உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

அப்போஸ்தலர் முக்கியக் குறிப்புகள்

      • பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்படுகிறது (1-13)

      • பேதுருவின் பேச்சு (14-36)

      • பேதுருவின் பேச்சைக் கேட்டு கூட்டத்தார் செயல்படுகிறார்கள் (37-41)

        • 3,000 பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (41)

      • சீஷர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள் (42-47)

அப்போஸ்தலர் 2:1

இணைவசனங்கள்

  • +லேவி 23:16; உபா 16:9-11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 22

அப்போஸ்தலர் 2:2

இணைவசனங்கள்

  • +அப் 4:31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 21

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-14

    12/1/1990, பக். 25-26

அப்போஸ்தலர் 2:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 21

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-14

அப்போஸ்தலர் 2:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அன்னிய பாஷைகளில்.”

இணைவசனங்கள்

  • +மாற் 1:8; யோவா 14:26
  • +அப் 10:45, 46; 1கொ 12:8, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-14

    12/1/1990, பக். 25-26

அப்போஸ்தலர் 2:5

இணைவசனங்கள்

  • +யாத் 23:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    ஏசாயா II, பக். 408

அப்போஸ்தலர் 2:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 21, 24

அப்போஸ்தலர் 2:7

இணைவசனங்கள்

  • +மாற் 14:70; அப் 1:11

அப்போஸ்தலர் 2:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தாய்மொழிகளில்.”

அப்போஸ்தலர் 2:9

இணைவசனங்கள்

  • +2ரா 17:6
  • +தானி 8:1, 2
  • +1பே 1:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 25-26

    நல்ல தேசம், பக். 32

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:10

இணைவசனங்கள்

  • +யாத் 12:48

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 25, 27

    நல்ல தேசம், பக். 32

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நல்ல தேசம், பக். 32

    காவற்கோபுரம்,

    8/1/1989, பக். 7-8

அப்போஸ்தலர் 2:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புதிய.”

அப்போஸ்தலர் 2:14

இணைவசனங்கள்

  • +அப் 1:13

அப்போஸ்தலர் 2:15

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “காலை சுமார் 9 மணி.”

அப்போஸ்தலர் 2:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/1995, பக். 11

அப்போஸ்தலர் 2:17

இணைவசனங்கள்

  • +யோவே 2:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2020, பக். 6-7

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017), 10/2017, பக். 2

    காவற்கோபுரம்,

    8/1/2002, பக். 15

    5/1/1998, பக். 13-14, 18

    5/15/1995, பக். 11

    12/1/1990, பக். 26

    2/1/1989, பக். 26

    “வேதாகமம் முழுவதும்”, பக். 147

அப்போஸ்தலர் 2:18

இணைவசனங்கள்

  • +1கொ 12:8, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017), 10/2017, பக். 2

    காவற்கோபுரம்,

    8/1/2002, பக். 15

    5/1/1998, பக். 13-14

    5/15/1995, பக். 11

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-14

    12/15/1997, பக். 16-17

அப்போஸ்தலர் 2:20

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-14

    12/15/1997, பக். 16-17

அப்போஸ்தலர் 2:21

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோவே 2:28-32; ரோ 10:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1998, பக். 13-19

    12/15/1997, பக். 16-17

    “வேதாகமம் முழுவதும்”, பக். 147

அப்போஸ்தலர் 2:22

இணைவசனங்கள்

  • +யோவா 5:36; 14:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 16

அப்போஸ்தலர் 2:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தீர்மானத்தின்படியும்.”

இணைவசனங்கள்

  • +யோவா 19:10, 11; அப் 4:27, 28; 1பே 1:20
  • +லூ 23:33; அப் 5:30; 7:52

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    11/8/1993, பக். 21-22

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:24

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “கயிறுகளிலிருந்து.”

இணைவசனங்கள்

  • +அப் 3:15; ரோ 4:24; 1கொ 6:14; கொலோ 2:12; எபி 13:20
  • +யோவா 10:17, 18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/1987, பக். 26

அப்போஸ்தலர் 2:25

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

அப்போஸ்தலர் 2:27

அடிக்குறிப்புகள்

  • *

    மூலமொழியில், “ஹேடீசில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    வே.வா., “பற்றுமாறாமல்.”

