எரேமியா
1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் நகரத்தைச்+ சேர்ந்த குருவாகிய இல்க்கியாவின் மகன் எரேமியா* எழுதுவது. 2 ஆமோனின்+ மகனாகிய யோசியா+ யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்தில் யெகோவாவிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. 3 யோசியாவின் மகன் யோயாக்கீம்+ யூதாவை ஆட்சி செய்த காலத்திலும் அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமான சிதேக்கியாவின்+ 11-ஆம் வருஷத்தின் முடிவு வரையிலும், எருசலேம் ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன ஐந்தாம் மாதம் வரையிலும்+ அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது.
4 யெகோவா என்னிடம்,
5 “உன் தாயின் வயிற்றில் உன்னை உருவாக்குவதற்கு முன்பே உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்.+
நீ பிறப்பதற்கு முன்பே ஒரு விசேஷ வேலைக்காக உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.*+
தேசங்களுக்கு உன்னை ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தேன்” என்று சொன்னார்.
6 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே!
நான் சின்னப் பையன்,+ எனக்குப் பேசத் தெரியாதே!”+ என்று சொன்னேன்.
7 அப்போது யெகோவா என்னிடம்,
“நீ சின்னப் பையன் என்று சொல்லாதே.
யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடமெல்லாம் நீ போக வேண்டும்.
எதையெல்லாம் சொல்லச் சொல்கிறேனோ அதையெல்லாம் நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.+
8 அவர்களைப் பார்த்துப் பயப்படாதே.+
ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
9 பின்பு, யெகோவா தன்னுடைய கையை நீட்டி என் வாயைத் தொட்டார்.+ யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்.+ 10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.
11 மறுபடியும் யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “வாதுமை மரத்தின்* கிளையைப் பார்க்கிறேன்” என்று சொன்னேன்.
12 அப்போது யெகோவா, “சரியாகச் சொன்னாய்; என் வார்த்தையை நிறைவேற்றி முடிக்கும்வரை நான் ஓய மாட்டேன்”* என்று சொன்னார்.
13 யெகோவா இரண்டாவது தடவை என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கொதிக்கிற பானையைப் பார்க்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து தெற்குப் பக்கமாகச் சாய்க்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னேன். 14 அப்போது யெகோவா என்னிடம்,
“தேசத்தில் இருக்கிற எல்லாருக்கும் எதிராக
வடக்கிலிருந்து அழிவு வரும்.+
15 ஏனென்றால், ‘வடக்கு ராஜ்யங்களில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நான் அழைத்திருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.+
‘அவர்கள் வருவார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும்
எருசலேமின் வாசல்களில் தங்கள் சிம்மாசனத்தை நிறுத்தி வைப்பார்கள்.+
எருசலேமின் எல்லா மதில்களையும்,
யூதாவின் எல்லா நகரங்களையும் தாக்குவார்கள்.+
16 என் ஜனங்கள் அக்கிரமங்களைச் செய்வதால் நான் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பேன்.
அவர்கள் என்னை உதறித்தள்ளிவிட்டு,+
பொய் தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+
தங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்குகிறார்கள்.’+
17 நீ தயாராகிக்கொள்.
எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்.
அவர்களைப் பார்த்து நடுங்காதே.+
அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன்.
18 யூதாவின் ராஜாக்களையும், அதிகாரிகளையும்,
குருமார்களையும், ஜனங்களையும்+ நீ சமாளித்து நிற்பதற்காக
இன்று நான் உன்னை மதில் சூழ்ந்த நகரமாகவும்,+
இரும்புத் தூணாகவும், செம்புச் சுவராகவும் ஆக்கியிருக்கிறேன்.
19 அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.
ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.
ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
2 யெகோவா என்னிடம், 2 “எருசலேமுக்கு நீ அறிவிக்க வேண்டியது என்னவென்றால், ‘யெகோவா சொல்வது இதுதான்:
“இளவயதில் என்மேல் எவ்வளவு பக்தியாக* இருந்தாய்!+
என்னோடு நிச்சயிக்கப்பட்டிருந்த சமயத்தில் என்மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாய்!+
எதுவும் விதைக்கப்படாத வனாந்தரத்திலே என்னை எப்படிப் பின்பற்றி வந்தாய்!+
இதெல்லாம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
3 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாக,+ அவருடைய முதல் விளைச்சலாக இருந்தார்கள்.”’
‘அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறவர்கள் குற்றவாளிகளாக ஆவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் அழிந்துபோவார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”+
4 யாக்கோபின் வம்சத்தாரே, இஸ்ரவேலின் குடும்பங்களே,
யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.
5 யெகோவா சொல்வது இதுதான்:
“உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+
ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?
ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+
6 ‘எகிப்திலிருந்து விடுதலை செய்து,+
ஆள் நடமாட்டமே இல்லாத வனாந்தரத்தின் வழியாகவும்,
பாலைவனங்களும்+ படுகுழிகளும் வறட்சியும்+
கும்மிருட்டும் உள்ள தேசத்தின் வழியாகவும்,
யாருமே குடியிருக்காத பிரதேசத்தின் வழியாகவும்
நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா எங்கே?’ என்று அவர்கள் கேட்கவில்லை.
7 பழத் தோட்டங்கள் நிறைந்த தேசத்துக்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.
அந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்.+
ஆனால், நீங்கள் அந்தத் தேசத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள்.
நான் கொடுத்த சொத்தை அருவருப்பானதாக ஆக்கினீர்கள்.+
8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+
திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.
மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+
தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+
ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.
9 ‘அதனால் நான் திரும்பவும் உங்களோடு வழக்காடுவேன்,+
உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
10 ‘கித்தீமின்+ கடலோரப் பகுதிகளுக்கு* போய்ப் பாருங்கள்.
கேதாருக்கு+ ஆள் அனுப்பி நன்றாக விசாரியுங்கள்.
இதுபோல் ஒன்று நடந்திருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.
11 எந்தத் தேசத்து ஜனங்களாவது அவர்களுடைய தெய்வத்தை விட்டுவிட்டு தெய்வமே இல்லாதவற்றை வணங்கியிருக்கிறார்களா?
ஆனால், என்னுடைய ஜனங்கள் மகிமையுள்ள என்னை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வணங்குகிறார்கள்.+
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘வானமே, இதைப் பார்த்து ஆச்சரியப்படு.
அதிர்ச்சியில் நடுநடுங்கு.
13 ஏனென்றால், என் ஜனங்கள் இரண்டு தவறுகளைச் செய்துவிட்டார்கள்:
வாழ்வு தரும் நீரூற்றாகிய+ என்னை விட்டுவிட்டார்கள்.
அதோடு, தங்களுக்காகத் தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள்.*
அவை தண்ணீர் நிற்காத உடைந்த தொட்டிகள்.’
14 ‘இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனா அல்லது எஜமானின் வீட்டில் பிறந்த அடிமையா?
அப்புறம் ஏன் கொள்ளையடிக்கப்பட அவன் விடப்பட்டான்?
அவனுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தன.
அவனுடைய நகரங்கள் கொளுத்தப்பட்டன; அங்கு யாருமே இல்லை.
16 இஸ்ரவேலே, நோப்* மக்களும்+ தக்பானேஸ் மக்களும்+ உன் தேசத்தைச் சூறையாடுகிறார்கள்.*
17 உனக்கு இந்த நிலைமை வந்ததற்கு நீதானே காரணம்?
உன் கடவுளாகிய யெகோவா உனக்கு வழி காட்டினாரே.
ஆனால், நீ அவரை விட்டுவிட்டாயே.+
19 உன் அக்கிரமமே உனக்குப் பாடம் புகட்ட வேண்டும்.
நீ செய்த துரோகமே உன்னைக் கண்டிக்க வேண்டும்.
உன் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகினால்
எந்தளவுக்குக் கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.+
உனக்கு என்மேல் பயமே இல்லை’+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
20 ‘எத்தனையோ வருஷங்களுக்கு முன்பே நான் உன் நுகத்தடியை முறித்துப்போட்டேன்.+
உன் விலங்குகளை உடைத்துப்போட்டேன்.
ஆனால், “நான் உங்களுக்குச் சேவை செய்ய மாட்டேன்” என்று நீ சொன்னாய்.
உயரமான எல்லா மலைகளின் மேலும், அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+
படுத்துக் கிடந்து விபச்சாரம் செய்தாய்.+
21 தரமான சிவப்புத் திராட்சைக் கொடியாகத்தானே உன்னை நட்டு வைத்தேன்?+ நீ முழுக்க முழுக்க நல்ல கொடியாகத்தானே இருந்தாய்?
பிறகு எப்படித் தரம்கெட்ட காட்டுத் திராட்சைக் கொடியாக மாறினாய்?’+
22 ‘நீ என்னதான் நன்றாகத் தேய்த்துக் குளித்தால்கூட* உன் அழுக்கு போகாது.
உன் அக்கிரமங்கள்தான் என் கண்ணுக்குக் கறையாகத் தெரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
23 நீ உன்னைக் கறைபடுத்திக்கொள்ளவே இல்லை என்றும்,
பாகால்களை வணங்கவே இல்லை என்றும் எப்படிச் சொல்லலாம்?
பள்ளத்தாக்கில் நீ போன வழியைப் பார்.
நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார்.
அங்கும் இங்கும் கண்மூடித்தனமாக ஓடுகிற
இளம் பெண் ஒட்டகத்தைப் போல நீ இருக்கிறாய்.
24 வனாந்தரத்தில் திரிந்து பழகிய பெண் காட்டுக் கழுதை போல இருக்கிறாய்!
அது காம வேட்கையில் மோப்பம் பிடிக்கும்.
காம வெறியில் இருக்கும்போது அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
ஆண் கழுதை அதைத் தேடி அலைய வேண்டியதே இல்லை.
இணை சேரும் காலத்தில் அதுவே தேடி வரும்.
25 இஸ்ரவேலே, ‘வீணானதைத் தேடிப்போய் உன் பாதத்தைத் தேய விடாதே,
உன் தொண்டையை வறண்டுபோக விடாதே’ என்று நான் சொன்னபோது,
‘என்னால் முடியாது!+ நான் மற்ற தெய்வங்களிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்.+
அந்தத் தெய்வங்களைத்தான் கும்பிடுவேன்’+ என்று நீ சொன்னாய்.
26 கையும் களவுமாகப் பிடிபடுகிற திருடன் அவமானம் அடைவது போல,
இஸ்ரவேல் ஜனங்களும் அவமானம் அடைந்திருக்கிறார்கள்.
ஜனங்கள், ராஜாக்கள், இளவரசர்கள், குருமார்கள்,
தீர்க்கதரிசிகள் என எல்லாருமே அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+
27 அவர்கள் ஒரு மரத்தைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தகப்பன்’ என்றும்,+
ஒரு கல்லைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தாய்’ என்றும் சொல்கிறார்கள்.
என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போகிறார்கள்.*+
ஆனால், ஆபத்துக் காலத்தில் மட்டும்,
‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’+ என்று கெஞ்சுவார்கள்.
28 உங்களுக்காக நீங்கள் உண்டாக்கிய தெய்வங்கள் எங்கே?+
யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன.+
முடிந்தால், ஆபத்துக் காலத்தில் அந்தத் தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்.
29 ‘ஏன் என்னோடு வாதாடிக்கொண்டே இருக்கிறீர்கள்?
ஏன் எல்லாரும் என் பேச்சை மீறுகிறீர்கள்?’+ என்று யெகோவா கேட்கிறார்.
30 நான் உங்கள் மகன்களைத் தண்டித்தது வீண்.+
நான் கண்டித்தும் அவர்கள் திருந்தவே இல்லை.+
கொடிய சிங்கத்தைப் போல
உங்கள் வாளே உங்கள் தீர்க்கதரிசிகளைத் தாக்கிக் கொன்றது.+
31 இன்றைய தலைமுறையினரே, யெகோவாவின் வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
நான் இஸ்ரவேலுக்கு ஒரு வனாந்தரம்போல் ஆகிவிட்டேனா?
பயங்கரமான இருட்டில் கிடக்கும் தேசம்போல் ஆகிவிட்டேனா?
என் ஜனங்கள் என்னிடம், ‘எங்கள் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருக்கிறோம்,
உங்களிடம் இனி வரவே மாட்டோம்’+ என்று ஏன் சொல்கிறார்கள்?
ஆனாலும், என் ஜனங்கள் நாள்கணக்காக என்னை மறந்துவிட்டார்கள்.+
33 பெண்ணே,* நீ கள்ளத்தனமாகக் காதலர்களைத் தேடிப்போனாயே!
கெட்ட வழிகளில் போய்ப் பழக்கப்பட்டிருக்கிறாயே!+
34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+
கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.
இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+
35 ஆனால் நீ, ‘அவருக்கு என்மேல் இருந்த கோபம் போய்விட்டது.
நான் நிரபராதி’ என்று சொல்லிக்கொள்கிறாய்.
பாவம் செய்யவில்லை என்று நீ சொல்லிக்கொள்வதால்
இப்போது நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன்.
36 என்னைவிட்டு ஏன் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கிறாய்? அதனால் வரும் விபரீதத்தை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்?
37 நீ யார்மேல் நம்பிக்கை வைத்தாயோ அவர்களை யெகோவா ஒதுக்கித்தள்ளிவிட்டார்.
அவர்களால் உனக்கு உதவி செய்ய முடியாது.
அதனால், நீ தலைமேல் கை வைத்துக்கொண்டுதான் இங்கிருந்து போவாய்”+ என்றார்.
3 “ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அனுப்பிவிட்ட பிறகு, அவள் போய் இன்னொருவனுடைய மனைவியாகிவிட்டால், அவளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள முடியுமா?” என்று ஜனங்கள் கேட்கிறார்கள்.
தேசம் ஏற்கெனவே சீர்கெட்டுத் தறிகெட்டுக் கிடக்கிறது.+
“நீ* நிறைய பேரோடு விபச்சாரம் செய்திருக்கிறாய்,+
இப்போது மறுபடியும் என்னிடம் சேர்ந்துகொள்ள முடியுமா?” என்று யெகோவா கேட்கிறார்.
2 “குன்றுகளையெல்லாம் பார்.
எங்குதான் நீ விபச்சாரம் செய்யவில்லை?
வனாந்தரத்தில் உள்ள நாடோடியை* போல
ஆட்களுக்காக வழியோரங்களில் காத்துக் கிடந்தாய்.
நீ விபச்சாரத்தினாலும் அக்கிரமத்தினாலும்
தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருக்கிறாய்.+
விபச்சாரம் செய்கிற மனைவியைப் போல நீ துணிச்சலாக இருக்கிறாய்.
உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை.+
ஒருபக்கம் நீ இப்படிக் கேட்டாலும்,
இன்னொரு பக்கம் அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்துகொண்டே இருக்கிறாய்.”+
6 யோசியா ராஜா+ ஆட்சி செய்த காலத்தில் யெகோவா என்னிடம், “‘இஸ்ரவேல் எப்படித் துரோகம் செய்துவிட்டாள் என்று பார்த்தாயா? உயரமான எல்லா மலைகளின் மேலும் அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும் அவள் விபச்சாரம் செய்திருக்கிறாள்.+ 7 இதையெல்லாம் அவள் செய்திருந்தும் நான் அவளைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டேன்;+ ஆனால் அவள் வரவில்லை. யூதாவும் துரோகியாகிய அவளுடைய சகோதரியைக் கவனித்துக்கொண்டே இருந்தாள்.+ 8 அதை நான் பார்த்தபோது, எனக்குத் துரோகம்+ செய்த இஸ்ரவேலுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டேன்.+ ஆனால், துரோகியாகிய அவளுடைய சகோதரி யூதா அதைப் பார்த்துப் பயப்படவில்லை. அவளும் போய் விபச்சாரம் செய்தாள்.+ 9 அதை ஒரு குற்றமாகவே அவள் நினைக்கவில்லை. தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருந்தாள். கற்களையும் மரங்களையும் வணங்கி எனக்குத் துரோகம் செய்தாள்.+ 10 நடந்ததையெல்லாம் பார்த்த பின்பும், துரோகியாகிய அவளுடைய சகோதரி யூதா நெஞ்சார என்னிடம் திரும்பி வரவில்லை; திரும்பி வருவது போல வெறுமனே நாடகமாடினாள்’ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
11 பின்பு யெகோவா என்னிடம், “துரோகம் செய்வதில் யூதாவைவிட இஸ்ரவேல் ஓரளவு பரவாயில்லை.*+ 12 நீ போய், வடக்கே உள்ளவர்களிடம் இப்படிச் சொல்:+
‘“சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா” என்று யெகோவா சொல்கிறார்.’+ ‘“நான் உண்மையோடு* நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’ ‘“நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன். 13 நீ உன் குற்றத்தை மட்டும் ஒத்துக்கொள். ஏனென்றால், உன் கடவுளான யெகோவாவுக்கு நீ அடங்கி நடக்கவில்லை. அடர்த்தியான மரங்களுக்குக் கீழே பொய் தெய்வங்களை வணங்குவதற்காக ஓடிஓடிப் போனாய். ஆனால், என்னுடைய பேச்சைக் கேட்கவில்லை” என்று யெகோவா சொல்கிறார்’” என்றார்.
14 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார். “ஏனென்றால், நான்தான் உங்களுடைய உண்மையான எஜமான்.* நகரத்துக்கு ஒருவர், குடும்பத்துக்கு இருவர் என்ற கணக்கில் உங்களை நான் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ 15 என் இதயத்துக்குப் பிடித்த மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்.+ அவர்கள் அறிவாலும் விவேகத்தாலும்* உங்களைப் போஷிப்பார்கள். 16 அந்த நாட்களில் நீங்கள் தேசத்திலே ஏராளமாகப் பெருகுவீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+ “இனியும் நீங்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைப் பற்றிப் பேச மாட்டீர்கள். அதை நெஞ்சத்தில் நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். அது உங்கள் ஞாபகத்துக்கே வராது. அது இல்லாததை நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள். அதைப் போன்ற இன்னொன்றைச் செய்து வைக்க மாட்டீர்கள். 17 அந்தக் காலத்தில் எருசலேமை யெகோவாவின் சிம்மாசனம் என்று அழைப்பீர்கள்.+ யெகோவாவின் பெயரைப் புகழ்வதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமுக்கு அழைத்து வரப்படுவார்கள்.+ அதற்குப் பின்பு, அவர்கள் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போக மாட்டார்கள்.”
18 “அந்த நாட்களில், யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களுமான நீங்கள் கைகோர்த்துக்கொண்டு வருவீர்கள்.+ வடக்கு தேசத்திலிருந்து புறப்பட்டு, உங்கள் முன்னோர்களுக்கு நான் சொத்தாகக் கொடுத்த தேசத்துக்கு ஒன்றுசேர்ந்து வருவீர்கள்.+ 19 உங்களுக்குச் செய்ததையெல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். நான் உங்களை என் மகன்களாக ஏற்றுக்கொண்டு, தேசங்களிலேயே அழகான தேசத்தையும் அருமையான நாட்டையும் ஆசையாகக் கொடுத்தேன்.+ நீங்கள் என்னை ‘அப்பா!’ என்று கூப்பிட்டு, என்னைவிட்டு விலகாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். 20 ‘ஆனால் இஸ்ரவேல் ஜனங்களே, கணவனுக்கு மனைவி துரோகம் செய்வதைப் போல எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
21 குன்றுகளில் சத்தம் கேட்கிறது.
இஸ்ரவேலர்கள் கெஞ்சிக் கதறுகிறார்கள்.
தவறான வழிக்குப் போய்விட்டதையும்,
தங்கள் கடவுளான யெகோவாவை மறந்துவிட்டதையும் நினைத்து அழுகிறார்கள்.+
22 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்.
உங்களுடைய சீர்கெட்ட நிலைமையை நான் மாற்றுகிறேன்.”+
“இதோ, உங்களிடம் வந்துவிட்டோம்.
யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் கடவுள்.+
23 உண்மையாகவே, குன்றுகளிலும் மலைகளிலும் நாங்கள் போட்ட கூச்சலெல்லாம் வீண்.+
எங்கள் கடவுளாகிய யெகோவாதான் இஸ்ரவேலின் மீட்பர்.+
24 ஆனால், நாங்கள் வணங்கிய வெட்கங்கெட்ட தெய்வம்
எங்கள் முன்னோர்கள் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும்,
அவர்களுடைய ஆடுகளையும், மாடுகளையும்,
மகன்களையும் மகள்களையும் விழுங்கிவிட்டது.
இதைச் சிறு வயதிலிருந்தே நாங்கள் பார்த்திருக்கிறோம்.+
25 எங்களுடைய கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டோம்.+
நாங்களும் எங்கள் முன்னோர்களும் எங்கள் கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை.
சிறுவயதிலிருந்தே அவர் பேச்சைக் கேட்கவில்லை.+
அதனால், இப்போது அவமானம் எங்கள் படுக்கையாகவும்,
வெட்கக்கேடு எங்கள் போர்வையாகவும் ஆகட்டும்!”
4 யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேலே, நீ அருவருப்பான சிலைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு,
மனம் திருந்தி என்னிடம் வந்தால்,
வேறொரு தேசத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்காது.+
2 ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லி,
உண்மையோடும் நியாயத்தோடும் நீதியோடும் நீ ஆணையிட்டுக் கொடுத்தால்,
தேசங்களில் உள்ள ஜனங்களுக்கு அவர்* மூலமாக ஆசீர்வாதம் கிடைக்கும்.
அவர்கள் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள்.”+
3 யூதா ஜனங்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் யெகோவா சொல்வது இதுதான்:
“பண்படுத்தப்படாத நிலத்தைப் பண்படுத்துங்கள்.
முட்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு விதை விதையுங்கள்.+
4 யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஜனங்களே,
யெகோவாவுக்கு முன்னால் உங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.*
கெட்ட எண்ணங்களை உள்ளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள்.+
அக்கிரமம் செய்வதை நீங்கள் நிறுத்தாவிட்டால்
என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+
அதை யாராலும் அணைக்க முடியாது.”
5 யூதாவிலும் எருசலேமிலும் இதை அறிவியுங்கள்.
தேசமெங்கும் முழக்கம் செய்து ஊதுகொம்பை ஊதுங்கள்.+
எல்லாரிடமும், “மதில் சூழ்ந்த நகரங்களுக்குத் தப்பியோடலாம்,+
எல்லாரும் வாருங்கள்.
6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள்.
பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+
7 புதருக்குள்ளிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல எதிரி பாய்ந்து வருவான்.+
தேசங்களை அழிக்கிறவன் புறப்பட்டுவிட்டான்.+
உங்கள் தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவர அவன் கிளம்பிவிட்டான்.
உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்; ஒருவன்கூட தப்பிக்க முடியாது.+
8 அதனால், துக்கத் துணி* போட்டுக்கொள்ளுங்கள்.+
அழுது* புலம்புங்கள்.
யெகோவாவுக்கு நம்மேல் இருக்கிற கோபம் இன்னும் தணியவில்லை.
9 “அந்த நாளில், ராஜா பீதியடைவான்.+
இளவரசர்கள் குலைநடுங்குவார்கள்.
குருமார்கள் அரண்டுபோவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்”+ என்று யெகோவா சொன்னார்.
10 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!+ நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று சொன்னீர்களே,+ ஆனால் நாங்கள் வாளுக்குப் பலியாகப்போகிறோமே” என்றேன்.
11 யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் அப்போது இப்படிச் சொல்லப்படும்:
“பாலைவனத்திலுள்ள குன்றுகளிலிருந்து காற்று வீசும்.
அது தானியங்களைப் புடைப்பதற்கோ சுத்தப்படுத்துவதற்கோ உதவுகிற காற்று அல்ல.
என் ஜனங்களைச் சுட்டெரிக்கப்போகிற அனல்காற்று.
12 என்னுடைய ஆணைப்படியே அது அங்கிருந்து பலமாக வீசும்.
இப்போது நான் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லப்போகிறேன்.
அவனுடைய குதிரைகள் கழுகுகளைவிட வேகமாகப் பாய்ந்து வரும்.+
ஐயோ! நம் கதி அவ்வளவுதான்!
14 எருசலேமே, நீ தப்பிக்க வேண்டுமென்றால் உன் உள்ளத்திலுள்ள அழுக்கைக் கழுவு.+
எவ்வளவு காலத்துக்குத்தான் கெட்டதையே யோசித்துக்கொண்டிருப்பாய்?
15 தாண் நகரத்திலிருந்து ஒரு குரல் செய்தியைச் சொல்கிறது.+
எப்பிராயீம் மலைகளிலிருந்து அது அழிவை அறிவிக்கிறது.
16 இதை எல்லா தேசங்களுக்கும் சொல்லுங்கள்.
எருசலேமுக்கு எதிராக அறிவிப்பு செய்யுங்கள்.”
“தொலைதூரத்திலிருந்து வீரர்கள்* வருகிறார்கள்.
அவர்கள் யூதா நகரங்களுக்கு எதிராகப் போர் முழக்கம் செய்வார்கள்.
17 அவர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து, வயல்வெளியைக் காவல்காக்கிறவர்கள் போல எருசலேமைச் சூழ்ந்துகொள்வார்கள்.+
ஏனென்றால், அங்கிருக்கிறவர்கள் எனக்கு அடங்கி நடப்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.
18 “உன்னுடைய கெட்ட வழிகளுக்கும் செயல்களுக்கும் சரியான கூலி கிடைக்கும்.+
உனக்குப் பயங்கரமான தண்டனை கொடுப்பேன்.
ஏனென்றால், எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே உன் உள்ளத்தில் இல்லை!” என்று அவர் சொல்கிறார்.
19 ஐயோ, வேதனை தாங்க முடியவில்லையே, வேதனை தாங்க முடியவில்லையே!
என் உள்ளம் வலியில் துடிதுடிக்கிறதே!
என் இதயம் படபடக்கிறதே.
என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?
ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கிறதே.+
20 அழிவுக்குமேல் அழிவு என்ற செய்திதான் வருகிறது.
தேசம் முழுவதும் நாசமாகிவிட்டது.
திடீரென்று என்னுடைய கூடாரங்கள் பாழாக்கப்படுகின்றன.
ஒரு நொடியில் என் கூடாரத் துணிகள் கிழிக்கப்படுகின்றன.+
21 எவ்வளவு காலத்துக்குத்தான் நான் கம்பத்தை* பார்த்துக்கொண்டே இருப்பேன்?
எவ்வளவு நேரம்தான் ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன்?+
அவர்கள் அறிவு இல்லாத பிள்ளைகள், புத்தி* இல்லாதவர்கள்.
கெட்டது செய்வதில் கெட்டிக்காரர்கள்.
ஆனால், நல்லது செய்யத் தெரியாதவர்கள்.”
23 தேசத்தைப் பார்த்தேன்; அது வெறுமையாகவும் பாழாகவும் கிடந்தது.+
வானத்தைப் பார்த்தேன்; அது இருண்டு கிடந்தது.+
இது யெகோவா கொடுத்த தண்டனை.
அவருடைய பயங்கரமான கோபத்தின் விளைவு.
நானே இதைச் சொன்னேன், சொன்னதைச் செய்யாமல் இருக்க மாட்டேன்.
நானே இதை முடிவுசெய்தேன், என் முடிவை மாற்றிக்கொள்ள* மாட்டேன்.+
29 குதிரைவீரர்களும் வில்வீரர்களும் வருகிற சத்தம் கேட்கிறது.
நகரத்திலுள்ள எல்லாருமே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.+
புதர்க் காடுகளுக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள்.
பாறை இடுக்குகளில் ஒளிந்துகொள்கிறார்கள்.+
நகரங்கள் எல்லாமே வெறிச்சோடிப் போய்விட்டது.
யாருமே அங்கு குடியிருப்பது இல்லை.”
30 நீ அழிந்துவிட்டாயே; இப்போது என்ன செய்வாய்?
ஆடம்பரமான உடைகளை உடுத்திக்கொண்டும்,
தங்க நகைகளைப் போட்டுக்கொண்டும்,
கண்களுக்கு மை தீட்டிக்கொண்டும் இருந்தாயே!
நீ அலங்காரம் செய்ததெல்லாம் வீணாகிப்போனதே!+
உன்மேல் மோகம் கொண்டவர்கள் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்களே!
இப்போது உன் உயிரையே எடுக்கத் துடிக்கிறார்களே!+
31 ஒரு பெண் வலியில் கதறுகிற சத்தம் கேட்கிறது.
முதல் குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண் அலறுவதுபோல் சத்தம் கேட்கிறது.
சீயோன் மகள் மூச்சுத் திணறுகிறாள்.
தன் கைகளை விரித்துக்கொண்டு,+
“ஐயோ, நான் தீர்ந்தேன்! கொலைவெறியர்களோடு போராடிப் போராடி
ஓய்ந்துபோய்விட்டேன்” என்று சொல்கிறாள்.
5 எருசலேமின் வீதிகளில் போய்த் தேடிப் பாருங்கள்.
நாலாபக்கங்களிலும் சுற்றிப் பாருங்கள்.
பொது சதுக்கங்களில் வலைவீசித் தேடுங்கள்.
நியாயத்தோடும் உண்மையோடும் நடக்கிற யாராவது இருக்கிறார்களா என்று பாருங்கள்.+
அப்படி ஒருவரையாவது கண்டுபிடித்தீர்கள் என்றால்,
நான் எருசலேமை மன்னித்துவிடுகிறேன்.
2 “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி அவர்கள் சத்தியம் செய்தாலும்,
பொய் சத்தியம்தான் செய்கிறார்கள்.+
3 யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+
இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை.
அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+
4 அப்போது நான் என்னுடைய மனதில், “இவர்கள் உண்மையிலேயே தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த ஜனங்கள்.
யெகோவாவின் வழிகளையும் சட்டதிட்டங்களையும் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை.
அதனால்தான் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
5 நான் இவர்களுடைய தலைவர்களிடம் போய்ப் பேசிப் பார்க்கிறேன்.
யெகோவாவின் வழிகளையும் சட்டதிட்டங்களையும்
அவர்களாவது பின்பற்றியிருக்க வேண்டும்.+
ஆனால், எல்லாருமே தங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு,
கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்” என்று சொல்லிக்கொண்டேன்.
6 அதனால்தான், காட்டிலுள்ள சிங்கம் அவர்கள்மேல் பாய்கிறது.
பாலைநிலத்தில் உள்ள ஓநாய் அவர்களைப் பீறிப்போடுகிறது.
அவர்களுடைய நகரவாசல்களில் சிறுத்தை காத்திருக்கிறது.
வெளியே வருகிற எல்லாரையும் கடித்துக் குதறுகிறது.
ஏனென்றால், அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.+
7 நான் உன்னை* எப்படி மன்னிப்பேன்?
உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள்.
தெய்வமே இல்லாதவற்றின் மேல் சத்தியம் செய்கிறார்கள்.+
அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
விபச்சாரியின் வீட்டுக்குத் திரண்டு போகிறார்கள்.
9 “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா?
இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?”+ என்று யெகோவா கேட்கிறார்.
10 “எருசலேமின் திராட்சைத் தோட்டத்து மதில்களை இடித்துப் போடுங்கள்.
ஆனால், எல்லாவற்றையும் அடியோடு அழித்துவிடாதீர்கள்.+
திராட்சைக் கொடிகளின் புதிய கிளைகளை முறித்துப் போடுங்கள்.
ஏனென்றால், அவை யெகோவாவுக்குச் சொந்தமானவை அல்ல.
11 இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும்
எனக்குப் பெரிய துரோகம் செய்துவிட்டார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+
நமக்கு எந்த ஆபத்தும் வராது.
போரினாலோ பஞ்சத்தினாலோ நாம் சாக மாட்டோம்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
13 தீர்க்கதரிசிகளின் இதயத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை.
அவர்கள் வெற்று வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
அவர்களுடைய வார்த்தைகளைப் போலவே அவர்களும் உதவாமல் போய்விடுவார்கள்!”
14 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்:
“இவர்கள் இப்படிச் சொல்வதால்,
நான் உன்* வாயில் வைத்த என் வார்த்தைகளைத் தீ போல ஆக்குவேன்.+
அந்தத் தீ இந்த ஜனங்களைச் சுட்டுப்பொசுக்கும்.
இவர்கள் விறகுபோல் எரிந்துபோவார்கள்.”+
15 “இஸ்ரவேல் ஜனங்களே, நான் தொலைதூரத்திலிருந்து ஒரு தேசத்தை உங்களுக்கு எதிராக வர வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“அது பழங்காலத்தில் உருவான தேசம்.
காலம்காலமாக இருக்கிற தேசம்.
அந்தத் தேசத்து ஜனங்களின் பாஷை உங்களுக்குத் தெரியாது.
அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாது.+
17 அவர்கள் உங்களுடைய விளைச்சலையும் உணவையும் தின்றுதீர்ப்பார்கள்.+
உங்கள் மகன்களையும் மகள்களையும் கொன்றுவிடுவார்கள்.
உங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கைப்பற்றுவார்கள்.
உங்கள் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் வெட்டிப்போடுவார்கள்.
நீங்கள் நம்பியிருக்கிற மதில் சூழ்ந்த நகரங்களைத் தாக்கி நாசமாக்கிவிடுவார்கள்.”
18 “அந்தச் சமயத்தில்கூட நான் உங்களை அடியோடு அழித்துவிட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 19 “அவர்கள் உன்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவா ஏன் எங்களுக்கு இப்படியெல்லாம் செய்துவிட்டார்?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவரை விட்டுவிட்டு வேறு தெய்வங்களுக்கு அடிபணிந்ததால், உங்கள் தேசத்திலிருந்து வேறு தேசத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஜனங்களுக்கு அடிபணிந்து நடப்பீர்கள்’+ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.”
20 யாக்கோபின் வம்சத்தாரிடமும்,
யூதாவில் இருக்கிறவர்களிடமும் இப்படிச் சொல்:
21 “புத்தி இல்லாத முட்டாள் ஜனங்களே, கேளுங்கள்!+
22 ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.
‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா?
நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?
நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்?
கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.
அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+
23 இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள், அடங்காதவர்கள்.*
என் வழியை விட்டுவிட்டு அவர்களுக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.+
24 அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,
“இப்போது நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கலாம்” என்று சொல்வதே இல்லை.
“அவர்தான் அந்தந்த காலத்தில் மழை பெய்ய வைக்கிறார்,
முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருகிறார்,
அறுவடை செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தருகிறார்”+ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.
25 நீங்கள் குற்றம் செய்ததால்தானே இதெல்லாம் உங்களுக்குக் கிடைக்காமல் போனது?
நீங்கள் பாவங்கள் செய்ததால்தானே நல்லதையெல்லாம் அனுபவிக்க முடியாமல் போனது?+
26 என் ஜனங்களின் நடுவில் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பறவைகளைப் பிடிக்கிற வேடர்களைப் போலப் பதுங்கியிருக்கிறார்கள்.
பயங்கரமான கண்ணிகளை வைக்கிறார்கள்.
மனுஷர்களைப் பிடிக்கிறார்கள்.
இப்படிக் குறுக்கு வழியில்தான் அவர்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் சம்பாதித்திருக்கிறார்கள்.
28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.
கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள்.
அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+
சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.
ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+
29 “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா?
இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?” என்று யெகோவா கேட்கிறார்.
30 “அதிர்ச்சி தரும் படுமோசமான காரியம் தேசத்தில் நடந்துவருகிறது:
31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+
குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.
என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+
ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”
6 பென்யமீன் ஜனங்களே, எருசலேமிலிருந்து தப்பித்து ஓடுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேராபத்தும் பேரழிவும் வந்துகொண்டிருக்கிறது.+
2 செல்லமாக வளர்க்கப்பட்ட ஓர் அழகான பெண்ணைப் போல் சீயோன் மகள் இருக்கிறாள்.+
3 மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வருவார்கள்.
4 “அவளுக்கு எதிராகப் போர் செய்யத் தயாராகுங்கள்!
வாருங்கள், உச்சி வேளையில் அவளைத் தாக்கலாம்!”
“ஐயோ, பொழுது சாய்கிறதே,
இருட்டாகப் போகிறதே!”
6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+
அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+
எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோ
அப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள்.
வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+
எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!
8 எருசலேமே, எச்சரிக்கையைக் கேள்! இல்லாவிட்டால் அருவருப்போடு உன்னைவிட்டு விலகிப்போவேன்.+
உன் தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன்.”+
9 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“திராட்சைக் கொடியில் கடைசியாக மிஞ்சியிருக்கிற பழங்களைப் போல இஸ்ரவேலர்களில் சிலர் மிஞ்சியிருக்கிறார்கள்.
திராட்சைப் பழங்களைக் கூடைகளில் சேகரிப்பது போல நீ மறுபடியும் அவர்களைச் சேகரிக்க வேண்டும்.”
10 “நான் யாரிடம் பேசுவது? யாரை எச்சரிப்பது?
நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
அவர்களுடைய காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன; அவர்களால் எப்படிக் கவனித்துக் கேட்க முடியும்?+
யெகோவாவின் வார்த்தையை அவர்கள் கேலி செய்கிறார்கள்.+
அதைக் கேட்க அவர்கள் விரும்புவதே இல்லை.
11 அதனால், யெகோவாவைப் போலவே எனக்கும் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.
என்னால் அதை அடக்கவே முடியவில்லை.”+
“தெருவில் இருக்கிற பிள்ளைகள்மேலும்,+
கூடியிருக்கிற வாலிபர்கள்மேலும் கோபத்தைக் கொட்டு.
கணவர்கள், மனைவிகள், மூத்தவர்கள்,
வயதானவர்கள் எல்லாருமே கைப்பற்றப்படுவார்கள்.+
தேசத்திலுள்ள எல்லா ஜனங்களையும் நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+
தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.
15 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?
இல்லவே இல்லை!
வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+
அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.
நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
16 “சாலை சந்திப்புகளில் நின்று பாருங்கள்.
உங்கள் முன்னோர்கள் நடந்த பாதைகளை* பற்றி விசாரியுங்கள்.
