உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 39
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • குருமார்களுக்கான அங்கிகள் தயாரிக்கப்படுகின்றன (1)

      • ஏபோத் (2-7)

      • மார்ப்பதக்கம் (8-21)

      • கையில்லாத அங்கி (22-26)

      • குருமார்களுக்கான மற்ற உடைகள் (27-29)

      • தங்கத் தகடு (30, 31)

      • வழிபாட்டுக் கூடாரத்தை மோசே பார்வையிடுகிறார் (32-43)

யாத்திராகமம் 39:1

இணைவசனங்கள்

  • +யாத் 35:23
  • +யாத் 28:4, 5; 29:5; 35:10, 19

யாத்திராகமம் 39:2

அடிக்குறிப்புகள்

  • *

    இந்த வசனத்திலும் 3, 7, 8, 22 ஆகிய வசனங்களிலும் “அவர்” என்பது அநேகமாக பெசலெயேலைக் குறிக்கலாம்.

  • *

    அதாவது, “லினன்.”

இணைவசனங்கள்

  • +யாத் 28:6-8; லேவி 8:7

யாத்திராகமம் 39:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எம்பிராய்டரி.”

யாத்திராகமம் 39:5

இணைவசனங்கள்

  • +யாத் 29:5

யாத்திராகமம் 39:6

இணைவசனங்கள்

  • +யாத் 28:9, 10

யாத்திராகமம் 39:7

இணைவசனங்கள்

  • +யாத் 28:12

யாத்திராகமம் 39:8

இணைவசனங்கள்

  • +லேவி 8:8
  • +யாத் 28:15-21

யாத்திராகமம் 39:9

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

யாத்திராகமம் 39:12

அடிக்குறிப்புகள்

  • *

    எபிரெயுவில், “லேசேம்.” இது உண்மையில் எந்தக் கல் என்பது தெரியவில்லை.

யாத்திராகமம் 39:15

இணைவசனங்கள்

  • +யாத் 28:22-25

யாத்திராகமம் 39:19

இணைவசனங்கள்

  • +யாத் 28:26-28

யாத்திராகமம் 39:22

இணைவசனங்கள்

  • +யாத் 28:31-35

யாத்திராகமம் 39:27

இணைவசனங்கள்

  • +யாத் 28:39, 40

யாத்திராகமம் 39:28

இணைவசனங்கள்

  • +யாத் 28:4
  • +யாத் 29:8, 9
  • +யாத் 28:42

யாத்திராகமம் 39:30

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “பரிசுத்தம் யெகோவாவுடையது.”

  • *

    வே.வா., “அதுதான் பரிசுத்த மகுடம்.”

இணைவசனங்கள்

  • +யாத் 28:36, 37; லேவி 8:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2464

யாத்திராகமம் 39:32

இணைவசனங்கள்

  • +யாத் 25:40; எபி 8:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1995, பக். 12-13

யாத்திராகமம் 39:33

இணைவசனங்கள்

  • +யாத் 36:8
  • +யாத் 36:14
  • +யாத் 36:18
  • +யாத் 36:20
  • +யாத் 36:31
  • +யாத் 36:24

