இன்டெக்ஸ்-லிருந்து வரும் உதவியுடன் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்
1 ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக நாம் நம் ஊழியத்தை நிறைவேற்ற மனமார பெருமுயற்சி செய்கிறோம். இதை செய்வதற்கு நமக்கு உதவி செய்ய யெகோவா அபரிமிதமான வழிநடத்துதலையும், உற்சாகத்தையும் மதிப்பு வாய்ந்த பிரசுரங்கள் அடங்கிய விரிவான நூலகத்தின் மூலம் அளித்திருக்கிறார். அவைகளை மேலும் சிறந்த முறையில் நாம் உபயோகிக்கலாமா? அவ்வாறு செய்வதற்கான முக்கியமான உதவி, 1961 முதற்கொண்டு பல மொழிகளில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டு வரும் காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ்.
2 உங்கள் ஊழியத்தை நிறைவேற்ற இன்டெக்ஸ் எவ்வாறு உங்களுக்கு உதவக்கூடும்? ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த புத்திமதிக்கும், விளக்கங்களுக்கும் வழியை குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம் அது அவ்வாறு செய்கிறது. உலகளாவிய சகோதரத்துவத்தை மனதில் கொண்டு இன்டெக்ஸ் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிறு பிள்ளைகளிலிருந்து பாட்டன் அல்லது பாட்டி வரை, புதிய பைபிள் மாணாக்கர்களிலிருந்து மூப்பர்கள் வரை எல்லாரும் எந்த நன்மையான நோக்கத்திற்கும் குறிப்பீடுகளைக் காணலாம்.
உங்களுக்கு தேவையானதை எவ்வாறு கண்டுபிடிப்பது
3 ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது வரிசையான வசனங்களுக்கு அர்த்தத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், பின்னாலிருக்கும் வசன இன்டெக்ஸுக்கு முதலில் திருப்பிப் பார்ப்பதை சிறந்ததாகக் காண்பீர்கள். திரித்துவக் கோட்பாட்டை நிரூபிக்க முயலுவதற்கு யாராவது ஒருவர் யோவன் 10:30-ஐ மேற்கோள் காட்டினார்களா? இயேசு ஏன் அந்த வார்த்தைகளை குறிப்பிட்டார் என்பதை தெளிவாக்கும் விஷயத்திற்கு வசன இன்டெக்ஸ் உங்களுக்கு வழிகாட்டும். புதிராக அல்லது தெளிவற்றதாக தோன்றும் வசனங்களுக்கு விளக்கத்தை நாம் நாடுகையில், வசன இன்டெக்ஸ் நம் தனிப்பட்ட பைபிள் வாசிப்பின் மதிப்பை உயர்த்தும்.
4 அதே பயனுள்ள தகவலுக்கு பொருள் இன்டெக்ஸ் வித்தியாசமான பாதைகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, விசுவாசத்தில் இல்லாத துணை உங்கள் பிள்ளைகளை கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல தடை சொன்னால், என்ன செய்யவேண்டும் என்பதன் பேரில் தகவல் உங்களுக்கு ஒருவேளை தேவையாயிருக்கும். பதிலை கண்டுபிடிப்பதற்கு, “கணவன்மார்,” “மனைவிகள்,” “பிள்ளைகள்,” “எதிர்ப்பு” அல்லது “கூட்டங்கள்” போன்ற தலைப்புகளுக்கு நீங்கள் திருப்பலாம். எந்தப் பொருளைப் பற்றியிருந்தாலும், நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அது நீங்கள் திருப்பும் முதல் தலைப்பின் கீழ் காணப்படவில்லையென்றால் மற்றொன்றை முயற்சி செய்யுங்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யார் இதில் உட்பட்டிருப்பது? ஒரு திட்டவட்டமான இடம் முக்கியமா? ஒரு குறிப்பிட்ட குணம் அல்லது திறன்? ஒரு மேலோங்கிய உணர்ச்சி? ஓர் இலக்கு?’ சரியானதாகக் காணப்படும் ஒரு முக்கியமான தலைப்பை நீங்கள் கண்டுபிடித்தால் அதன் கீழிருக்கும் உபகுறிப்புகளை முதலில் வாசித்துப் பாருங்கள். குறிப்புக்கு அதிகமாக இசைவாய் இருக்கும் மற்றொரு தலைப்பை அடையாளம் கண்டு கொள்ள உதவுவதன் மூலம் இவைகள் அடிக்கடி நேரத்தை சேமிக்கிறது.
5 இன்டெக்ஸை உபயோகிப்பதில் திறமை நம் பரிசுத்த உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் வெற்றிக்கு அதிகம் உதவும். இந்தக் கருவியை உபயோகிப்பதில் நாம் அதிக திறம்பட்டவர்களாக ஆகையில் நம் குடும்பங்கள், நம் பைபிள் மாணாக்கர்கள், நம் சபைகள் நன்மையடையும். காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுவதில் ஒரு விலைமதிக்க முடியாத உதவியாக இருக்கக்கூடிய திட்டவட்டமான அம்சங்களை நம் ராஜ்ய ஊழியத்தின் வரப்போகும் இதழ்கள் ஆய்வு செய்யும்.