நல்ல பாதை எதுவென்று கேட்டு அதில் நடங்கள்.+
அப்போது, உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால் அவர்கள், “அந்தப் பாதையில் போக மாட்டோம்” என்று சொல்கிறார்கள்.+
17 “நான் காவல்காரர்களை நியமித்தேன்.+
ஜனங்களிடம் அவர்கள், ‘ஊதுகொம்பின் சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’+ என்று சொன்னார்கள்.”
ஆனால் ஜனங்கள், “நாங்கள் கேட்க மாட்டோம்” என்று சொன்னார்கள்.+
18 “அதனால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.
தேசங்களே, கேளுங்கள்.
ஜனங்களே, தெரிந்துகொள்ளுங்கள்.
19 பூமியெங்கும் உள்ளவர்களே, கேளுங்கள்!
இந்த ஜனங்கள் என் பேச்சைக் கேட்காமல்
என் சட்டத்தை* அசட்டை பண்ணினார்கள்.
கெட்ட யோசனைகளின்படி நடந்ததால் அவர்களை நான் தண்டிக்கப்போகிறேன்.”+
20 “நீங்கள் சேபாவிலிருந்து சாம்பிராணியைக் கொண்டுவந்தாலும் சரி,
தூர தேசத்திலிருந்து வசம்பைக் கொண்டுவந்தாலும் சரி, எனக்கு என்ன?
உங்களுடைய தகன பலிகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நீங்கள் எந்தப் பலியைச் செலுத்தினாலும் நான் சந்தோஷப்பட மாட்டேன்.”+
21 யெகோவா சொல்வது இதுதான்:
“நான் இந்த ஜனங்களுக்கு முன்பாக முட்டுக்கட்டைகளை வைப்பேன்.
அவர்கள் தடுக்கி விழுவார்கள்.
தகப்பன்களும் சரி, மகன்களும் சரி,
அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் சரி, அவர்களுடைய நண்பர்களும் சரி,
எல்லாரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள்.”+
22 யெகோவா சொல்வது இதுதான்:
“வடக்கு தேசத்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வருகிறது.
பூமியின் தொலைதூரத்திலிருந்து மாபெரும் தேசம் எழும்பி வருகிறது.+
23 அந்த ஜனங்கள் வில்லையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.
அவர்கள் ஈவிரக்கமே இல்லாத கொடூரர்கள்.
அவர்களுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போல இருக்கும்.
அவர்கள் குதிரைகளின் மேல் வருவார்கள்.+
சீயோன் மகளே, அவர்கள் போர்வீரர்களைப் போல அணிவகுத்து வந்து உன்னைத் தாக்குவார்கள்.”
24 அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து
25 வயல்வெளிக்குப் போகாதீர்கள்.
சாலையில் நடக்காதீர்கள்.
ஏனென்றால், எதிரி வாளோடு அலைந்துகொண்டிருக்கிறான்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்துதான்.
26 என் ஜனங்களே, துக்கத் துணி*+ போட்டுக்கொண்டு சாம்பலில் புரளுங்கள்.
ஒரே மகனைப் பறிகொடுத்தது போல அழுது புலம்புங்கள்.+
ஏனென்றால், எதிரி திடீரென்று வந்து நம்மை அழித்துவிடுவான்.+
27 “வெள்ளியைப் புடமிடுகிறவனைப் போல நான் உன்னை* ஆக்கியிருக்கிறேன்.
நீ என் ஜனங்களைப் புடமிட வேண்டும்.
அவர்களை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.
அவர்களுடைய வழிகளை உற்றுக் கவனிக்க வேண்டும்.
28 அவர்கள் எல்லாரும் பயங்கரமான பிடிவாதக்காரர்கள்.+
மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்கள்.+
அவர்கள் செம்பையும் இரும்பையும் போல இருக்கிறார்கள்.
எல்லாருமே சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.
29 அவர்களைப் புடமிடுவதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் புடமிடும் கருவிதான் எரிந்துபோகிறது,*
நெருப்பிலிருந்து ஈயம்தான் வருகிறது.
30 தள்ளுபடியான* வெள்ளி என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
ஏனென்றால், யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார்.”+
7 எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்: 2 “யெகோவாவாகிய என்னுடைய ஆலயத்தின் நுழைவாசலில் நின்று இந்தச் செய்தியை எல்லாருக்கும் சொல்: ‘யெகோவாவை வணங்குவதற்காக இந்த நுழைவாசலைத் தாண்டி வருகிற யூதா ஜனங்களே, யெகோவா இப்போது சொல்வதைக் கேளுங்கள். 3 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். அப்போது, இந்தத் தேசத்திலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு நான் அனுமதிப்பேன்.+ 4 ஏமாற்று வார்த்தைகளை நம்பி, ‘இது யெகோவாவின் ஆலயம்! யெகோவாவின் ஆலயம்! யெகோவாவின் ஆலயம்!’+ என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். 5 உண்மையிலேயே கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்தினால், மற்றவர்களுடைய வழக்குகளில் நியாயத்துக்காக வாதாடினால்,+ 6 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும், அப்பா இல்லாத பிள்ளைகளையும்,* விதவைகளையும்+ கொடுமைப்படுத்தாமல் இருந்தால், அப்பாவிகளைக் கொலை செய்யாமல் இருந்தால், மற்ற தெய்வங்களை வணங்கி உங்களுக்கே கெடுதலைத் தேடிக்கொள்ளாமல் இருந்தால்,+ 7 நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்திலேயே நீங்கள் என்றென்றும் வாழ்வதற்கு அனுமதிப்பேன்.”’”
8 “ஆனால், மற்றவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்;+ அந்தப் பொய்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. 9 நீங்கள் திருட்டும்,+ கொலையும், மணத்துணைக்குத் துரோகமும், பொய் சத்தியமும் செய்துகொண்டு,+ பாகாலுக்குத் தகன பலி செலுத்திக்கொண்டு,*+ முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். 10 நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா? 11 என் பெயர் தாங்கிய இந்த ஆலயம் கொள்ளைக்காரர்களின் குகையைப் போல உங்களுக்குத் தெரிகிறதோ?+ உங்களுடைய அட்டூழியங்களை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.
12 “‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை.+ உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.+ 13 அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். 14 ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன். 15 உங்கள் சகோதரர்களான எப்பிராயீமியர்களை நான் ஒதுக்கித்தள்ளியதைப் போலவே உங்கள் எல்லாரையும் என் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளுவேன்.’+
16 நீ இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யக் கூடாது. அவர்களுக்காக வேண்டிக்கொள்ளவோ கெஞ்சிக் கதறவோ கூடாது.+ நான் அதைக் கேட்க மாட்டேன்.+ 17 யூதா நகரத்திலும் எருசலேமின் வீதிகளிலும் ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்று நீ பார்க்கவில்லையா? 18 விண்ணரசிக்காக*+ படையல் அப்பங்களைச் செய்வதற்குப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள். தகப்பன்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மனைவிகள் மாவு பிசைகிறார்கள். என் கோபத்தைக் கிளறுவதற்காக மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்.+ 19 ‘ஆனால், இப்படிச் செய்வதால் என்னையா வேதனைப்படுத்துகிறார்கள்?* தங்களுக்குத்தானே வேதனையையும் அவமானத்தையும் வர வைத்துக்கொள்கிறார்கள்?’+ என்று யெகோவா சொல்கிறார். 20 அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
21 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘போங்கள், இஷ்டம்போல் பலிகளுக்குமேல் பலிகளைச் செலுத்துங்கள்; அந்தத் தகன பலிகளை நீங்களே சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.+ 22 எகிப்திலிருந்து உங்கள் முன்னோர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தபோது தகன பலிகளைப் பற்றியோ மற்ற பலிகளைப் பற்றியோ நான் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை,+ அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. 23 ஆனால், “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அப்போது நான் உங்கள் கடவுளாக இருப்பேன், நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ என்னுடைய எல்லா கட்டளைகளின்படியும் நீங்கள் நடக்க வேண்டும். அப்போது, சந்தோஷமாக வாழ்வீர்கள்”+ என்று மட்டும் சொன்னேன்.’ 24 அவர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை.+ அதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டங்களின்படியே நடந்தார்கள், தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ முன்னோக்கிப் போவதற்குப் பதிலாகப் பின்னோக்கியே போனார்கள். 25 உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இந்த நாள்வரை நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது.+ நான் என்னுடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகள் எல்லாரையும் தினமும் அனுப்பினேன்; திரும்பத் திரும்ப அனுப்பினேன்.+ 26 ஆனால், அவர்கள் எதையுமே காதில் வாங்கவில்லை.+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்!
27 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களிடம் சொன்னாலும்+ அவர்கள் கேட்க மாட்டார்கள். நீ அவர்களைக் கூப்பிட்டாலும் அவர்கள் பதில் பேச மாட்டார்கள். 28 நீ அவர்களிடம், ‘நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போன ஜனங்கள், அவர் கண்டித்தும் திருந்தாமல்போன ஜனங்கள். உங்களில் யாருமே உண்மைத்தன்மையோடு நடக்கவில்லை. உண்மைத்தன்மை என்ற வார்த்தை உங்கள் வாயில் வருவதுகூட இல்லை’+ என்று சொல்.
29 உங்களுடைய நீளமான* தலைமுடியை வெட்டி எறியுங்கள். குன்றுகளில் புலம்பல் பாட்டைப் பாடுங்கள். ஏனென்றால், யெகோவா இந்தத் தலைமுறையை வெறுத்து ஒதுக்கிவிட்டார். நீங்கள் எல்லாரும் அவருடைய கோபத்தைக் கிளறிவிட்டீர்கள். 30 ‘யூதா ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘என்னுடைய பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 31 பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்கில்* இருக்கிற தோப்பேத்தில்* ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ அப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. அந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’+
32 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘நாட்கள் வரும். அப்போது இந்த இடம் தோப்பேத் என்றோ பென்-இன்னோம் பள்ளத்தாக்கு* என்றோ அழைக்கப்படாமல், படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படும். இறந்தவர்கள் தோப்பேத்தில் புதைக்கப்படுவார்கள். புதைப்பதற்கு இடமே இல்லாத அளவுக்கு அங்கே பிணங்கள் குவிந்திருக்கும்.+ 33 இந்த ஜனங்களுடைய பிணங்கள் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கும் பூமியில் நடமாடுகிற மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+ 34 யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது. மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காது.+ ஏனென்றால், நான் இந்தத் தேசத்தை அழித்து சின்னாபின்னமாக்குவேன்.’”+
8 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தச் சமயத்தில் யூதாவுடைய ராஜாக்கள், அதிகாரிகள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், எருசலேம் ஜனங்கள் எல்லாருடைய எலும்புகளும் அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்டு, 2 சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் முன்பாகப் பரப்பி வைக்கப்படும். இந்த வானத்துப் படைகளைத்தானே அவர்கள் ஆசை ஆசையாக வணங்கினார்கள்!+ பக்தியோடு கும்பிட்டார்கள்! உதவிக்காகக் கூப்பிட்டார்கள்! அவர்களுடைய எலும்புகள் அள்ளப்படாமலும் புதைக்கப்படாமலும் அப்படியே விடப்பட்டு, நிலத்தில் எருவாகிவிடும்.”+
3 “இந்தப் பொல்லாத ஜனங்களில் மிச்சம்மீதி இருப்பவர்களை நான் சிதறிப்போக வைப்பேன். அவர்கள் எங்கே போனாலும் வாழ்வதைவிட சாவதையே விரும்புவார்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
4 “நீ அவர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால்,
“விழுந்தவர்கள் எழுந்திருப்பது இல்லையா?
ஒருவர் மனம் மாறினால் மற்றவரும் மனம் மாற மாட்டாரா?
5 ஆனால், இந்த எருசலேம் ஜனங்கள் ஏன் எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்?
அவர்கள் பித்தலாட்டத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள்.
மனம் மாற மறுக்கிறார்கள்.+
6 அவர்கள் பேசுவதையெல்லாம் நான் கவனித்துக் கேட்டேன். அவர்கள் நியாயமாகப் பேசவில்லை.
அக்கிரமங்கள் செய்ததற்காக ஒருவன்கூட மனம் வருந்தி, ‘இப்படிச் செய்துவிட்டேனே!’ என்று சொல்லவில்லை.+
மற்றவர்கள் போகிற கெட்ட வழிக்கே அவர்களும் திரும்பத் திரும்பப் போகிறார்கள்; ஒரு குதிரை போர்க்களத்துக்குள் பாய்ந்தோடுவதைப் போல அவர்களும் அந்த வழிக்கே பாய்ந்தோடுகிறார்கள்.
7 ஒரு சாதாரண நாரைக்குக்கூட இடம்பெயர வேண்டிய காலம் தெரியும்.
காட்டுப் புறாவுக்கும் உழவாரக் குருவிக்கும் புதர்ச் சிட்டுக்கும்கூட* திரும்பிவர* வேண்டிய காலம் தெரியும்.
ஆனால் என்னுடைய ஜனங்களுக்கு, யெகோவாவாகிய நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கப்போகும் காலத்தைப் பற்றித் தெரியவில்லை.”’+
8 ‘“நாங்கள் புத்திசாலிகள், யெகோவாவின் சட்டம்* எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
எழுத்தர்களின்* கள்ள எழுத்தாணி+ பொய்யை மட்டுமே எழுதிவந்திருக்கிறது.
9 ஞானிகள் அவமானம் அடைந்திருக்கிறார்கள்;+ கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்.
யெகோவாவின் வார்த்தையை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள்.
அவர்களுக்குக் கொஞ்சமாவது ஞானம் இருக்கிறதா?
10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்
மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+
சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+
தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.
12 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?
இல்லவே இல்லை!
வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+
அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.
நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.
13 ‘நான் அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
‘திராட்சைக் கொடியில் ஒரு குலைகூட இருக்காது, அத்தி மரத்தில் ஒரு பழம்கூட மிஞ்சாது. அவற்றின் இலைகளெல்லாம் உதிர்ந்துவிடும்.
நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லாமே அவர்களுடைய கையைவிட்டு நழுவிப்போகும்.’”
14 “நாம் ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்?
நாம் எல்லாரும் சேர்ந்து மதில் சூழ்ந்த நகரங்களுக்குப் போய்,+ அங்கே செத்துப்போகலாம்.
நாம்தான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோமே!
அதனால், நம் கடவுளாகிய யெகோவா நமக்கு விஷம் கலந்த தண்ணீரைக் கொடுக்கிறார்.+
அவர் நம்மைக் கொல்லப்போகிறார்.
15 சமாதானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.
குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+
16 தாண் நகரத்தில் எதிரிகளின் குதிரைகள் சீறுகிற சத்தம் கேட்கிறது.
வீரியமுள்ள குதிரைகள்* கனைக்கும் சத்தத்தில் தேசமே அதிருகிறது.
அந்த எதிரிகள் வந்து தேசத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்.
நகரத்தையும் அதன் ஜனங்களையும் அழிப்பார்கள்.”
17 “நான் உங்கள் நடுவே பாம்புகளை அனுப்பப்போகிறேன்.
அவை மகுடி ஊதினாலும் மயங்காத விஷப் பாம்புகள்.
அவை கண்டிப்பாக உங்களைக் கடிக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.
18 என் நெஞ்சு வலிக்கிறது.
என் வேதனை தீரவே தீராது.
19 தூர தேசத்திலிருந்து என் ஜனங்கள்
உதவி கேட்டு அலறுகிறார்கள்.
“யெகோவா சீயோனில் இல்லையா?
அவளுடைய ராஜா அங்கிருந்து போய்விட்டாரா?” என்று புலம்புகிறார்கள்.
“ஆனால், அவர்கள் ஒன்றுக்கும் உதவாத பொய் தெய்வங்களின் சிலைகளை வணங்கி
என் கோபத்தை ஏன் கிளறுகிறார்கள்?”
20 “அறுவடை முடிந்துவிட்டது, கோடைக் காலமும் முடிந்துவிட்டது.
ஆனால், நமக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லையே!”
எனக்கு எல்லாமே வெறுத்துப்போய்விட்டது.
22 கீலேயாத்தில் பரிமளத் தைலமே* இல்லையா?+
வைத்தியம் பார்க்க ஒருவர்கூட இல்லையா?+
என் ஜனங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?+
அப்போது, கொலை செய்யப்பட்ட என் ஜனங்களை நினைத்து
ராத்திரி பகலாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பேனே!
2 வனாந்தரத்தில் எனக்கு ஒரு சத்திரம் இருக்கக் கூடாதா?
அப்போது, நான் என்னுடைய ஜனங்களை விட்டுவிட்டுப் போய்விடுவேனே!
ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+
நம்பியவரை ஏமாற்றுகிற கும்பலாக இருக்கிறார்கள்.
3 வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல அவர்களுடைய வாயிலிருந்து பொய்கள் புறப்படுகின்றன.
தேசத்தில் உண்மையே இல்லை, பொய்களுக்குப் பஞ்சமே இல்லை.+
“அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.
என் பேச்சைக் கேட்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.
4 “நீங்கள் எல்லாரும் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்.
உங்கள் சகோதரனைக்கூட நம்பாதீர்கள்.
எல்லாருமே நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்.+
மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறார்கள்.+
5 ஒவ்வொருவனும் அடுத்தவனை ஏமாற்றுகிறான்.
யாருமே உண்மை பேசுவதில்லை.
பொய் பேசுவதற்குத்தான் தங்கள் நாவைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.+
கெட்டதைச் செய்து செய்தே களைத்துப்போயிருக்கிறார்கள்.
6 நீ மோசடிக்காரர்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.
அவர்கள் மோசடி செய்வதில் ஊறிப்போயிருப்பதால் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை” என்று யெகோவா சொல்கிறார்.
7 அதனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“நான் அவர்களைப் புடமிட்டுச் சுத்தமாக்குவேன்.+
என் ஜனங்களை நான் வேறு என்னதான் செய்ய முடியும்?
8 பொய் பேசுகிற அவர்களுடைய நாவுகள் விஷ அம்புகள்.
மற்றவர்களிடம் இனிக்க இனிக்கப் பேசுகிறார்கள்.
ஆனால், கெடுதல் செய்வதற்குத்தான் மனதில் திட்டம் போடுகிறார்கள்.”
9 “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா?
இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?”+ என்று யெகோவா கேட்கிறார்.
10 “நான் மலைகளைப் பார்த்து அழுது புலம்புவேன்.
வனாந்தரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவேன்.
ஏனென்றால், அவை கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன; அங்கே மனுஷ நடமாட்டம் இல்லை.
ஆடுமாடுகளின் சத்தம்கூட கேட்பதில்லை.
பறவைகள் அங்கிருந்து பறந்து போய்விட்டன, மிருகங்களும் ஓடிவிட்டன.+
11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+
யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+
12 இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானம் உள்ளவர் யார்?
இதையெல்லாம் ஜனங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று யெகோவா யாரிடம் சொன்னார்?
தேசம் ஏன் அழிந்துபோனது? அது ஏன் நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டது?
அது ஏன் வனாந்தரத்தைப் போலக் காய்ந்து கருகிக் கிடக்கிறது?
ஏன் மனுஷ நடமாட்டமே இல்லாமல் போனது?”
13 யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் என் சட்டத்தை* கடைப்பிடிக்காமல் அசட்டை செய்தார்கள். என் பேச்சை மீறினார்கள். 14 தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அவர்களுடைய முன்னோர்கள் கற்றுக்கொடுத்தபடியே பாகாலின் சிலைகளை வணங்கினார்கள்.+ 15 அதனால், இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும் குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+ 16 இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+
புலம்பல் பாட்டுப் பாடும் பெண்களை வரச் சொல்லுங்கள்.+
திறமையான புலம்பல்காரிகளுக்குச் சொல்லி அனுப்புங்கள்.
18 அவர்கள் சீக்கிரமாக வந்து நமக்காக அழுது புலம்பட்டும்.
அதைக் கேட்டு நம் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டட்டும்.
தாரை தாரையாக வழிந்தோடட்டும்.+
19 ஜனங்கள் இப்படிப் புலம்புகிற சத்தம் சீயோனில் கேட்கிறது:+
“நம் வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டதே!
அவமானம் தாங்க முடியவில்லையே!
எதிரிகள் நம் வீடுகளை இடித்துவிட்டார்களே!
தேசத்தைவிட்டே நம்மைத் துரத்திவிட்டார்களே!”+
20 பெண்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.
அவருடைய வார்த்தைகளை நம்புங்கள்.
இந்தப் புலம்பல் பாட்டை உங்கள் மகள்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
மற்ற பெண்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.+
21 ஏனென்றால், வீதிகளில் விளையாடுகிற பிள்ளைகளைப் பறித்துக்கொண்டு போவதற்காகவும்,
பொது சதுக்கங்களில் உள்ள வாலிபர்களை வாரிக்கொண்டு போவதற்காகவும்,
சாவு நம்முடைய ஜன்னல் வழியாக வந்துவிட்டது.
நம்முடைய கோட்டைகளுக்குள் நுழைந்துவிட்டது.’+
22 நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்:
“ஜனங்களுடைய பிணங்கள் எருவைப் போல நிலத்தில் கிடக்கும்.
அறுத்துப் போடப்பட்ட கதிர்களைப் போலக் கிடக்கும்.
அவற்றை எடுக்க யாருமே வர மாட்டார்கள்.”’”+
23 யெகோவா சொல்வது இதுதான்:
“ஞானி தன்னுடைய ஞானத்தைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.+
பலசாலி தன்னுடைய பலத்தைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.
பணக்காரன் தன்னுடைய சொத்துகளைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.”+
24 யெகோவா சொல்வது இதுதான்: “யாராவது பெருமை பேச விரும்பினால்,
என்னைப் பற்றிய அறிவும் ஆழமான புரிந்துகொள்ளுதலும் இருப்பதைப் பற்றியே பெருமை பேசட்டும்.+
யெகோவாவாகிய நான் மாறாத அன்பையும் நியாயத்தையும் நீதியையும் காட்டுகிற கடவுள் என்று பெருமையாகச் சொல்லட்டும்.+
இவற்றை நான் விரும்புகிறேன்.”+
25 யெகோவா சொல்வது இதுதான்: “நாட்கள் வரும்; அப்போது, உடலில் விருத்தசேதனம் செய்தும் உள்ளத்தில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிற எல்லாரையும் நான் தண்டிப்பேன்.+ 26 எகிப்தையும்+ யூதாவையும்+ ஏதோமையும்+ மோவாபையும்,+ அம்மோனியர்களையும்+ நான் தண்டிப்பேன். நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொண்டு வனாந்தரத்தில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன்.+ ஏனென்றால், இஸ்ரவேலைச் சேராத இந்த ஜனங்கள் எல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் உள்ளத்தில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிறார்கள்.”+
10 இஸ்ரவேல் ஜனங்களே, உங்களுக்கு எதிராக யெகோவா சொல்லும் செய்தியைக் கேளுங்கள். 2 யெகோவா சொல்வது இதுதான்:
“மற்ற தேசத்தாரின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதீர்கள்.+
அவர்கள் வானத்திலுள்ள அடையாளங்களைப் பார்த்துப் பயப்படுவதைப் போல
நீங்கள் பயப்படாதீர்கள்.+
3 அந்த ஜனங்களுடைய சம்பிரதாயங்கள் வீணானவை.
கைத்தொழிலாளிகள் காட்டிலுள்ள மரத்தை வெட்டுகிறார்கள்.
பின்பு, அதைச் செதுக்கி சிலை செய்கிறார்கள்.+
4 வெள்ளியினாலும் தங்கத்தினாலும் அந்தச் சிலையை அலங்கரிக்கிறார்கள்.+
அது விழாமல் இருப்பதற்காக ஆணிகள் வைத்து சுத்தியால் அடிக்கிறார்கள்.+
5 அந்தச் சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கின்றன; அவற்றால் பேச முடியாது.+
அவற்றால் நடக்கவும் முடியாது; யாராவது சுமந்துகொண்டுதான் போக வேண்டும்.+
அவற்றைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; ஏனென்றால், அவற்றால் கெட்டது செய்ய முடியாது.
அவற்றால் நல்லது செய்யவும் முடியாது.”+
6 யெகோவாவே, உங்களைப் போல யாருமே இல்லை.+
நீங்கள் மகத்தானவர்; உங்கள் பெயர் மகத்தானது, மிகுந்த வல்லமை உள்ளது.
7 தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?
உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்
உங்களைப் போல் யாருமே இல்லை.+
8 அவர்கள் எல்லாருமே புத்தியில்லாதவர்கள், முட்டாள்கள்.+
மரச் சிலைகளைப் பார்த்து அறிவுரை கேட்பது சுத்த வீண்.+
9 தர்ஷீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்+ ஊப்பாசிலிருந்து தங்கமும் வர வைக்கப்படுகின்றன.
அவற்றால் கைத்தொழிலாளிகளும் ஆசாரிகளும் அந்தச் சிலைகளுக்குத் தகடு அடிக்கிறார்கள்.
ஜனங்கள் அவற்றுக்கு நீல நிறத் துணிகளையும் ஊதா நிறத் துணிகளையும் போட்டுவிடுகிறார்கள்.
அவை எல்லாமே திறமைசாலிகளின் கைவேலைப்பாடுகள்.
10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள்.
அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+
அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+
அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
11 *அவர்களிடம் நீ இப்படிச் சொல்:
“வானத்தையும் பூமியையும் படைக்காத தெய்வங்கள்
வானத்தின் கீழோ பூமியிலோ இல்லாதபடி ஒழிந்துபோகும்.”+
12 உண்மையான கடவுள்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்.
தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார்.+
13 அவர் குரல் கொடுக்கும்போது
வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*+
பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.+
14 மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள்.
சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப்போவார்கள்.+
அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை.
உயிர்மூச்சே இல்லாதவை.+
15 அவை ஒன்றுக்கும் உதவாதவை, கேலிக்குரியவை.+
கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் நாளில் அவை அழிந்துபோகும்.
16 யாக்கோபின் கடவுளோ அந்தச் சிலைகளைப் போன்றவர் அல்ல.
அவர்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
இஸ்ரவேல்தான் அவருடைய விசேஷ சொத்து.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+
17 சுற்றிவளைக்கப்பட்ட பெண்ணே,
தரையில் கிடக்கிற உன் சாமான்களை மூட்டைகட்டு.
18 ஏனென்றால், யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“இதோ, தேசத்தில் இருக்கிற எல்லாரையும் நான் துரத்தியடிப்பேன்.+
அவர்களை அவதிப்பட வைப்பேன்.”
19 ஐயோ! எனக்குக் காயமாகிவிட்டது!*+
என்னுடைய புண் ஆறவே ஆறாது.
நான் இப்படிச் சொன்னேன்: “இது எனக்கு வந்திருக்கிற நோய், இதை நான் சகித்தே தீர வேண்டும்.
20 என்னுடைய கூடாரம் நாசமாக்கப்பட்டது; என் கூடாரக் கயிறுகள் அறுத்தெறியப்பட்டன.+
என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் இங்கே இல்லை.+
என் கூடாரத்தை எடுத்து நிறுத்துவதற்கோ இழுத்துக் கட்டுவதற்கோ யாருமே இல்லை.
22 கேளுங்கள்! செய்தியைக் கேளுங்கள்!
வடக்கு தேசத்திலிருந்து ஏராளமான வீரர்கள் திமுதிமுவென்று வருகிறார்கள்!+
யூதாவைப் பாழாக்கி, நரிகளின் குகைபோல் ஆக்குவதற்காகப் படைதிரண்டு வருகிறார்கள்.+
23 யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை* இல்லை என்றும்,
தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.+
24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.
25 உங்களை அசட்டை செய்கிற தேசங்கள்மேலும்+
உங்கள் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத குடும்பங்கள்மேலும் உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.
ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.+
அவர்களை அடியோடு அழிக்கப் பார்த்தார்கள்.+
அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+
11 எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர், 2 “நான் செய்த ஒப்பந்தத்தின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வேண்டும்.
யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களிடம் நீ* இப்படிச் சொல்: 3 ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: 4 “இரும்பு உலை போன்ற+ எகிப்திலிருந்து நான் உங்கள் முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தபோது அவர்களிடம்,+ ‘என் பேச்சைக் கேட்டு நடங்கள், என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். அப்போது, நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ 5 அதோடு, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தைத்+ தருவதாக உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்’ என்று சொன்னதை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். அதனால், என் ஒப்பந்தத்தை மீறுகிற எவனும் சபிக்கப்படுவான்”’+ என்றார்.”
அதற்கு நான், “ஆமென்,* யெகோவாவே” என்று சொன்னேன்.
6 அப்போது யெகோவா என்னிடம், “நீ யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இருக்கிற எல்லாரிடமும், ‘நீங்கள் கேட்ட இந்த ஒப்பந்தத்தின்படி நடங்கள். 7 உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து இன்றுவரை நான் எச்சரிப்பு கொடுத்து வந்திருக்கிறேன். “என் பேச்சைக் கேட்டு நடங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.+ 8 ஆனால், உங்கள் முன்னோர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அதனால், நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காமல்போன இந்த ஒப்பந்தத்தின் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குப் பலிக்கும்படி செய்தேன்’ என்று அறிவிப்பு செய்” என்றார்.
9 பின்பு யெகோவா என்னிடம், “யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்கள் சதி செய்கிறார்கள். 10 அவர்களுடைய முன்னோர்கள் என் பேச்சைக் கேட்காமல் பல குற்றங்கள் செய்ததைப் போலவே இவர்களும் செய்கிறார்கள்.+ பொய் தெய்வங்களைப் பக்தியோடு கும்பிடுகிறார்கள்.+ இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்த ஒப்பந்தத்தை மீறுகிறார்கள்.+ 11 அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவர்களை அழிக்கப்போகிறேன்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது. உதவிக்காக அவர்கள் என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.+ 12 அப்போது, யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் எந்தத் தெய்வங்களுக்குத் தகன பலிகள் செலுத்தினார்களோ* அந்தத் தெய்வங்களிடம் போய்க் கதறுவார்கள்.+ ஆனால், அந்தத் தெய்வங்களால் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது. 13 யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன. எருசலேமின் வீதிகளைப் போல உங்கள் பலிபீடங்களும் ஏராளமாகிவிட்டன. வெட்கங்கெட்ட தெய்வமாகிய பாகாலுக்குத் தகன பலி செலுத்தவே நீங்கள் அவற்றைக் கட்டினீர்கள்.’+
14 நீ* இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யக் கூடாது. அவர்களுக்காக வேண்டிக்கொள்ளவோ கெஞ்சிக் கதறவோ கூடாது.+ அழிவு வரும்போது அவர்கள் உதவிக்காக என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.
15 எனக்குப் பிரியமான ஜனங்களில் இத்தனை பேர் என்னைப் போலித்தனமாக வணங்கும்போது,
அவர்கள் எந்த உரிமையோடு என் வீட்டில் தங்க முடியும்?
அவர்கள் பலி செலுத்திவிட்டால் அழிவிலிருந்து தப்பித்துவிட முடியுமா?
அழிவு நாளில் அவர்கள் சந்தோஷப்பட முடியுமா?
16 ஒருகாலத்தில் யெகோவா அவர்களை,
‘பழங்கள் காய்த்துக் குலுங்குகிற அழகான ஒலிவ மரம்’ என்று அழைத்திருந்தார்.
ஆனால், இப்போது பயங்கரமான சத்தத்தோடு தீ வைத்துவிட்டார்.
எதிரிகள் அந்த மரத்தின் கிளைகளை முறித்துவிட்டார்கள்.
17 இஸ்ரவேல் ஜனங்களையும் யூதா ஜனங்களையும் மரம்போல் நட்டு வைத்தவரான பரலோகப் படைகளின் யெகோவா+ அழிவைக் கொண்டுவரப் போவதாகச் சொல்லியிருக்கிறார். ஏனென்றால், அவர்கள் பாவம் செய்திருக்கிறார்கள், பாகாலுக்குத் தகன பலிகளைச் செலுத்தி அவருடைய கோபத்தைக் கிளறியிருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
18 யெகோவாவே, நீங்கள் எனக்கு விஷயத்தைத் தெரிவித்தீர்கள்.
அவர்கள் செய்வதையெல்லாம் எனக்குக் காட்டினீர்கள்.
19 வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப் போல நான் இருந்தேன்.
அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட சதி செய்து,
“மரத்தைப் பழங்களோடு சேர்த்து வெட்டிப்போடலாம்,
இந்த உலகத்திலிருந்தே அவனை ஒழித்துக்கட்டலாம்,
அவனுடைய பேர்கூட அழிந்துபோகட்டும்” என்று பேசி வைத்திருந்தது எனக்குத் தெரியவில்லை.+
20 பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.
என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.
என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.
21 என்னிடம், “நீ யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது;+ சொன்னால், எங்கள் கையால் சாவாய்” என்று மிரட்டுகிற ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்கு யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். 22 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன். வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ பிள்ளைகள் பஞ்சத்தினால் சாவார்கள்.+ 23 ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வருஷத்தில் நான் அவர்களை அழித்துவிடுவேன். அவர்களில் யாருமே தப்பிக்க மாட்டார்கள்.”
12 யெகோவாவே, நான் உங்களிடம் முறையிடும்போதும்,
நியாயத்தைப் பற்றி உங்களோடு வழக்காடும்போதும்,
துரோகிகள் ஏன் நிம்மதியாக இருக்கிறார்கள்?
2 நீங்கள் அவர்களை நட்டு வைத்தீர்கள்.
அவர்கள் நன்றாக வேர்விட்டு வளர்ந்து காய்த்துக் குலுங்குகிறார்கள்.
உங்களிடம் நெருங்கியிருப்பதாக வாயளவில் சொல்கிறார்கள்,
ஆனால், அவர்களுடைய அடிமனது* உங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.+
3 யெகோவாவே, நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்;+ நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள்.
என் இதயத்தைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்; உங்கள்மேல் எவ்வளவு பக்தி இருக்கிறதென்று பார்க்கிறீர்கள்.+
வெட்டப்படுவதற்காகப் பிரித்து வைக்கப்படுகிற ஆடுகளைப் போல
அழிவு நாளுக்காக அந்த ஜனங்களைப் பிரித்து வையுங்கள்.
4 தேசம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு வறண்டு கிடக்க வேண்டும்?
வயல்களின் விளைச்சல் எவ்வளவு காலத்துக்குக் காய்ந்து கிடக்க வேண்டும்?+
அங்கே வாழ்கிறவர்கள் அக்கிரமங்கள் செய்ததால்
மிருகங்களும் பறவைகளும்கூட மறைந்துபோய்விட்டன.
ஏனென்றால், “நமக்கு என்ன நடந்தாலும் அவர் பார்க்கப்போவதில்லை” என்று அவர்கள் சொன்னார்கள்.
சமாதானமான தேசத்தில் நீ மெத்தனமாக வாழ்ந்து பழகிவிட்டால்,
யோர்தானின் புதர்க் காடுகளில் என்ன செய்வாய்?
6 உன் சகோதரர்கள்கூட, உன் அப்பாவின் குடும்பத்தார்கூட, உனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+
அவர்கள் உனக்கு எதிராகக் கூச்சல் போடுகிறார்கள்.
அவர்கள் உன்னிடம் நல்ல விஷயங்களைப் பேசினாலும்
அவர்களை நம்பாதே.
7 நான் என்னுடைய வீட்டையும் என்னுடைய சொத்தையும் கைவிட்டுவிட்டேன்.+
என் உயிருக்கு உயிரானவளை அவளுடைய எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டேன்.+
8 என்னுடைய சொத்தாகிய என் ஜனங்கள் காட்டிலுள்ள சிங்கத்தைப் போல ஆகிவிட்டார்கள்.
என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறார்கள்.
அதனால், நான் அவர்களை வெறுத்துவிட்டேன்.
9 என்னுடைய சொத்தாகிய என் ஜனங்கள் பிணம் தின்னும் பலவண்ணப் பறவையைப் போல இருக்கிறார்கள்.
பிணம் தின்னும் மற்ற பறவைகள் அவர்களைச் சுற்றிவளைத்து தாக்குகின்றன.+
காட்டிலுள்ள மிருகங்களே, நீங்களும் வாருங்கள்.
வந்து சாப்பிடுங்கள்.+
10 மேய்ப்பர்கள் பலர் என்னுடைய திராட்சைத் தோட்டத்தை அழித்துவிட்டார்கள்.+
எனக்குச் சொந்தமான நிலத்தை மிதித்துப்போட்டார்கள்.+
நான் ஆசையாக வைத்திருந்த நிலத்தை வனாந்தரத்தைப் போலப் பாழாக்கிவிட்டார்கள்.
11 அது பொட்டல்காடாகிவிட்டது.
12 வனாந்தரத்திலுள்ள எல்லா பாதைகளின்* வழியாகவும் கொலைகாரர்கள் வந்திருக்கிறார்கள்.
தேசம் முழுவதையும் யெகோவாவின் வாள் பதம் பார்க்கிறது.+
யாருக்குமே சமாதானம் இல்லை.
13 கோதுமையை விதைத்தார்கள், ஆனால் முட்களை அறுவடை செய்கிறார்கள்.+
அவர்கள் பாடுபட்டு உழைத்தும் பிரயோஜனமே இல்லை.
யெகோவாவின் கோபம் பற்றியெரிவதால் அவர்களுக்கு விளைச்சலே கிடைக்காது.
அதைப் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள்” என்று சொன்னார்.
14 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த சொத்தைப் பொல்லாதவர்களாகிய அக்கம்பக்கத்து தேசத்தார் பறித்துக்கொண்டார்கள்.*+ அதனால் நான் அவர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தியடிப்பேன்.+ அவர்கள் மத்தியிலிருந்து யூதா ஜனங்களைத் துரத்தியடிப்பேன். 15 ஆனால், அவர்களைத் துரத்தியடித்த பின்பு மறுபடியும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய தேசத்துக்கே கொண்டுவந்து, அவர்களுடைய சொத்தையே அனுபவிக்க வைப்பேன்.”
