மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 1 அரசாங்கத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துதல்
ஐரோப்பாவில் 1989-ன்போது ஏற்பட்ட விரைவான அரசியல் மாற்றங்கள், அரசாங்கம் என்ற பொருளின் மீது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஒரு செய்திப் பத்திரிகை, “1989-ம் ஆண்டு, கிழக்கு ஐரோப்பா மாற்றமடைந்த ஆண்டாக நினைவுகூரப்படாமல் நான்கு பத்தாண்டுகளாக நாம் அறிந்த வண்ணம் கிழக்கு ஐரோப்பா முடிவடைந்த ஆண்டு,” என்று குறிப்பிட்டது.
இன்னும் சற்று மேலுமாக, அ.ஐ. மாநில இலாக்காவின் கொள்கை-திட்டங்களை வகுக்கும் அதிகாரியான ஃபிரான்ஸிஸ் ஃபூக்குயாமா என்பவர் சமீப காலத்தில் எழுதினார், “நாம் பார்த்துக் கொண்டிருப்பது சூழ்ச்சிப் போரின் முடிவை மட்டுமே அல்ல, அல்லது யுத்தத்திற்கு பின்னான சரித்திரத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி கடந்துசெல்வதாக அல்ல, சரித்திரத்தின் முடிவுக்கு தாமே, அதாவது மனிதகுலத்தினுடைய குறிக்கோள்களின் பரிணாமத்தின் கடைசி எல்லை.”
இந்த எண்ணமானது, வெகுவாக விவாதிக்கப்படும்படியான ஒன்றாக இருந்தபோதிலும், நம் கவனத்தை அதிக முக்கியமான கேள்விகளின் மீது ஊன்றவைக்கிறது. உதாரணமாக, கடந்துவிட்டுள்ள மனித அரசாட்சியின் பல நூற்றாண்டுகளைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘சரித்திரத்தின் முடிவை’ அப்படியாக அவர் பேசும்படியாக மனிதகுலம் அக்கட்டத்தை அடைந்து இருக்கிறதா? அரசாங்கங்களுக்கு எதிர்காலம் எதைத்தான் கொண்டுள்ளது? இந்த எதிர்கால சம்பவங்கள் தனிப்பட்டவர்களாக நம்மீது என்ன விளைவை கொண்டுவரும்?
அரசாங்கத்தைப் பற்றி மக்கள் எப்படி உணருகின்றனர்
தெளிவாகவே கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் மீது நம்பிக்கையிழந்திருக்கின்றனர். இது ஐரோப்பாவில் வசிப்பவர்கள் விஷயத்தில் மட்டும் உண்மையாக இல்லை, ஆனால் வித்தியாசமான அளவிலே எவ்விடத்திலும் உள்ள குடிமக்கள் விஷயத்திலும் அப்படியாக இருக்கிறது. உதாரணமாக, லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளைப் பற்றி கவனிப்போம்.
ஒரு பிரபலமான ஜெர்மன் வியாபாரப் பத்திரிகை 1988-ன் முடிவிலே அங்குள்ள அரசியல் நிலையைப் பற்றி, “பாழடைந்து கிடக்கும், குவியல்களைப் பார்க்கிலும் சற்று அதிகம்” என்று விவரித்தது. குறிப்பாக சொல்வோமானால், அது, “அர்ஜென்டீனாவின் . . . பொருளாதாரம் தைக்கப்பட்டதானது பிரிந்துகொண்டே வருவதற்கு ஒப்பாக உள்ளது. ஆட்சிசெய்ய முடியாத நிலைமையைக் கொண்டு பிரேஸில் பயமுறுத்திக்கொண்டு வருகிறது. பெரூ அதனுடைய கடைசி விளிம்பிலே இருக்கிறது. உருகுவே சேற்றுக்குள்ளே அமிழ்ந்து போய்க் கொண்டுள்ளது. ஈக்வடார், சந்தேகமில்லாமல் ஒரு பதட்ட நிலைமையை சமாளித்துக் கொண்டு உள்ளது. கொலம்பியாவும், வெனிசுவெலாவும் . . . நொறுங்கிப் போகக்கூடிய ஜனநாயக பாரம்பரியத்தை காத்துக்கொண்டு வருகிறது. மெக்சிக்கோவில், 50 ஆண்டுகளாக எதிர்க்கப்படாமல் ஆண்டுவந்த அரசாங்கக் கட்சியின் நிரந்தரத் தன்மை . . . எல்லாரும் பார்க்கக்கூடிய விதமாக பகுதிகளாக பிரிந்து வருகிறது. 1980-ல் ஆரம்பித்த ஆண்டுகள் ‘இழக்கப்பட்ட பத்தாண்டுகள்’ என்று சொல்லப்பட்டதாய் ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.”