யாத்திராகமம் 39:34

இணைவசனங்கள்

  • +யாத் 36:19
  • +யாத் 36:35

யாத்திராகமம் 39:35

இணைவசனங்கள்

  • +யாத் 37:1, 4
  • +யாத் 37:6

யாத்திராகமம் 39:36

இணைவசனங்கள்

  • +யாத் 37:10, 16

யாத்திராகமம் 39:37

இணைவசனங்கள்

  • +யாத் 37:17, 23
  • +யாத் 25:38
  • +யாத் 35:27, 28

யாத்திராகமம் 39:38

இணைவசனங்கள்

  • +யாத் 37:25
  • +யாத் 37:29
  • +யாத் 30:34, 35
  • +யாத் 36:37

யாத்திராகமம் 39:39

இணைவசனங்கள்

  • +யாத் 38:1, 4
  • +யாத் 38:6
  • +யாத் 38:30
  • +யாத் 30:18; 38:8

யாத்திராகமம் 39:40

இணைவசனங்கள்

  • +யாத் 38:9-11
  • +யாத் 38:18
  • +யாத் 38:20

யாத்திராகமம் 39:41

இணைவசனங்கள்

  • +யாத் 28:3

யாத்திராகமம் 39:42

இணைவசனங்கள்

  • +யாத் 35:10; 36:1

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 39:1யாத் 35:23
யாத். 39:1யாத் 28:4, 5; 29:5; 35:10, 19
யாத். 39:2யாத் 28:6-8; லேவி 8:7
யாத். 39:5யாத் 29:5
யாத். 39:6யாத் 28:9, 10
யாத். 39:7யாத் 28:12
யாத். 39:8லேவி 8:8
யாத். 39:8யாத் 28:15-21
யாத். 39:15யாத் 28:22-25
யாத். 39:19யாத் 28:26-28
யாத். 39:22யாத் 28:31-35
யாத். 39:27யாத் 28:39, 40
யாத். 39:28யாத் 28:4
யாத். 39:28யாத் 29:8, 9
யாத். 39:28யாத் 28:42
யாத். 39:30யாத் 28:36, 37; லேவி 8:9
யாத். 39:32யாத் 25:40; எபி 8:5
யாத். 39:33யாத் 36:8
யாத். 39:33யாத் 36:14
யாத். 39:33யாத் 36:18
யாத். 39:33யாத் 36:20
யாத். 39:33யாத் 36:31
யாத். 39:33யாத் 36:24
யாத். 39:34யாத் 36:19
யாத். 39:34யாத் 36:35
யாத். 39:35யாத் 37:1, 4
யாத். 39:35யாத் 37:6
யாத். 39:36யாத் 37:10, 16
யாத். 39:37யாத் 37:17, 23
யாத். 39:37யாத் 25:38
யாத். 39:37யாத் 35:27, 28
யாத். 39:38யாத் 37:25
யாத். 39:38யாத் 37:29
யாத். 39:38யாத் 30:34, 35
யாத். 39:38யாத் 36:37
யாத். 39:39யாத் 38:1, 4
யாத். 39:39யாத் 38:6
யாத். 39:39யாத் 38:30
யாத். 39:39யாத் 30:18; 38:8
யாத். 39:40யாத் 38:9-11
யாத். 39:40யாத் 38:18
யாத். 39:40யாத் 38:20
யாத். 39:41யாத் 28:3
யாத். 39:42யாத் 35:10; 36:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 39:1-43

யாத்திராகமம்

39 பரிசுத்த இடத்தின் வேலைக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல்+ ஆகியவற்றால் அவர்கள் உடைகளை நன்றாக நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஆரோனுக்காகப் பரிசுத்த அங்கிகளைத் தயாரித்தார்கள்.+

2 அவர்* தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை* ஆகியவற்றால் ஏபோத்தைத்+ தயாரித்தார். 3 அவர்கள் தங்கத்தைச் சன்னமான தகடுகளாக அடித்தார்கள். பின்பு அவர் அந்த நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றோடு சேர்த்து தையல்* வேலைப்பாடு செய்வதற்காக அந்தத் தங்கத் தகடுகளைச் சரிகைகளாகப் பண்ணினார். 4 அதன்பின், அவர்கள் ஏபோத்துக்கு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைத்தார்கள். 5 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை இணைத்துத் தைத்தார்கள்.+ ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.

6 தங்க வில்லைகளில் கோமேதகக் கற்களைப் பதித்தார்கள். முத்திரை பொறிப்பதுபோல் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்தக் கற்களில் பொறித்தார்கள்.+ 7 பின்பு அவர், இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி அவற்றை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்தினார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார். 8 அதன்பின், ஏபோத்துக்குச் செய்தது போலவே மார்ப்பதக்கத்துக்கும்+ தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 9 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருந்தது. 10 அவர்கள் அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதித்தார்கள். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதித்தார்கள். 11 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 12 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 13 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். இவற்றைத் தங்க வில்லைகளில் பதித்தார்கள். 14 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட்டன.