16 “அவர்கள் பாகாலின் பெயரில் சத்தியம் செய்ய என் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தது போலவே, ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’* என்று சத்தியம் செய்ய அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என் ஜனங்களைப் போலவே என் வழியில் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களை என் ஜனங்களோடு சீரும் சிறப்புமாக வாழ வைப்பேன். 17 ஆனால், அவர்களில் யாராவது என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களையும் துரத்தியடிப்பேன்; துரத்தியடிப்பது மட்டுமல்லாமல் அடியோடு அழித்தும் போடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+
13 யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு நாரிழை* இடுப்புவாரை வாங்கி உன் இடுப்பில் கட்டிக்கொள்; ஆனால், அதைத் தண்ணீரில் நனைக்காதே” என்று சொன்னார். 2 யெகோவா சொன்னபடியே நான் இடுப்புவாரை வாங்கி என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். 3 பின்பு, யெகோவா இரண்டாவது தடவையாக என்னிடம் பேசினார். 4 “இப்போது நீ எழுந்து, நீ கட்டியிருக்கிற இடுப்புவாரை எடுத்துக்கொண்டு யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் போ. அங்கே ஒரு பாறை இடுக்கில் அதை மறைத்து வை” என்று சொன்னார். 5 யெகோவா கட்டளை கொடுத்தபடியே நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போய் அதை மறைத்து வைத்தேன்.
6 ஆனால், பல நாட்களுக்குப் பின்பு யெகோவா என்னிடம், “நீ எழுந்து, யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புவாரை அங்கிருந்து எடுத்து வா” என்று சொன்னார். 7 அதனால், நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போனேன். நான் மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து அந்த இடுப்புவாரைத் தோண்டி எடுத்தேன். ஒன்றுக்குமே உதவாத அளவுக்கு அது பாழாகிப்போயிருந்தது.
8 அப்போது யெகோவா என்னிடம், 9 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடுப்புவாரைப் போலவே நான் யூதாவின் ஆணவத்தையும் எருசலேமின் மட்டுக்குமீறிய அகம்பாவத்தையும் அழிப்பேன்.+ 10 இந்தக் கெட்ட ஜனங்கள் இந்த இடுப்புவாரைப் போலவே ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆவார்கள். ஏனென்றால், அவர்கள் என் பேச்சைக் கேட்பது இல்லை.+ தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போகிறார்கள்.+ மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குகிறார்கள்.’ 11 யெகோவா சொல்வது இதுதான்: ‘இடுப்புவார் எப்படி ஒருவருடைய இடுப்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அதுபோலவே இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் என்னை ஒட்டிக்கொண்டிருக்கும்படி செய்தேன். எனக்குப் புகழும் மகிமையும்+ அழகும் சேர்க்கிற ஜனங்களாக+ அவர்கள் இருப்பதற்காகவே அப்படிச் செய்தேன். ஆனால், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.’+
12 நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “எல்லா பெரிய ஜாடிகளிலும் திராட்சமதுவை நிரப்புங்கள்”’ என்று சொல். அதற்கு அவர்கள், ‘எல்லா பெரிய ஜாடிகளிலும் திராட்சமதுவை நிரப்ப வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்பார்கள். 13 அப்போது நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமில் இருக்கிற ஜனங்கள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் என எல்லாருடைய வயிற்றையுமே நான் திராட்சமதுவால் நிரப்பி, அவர்களைப் போதையில் தள்ளாட வைப்பேன்.+ 14 ஒருவர்மேல் ஒருவர் மோதிக்கொள்ளும்படி செய்வேன்; அப்பாவும் பிள்ளையும்கூட மோதிக்கொள்வார்கள்.+ நான் அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டேன், பரிதாபப்பட மாட்டேன். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களை அழிக்காமல் விட மாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்’+ என்று சொல்.
15 ஜனங்களே, நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்.
பெருமையோடு நடந்துகொள்ளாதீர்கள். ஏனென்றால், யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.
16 உங்கள் கடவுளாகிய யெகோவா இருளை வர வைப்பதற்கு முன்பே,
இருட்டும் நேரத்தில் நீங்கள் மலைகளில் தடுமாறி விழுவதற்கு முன்பே,
அவரை மகிமைப்படுத்துங்கள்.
வெளிச்சம் வரும் என்று நீங்கள் காத்திருப்பீர்கள்.
ஆனால், அவர் இருட்டைக் கொண்டுவருவார்.
எல்லாவற்றையும் கும்மிருட்டாக மாற்றிவிடுவார்.+
17 நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காவிட்டால்,
நான் உங்களுடைய கர்வத்தை நினைத்து மறைவில் அழுவேன்.
யெகோவாவின் ஜனங்கள்*+ சிறைபிடிக்கப்பட்டுப் போனதை நினைத்து
கதறிக் கதறி அழுவேன்; என் கண்ணீர் ஆறாக ஓடும்.+
18 நீங்கள் ராஜாவிடமும் அவருடைய தாயிடமும்*+ போய், ‘சிம்மாசனத்தைவிட்டு இறங்கிவிடுங்கள்.
உங்கள் தலையில் இருக்கிற அழகான கிரீடங்கள் கீழே விழப்போகின்றன’ என்று சொல்லுங்கள்.
19 தெற்கு நகரங்களின் நுழைவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன; அவற்றைத் திறக்க யாருமே இல்லை.
யூதா ஜனங்கள் எல்லாரையுமே எதிரிகள் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை.+
20 வடக்கிலிருந்து வருகிறவர்களை நிமிர்ந்து பாருங்கள்.+
உங்களிடம் கொடுக்கப்பட்ட அழகான ஆடுகள் எங்கே?+
21 ஆரம்பத்திலிருந்து உங்கள் தோழர்களாக இருந்தவர்களே உங்களைத் தண்டிக்கும்போது
நீங்கள் என்ன சொல்வீர்கள்?+
பிரசவ வேதனையில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிக்க மாட்டீர்களா?+
22 ‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது?’+ என்று உள்ளத்தில் யோசிப்பீர்கள்.
நீங்கள் செய்த பயங்கரமான அக்கிரமங்களால்தான் உங்கள் மானம்* பறிபோனது,+
உங்கள் குதிங்காலும் கடுகடுத்தது.
23 கெட்டது செய்வதில் ஊறிப்போனவர்களே,
கூஷியன்* தன்னுடைய நிறத்தையும் சிறுத்தை அதன் புள்ளிகளையும் மாற்றிக்கொள்ள முடியுமா?+ முடியாதே!
அப்படித்தான் உங்களாலும் நல்லது செய்ய முடியாது.
24 பாலைவனக் காற்றில் அடித்துச் செல்லப்படும் வைக்கோலைப் போல நான் உங்களைச் சிதறிப்போக வைப்பேன்.+
25 இதுதான் நான் உங்களுக்கு அளந்து கொடுக்கும் கூலி” என்று யெகோவா சொல்கிறார்.
“ஏனென்றால், நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள்.+ பொய்களை நம்புகிறீர்கள்.+
26 அதனால், நான் உங்களுடைய ஆபாசத்தை எல்லாருக்கும் காட்டுவேன்.
உங்களுடைய வெட்கக்கேட்டையும்,+
27 முறைகேடான உறவையும்,+ காமவெறியையும்,
மானங்கெட்ட விபச்சாரத்தையும் எல்லாரும் பார்க்கும்படி செய்வேன்.
மலைகளிலும் வயல்வெளிகளிலும்
நீங்கள் செய்த அருவருப்புகளை நான் பார்த்தேன்.+
எருசலேமே, உனக்குக் கேடுதான் வரப்போகிறது!
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி அசுத்தமாக நடப்பாய்?”+
14 வறட்சிக் காலங்களைப் பற்றி எரேமியாவிடம் யெகோவா சொன்னது இதுதான்:+
2 யூதா அழுது புலம்புகிறது.+ அதன் நுழைவாசல்கள் பாழடைந்து கிடக்கின்றன.
துக்கத்தில் தரையோடு தரையாக விழுந்து கிடக்கின்றன.
எருசலேம் நகரமே கதறுகிறது.
3 தண்ணீர் எடுத்துவரச் சொல்லி எஜமான்கள் வேலைக்காரர்களை அனுப்புகிறார்கள்.
வேலைக்காரர்களும் தண்ணீர்த் தொட்டிகளுக்குப் போய்ப் பார்க்கிறார்கள்; அங்கே தண்ணீர் இல்லை.
அதனால் காலியான ஜாடிகளை எடுத்துக்கொண்டு
ஏமாற்றத்தோடும் அவமானத்தோடும்
தலையில் முக்காடு போட்டுக்கொண்டு திரும்பி வருகிறார்கள்.
4 விவசாயிகளும் என்ன செய்வதென்றே தெரியாமல் தலையில் முக்காடு போட்டுக்கொள்கிறார்கள்.
ஏனென்றால், தேசத்தில் மழையே இல்லை.+
நிலமெல்லாம் வெடித்துக் கிடக்கிறது.
5 எங்குமே புல் இல்லை.
அதனால், பெண் மான்கள்கூட குட்டிகளை விட்டுவிட்டுப் போய்விடுகின்றன.
6 காட்டுக் கழுதைகள் குன்றுகள்மேல் நிற்கின்றன.
நரிகளைப் போல மூச்சிரைக்கின்றன.
சாப்பிடுவதற்குப் புல்பூண்டுகள் இல்லாமல் அவற்றின் கண்கள் இருண்டுவிடுகின்றன.+
7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.
எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+
உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.
ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+
8 இஸ்ரவேலர்களுக்கு நம்பிக்கை தருகிறவரே, ஆபத்துக் காலத்தில் அவர்களை மீட்கிறவரே,+
ஏன் அவர்களுடைய தேசத்தில் ஒரு அன்னியரைப் போல இருக்கிறீர்கள்?
ராத்திரி மட்டும் தங்கிவிட்டுப் போகிற பயணியைப் போல ஏன் இருக்கிறீர்கள்?
9 என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயிருக்கிற மனுஷனைப் போலவும்,
காப்பாற்ற முடியாத ஒரு வீரனைப் போலவும் ஏன் இருக்கிறீர்கள்?
அதனால், எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்.
10 இந்த ஜனங்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் மனம்போல் சுற்றித் திரியவே ஆசைப்படுகிறார்கள்.+ அவர்களுடைய கால்களை அவர்கள் கட்டுப்படுத்துவதே இல்லை.+ அதனால், யெகோவா அவர்களை வெறுக்கிறார்.+ இப்போது அவர்களுடைய குற்றங்களையெல்லாம் நினைத்துப் பார்த்து அவர்களைத் தண்டிக்கப்போகிறார்.”+
11 பின்பு யெகோவா என்னிடம், “இந்த ஜனங்களுக்கு நல்லது செய்யச் சொல்லி என்னிடம் கேட்காதே.+ 12 இவர்கள் விரதமிருந்து ஜெபம் செய்தாலும் நான் அதைக் கேட்க மாட்டேன்.+ இவர்கள் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் செலுத்தினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.+ இவர்களை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாக்குவேன்”+ என்று சொன்னார்.
13 அதற்கு நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! தீர்க்கதரிசிகள் இந்த ஜனங்களிடம், ‘நீங்கள் வாளால் கொல்லப்படவும் மாட்டீர்கள், பஞ்சத்தால் சாகவும் மாட்டீர்கள். கடவுள் உங்களை இந்தத் தேசத்திலேயே நிம்மதியாக வாழ வைப்பார்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே” என்றேன்.
14 அப்போது யெகோவா என்னிடம், “அந்தத் தீர்க்கதரிசிகள் என் பெயரில் பொய்யாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ நான் அவர்களிடம் பேசவும் இல்லை, அவர்களைப் பேசச் சொல்லவும் இல்லை, அவர்களை அனுப்பவும் இல்லை.+ அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் தரிசனங்களெல்லாம் பொய். அவர்கள் குறிசொல்கிறபடி எதுவுமே நடக்காது. அவர்களே கதைகளை ஜோடித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+ 15 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாவிட்டாலும் அவர்கள் என் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். நீங்கள் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாக மாட்டீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி யெகோவாவாகிய நான் சொல்வது இதுதான்: ‘அந்தத் தீர்க்கதரிசிகள் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்.+ 16 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கேட்ட மக்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி எருசலேமின் வீதிகளில் கிடப்பார்கள். அவர்களையும் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் புதைக்க யாருமே இருக்க மாட்டார்கள்.+ அவர்களுடைய பாவங்களுக்குத் தகுந்த தண்டனையை நான் கொடுப்பேன்.’+
17 நீ அவர்களிடம்,
‘ராத்திரி பகலாக என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கட்டும்.+
ஏனென்றால், என் ஜனங்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
பயங்கரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்.+
18 நான் வயல்வெளிக்குப் போய்ப் பார்த்தால்,
வாளினால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள்தான் கிடக்கின்றன.+
நகரத்துக்குள் வந்தால்,
பஞ்சத்தினால் உண்டான கொடிய வியாதிகளைத்தான் பார்க்கிறேன்.+
தீர்க்கதரிசிகளும் குருமார்களும் திக்குத்தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்’+ என்று சொல்” என்றார்.
19 நீங்கள் யூதாவை ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களா? சீயோனை அடியோடு வெறுத்துவிட்டீர்களா?+
நாங்கள் குணமாக முடியாத அளவுக்கு ஏன் எங்களை நொறுக்கிவிட்டீர்கள்?+
நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.
குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+
20 யெகோவாவே, நாங்கள் அக்கிரமம் செய்ததை ஒத்துக்கொள்கிறோம்.
எங்கள் முன்னோர்களும் அக்கிரமம் செய்தது உண்மைதான்.
நாங்கள் எல்லாருமே உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.+
21 ஆனாலும் உங்களுடைய பெயரை மனதில் வைத்து, எங்களை ஒதுக்காமல் இருங்கள்.+
உங்களுடைய மகிமையான சிம்மாசனத்தை வெறுத்துவிடாதீர்கள்.
எங்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிடாதீர்கள்; அதை முறித்துவிடாதீர்கள்.+
22 வானம் தானாகவே மழையைப் பொழியுமா?
அல்லது, உலகத்திலுள்ள வீணான தெய்வங்களால் மழை தர முடியுமா?
எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களால் மட்டும்தானே அதைச் செய்ய முடியும்?+
நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.
உங்களால் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
15 பின்பு யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுவேலும் என் முன்னால் வந்து நின்றால்கூட+ நான் இந்த ஜனங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இவர்களை என் முன்னாலிருந்து துரத்திவிடு. இவர்கள் போகட்டும். 2 ‘எங்கள் நிலைமை என்ன ஆகும்?’ என்று இவர்கள் கேட்டால் நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்:
“உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள்!
சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்!+
சிலர் பஞ்சத்தில் அடிபட்டுச் சாவீர்கள்!
சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்”+
என்று சொல்’ என்றார்.
3 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்கு விதமான ஆபத்துகளை* நான் வர வைப்பேன்.+ அவர்களைக் கொன்றுபோடுவதற்கு வாளையும், இழுத்துச் செல்வதற்கு நாய்களையும், கடித்துக் குதறுவதற்கு மிருகங்களையும், தின்றுதீர்ப்பதற்குப் பறவைகளையும் வர வைப்பேன்.+ 4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+
5 எருசலேமே, யார் உனக்குக் கரிசனை காட்டுவார்கள்?
யார் உனக்கு அனுதாபம் காட்டுவார்கள்?
யார் உன்னிடம் வந்து நலம் விசாரிப்பார்கள்?’
6 யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ என்னைவிட்டுப் போய்விட்டாய்.+
எனக்கு உன் முதுகைக் காட்டிக்கொண்டே இருக்கிறாய்.*+
அதனால், உனக்கு எதிராக என் கையை ஓங்கி, உன்னை அழித்துப்போடுவேன்.+
உன்மேல் இரக்கம் காட்டிக் காட்டியே சலித்துப்போய்விட்டேன்.
7 தானியங்களைப் புடைப்பது போல நகரவாசலில் நான் அவர்களைப் புடைத்து சிதறிப்போக வைப்பேன்.
பிள்ளைகளை அவர்கள் பறிகொடுக்கும்படி செய்வேன்.+
என் ஜனங்களை அழித்துவிடுவேன்.
ஏனென்றால், கெட்ட வழிகளைவிட்டு அவர்கள் திருந்துவதாகவே இல்லை.+
8 விதவைகளின் எண்ணிக்கை கடற்கரை மணலைவிட அதிகமாக ஆகும்.
பட்டப்பகலில் நான் கொலைகாரனை அனுப்பி தாய்களையும் வாலிபர்களையும் வெட்டிப்போட வைப்பேன்.
திடீரென்று தேசத்தில் பதற்றத்தையும் பீதியையும் உண்டாக்குவேன்.
9 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் துவண்டுபோயிருக்கிறாள்.
மூச்சுவிடுவதற்கே சிரமப்படுகிறாள்.
பகலிலேயே அவளுடைய சூரியன் மறைந்துவிட்டது.
அதனால், அவள் அவமானத்தில் கூனிக்குறுகுகிறாள்.’*
யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களில் மிச்சம் மீதி இருப்பவர்களை
எதிரிகளின் வாளுக்குப் பலியாக்குவேன்.’”+
10 என் தாயே, ஏன்தான் என்னைப் பெற்றீர்களோ?+ ஐயோ!
தேசத்திலுள்ள எல்லாரோடும் எனக்கு வழக்கும் வாக்குவாதமும்தான் நடக்கிறது!
நான் கடன் கொடுத்ததும் இல்லை, கடன் வாங்கியதும் இல்லை.
ஆனாலும், எல்லாருமே என்னைச் சபிக்கிறார்கள்.
11 யெகோவா என்னிடம், “நான் நிச்சயமாகவே உனக்குத் துணையாக இருப்பேன்.
ஆபத்து வரும்போது கண்டிப்பாக உன்னைப் பாதுகாப்பேன்.
எதிரிகள் தாக்கும்போது உன்னைக் காப்பாற்றுவேன்.
12 இரும்பை, அதுவும் வடக்கிலிருந்து வந்த இரும்பை, யாராவது துண்டுதுண்டாக்க முடியுமா?
செம்பை யாராவது சுக்குநூறாக்க முடியுமா?
13 தேசமெங்கும் நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.
அதனால், உங்களுடைய சொத்துகளையும் செல்வங்களையும் இலவசமாகத் தூக்கிக் கொடுத்துவிடுவேன்.+
14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.
உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+
என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.
அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார்.
15 யெகோவாவே, நான் படுகிற பாடு உங்களுக்கே தெரியும்.
என்னை நினைத்துப் பாருங்கள், என் உதவிக்கு வாருங்கள்.
என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்குங்கள்.+
நீங்கள் இன்னும் பொறுமையாக இருந்தால் நான் செத்தே போய்விடுவேன்.
உங்களுக்காகத்தான் எல்லா பழிப்பேச்சையும் சகித்துக்கொண்டு இருக்கிறேன்.+
16 உங்கள் வார்த்தை கிடைத்ததுமே அதை ரசித்து ருசித்தேன்.*+
அதனால், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன்.
பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நான் உங்கள் பெயரால் அழைக்கப்படுவதை நினைத்து உள்ளம் பூரித்துப்போனேன்.
17 கூத்தும் கும்மாளமும் அடிக்கிறவர்களோடு உட்காராமல் தனியாக உட்காருகிறேன்.+
ஏனென்றால், நான் உங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறேன்.
18 எனக்கு ஏன் தீராத வலி?
என் காயம் ஏன் ஆறுவதே இல்லை?
நம்பி வருகிறவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற வறண்ட நீரோடை போல
நீங்கள் எனக்கு ஏமாற்றம்தான் அளிப்பீர்களா?
19 யெகோவா சொல்வது இதுதான்:
“நீ உன் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் நான் உன்னை முந்தின நிலைமைக்குக் கொண்டுவருவேன்.
நீ என் முன்னால் நிற்பாய்.
வீணானவற்றிலிருந்து விலைமதிப்புள்ளதை நீ பிரித்தெடுத்தால்,
என் சார்பில் பேசுகிறவனாக* ஆவாய்.
ஜனங்கள் உன் வழிக்கு வருவார்கள்.
ஆனால், நீ அவர்கள் வழிக்குப் போக மாட்டாய்.”
20 யெகோவா சொல்வது இதுதான்: “இந்த ஜனங்களுக்கு முன்னால் நான் உன்னைப் பலமான செம்புச் சுவர் போல ஆக்குவேன்.+
அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.
ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.+
ஏனென்றால், உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.
21 கெட்டவர்களின் கையிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
கொடுமைக்காரர்களின் பிடியிலிருந்து உன்னை விடுவிப்பேன்.”
16 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “நீ கல்யாணம் செய்துகொள்ளவோ இந்தத் தேசத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ கூடாது. 3 ஏனென்றால், இந்தத் தேசத்தில் பிறக்கிற பிள்ளைகளையும் அவர்களைப் பெற்றெடுக்கிற தாய் தகப்பன்களையும் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: 4 ‘அவர்கள் கொடிய நோய்களால் செத்துப்போவார்கள்.+ அவர்களுக்காகத் துக்கப்படுவதற்கோ அவர்களை அடக்கம் செய்வதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் நிலத்தில் எருவாகிவிடுவார்கள்.+ சிலர் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள்.+ அவர்களுடைய பிணங்களைப் பறவைகளும் மிருகங்களும் தின்றுதீர்க்கும்.’
5 யெகோவா சொல்வது இதுதான்:
‘சாவு வீட்டின் விருந்துக்கு நீ போகாதே.
ஒப்பாரி வைப்பதற்கோ இரங்கல் தெரிவிப்பதற்கோ போகாதே.’+
‘ஏனென்றால், இந்த ஜனங்களுக்கு இனி நான் சமாதானத்தைக் கொடுக்க மாட்டேன்.
இனி அவர்கள்மேல் அன்பும் இரக்கமும் காட்ட மாட்டேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.
6 ‘இந்தத் தேசத்தில் இருக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருமே இறந்துபோவார்கள்.
அவர்கள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள்.
அவர்களுக்காக யாரும் தங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ தலையை மொட்டையடிக்கவோ மாட்டார்கள்.*
7 இறந்தவர்களுக்காகத் துக்கப்படுகிறவர்களுக்கு யாரும் ஆறுதல் சொல்லவோ
சாப்பாடு கொடுக்கவோ மாட்டார்கள்.
அப்பாவையோ அம்மாவையோ பறிகொடுத்த சோகத்திலிருந்து மீளுவதற்காக
யாரும் அவர்களுக்குத் திராட்சமது கொடுக்க மாட்டார்கள்.
8 சந்தோஷமாக விருந்து கொண்டாடுகிறவர்களின் வீட்டுக்குப் போகாதே.
அவர்களோடு உட்கார்ந்து சாப்பிடாதே, குடிக்காதே.’
9 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய காலத்திலேயே, உன்னுடைய கண் முன்னாலேயே, இந்த இடத்தில் எல்லா கொண்டாட்டத்துக்கும் குதூகலத்துக்கும் முடிவுகட்டுவேன். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காமல்போகும்படி செய்வேன்.’+
10 நீ இந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லும்போது அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்? எங்கள் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அப்படியென்ன பாவத்தைச் செய்துவிட்டோம்?’+ என்று கேட்பார்கள். 11 அப்போது நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “உங்கள் முன்னோர்கள் என்னை விட்டுவிட்டு+ வேறு தெய்வங்களைத் தேடிப்போய் பக்தியோடு கும்பிட்டார்கள்.+ என்னைவிட்டு விலகிப்போனார்கள். என் சட்டதிட்டங்களை மீறினார்கள்.+ 12 நீங்களோ அவர்களைவிட படுமோசமாக நடந்துகொண்டீர்கள்.+ என் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக உங்களுடைய பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கில் போனீர்கள்.+ 13 அதனால் நான் உங்களை இந்தத் தேசத்திலிருந்து வேறொரு தேசத்துக்குத் துரத்தியடிப்பேன். உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத அந்தத் தேசத்தில்+ நீங்கள் ராத்திரி பகலாகப் பொய் தெய்வங்களுக்குத்தான் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+ நான் உங்களுக்கு இரக்கம் காட்டவே மாட்டேன்”’ என்று சொல்.
14 ‘ஆனால், காலம் வருகிறது’ என்று யெகோவா சொல்கிறார். ‘அதுமுதல் ஜனங்கள், “இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”*+ என்று சொல்ல மாட்டார்கள். 15 அதற்குப் பதிலாக, “இஸ்ரவேல் ஜனங்களை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”* என்றே சொல்வார்கள். நான் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்துக்கே மறுபடியும் அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+
16 யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, நான் நிறைய மீனவர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை வலைவீசிப் பிடிப்பார்கள்.
அதன் பின்பு, நான் நிறைய வேட்டைக்காரர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை எல்லா மலைகளிலும் குன்றுகளிலும் பாறை இடுக்குகளிலும்
வேட்டையாடிப் பிடிப்பார்கள்.
17 இஸ்ரவேலர்கள் செய்கிற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவர்கள் என் கண்ணிலிருந்து தப்ப முடியாது.
அவர்களுடைய பாவங்களை என்னிடமிருந்து மறைக்க முடியாது.
18 முதலில், அவர்கள் செய்த பாவத்துக்கும் குற்றத்துக்கும் முழுமையாகத் தண்டனை கொடுப்பேன்.+
ஏனென்றால், உயிரில்லாத அருவருப்பான சிலைகளை வணங்கி என் தேசத்தை அவர்கள் தீட்டுப்படுத்திவிட்டார்கள்.
நான் சொத்தாகக் கொடுத்த தேசத்தை அந்த அருவருப்புகளால் நிரப்பியிருக்கிறார்கள்’+ என்று சொன்னார்.”
19 யெகோவாவே, என் பலமே, என் கோட்டையே,
இக்கட்டு நாளில் ஓடி ஒளிந்துகொள்வதற்கான அடைக்கலமே,+
பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் உங்களிடம் வந்து,
“எங்கள் முன்னோர்கள் ஒன்றுக்கும் உதவாத சிலைகளையும்,
வீணான பொய் தெய்வங்களையுமே வணங்கிவந்தார்கள்”+ என்று சொல்வார்கள்.
20 மனுஷன் தனக்காகத் தெய்வங்களை உண்டாக்க முடியுமா?
அவன் உண்டாக்குகிறவை உண்மையில் தெய்வங்கள் கிடையாதே!+
21 “அதனால், அவர்கள் என்னைத் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
இப்போது, என் சக்தியையும் பலத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
என் பெயர் யெகோவா என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”
17 “யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியால் எழுதப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய இதயப் பலகையிலும் பலிபீடங்களின் கொம்புகளிலும்
வைர நுனியால் அது செதுக்கப்பட்டிருக்கிறது.
2 அடர்த்தியான மரங்களின் கீழும், பெரிய குன்றுகளின் மேலும், வெட்டவெளியில் இருக்கிற மலைகளின் மேலும்+
அவர்கள் வைத்திருந்த பலிபீடங்களையும் பூஜைக் கம்பங்களையும்*+
3 அவர்களுடைய பிள்ளைகள்கூட ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
யூதா ஜனங்களே, தேசமெங்கும் நீங்கள் பாவம் செய்ததால் உங்களுடைய ஆராதனை மேடுகளை எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+
உங்களுடைய எல்லா செல்வங்களையும் கொள்ளைபோக வைப்பேன்.+
4 நான் கொடுத்த சொத்து உங்களுடைய கையைவிட்டுப் போவதற்கு நீங்களே காரணமாவீர்கள்.+
முன்பின் தெரியாத தேசத்தில் உங்கள் எதிரிகளுக்கு அடிமைகளாவீர்கள்.+
ஏனென்றால், என் கோபத்தைத் தீ போல நீங்கள் கிளறிவிட்டிருக்கிறீர்கள்.*+
அது எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.”
5 யெகோவா சொல்வது இதுதான்:
6 பாலைவனத்தில் நிற்கிற தனி மரம் போல அவன் ஆவான்.
அவன் நல்லதை அனுபவிக்க மாட்டான்.
வனாந்தரத்தின் வறண்ட பகுதிகளிலும்,
யாருமே குடியிருக்க முடியாத உப்புநிலத்திலும்தான்
அவன் குடியிருப்பான்.
8 வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு,
தண்ணீர் பக்கமாக வேர்விடும் மரத்தைப் போல அவன் ஆவான்.
வறட்சிக் காலத்தில்கூட கவலையில் வாட மாட்டான்.
எப்போதும் கனி கொடுத்துக்கொண்டே இருப்பான்.
9 எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்.*+
அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?
10 யெகோவாவாகிய நான் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறேன்.+
அடிமனதின் யோசனைகளை* பரிசோதித்துப் பார்த்து,
அவரவர் வழிகளுக்கும் செயல்களுக்கும் தகுந்தபடி
அவரவருக்குக் கூலி கொடுப்பேன்.+
11 ஒரு கவுதாரி தான் போடாத முட்டைகளைச் சேர்த்து வைப்பது போல,
மோசடிக்காரன் மற்றவர்களுடைய சொத்துகளைச் சேர்த்து வைக்கிறான்.+
ஆனால், கொஞ்சக் காலம்கூட அவற்றை அவனால் அனுபவிக்க முடியாது.
கடைசியில், அவன் முட்டாளாகத்தான் இருப்பான்.”
உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+
ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+
14 யெகோவாவே, உங்களைத்தான் நான் எப்போதும் புகழ்கிறேன்.
நீங்கள் என்னைக் குணமாக்குங்கள், அப்போது நான் குணமாவேன்.+
என்னைக் காப்பாற்றுங்கள், அப்போது நான் பிழைத்துக்கொள்வேன்.
15 சிலர் என்னிடம்,
“யெகோவா சொன்னதெல்லாம் ஏன் இன்னும் நடக்கவில்லை?+
தயவுசெய்து அதையெல்லாம் சீக்கிரமாக நடத்திக்காட்டச் சொல்!” என்கிறார்கள்.
16 ஆனாலும், நான் ஒரு மேய்ப்பனாக உங்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஓடிப்போகவில்லை.
அழிவு நாள் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை.
நான் என்னென்ன பேசினேன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
உங்கள் கண் முன்னால்தானே எல்லாவற்றையும் பேசினேன்!
17 என்னைத் திகிலடைய வைக்காதீர்கள்.
ஆபத்து நாளில் நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்.
அவர்கள் திகிலடையட்டும்.
ஆனால், நான் திகிலடைய அனுமதிக்காதீர்கள்.
அவர்களுக்கு எதிராக அழிவு நாளைக் கொண்டுவாருங்கள்.+
அவர்களை நொறுக்கிப்போடுங்கள், அடியோடு அழித்துவிடுங்கள்.
19 யெகோவா என்னிடம், “யூதாவின் ராஜாக்கள் வந்துபோகிற முக்கிய* நுழைவாசலுக்கும் எருசலேமின் மற்ற எல்லா நுழைவாசல்களுக்கும் நீ போ. அங்கே நின்றுகொண்டு இப்படிச் சொல்:+ 20 ‘இந்த நுழைவாசல்கள் வழியாக வந்துபோகிற யூதாவின் ராஜாக்களே, யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 21 யெகோவா சொல்வது இதுதான்: “ஜாக்கிரதை! ஓய்வுநாளில் நீங்கள் சரக்குகளைச் சுமந்துகொண்டு போகக் கூடாது, எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக உள்ளே கொண்டுவரவும் கூடாது.+ 22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சரக்குகளையும் எடுத்துவரக் கூடாது. நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ ஓய்வுநாளைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும். இந்தக் கட்டளையைத்தான் நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்தேன்.+ 23 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. நான் எவ்வளவோ கண்டித்தும் அவர்கள் திருந்தவே இல்லை.”’+
24 ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் ஓய்வுநாளில் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக எந்தச் சரக்குகளையும் கொண்டுவரக் கூடாது. ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யாமல் அதைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும்.+ நான் சொல்வதையெல்லாம் நீங்கள் அப்படியே கேட்டு நடந்தால், 25 தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காருகிற ராஜாக்களும் இளவரசர்களும் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள். அவர்களோடு யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் வருவார்கள்.+ இந்த நகரத்தில் எப்போதுமே ஜனங்கள் குடியிருப்பார்கள். 26 யூதாவின் நகரங்களிலிருந்தும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும், பென்யமீன் தேசத்திலிருந்தும்,+ தாழ்வான பிரதேசத்திலிருந்தும்,+ மலைப்பகுதியிலிருந்தும், நெகேபிலிருந்தும்* ஜனங்கள் தகன பலிகளையும்+ நன்றிப் பலிகளையும்+ மற்ற பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்கு வருவார்கள்.
27 ஆனால், நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தீர்கள் என்றால், ஓய்வுநாளின்போது சரக்குகளைச் சுமந்துகொண்டும் எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக அவற்றை எடுத்துக்கொண்டும் வந்தீர்கள் என்றால், அந்த நுழைவாசல்களில் தீ வைப்பேன். அந்தத் தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். அது எருசலேமின் கோட்டைகளைச்+ சாம்பலாக்கிவிடும்”’+ என்று சொன்னார்.”
18 எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர், 2 “நீ எழுந்து குயவனின் வீட்டுக்குப் போ.+ அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்று சொன்னார்.
3 அவர் சொன்னபடியே நான் குயவனின் வீட்டுக்குப் போனேன். அங்கே அந்தக் குயவன் களிமண்ணால் ஒரு பானை செய்துகொண்டிருந்தான். 4 அது சரியான வடிவத்தில் வரவில்லை. அதனால், அந்தக் களிமண்ணை வைத்து வேறொரு பானையைத் தன் விருப்பப்படி செய்தான்.
5 அப்போது யெகோவா என்னிடம், 6 “‘இஸ்ரவேல் ஜனங்களே, இந்தக் குயவன் செய்தது போலவே நானும் உங்களுக்குச் செய்ய முடியாதா?’ என்று யெகோவா கேட்கிறார். ‘இஸ்ரவேல் ஜனங்களே, குயவனின் கையில் களிமண் இருப்பது போலவே நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.+ 7 ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைக் கவிழ்க்கப்போவதாகவும் அழிக்கப்போவதாகவும்+ நான் சொன்ன பின்பு, 8 அங்குள்ள ஜனங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+ 9 ஆனால், ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைச் செழித்தோங்க வைப்பேன் என்று நான் சொன்ன பின்பு, 10 அங்குள்ள ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்து என் பேச்சைக் கேட்காமல் போய்விட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்லது செய்யாமல் போய்விடுவேன்.’
11 இப்போது நீ யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் தயவுசெய்து இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தி இதுதான்: “நான் உங்களை அழிக்க நினைத்திருக்கிறேன்; உங்களைத் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தயவுசெய்து கெட்ட வழிகளையும் கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டுத் திருந்துங்கள்”’”+ என்று சொன்னார்.
12 ஆனால் அவர்கள், “எங்களால் முடியாது!+ நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் செய்வோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கில்தான் போவோம்”+ என்று சொன்னார்கள்.
13 அதனால் யெகோவா,
“தயவுசெய்து நீங்களே மற்ற தேசங்களுக்குப் போய்க் கேட்டுப் பாருங்கள்.
இது போல ஒன்று எங்கேயாவது நடந்திருக்கிறதா?
கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேல் படுகேவலமான காரியத்தைச் செய்திருக்கிறாள்.+
14 லீபனோனின் மலைகளில் உள்ள பனி எப்போதாவது உருகுமா?
தொலைதூரத்திலிருந்து பாய்ந்து வருகிற குளிர்ந்த தண்ணீர் எப்போதாவது வற்றிப்போகுமா?
15 ஆனால், என் ஜனங்கள் என்னை மறந்துவிட்டார்கள்.+
ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+
பூர்வ கால வழியில் போகிறவர்களைத் தடுக்கி விழ வைக்கிறார்கள்.+
கரடுமுரடாக இருக்கிற சிறு பாதைகளில் அவர்களைப் போக வைக்கிறார்கள்.
அந்த வழியாகப் போகிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையாட்டிக்கொண்டு போவார்கள்.+
17 கிழக்குக் காற்று எப்படிப் பதரைச் சிதறிப்போக வைக்குமோ அப்படியே நான் அவர்களை எதிரிகளுக்கு முன்னால் சிதறிப்போக வைப்பேன்.
அழிவு நாளில் நான் அவர்களுக்கு என் முகத்தைக் காட்டாமல் முதுகைக் காட்டுவேன்”+ என்று சொல்கிறார்.
18 ஆனால் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், “வாருங்கள், நாம் திட்டம் போட்டு எரேமியாவை ஒரு வழி பண்ணலாம்.+ கடவுளுடைய சட்டத்தைக் கற்றுக்கொடுக்க நமக்குத்தான் குருமார்கள் இருக்கிறார்களே, ஆலோசனை சொல்ல ஞானிகள் இருக்கிறார்களே, கடவுளுடைய செய்தியைச் சொல்ல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களே. அதனால் வாருங்கள், எல்லாரும் போய் எரேமியாவைக் குற்றம்சாட்டிப் பேசலாம்.* அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் வந்துவிடலாம்” என்று சொன்னார்கள்.
19 யெகோவாவே, தயவுசெய்து என் ஜெபத்தைக் கேளுங்கள்.
என்னுடைய எதிரிகள் பேசுவதையெல்லாம் கேளுங்கள்.
20 நான் நல்லது செய்தும் அவர்கள் எனக்குக் கெடுதல் செய்ய நினைப்பது நியாயமா?
என்னைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்களே.+
அவர்கள்மேல் நீங்கள் கோபத்தைக் காட்டாமல் இருப்பதற்கு
நான் எப்படியெல்லாம் அவர்களுக்காகப் பரிந்து பேசினேன் என்று நினைத்துப் பாருங்கள்.
21 இப்போது, தேசத்திலுள்ள ஆண்களைக் கொள்ளைநோயால் கொன்றுபோடுங்கள்.
வாலிபர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+
அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கும்
22 அவர்களைத் திடீரென்று தாக்க கொள்ளைக்கூட்டத்தை அனுப்புங்கள்.
அவர்களுடைய வீடுகளில் அலறல் சத்தம் கேட்கட்டும்.
ஏனென்றால், என்னைப் பிடிப்பதற்காகக் குழி தோண்டியிருக்கிறார்கள்.
என்னைச் சிக்க வைப்பதற்காக வலைகளை விரித்திருக்கிறார்கள்.+
23 ஆனால் யெகோவாவே,
என்னைத் தீர்த்துக்கட்ட அவர்கள் என்னென்ன சதி செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.+
அவர்களுடைய குற்றத்தை மன்னிக்காதீர்கள்.