இணைவசனங்கள்

  • +அப் 13:35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 66

    காவற்கோபுரம்,

    5/1/2005, பக். 14-15

    5/15/1995, பக். 11

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:28

இணைவசனங்கள்

  • +சங் 16:8-11

அப்போஸ்தலர் 2:29

இணைவசனங்கள்

  • +1ரா 2:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1996, பக். 9

அப்போஸ்தலர் 2:30

இணைவசனங்கள்

  • +2சா 7:12, 13; சங் 89:3, 4; 132:11

அப்போஸ்தலர் 2:31

அடிக்குறிப்புகள்

  • *

    மூலமொழியில், “ஹேடீசில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +சங் 16:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2017, பக். 10

    காவற்கோபுரம்,

    8/15/2011, பக். 16

    1/1/2009, பக். 9

    போதகர், பக். 202-203

    என்றும் வாழலாம், பக். 82-83

அப்போஸ்தலர் 2:32

இணைவசனங்கள்

  • +லூ 24:46-48; அப் 1:8; 3:15

அப்போஸ்தலர் 2:33

இணைவசனங்கள்

  • +ரோ 8:34; பிலி 2:9-11; 1பே 3:22
  • +யோவா 14:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2020, பக். 30

    காவற்கோபுரம்,

    8/15/2010, பக். 15-16

    12/1/1990, பக். 26

அப்போஸ்தலர் 2:34

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

அப்போஸ்தலர் 2:35

இணைவசனங்கள்

  • +சங் 110:1; லூ 20:42, 43; 1கொ 15:25; எபி 10:12, 13

அப்போஸ்தலர் 2:36

இணைவசனங்கள்

  • +யோவா 19:6
  • +மத் 28:18; யோவா 3:35; அப் 5:31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 25-26

அப்போஸ்தலர் 2:38

இணைவசனங்கள்

  • +லூ 24:46, 47; அப் 17:30; 26:20
  • +மத் 26:27, 28; எபே 1:7
  • +மத் 28:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 26-27

    காவற்கோபுரம்,

    3/15/2013, பக். 18

    5/15/2003, பக். 30-31

    4/1/2002, பக். 11

    5/1/1992, பக். 14-15

    12/1/1990, பக். 26-27

அப்போஸ்தலர் 2:39

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோவே 2:28
  • +யோவே 2:32

அப்போஸ்தலர் 2:40

இணைவசனங்கள்

  • +உபா 32:5; சங் 78:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1997, பக். 28

அப்போஸ்தலர் 2:41

இணைவசனங்கள்

  • +அப் 8:12; 18:8
  • +அப் 4:4; 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 26-27

    காவற்கோபுரம்,

    8/1/2002, பக். 15-16

அப்போஸ்தலர் 2:42

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தங்களிடம் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள்.”

இணைவசனங்கள்

  • +அப் 2:46
  • +அப் 1:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2016, பக். 21-22

    காவற்கோபுரம்,

    7/15/2013, பக். 16-17

    9/1/1987, பக். 28

அப்போஸ்தலர் 2:43

இணைவசனங்கள்

  • +அப் 5:12

அப்போஸ்தலர் 2:44

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 27

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 27

    9/1/1987, பக். 28

அப்போஸ்தலர் 2:45

இணைவசனங்கள்

  • +மத் 19:21
  • +அப் 4:32, 34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 27

    காவற்கோபுரம்,

    5/15/2008, பக். 30

    12/1/1990, பக். 27

அப்போஸ்தலர் 2:47

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +அப் 5:14; 11:21; 1கொ 3:7

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

அப். 2:1லேவி 23:16; உபா 16:9-11
அப். 2:2அப் 4:31
அப். 2:4மாற் 1:8; யோவா 14:26
அப். 2:4அப் 10:45, 46; 1கொ 12:8, 10
அப். 2:5யாத் 23:17
அப். 2:7மாற் 14:70; அப் 1:11
அப். 2:92ரா 17:6
அப். 2:9தானி 8:1, 2
அப். 2:91பே 1:1
அப். 2:10யாத் 12:48
அப். 2:14அப் 1:13
அப். 2:17யோவே 2:28
அப். 2:181கொ 12:8, 10
அப். 2:21யோவே 2:28-32; ரோ 10:13
அப். 2:22யோவா 5:36; 14:10
அப். 2:23யோவா 19:10, 11; அப் 4:27, 28; 1பே 1:20
அப். 2:23லூ 23:33; அப் 5:30; 7:52
அப். 2:24அப் 3:15; ரோ 4:24; 1கொ 6:14; கொலோ 2:12; எபி 13:20
அப். 2:24யோவா 10:17, 18
அப். 2:27அப் 13:35
அப். 2:28சங் 16:8-11
அப். 2:291ரா 2:10
அப். 2:302சா 7:12, 13; சங் 89:3, 4; 132:11
அப். 2:31சங் 16:10
அப். 2:32லூ 24:46-48; அப் 1:8; 3:15
அப். 2:33ரோ 8:34; பிலி 2:9-11; 1பே 3:22
அப். 2:33யோவா 14:26
அப். 2:35சங் 110:1; லூ 20:42, 43; 1கொ 15:25; எபி 10:12, 13
அப். 2:36யோவா 19:6
அப். 2:36மத் 28:18; யோவா 3:35; அப் 5:31
அப். 2:38லூ 24:46, 47; அப் 17:30; 26:20
அப். 2:38மத் 26:27, 28; எபே 1:7
அப். 2:38மத் 28:19
அப். 2:39யோவே 2:28
அப். 2:39யோவே 2:32
அப். 2:40உபா 32:5; சங் 78:8
அப். 2:41அப் 8:12; 18:8
அப். 2:41அப் 4:4; 5:14
அப். 2:42அப் 2:46
அப். 2:42அப் 1:14
அப். 2:43அப் 5:12
அப். 2:45மத் 19:21
அப். 2:45அப் 4:32, 34
அப். 2:47அப் 5:14; 11:21; 1கொ 3:7
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
அப்போஸ்தலர் 2:1-47