சில இடங்களில், அரசியல்வாதிகளின் செல்வாக்கு என்றுமில்லாதபடி மிகவும் குறைந்துவிட்டிருக்கிறது. அந்தஸ்தின் வரிசைப்படி 21 வேலைகளை வரிசைப்படுத்த ஆஸ்திரிய மக்கள் கேட்கப்பட்டபொழுது அரசியல்வாதிகளை 19-வது இடத்துக்கு அவர்கள் வரிசைப்படுத்தினர். ஜெர்மானிய கூட்டுக் குடியரசில் மக்களுடைய எண்ணங்களைக் குறித்து தேர்வு நடத்தினது, குடிமக்களில் 62 சதவீதத்தினர் அரசியல்வாதிகள் மீது ஒரு சிறிதளவே நம்பிக்கை வைத்துள்ளதாக ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பான் சர்வகலாசாலையில் மனோதத்துவத்துக்கான நிறுவனத்தின் இயக்குநர், ரின்ஹோல்டு பெர்கிலர், “இளைஞர்கள் தேசத்துக்கும் அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவளிக்கிறதில்லை,” என்று எச்சரிக்கையிட்டார். இவ்விளைஞரில் 46 சதவீதத்தினர் அரசியல்வாதிகளை “வாய் திறந்து கத்துகிறவர்கள்” என்றும் அவர்களில் 44 சதவீதத்தினர் ஊழல் நிறைந்துள்ளவர்களாகவும் கருதுகின்றனர் என்று சொல்லுகிறார்.
ஓட்டுகள் எடுக்கும் ஓர் அமெரிக்கர் 1970-களின்போது எழுதுகையில் குறிப்பிட்டார்: “(அரசியல்) ஒழுங்குமுறை பிரதிபலிக்காததாயும் நேர்மையற்றதாயும் இருப்பதனால், தங்களுடைய நோக்கங்களுக்காக ஓட்டுப் போடுபவர்கள் அரசியலை உபயோகப்படுத்த முடியாது என்ற ஓர் எண்ணம் இருக்கிறது.” இவ்விதமாக ஐக்கிய மாகாணங்களில், அரசியல்வாதிகள் “உங்களுக்கு நேரிடுவதைப் பற்றி உண்மையாகவே கவலைகொள்வதில்லை” என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை 1966-ல் 29 சதவீதத்திலிருந்து 1980-களிலே 58 சதவீதத்துக்கு சீராக உயர்ந்திருக்கிறது. இவ்விதமாக கணக்கிட்டதை ஜெர்மன் செய்தித்தாளான ஸ்டட்கார்ட்டக் நாச்ரிச்டன் சரியென எடுத்துக்காட்டுவதாய் சொல்லுகிறது: “பெரும்பாலும் அநேக அரசியல்வாதிகள் தங்களுடைய சொந்த அக்கறைகளையே மனதில் முதலில் கொண்டிருக்கின்றனர், பின்னர் ஒருவேளை கூடுமானால் தங்களுடைய ஓட்டர்களின் அக்கறைகளையுடையவர்களாயிருக்கின்றனர்.”
அரசியலில் நிர்விசாரம் வளர்ந்துகொண்டே செல்வது புரிந்துகொள்ளத்தக்கதே. 1980-ல் ஐக்கிய மாகாணங்களில் ஓட்டுப் போட தகுதிவாய்ந்த குடிமக்களில் 53 சதவீதத்தினர் மட்டுமே ஓட்டு போட்டனர். ஓட்டு போடுவதில் உள்ள சரிவின் தொடர்ச்சியில் இது தொடர்ந்து ஐந்தாவதாக அறிக்கையிடப்படுகிறது. 1988-க்குள்ளாக ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை வெறும் 50 சதவீதமாகவே இருந்தது.
அரசியல்வாதிகள் பிரச்னையைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். பிரபலமான ஓர் உலகத்தலைவர் வெளிப்படையாக சொன்னார்: “அரசியல் வாழ்க்கையிலே . . . மாய்மாலம் பெருகியிருக்கிறது.” அதற்கான காரணத்தை விளக்கினார்: “பதவிபெறுவதற்கும் அந்தப் பதவியை காத்துக்கொள்வதற்கும் அது தேவை.” அவ்வாறு சொன்னது யார்? முந்தைய ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியான ரிச்சர்டு நிக்ஸன் என்பவர் ஆவார். ஜனாதிபதியாக இருக்க முடியாமல் அவர் மீது கடத்தப்பட்ட நிந்தனை செயல்களின் காரணமாக அவர் தெரிந்ததையே பேசுகிறார் என்பது அநேகமாக எல்லாருக்கும் தெரியும்.
யோக்கியதையற்ற அரசியலின் காரணமாக நேர்மையுள்ள மக்கள் ஒரு நல்ல அரசாங்கம் கூடுமானதா என்று யோசிக்கின்றனர். ஓர் அரசாங்கமும் இல்லாவிட்டாலே நமக்கு நன்றாக இருக்குமல்லவா? ஒருவேளை ‘அரசாங்கமே வேண்டாம்’ என்பது பதிலாக இருக்கக்கூடுமா?
[பக்கம் 14-ன் பெட்டி]
“ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்.” —நீதிமொழிகள் 11:14