அவர்களுடைய பாவங்களை மறந்துவிடாதீர்கள்.
அவர்கள்மேல் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்.+
அப்போது, அவர்கள் உங்களுக்கு முன்னால் வீழ்ச்சி அடையட்டும்.+
19 யெகோவா என்னிடம், “நீ ஒரு குயவனிடம் போய் ஒரு மண் ஜாடியை வாங்கிக்கொள்.+ ஜனங்களின் பெரியோர்களையும்* மூத்த குருமார்களையும் கூட்டிக்கொண்டு, 2 ‘குயவனின் நுழைவாசலுக்கு’ பக்கத்தில் இருக்கிற பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்குக்குப் போய் இந்த வார்த்தைகளை அறிவி: 3 ‘யூதாவின் ராஜாக்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“நான் சொல்வதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைவீர்கள்.* நான் இந்த இடத்தை அழிக்கப்போகிறேன். 4 ஏனென்றால், நீங்கள் என்னை விட்டுவிட்டு,+ உங்களுக்கும் உங்களுடைய முன்னோர்களுக்கும் யூதாவின் ராஜாக்களுக்கும் தெரியாத பொய் தெய்வங்களுக்கு இங்கே பலி செலுத்துகிறீர்கள். அப்பாவிகளை இங்கே கொன்று குவிக்கிறீர்கள்.+ இந்த இடத்தை அடையாளம் தெரியாதபடி மாற்றிவிட்டீர்கள்.+ 5 இங்கே பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, பாகாலுக்குத் தகன பலி கொடுப்பதற்காக உங்கள் பிள்ளைகளை நெருப்பில் சுட்டெரிக்கிறீர்கள்.+ இதை நான் செய்யச் சொல்லவே இல்லை. இப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.”’+
6 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நாட்கள் வரும். அப்போது இந்த இடம் தோப்பேத் என்றோ பென்-இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படும்.+ 7 யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் போடுகிற திட்டங்களை இங்கே நான் குலைத்துப்போடுவேன். அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் வாளுக்கு அவர்களைப் பலியாக்குவேன். அவர்களுடைய பிணங்களைப் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன்.+ 8 அதனால், அவர்களுடைய தேசத்துக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.* அந்த வழியாகப் போகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சி அடைவான், அதற்குக் கிடைத்த எல்லா தண்டனையையும் பார்த்துக் கேலி செய்வான்.+ 9 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகள் அவர்களைச் சுற்றிவளைப்பார்கள். அப்போது, அவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடுவார்கள். தங்களுடைய மகன்களையும் மகள்களையும்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.”’+
10 பின்பு, நீ கூட்டிக்கொண்டு போனவர்களுடைய கண் எதிரிலேயே அந்த மண்ஜாடியை உடைத்து நொறுக்கிப்போடு. 11 அதன்பின் அவர்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இப்படித்தான் இந்த ஜனங்களையும் இந்த நகரத்தையும் நான் நொறுக்கிப்போடுவேன். சுக்குநூறான மண்ஜாடியை ஒட்ட வைக்க முடியுமா? அதே கதிதான் இவர்களுக்கும் வரும். இறந்தவர்கள் தோப்பேத்தில் புதைக்கப்படுவார்கள். புதைப்பதற்கு இடமே இல்லாத அளவுக்கு அங்கே பிணங்கள் குவிந்திருக்கும்”+ என்று சொல்.’
12 யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இப்படித்தான் இந்த இடத்தையும் இந்த ஜனங்களையும் நான் அழிப்பேன். இந்த நகரத்தை நான் தோப்பேத்தைப் போல ஆக்கிவிடுவேன். 13 எருசலேம் ஜனங்களுடைய வீடுகளும் யூதாவின் ராஜாக்களுடைய அரண்மனைகளும் இந்த தோப்பேத்தைப்+ போலவே அசுத்தமாகும். ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில் அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் பலி செலுத்துகிறார்கள்.+ பொய் தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்’”+ என்று சொன்னார்.
14 யெகோவா சொன்னபடியே எரேமியா தோப்பேத்துக்குப் போய்த் தீர்க்கதரிசனம் சொன்னார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து அதன் பிரகாரத்தில் நின்றுகொண்டு எல்லா ஜனங்களிடமும், 15 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எல்லாரும் என் பேச்சைக் கேட்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டதால்+ நான் சொன்ன எல்லா தண்டனையையும் இந்த நகரத்துக்கும் நகர்ப்புறத்துக்கும் கொண்டுவரப் போகிறேன்’” என்று சொன்னார்.
20 எரேமியா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனங்களை இம்மேரின் மகன் பஸ்கூர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் யெகோவாவின் ஆலயத்தில் குருவாகவும் தலைமை ஆணையராகவும் இருந்தார். 2 எல்லாவற்றையும் கேட்ட பின்பு அவர் எரேமியாவைத் தடியால் அடிக்கவும், தொழுமரத்தில் மாட்டி வைக்கவும்+ உத்தரவு போட்டார். அந்தத் தொழுமரம் யெகோவாவின் ஆலயத்தில் ‘பென்யமீனின் உயர்ந்த நுழைவாசலுக்கு’ பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. 3 அடுத்த நாள், எரேமியாவை பஸ்கூர் விடுதலை செய்தார். அப்போது எரேமியா அவரிடம்,
“பஸ்கூர் என்ற உன் பெயரை மாகோர்மீசாபீப்*+ என்று யெகோவா மாற்றிவிட்டார். 4 ஏனென்றால், ‘உன்னையும் உன் நண்பர்களையும் திகிலடைய வைப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘உன்னுடைய கண் எதிரிலேயே அவர்கள் எதிரிகளின் வாளுக்குப் பலியாவார்கள்.+ யூதா முழுவதையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுப்பேன். அவன் யூதா ஜனங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போவான், அவர்களை வாளால் வெட்டிச் சாய்ப்பான்.+ 5 இந்த நகரத்தின் செல்வங்கள், வளங்கள், விலைமதிப்புள்ள பொருள்கள், ராஜாக்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையுமே எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.+ அவர்கள் அவற்றையெல்லாம் கைப்பற்றி பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.+ 6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் இருக்கிற எல்லாரும் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள். நீ அங்கே போய் செத்துப்போவாய். உன்னுடைய எல்லா நண்பர்களோடும் சேர்த்து அங்கே புதைக்கப்படுவாய். ஏனென்றால், நீ அவர்களிடம் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொன்னாய்’”+ என்றார்.
7 யெகோவாவே, என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!* உண்மையிலேயே ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!*
உங்கள் பலத்தால் என்னை ஜெயித்துவிட்டீர்கள்!+
கடவுளே, எல்லாரும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.
நாள் முழுவதும் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறார்கள்.+
8 நான் எப்போதுமே அவர்களிடம்,
“நகரம் நாசமாகப்போகிறது! அழிவு வரப்போகிறது!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
யெகோவாவே, உங்களுடைய செய்தியைச் சொல்வதால் ஜனங்கள் என்னை நாள் முழுவதும் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கண்டபடி பேசுகிறார்கள்.+
ஆனால், உங்களுடைய செய்தியைச் சொல்லாமல் என் நெஞ்சுக்குள் அடைத்து வைத்தபோது,
எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன்.
அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.
அந்த அவஸ்தையை அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.+
10 எனக்கு ஒரே திகிலாக இருந்தது.+
ஏனென்றால், ஜனங்கள் என்னைப் பற்றி ஏதேதோ பேசுவது என் காதில் விழுந்தது.
“அவனைக் கண்டிக்கலாம்! எல்லாரும் போய் அவனைக் கண்டிக்கலாம்!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள்.
எனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்கூட* என்னுடைய வீழ்ச்சிக்காகக் காத்திருந்தார்கள்.+
“இவன் ஏதாவது மடத்தனமாகச் செய்யாமலா போய்விடுவான்?
அப்போது இவனை மடக்கிப்பிடித்துப் பழிவாங்கிவிடலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.
11 ஆனால் யெகோவாவே, மிரள வைக்கும் ஒரு மாவீரரைப் போல நீங்கள் என்னோடு இருந்தீர்கள்.+
அதனால்தான், என்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் சறுக்கி விழுந்தார்கள், தோற்றுப்போனார்கள்.+
அவர்கள் ஜெயிக்கவே மாட்டார்கள். வெட்கப்பட்டும் கேவலப்பட்டும்தான் போவார்கள்.
அவர்களுக்கு வரும் அவமானம் காலத்துக்கும் மறக்கப்படாது.+
12 ஆனால், பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதிமான்களை சோதித்தறிகிறீர்கள்.
இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+
என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.+
என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.+
13 யெகோவாவைப் புகழுங்கள்! யெகோவாவைப் போற்றிப் பாடுங்கள்!
ஏனென்றால், எளியவனை அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து அவர் காப்பாற்றிவிட்டார்.
14 என் தாய் என்னைப் பெற்றெடுத்த நாள்
சாபக்கேடான நாளாகட்டும்!+
15 என் அப்பாவிடம் வந்து,
“உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!” என்று சொல்லி,
அவரைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தவன் சபிக்கப்படட்டும்!
16 யெகோவா பாவம்பார்க்காமல் அழித்த நகரங்களைப் போல அவன் ஆகட்டும்!
காலையில் அலறல் சத்தத்தையும் நடுப்பகலில் போர் முழக்கத்தையும் அவன் கேட்கட்டும்!
17 கருப்பையில் இருக்கும்போதே நான் ஏன் கொல்லப்படவில்லை?
தாயின் வயிற்றிலேயே நான் சமாதி ஆகியிருக்கக் கூடாதா?
என் தாய் என்னைப் பெற்றெடுக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா?+
21 யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார். 2 அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எங்களோடு போர் செய்ய வந்திருக்கிறான்.+ யெகோவா ஒருவேளை எங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்து அவனை எங்களைவிட்டுத் திரும்பிப் போக வைக்கலாம்.+ அப்படி நடக்குமா என்று தயவுசெய்து அவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.
3 அதனால் எரேமியா அவர்களிடம், “நீங்கள் சிதேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: 4 ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன்னை மதிலுக்கு வெளியே சுற்றிவளைத்திருக்கும் பாபிலோன் ராஜாவையும்+ கல்தேயர்களையும் தாக்குவதற்காக நீ கையில் வைத்திருக்கிற ஆயுதங்களை நான் உனக்கு எதிராகவே திருப்புவேன். அவற்றை* இந்த நகரத்தின் நடுவே கொண்டுவருவேன். 5 பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் என்னுடைய பலத்த கையை ஓங்கி,+ உனக்கு எதிராகப் போர் செய்வேன்.+ 6 இந்த நகரத்தில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் பயங்கரமான கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன்.+
7 அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+
8 இந்த ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் நான் உங்கள்முன் வைக்கிறேன். 9 இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+
10 ‘யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தை நான் காப்பாற்ற மாட்டேன், இதை அழித்தே தீருவேன்.+ இதை பாபிலோன் ராஜாவின் கையில்+ கொடுத்துவிடுவேன்.+ அவன் இதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.”
11 யூதாவின் ராஜாவுடைய குடும்பத்தாரே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 12 தாவீதின் வம்சத்தாரே, யெகோவா சொல்வது இதுதான்:
“ஒவ்வொரு நாளும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.
மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள்.+
நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால்+
என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+
அதை யாராலும் அணைக்க முடியாது.”’
13 யெகோவா சொல்வது இதுதான்: ‘பள்ளத்தாக்கில் குடியிருக்கிறவர்களே,
சமவெளியில் இருக்கிற மலைப்பாறைமேல் வாழ்கிறவர்களே, நான் உங்களோடு போர் செய்வேன்.
ஆனால் நீங்கள், “நமக்கு எதிராக யார் வரப்போகிறார்கள்?
நம் ஊர்களை யார் கைப்பற்றப்போகிறார்கள்?” என்று சொல்கிறீர்கள்.
14 நான் உங்களைத் தண்டிப்பேன்.
உங்களுடைய செயல்களுக்குத் தகுந்த கூலி கொடுப்பேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.
‘நான் உங்கள் காட்டுக்குத் தீ வைப்பேன்.
சுற்றியுள்ள எல்லாமே பொசுங்கிப்போகும்’+ என்று சொன்னார்.”
22 யெகோவா சொல்வது இதுதான்: “நீ யூதாவின் ராஜாவுடைய அரண்மனைக்குப் போய் இந்தச் செய்தியைச் சொல்: 2 ‘தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற யூதா ராஜாவே, நீங்களும் இந்த நுழைவாசல்கள் வழியாக வருகிற உங்கள் ஊழியர்களும் ஜனங்களும் யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 3 யெகோவா சொல்வது இதுதான்: “நியாயத்தோடும் நீதியோடும் நடந்துகொள்ளுங்கள். மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் யாரையும் மோசமாக நடத்தாதீர்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்* விதவைகளுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். அப்பாவிகளைக் கொலை செய்யாதீர்கள்.+ 4 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு நடந்தால், தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காரும் ராஜாக்கள் இந்த அரண்மனை வாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள்.+ அவர்களோடு அவர்களுடைய ஊழியர்களும் ஜனங்களும் வருவார்கள்.”’
5 ‘ஆனால், நீங்கள் இந்த வார்த்தைகளின்படி நடக்காவிட்டால் இந்த அரண்மனை இடிந்து பாழாகிப்போகும் என்று என்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’+ என யெகோவா சொல்கிறார்.
6 யூதாவின் ராஜாவுடைய அரண்மனையைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
‘நீ எனக்கு கீலேயாத்தைப் போலவும்,
லீபனோன் மலை உச்சியைப் போலவும் இருக்கிறாய்.
ஆனால், நான் உன்னை ஒரு வனாந்தரமாக மாற்றிவிடுவேன்.
உன்னுடைய நகரங்கள் எதிலுமே ஜனங்கள் குடியிருக்க மாட்டார்கள்.+
உன்னுடைய அருமையான தேவதாரு மரங்களை வெட்டிச் சாய்ப்பார்கள்.
அவற்றை நெருப்பில் போடுவார்கள்.+
8 இந்த நகரத்தின் வழியாகப் போகிற மற்ற ஜனங்கள், “இவ்வளவு பெரிய நகரத்தை யெகோவா ஏன் இப்படி அழித்துவிட்டார்?”+ என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள். 9 “அவர்கள் தங்களுடைய கடவுளான யெகோவாவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, மற்ற தெய்வங்களைக் கும்பிட்டதால்தான் அவர் அழித்துவிட்டார்”+ என்று சொல்லிக்கொள்வார்கள்.”’
10 இறந்தவனுக்காக அழாதீர்கள்.
அவனை நினைத்துத் துக்கப்படாதீர்கள்.
ஆனால், சிறைபிடிக்கப்பட்டுப் போகிறவனுக்காகக் கதறி அழுங்கள்.
ஏனென்றால், அவன் இனி தன்னுடைய தாய்நாட்டுக்குத் திரும்பவே மாட்டான்.
11 யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான். 12 சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலேயே செத்துப்போவான். இனி இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டான்.’+
13 கூலியாட்களுக்குக் கூலி கொடுக்காமல்,+
அவர்களை ஏமாற்றி வேலை வாங்கி,
தன்னுடைய அரண்மனையையும் மாடி அறைகளையும்
அநியாயமாகக் கட்டுகிறவனுக்குக் கேடுதான் வரும்.
14 ‘நான் ஒரு பெரிய மாளிகையைக் கட்டுவேன்.
அதற்கு நிறைய ஜன்னல்களை வைப்பேன்.
மாடியில் பெரிய பெரிய அறைகளைக் கட்டுவேன்.
சுவர்களில் தேவதாரு மரப்பலகைகளை அடித்து,
சிவப்பு நிறம் பூசுவேன்’ என்று அவன் சொல்லிக்கொள்கிறான்.
15 மற்ற யாரையும்விட நீதான் தேவதாரு மரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறாய் என்பதற்காக
நீ எப்போதுமே ராஜாவாக இருப்பாய் என்று நினைக்கிறாயோ?
உன் தகப்பனும் வயிறார சாப்பிட்டான், குடித்தான்.
ஆனால், நியாயத்தோடும் நீதியோடும் நடந்துகொண்டான்.+
அதனால், சந்தோஷமாக வாழ்ந்தான்.
16 ஏழை எளியவர்களுக்காக வாதாடினான்.
அதனால், அவனுக்கு எல்லாமே நல்லபடியாக நடந்தது.
‘அவன் என்னைப் பற்றி எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்!’ என்று யெகோவா சொல்கிறார்.
17 ‘ஆனால், நீ அநியாயமாக லாபம் சம்பாதிக்கவும்,
அப்பாவிகளைக் கொன்று குவிக்கவுமே ஆசைப்படுகிறாய்.
மோசடி செய்வதிலும் பணம் பறிப்பதிலுமே குறியாக இருக்கிறாய்.’
18 அதனால், யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கீமைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
‘யோயாக்கீம் சாகும்போது யாருமே ஒருவரை ஒருவர் பார்த்து,
“ஐயோ, என் சகோதரனே! ஐயோ, என் சகோதரியே!
ஐயோ, என் எஜமானே! ஐயோ, அவருடைய மகிமை போய்விட்டதே!”
என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்க மாட்டார்கள்.
19 செத்துப்போன கழுதை எப்படி இழுத்துக்கொண்டு போகப்பட்டு
எருசலேமின் நுழைவாசல்களுக்கு வெளியே+ தூக்கி வீசப்படுமோ
அப்படியே அவனும் தூக்கி வீசப்படுவான்.’+
20 நீ லீபனோனுக்கு ஏறிப்போய்க் கதறி அழு.
பாசானில் ஒப்பாரி வை.
அபாரீமில்+ ஓலமிடு.
உன் ஆசைக் காதலர்கள் எல்லாரும் அழிந்துபோனார்களே.+
21 நீ கவலையில்லாமல் வாழ்ந்தபோது நான் உன்னிடம் பேசினேன்.
ஆனால், ‘உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன்’+ என்று நீ சொன்னாய்.
சிறு வயதிலிருந்தே இப்படித்தான் நடந்திருக்கிறாய்.
என் பேச்சை மதிக்கவே இல்லை.+
22 உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று துரத்தியடிக்கும்.+
உன் ஆசைக் காதலர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.
உனக்கு வந்த கதியை நினைத்து நீ கூனிக்குறுகுவாய்.
23 லீபனோனில்+ குடியிருக்கிறவளே,
தேவதாரு மரங்களுக்கு+ நடுவே வாழ்கிறவளே,
வேதனை வரும்போது நீ கதறி அழுவாய்!
பிரசவ வலியில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிதுடிப்பாய்!+
24 யெகோவா சொல்வது இதுதான்: ‘யோயாக்கீமின்+ மகனும் யூதாவின் ராஜாவுமான கோனியாவே,*+ நீ என் வலது கையில் ஒரு முத்திரை மோதிரமாக இருந்தாலும் நான் உன்னைக் கழற்றி எறிவேன்! இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* 25 உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன். நீ பயந்து நடுங்குகிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயர்களின் கையிலும் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+ 26 உன்னையும் உன்னைப் பெற்றெடுத்தவளையும் வேறொரு தேசத்துக்குத் துரத்தியடிப்பேன். நீங்கள் அங்கேயே செத்துவிடுவீர்கள். 27 நீங்கள் திரும்பிவரத் துடிக்கிற தேசத்துக்குத் திரும்பிவரவே மாட்டீர்கள்.+
28 இந்த மனுஷனாகிய கோனியா உடைத்தெறியப்பட்ட ஒரு பானையா?
யாருக்குமே தேவைப்படாத ஒரு பாத்திரமா?
அவனும் அவன் சந்ததியும் ஏன் துரத்தப்படுகிறார்கள்?
முன்பின் தெரியாத தேசத்துக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?’+
29 பூமியே,* பூமியே, பூமியே, யெகோவாவின் செய்தியைக் கேள்.
30 யெகோவா சொல்வது இதுதான்:
‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,
வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.
ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.
அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+
23 “என் மேய்ச்சல் நிலத்திலுள்ள ஆடுகளை அழித்துக்கொண்டும் விரட்டியடித்துக்கொண்டும் இருக்கிற மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்” என்று யெகோவா சொல்கிறார்.+
2 அவருடைய ஜனங்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என் ஆடுகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவில்லை. அவற்றை விரட்டியடித்துக்கொண்டே இருந்தீர்கள். அவற்றைச் சிதறி ஓட வைத்தீர்கள்.”+
“நீங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் உங்களைத் தண்டிக்கப்போகிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.
3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+ 4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார்.
5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ 6 அவருடைய நாட்களில் யூதா ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்,+ இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.”
7 “ஆனால், காலம் வருகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அதுமுதல் ஜனங்கள், ‘இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்ல மாட்டார்கள். 8 அதற்குப் பதிலாக, ‘இஸ்ரவேல் வம்சத்தாரை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்றே சொல்வார்கள். அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்கள் வாழ்வார்கள்.”+
9 தீர்க்கதரிசிகளுக்கு நான் சொல்வது இதுதான்:
என் இதயம் நொறுங்கிவிட்டது.
என் எலும்புகளெல்லாம் நடுங்குகின்றன.
யெகோவாவின் பரிசுத்தமான வார்த்தைகளைக் கேட்டபோது,
குடிபோதையில் இருக்கிறவனைப் போல நான் ஆகிவிட்டேன்.
திராட்சமதுவைக் குடித்துத் தள்ளாடுகிறவனைப் போல ஆகிவிட்டேன்.
10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+
சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+
வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+
ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.*+
என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
தண்டனைத் தீர்ப்பின் வருஷத்திலே
நான் அவர்களை அழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
13 “சமாரியாவின்+ தீர்க்கதரிசிகள் அருவருப்பான காரியங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனங்கள் சொல்கிறார்கள்.
என் ஜனங்களான இஸ்ரவேலர்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.
14 எருசலேமின் தீர்க்கதரிசிகள் படுமோசமான காரியங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் முறைகேடான உறவு வைத்திருக்கிறார்கள்;+ பொய் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.+
மற்றவர்களை அக்கிரமம் செய்யத் தூண்டிவிடுகிறார்கள்.
கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தாமல் இருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாரும்
சோதோம்,+ கொமோரா+ ஜனங்களைப் போல இருக்கிறார்கள்.”
15 அதனால், பரலோகப் படைகளின் யெகோவா அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகச் சொல்வது இதுதான்:
“இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும்,
குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+
ஏனென்றால், எருசலேமின் தீர்க்கதரிசிகளுடைய பேச்சைக் கேட்டு தேசமே என்னைவிட்டு விலகுகிறது.”*
16 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“அந்தத் தீர்க்கதரிசிகள் உங்களுக்குச் சொல்லும் தீர்க்கதரிசனங்களைக் கேட்காதீர்கள்.+
அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.*
17 என்னை மதிக்காதவர்களிடம்,
‘“நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே போகிறவர்களிடம்,
‘உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது’+ என்று சொல்கிறார்கள்.
18 அவர்களில் யார் யெகோவாவின் நண்பராக இருந்து,
அவருடைய வார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொண்டார்கள்?
அவர்களில் யார் அவர் பேசுவதைக் கவனித்துக் கேட்டார்கள்?
19 இதோ! யெகோவாவின் கோபம் புயல்காற்றாய் வீசும்.
கெட்டவர்களின் தலைமேல் அது சூறாவளியாகச் சுழற்றியடிக்கும்.+
20 நினைத்ததைச் செய்து முடிக்கும்வரை
யெகோவாவின் கோபம் தணியாது.
கடைசி நாட்களில் இதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.
21 நான் அந்தத் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை, அவர்களாகவே முந்திக்கொண்டு போனார்கள்.
நான் அவர்களிடம் பேசவில்லை, அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+
22 அவர்கள் என் நண்பர்களாக இருந்திருந்தால்
என் ஜனங்களுக்கு என்னுடைய வார்த்தைகளைச் சொல்லியிருப்பார்கள்.
கெட்ட வழியையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்த அவர்களுக்கு உதவியிருப்பார்கள்.”+
23 “நான் பக்கத்தில் இருப்பதை மட்டும் பார்க்கிற கடவுளா? தூரத்தில் இருப்பதையும் பார்க்கிற கடவுள் இல்லையா?” என்று யெகோவா கேட்கிறார்.
24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார்.
“வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.
25 “என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது! எனக்கு ஒரு கனவு வந்தது!’+ என்று சொல்வதைக் கேட்டேன். 26 எவ்வளவு காலம்தான் இந்தத் தீர்க்கதரிசிகள் இப்படிப் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்? இவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்.+ 27 என் ஜனங்களுடைய முன்னோர்கள் பாகாலை+ வணங்கி என் பெயரை மறந்துவிட்டது போல இவர்களும் என் பெயரை மறந்துவிட வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்க்கதரிசிகள் தங்களுடைய கனவுகளைப் பற்றி இவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 28 கனவு கண்ட தீர்க்கதரிசிகள் அந்தக் கனவைச் சொல்லட்டும். ஆனால், என்னுடைய செய்தியைப் பெற்றவர்கள் அதை உண்மையோடு சொல்லட்டும்.”
“வைக்கோலும் தானியமும் ஒன்றா?” என்று யெகோவா கேட்கிறார்.
29 “என்னுடைய வார்த்தை நெருப்பு போலவும்,+ பாறையை உடைக்கிற சம்மட்டி போலவும்+ இருக்கிறது, அல்லவா?” என்று யெகோவா கேட்கிறார்.
30 “மற்றவர்களிடம் என் வார்த்தைகளை மாற்றிப் பேசுகிற*+ தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
31 “‘கடவுள் சொல்கிறார்!’+ என்று தாங்களாகவே சொல்லிக்கொள்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
32 “கனவு கண்டதாகக் கதையடித்து, பெருமையடித்து என் ஜனங்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசிகளை+ நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“ஆனால், நான் அவர்களை அனுப்பவோ அவர்களுக்குக் கட்டளை கொடுக்கவோ இல்லை. அதனால், அவர்கள் இந்த ஜனங்களுக்கு எந்த விதத்திலும் நல்லது செய்ய மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
33 “இந்த ஜனங்களிலோ தீர்க்கதரிசிகளிலோ குருமார்களிலோ ஒருவன் உன்னிடம், ‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’* என்று சொன்னால், ‘“நீங்கள் எல்லாரும்தான் அவருக்குப் பாரமாக இருக்கிறீர்கள்! நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனச் சொல்ல வேண்டும். 34 இந்த ஜனங்களிலோ தீர்க்கதரிசிகளிலோ குருமார்களிலோ ஒருவன், ‘யெகோவாவின் செய்திதான் பாரமாக இருக்கிறது’ என்று சொன்னால் நான் அவனையும் அவன் குடும்பத்தாரையும் தண்டிப்பேன். 35 நீங்கள் உங்களுடைய சகோதரனிடமும் மற்றவர்களிடமும், ‘யெகோவா என்ன சொல்கிறார்? யெகோவாவின் செய்தி என்ன?’ என்று கேட்கிறீர்கள். 36 அதேசமயத்தில், யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறதென்று சொல்கிறீர்கள். இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள். உங்களுடைய வார்த்தைகள்தான் பாரமாக இருக்கின்றன. ஏனென்றால், நம்முடைய கடவுளும் உயிருள்ள கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொன்ன வார்த்தைகளை நீங்கள்தான் மாற்றிப் பேசுகிறீர்கள்.
37 நீ தீர்க்கதரிசியிடம், ‘யெகோவா உன்னிடம் என்ன சொன்னார்? யெகோவாவின் செய்தி என்ன?’ என்று கேட்டுவிட்டு, 38 ‘“யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டு இருந்தால், யெகோவா உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: “‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’ என்று நீ சொல்லக் கூடாதென நான் சொல்லியும், நீ ‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’ என்று சொல்வதால், 39 நான் உன்னை என் முன்னாலிருந்து தூக்கியெறிந்துவிடுவேன். உனக்கும் உன் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த நகரத்தை அழித்துவிடுவேன். 40 நீ என்றென்றைக்கும் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகிப் போவாய். உனக்கு வரும் அவமானம் ஒருநாளும் மறக்கப்படாது”+ என்று சொல்ல வேண்டும்.’”
24 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன. 2 ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அவை முதன்முதலாகப் பழுத்த அத்திப் பழங்களைப் போல மிகவும் நன்றாக இருந்தன. இன்னொரு கூடையில் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருந்தன. அவை சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போயிருந்தன.
3 யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். ஒரு கூடையில் மிகவும் நல்ல அத்திப் பழங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னொரு கூடையில் சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருக்கின்றன”+ என்று சொன்னேன்.
4 அப்போது யெகோவா என்னிடம், 5 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவிலிருந்து கல்தேயர்களின் தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன். 6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+ 7 யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்ளும் இதயத்தை நான் அவர்களுக்குத் தருவேன்.+ அவர்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+
8 சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவும்,+ அவனுடைய அதிகாரிகளும், எருசலேமின் அழிவில் தப்பித்தவர்களும், அதாவது இந்தத் தேசத்திலும் எகிப்திலும்+ வாழ்கிறவர்களும், கெட்டுப்போன அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். 9 அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 10 அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.”
25 யோசியாவின் மகன் யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ அதாவது நேபுகாத்நேச்சார் பாபிலோனை ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில், யூதா ஜனங்களைப் பற்றி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 2 யூதாவிலும் எருசலேமிலும் இருந்த எல்லா ஜனங்களையும் பற்றி* எரேமியா தீர்க்கதரிசி சொன்னது இதுதான்:
3 “ஆமோனின் மகன் யோசியா யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்திலிருந்து+ இந்த 23 வருஷங்களாக யெகோவா என்னிடம் பல செய்திகளைச் சொன்னார். அவற்றை நான் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை.+ 4 யெகோவா தன்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பினார். ஆனால், அவர்கள் சொன்னதை நீங்கள் காதில் வாங்கவே இல்லை.+ 5 அவர்கள் உங்களிடம், ‘தயவுசெய்து உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள்.+ அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா கொடுத்த தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள். 6 மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள்; உங்கள் கைகளால் செய்த சிலைகளைக் கும்பிட்டு அவருடைய கோபத்தைக் கிளறாதீர்கள். அப்படிச் செய்தால் அவர் உங்களைத் தண்டிப்பார்’ என்று சொன்னார்கள்.
7 இப்போது யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் உங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்கி என் கோபத்தைக் கிளறினீர்கள். அதனால், உங்களுக்கு நீங்களே அழிவைத் தேடிக்கொண்டீர்கள்.’+
8 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘“நீங்கள் என் பேச்சைக் கேட்காததால், 9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.* 10 அங்கே கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது.+ மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் மாவு அரைக்கும் சத்தமும் கேட்காது.+ விளக்கும் எரியாது. 11 இந்தத் தேசம் சின்னாபின்னமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும். இவர்கள் எல்லாரும் 70 வருஷங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்வார்கள்.”’+
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+ 13 அதற்கு எதிராக நான் சொன்ன எல்லாவற்றையும் நடத்திக் காட்டுவேன். எல்லா தேசத்தாருக்கு எதிராகவும் எரேமியா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுவேன். 14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+
15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா என்னிடம், “என் கையில் இருக்கிற கோபம் என்கிற திராட்சமதுக் கிண்ணத்தை வாங்கிக்கொள். நான் உன்னை அனுப்பும் தேசங்களில் இருக்கிற ஜனங்களுக்கு அதைக் குடிக்கக் கொடு. 16 அவர்கள் அதைக் குடித்துத் தள்ளாடி, பைத்தியக்காரர்களைப் போல நடந்துகொள்வார்கள். ஏனென்றால், அவர்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”+ என்று சொன்னார்.
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ 18 முதலில் எருசலேமுக்கும் யூதா நகரங்களுக்கும்+ அவற்றின் ராஜாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். பார்க்கிறவர்கள் பழித்தும் சபித்தும் பேசுமளவுக்கு அவர்களுக்கும் அவர்களுடைய நகரங்களுக்கும் கோரமான அழிவு வருவதற்காக அப்படிச் செய்தேன்.+ இன்று அப்படிப்பட்ட அழிவுதான் வந்திருக்கிறது. 19 பின்பு எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும்,+ 20 எகிப்தில் இருக்கிற மற்ற தேசத்தாருக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். ஊத்ஸ் தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும், பெலிஸ்திய தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ அதாவது அஸ்கலோனின் ராஜாவுக்கும்,+ காசாவின் ராஜாவுக்கும், எக்ரோனின் ராஜாவுக்கும், அஸ்தோத்தில் மீதியாக இருக்கிறவர்களின் ராஜாவுக்கும், 21 பின்பு ஏதோமுக்கும்,+ மோவாபுக்கும்,+ அம்மோனியர்களுக்கும்,+ 22 தீருவின் ராஜாக்கள் எல்லாருக்கும், சீதோனின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ கடலிலுள்ள தீவின் ராஜாக்களுக்கும், 23 தேதானுக்கும்,+ தீமாவுக்கும், பூசுக்கும், நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக் கொண்டவர்களுக்கும்,+ 24 அரேபியர்களின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ வனாந்தரத்தில் குடியிருக்கிற பலதரப்பட்ட ஜனங்களின் ராஜாக்களுக்கும், 25 சிம்ரியின் ராஜாக்கள் எல்லாருக்கும், ஏலாமின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ மேதியர்களின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ 26 வடக்கே பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற ராஜாக்கள் எல்லாருக்கும் அடுத்தடுத்து அதைக் குடிக்கக் கொடுத்தேன். உலகத்தில் இருக்கிற மற்ற எல்லா ராஜ்யங்களுக்கும் கொடுத்தேன். அவர்கள் குடித்த பின்பு சேசாக்கு* ராஜா+ அதைக் குடிப்பான்.
27 “நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “போதை ஏறுமளவுக்குக் குடியுங்கள், வாந்தியெடுங்கள், கீழே விழுங்கள், எழுந்திருக்க முடியாதபடி கிடங்கள்.+ ஏனென்றால், உங்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”’ என்று சொல். 28 அவர்கள் உன்னிடமிருந்து கிண்ணத்தை வாங்கிக் குடிக்க மறுத்தால் நீ அவர்களிடம் இப்படிச் சொல்ல வேண்டும்: ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் குடித்தே தீர வேண்டும்! 29 என் பெயர் தாங்கிய நகரத்தையே நான் முதலில் தண்டிக்கப்போகிறேன்+ என்றால் உங்களைத் தண்டிக்காமல் விடுவேனா?”’+
‘நான் உங்களைத் தண்டிக்காமல் விட மாட்டேன். உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் எதிராக நான் ஒரு வாளை அனுப்புவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
30 நீ அவர்களிடம் இந்த எல்லா தீர்க்கதரிசனங்களையும் தெரிவித்துவிட்டு இப்படிச் சொல்:
‘யெகோவா பரலோகத்திலிருந்து சிங்கம்போல் கர்ஜிப்பார்.
அவருடைய பரிசுத்தமான இடத்திலிருந்து முழங்குவார்.
பூமியில் அவர் தங்குகிற இடத்துக்கு எதிராகச் சத்தமாகக் கர்ஜிப்பார்.
திராட்சரச ஆலையில் மிதிக்கிறவர்களைப் போலச் சத்தமிடுவார்.
உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களையும் வீழ்த்திவிட்டு வெற்றிப் பாடலைப் பாடுவார்.’
31 யெகோவா சொல்வது இதுதான்:
‘ஒரு சத்தம் பூமியெங்கும் எதிரொலிக்கும்.
தேசங்களோடு யெகோவாவுக்கு ஒரு வழக்கு இருக்கிறது.
எல்லா மனுஷர்களுக்கும் அவரே தீர்ப்பு சொல்வார்.+
கெட்டவர்களை வாளுக்குப் பலியாக்குவார்.’
32 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
‘இதோ, தேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழியும்.+
பூமியின் தொலைதூரத்திலிருந்து ஒரு பெரிய புயல்காற்று புறப்பட்டு வரும்.+
33 அன்று யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள். அவர்கள் அள்ளப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும், அப்படியே நிலத்தில் எருவாகிப்போவார்கள்.’
34 மேய்ப்பர்களே, ஓலமிட்டு அழுங்கள்!
மந்தையிலுள்ள பிரபலமானவர்களே, மண்ணில் புரளுங்கள்!
நீங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதற்கும் சிதறிப்போவதற்கும் நேரம் வந்துவிட்டது!
கீழே விழுந்து நொறுங்கும் விலைமதிப்புள்ள ஜாடியைப் போல நீங்கள் ஆகிவிடுவீர்கள்!
35 ஓடி ஒளிய மேய்ப்பர்களுக்கு இடமே இருக்காது.
மந்தையிலுள்ள பிரபலமானவர்களால் தப்பிக்கவே முடியாது.
36 மேய்ப்பர்களின் அலறலைக் கேளுங்கள்.
மந்தையிலுள்ள பிரபலமானவர்களின் கதறலைக் கேளுங்கள்.
யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் நிலங்களைப் பாழாக்குகிறார்.
37 அவர்கள் நிம்மதியாக வாழ்ந்த இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஏனென்றால், யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது.
38 அவர் இளம் சிங்கத்தைப் போலக் குகையிலிருந்து சீறிக்கொண்டு வந்தார்.+
கொடூரமான வாளினாலும்
அவருடைய பயங்கரமான கோபத்தினாலும்
தேசத்துக்குக் கோரமான முடிவு வந்துவிட்டது.”
26 யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி வந்தது: 2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யெகோவாவின் ஆலயப் பிரகாரத்துக்குப் போய் நின்றுகொண்டு, யெகோவாவை வணங்குவதற்காக யூதாவின் நகரங்களிலிருந்து ஆலயத்துக்கு வருகிற எல்லா ஜனங்களிடமும் பேசு. நான் உன்னைச் சொல்லச் சொல்கிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அதில் ஒரு வார்த்தையைக்கூட விட்டுவிடாதே. 3 அவர்கள் ஒருவேளை அதைக் கேட்டு தங்களுடைய கெட்ட வழிகளையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்தலாம். அப்போது, நான் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+ 4 நீ அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தை* நீங்கள் கடைப்பிடிக்காமல் போனால், 5 நான் திரும்பத் திரும்ப அனுப்பிய என் ஊழியர்களான தீர்க்கதரிசிகளின் பேச்சை இதுவரை கேட்காததுபோல் இனியும் கேட்காமல் போனால்,+ 6 நான் இந்த ஆலயத்தை சீலோவைப்+ போல் பாழாக்கிவிடுவேன். பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் இந்த நகரத்தைப் பார்த்து சபிக்கும்படி செய்வேன்’+ என்று சொல்ல வேண்டும்.”’”