அப்போஸ்தலரின் செயல்கள்

2 பெந்தெகொஸ்தே பண்டிகை+ நாளில், அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2 அப்போது, திடீரென்று பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் வானத்திலிருந்து வந்தது; அந்தச் சத்தம் அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதும் கேட்டது.+ 3 அதோடு, நெருப்பு போன்ற நாவுகளை அவர்கள் பார்த்தார்கள்; அவை ஒவ்வொன்றும் பிரிந்துபோய் அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தன. 4 அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்;+ அந்தச் சக்தியின் உதவியால் வெவ்வேறு மொழிகளில்* பேச ஆரம்பித்தார்கள்.+

5 அந்தச் சமயத்தில், உலகத்தில் இருந்த எல்லா தேசங்களிலிருந்தும் வந்திருந்த பக்தியுள்ள யூதர்கள் எருசலேமில் தங்கியிருந்தார்கள்.+ 6 அந்தச் சத்தம் வந்தபோது மக்கள் கூட்டமாகக் கூடிவந்து, தங்களுடைய மொழிகளில் அவர்கள் பேசுவதைக் கேட்டுத் திகைத்துப்போனார்கள். 7 எல்லாருமே மிகவும் ஆச்சரியப்பட்டு, “இங்கே பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் எல்லாரும் கலிலேயர்கள்தானே?+ 8 அப்படியிருக்கும்போது, இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில்* பேசுவதைக் கேட்கிறோமே, அது எப்படி? 9 பார்த்தர்களும் மேதியர்களும்+ ஏலாமியர்களும்,+ மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசிய மாகாணம்,+ 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய இடங்களில் குடியிருக்கிறவர்களும், சிரேனே நகரத்துக்குப் பக்கத்திலுள்ள லீபியாவின் பகுதிகளில் குடியிருக்கிறவர்களும், ரோமிலிருந்து வந்து தங்கியிருக்கிறவர்களுமான யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும்,+ 11 கிரேத்தர்களும், அரேபியர்களுமாகிய நாம், கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே!” என்று சொல்லிக்கொண்டார்கள். 12 அவர்கள் எல்லாரும், “இதெல்லாம் என்ன?” என்று குழப்பத்தோடும் பிரமிப்போடும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். 13 வேறு சிலரோ, “இவர்கள் தித்திப்பான* மதுவைக் குடித்து வெறித்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கேலி செய்தார்கள்.

14 ஆனால், பேதுரு மற்ற பதினொரு அப்போஸ்தலர்களோடு+ எழுந்து நின்று, உரத்த குரலில், “யூதேய மக்களே, எருசலேமில் குடியிருக்கிறவர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைப்பது போல இவர்கள் குடிபோதையில் இல்லை. ஏனென்றால், இது மூன்றாம் மணிநேரம்.* 16 யோவேல் தீர்க்கதரிசி மூலம் இப்படிச் சொல்லப்பட்டதுதான் இப்போது நிறைவேறியிருக்கிறது: 17 ‘கடவுள் சொல்வது என்னவென்றால், “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன், உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.+ 18 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும் என் சக்தியைப் பொழிவேன்; அப்போது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.+ 19 மேலே வானத்தில் அதிசயங்களையும் கீழே பூமியில் அடையாளங்களையும் நான் செய்து காட்டுவேன். எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகை மண்டலமாகவும் இருக்கும். 20 யெகோவாவின்* மகத்தான மகா நாள் வருவதற்குமுன் சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும். 21 யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”’+