15 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்தார்கள்.+ 16 இரண்டு தங்க வில்லைகளையும் இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளிலும் பொருத்தினார்கள். 17 பின்பு, இரண்டு தங்க முறுக்குச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் மேல்முனைகளில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டினார்கள். 18 அதன்பின், அந்த இரண்டு முறுக்குச் சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும், ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளில் இருக்கிற இரண்டு வில்லைகளில் பொருத்தினார்கள். 19 பிறகு, தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் உள்பக்கத்திலுள்ள இரண்டு கீழ் முனைகளில் பொருத்தினார்கள். இவை ஏபோத்தைத் தொட்டபடி இருந்தன.+ 20 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து அவற்றை ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளின் கீழே, அது இணைக்கப்பட்டுள்ள இடத்துக்குப் பக்கத்தில், ஏபோத்தின் இடுப்புப்பட்டைக்குக் கொஞ்சம் மேலே பொருத்தினார்கள். 21 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு நீல நிற நாடாவால் இணைத்தார்கள். இதனால், மார்ப்பதக்கம் இடுப்புப்பட்டைக்கு மேலேயே, ஏபோத்தின் மேல் அசையாமல் நின்றது.

22 பின்பு அவர், ஏபோத்துக்கு உள்ளே போடுவதற்காகக் கையில்லாத ஒரு அங்கியை முழுக்க முழுக்க நீல நிற நூலால் நெய்தார்.+ 23 அதன் நடுவில் கழுத்துப் பகுதி இருந்தது. அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதி போல இருந்தது. கிழியாமல் இருப்பதற்காகச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் வைக்கப்பட்டிருந்தது. 24 அதன்பின் அவர்கள் நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றைத் திரித்து மாதுளம்பழங்களைப் போல செய்தார்கள். அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைத்தார்கள். 25 அதோடு, சுத்தமான தங்கத்தில் மணிகள்போல் செய்து, அந்த அங்கியின் கீழ் மடிப்பைச் சுற்றிலும் மாதுளம்பழங்களுக்கு இடையிடையே வைத்துத் தைத்தார்கள். 26 ஒரு மணி, ஒரு மாதுளம்பழம், ஒரு மணி, ஒரு மாதுளம்பழம் என்று குருத்துவச் சேவைக்கான அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைத்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.

27 ஆரோனுக்காகவும் அவருடைய மகன்களுக்காகவும் உயர்தர நாரிழையால் நெய்யப்பட்ட அங்கிகளையும்,+ 28 தலைப்பாகையையும்,+ அலங்கரிக்கப்பட்ட முண்டாசையும்+ செய்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழையால் அரைக் கால்சட்டைகளையும்+ செய்தார்கள். 29 அதோடு, உயர்தரமான திரித்த நாரிழை, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இடுப்புக்கச்சையை நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.

30 கடைசியாக, சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, முத்திரை பொறிப்பது போல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்”* என்று அதில் பொறித்தார்கள்.+ அதுதான் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்.* 31 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்டினார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.

32 இப்படி, வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், அதாவது சந்திப்புக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், செய்து முடிக்கப்பட்டன. மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.+ அவர் சொன்னபடியே செய்தார்கள்.

33 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தை+ மோசேயிடம் அவர்கள் கொண்டுவந்தார்கள். அதாவது கூடாரம்,+ அதற்கான பொருள்கள், கொக்கிகள்,+ சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள், பாதங்கள்,+ 34 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால்+ செய்த மேல்விரிப்பு, கடல்நாய்த் தோலினால் செய்த மேல்விரிப்பு, திரைச்சீலை,+ 35 சாட்சிப் பெட்டி, அதன் கம்புகள்,+ மூடி,+ 36 மேஜை, அதன் பாத்திரங்கள்,+ படையல் ரொட்டிகள், 37 சுத்தமான தங்கத்தில் குத்துவிளக்கு, அதன் அகல் விளக்குகள்,+ அதற்கான பாத்திரங்கள்,+ விளக்குகளுக்கான எண்ணெய்,+ 38 தங்கப் பீடம்,+ அபிஷேகத் தைலம்,+ தூபப்பொருள்,+ கூடார வாசலுக்கான திரை,+ 39 செம்புப் பலிபீடம்,+ அதற்கான செம்புக் கம்பிவலை, கம்புகள்,+ பாத்திரங்கள்,+ தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 40 பிரகாரத்துக்கான மறைப்புகள், அவற்றின் கம்பங்கள், பாதங்கள்,+ பிரகார நுழைவாசலுக்கான திரை,+ கூடாரக் கயிறுகள், கூடார ஆணிகள்,+ வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்தில் பயன்படுத்துவதற்கான பாத்திரங்கள், 41 வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவருடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.

42 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.+ 43 அவர்களுடைய வேலைகள் எல்லாவற்றையும் மோசே பார்வையிட்டார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர்கள் செய்திருந்ததைப் பார்த்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்