7 யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா சொன்ன இந்த வார்த்தைகளை குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.+ 8 யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா சொல்லி முடித்த பின்பு அந்தக் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம். 9 ‘இந்த ஆலயம் சீலோவைப் போலப் பாழாக்கப்படும்’ என்றும், ‘இந்த நகரம் யாருமே குடியிருக்க முடியாதளவுக்கு நாசமாக்கப்படும்’ என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஏன் சொன்னாய்?” என்று மிரட்டினார்கள். அப்போது, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.
10 யூதாவின் அதிகாரிகள் எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜாவின் அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தார்கள். பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய நுழைவாசலில் உட்கார்ந்தார்கள்.+ 11 அவர்களிடமும் ஜனங்களிடமும் அங்கிருந்த குருமார்களும் தீர்க்கதரிசிகளும் இப்படிச் சொன்னார்கள்: “இவனுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான் சரி.+ நீங்களே உங்கள் காதால் கேட்டது போல, இந்த நகரம் நாசமாக்கப்படும் என்று இவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.”+
12 அப்போது எரேமியா அந்த அதிகாரிகளையும் ஜனங்களையும் பார்த்து, “இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல யெகோவாதான் என்னை அனுப்பினார். அவர் சொல்லச் சொன்னதைத்தான் உங்களிடம் சொன்னேன்.+ 13 அதனால், உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேளுங்கள். அப்போது, யெகோவா தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, உங்களுக்குக் கொடுக்கப்போவதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்.+ 14 இப்போது நான் உங்கள் கையில் இருக்கிறேன். உங்கள் இஷ்டப்படி என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். 15 ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் என்னைக் கொன்றுவிட்டால், ஒரு அப்பாவியைக் கொன்ற பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின் மேலும் இந்த ஜனங்கள்மேலும் சுமத்திக்கொள்வீர்கள். ஏனென்றால், இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பியது உண்மையில் யெகோவாதான்” என்றார்.
16 அப்போது அதிகாரிகளும் எல்லா ஜனங்களும், அந்தக் குருமார்களையும் தீர்க்கதரிசிகளையும் பார்த்து, “இவன் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் பெயரில்தான் பேசியிருக்கிறான். அதனால், இவனுக்கு மரண தண்டனை கொடுப்பது சரியல்ல” என்றார்கள்.
17 அதோடு, ஊர்ப் பெரியோர்கள் சிலர் எழுந்து, சபையாகக் கூடிவந்த எல்லா ஜனங்களையும் பார்த்து இப்படிச் சொன்னார்கள்: 18 “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“வயலைப் போல சீயோன் உழப்படும்.
எருசலேம் மண்மேடாகும்.+
ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+
என்று சொன்னார்.
19 அதைக் கேட்டபோது யூதாவின் ராஜா எசேக்கியாவும் யூதா ஜனங்களும் அவரைக் கொன்றுவிட்டார்களா? இல்லையே. அதற்குப் பதிலாக, எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து யெகோவாவின் கருணைக்காகக் கெஞ்சினாரே. அதனால், யெகோவாவும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அவர்களுக்குக் கொடுக்கப்போவதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் விட்டுவிட்டாரே.+ ஆனால், இப்போது நமக்கு நாமே பேரழிவைக் கொண்டுவரப் பார்க்கிறோம்.
20 கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார். 21 யோயாக்கீம் ராஜாவும்+ அவருடைய மாவீரர்களும் அதிகாரிகளும் அதைக் கேட்டார்கள். அதனால், ஊரியாவைக் கொலை செய்ய ராஜா முடிவுசெய்தார்.+ அதைக் கேள்விப்பட்ட ஊரியா பயந்துபோய் எகிப்துக்குத் தப்பியோடினார். 22 அப்போது யோயாக்கீம் ராஜா, அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும்+ இன்னும் சில ஆட்களையும் எகிப்துக்கு அனுப்பினான். 23 அவர்கள் எகிப்துக்குப் போய் ஊரியாவைப் பிடித்து யோயாக்கீம் ராஜாவிடம் கொண்டுவந்தார்கள். ராஜா அவரை வாளால் வெட்டி,+ அவருடைய உடலைப் பொது ஜனங்களுடைய கல்லறையிலே தூக்கி வீசினான்.”
24 ஆனால், சாப்பானின் மகனாகிய+ அகிக்காம்+ எரேமியாவுக்கு ஆதரவாக இருந்ததால், எரேமியா ஜனங்களுடைய கையில் சாகாமல் தப்பித்துக்கொண்டார்.+
27 யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் மகன் யோயாக்கீம்* ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது: 2 “யெகோவா என்னிடம் சொன்னது இதுதான்: ‘நீ வார்களையும் நுகத்தடிகளையும் செய்து உன் கழுத்தில் மாட்டிக்கொள். 3 பின்பு ஏதோமின் ராஜாவுக்கும்,+ மோவாபின் ராஜாவுக்கும்,+ அம்மோனியர்களின் ராஜாவுக்கும்,+ தீருவின் ராஜாவுக்கும்,+ சீதோனின் ராஜாவுக்கும்+ அவற்றைக் கொடுத்தனுப்பு. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்ப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்களின் கையில் அவற்றைக் கொடுத்தனுப்பு. 4 அப்போது அவர்களிடம் இப்படிச் சொல்:
“இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்லும் இந்த வார்த்தைகளை உங்கள் எஜமான்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும். 5 ‘நான்தான் இந்தப் பூமியையும் மனுஷர்களையும் பூமியில் நடமாடுகிற மிருகங்களையும் என்னுடைய மகா வல்லமையினாலும் பலத்தினாலும் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கு அவற்றைக் கொடுக்கிறேன்.+ 6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன். 7 எல்லா தேசத்தாரும் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வார்கள். ஆனால், பிற்பாடு அவனுடைய தேசமே கைப்பற்றப்படும்.+ பல தேசத்தாரும் பெரிய பெரிய ராஜாக்களும் அவனை அடிமைப்படுத்துவார்கள்.’+
8 யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிய மறுக்கிற தேசத்தை அல்லது ராஜ்யத்தை நான் அவனுடைய கையாலேயே அடியோடு அழிக்கும்வரை அதை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.’
9 ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள். 10 அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் நீங்கள் எல்லாரும் தூர தேசத்துக்குக் கொண்டுபோகப்படுவீர்கள். நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்கள் அழிந்துபோவீர்கள்.
11 ஆனால், பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிகிற தேசத்தாரை நான் அவர்களுடைய தேசத்திலேயே விட்டுவைப்பேன். அவர்கள் அங்கேயே பயிர்செய்து அங்கேயே வாழ்வார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”
12 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடமும்+ நான் அதே செய்தியைச் சொன்னேன். அவரிடம், “பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அடிபணிந்து நடங்கள். அப்போது நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.+ 13 பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யாத தேசத்தாரை வாளினாலும்+ பஞ்சத்தினாலும்+ கொள்ளைநோயினாலும்+ தாக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறாரே. நீங்களும் உங்கள் ஜனங்களும் ஏன் அவர் கையில் சாக வேண்டும்? 14 ‘நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்’+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+
15 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் அவர்களை அனுப்பவில்லை. அவர்களாகவே என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்களும் உங்கள் தீர்க்கதரிசிகளும் அழிந்துபோவீர்கள்’+ என்றேன்.”
16 குருமார்களிடமும் எல்லா ஜனங்களிடமும் இப்படிச் சொன்னேன்: “யெகோவா சொல்வது இதுதான்: ‘“இதோ, யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்கள் சீக்கிரத்திலேயே திரும்பக் கொண்டுவரப்படும்”+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ 17 அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது உயிர்பிழைப்பீர்கள்.+ இந்த நகரம் ஏன் அழிய வேண்டும்? 18 அவர்கள் உண்மையிலேயே யெகோவாவின் வார்த்தைகளைச் சொல்லும் தீர்க்கதரிசிகளாக இருந்தால், யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களை பாபிலோன் ராஜா கொண்டுபோகாதபடி பரலோகப் படைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும்.’
19 இந்த நகரத்தில் மீதியிருக்கிற பாத்திரங்களையும், தூண்களையும்,+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்,*+ தள்ளுவண்டிகளையும்+ குறித்து பரலோகப் படைகளின் யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். 20 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதா மற்றும் எருசலேமின் பிரமுகர்களையும் நேபுகாத்நேச்சார் ராஜா எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவற்றை எடுத்துச் செல்லவில்லை.+ 21 இப்போது யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களைக் குறித்து இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: 22 ‘“அவை பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.+ நான் நடவடிக்கை எடுக்கும் நாள்வரை அவை அங்கேயே இருக்கும். பின்பு, நான் அவற்றை மறுபடியும் இந்த இடத்துக்கே கொண்டுவருவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
28 அதே வருஷத்தில், அதாவது சிதேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷம் ஐந்தாம் மாதத்தில், கிபியோனைச்+ சேர்ந்த ஆசூரின் மகனாகிய அனனியா தீர்க்கதரிசி யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தான். அங்கே குருமார்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் என்னிடம் இப்படிச் சொன்னான்: 2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை நான் உடைத்துப்போடுவேன்.+ 3 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்து கொண்டுபோன எல்லா பாத்திரங்களையும் இரண்டே வருஷத்தில் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன்.’”+ 4 “யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்+ யூதாவிலிருந்து பாபிலோனுக்குச்+ சிறைபிடிக்கப்பட்டுப் போன மற்ற எல்லா ஜனங்களையும் நான் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.’”
5 அப்போது எரேமியா தீர்க்கதரிசி, யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த குருமார்களுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் அனனியா தீர்க்கதரிசியிடம், 6 “ஆமென்!* யெகோவா இதைச் செய்யட்டும்! யெகோவா நீ சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றட்டும்! யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்களையும் அங்கே சிறைபிடிக்கப்பட்டுப் போன ஜனங்களையும் அவர் மறுபடியும் இங்கே கொண்டுவரட்டும்! 7 ஆனால், இப்போது நான் உனக்கும் இந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் சொல்லப்போகிற செய்தியைத் தயவுசெய்து கேள். 8 எனக்கும் உனக்கும் முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், பல தேசங்களையும் பெரிய ராஜ்யங்களையும் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னபோது, போரும் பேராபத்தும் கொள்ளைநோயும் வருமென்றுதான் சொன்னார்கள். 9 அப்படியிருக்கும்போது, சமாதானம் வருமென்று ஒரு தீர்க்கதரிசி சொன்னால், அவர் சொன்னபடி நடக்க வேண்டும். அப்போதுதான், அவர் உண்மையிலேயே யெகோவாவினால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பது தெரியவரும்” என்றார்.
10 அதைக் கேட்டதும் அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்டான்.+ 11 பின்பு எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதேபோல், இரண்டே வருஷத்தில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியை எல்லா தேசத்தாருடைய கழுத்திலிருந்தும் நான் எடுத்து உடைத்துப்போடுவேன்’”+ என்று சொன்னான். அப்போது, எரேமியா தீர்க்கதரிசி அங்கிருந்து கிளம்பிப் போனார்.
12 அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்ட சம்பவத்துக்குப் பின்பு யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 13 “நீ அனனியாவிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ மர நுகத்தடிகளை உடைத்தாய்.+ ஆனால், அவற்றுக்குப் பதிலாக இரும்பு நுகத்தடிகளை உண்டாக்குவாய்.” 14 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு அடிபணியும்படி இந்த எல்லா தேசத்தார்மேலும் நான் இரும்பு நுகத்தடியை வைப்பேன். அவர்கள் அவனுக்கு அடிபணிய வேண்டும்.+ காட்டு மிருகங்களைக்கூட நான் அவனுக்கு அடிபணிய வைப்பேன்”’+ என்று சொல்ல வேண்டும்.”
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம்,+ “அனனியாவே, தயவுசெய்து கேள்! யெகோவா உன்னை அனுப்பவில்லை. நீ பொய் பேசி இந்த ஜனங்களை ஏமாற்றியிருக்கிறாய்.+ 16 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக நீ ஜனங்களைத் தூண்டியதால் இந்த வருஷமே செத்துப்போவாய்’”+ என்று சொன்னார்.
17 அதன்படியே, அனனியா தீர்க்கதரிசி அந்த வருஷம் ஏழாம் மாதம் இறந்துபோனான்.
29 நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த பெரியோர்களுக்கும்* குருமார்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். 2 எகொனியா ராஜாவும்,+ அவருடைய தாயும்,*+ அரண்மனை அதிகாரிகளும், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களும், கைத்தொழிலாளிகளும், கொல்லர்களும்* சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு+ 3 எரேமியா அந்தக் கடிதத்தை சாப்பானின் மகன்+ எலாசாவிடமும் இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் கொடுத்தனுப்பினார். ஏனென்றால், சிதேக்கியா ராஜா+ இவர்கள் இரண்டு பேரையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் போகச் சொல்லியிருந்தார். அந்தக் கடிதத்தில் எரேமியா எழுதியது இதுதான்:
4 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கைதிகளாக அனுப்பிய எல்லா ஜனங்களுக்கும் இப்படிச் சொல்கிறார்: 5 ‘வீடுகளைக் கட்டி அதில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதன் விளைச்சலைச் சாப்பிடுங்கள். 6 கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வையுங்கள். அவர்களும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளட்டும். அங்கே ஏராளமாகப் பெருகுங்கள், எண்ணிக்கையில் குறைந்துவிடாதீர்கள். 7 நான் உங்களை அனுப்பியிருக்கிற நகரத்தில் சமாதானமாக இருங்கள்.* அந்த நகரத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், நகரம் சமாதானமாக இருந்தால் நீங்களும் சமாதானமாக இருப்பீர்கள்.+ 8 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “உங்களோடு இருக்கிற தீர்க்கதரிசிகளையும் குறிசொல்கிறவர்களையும் நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.+ கனவு கண்டதாக அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்காதீர்கள். 9 யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை.’”’”+
10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+
11 யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.+ உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.+ 12 நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.’+
13 ‘நீங்கள் என்னை முழு இதயத்தோடு+ நாடித் தேடுவீர்கள்; அதனால், என்னைக் கண்டடைவீர்கள்.+ 14 என்னைக் கண்டடைய நான் உங்களுக்கு உதவுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ உங்களைத் துரத்தியடித்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
15 ஆனால் நீங்கள், ‘யெகோவா எங்களுக்காக பாபிலோனில் தீர்க்கதரிசிகளைத் தந்திருக்கிறார்’ என்று சொல்கிறீர்கள்.
16 தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவுக்கும்,+ இந்த நகரத்தில் வாழ்கிற எல்லா ஜனங்களுக்கும், அதாவது உங்களோடுகூட சிறைபிடிக்கப்படாத உங்கள் சகோதரர்களுக்கும், யெகோவா சொல்வது இதுதான்: 17 ‘பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் அவர்களுக்கு எதிராக வாளையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் அனுப்புகிறேன்.+ சாப்பிடவே முடியாதளவுக்கு அழுகிப்போன* அத்திப் பழங்களைப் போல அவர்களை ஆக்குவேன்.”’+
18 ‘நான் அவர்களை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தாக்குவேன். அவர்களுக்கு வரும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே அதிர்ச்சி அடையும்,+ கதிகலங்கிப்போகும். நான் அவர்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிறவர்கள் அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ அவர்களைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+ 19 இதற்கெல்லாம் காரணம், நான் என் ஊழியர்களான தீர்க்கதரிசிகளைத் திரும்பத் திரும்ப அனுப்பியும் அவர்கள் என் பேச்சைக் கேட்காததுதான்’+ என்று யெகோவா சொல்கிறார்.
‘நீங்களும் என் பேச்சைக் கேட்கவில்லை’+ என்று யெகோவா சொல்கிறார்.
20 எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கைதிகளாக யெகோவா அனுப்பிய ஜனங்களே, அவருடைய செய்தியைக் கேளுங்கள். 21 அவருடைய பெயரில் பொய்த் தீர்க்கதரிசனங்கள் சொல்கிற கொலாயாவின் மகன் ஆகாபைப் பற்றியும் மாசெயாவின் மகன் சிதேக்கியாவைப் பற்றியும் இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:+ ‘நான் அவர்களை பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகவே கொலை செய்வான். 22 பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா ஜனங்கள் எல்லாரும் அவர்களுக்கு நடந்ததைச் சொல்லி மற்றவர்களைச் சபிப்பார்கள். அதாவது, “பாபிலோன் ராஜாவினால் சுட்டெரிக்கப்பட்ட சிதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் யெகோவா உன்னை அழிக்கட்டும்!” என்று சொல்லி சபிப்பார்கள். 23 அவர்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலில் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள்.+ மற்றவர்களுடைய மனைவிகளோடு முறைகேடான உறவு வைத்துக்கொண்டு, நான் சொல்லாத விஷயங்களை என் பெயரில் பொய்யாகச் சொன்னார்கள்.+
“அது எனக்கு நன்றாகத் தெரியும், அதற்கு நானே சாட்சி”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
24 “நெகெலாமைச் சேர்ந்த செமாயாவிடம்+ நீ இப்படிச் சொல்: 25 ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும், குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவுக்கும்,+ மற்ற எல்லா குருமார்களுக்கும் உன் பெயரில் நீ இப்படிக் கடிதம் எழுதி அனுப்பினாய்: 26 ‘யோய்தாவுக்குப் பதிலாக செப்பனியாவாகிய உங்களைக் குருவாக யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்வதற்கும் தீர்க்கதரிசியைப் போலப் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்கிறவர்களைப் பிடித்து தொழுமரங்களில் மாட்டி+ வைப்பதற்கும் அவர் உங்களை நியமித்திருக்கிறார். 27 அப்படியிருக்கும்போது, தீர்க்கதரிசி போல+ ஜனங்களிடம் நடந்துகொள்கிற ஆனதோத்+ ஊர்க்காரனாகிய எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறீர்கள்? 28 அவன் பாபிலோனிலிருந்த எங்களுக்கே கடிதம் எழுதி, “நீங்கள் விடுதலையாவதற்கு இன்னும் ரொம்பக் காலம் எடுக்கும். அதனால் வீடுகளைக் கட்டி அதில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதன் விளைச்சலைச் சாப்பிடுங்கள்,+—” என்று சொன்னான்.’”’”
29 தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்குமுன் குருவாகிய செப்பனியா+ அந்தக் கடிதத்தைப் படித்தபோது, 30 யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 31 “சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “செமாயாவை நான் அனுப்பவில்லை. அவனாகவே உங்களிடம் தீர்க்கதரிசனம் சொன்னான். பொய்கள் சொல்லி உங்களை ஏமாற்ற நினைத்தான்.+ 32 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவையும் அவன் சந்ததியையும் நான் தண்டிப்பேன். அவர்களில் ஒருவன்கூட என்னுடைய ஜனங்களோடு சேர்ந்து தப்பிக்க மாட்டான். என் ஜனங்களுக்கு நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை அவன் பார்க்க மாட்டான். ஏனென்றால், யெகோவாவாகிய எனக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அவன் ஜனங்களைத் தூண்டியிருக்கிறான்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”
30 எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்: 2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் உன்னிடம் சொல்கிற எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது. 3 “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
4 இஸ்ரவேல் ஜனங்களிடமும் யூதா ஜனங்களிடமும் யெகோவா சொன்ன வார்த்தைகள் இவை.
5 யெகோவா சொல்வது இதுதான்:
“அலறல் சத்தம் கேட்கிறது.
எங்கு பார்த்தாலும் திகில்! சமாதானமே இல்லை.
6 ஒரு ஆண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியுமா என்று தயவுசெய்து கேட்டுப் பாருங்கள்.
அப்படியிருக்கும்போது, பலசாலியான ஆண்கள் ஏன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்?
பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல ஏன் துடிக்கிறார்கள்?+
ஏன் எல்லாருடைய முகமும் வெளுத்துப்போயிருக்கிறது?
7 ஐயோ! அந்த நாள் பயங்கரமான நாள்!+
அதுபோல் ஒரு நாள் வந்ததே கிடையாது!
அது யாக்கோபுக்கு வேதனையான நாள்.
ஆனாலும், அந்த வேதனையிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.”
8 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அந்த நாளில் நான் அவர்கள் கழுத்திலுள்ள நுகத்தடியை உடைத்துப்போடுவேன். அவர்களுடைய வார்களை இரண்டாக அறுத்துவிடுவேன். முன்பின் தெரியாதவர்கள்* இனி அவர்களை அடிமையாக்க மாட்டார்கள். 9 அவர்களுடைய கடவுளான யெகோவாவுக்கும், அவர் கொடுக்கப்போகும் ராஜாவான தாவீதுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள்.”+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+
யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+
11 யெகோவா சொல்வது இதுதான்: “உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.”
12 யெகோவா சொல்வது இதுதான்:
“உன் காயத்துக்கு மருந்தே இல்லை.+
உன்னுடைய புண் ஆறவே ஆறாது.
13 உனக்காகப் பரிந்து பேச யாரும் இல்லை.
உன்னுடைய புண்ணுக்கு மருந்தே இல்லை.
உன்னைக் குணப்படுத்த வழியே இல்லை.
14 உன் ஆசைக் காதலர்கள் உன்னை மறந்துவிட்டார்கள்.+
இப்போதெல்லாம் அவர்கள் உன்னைத் தேடி வருவதில்லை.
ஏனென்றால், எதிரியைத் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கிவிட்டேன்.+
கொடூரக்காரன் தண்டிப்பது போல உன்னைத் தண்டித்துவிட்டேன்.
ஏனென்றால், நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+
15 நீ காயப்பட்டதற்காக ஏன் கூச்சல்போடுகிறாய்?
உன் வலி தீரவே தீராது!
நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+
அதனால்தான், உன்னை இப்படித் தண்டித்திருக்கிறேன்.
16 ஆனாலும், உன்னை அழிக்க நினைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள்.+
உன்னுடைய எதிரிகள் எல்லாரும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+
உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்.
உன்னைக் கொள்ளையடிக்கிற எல்லாரையும் கொள்ளைக்காரர்களின் கையில் கொடுப்பேன்.”+
நான் உன்னைச் சுகப்படுத்துவேன்; உன் காயங்களைக் குணப்படுத்துவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
18 யெகோவா சொல்வது இதுதான்:
“சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+
அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.
அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+
அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.
19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+
அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+
அவர்களை அடக்கி ஒடுக்குகிற எல்லாரையும் நான் தண்டிப்பேன்.+
21 அவர்களுடைய தலைவர் அவர்களில் ஒருவராக இருப்பார்.
அவர்களுடைய ராஜா அவர்கள் மத்தியிலிருந்தே தோன்றுவார்.
அவரை என் பக்கத்தில் வர வைப்பேன்; அவரும் வருவார்.”
“மற்றபடி என் பக்கத்தில் வர யாருக்குத் துணிச்சல் வரும்?” என்று யெகோவா கேட்கிறார்.
22 “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+
23 இதோ! யெகோவாவின் கோபம் புயல்காற்றாய் வீசும்.+
கெட்டவர்களின் தலைமேல் அது படுபயங்கரமான சூறாவளியாகச் சுழற்றியடிக்கும்.
கடைசி நாட்களில் இதைப் புரிந்துகொள்வீர்கள்.+
31 “அந்தச் சமயத்தில் இஸ்ரவேலின் எல்லா குடும்பங்களுக்கும் நான் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
2 யெகோவா சொல்வது இதுதான்:
“வாளுக்குத் தப்பியவர்கள் வனாந்தரத்தில் கடவுளுடைய கருணையைப் பெற்றார்கள்.
இஸ்ரவேலர்கள் நிம்மதியான இடத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.”
3 யெகோவா தொலைதூரத்திலிருந்து வந்து என்முன் தோன்றி,
“நான் எப்போதுமே உன்மேல் அன்பு காட்டியிருக்கிறேன்.
என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.+
4 நான் மறுபடியும் உன்னைக் கட்டி எழுப்புவேன், நீயும் கட்டி எழுப்பப்படுவாய்.+
5 நீ மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சைத் தோட்டங்களைப் போடுவாய்.+
தோட்டம் போடுகிறவர்கள்தான் அவற்றின் பழங்களை அனுபவிப்பார்கள்.+
6 காலம் வரும்; அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற காவல்காரர்கள் சத்தமாக,
‘எல்லாரும் எழுந்து, சீயோனுக்குப் புறப்படுங்கள்!
நம் கடவுளாகிய யெகோவாவிடம் போகலாம்’+ என்று சொல்வார்கள்” என்றார்.
7 யெகோவா சொல்வது இதுதான்:
“யாக்கோபைப் பார்த்து சந்தோஷமாகப் பாடுங்கள்.
நீங்கள் எல்லா தேசங்களுக்கும் மேலாக இருப்பதை நினைத்துக் கம்பீரமாக முழங்குங்கள்.+
அதை எல்லாருக்கும் அறிவியுங்கள். கடவுளைப் புகழுங்கள்.
‘யெகோவாவே, இஸ்ரவேலர்களில் மீதியாக இருக்கும் உங்கள் ஜனங்களைக் காப்பாற்றுங்கள்’+ என்று கெஞ்சுங்கள்.
8 நான் அவர்களை வடக்கு தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+
பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.+
அவர்களில், கண் தெரியாதவர்களும் கைகால் ஊனமானவர்களும்+
கர்ப்பிணிகளும் பிரசவ வலியில் இருக்கிற பெண்களும் இருப்பார்கள்.
அவர்கள் எல்லாரும் ஒரு பெரிய சபையாக இங்கே திரும்பி வருவார்கள்.+
9 அவர்கள் அழுதுகொண்டே வருவார்கள்.+
என்னுடைய கருணைக்காகக் கெஞ்சுவார்கள்; நான் அவர்களை வழிநடத்துவேன்.
ஓடைகளின்* பக்கமாக அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
அவர்கள் தடுக்கி விழாதபடி சமமான பாதையில் கூட்டிக்கொண்டு வருவேன்.
ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தகப்பன். எப்பிராயீம் என்னுடைய மூத்த மகன்.”+
“இஸ்ரவேலர்களைச் சிதறிப்போக வைத்தவர் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பார்.
மேய்ப்பன் மந்தையைக் கவனிப்பதுபோல் அவர்களைக் கவனித்துக்கொள்வார்.+
12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+
யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்
ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.
அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும்.
தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.
அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+
13 அந்தச் சமயத்தில் கன்னிப் பெண்கள் சந்தோஷமாக நடனம் ஆடுவார்கள்.
வாலிபர்களும் வயதானவர்களும்கூட நடனம் ஆடுவார்கள்.+
சோகத்தில் வாடுகிறவர்களை நான் சந்தோஷத்தில் துள்ள வைப்பேன்.+
அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, அவர்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் தருவேன்.+
14 குருமார்களுக்கு வயிறார உணவு கொடுப்பேன்.
நான் வாரிவழங்கும் நன்மைகளால் ஜனங்கள் திருப்தி அடைவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
15 “யெகோவா சொல்வது இதுதான்:
‘ராமாவில் புலம்பல் சத்தமும் பயங்கரமான அழுகை சத்தமும் கேட்கிறது.+
ராகேல் தன்னுடைய மகன்களுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.+
அவளுடைய மனம் ஆறுதல் அடையவே இல்லை.
ஏனென்றால், அவளுடைய மகன்கள் அவளோடு இல்லை.’”+
16 யெகோவா சொல்வது இதுதான்:
“‘நீ கதறி அழாதே, கண்ணீர் விடாதே.
நீ செய்த எல்லாவற்றுக்கும் நான் பலன் கொடுப்பேன்.
உன் மகன்கள் எதிரியின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.
17 ‘உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.+
‘உன் மகன்கள் சொந்த தேசத்துக்கே திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
18 “எப்பிராயீம் புலம்புவதை என் காதால் கேட்டேன்.
அவன் என்னிடம், ‘பழக்குவிக்கப்படாத கன்றைப் போல நான் இருந்தேன்.
நீங்கள் என்னைத் திருத்தினீர்கள், நான் பாடம் கற்றுக்கொண்டேன்.
என்னைத் திரும்பவும் உங்கள் வழிக்கே கொண்டுவாருங்கள், நானும் வந்துவிடுகிறேன்.
ஏனென்றால், யெகோவாவாகிய நீங்கள்தான் என் கடவுள்.
19 நான் திருந்தினேன், செய்த தவறுகளை நினைத்து வருத்தப்பட்டேன்.+
என் குற்றத்தை நீங்கள் புரிய வைத்தபோது வேதனையில் என் தொடையிலே அடித்துக்கொண்டேன்.
இளவயதில் நான் செய்ததையெல்லாம் நினைத்து
அவமானத்தில் கூனிக்குறுகினேன்’+ என்று சொன்னான்.”
20 யெகோவா சொல்வது இதுதான்:
“எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+
நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+
அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+
திசைகாட்டும் கல்தூண்களையும் உனக்காக நாட்டி வை.
நீ போக வேண்டிய நெடுஞ்சாலையின் மேல் கவனம் வை.+
22 துரோகம் செய்கிற மகளே, நீ எத்தனை காலத்துக்குத்தான் உன் மனதை அலைய விடுவாய்?
யெகோவா பூமியில் புதிதாக ஒன்றைச் செய்திருக்கிறார்:
மனைவி தன் கணவனை* தேடி ஓடோடி வருவாள்.”
23 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா இப்படிச் சொல்கிறார்: “சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் திரும்பவும் யூதாவுக்கும் அதன் நகரங்களுக்கும் கூட்டிக்கொண்டு வரும்போது அவர்கள், ‘நீதி குடியிருக்கும் பரிசுத்த மலையே,+ யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று மறுபடியும் சொல்வார்கள். 24 அங்கே யூதா ஜனங்களும், அதன் நகரவாசிகளும், விவசாயிகளும், மேய்ப்பர்களும் ஒற்றுமையாகக் குடியிருப்பார்கள்.+ 25 களைத்துப்போனவர்களுக்கு நான் புத்துணர்ச்சி கொடுப்பேன். பசியில் சோர்ந்துபோன எல்லாருக்கும் தெம்பளிப்பேன்.”+
26 உடனே நான் கண் விழித்துப் பார்த்தேன். நான் சுகமாகத் தூங்கிவிட்டிருந்தேன்.
27 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் நான் பெருகப் பண்ணுவேன்.”+
28 யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை எப்போது பிடுங்கலாம், இடிக்கலாம், கவிழ்க்கலாம், அழிக்கலாம், நாசமாக்கலாம்+ என்று நான் பார்த்துக்கொண்டு இருந்தது போலவே அவர்களை எப்போது கட்டலாம், நாட்டலாம்+ என்று பார்த்துக்கொண்டு இருப்பேன். 29 அந்த நாட்களில் அவர்கள் யாரும், ‘தகப்பன்கள் புளிப்பான திராட்சைகளைச் சாப்பிட்டார்கள்; ஆனால் பிள்ளைகளின் பற்கள் கூசின’+ என்று சொல்ல மாட்டார்கள். 30 யார் புளிப்பான திராட்சைகளைச் சாப்பிடுகிறார்களோ அவர்களுடைய பற்கள்தான் கூசும். ஒவ்வொருவரும் அவரவர் செய்த பாவத்துக்காகவே சாவார்கள்.”
31 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்.+ 32 ஆனால், அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது.+ ‘நான் அவர்களுடைய உண்மையான எஜமானாக* இருந்தும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
33 “அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான். நான் அவர்களுடைய உள்ளத்தில்* என் சட்டங்களை வைப்பேன்.+ அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
34 “அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சகோதரனிடமோ மற்றவர்களிடமோ, ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!’+ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.+ நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
35 யெகோவா சொல்வது இதுதான்.
பகலில் வெளிச்சம் தர சூரியனைப் படைத்து,
ராத்திரியில் வெளிச்சம் தர நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் சட்டங்களைக் கொடுத்து,
கடலைக் கொந்தளிக்கவும், அலைகளைப் பொங்கியெழவும் வைக்கிறவராகிய
பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்வது இதுதான்:
36 “‘இந்த விதிமுறைகள் எப்படி ஒருநாளும் ஒழிந்துபோகாதோ
அப்படியே, இஸ்ரவேல் வம்சமும் என் முன்னால் ஒரு தேசமாக இல்லாதபடி ஒருநாளும் ஒழிந்துபோகாது’+ என்று யெகோவா சொல்கிறார்.”
37 யெகோவா சொல்வது இதுதான்: “‘மேலே இருக்கிற வானத்தை அளக்கவோ, கீழே இருக்கிற பூமியின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடிக்கவோ ஒருவனால் எப்படி முடியாதோ அப்படித்தான் இஸ்ரவேல் வம்சத்தார் செய்த குற்றங்களுக்காக என்னால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ள முடியாது’ என்று யெகோவா சொல்கிறார்.”+
38 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இந்த நகரம் அனானெயேல் கோபுரம்முதல்+ ‘மூலை நுழைவாசல்’வரை+ யெகோவாவுக்காகக் கட்டப்படும்.+ 39 அதன் எல்லை+ காரேப் குன்றுவரை நேராகப் போய், கோவாத்தின் திசையில் திரும்பும். 40 பிணங்களும் சாம்பலும்* நிறைந்த பள்ளத்தாக்கும், கீதரோன் பள்ளத்தாக்கு+ வரையிலான எல்லா நிலங்களும், அதாவது கிழக்கே இருக்கிற ‘குதிரை நுழைவாசலின்’+ மூலைவரை இருக்கிற எல்லா நிலங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.+ அது இனி ஒருபோதும் பிடுங்கப்படாது, இடிக்கப்படாது.”
32 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த 10-ஆம் வருஷம், அதாவது நேபுகாத்நேச்சாருடைய ஆட்சியின் 18-ஆம் வருஷம்,+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. 2 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைகள் எருசலேமைச் சுற்றிவளைத்திருந்தன. யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் இருந்த ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா தீர்க்கதரிசி காவல் வைக்கப்பட்டிருந்தார். 3 அவரை அங்கே வைக்கும்படி கட்டளையிடுவதற்கு முன்பு+ சிதேக்கியா ராஜா எரேமியாவிடம், “நீ எப்படி யெகோவாவின் பெயரில் இதுபோல் தீர்க்கதரிசனம் சொல்லலாம்? ‘இந்த நகரம் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படும், அந்த ராஜா இதைக் கைப்பற்றுவான்’+ என்றும், 4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும், 5 ‘அந்த ராஜா அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோவான். நான் நடவடிக்கை எடுக்கும்வரை சிதேக்கியா அங்கேயே இருப்பான். நீங்கள் கல்தேயர்களோடு போர் செய்துகொண்டே இருந்தாலும் வெற்றி பெற மாட்டீர்கள்’ என்றும் யெகோவா சொல்வதாக நீ எப்படிச் சொல்லலாம்?”+ என்று கேட்டிருந்தார்.
6 அதற்கு எரேமியா இப்படிச் சொன்னார்: “யெகோவா என்னிடம், 7 ‘உன் பெரியப்பா* சல்லூமின் மகனாகிய அனாமெயேல் உன்னிடம் வந்து, “ஆனதோத்தில்+ இருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள். அதை மீட்கும் உரிமை உனக்குத்தான் முதலில் இருக்கிறது”+ என்று சொல்வான்’ என்றார்.”
8 யெகோவா சொன்னபடியே என் பெரியப்பா மகனாகிய அனாமெயேல் ‘காவலர் முற்றத்தில்’ இருந்த என்னிடம் வந்து, “பென்யமீன் தேசத்திலே ஆனதோத் ஊரில் இருக்கிற என் நிலத்தைத் தயவுசெய்து வாங்கிக்கொள். அதை வாங்குவதற்கும் மீட்பதற்கும் உனக்குத்தான் உரிமை இருக்கிறது. நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொன்னார். யெகோவாவின் விருப்பப்படிதான் இது நடக்கிறது என்று உடனடியாகப் புரிந்துகொண்டேன்.
9 அதனால், ஆனதோத்தில் இருந்த அந்த நிலத்தை என் பெரியப்பாவின் மகனாகிய அனாமெயேலிடமிருந்து வாங்கிக்கொண்டேன். பதினேழு சேக்கல் வெள்ளியை* நான் அவரிடம் எடைபோட்டுக் கொடுத்தேன்.+ 10 அதற்கான பத்திரத்தை+ எழுதி முத்திரை போட்டேன். அதில் கையெழுத்து போடுவதற்குச் சாட்சிகளைக் கூப்பிட்டேன்.+ வெள்ளியைத் தராசில் நிறுத்தி எடை போட்டேன். 11 சட்டப்படியும் விதிமுறைப்படியும் முத்திரை போடப்பட்ட கிரயப் பத்திரத்தையும் முத்திரை போடப்படாத பத்திரத்தையும் எடுத்து, 12 மாசெயாயின் மகனாகிய நேரியாவின்+ மகன் பாருக்கிடம்+ கொடுத்தேன். என் பெரியப்பா மகன் அனாமெயேலுக்கு முன்பாகவும், கிரயப் பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், ‘காவலர் முற்றத்தில்’+ உட்கார்ந்திருந்த எல்லா யூதர்களுக்கு முன்பாகவும் அதைக் கொடுத்தேன்.
13 பின்பு அவர்களுக்கு முன்பாக பாருக்கிடம், 14 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘முத்திரை போடப்பட்ட கிரயப் பத்திரத்தையும் முத்திரை போடப்படாத பத்திரத்தையும் நீ எடுத்து ஒரு மண்ஜாடியில் போட்டு வை. அவை ரொம்பக் காலத்துக்கு அந்த ஜாடியிலேயே இருக்க வேண்டும்.’ 15 ஏனென்றால், ‘இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மறுபடியும் விலைக்கு வாங்கப்படும்’+ என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்” என்றேன்.
