8உபா 3:8, 9; சங் 133:3
உன். 4:9நீதி 5:18, 19
உன். 4:10உன் 7:12
உன். 4:10உன் 1:2, 4
உன். 4:10எஸ்தர் 2:12; உன் 1:12
உன். 4:11நீதி 16:24
உன். 4:11உன் 5:1
உன். 4:14யோவா 12:3
உன். 4:14ஏசா 43:24
உன். 4:14நீதி 7:17
உன். 4:14சங் 45:8
உன். 4:14யாத் 30:23, 24, 34; எசே 27:2, 22
உன். 4:15எரே 18:14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
உன்னதப்பாட்டு 4:1-16

உன்னதப்பாட்டு

4 “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்! நீ எத்தனை அழகானவள்!

முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் உன் கண்கள் புறாக் கண்கள்.

கீலேயாத் மலைகளில்+ இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை உன் கூந்தல்.

 2 மயிர் கத்தரித்தபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறிக் கூட்டம் உன் பற்கள்.

அவை எல்லாவற்றுக்குமே இரட்டைக் குட்டிகள் இருக்கின்றன.

ஒன்றுகூட குறையாமல் இருக்கின்றன.

 3 சிவப்பு நூல் போன்றவை உன் உதடுகள்.

கேட்கக் கேட்கத் திகட்டாதவை உன் வார்த்தைகள்.

முகத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உன் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழங்கள்.

 4 உன் கழுத்து,+ அடுக்கடுக்காகக் கற்கள் வைக்கப்பட்டு,

ஆயிரம் மாவீரர்களின் வட்டமான கேடயங்களால்+ அலங்கரிக்கப்பட்டு,

கம்பீரமாக நிற்கும் தாவீதின் கோபுரத்தைப்+ போன்றது.

 5 உன் இரண்டு மார்புகளும் இரண்டு மான்குட்டிகள்,

லில்லிப் பூக்கள் மத்தியில் மேய்கிற கலைமானின்* இரட்டைக் குட்டிகள்.”+

 6 “தென்றல் வீசும் முன்பே, நிழல்கள் மறையும் முன்பே,

வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி குன்றுக்கும் போவேன்.”+

 7 “என் அன்பே, நீ அழகின் மறு உருவம்.+

உன்னிடம் குறையே இல்லை.

 8 என் மணப்பெண்ணே, லீபனோனைவிட்டுப் போவோம், வா.

நாம் லீபனோனைவிட்டுப் போவோம், வா.+

அமனா,* செனீர், எர்மோன் மலை+ உச்சிகளிலிருந்து இறங்கிப் போவோம், வா.

சிங்கங்கள் தங்குகிற இடங்களைவிட்டும்,

சிறுத்தைகள் நடமாடுகிற மலைகளைவிட்டும் புறப்படுவோம், வா.

 9 என் சகோதரியே, என் மணப்பெண்ணே, நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்.+

ஒரே பார்வையில் என் உள்ளத்தைக் கொள்ளையடித்துவிட்டாய்.

உன் அட்டிகைப் பதக்கம் ஒன்றாலேயே என்னைக் கவர்ந்துவிட்டாய்.

10 என் சகோதரியே, என் மணப்பெண்ணே,

நீ பாசத்தைக் காட்டும் அழகே அழகு!+

நீ காட்டும் நேசம் திராட்சமதுவைவிட இனிமையானது!+

நீ பூசும் எண்ணெய் நறுமணப் பொருள்களைவிட மணமானது!+

11 என் மணப்பெண்ணே, உன் இதழ்களில் சுத்தமான தேன் சொட்டுகிறது.+

உன் நாவிலிருந்து பாலும் தேனும் சிந்துகிறது.+

உன் உடைகளில் லீபனோனின் மணம் வீசுகிறது.

12 என் சகோதரியே, என் மணப்பெண்ணே, வேலியடைக்கப்பட்ட தோட்டம் நீ.

பூட்டி வைக்கப்பட்ட தோட்டம் நீ, மூடி வைக்கப்பட்ட கிணறு நீ.

13 உன் சோலை* மாதுளம்பழங்கள் காய்த்துக் குலுங்குகிற பூஞ்சோலை.

அதுமட்டுமா, ருசியான பழங்கள் என்ன! மருதாணிச் செடிகள் என்ன! சடாமாஞ்சிச் செடிகள் என்ன!

14 சடாமாஞ்சி,+ குங்குமப்பூ, வசம்பு,+ லவங்கம்,+

சாம்பிராணி மரங்கள், வெள்ளைப்போள மரங்கள், அகில் மரங்கள்+ என எத்தனை, எத்தனை!

அவற்றின் வாசனை+ ஆளைத் தூக்குகிறது.

15 தோட்டத்தில் ஊற்றெடுக்கும் நீரூற்று நீ; சுத்தமான தண்ணீர் சுரக்கும் கிணறு நீ.

லீபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை+ நீ.

16 வடதிசைக் காற்றே, விழித்திடு.

தென்திசைக் காற்றே, வந்திடு.

என் தோட்டத்தில் தென்றலாய் வீசிடு.

அதன் வாசனையைப் பரப்பிடு.”

“என் காதலன் அவருடைய தோட்டத்துக்கு வந்து,

அதன் ருசியான பழங்களைச் சுவைத்து மகிழட்டும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்