22 இஸ்ரவேல் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நாசரேத்தூர் இயேசுவின் மூலம் கடவுள் உங்கள் நடுவில் வல்லமையான செயல்களையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து, அவர் யார் என்பதை உங்களுக்கு வெளிப்படையாகக் காட்டினார்.+ இது உங்களுக்கே தெரியும். 23 கடவுளுடைய மாறாத நோக்கத்தின்படியும்* முன்னறிவின்படியும்+ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரைத்தான் நீங்கள் அக்கிரமக்காரர்களின் கையால் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்.+ 24 ஆனால், கடவுள் அவரை மரணத்தின் பிடியிலிருந்து* காப்பாற்றி உயிரோடு எழுப்பினார்;+ மரணத்தால் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.+ 25 அவர் இப்படிச் சொல்வதாக தாவீது குறிப்பிட்டிருக்கிறார்: ‘யெகோவாவை* எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது. 26 அதனால், என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கிறது, என் நாவு மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறது, நான் நம்பிக்கையோடு வாழ்வேன்; 27 ஏனென்றால், நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்; உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்.+ 28 வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள், உங்களுடைய சன்னிதியில் என்னை மிகுந்த சந்தோஷத்தால் நிரப்புவீர்கள்.’+

29 சகோதரர்களே, வம்சத் தலைவரான தாவீதைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடியும்; அவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய சமாதி இன்றுவரை நம் மத்தியில்தான் இருக்கிறது. 30 அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததாலும், கடவுள் அவரிடம், ‘உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்’+ என்று ஆணையிட்டுக் கொடுத்ததை அறிந்திருந்ததாலும், 31 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து, கிறிஸ்து கல்லறையில்* விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவருடைய உடல் அழிந்துபோகாது+ என்றும் சொல்லியிருந்தார். 32 இந்த இயேசுவைத்தான் கடவுள் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகள்.+ 33 தகப்பனாகிய கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டு,+ வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி கடவுளுடைய சக்தியைப் பெற்று+ இப்போது அதைப் பொழிந்திருக்கிறார்; இதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள். 34 உண்மையில், தாவீது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை; அவரே இப்படிச் சொன்னார்: ‘யெகோவா* என் எஜமானிடம், 35 “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று சொன்னார்.’ 36 அதனால், நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்ற+ இந்த இயேசுவையே எஜமானாகவும்+ கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார் என்பதை இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொன்னார்.

37 இந்த வார்த்தைகளெல்லாம் அங்கே இருந்தவர்களுடைய உள்ளத்தைத் துளைத்தன; அதனால், “சகோதரர்களே, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும் கேட்டார்கள். 38 அதற்கு பேதுரு, “மனம் திருந்துங்கள்,+ உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட+ வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் எடுங்கள்;+ அப்போது கடவுளுடைய சக்தியை இலவச அன்பளிப்பாகப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி+ உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், ரொம்பத் தூரத்திலிருக்கிற மற்ற எல்லாருக்கும், நம் கடவுளாகிய யெகோவா* அழைக்கிற அத்தனை பேருக்கும் கொடுக்கப்படுகிறது”+ என்று சொன்னார். 40 இதைப் பற்றி இன்னும் நிறைய சொல்லி முழுமையாகச் சாட்சி கொடுத்து, “சீர்கெட்ட இந்தத் தலைமுறைக்கு+ வரும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார். 41 அவர் சொன்னதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்;+ அன்று சுமார் 3,000 பேர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.+ 42 அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்திவந்தார்கள், தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள்,* ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள்,+ தொடர்ந்து ஜெபம் செய்தார்கள்.+

43 அப்போஸ்தலர்கள் மூலம் நிறைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க ஆரம்பித்தன;+ எல்லாருக்கும் பயபக்தி ஏற்பட்டது. 44 இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த எல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள், தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாக வைத்துப் பயன்படுத்தினார்கள். 45 தங்கள் உடைமைகளையும் சொத்துகளையும் விற்று,+ அந்தப் பணத்தை அவரவருடைய தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.+ 46 அவர்கள் ஒரே நோக்கத்தோடு ஆலயத்தில் தினமும் கூடிவந்து, வெவ்வேறு வீடுகளில் உணவு சாப்பிட்டு, தங்களிடம் இருந்த உணவை மிகுந்த சந்தோஷத்தோடும் கள்ளம்கபடமில்லாத உள்ளத்தோடும் பகிர்ந்துகொண்டு, 47 கடவுளைப் புகழ்ந்து வந்தார்கள், எல்லா மனிதர்களுடைய பிரியத்தையும் பெற்று வந்தார்கள். மீட்புப் பெறவிருந்தவர்களை யெகோவா* தினமும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே வந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்