16 நேரியாவின் மகன் பாருக்கிடம் கிரயப் பத்திரத்தைக் கொடுத்த பின்பு நான் யெகோவாவிடம் ஜெபம் செய்து, 17 “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் மகா வல்லமையினாலும் பலத்தினாலும் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தீர்கள்.+ உங்களால் செய்ய முடியாத அதிசயம் எதுவுமே இல்லை. 18 ஆயிரமாயிரம் பேருக்கு மாறாத அன்பு காட்டுகிறீர்கள். தகப்பன்களுடைய குற்றங்களுக்காகப் பிள்ளைகளைத் தண்டிக்கிறீர்கள்.+ நீங்கள்தான் மகிமையும் வல்லமையும் உள்ள உண்மையான கடவுள். பரலோகப் படைகளின் யெகோவா என்பது உங்களுடைய பெயர். 19 உங்கள் யோசனைகள்* ஆச்சரியமானவை, உங்கள் செயல்கள் அற்புதமானவை.+ மனுஷனுடைய எல்லா வழிகளையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்.+ அவரவர் போகிற வழிக்கும் செய்கிற செயலுக்கும் ஏற்றபடி அவரவருக்குக் கூலி கொடுக்கிறீர்கள்.+ 20 எகிப்து தேசத்தில் நீங்கள் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி இன்றுவரை உலகம் பேசுகிறது. நீங்கள் இஸ்ரவேலில் உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். இன்றுவரை மற்ற எல்லா ஜனங்களின் மத்தியிலும் உங்கள் புகழைப் பரப்பியிருக்கிறீர்கள்.+ 21 நீங்கள் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கைபலத்தினாலும் மகா வல்லமையினாலும் பயங்கரமான செயல்களினாலும் உங்கள் ஜனங்களான இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+
22 அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ பாலும் தேனும் ஓடுகிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்கள்.+ 23 அவர்களும் வந்து இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். ஆனால், உங்கள் பேச்சைக் கேட்காமலும் உங்கள் சட்டதிட்டங்களை மதிக்காமலும் போனார்கள். நீங்கள் கொடுத்த எந்தக் கட்டளைக்குமே அவர்கள் கீழ்ப்படியவில்லை. அதனால்தான் இந்த எல்லா தண்டனைகளையும் அவர்களுக்குக் கொடுத்தீர்கள்.+ 24 இதோ, இந்த நகரத்தைப் பிடிப்பதற்காக எதிரிகள் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பியிருக்கிறார்கள்.+ ஜனங்கள் வாளுக்கும்+ பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும்+ பலியாவார்கள். நகரத்தைத் தாக்குகிற கல்தேயர்கள் நிச்சயமாகவே அதை அழிப்பார்கள். நீங்கள் சொன்ன எல்லாமே நடந்துவிட்டது. அதை நீங்களே பார்க்கிறீர்கள். 25 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இந்த நகரம் நிச்சயமாகவே கல்தேயர்களின் கைக்குப் போய்ச் சேரும் என்று தெரிந்திருந்தும், ‘சாட்சிகளுக்கு முன்பாக நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கு’ என்று நீங்கள் ஏன் என்னிடம் சொன்னீர்கள்?” என்றேன்.
26 உடனே யெகோவா எரேமியாவிடம், 27 “எல்லா மனுஷர்களுக்கும் கடவுளாக இருக்கிற யெகோவா நான்தான். என்னால் செய்ய முடியாத அதிசயம் ஏதாவது இருக்கிறதா? 28 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த நகரத்தை கல்தேயர்களின் கையிலும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையிலும் கொடுப்பேன். அவன் இதைக் கைப்பற்றுவான்.+ 29 இந்த நகரத்துக்கு எதிராகப் போர் செய்கிற கல்தேயர்கள் உள்ளே வந்து முழு நகரத்தையும் கொளுத்திவிடுவார்கள். இங்கே இருக்கிற எல்லா வீடுகளும் சாம்பலாகும்.+ ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில்தான் ஜனங்கள் பாகாலுக்குப் பலிகளையும், மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமது காணிக்கையையும் செலுத்தி என் கோபத்தைக் கிளறினார்கள்.’+
30 யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் நான் வெறுக்கிற காரியங்களைத்தான் இளவயதிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.+ இஸ்ரவேல் ஜனங்கள் அருவருப்பான காரியங்களைச் செய்து என் கோபத்தைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள். 31 இந்த நகரத்தை அவர்கள் கட்டிய நாளிலிருந்தே இது என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும்தான் தூண்டியிருக்கிறது.+ அதனால், இது என் கண் முன்னால் இருக்கவே கூடாது.+ 32 இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற ஜனங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் இந்த நகரத்தை அழிப்பேன். இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அவர்களுடைய ராஜாக்களும்+ அதிகாரிகளும்+ குருமார்களும் தீர்க்கதரிசிகளும்+ என்னைக் கோபப்படுத்தியதால் இதை நாசமாக்குவேன். 33 அவர்கள் என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டே இருந்தார்கள்.*+ மறுபடியும் மறுபடியும் அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க* முயற்சி செய்தேன்; ஆனால், யாருமே திருந்தவில்லை.+ 34 என் பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 35 அது போதாதென்று, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே மோளேகு தெய்வத்துக்கு அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்.*+ இப்படிப்பட்ட அருவருப்பான பாவச் செயலைச் செய்யும்படி நான் யூதாவுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை.+ இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’
36 இந்த நகரம் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படும் என்றும், வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் அழிந்துபோகும் என்றும் நீங்கள் எல்லாரும் சொல்லி வருகிறீர்களே, இந்த நகரத்து ஜனங்களைப் பற்றி இஸ்ரவேலின் கடவுளான யெகோவா இப்போது சொல்வது இதுதான்: 37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+ 38 அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ 39 எனக்கு எப்போதும் பயந்து நடக்கும்படி அவர்களுக்கு ஒரே இதயத்தைக் கொடுத்து,+ அவர்களை ஒரே வழியில் நடக்க வைப்பேன். அவர்களுடைய நல்லதுக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நல்லதுக்காகவும் அப்படிச் செய்வேன்.+ 40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+ 41 ஆசையோடு அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவேன்.+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வைப்பேன்’”+ என்று சொன்னார்.
42 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்கு நான் இந்த எல்லா தண்டனைகளையும் வரச் செய்தது போலவே, அவர்களுக்கு வாக்குறுதி தருகிற எல்லா நன்மைகளையும்கூட வரச் செய்வேன்.+ 43 “இந்தத் தேசம் கல்தேயர்களின் கைக்குப் போய்விட்டது. மனுஷர்களும் மிருகங்களும் இல்லாத பொட்டல் காடாகிவிட்டது” என்று நீங்கள் சொன்னாலும், இங்கே திரும்பவும் நிலங்கள் வாங்கப்படும்.’+
44 ‘பென்யமீன் தேசத்திலும்+ எருசலேமின் சுற்றுவட்டாரத்திலும் யூதாவின் நகரங்களிலும்+ மலைப்பகுதியிலுள்ள நகரங்களிலும் தாழ்வான பிரதேசத்திலுள்ள நகரங்களிலும்+ தெற்கே உள்ள நகரங்களிலும் நிலங்கள் பணம் கொடுத்து வாங்கப்படும், பத்திரங்கள் எழுதப்பட்டு முத்திரை போடப்படும், சாட்சிகள் வரவழைக்கப்படுவார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம், 2 “பூமியைப் படைத்து, அதை வடிவமைத்து, உறுதியாக நிலைநிறுத்திய யெகோவா நான்தான். யெகோவா என்பது என் பெயர். யெகோவாவாகிய நான் சொல்வது இதுதான்: 3 ‘என்னைக் கூப்பிடு. நான் உனக்குப் பதில் சொல்வேன். உனக்கு இதுவரை தெரியாததும் புரியாததுமான முக்கியமான விஷயங்களைச் சொல்வேன்’”+ என்றார்.
4 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சில செய்திகளைச் சொல்கிறார். மண்மேடுகளை எழுப்பி வாளால் தாக்குகிற எதிரிகளிடமிருந்து+ இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிற வீடுகளைப் பற்றியும், யூதாவின் ராஜாவுடைய அரண்மனைகளைப் பற்றியும், 5 கல்தேயர்களை எதிர்த்துப் போர் செய்ய வருகிற ஜனங்களைப் பற்றியும், தன்னுடைய கடும் கோபத்துக்குப் பலியானவர்களின் பிணங்கள் கிடக்கிற இடங்களைப் பற்றியும், அவர்கள் செய்த அக்கிரமங்களால் தான் வெறுத்து ஒதுக்கிய நகரத்தைப் பற்றியும் இப்போது இப்படிச் சொல்கிறார்: 6 ‘இந்த நகரத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். இந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன்.+ இவர்களுக்கு ஆரோக்கியம் தருவேன். மிகுந்த சமாதானத்தையும் பாதுகாப்பையும்* அருளுவேன்.+ 7 யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+ ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன்.+ 8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+ 9 எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவர்களுடைய நகரம் எனக்குப் புகழும் பெருமையும் சந்தோஷமும் மகிமையும் சேர்க்கிற நகரமாக ஆகும்.+ நான் அந்த நகரத்துக்குச் சமாதானத்தையும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும்*+ தருவதைக் கேள்விப்பட்டு எல்லா ஜனங்களும் பயந்து நடுங்குவார்கள்.’”+
10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிவிட்டதாக நீங்கள் சொல்கிற யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் 11 ஜனங்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுகிற சத்தம்+ மறுபடியும் கேட்கும். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்கும். அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், யெகோவா நல்லவர்,+ அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்!”+ என்று எல்லாரும் சொல்கிற சத்தம் கேட்கும்.’
“யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு நன்றிப் பலிகளைக் கொண்டுவருவார்கள்.+ ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் இங்கே கூட்டிக்கொண்டு வந்து பழையபடி நன்றாக வாழ வைப்பேன்.’”
12 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிப்போன இந்தத் தேசத்திலும் இதன் எல்லா நகரங்களிலும் மறுபடியும் மேய்ச்சல் நிலங்கள் உண்டாகும். மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை அங்கே மேய்ப்பார்கள்.’+
13 யெகோவா சொல்வது இதுதான்: ‘மலைப்பகுதியின் நகரங்களிலும், தாழ்வான பிரதேசத்தின் நகரங்களிலும், தெற்கே உள்ள நகரங்களிலும், பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுவட்டாரத்திலும்,+ யூதாவின் நகரங்களிலும்+ மேய்ப்பர்கள் மறுபடியும் தங்களுடைய ஆடுகளை எண்ணுவார்கள்.’”
14 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் நான் கொடுக்கப்போவதாகச் சொன்ன எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன்.+ 15 அந்தச் சமயத்தில், தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ 16 அந்தச் சமயத்தில், யூதா காப்பாற்றப்படும்,+ எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அது அழைக்கப்படும்.”
17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+ 18 எனக்குத் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் மற்ற பலிகளையும் செலுத்துவதற்கு லேவியின் வம்சத்தில் குருமார்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.’”
19 மறுபடியும் யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 20 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராத்திரியும் பகலும் அதனதன் நேரத்தில் வருவதற்காக நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களை எப்படி மாற்ற முடியாதோ,+ 21 அப்படியே தாவீதின் வாரிசை ராஜாவாக்குவதற்கு+ நான் செய்த ஒப்பந்தத்தையும், என் குருமார்களாகிய லேவியர்களோடு+ நான் செய்த ஒப்பந்தத்தையும் மாற்ற முடியாது.+ 22 வானத்தின் நட்சத்திரங்களை எப்படி எண்ண முடியாதோ, கடற்கரை மணலை எப்படி அளக்க முடியாதோ, அப்படியே என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் எனக்குச் சேவை செய்கிற லேவியர்களின் வம்சத்தையும் எண்ண முடியாதளவுக்குப் பெருகப் பண்ணுவேன்.’”
23 மறுபடியும் யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 24 “‘யெகோவா தான் தேர்ந்தெடுத்த இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கித்தள்ளிவிடுவார்’ என்று சிலர் சொல்கிறார்களே, நீ கவனிக்கவில்லையா? அவர்கள் என்னுடைய ஜனங்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள், ஒரு தேசமாகவே மதிப்பதில்லை.
25 யெகோவா சொல்வது இதுதான்: ‘பகலுக்கும் ராத்திரிக்கும்,+ வானத்துக்கும் பூமிக்கும் நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் ஒருபோதும் மாறாதது போலவே,+ 26 யாக்கோபின் வம்சத்தையும் என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் ஒதுக்கித்தள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியும் ஒருபோதும் மாறாது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் வம்சத்தை ஆட்சி செய்ய தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் இல்லாமல் போக மாட்டார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்,+ அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன்.’”+
34 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா படைவீரர்களும், அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா தேசங்களும், எல்லா ஜனங்களும் எருசலேமுக்கு எதிராகவும் அதன் நகரங்களுக்கு எதிராகவும் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:+
2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம்+ போய் இப்படிச் சொல்: “யெகோவா ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘இதோ, நான் இந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.+ 3 நீ கண்டிப்பாக அவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கப்படுவாய். உன்னால் தப்பிக்கவே முடியாது.+ நீ அவனை நேருக்குநேர் பார்ப்பாய். அவனும் உன்னிடம் நேருக்குநேர் பேசுவான். நீ பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுவாய்’+ என்று அவர் சொல்லியிருக்கிறார். 4 ஆனாலும், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவின் செய்தியைக் கேள்: ‘உன்னைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீ வாளால் சாக மாட்டாய். 5 உனக்கு இயற்கையான மரணம்தான் வரும்.+ உனக்கு முன்பு வாழ்ந்த ராஜாக்கள் இறந்தபோது வாசனைப் பொருள்கள் எரிக்கப்பட்டதைப் போலவே உனக்கும் எரிக்கப்படும். அப்போது ஜனங்கள், ‘ஐயோ, எங்கள் ராஜாவே!’ என்று அழுது புலம்புவார்கள். ‘இதை நானே சொல்லியிருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”’”
6 எரேமியா தீர்க்கதரிசி எருசலேமுக்குப் போய் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம் இந்த எல்லா விஷயங்களையும் சொன்னார். 7 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைவீரர்கள் எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் மதில் சூழ்ந்த நகரங்களில் மீதியிருந்த+ இரண்டே நகரங்களான லாகீஸ்+ மற்றும் அசெக்காவுக்கு+ எதிராகவும் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
8 எருசலேம் ஜனங்கள் எல்லாரும் அவரவர் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்று சிதேக்கியா ராஜா ஒப்பந்தம் செய்த பின்பு, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ 9 எருசலேம் ஜனங்கள் தங்களுடைய எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், யாருமே யூத ஆண்களையோ பெண்களையோ அடிமைகளாக வைத்திருக்கக் கூடாது என்றும் சிதேக்கியா சொல்லியிருந்தார். 10 எல்லா அதிகாரிகளும் ஜனங்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆண் அடிமைகளையும் பெண் அடிமைகளையும் விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு, அந்த அடிமைகளை அனுப்பினார்கள். 11 ஆனால் கொஞ்சக் காலம் கழித்து, அதே ஆண் அடிமைகளையும் பெண் அடிமைகளையும் மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தினார்கள். 12 அதனால், யெகோவா எரேமியாவிடம் மறுபடியும் பேசினார். யெகோவா அவரிடம்,
13 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்தில் அடிமைகளாக இருந்த+ உங்கள் முன்னோர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தபோது அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்தேன்.+ அவர்களிடம், 14 “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும், உங்களிடம் விற்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய எபிரெயர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும். உங்களிடம் ஆறு வருஷங்களாக வேலை செய்த அடிமைகளை அனுப்பிவிட வேண்டும்”+ என்று சொன்னேன். உங்கள் முன்னோர்கள் நான் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. 15 ஆனால் நீங்கள், சமீபத்தில் மனம் திருந்தி, அடிமைப்பட்டிருந்த சகோதரர்களை விடுதலை செய்து எனக்குப் பிரியமாக நடந்துகொண்டீர்கள். என் பெயர் தாங்கிய ஆலயத்தில் என்முன் ஒப்பந்தம் செய்தீர்கள். 16 உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் விரும்பியபடியே அவர்களை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மறுபடியும் மனம் மாறி, அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தி, என் பெயரின் பரிசுத்தத்தைக் கெடுத்தீர்கள்.’+
17 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் சொன்னபடி நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.+ அதனால், வாளினாலும் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும்+ உங்களைத் தாக்கி இந்த உலகத்திலிருந்தே உங்களுக்கு விடுதலை கொடுக்கப்போகிறேன்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுக்கு வந்த கோர முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+ 18 கன்றுக்குட்டியை இரண்டாக வெட்டி, அதன் நடுவே நடந்துபோய், என்முன் ஒப்பந்தம் செய்துவிட்டு,+ பின்பு அதை மீறிய 19 யூதாவின் அதிகாரிகள், எருசலேமின் அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள், குருமார்கள், ஜனங்கள் ஆகிய எல்லாருக்கும் வரப்போகிற கதி இதுதான்: 20 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் நான் அவர்களைக் கொடுத்துவிடுவேன். வானத்திலுள்ள பறவைகளும் பூமியிலுள்ள மிருகங்களும் அவர்களுடைய பிணங்களைத் தின்றுதீர்க்கும்.+ 21 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையிலும்+ பின்வாங்கிப் போகிற பாபிலோன் ராஜாவின் படைவீரர்களுடைய கையிலும் நான் சிதேக்கியா ராஜாவையும் அவனுடைய அதிகாரிகளையும் கொடுத்துவிடுவேன்.’+
22 யெகோவா சொல்வது இதுதான்: ‘பின்வாங்கிப் போகிறவர்களுக்கு நான் கட்டளை கொடுப்பேன். அவர்கள் மறுபடியும் வந்து போர் செய்து இந்த நகரத்தைக் கைப்பற்றி, அதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ யூதாவின் நகரங்களை நான் பாழாக்குவேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள்’”+ என்று சொன்னார்.
35 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த காலத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர், 2 “நீ போய் ரேகாபியர்களிடம்+ பேசி அவர்களை யெகோவாவின் ஆலயத்தில் இருக்கிற ஒரு சாப்பாட்டு அறைக்குக் கூட்டிக்கொண்டு வா. அவர்களுக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடு” என்று சொன்னார்.
3 அதனால் நான் அபசினியாவின் மகனாகிய எரேமியாவின் மகன் யசினியாவையும், அவனுடைய சகோதரர்களையும், அவனுடைய எல்லா மகன்களையும், மற்ற எல்லா ரேகாபியர்களையும் 4 யெகோவாவின் ஆலயத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். அவர்களை உண்மைக் கடவுளின் ஊழியராகிய இக்தாலியாவின் மகன் ஆனானின் மகன்களுடைய சாப்பாட்டு அறைக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். அது அதிகாரிகளின் சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலும், வாயிற்காவலரான சல்லூமின் மகன் மாசெயாவின் சாப்பாட்டு அறைக்கு மேலேயும் இருந்தது. 5 பின்பு, நான் திராட்சமது நிறைந்த கோப்பைகளையும் கிண்ணங்களையும் ரேகாபிய ஆண்களுக்கு முன்பாக வைத்து, “திராட்சமது குடியுங்கள்” என்று சொன்னேன்.
6 ஆனால் அவர்கள், “நாங்கள் திராட்சமது குடிக்க மாட்டோம். ஏனென்றால், எங்கள் மூதாதையான ரேகாபின் மகன் யோனதாப்+ எங்களிடம், ‘நீங்களும் உங்கள் பிள்ளைகளும் திராட்சமது குடிக்கவே கூடாது. 7 வீடுகளைக் கட்டக் கூடாது, விதை விதைக்கக் கூடாது, திராட்சைத் தோட்டம் அமைக்கக் கூடாது, அதை வாங்கவும் கூடாது. எப்போதும் கூடாரங்களில்தான் தங்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் குடியேறிய வேறு தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள்’ என்று கட்டளை கொடுத்திருக்கிறார். 8 எங்கள் மூதாதையான ரேகாபின் மகன் யோனதாப் கொடுத்த கட்டளைக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிகிறோம். அவர் சொன்னபடியே நாங்களும் எங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் திராட்சமது குடிப்பதில்லை. 9 குடியிருப்பதற்காக நாங்கள் வீடுகளைக் கட்டுவதில்லை. எங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களோ வயல்களோ விதைகளோ இல்லை. 10 நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்துவருகிறோம். எங்கள் மூதாதையான யோனதாப் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்துவருகிறோம். 11 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவுக்கு எதிராக வந்தபோது+ நாங்கள், ‘கல்தேயர்களிடமிருந்தும் சீரியர்களிடமிருந்தும் தப்பிக்க எருசலேமுக்குப் போய்விடலாம்’ என்று பேசிக்கொண்டோம். அதன்படியே, இப்போது எருசலேமில் வாழ்ந்துவருகிறோம்” என்று சொன்னார்கள்.
12 அப்போது யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 13 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் போய் இப்படிச் சொல்: “நீங்கள் என் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன், இல்லையா?”+ என்று யெகோவா கேட்கிறார். 14 “திராட்சமது குடிக்கக் கூடாதென்று ரேகாபின் மகன் யோனதாப் தன்னுடைய வம்சத்தாருக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அவர்களும் இன்றுவரை அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து திராட்சமது குடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுடைய மூதாதையின் பேச்சுக்கு எப்போதும் மதிப்புக் கொடுக்கிறார்கள்.+ ஆனால், நீங்கள் என் பேச்சை மதிப்பதே இல்லை. நான் திரும்பத் திரும்பச் சொன்னாலும் நீங்கள் கேட்பதே இல்லை.+ 15 என் ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் நான் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி,+ ‘தயவுசெய்து நீங்கள் எல்லாரும் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்துங்கள்.+ நல்ல வழியில் நடங்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள். அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் தொடர்ந்து வாழ்வீர்கள்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. 16 ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சத்தார் அவர்களுடைய மூதாதையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.+ ஆனால், இந்த ஜனங்கள் என் பேச்சைக் கேட்பதே இல்லை.”’”
17 “அதனால், ‘நான் எச்சரித்தபடியே யூதாவுக்கும் எருசலேமுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்.+ ஏனென்றால், நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நான் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் அவர்கள் பதில் பேசவே இல்லை’ என்று பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமாகிய யெகோவா சொல்கிறார்.”+
18 பின்பு எரேமியா ரேகாபியர்களிடம், “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் உங்களுடைய மூதாதையான யோனதாப் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறீர்கள். அவர் சொன்னதையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே செய்துவருகிறீர்கள். 19 அதனால், “என் சன்னிதியில் சேவை செய்வதற்கு ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சம் எப்போதுமே இருக்கும்” என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்’” என்று சொன்னார்.
36 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர், 2 “நீ ஒரு சுருளை எடுத்து, நான் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும்+ எல்லா தேசங்களுக்கும்+ எதிராகச் சொன்னதையெல்லாம் எழுது. யோசியாவின் காலத்தில் நான் உன்னிடம் முதன்முதலாகப் பேசிய நாளிலிருந்து இந்த நாள்வரை+ சொன்னதையெல்லாம் எழுது. 3 நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.
4 உடனே எரேமியா, நேரியாவின் மகனாகிய பாருக்கைக் கூப்பிட்டு+ யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல பாருக் அதையெல்லாம் ஒரு சுருளில் எழுதினார்.+ 5 பின்பு எரேமியா பாருக்கிடம், “நான் யெகோவாவின் ஆலயத்துக்குள் போக முடியாதபடி தடை செய்யப்பட்டிருக்கிறேன். 6 அதனால், நீதான் ஆலயத்துக்குள் போக வேண்டும். நான் சொல்லச் சொல்ல நீ எழுதிய யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் அங்கே சத்தமாக வாசிக்க வேண்டும். விரத நாளிலே யெகோவாவின் ஆலயத்தில் கூடியிருக்கிற ஜனங்களுக்கு முன்பாக அதை வாசிக்க வேண்டும். பல நகரங்களிலிருந்து வந்திருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்பார்கள். 7 அதன்பின், அவர்கள் ஒருவேளை யெகோவாவின் கருணைக்காகக் கெஞ்சலாம். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். ஏனென்றால், இந்த ஜனங்களைப் பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் தண்டிக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.
8 தீர்க்கதரிசியான எரேமியா சொன்னதையெல்லாம் நேரியாவின் மகனாகிய பாருக் செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்குள் போய் யெகோவாவின் வார்த்தைகளை அந்தச் சுருளிலிருந்து* சத்தமாக வாசித்தார்.+
9 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த ஐந்தாம் வருஷம்,+ ஒன்பதாம் மாதத்தில், எருசலேம் ஜனங்களும் யூதாவின் நகரங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களும் யெகோவாவுக்குமுன் விரதமிருக்க வேண்டுமென்று அறிவிப்பு செய்யப்பட்டது.+ 10 பின்பு, பாருக் அந்தச் சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை யெகோவாவின் ஆலயத்தில் சத்தமாக வாசித்தார். நகலெடுப்பவராகிய* சாப்பானின் மகன்+ கெமரியாவுடைய+ சாப்பாட்டு அறையிலே எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் அதை வாசித்தார். அந்த அறை யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய நுழைவாசலுக்குப் பக்கத்திலுள்ள மேல் பிரகாரத்தில் இருந்தது.+
11 சுருளிலிருந்து வாசிக்கப்பட்ட யெகோவாவின் வார்த்தைகளையெல்லாம் சாப்பானின் மகனாகிய கெமரியாவின் மகன் மிகாயா கேட்டவுடன், 12 ராஜாவின் அரண்மனையில் இருந்த செயலாளரின் அறைக்குப் போனார். அங்கே, செயலாளரான எலிஷாமா,+ செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின்+ மகன் எல்நாத்தான்,+ சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் சிதேக்கியா ஆகிய அதிகாரிகளும் மற்ற எல்லா அதிகாரிகளும்* உட்கார்ந்திருந்தார்கள். 13 ஜனங்களுக்கு முன்பாகச் சுருளிலிருந்து பாருக் வாசித்த எல்லாவற்றையும் மிகாயா அவர்களிடம் சொன்னார்.
14 அந்த அதிகாரிகள் அதைக் கேட்டபோது, கூஷியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவுடைய மகனுமாகிய யெகுதியை பாருக்கிடம் அனுப்பி, “ஜனங்களுக்கு முன்பாக நீ வாசித்த அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு வா” என்று சொல்லச் சொன்னார்கள். அதன்படியே, நேரியாவின் மகனாகிய பாருக் அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனார். 15 அவர்கள் அவரிடம், “தயவுசெய்து இங்கே உட்கார்ந்து, சுருளில் இருப்பதைச் சத்தமாக வாசித்துக் காட்டு” என்றார்கள். பாருக்கும் அதை அவர்களுக்கு வாசித்துக் காட்டினார்.
16 அதைக் கேட்டவுடன் அவர்கள் மிரண்டுபோய் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்; பின்பு பாருக்கிடம், “இந்த விஷயங்களையெல்லாம் நாங்கள் கண்டிப்பாக ராஜாவிடம் சொல்ல வேண்டும்” என்றார்கள். 17 அதோடு, “நீ எப்படி இதையெல்லாம் எழுதினாய் என்று தயவுசெய்து சொல். எரேமியா சொல்லித்தான் எழுதினாயா?” என்று கேட்டார்கள். 18 அதற்கு பாருக், “ஆமாம், எரேமியா சொல்லச் சொல்லத்தான் எல்லாவற்றையும் இந்தச் சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னார். 19 அப்போது அந்த அதிகாரிகள், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டாம்”+ என்றார்கள்.
20 பின்பு, அவர்கள் அரண்மனை முற்றத்துக்குப் போனார்கள். செயலாளரான எலிஷாமாவின் அறையிலே அந்தச் சுருளை வைத்துவிட்டு ராஜாவிடம் போய் அந்தச் சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
21 உடனே, ராஜா அந்தச் சுருளை எடுத்துவரச் சொல்லி யெகுதியை+ அனுப்பினார். யெகுதி செயலாளரான எலிஷாமாவின் அறைக்குப் போய் அதை எடுத்துவந்தார். பின்பு, ராஜாவுக்கு முன்பாகவும் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா அதிகாரிகளுக்கு முன்பாகவும் அதை வாசிக்க ஆரம்பித்தார். 22 அது ஒன்பதாம் மாதம்.* ராஜா குளிர் கால மாளிகையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். குளிர்காய்வதற்கான நெருப்பு அவர் முன்னால் எரிந்துகொண்டிருந்தது. 23 யெகுதி அந்தச் சுருளிலிருந்து மூன்று, நான்கு பத்திகளை வாசித்ததும் ராஜா அந்தப் பகுதியை செயலாளரின் கத்தியால் வெட்டி நெருப்பில் தூக்கி வீசினார். யெகுதி வாசிக்க வாசிக்க ராஜா இப்படியே அந்தச் சுருளை வெட்டிப் போட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் மொத்த சுருளும் எரிந்துபோனது. 24 சுருளிலிருந்த வார்த்தைகளைக் கேட்டு ராஜாவோ அவருடைய ஊழியர்களோ தங்கள் உடையைக் கிழிக்கவில்லை. யாரும் பயப்படவே இல்லை. 25 சுருளை எரிக்க வேண்டாமென்று எல்நாத்தானும்+ தெலாயாவும்+ கெமரியாவும்+ ராஜாவிடம் கெஞ்சிக் கேட்டும் ராஜா மசியவில்லை. 26 அதற்குப் பதிலாக, தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் செயலாளராகிய பாருக்கையும் கைது செய்யச் சொல்லி தன்னுடைய மகன் யெர்மெயேலிடமும், அசரியேலின் மகன் செராயாவிடமும், அப்தெயேலின் மகன் செலேமியாவிடமும் கட்டளை கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சிக்கிக்கொள்ளாதபடி எரேமியாவையும் பாருக்கையும் யெகோவா பாதுகாத்தார்.+
27 எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதிய சுருளை+ ராஜா நெருப்பில் எரித்த பின்பு யெகோவா எரேமியாவிடம், 28 “நீ இன்னொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்துப்போட்ட சுருளில்+ எழுதிய அதே வார்த்தைகளை மறுபடியும் எழுது. 29 யூதாவின் ராஜா யோயாக்கீமிடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ சுருளை நெருப்பில் எரித்தாயே! பாபிலோன் ராஜா கண்டிப்பாக வந்து இந்தத் தேசத்தையும் இங்கிருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் ஒழித்துக்கட்டுவார்+ என்று இந்தத் தீர்க்கதரிசி எப்படி எழுதலாம் என்று கேட்டாயே! 30 அதனால், யூதாவின் ராஜா யோயாக்கீமுக்கு எதிராக யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய வம்சத்தில் யாரும் தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்கார மாட்டார்கள். அவனுடைய பிணம் ராத்திரி பகலாக வெயிலிலும் குளிரிலும் கிடக்கும்.+ 31 நான் அவனையும் அவனுடைய வம்சத்தையும் அவனுடைய ஊழியர்களையும் அழிப்பேன். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்காததால்+ நான் எச்சரித்தபடியே அவர்களுக்கும் எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்’”’”+ என்று சொன்னார்.
32 பிறகு, எரேமியா இன்னொரு சுருளை எடுத்து நேரியாவின் மகனும், செயலாளருமான பாருக்கிடம் கொடுத்தார்.+ யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில்+ இருந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதினார். அதுபோன்ற இன்னும் பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.
37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+ 2 ஆனால், சிதேக்கியாவும் அவருடைய ஊழியர்களும் அவருடைய ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்கவில்லை.
3 சிதேக்கியா ராஜா, செலேமியாவின் மகன் யெகூகாலையும்+ குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவையும்+ எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பி, “தயவுசெய்து எங்களுக்காக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லச் சொன்னார். 4 அந்தச் சமயத்தில் எரேமியா சிறையில் அடைக்கப்படவில்லை.+ அதனால், ஜனங்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருந்தார். 5 எருசலேமைச் சுற்றிவளைத்திருந்த கல்தேயர்கள் திடீரென்று பின்வாங்கிப் போனார்கள்.+ ஏனென்றால், பார்வோனின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு+ வந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டார்கள். 6 அப்போது, எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: 7 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னிடம் விசாரித்து வரும்படி உன்னை அனுப்பிய யூதாவின் ராஜாவிடம் நீ இதைத்தான் சொல்ல வேண்டும்: “இதோ, உனக்கு உதவி செய்வதற்காக வந்துகொண்டிருக்கிற பார்வோனின் படை அதன் தேசமாகிய எகிப்துக்கே திரும்பிப் போக வேண்டியிருக்கும்.+ 8 ஆனால், கல்தேயர்கள் மறுபடியும் வந்து இந்த நகரத்தைக் கைப்பற்றி இதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”+ 9 யெகோவா சொல்வது இதுதான்: “கல்தேயர்கள் மறுபடியும் இந்தப் பக்கம் வரவே மாட்டார்கள் என்று நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் கண்டிப்பாக வருவார்கள். 10 உங்களோடு போர் செய்கிற கல்தேயர்களின் படையை நீங்கள் ஒட்டுமொத்தமாக வெட்டிப்போட்டால்கூட, சிலர் வெட்டுக்காயத்தோடு தப்பிப்பார்கள். அவர்கள் தங்களுடைய கூடாரங்களிலிருந்து எழுந்துவந்து இந்த நகரத்தைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”’”+
11 பார்வோனின் படை வருவதைக் கேள்விப்பட்டு கல்தேயர்களின் படை பின்வாங்கிப்போன+ பின்பு, 12 எரேமியா தன்னுடைய ஜனங்களிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய சொத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்துக்குப்+ புறப்பட்டுப் போனார். 13 ஆனால் அவர் ‘பென்யமீன் நுழைவாசலை’ அடைந்ததும், அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகனும் காவலர்களின் அதிகாரியுமான யெரியா என்பவன் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைப் பிடித்து, “நீ கல்தேயர்களோடு சேர்ந்துகொள்ளப் பார்க்கிறாய்!” என்றான். 14 ஆனால் எரேமியா, “இல்லவே இல்லை! நான் கல்தேயர்களோடு சேர்ந்துகொள்ளப் போவதில்லை!” என்றார். ஆனாலும் அவன் அதை நம்பாமல் எரேமியாவைக் கைது செய்து அதிகாரிகளிடம் கொண்டுபோனான். 15 அந்த அதிகாரிகள் பயங்கர கோபத்தோடு எரேமியாவை+ அடித்து, செயலாளரான யெகோனத்தானின் வீட்டில் அடைத்து வைத்தார்கள்.+ ஏனென்றால், அந்த வீடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது. 16 அங்கிருந்த நிலத்தடி இருட்டறை ஒன்றில் எரேமியா பல நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டார்.
17 அப்போது, சிதேக்கியா ராஜா ஆட்களை அனுப்பி எரேமியாவைத் தன்னுடைய அரண்மனைக்கு வர வைத்து, ரகசியமாக விசாரித்தார்.+ அவர் எரேமியாவிடம், “யெகோவா ஏதாவது செய்தி சொல்லியிருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு எரேமியா, “சொல்லியிருக்கிறார்! நீங்கள் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவீர்கள்”+ என்றார்.
18 பின்பு சிதேக்கியா ராஜாவிடம் எரேமியா, “நான் உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் இந்த ஜனங்களுக்கும் எதிராக அப்படியென்ன பாவம் செய்துவிட்டேன்? ஏன் என்னைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? 19 ‘பாபிலோன் ராஜா உங்களுக்கு எதிராகவும் இந்தத் தேசத்துக்கு எதிராகவும் வர மாட்டார்’ என்று உங்களிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் இப்போது எங்கே போனார்கள்?+ 20 ராஜாவே, என் எஜமானே, தயவுசெய்து கேளுங்கள். தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். செயலாளராகிய யெகோனத்தானின் வீட்டுக்கு+ மறுபடியும் என்னை அனுப்பிவிடாதீர்கள்; அங்கு போனால் நான் செத்தே போய்விடுவேன்”+ என்று சொன்னார். 21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.
38 ஜனங்களிடம் எரேமியா சொன்னதையெல்லாம் மாத்தானின் மகன் செப்பத்தியாவும், பஸ்கூரின்+ மகன் கெதலியாவும், செலேமியாவின் மகன் யூகாலும்,+ மல்கீயாவின் மகன் பஸ்கூரும் கேட்டார்கள். 2 அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’ 3 யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த நகரம் நிச்சயமாகவே பாபிலோன் ராஜாவுடைய கையில் கொடுக்கப்படும். அவனுடைய படை இதைக் கைப்பற்றும்’”+ என்று சொன்னதை அந்த நான்கு அதிகாரிகளும் கேட்டார்கள்.
4 உடனே, அந்த அதிகாரிகள் ராஜாவிடம் போய், “இந்த மனுஷனைத் தயவுசெய்து கொன்றுவிடுங்கள்.+ இந்த நகரத்தில் மீதியிருக்கிற போர்வீரர்களிடமும் ஜனங்களிடமும் இவன் இப்படியெல்லாம் பேசி அவர்களைப் பயந்து நடுங்க வைக்கிறான். ஜனங்கள் நல்லபடியாக வாழ வேண்டுமென்று நினைக்காமல் அவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று நினைக்கிறான்” என்று சொன்னார்கள். 5 அதற்கு ராஜா, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சொன்னார்.
6 அதனால் அவர்கள் எரேமியாவைப் பிடித்து, ராஜாவின் மகனாகிய மல்கீயாவின் கிணற்றுக்குள் கயிறுகளினால் இறக்கினார்கள். அந்தக் கிணறு ‘காவலர் முற்றத்தில்’+ இருந்தது. அதில் தண்ணீரே இல்லை, வெறும் சேறுதான் இருந்தது. எரேமியா அதில் மூழ்க ஆரம்பித்தார்.
7 எரேமியா கிணற்றுக்குள் போடப்பட்ட செய்தியை அரண்மனை அதிகாரியான* எபெத்மெலேக்+ என்ற எத்தியோப்பியர் கேள்விப்பட்டார். ‘பென்யமீன் நுழைவாசலில்’+ ராஜா உட்கார்ந்துகொண்டிருந்ததால், 8 எபெத்மெலேக் அங்கே போய் ராஜாவைப் பார்த்து, 9 “என் எஜமானாகிய ராஜாவே, இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியா தீர்க்கதரிசியைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்! அவர் அங்கே பட்டினியினால் செத்துப்போவாரே! நகரத்தில்கூட உணவு இல்லையே!”+ என்றார்.
10 அப்போது ராஜா, “நீ இங்கிருந்து 30 ஆட்களைக் கூட்டிக்கொண்டு போ. எரேமியா தீர்க்கதரிசி செத்துப்போவதற்குள் கிணற்றிலிருந்து அவரை வெளியே தூக்கிவிடு” என்றார். 11 அதனால் எபெத்மெலேக் ஆட்களைக் கூட்டிக்கொண்டு ராஜாவின் அரண்மனைக்குப் போனார். அங்கே பொக்கிஷ அறைக்குக் கீழே போய்,+ அங்கிருந்த கிழிந்த துணிகளையும் பழைய துணிகளையும் எடுத்து வந்து, கிணற்றிலிருந்த எரேமியாவிடம் கயிறுகளினால் இறக்கினார். 12 பின்பு எத்தியோப்பியரான எபெத்மெலேக் எரேமியாவிடம், “கயிறுகள் உங்கள் தோலை அறுக்காதபடி இந்தத் துணிகளைத் தயவுசெய்து உங்களுடைய அக்குள்களில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். எரேமியா அப்படியே செய்தார். 13 கிணற்றிலிருந்த எரேமியாவை அவர்கள் கயிறுகளால் வெளியே தூக்கிவிட்டார்கள். பின்பு, எரேமியா ‘காவலர் முற்றத்தில்’+ வைக்கப்பட்டார்.
14 சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியிடம் ஆட்களை அனுப்பி, யெகோவாவின் ஆலயத்திலுள்ள மூன்றாவது வாசலுக்கு வரச் சொன்னார். எரேமியா வந்ததும், “நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டும். எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்” என்றார். 15 அதற்கு எரேமியா, “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் என்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடுவீர்கள். நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார். 16 உடனே ராஜா எரேமியாவிடம், “நமக்கு உயிர் கொடுத்திருக்கிற உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உன்னைக் கொல்ல மாட்டேன். உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களுடைய கையிலும் உன்னைக் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி ரகசியமாகச் சத்தியம் செய்தார்.
17 அப்போது எரேமியா சிதேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் சரணடைந்தால் உயிர்பிழைப்பாய். இந்த நகரமும் தீ வைத்துக் கொளுத்தப்படாது. நீயும் உன் குடும்பத்தாரும் தப்பித்துக்கொள்வீர்கள்.+ 18 ஆனால், அந்த அதிகாரிகளிடம் நீ சரணடையாவிட்டால் இந்த நகரம் கல்தேயர்களிடம் கொடுக்கப்படும். நகரத்தை அவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ அவர்களுடைய கையிலிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது’”+ என்று சொன்னார்.
19 அதற்கு சிதேக்கியா ராஜா, “கல்தேயர்களோடு சேர்ந்துகொண்ட யூதர்களிடம் நான் சிக்கினால் அவர்கள் என்னைக் கொடூரமாக நடத்துவார்களே! அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்றார். 20 ஆனால் எரேமியா அவரிடம், “நீங்கள் அவர்களிடம் சிக்க மாட்டீர்கள். யெகோவா என் மூலமாகச் சொல்வதைத் தயவுசெய்து கேட்டு நடங்கள். அப்போதுதான் உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நீங்கள் உயிர்பிழைப்பீர்கள். 21 நீங்கள் சரணடைய மறுத்துவிட்டால் என்ன நடக்குமென்று யெகோவா என்னிடம் சொல்லியிருக்கிறார். 22 யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் மிஞ்சியிருக்கிற எல்லா பெண்களும் பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் கொண்டுபோகப்படுவார்கள்.+ அவர்கள் உங்களைப் பார்த்து,
‘நீங்கள் நம்பிய ஆட்களே உங்களை ஏமாற்றிவிட்டார்களே! உங்களை வீழ்த்திவிட்டார்களே!+
உங்களுடைய காலைச் சேற்றில் சிக்க வைத்துவிட்டு,
அவர்கள் மட்டும் தப்பித்துவிட்டார்களே!’ என்று சொல்வார்கள்.
23 உங்கள் மனைவிகளும் மகன்களும் கல்தேயர்களிடம் கொண்டுபோகப்படுவார்கள். அந்தக் கல்தேயர்களுடைய கையிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. பாபிலோன் ராஜா உங்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+ நீங்கள் செய்த குற்றத்தினால் இந்த நகரம் தீ வைத்துக் கொளுத்தப்படும்”+ என்று சொன்னார்.
24 அப்போது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த விஷயங்களை யாரிடமும் சொல்லாதே. சொன்னால், உன் உயிருக்கே ஆபத்து! 25 நான் உன்னிடம் பேசியதைப் பற்றி என்னுடைய அதிகாரிகள் கேள்விப்பட்டால் உடனே உன்னிடம் வந்து, ‘ராஜாவிடம் என்ன சொன்னாய்? தயவுசெய்து சொல். எங்களிடம் எதையும் மறைக்காதே. நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம்.+ ராஜா உன்னிடம் என்ன சொன்னார்?’ என்றெல்லாம் கேட்பார்கள். 26 அப்போது நீ அவர்களிடம், ‘என்னை மறுபடியும் யெகோனத்தானின் வீட்டுக்கு அனுப்பி சாகடிக்க வேண்டாம் என்றுதான் ராஜாவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்’+ என்று சொல்” என்றார்.
27 பிற்பாடு, எல்லா அதிகாரிகளும் எரேமியாவிடம் வந்து விசாரித்தார்கள். எரேமியாவும் ராஜா சொல்லச் சொன்னதை அப்படியே சொன்னார். அந்த அதிகாரிகள் அதற்குமேல் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்கள். ஏனென்றால், எரேமியாவும் ராஜாவும் பேசியதை அவர்கள் யாரும் கேட்கவில்லை. 28 எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+
39 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம், 10-ஆம் மாதம், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படைகளோடு வந்து எருசலேமைச் சுற்றிவளைத்தான்.+
2 சிதேக்கியா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம், நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் அவர்கள் நகரத்தின் மதிலை உடைத்தார்கள்.+ 3 பின்பு, பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளான நெர்கல்-சரேத்சேர் என்ற சம்கார், நேபோ-சர்சேகிம் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் மற்ற அதிகாரிகளும் உள்ளே போய் ‘நடு நுழைவாசலில்’+ உட்கார்ந்தார்கள்.
4 யூதாவின் ராஜா சிதேக்கியாவும் எல்லா வீரர்களும் அவர்களைப் பார்த்தபோது தப்பித்து ஓடினார்கள்.+ ராத்திரியில் ராஜாவின் தோட்டத்து வழியாகப் போய், இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசலைத் தாண்டி, அரபா+ வழியாகத் தப்பித்து ஓடினார்கள். 5 ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான். 6 அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான்.+ 7 பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
8 அதன்பின், ராஜாவின் அரண்மனையையும் ஜனங்களுடைய வீடுகளையும் கல்தேயர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்,+ எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.+ 9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
10 ஆனால், பரம ஏழைகள் சிலரை மட்டும் அவன் யூதா தேசத்தில் விட்டுவிட்டான். அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்து வேலை செய்ய வைத்தான்.*+
11 பின்பு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதானிடம், 12 “நீ எரேமியாவைக் கூட்டிக்கொண்டு போய் நன்றாகக் கவனித்துக்கொள். அவரை ஒன்றும் பண்ணிவிடாதே. அவர் கேட்பதையெல்லாம் கொடு”+ என்றான்.
13 காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான், நேபுசஸ்பான் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் பாபிலோன் ராஜாவுடைய முக்கிய அதிகாரிகளும் ஆட்களை அனுப்பி, 14 எரேமியாவை ‘காவலர் முற்றத்திலிருந்து’+ வெளியே கொண்டுவந்தார்கள். பின்பு, அவரை சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ ஒப்படைத்து, அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்கள். அதன்பின், எரேமியா ஜனங்கள் மத்தியில் வாழ்ந்துவந்தார்.
15 ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா அடைக்கப்பட்டிருந்தபோது யெகோவா அவரிடம், 16 “நீ போய் எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கிடம்+ இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “நான் சொன்னபடியே இந்த நகரத்துக்குச் செய்யப்போகிறேன். இதை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிக்கப்போகிறேன். இது நிறைவேறுவதை நீ உன் கண்களால் பார்ப்பாய்.”’
17 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாளில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நீ யாரைக் கண்டு பயப்படுகிறாயோ அவர்கள் கையில் உன்னைக் கொடுக்க மாட்டேன்.’
18 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் கண்டிப்பாக உன்னைப் பாதுகாப்பேன். நீ என்மேல் நம்பிக்கை வைத்ததால்+ வாளுக்குப் பலியாக மாட்டாய். நான் உன் உயிரைக் காப்பாற்றுவேன்’”+ என்று சொன்னார்.
40 காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ எரேமியாவை ராமாவிலிருந்து+ விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார். 2 அப்போது, காவலாளிகளின் தலைவன் எரேமியாவைத் தனியாகக் கூப்பிட்டு, “இந்த நகரத்துக்கு வந்திருக்கிற அழிவைப் பற்றி உன் கடவுளாகிய யெகோவா முன்பே சொல்லியிருந்தார். 3 யெகோவா அதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், நீங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தீர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்கிறது.+ 4 இப்போது நான் உன்னுடைய கைவிலங்குகளைக் கழற்றி உன்னை விடுதலை செய்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உனக்கு விருப்பம் இருந்தால் நீ வரலாம். உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன். உனக்கு அங்கே வர விருப்பம் இல்லையென்றால் வர வேண்டாம். இந்தத் தேசத்தில் எங்கு போக விரும்பினாலும் நீ போகலாம்”+ என்று சொன்னான்.
5 எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான்.
பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான். 6 எரேமியா மிஸ்பாவிலிருந்த+ அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.
7 பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படாமல் தேசத்திலேயே விடப்பட்ட+ பரம ஏழைகளான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அதிகாரியாக அகிக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் ராஜா நியமித்திருந்த செய்தியைத் தேசத்திலிருந்த எல்லா படைத் தலைவர்களும் அவர்களோடு இருந்த ஆட்களும் கேள்விப்பட்டார்கள். 8 அவர்கள் எல்லாரும், அதாவது நெத்தனியாவின் மகன் இஸ்மவேல்,+ கரேயாவின் மகன்களான யோகனான்+ மற்றும் யோனத்தான், தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்கள், மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யெசனியா+ ஆகியவர்களும் அவர்களுடைய ஆட்களும், மிஸ்பாவிலிருந்த+ கெதலியாவிடம் வந்தார்கள். 9 சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியா, அவர்களிடமும் அவர்களுடைய ஆட்களிடமும் உறுதிமொழி கொடுத்து, “கல்தேயர்களுக்குச் சேவை செய்யப் பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே இருந்து, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்.+ 10 நான் மிஸ்பாவிலேயே தங்கி, இங்கே வருகிற கல்தேயர்களிடம் உங்கள் சார்பாகப் பேசுகிறேன். ஆனால், நீங்கள் போய் திராட்சமதுவையும் கோடைக் காலத்துப் பழங்களையும் எண்ணெயையும் பாத்திரங்களில் சேமித்து வைத்து, நீங்கள் சொந்தமாக்கிக்கொண்ட நகரங்களில் குடியிருங்கள்”+ என்றார்.
11 பாபிலோன் ராஜா யூதாவில் சில ஜனங்களை விட்டுவைத்திருக்கிறார் என்றும், அவர்களுக்கு அதிகாரியாக சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவை நியமித்திருக்கிறார் என்றும் மோவாபிலும் அம்மோனிலும் ஏதோமிலும் மற்ற இடங்களிலும் இருந்த எல்லா யூதர்களும் கேள்விப்பட்டார்கள். 12 அதனால், தாங்கள் சிதறிப்போயிருந்த அந்த எல்லா இடங்களிலிருந்தும் யூதாவுக்குத் திரும்பிவர ஆரம்பித்தார்கள். அவர்கள் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து சேர்ந்தார்கள். பின்பு, திராட்சமதுவையும் கோடைக் கால பழங்களையும் ஏராளமாகச் சேமித்து வைத்தார்கள்.
13 கரேயாவின் மகன் யோகனானும் தேசமெங்கும் இருந்த படைத் தலைவர்களும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து, 14 “அம்மோனியர்களின்+ ராஜாவான பாலிஸ் உங்களைக் கொலை செய்வதற்காக நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை அனுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை அகிக்காமின் மகன் கெதலியா நம்பவில்லை.
15 அப்போது, கரேயாவின் மகன் யோகனான் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் ரகசியமாக வந்து, “நான் போய் நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுகிறேன். அவன் கையில் நீங்கள் ஏன் சாக வேண்டும்? உங்களிடம் வந்திருக்கிற யூதா ஜனங்கள் ஏன் சிதறிப்போக வேண்டும்? மிச்சமிருக்கிற யூதா மக்கள் ஏன் அழிந்துபோக வேண்டும்?” என்றார். 16 ஆனால், அகிக்காமின் மகன் கெதலியா+ கரேயாவின் மகன் யோகனானிடம், “வேண்டாம், அப்படிச் செய்யாதே! நீ இஸ்மவேலைப் பற்றிப் பொய் சொல்கிறாய்” என்று சொன்னார்.
41 எலிஷாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மவேல்+ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன், ராஜாவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவன். ஏழாம் மாதத்தில் அவன் மிஸ்பாவில்+ இருக்கிற அகிக்காமின் மகனான கெதலியாவிடம் பத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். பின்பு, மிஸ்பாவில் அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். 2 அப்போது, நெத்தனியாவின் மகன் இஸ்மவேலும் அவனுடைய பத்து ஆட்களும் திடீரென்று எழுந்து, யூதாவின் அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருந்த சாப்பானின் மகனான அகிக்காமின் மகன் கெதலியாவை வாளால் வெட்டிப்போட்டார்கள். 3 கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதர்களையும் அங்கிருந்த கல்தேய படைவீர்களையும்கூட இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.
4 கெதலியா கொல்லப்பட்ட விஷயம் மற்றவர்களுக்குத் தெரியவருவதற்கு முன்பு, இரண்டாம் நாளில், 5 சீகேமிலிருந்தும்+ சீலோவிலிருந்தும்+ சமாரியாவிலிருந்தும்+ 80 ஆட்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு உணவுக் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.+ அவர்கள் தங்களுடைய தாடியைச் சிரைத்திருந்தார்கள், உடையைக் கிழித்திருந்தார்கள், உடலைக் கீறியிருந்தார்கள்.+ 6 அவர்களைச் சந்திப்பதற்காக நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து அழுதுகொண்டே போனான். அவர்களைப் பார்த்ததும், “அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வாருங்கள்” என்று சொல்லி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனான். 7 ஆனால், நகரத்துக்குள் வந்தவுடன் அவனும் அவனுடைய ஆட்களும் அவர்களைக் கொன்று கிணற்றில் வீசினார்கள்.
8 அவர்களில் பத்துப் பேரை மட்டும் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் இஸ்மவேலிடம், “எங்களைக் கொன்றுவிடாதீர்கள். நாங்கள் கோதுமையையும் பார்லியையும் எண்ணெயையும் தேனையும் நிலத்தடியில் ஏராளமாக வைத்திருக்கிறோம்” என்றார்கள். 9 கொல்லப்பட்டவர்களின் உடல்களையெல்லாம் இஸ்மவேல் ஒரு பெரிய கிணற்றில் குவித்தான். அது இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவிடமிருந்து+ தப்பிப்பதற்காக ஆசா ராஜா வெட்டிய கிணறு.
10 மிஸ்பாவில்+ மீதியாக இருந்த ஜனங்களையெல்லாம் இஸ்மவேல் சிறைபிடித்துக்கொண்டு போனான். காவலாளிகளின் தலைவனான நேபுசராதான், அகிக்காமின் மகனான கெதலியாவின்+ பொறுப்பில் விட்டிருந்த ராஜாவின் மகள்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு அம்மோனியர்களின்+ தேசத்துக்குப் புறப்பட்டான்.
11 நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் செய்த கொடுமையை கரேயாவின் மகனான யோகனானும்+ அவரோடு இருந்த படைத் தலைவர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது, 12 எல்லா ஆட்களையும் கூட்டிக்கொண்டு நெத்தனியாவின் மகனான இஸ்மவேலோடு போர் செய்யக் கிளம்பினார்கள். கிபியோனில் உள்ள பெரிய நீர்தேக்கத்துக்கு* பக்கத்தில் அவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்கள்.
13 இஸ்மவேலின் பிடியில் இருந்த எல்லாரும், கரேயாவின் மகனான யோகனானையும் அவரோடு இருந்த படைத் தலைவர்களையும் பார்த்தபோது ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். 14 உடனே, அவர்கள் கரேயாவின் மகனான யோகனானிடம் போய்ச் சேர்ந்துகொண்டார்கள். 15 ஆனால், நெத்தனியாவின் மகனான இஸ்மவேலும் அவனுடைய ஆட்களில் எட்டுப் பேரும் யோகனானிடமிருந்து தப்பித்து அம்மோனியர்களின் தேசத்துக்கு ஓடினார்கள்.
16 இஸ்மவேல் கெதலியாவைக்+ கொன்றபின் மிஸ்பாவிலிருந்து+ சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த ஜனங்களை யோகனானும் அவரோடு இருந்த எல்லா படைத் தலைவர்களும் கிபியோனிலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்களையும் போர்வீரர்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அரண்மனை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 17 அவர்கள் எகிப்துக்குப் போக முடிவு செய்து,+ பெத்லகேமுக்குப்+ பக்கத்திலே கிம்காம் என்ற இடத்திலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள். 18 பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்திருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் கொலை செய்திருந்ததால்தான்+ அப்படி கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.
42 பின்பு எல்லா படைத் தலைவர்களும், கரேயாவின் மகன் யோகனானும்,+ ஒசாயாவின் மகன் யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசியிடம் வந்து, 2 “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 3 நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் உங்கள் கடவுளாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லட்டும்” என்றார்கள்.
4 அதற்கு எரேமியா தீர்க்கதரிசி, “சரி, நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். யெகோவா உங்களிடம் சொல்லச் சொல்கிற எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் சொல்கிறேன்” என்றார்.
5 அப்போது அவர்கள் எரேமியாவிடம், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் மூலமாகச் சொல்வதை நாங்கள் அப்படியே செய்யாவிட்டால் அவர் எங்களைத் தண்டிக்கட்டும். இதற்கு யெகோவாவே உண்மையான சாட்சி, அவரே நம்பகமான சாட்சி. 6 எங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொண்டோம். அதனால், எங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எங்கள் கடவுளாகிய யெகோவா சொல்கிறபடியே செய்வோம். அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்தால்தான் எங்களால் சந்தோஷமாக வாழ முடியும்” என்று சொன்னார்கள்.
7 பத்து நாட்கள் கழித்து எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. 8 அதனால் அவர் கரேயாவின் மகன் யோகனானையும், அவரோடு இருந்த படைத் தலைவர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களையும் வரச் சொன்னார்.+ 9 அவர்களிடம், “உங்களுக்காக இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி என்னிடம் கேட்டுக்கொண்டீர்களே. அவர் சொல்வது இதுதான்: 10 ‘நீங்கள் இந்தத் தேசத்திலேயே இருந்தால் நான் உங்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்க்க மாட்டேன். உங்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கியெறிய மாட்டேன். உங்களுக்குக் கொடுத்த தண்டனையை நினைத்து வருத்தப்படுவேன்.+ 11 நீங்கள் பாபிலோன் ராஜாவை நினைத்து இனி பயப்படாதீர்கள்.’+
யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனைப் பார்த்து நடுங்காதீர்கள். ஏனென்றால், அவனுடைய கையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும் உங்களைக் காப்பாற்றுவதற்கும் நான் உங்களோடு இருக்கிறேன். 12 நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்,+ அவனும் உங்களுக்கு இரக்கம் காட்டி உங்கள் தேசத்துக்கே உங்களை அனுப்பி வைப்பான்.
13 ஆனால், நம் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், “நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்க மாட்டோம்!” என்றும், 14 “எகிப்து தேசத்துக்குப் போய்விடுவோம்.+ அங்குதான் போர் இருக்காது, ஊதுகொம்பின் சத்தம் கேட்காது, பசி பட்டினி இருக்காது. அதனால் அங்குதான் வாழ்வோம்” என்றும் சொன்னால், 15 யூதாவில் மிஞ்சியிருக்கிறவர்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று நீங்கள் சொல்லிக்கொண்டு, அங்கே போய்* வாழ்ந்தால், 16 இப்போது எதற்குப் பயப்படுகிறீர்களோ அதே வாளும் பஞ்சமும் எகிப்து தேசத்துக்கே வந்து உங்களைத் தாக்கும். நீங்கள் அங்கேயே செத்துப்போவீர்கள்.+ 17 எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிற எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள். நான் கொடுக்கப்போகிற தண்டனையிலிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது.”’
18 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எகிப்துக்குப் போனால், எருசலேம் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபத்தைக் காட்டியது போலவே உங்கள் மேலும் காட்டுவேன்.+ உங்களுக்கு வரும் கோர முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்கள் உங்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ நீங்கள் மறுபடியும் இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டீர்கள்.’
19 யூதாவில் மிஞ்சியிருக்கிறவர்களே, நீங்கள் எகிப்துக்குப் போகக் கூடாதென்று யெகோவா சொல்லியிருக்கிறார். இன்று நான் கொடுக்கும் எச்சரிப்பை நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: 20 நீங்கள் கடவுளுடைய பேச்சை மீறினால் உயிரையே இழந்துவிடுவீர்கள். நீங்கள் என்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எங்கள் கடவுளான யெகோவா சொல்வதையெல்லாம் சொல்லுங்கள். நாங்கள் அப்படியே செய்கிறோம்’+ என்றெல்லாம் சொல்லி, உங்கள் கடவுளான யெகோவாவிடம் என்னை விசாரிக்கச் சொன்னீர்களே. 21 அவர் சொன்னதைத்தான் நான் இன்று உங்களிடம் சொன்னேன். ஆனால் நம் கடவுளான யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிய மாட்டீர்கள். அவர் என் மூலமாகச் சொன்ன எதையுமே செய்ய மாட்டீர்கள்.+ 22 அதனால், எங்கே போய் வாழ நினைக்கிறீர்களோ அங்கேயே வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் நீங்கள் பலியாகப்போவது உறுதி”+ என்று சொன்னார்.
43 யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா ஒன்றுவிடாமல் ஜனங்களிடம் சொன்னார். அவர்களுடைய கடவுளான யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் சொல்லி முடித்த பின்பு, 2 ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார். 3 நேரியாவின் மகன் பாருக்+ சொல்லித்தான் நீ இப்படிப் பேசுகிறாய்! அவனுடைய ஆசையே, நாங்கள் கல்தேயர்களிடம் சிக்க வேண்டும், அவர்கள் எங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போக வேண்டும், அல்லது இங்கேயே சாகடிக்க வேண்டும் என்பதுதான்”+ என்று சொன்னார்கள்.
4 அதனால், கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும் ஜனங்களும் யெகோவா சொன்னபடி யூதா தேசத்தில் தங்கவில்லை. 5 அதற்குப் பதிலாக, கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும், சிதறிப்போயிருந்த தேசங்களிலிருந்து யூதாவுக்குத் திரும்பி வந்து வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 6 சாப்பானின்+ மகனாகிய கெதலியாவிடம்+ காவலாளிகளின் தலைவனான நேபுசராதான்+ விட்டுச்சென்ற ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், ராஜாவின் மகள்களையும், அவர்களோடுகூட தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகன் பாருக்கையும் கூட்டிக்கொண்டு போனார்கள். 7 அவர்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் எகிப்து தேசத்திலிருந்த தக்பானேஸ்+ நகரத்துக்குப் போனார்கள்.
8 தக்பானேஸ் நகரத்தில் யெகோவா எரேமியாவிடம், 9 “யூத ஆண்களின் கண்களுக்கு முன்பாக நீ பெரிய கற்களை எடுத்து, தக்பானேசில் பார்வோனின் அரண்மனை வாசலிலே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற செங்கற்களுக்குள் அவற்றை மறைத்து வைத்துக் காரை பூசிவிடு. 10 பின்பு அவர்களிடம் இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனும் பாபிலோனின் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரை நான் வர வைப்பேன்.+ நான் மறைத்து வைத்திருக்கிற இந்தக் கற்களுக்கு மேல் அவனுடைய சிம்மாசனத்தை நிறுத்துவேன். அவன் தன்னுடைய ராஜ கூடாரத்தை அவற்றின் மேல் விரிப்பான்.+ 11 அவன் வந்து எகிப்து தேசத்தைத் தாக்குவான்.+ உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள். சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள். சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்.+ 12 எகிப்தில் இருக்கிற கோயில்களுக்கு நான் தீ வைப்பேன்.+ அவன் அவற்றை எரித்து, அங்கிருக்கிற சிலைகளைக் கைப்பற்றிக்கொண்டு போய்விடுவான். ஒரு மேய்ப்பன் எப்படிச் சர்வ சாதாரணமாகத் தன் சால்வையைப் போர்த்திக்கொண்டு போவானோ அப்படியே அவன் சர்வ சாதாரணமாக எகிப்து தேசத்தைப் போர்த்திக்கொண்டு, பத்திரமாக* கிளம்பிப் போவான். 13 எகிப்தில் இருக்கிற பெத்-ஷிமேஸ்* தூண்களை உடைத்துப்போடுவான். அங்கிருக்கிற கோயில்களைத் தீ வைத்துக் கொளுத்துவான்”’” என்று சொன்னார்.
44 எகிப்து+ தேசத்தைச் சேர்ந்த மிக்தோலிலும்,+ தக்பானேசிலும்,+ நோப்பிலும்,*+ பத்ரோசிலும்+ வாழ்ந்துகொண்டிருந்த எல்லா யூதர்களிடமும் அறிவிக்கச் சொல்லி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது; அவர் அவர்களிடம், 2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் நான் எப்படி அழித்திருக்கிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.+ இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன. அங்கே மனுஷ நடமாட்டமே இல்லை.+ 3 ஏனென்றால், உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களைத் தேடிப்போய்,+ அவற்றைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலிகள் செலுத்தி, என் கோபத்தைக் கிளறினீர்கள்.+ 4 நான் என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி, “நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைத் தயவுசெய்து செய்யாதீர்கள்”+ என்று சொன்னேன். 5 ஆனால், நீங்கள் காதில் வாங்கவே இல்லை. மற்ற தெய்வங்களுக்குப் பலி செலுத்துவதை நிறுத்தவில்லை. அந்தப் பாவத்தைவிட்டு விலகவில்லை.+ 6 அதனால், நான் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் யூதாவின் நகரங்களையும் எருசலேமின் வீதிகளையும் கொளுத்தினேன். இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன.’+
7 இப்போது, பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏன் உங்களுக்கே பேரழிவைத் தேடிக்கொள்கிறீர்கள்? ஒருவர்விடாமல் எல்லா ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் கைக்குழந்தைகளும் யூதாவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோக வேண்டுமா? 8 நீங்கள் குடியிருக்கிற எகிப்து தேசத்தின் தெய்வங்களுக்கு உங்கள் கைகளால் பலிகள் செலுத்தி ஏன் என்னுடைய கோபத்தைக் கிளறுகிறீர்கள்? நீங்கள் அழிந்துபோவீர்கள். உலகமே உங்களைப் பழித்தும் சபித்தும் பேசும்.+ 9 யூதா தேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்களுடைய முன்னோர்களும் யூதாவின் ராஜாக்களும்+ அவர்களுடைய மனைவிகளும் செய்த அக்கிரமங்களையும்,+ நீங்களும் உங்களுடைய மனைவிகளும் செய்த அக்கிரமங்களையும்+ மறந்துவிட்டீர்களா? 10 இன்றுவரை நீங்கள் மனம் வருந்தவில்லை. எனக்குப் பயப்படவில்லை.+ உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’+
11 அதனால், இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவை ஒட்டுமொத்தமாக அழிக்க நான் முடிவு செய்துவிட்டேன். 12 விடாப்பிடியாக எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் என் கையில் சிக்குவார்கள். எகிப்து தேசத்தில் அவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள். வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள். சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்.+ அவர்களுக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 13 எருசலேமில் இருந்தவர்களை நான் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ தண்டித்தது போலவே எகிப்தில் வாழ்கிறவர்களையும் தண்டிப்பேன். 14 எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் தப்பிக்க மாட்டார்கள். யூதா தேசத்துக்குத் திரும்பி வரவே மாட்டார்கள். திரும்பி வந்து வாழ ஏங்குவார்கள். ஆனால், ஒருசிலரைத் தவிர வேறு யாரும் திரும்பி வர மாட்டார்கள்’” என்று சொன்னார்.
15 அப்போது, பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மனைவிகளும், பொய் தெய்வங்களுக்கு அவர்கள் பலி செலுத்தி வந்ததை அறிந்திருந்த அவர்களுடைய கணவர்களும், எகிப்திலுள்ள+ பத்ரோசில்+ வாழ்ந்துவந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைப் பார்த்து, 16 “யெகோவாவின் பெயரில் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். 17 நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்கு*+ திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம். நாங்களும் எங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அதைத்தான் செய்துவந்தோம். அப்போது, வயிறார சாப்பிட்டு வசதியாக வாழ்ந்தோம். கெட்டது எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை. 18 விண்ணரசிக்கு* திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்துவதை எப்போது நிறுத்தினோமோ அப்போதிலிருந்தே எங்களுக்கு எல்லா கஷ்டமும் வர ஆரம்பித்துவிட்டது. நாங்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியானோம்” என்று சொன்னார்கள்.
19 பின்பு அந்தப் பெண்கள், “நாங்கள் என்ன எங்களுடைய கணவரிடம் கேட்காமலா விண்ணரசிக்கு திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தினோம்? எங்கள் கணவருடைய சம்மதத்தோடுதானே விண்ணரசியின் உருவத்தில் அப்பங்கள் செய்து அவளுக்குப் படைத்தோம்?” என்று கேட்டார்கள்.
20 அப்போது, எரேமியா தன்னோடு பேசிக்கொண்டிருந்த அந்தக் கணவர்களிடமும் மனைவிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் இப்படிச் சொன்னார்: 21 “நீங்களும், உங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும், மற்ற ஜனங்களும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பலிகள் செலுத்தியதை+ யெகோவா மறக்கவில்லை, அவர் அதை நினைத்துப் பார்த்தார். 22 நீங்கள் செய்த அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடைசியில் யெகோவா உங்கள் தேசத்தைப் பாழாக்கினார். அதற்குக் கோரமான முடிவு வந்தது. அங்கு மனுஷ நடமாட்டம் இல்லாமல் போனதைப் பார்த்த எல்லாரும் பழித்துப் பேசினார்கள். இன்று உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.+ 23 நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலும் அவருடைய எச்சரிப்புகளை* காதில் வாங்காமலும் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள், பொய் தெய்வத்துக்குப் பலிகள் செலுத்தினீர்கள். அதனால்தான், இன்று உங்களுக்கு இந்தக் கதி”+ என்று சொன்னார்.
24 பின்பு எரேமியா அந்த எல்லா ஜனங்களிடமும் பெண்களிடமும், “எகிப்தில் வாழ்கிற யூதா ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்களும் உங்கள் மனைவிகளும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டீர்கள். “நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம்”+ என்று சொன்னீர்கள். பெண்களே, உங்களுடைய நேர்த்திக்கடனைக் கண்டிப்பாகச் செலுத்தத்தான் போகிறீர்கள்!’
26 எகிப்து தேசத்தில் வாழ்கிற யூதா ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய மகத்தான பெயரின் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்! எகிப்து தேசத்தில் இருக்கிற யூதா ஜனங்கள்+ யாருமே இனி, ‘உன்னதப் பேரரசராகிய உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்லி சத்தியம் செய்ய மாட்டார்கள். 27 அவர்களுக்கு நான் நல்லது செய்யப்போவதில்லை. அவர்களை எப்போது தண்டிக்கலாம் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.+ எகிப்து தேசத்திலிருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி, அடியோடு அழிந்துபோவார்கள்.+ 28 ஒருசிலர் மட்டும்தான் வாளுக்குத் தப்பி யூதா தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். எகிப்து தேசத்தில் குடியிருக்கப் போன யூதா ஜனங்கள்+ எல்லாரும், நான் சொன்னது உண்மையா அவர்கள் சொன்னது உண்மையா என்று அப்போது தெரிந்துகொள்வார்கள்!”’” என்று சொன்னார்.
29 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிக்கப்போவதற்கு அடையாளமாக ஒன்றைச் செய்யப்போகிறேன். அதைப் பார்க்கும்போது, உங்களை அழிக்கப்போவதாக நான் சொன்ன வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிந்துகொள்வீர்கள். 30 யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவைக் கொலைவெறிபிடித்த அவனுடைய எதிரியான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் நான் கொடுத்தது போலவே, எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒப்பிராவையும் கொலைவெறிபிடித்த எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.”’”+
45 யூதாவை யோசியாவின் மகனான யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்,+ எரேமியா தீர்க்கதரிசி சொல்லச் சொல்ல+ நேரியாவின் மகனான பாருக்+ ஒரு புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதினார். அப்போது பாருக்கிடம் எரேமியா,
2 “பாருக்கே, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உனக்குச் சொல்வது இதுதான்: 3 ‘நீ புலம்பிக்கொண்டே, “ஐயோ, யெகோவா எனக்கு வேதனைக்குமேல் வேதனை கொடுத்துவிட்டார். குமுறிக் குமுறியே நான் களைத்துப்போய்விட்டேன். எனக்கு நிம்மதியே இல்லை” என்று சொன்னாய்.’
4 அதனால், கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன்.+ 5 நீயோ உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.* அவற்றைத் தேடுவதை நிறுத்து!”’
‘ஏனென்றால், நான் எல்லா உயிர்களையும் அழிக்கப்போகிறேன்.+ ஆனால், நீ எங்கே போனாலும் நான் உன்னுடைய உயிரைக் காப்பாற்றுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
46 தேசங்களுக்கு+ நடக்கப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்ன செய்தி இது. 2 யோசியாவின் மகனான யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ யூப்ரடிஸ்* ஆற்றங்கரையில் இருந்த கர்கேமிசில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ+ தோற்றுப்போனான். அவனுடைய படையைப் பற்றியும் அவனுடைய தேசமான எகிப்தைப்+ பற்றியும் கடவுள் சொன்னது இதுதான்:
3 “சிறிய கேடயங்களையும் பெரிய கேடயங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
போருக்குக் கிளம்புங்கள்.
4 குதிரை வீரர்களே, குதிரைகளைத் தயார்படுத்தி அதன்மேல் ஏறிக்கொள்ளுங்கள்.
தலைக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்.
ஈட்டிகளைத் தீட்டிப் பளபளப்பாக்குங்கள்.
உடல்கவசத்தைப் போட்டுக்கொள்ளுங்கள்.
5 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த வீரர்கள் ஏன் மிரண்டுபோயிருக்கிறார்கள்?
அவர்கள் தோற்றுவிட்டார்கள், பின்வாங்கிப் போகிறார்கள்.
அவர்கள் திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் ஒரே திகில்.
6 வேகமாக ஓடுகிறவர்களால் ஓட முடிவதில்லை.
போர்வீரர்களால் தப்பிக்க முடிவதில்லை.
வடக்கிலே, யூப்ரடிஸ் ஆற்றங்கரையிலே,
அவர்கள் தடுக்கி விழுந்து கிடக்கிறார்கள்.’+
7 நைல் நதியைப் போலப் பாய்ந்து வருகிறவன் யார்?
கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போல வருகிறவன் யார்?
8 எகிப்துதான் நைல் நதியைப்+ போலவும்
கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போலவும் வருகிறான்.
‘நான் பாய்ந்து போய் இந்தப் பூமியை மூழ்கடித்துவிடுவேன்.
நகரத்தையும் அதிலிருக்கிற ஜனங்களையும் அழித்துவிடுவேன்’ என்று சொல்கிறான்.
9 குதிரைகளே, சீறிப் பாயுங்கள்!
ரதங்களே, கண்மண் தெரியாமல் ஓடுங்கள்!
கேடயம்+ பிடிக்கிற கூஷ் வீரர்களே, பூத் வீரர்களே,
வில்லை+ வளைக்கிற லூதீம்+ வீரர்களே,
எல்லாரும் புறப்பட்டுப் போங்கள்.
10 அந்த நாள் உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுடைய நாள். அவருடைய எதிரிகளை அவர் பழிதீர்க்கும் நாள். யூப்ரடிஸ்+ ஆற்றங்கரையில் இருக்கிற வடக்கு தேசத்தில், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா பலி கொடுக்கப்போகிறார்.* அவருடைய வாள் உயிர்களைப் பறித்து, திருப்தியாகும்வரை இரத்தத்தைக் குடிக்கப்போகிறது.
குணமாவதற்காக நீ என்ன செய்தாலும் அது வீண்தான்.
நீ குணமாகவே மாட்டாய்.+
வீரனும் வீரனும் மோதிக்கொள்கிறார்கள்.
இரண்டு பேருமே கீழே விழுகிறார்கள்.”
13 எகிப்து தேசத்தைத் தாக்குவதற்காக பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் வரப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்:+
14 “எகிப்திலும் மிக்தோலிலும்+ அறிவியுங்கள்.
நோப்பிலும்* தக்பானேசிலும்+ அறிவியுங்கள்.
இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வாள் தாக்கும்.
எதிர்த்துப் போராட தயாராக நில்லுங்கள்.’
15 உங்களுடைய வீரர்கள் ஏன் வீழ்ந்துபோனார்கள்?
யெகோவா அவர்களைக் கீழே தள்ளிவிட்டதால்
அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
16 அவர்களில் ஏராளமானவர்கள் தடுமாறி விழுகிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து,
“எழுந்திருங்கள்! கொடூரமான வாளுக்குத் தப்ப
நம்முடைய தேசத்துக்கே போகலாம்,
நம்முடைய ஜனங்களிடமே போகலாம்” என்று சொல்கிறார்கள்.’
17 அங்கே அந்த வீரர்கள்,
‘எகிப்தின் ராஜா பார்வோன் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு,
வீணாகப் பெருமை பேசுகிறான்’+ என்று சொல்கிறார்கள்.
18 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா இப்படிச் சொல்கிறார்:
‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.*
மலைகளுக்கு நடுவே நிற்கும் தாபோர்+ மலையைப் போலவும்,
கடலோரத்தில் நிற்கும் கர்மேல்+ மலையைப் போலவும் கம்பீரமாக அவர்* வருவார்.
19 எகிப்தில் வாழ்கிறவர்களே,
சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்காக மூட்டை கட்டுங்கள்.
மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+
20 எகிப்து அழகான இளம் பசுவைப் போல இருக்கிறாள்.
ஆனால், பயங்கரமான கொசுக்கள் வடக்கிலிருந்து வந்து அவளைக் கடிக்கும்.
21 அவளுடைய கூலிப் படையினர்கூட கொழுத்த கன்றுக்குட்டிகளைப் போன்றவர்கள்.
அவர்களும் ஓட்டம் பிடித்தார்கள்.
தைரியமாக எதிர்த்து நிற்கவில்லை.+
அவர்களுடைய அழிவு நாள் வந்துவிட்டது.
தண்டனைத் தீர்ப்பின் நேரம் வந்துவிட்டது.’
22 ‘தப்பித்து ஓடுகிற பாம்பைப் போல அவள் சீறுகிறாள்.
ஏனென்றால், மரம் வெட்டுகிறவர்களைப் போல எதிரிகள் வருகிறார்கள்.
கோடாலிகளோடு அவள்மேல் பாய்கிறார்கள்.
23 அவளுடைய காடு என்னதான் அடர்த்தியாகத் தெரிந்தாலும் அதை வெட்டிப்போடுவார்கள்.
ஏனென்றால், அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட அதிகமானவர்கள்,
எண்ணவே முடியாதவர்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.
24 ‘எகிப்து ஜனங்கள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
வடக்கிலுள்ள ஜனங்களின் கையில் கொடுக்கப்படுவார்கள்.’+
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+
26 யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களைக் கொல்லத் துடிக்கிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடமும்+ அவனுடைய ஊழியர்களிடமும் நான் அவர்களைக் கொடுப்பேன். ஆனால், அதற்குப் பிறகு எகிப்திலே பழையபடி ஜனங்கள் குடியிருப்பார்கள்.+
27 என் ஊழியனான யாக்கோபே, நீ பயப்படாதே.
இஸ்ரவேலே, திகிலடையாதே.+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
அடிமைப்பட்டிருக்கிற தேசத்திலிருந்து உன் சந்ததியைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
யாக்கோபு திரும்பி வந்து தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.’+
28 யெகோவா சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+
அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.
உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.’”+
47 காசாவை பார்வோன் தாக்குவதற்கு முன்பு, பெலிஸ்தியர்களைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்ன செய்தி. 2 யெகோவா சொல்வது இதுதான்:
“இதோ, வடக்கிலிருந்து தண்ணீர் பாய்ந்து வருகிறது.
அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து வருகிறது.
தேசத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்
நகரத்தையும் அதில் வாழ்கிறவர்களையும் அது மூழ்கடிக்கும்.
ஆட்கள் அலறுவார்கள்.
ஜனங்கள் ஒப்பாரி வைப்பார்கள்.
3 வீரியமுள்ள குதிரைகள்* ஓடிவருகிற சத்தத்தையும்
போர் ரதங்கள் பாய்ந்து வருகிற சத்தத்தையும்
அதன் சக்கரங்கள் உருளுகிற சத்தத்தையும் கேட்டு
தகப்பன்கள் பீதி அடைவார்கள்.
பிள்ளைகளைக்கூட அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவார்கள்.
4 ஏனென்றால், பெலிஸ்தியர்கள்+ எல்லாருமே அழியப்போகிற நாள் வருகிறது.
தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ போய் உதவி செய்கிறவர்களும் ஒழிந்துபோவார்கள்.
5 காசாவுக்குத் துக்கமும் அவமானமும் வரும்.*
அஸ்கலோன் அடங்கி ஒடுங்கிவிட்டது.+
அவற்றின் சமவெளியில் மிஞ்சியிருக்கிறவர்களே,
இன்னும் எவ்வளவு காலம்தான் உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொண்டு இருப்பீர்கள்?+
நீ எப்போதுதான் அடங்குவாய்?
உன்னுடைய உறைக்குள் திரும்பிப் போ.
அங்கே அமைதியாக ஓய்வெடு.
7 அது எப்படி அடங்கும்?
யெகோவாதானே அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்!
அஸ்கலோனையும் கடற்கரைப் பகுதியையும் அழிப்பதற்காக+
அவர்தானே அதை அனுப்பியிருக்கிறார்?”
48 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா மோவாபைப்+ பற்றிச் சொல்வது இதுதான்:
“நேபோவின்+ கதி அவ்வளவுதான்! அவள் அழிந்துவிட்டாள்!
கீரியாத்தாயீமுக்கு+ அவமானம்! அவள் கைப்பற்றப்பட்டாள்!
பாதுகாப்பான கோட்டைக்கு அவமானம்! அது இடிக்கப்பட்டது!+
2 இனி யாரும் மோவாபைப் புகழ மாட்டார்கள்.
அவளைக் கவிழ்ப்பதற்காக எதிரிகள் எஸ்போனில்+ திட்டம் தீட்டியிருக்கிறார்கள்:
‘அந்தத் தேசத்துக்கு ஒரு முடிவுகட்டலாம், வாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.
மத்மேனே, நீயும் அமைதியாகிவிடு!
ஏனென்றால், வாள் உன்னைக் குறிவைத்திருக்கிறது.
4 மோவாப் நொறுக்கப்பட்டாள்.
அவளுடைய சிறுபிள்ளைகள் கதறுகிறார்கள்.
5 அவர்கள் அழுதுகொண்டே லூகித்துக்கு ஏறிப்போகிறார்கள்.
ஒரோனாயீமிலிருந்து இறங்கி வரும்போது, அழிவைக் கண்டு அழுகிறவர்களின் சத்தத்தைக் கேட்கிறார்கள்.+
6 உங்கள் உயிருக்கு ஆபத்து! தப்பித்து ஓடுங்கள்!
வனாந்தரத்திலுள்ள ஆபால் மரத்தைப் போல ஆகிவிடுங்கள்.
7 உன்னுடைய சாதனைகளையும் சொத்துகளையும் நீ நம்பியிருக்கிறாய்.
அதனால், நீயும் கைப்பற்றப்படுவாய்.
கேமோஷ்+ தெய்வம் சிறைபிடிக்கப்படும்.
அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.
பள்ளத்தாக்கு அழிந்துபோகும்.
சமவெளி சின்னாபின்னமாகும்.
யெகோவா சொன்னபடியே எல்லாம் நடக்கும்.
9 மோவாபின் நகரங்களுக்குக் கோரமான முடிவு வரும்.
அங்கு இனி மனுஷ நடமாட்டமே இருக்காது.+
நகரங்கள் அழியும்போது ஜனங்கள் தப்பித்து ஓடுவார்கள்.
அதனால், மோவாபின் ஜனங்களுக்குத் திசைகாட்ட கல்தூணை வையுங்கள்.
10 யெகோவா கொடுத்த வேலையை ஏனோதானோவென்று செய்கிறவன் சபிக்கப்படுவான்!
இரத்தம் சிந்துவதற்காக வாளை எடுக்காதவனும் சபிக்கப்படுவான்!
11 இளவயதிலிருந்தே மோவாபியர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
கசடு படிந்துவிட்ட தெளிந்த திராட்சமதுவைப் போல இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு ஜாடியிலிருந்து இன்னொரு ஜாடிக்கு மாற்றப்பட்டதே இல்லை.
அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதே இல்லை.
அதனால்தான் ருசி கூடாமலும்,
வாசனை மாறாமலும் இருக்கிறார்கள்.
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வருகிறது. அப்போது, அவர்களைக் கவிழ்ப்பதற்காக நான் ஆட்களை அனுப்புவேன். அந்த ஆட்கள் அவர்களைக் கவிழ்ப்பார்கள். ஜாடிகளில் இருப்பதையெல்லாம் கீழே கொட்டுவார்கள். பின்பு, அந்தப் பெரிய ஜாடிகளை உடைத்து நொறுக்குவார்கள். 13 இஸ்ரவேலர்கள் தாங்கள் நம்பியிருந்த பெத்தேலை நினைத்து எப்படி வெட்கப்படுகிறார்களோ அப்படியே மோவாபியர்கள் கேமோஷை நினைத்து வெட்கப்படுவார்கள்.+
14 “நாங்கள் மாவீரர்கள்! நாங்கள் போருக்குத் தயார்!”+ என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு என்ன துணிச்சல்!’
15 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா சொல்வது இதுதான்:+
‘மோவாப் அழிக்கப்பட்டாள்.
அவளுடைய நகரங்கள் கைப்பற்றப்பட்டன.+
அவளுடைய திறமையான வாலிபர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.’+
17 அவர்களைச் சுற்றியிருக்கிற ஜனங்களே,
அவர்களுடைய பேரையும் புகழையும் பற்றித் தெரிந்தவர்களே,
அவர்களுக்காக அனுதாபப்படுங்கள்.
‘பலமான செங்கோல் முறிந்துபோனதே! அழகான கோல் உடைக்கப்பட்டதே!’ என்று சொல்லுங்கள்.
கௌரவமான இடத்தைவிட்டு இறங்குங்கள்.
தாகத்தோடு* கீழே உட்காருங்கள்.
மோவாபை அழிக்க எதிரி வந்துவிட்டான்.
அவளுடைய கோட்டைகளை அவன் தரைமட்டமாக்குவான்.+
19 ஆரோவேர்+ ஜனங்களே, தெரு ஓரமாக நின்று பாருங்கள்.
தப்பிவருகிற ஆண்களிடமும் பெண்களிடமும், ‘என்ன நடந்தது?’ என்று கேளுங்கள்.
20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்!
ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்!
மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.
21 சமவெளிக்குத்+ தண்டனைத் தீர்ப்பு கிடைத்துவிட்டது. ஓலோன், யாகாஸ்,+ மேபாகாத்,+ 22 தீபோன்,+ நேபோ,+ பெத்-திப்லாத்தாயீம், 23 கீரியாத்தாயீம்,+ பெத்-கமூல், பெத்-மெயோன்,+ 24 கீரியோத்,+ போஸ்றா நகரங்களுக்கும், பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற மோவாப் நகரங்கள் எல்லாவற்றுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்துவிட்டது.
25 ‘மோவாபின் கொம்பு ஒடிக்கப்பட்டது!
அவனுடைய கை முறிக்கப்பட்டது!’ என்று யெகோவா சொல்கிறார்.
26 ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடிக்கிறான்.+
அதனால் போதை ஏறுமளவுக்கு அவனைக் குடிக்க வையுங்கள்.+
அவன் வாந்தி எடுத்து அதிலேயே புரளட்டும்.
எல்லாரும் அவனைப் பார்த்துக் கேலி செய்யட்டும்.
27 நீ இஸ்ரவேலைக் கேலி செய்யவில்லையா?+
அவன் என்ன திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவனா?
ஏன் அவனைப் பார்த்துக் கிண்டலடித்து, தலையை ஆட்டுகிறாய்?
28 மோவாப் ஜனங்களே, நகரங்களை விட்டுவிட்டுப் பாறைகளுக்கு நடுவில் போய் வாழுங்கள்.
பள்ளத்தாக்கின் பாறை இடுக்குகளில் கூடு கட்டுகிற புறாவைப் போல் வாழுங்கள்.’”
29 “மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.
அவனுடைய கர்வத்தையும், ஆணவத்தையும், அகம்பாவத்தையும், அகங்காரத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.”
30 “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய கோபவெறியைப் பற்றி எனக்குத் தெரியும்.
ஆனால் அவனுடைய பெருமைப் பேச்செல்லாம் வெற்றுப் பேச்சாகிவிடும்.
அவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்.
31 மோவாபைப் பார்த்து நான் ஒப்பாரி வைப்பேன்.
மோவாப் நகரங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கதறி அழுவேன்.
கீர்-ஆரேஸ்+ ஜனங்களுக்காகப் புலம்புவேன்.
உன்னுடைய கிளைகள் கடலைக் கடந்திருக்கின்றன.
கடல் வரையும் யாசேர் வரையும் எட்டியிருக்கின்றன.
உன்னுடைய கோடைக் காலப் பழங்களையும் திராட்சைப் பழங்களையும்
நாசமாக்க எதிரி வந்துவிட்டான்.+
ஆலைகளில் இனி திராட்சமது வழிந்தோடாது.
யாரும் சந்தோஷமாகப் பாடிக்கொண்டு திராட்சைப் பழங்களை மிதிக்க மாட்டார்கள்.
அங்கே அலறல் சத்தம்தான் கேட்கும்.’”+
34 “‘எஸ்போனில்+ ஜனங்கள் கதறுகிற சத்தம்
எலெயாலே+ வரைக்கும், யாகாஸ்+ வரைக்கும் கேட்கும்.
சோவாரின் கதறல் ஒரோனாயீம்+ வரையும் எக்லாத்து-செலிசியா வரையும் கேட்கும்.
நிம்ரீமின் தண்ணீர்கூட வற்றிப்போகும்.+
35 ஆராதனை மேடுகளுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து,
தன்னுடைய தெய்வத்துக்குப் பலிகள் செலுத்துகிற எவனும்
இனி மோவாபில் இருக்க மாட்டான்’ என்று யெகோவா சொல்கிறார்.
36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்து
என் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+
மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.
38 ‘மோவாபில் இருக்கிற வீடுகளின் மொட்டைமாடிகளிலும்,
பொது சதுக்கங்களிலும் ஒரே ஒப்பாரிச் சத்தம்!
வேண்டாத ஜாடியை நொறுக்குவது போல
நான் மோவாபை நொறுக்கிவிட்டேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
39 ‘மோவாப் எப்படி நடுங்குகிறாள்! எப்படி ஓலமிடுகிறாள்!
அவமானத்தோடு எப்படி ஓட்டம்பிடித்திருக்கிறாள்!
எல்லாரும் அவளைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.
சுற்றியிருக்கிற எல்லாரும் அவளுடைய நிலைமையைப் பார்த்துக் கதிகலங்குகிறார்கள்.’”
40 “யெகோவா சொல்வது இதுதான்:
‘இதோ, கீழே பாய்ந்து வரும் கழுகைப் போல,+
ஒருவன் மோவாபைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவான்.+
41 அவளுடைய ஊர்கள் கைப்பற்றப்படும்.
அவளுடைய கோட்டைகள் பிடிக்கப்படும்.
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போல
அந்த நாளில் மோவாபின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.’”
43 மோவாப் ஜனங்களே, திகிலும் படுகுழியும் கண்ணியும்தான்
உங்கள் முன்னால் இருக்கிறது’ என்று யெகோவா சொல்கிறார்.
44 ‘திகிலுக்குப் பயந்து ஓடுகிறவர்கள் படுகுழியில் விழுவார்கள்.
படுகுழியிலிருந்து வெளியே வருகிறவர்கள் கண்ணியில் சிக்குவார்கள்.’
‘ஏனென்றால், நான் மோவாபைத் தண்டிக்கப்போகிற வருஷம் வந்துவிட்டது’ என்று யெகோவா சொல்கிறார்.
45 ‘தப்பித்து ஓடுகிறவர்கள் எதுவும் செய்ய முடியாமல் எஸ்போனின் நிழலில் நிற்கிறார்கள்.
எஸ்போனிலிருந்து நெருப்பு வரும்.
சீகோனிலிருந்து+ தீ ஜுவாலை வரும்.
அது மோவாபின் நெற்றியைச் சுட்டெரிக்கும்.
வெறிபிடித்த வீரர்களின் மண்டையோட்டைப் பொசுக்கும்.’+
46 ‘மோவாபே, உன் கதி அவ்வளவுதான்!
கேமோஷை+ வணங்கிய ஜனங்கள் ஒழிந்துபோனார்கள்.
உன்னுடைய மகன்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
உன்னுடைய மகள்களும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.+
47 ஆனால் கடைசி நாட்களில், மோவாபிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.
மோவாபுக்குச் சொல்லப்படும் தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முடிகிறது’+ என்று யெகோவா சொல்கிறார்.”
49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ?
அவனுக்கு வாரிசு இல்லையோ?
பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்?
மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”
2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது.
அப்போது, அம்மோனியர்களுடைய+ நகரமான ரப்பாவில்+ போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன்.
அவள் வெறும் மண்மேடாக ஆவாள்.
அவளுடைய சிற்றூர்கள்* தீ வைத்துக் கொளுத்தப்படும்.’
யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’+
3 ‘எஸ்போனே, அழுது புலம்பு! ஆயி அழிக்கப்பட்டாள்!
ரப்பாவின் சிற்றூர்களே, அலறுங்கள்!
துக்கத் துணியை* போட்டுக்கொள்ளுங்கள்!
ஒப்பாரி வையுங்கள்; தொழுவங்களில்* அலைந்து திரியுங்கள்.
ஏனென்றால், மல்காம் தெய்வம் சிறைபிடிக்கப்படும்.
அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.+
4 துரோகம் செய்கிற மகளே, உன்னுடைய பள்ளத்தாக்குகளைப் பற்றியும்
தண்ணீர் பாய்ந்தோடுகிற சமவெளியைப் பற்றியும் ஏன் பெருமையடிக்கிறாய்?
உன்னுடைய சொத்துகள்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்.
“என்னோடு மோதுவதற்கு யார் வரப்போகிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறாய்.’”
5 “உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
‘நான் உனக்கு எதிராகப் பயங்கரமான அழிவைக் கொண்டுவரப் போகிறேன்.
சுற்றியுள்ள ஜனங்கள் உன்னைத் தாக்குவார்கள்.
உன்னுடைய ஜனங்கள் நாலாபக்கமும் சிதறி ஓடுவார்கள்.
அவர்களை ஒன்றுசேர்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.’”
6 “‘ஆனால், சிறைபிடிக்கப்பட்டுப் போன அம்மோனியர்களை நான் பிற்பாடு கூட்டிச்சேர்ப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”
7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா?
புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா?
அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?
8 தேதான்+ ஜனங்களே, தப்பித்து ஓடுங்கள்! முதுகைக் காட்டி ஓடுங்கள்!
தாழ்வான பகுதிகளுக்குப் போய்ப் பதுங்கி வாழுங்கள்.
ஏனென்றால், நான் ஏசாவைத் தண்டிக்கும் நேரம் வருகிறது.
அப்போது நான் அவனை அழிப்பேன்.
9 திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள்
கொஞ்சத்தை விட்டுவைப்பார்கள், இல்லையா?
ராத்திரியில் வருகிற திருடர்கள்
தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொள்வார்கள், இல்லையா?+
10 ஆனால், நான் ஏசாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே எடுத்துவிடுவேன்.
அவனால் எங்குமே ஒளிந்துகொள்ள முடியாதபடி
அவனுடைய மறைவிடங்களை வெட்டவெளிச்சமாக்குவேன்.
அவனுடைய பிள்ளைகளையும் சகோதரர்களையும் அக்கம்பக்கத்து ஜனங்களையும் கொன்றுபோடுவேன்.+
அவன் அடியோடு அழிந்துபோவான்.+
11 அப்பா இல்லாத பிள்ளைகளை என்னிடம் விட்டுவிடு.
நான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவேன்.
உன்னுடைய விதவைகள் என்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”
12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+
13 “யெகோவா சொல்வது இதுதான்: ‘என்மேல் ஆணையாகச் சொல்கிறேன், போஸ்றாவுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் அவளைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள். அவளுடைய எல்லா நகரங்களும் அடியோடு அழிந்துபோகும்.”+
14 யெகோவாவிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.
அவர் எல்லாரிடமும், “ஒன்றுதிரண்டு வாருங்கள்.
அவளோடு போர் செய்யப் புறப்படுங்கள்”+ என்று சொல்கிறார்.
16 பாறைகளின் நடுவே பாதுகாப்பாகக் குடியிருக்கிறவளே,
மிகவும் உயரமான குன்றின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,
நீ எல்லாரையும் பயமுறுத்தி, அகங்காரமாக* நடந்து மோசம்போனாயே!
கழுகைப் போல உயரத்திலே நீ கூடு கட்டினாலும்
அங்கிருந்து நான் உன்னைக் கீழே தள்ளுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
17 “ஏதோமுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் கதிகலங்கிப்போவார்கள். அவளுக்கு வரும் எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.* 18 சோதோமும் கொமோராவும் அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களும்+ அழிந்தது போலவே ஏதோமும் அழிந்துபோவாள். அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
19 “யோர்தானை ஒட்டியுள்ள புதர்க் காடுகளிலிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல+ ஒருவன் பாய்ந்து வந்து பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களைத் தாக்குவான். ஆனால், நான் அவனை* ஒரே நொடியில் அவளைவிட்டு ஓட வைப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்டவனின் கையில் அவளைக் கொடுப்பேன். என்னைப் போல யார் இருக்கிறார்கள்? எனக்கே சவால்விட யாரால் முடியும்? எந்த மேய்ப்பனால் என்முன் நிற்க முடியும்?+ 20 அதனால் ஜனங்களே, ஏதோமுக்கு எதிராக யெகோவா எடுத்திருக்கிற முடிவைப் பற்றியும், தேமானின்+ ஜனங்களுக்கு எதிராக அவர் யோசித்திருக்கிற விஷயத்தைப் பற்றியும் கேளுங்கள்:
மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகள் கண்டிப்பாக இழுத்துச் செல்லப்படும்.
அவற்றின் தொழுவங்களை அவர் வெறுமையாக்குவார்;+ ஏனென்றால், அவர்கள் பாவம் செய்தார்கள்.
21 அவர்கள் விழும் சத்தத்தில் பூமி அதிருகிறது.
அலறல் சத்தம் கேட்கிறது!
செங்கடல்+ வரைக்கும் சத்தம் கேட்கிறது.
22 மேலே பறக்கும் கழுகு கீழே பாய்ந்து வருவது போல,
அவர் போஸ்றாவைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவார்.+
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போல
அந்த நாளில் ஏதோமின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.”
23 தமஸ்குவுக்கு+ எதிரான தண்டனைத் தீர்ப்பு:
“காமாத்,+ அர்பாத் ஜனங்கள் அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
ஏனென்றால், அவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்திருக்கிறது.
அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.
அமைதியில்லாமல் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.
24 தமஸ்குவின் தைரியமெல்லாம் போய்விட்டது.
அவள் தப்பித்து ஓடப் பார்க்கிறாள், ஆனால் பயத்தில் உறைந்துபோகிறாள்.
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணைப் போல
வலியிலும் வேதனையிலும் துடிக்கிறாள்.
25 சந்தோஷக் களையோடும் புகழோடும் இருந்தவளைவிட்டு
ஜனங்கள் ஏன் இன்னும் தப்பித்து ஓடவில்லை?
26 அந்த நாளில் அவளுடைய வாலிபர்கள் பொது சதுக்கங்களில் விழுந்து கிடப்பார்கள்.
எல்லா வீரர்களும் அழிந்துபோவார்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
27 “நான் தமஸ்குவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.
அது பெனாதாத்தில்+ இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.”
28 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் கைப்பற்றிய கேதாரையும்+ ஆத்சோரின் ராஜ்யங்களையும் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
“கேதாருக்கு எதிராகப் புறப்பட்டுப் போங்கள்.
கிழக்கில் வாழ்கிற ஜனங்களைக் கொன்றுபோடுங்கள்.
29 அவர்களுடைய கூடாரங்களையும் மந்தைகளையும்
கூடாரத் துணிகளையும் மற்ற எல்லா பொருள்களையும்
ஒட்டகங்களையும் எடுத்துக்கொண்டு போங்கள்.
‘எந்தப் பக்கம் திரும்பினாலும் பயங்கரமாக இருக்கிறது!’ என்று ஜனங்கள் அலறுவார்கள்.”
30 யெகோவா சொல்வது இதுதான்: “தொலைதூரத்துக்குத் தப்பியோடுங்கள்.
ஆத்சோர் ஜனங்களே, தாழ்வான பகுதிகளுக்குப் போய்ப் பதுங்கி வாழுங்கள்.
ஏனென்றால், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் உங்களுக்கு எதிராகச் சதி செய்திருக்கிறான்.
உங்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறான்.”
31 யெகோவா சொல்வது இதுதான்: “கதவுகளோ தாழ்ப்பாள்களோ இல்லாமல்,
சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழ்கிற ஜனத்துக்கு எதிராகப் புறப்பட்டுப் போங்கள்.
அவர்கள் தனியாக வாழ்கிறார்கள்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கைப்பற்றப்படும்.
அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் சூறையாடப்படும்.
அவர்களை எல்லா திசைகளிலும் சிதறி ஓட வைப்பேன்.
நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொள்கிற அந்த ஜனத்துக்கு+
எல்லா பக்கத்திலிருந்தும் ஆபத்தை வர வைப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
33 ஆத்சோர் பிரதேசம் நரிகள் தங்கும் இடமாக மாறும்.
அது ஒட்டுமொத்தமாகப் பாழாகிப்போகும்.
அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.
மனுஷ நடமாட்டமே இருக்காது.”
34 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது+ ஏலாமைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்: 35 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏலாமின் பலத்துக்கு அடையாளமாக இருக்கிற வில்லை நான் முறிக்கப்போகிறேன்.+ 36 வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு காற்றுகள் ஏலாமின் மேல் அடிக்கும்படி செய்வேன். ஜனங்கள் நாலாபக்கமும் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் சிதறி ஓடாத தேசமே இருக்காது.’”
37 யெகோவா சொல்வது இதுதான்: “கொலைவெறி பிடித்த எதிரிகளுக்கு முன்னால் ஏலாமியர்களை நான் நடுங்க வைப்பேன். பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டிப்பேன். வாளை அனுப்பி அவர்களை அடியோடு அழிப்பேன்.”
38 “என்னுடைய சிம்மாசனத்தை ஏலாமில் நிறுத்துவேன்.+ அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
39 “ஆனால் கடைசி நாட்களில், ஏலாமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
50 கல்தேயர்களின் தேசமான பாபிலோனைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னது இதுதான்:
2 “இதை எல்லா தேசங்களிலும் சொல்லுங்கள்!
கொடியை* ஏற்றி, அறிவிப்பு செய்யுங்கள்!
எதையும் மறைக்காதீர்கள்!
இப்படிச் சொல்லுங்கள்: ‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது!+
பேல் அவமானம் அடைந்துவிட்டது!+
மெரொதாக்கைத் திகில் கவ்விக்கொண்டது!
பாபிலோனின் சிலைகளுக்கு அவமானம் வந்துவிட்டது!
அவளுடைய அருவருப்பான* உருவச்சிலைகள் மிரண்டுபோய்விட்டன!’
3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+
அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.
அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது.
மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.
தேசமே வெறிச்சோடிப்போனது.”
4 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+ 5 சீயோனுக்குப் போகும் வழியைக்+ கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’+ என்று சொல்வார்கள். 6 என்னுடைய ஜனங்கள் காணாமல்போன மந்தையைப்+ போல ஆகிவிட்டார்கள். அவர்களுடைய மேய்ப்பர்களே அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்துவிட்டார்கள்.+ அவர்களுடைய தொழுவத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள். 7 அவர்களைக் கண்டுபிடிக்கிற எல்லாரும் அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள்.+ அவர்களுடைய எதிரிகள், ‘எங்கள்மேல் குற்றம் இல்லை. இவர்கள்தான் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள். இவர்களுடைய முன்னோர்கள் நம்பியிருந்த நீதியுள்ள* கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்’ என்று சொல்கிறார்கள்.”
8 “பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள்.
கல்தேயர்களின் தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்.+
மந்தையில் முதலாவதாகப் போகிற கடாக்களைப் போலப் போங்கள்.
9 ஏனென்றால், வடக்கிலிருந்து மாபெரும் தேசங்களை+ ஒரு பெரிய கூட்டமாக வர வைப்பேன்.
பாபிலோனுக்கு எதிராக அந்தக் கூட்டத்தை வர வைப்பேன்.
அது போர் செய்ய அணிவகுத்து வரும்.
பாபிலோனைக் கைப்பற்றும்.
அதன் அம்புகள் போர்வீரனுடைய அம்புகளைப் போலப் பாய்ந்து,
பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பறித்துவிடும்.+
அவற்றின் குறி தப்பாது.
10 எதிரிகள் கல்தேயாவைச் சூறையாடுவார்கள்.+
போதும் போதும் என்கிற அளவுக்கு அதைக் கொள்ளையடிப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
புல்வெளியிலுள்ள இளம் பசுவைப் போலத் துள்ளிக் குதித்தீர்கள்.
வீரியமுள்ள குதிரைகள்* போலக் கனைத்தீர்கள்.
12 உங்களுடைய தாய்க்கு அவமானம் வந்துவிட்டது.+
உங்களைப் பெற்றெடுத்தவள் ஏமாற்றம் அடைந்துவிட்டாள்.
தேசங்களிலேயே அற்பமான தேசமாகிவிட்டாள்.
தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டாள்.+
அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.
பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+
14 வில்லை வளைக்கிற வீரர்களே,
எல்லா பக்கத்திலிருந்தும் அணிவகுத்து வந்து பாபிலோனைத் தாக்குங்கள்.
15 எல்லா பக்கத்திலிருந்தும் போர் முழக்கம் செய்யுங்கள்.
அவள் சரணடைந்துவிட்டாள்.
அவளுடைய தூண்கள் விழுந்துவிட்டன; அவளுடைய மதில்கள் இடிந்துவிட்டன.+
ஏனென்றால், யெகோவா அவளைப் பழிவாங்கிவிட்டார்.+
நீங்களும் பழி தீர்த்துக்கொள்ளுங்கள்.
அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+
கொடூரமான வாளுக்குப் பயந்து எல்லாரும் அவரவர் தேசத்துக்கே ஓடிப் போவார்கள்.+
அவரவர் ஜனங்களிடமே திரும்பிப்போவார்கள்.
17 “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+ 18 அதனால், இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘அசீரிய ராஜாவைத் தண்டித்தது போலவே+ பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் நான் தண்டிப்பேன். 19 இஸ்ரவேலை அவனுடைய மேய்ச்சல் நிலத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவன் கர்மேலிலும் பாசானிலும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலும்+ கீலேயாத் மலைப்பகுதியிலும்+ மேய்ந்து திருப்தியடைவான்.’”
20 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில்,
இஸ்ரவேலிடம் குற்றம் இருக்கிறதா என்று நான் தேடிப் பார்ப்பேன்.
ஆனால், அவனிடம் குற்றமே இருக்காது.
யூதாவிடம் எந்தப் பாவமும் இருக்காது.
நான் உயிரோடு விட்டுவைத்திருக்கிற ஜனங்களை மன்னிப்பேன்.”+
21 யெகோவா சொல்வது இதுதான்: “மெரதாயீம் தேசத்துக்கும் பேகோடு+ ஜனங்களுக்கும் எதிராகப் போ.
அவர்களைப் படுகொலை செய்; அடியோடு அழித்துவிடு.
நான் சொன்னதையெல்லாம் செய்.
22 தேசத்தில் போர் நடக்கிற சத்தம் கேட்கிறது.
பேரழிவின் சத்தம் கேட்கிறது.
23 எல்லா தேசங்களையும் அடித்து நொறுக்கிய சம்மட்டி உடைத்தெறியப்பட்டது!+
பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போனது!+
24 பாபிலோனே, உனக்குப் பொறி வைத்தேன்.
உனக்கே தெரியாமல் நீ மாட்டிக்கொண்டாய்.
நீ யெகோவாவையே எதிர்த்தாய்.
அதனால் பிடிபட்டாய்.+
உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா
கல்தேயர்களின் தேசத்தைத் தண்டிக்கப்போகிறார்.
26 தொலைதூர இடங்களிலிருந்து வந்து அவளைத் தாக்குங்கள்.+
அவளுடைய களஞ்சியங்களைத் திறங்கள்.+
தானியங்களைக் குவிப்பது போல அவளுடைய பொருள்களைக் குவித்து வையுங்கள்.
அவளை அடியோடு அழித்துவிடுங்கள்.+
அவளுடைய ஜனங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காதீர்கள்.
அவற்றுக்கான தண்டனைத் தீர்ப்பு நாளும் நேரமும் வந்துவிட்டது.
அவற்றின் கதி அவ்வளவுதான்!
28 தப்பித்து ஓடுகிறவர்களின் சத்தம் கேட்கிறது.
அவர்கள் பாபிலோன் தேசத்திலிருந்து தப்பித்துப் போகிறார்கள்.
யெகோவா தேவன் தன்னுடைய ஆலயத்துக்காகப் பழிவாங்கியதைப்+ பற்றி
சீயோனில் அறிவிப்பதற்குப் போகிறார்கள்.
அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள்.
அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள்.+
அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+
ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள்.
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள்.+
30 அந்த நாளில், அவளுடைய வாலிபர்கள்+ பொது சதுக்கங்களில் விழுந்து கிடப்பார்கள்.
எல்லா வீரர்களும் அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
31 “திமிர் பிடித்தவளே,+ நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன்”+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
“நான் உன்னுடைய கணக்கைத் தீர்க்கப்போகிற நாளும் நேரமும் வரப்போகிறது.
உன்னுடைய நகரங்களுக்கு நான் தீ வைப்பேன்.
உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அது பொசுக்கிவிடும்.”
33 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒடுக்கப்படுகிறார்கள்.
அவர்களைப் பிடித்துக்கொண்டு போன எல்லாரும்+
அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.+
34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர்.
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+
அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+
அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+
ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+
35 “கல்தேயர்களை ஒரு வாள் தாக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.
“பாபிலோனின் அதிகாரிகளையும் ஞானிகளையும் குடிமக்களையும் அது கொன்றுபோடும்.+
36 வெட்டிப் பேச்சு பேசுகிறவர்களை* ஒரு வாள் தாக்கும்; அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள்.
பாபிலோனின் வீரர்களை ஒரு வாள் தாக்கும்; அவர்கள் மிரண்டுபோவார்கள்.+
37 அவர்களுடைய குதிரைகளையும் போர் ரதங்களையும்,
அவள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்தாரையும் ஒரு வாள் தாக்கும்.
அவர்கள் பெண்களைப் போல ஆகிவிடுவார்கள்.+
அவளுடைய பொக்கிஷங்களை ஒரு வாள் தாக்கும்; அவை கைப்பற்றப்படும்.+
38 அவளுடைய தண்ணீர் பாழாகிப்போகும்; அது வற்றிப்போகும்.+
ஏனென்றால், அவளுடைய தேசத்தில் எங்கு பார்த்தாலும் சிலைகள்தான் இருக்கின்றன.+
அவற்றைக் கும்பிடுகிறவர்கள் பயங்கரமான தரிசனங்களைப் பார்த்து
பைத்தியக்காரர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.
இனி ஒருபோதும் மனுஷர்கள் அங்கே குடியிருக்க மாட்டார்கள்.
எத்தனை தலைமுறை வந்தாலும் ஒருவரும் அங்கே வாழ மாட்டார்கள்.”+
40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.
மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+
பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+
42 அவர்கள் வில்லினாலும் ஈட்டியினாலும் தாக்குகிறார்கள்.+
அவர்கள் ஈவிரக்கமே இல்லாதவர்கள், கொடூரமானவர்கள்.+
குதிரைகளில் அவர்கள் பாய்ந்து வருகிற சத்தம்,
கடல் கொந்தளிக்கிற சத்தத்தைப் போல இருக்கிறது.+
பாபிலோன் மகளே, உனக்கு எதிராக அவர்கள் ஒன்றாக அணிவகுத்து வருகிறார்கள்.+
அவன் பயத்தில் நடுங்குகிறான்.
பிரசவ வலியில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிக்கிறான்.
44 “யோர்தானை ஒட்டியுள்ள புதர்க் காடுகளிலிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல ஒருவன் பாய்ந்து வந்து பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களைத் தாக்குவான். ஆனால், நான் அவர்களை ஒரே நொடியில் அவளைவிட்டு ஓட வைப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்டவனின் கையில் அவளைக் கொடுப்பேன்.+ என்னைப் போல யார் இருக்கிறார்கள்? எனக்கே சவால்விட யாரால் முடியும்? எந்த மேய்ப்பனால் என்முன் நிற்க முடியும்?+ 45 அதனால் ஜனங்களே, பாபிலோனுக்கு எதிராக யெகோவா எடுத்திருக்கிற முடிவைப்+ பற்றியும், கல்தேயர்களின் தேசத்துக்கு எதிராக அவர் யோசித்திருக்கிற விஷயத்தைப் பற்றியும் கேளுங்கள்:
மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகள் கண்டிப்பாக இழுத்துச் செல்லப்படும்.
அவற்றின் தொழுவங்களை அவர் வெறுமையாக்குவார்;+ ஏனென்றால், அவர்கள் பாவம் செய்தார்கள்.
51 யெகோவா சொல்வது இதுதான்:
2 அழிவு நாளில் நாலாபக்கத்திலிருந்தும் பாபிலோனைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவேன்.+
தானியத்தைப் புடைப்பது போல அவர்கள் அவளைப் புடைப்பார்கள்.
அப்போது, ஜனங்கள் எல்லாரும் பதரைப் போலச் சிதறிப்போவார்கள்; தேசம் வெறுமையாகும்.
3 வில்வீரர்கள் வில்லை வளைக்க வேண்டாம்.
யாரும் உடல்கவசத்தைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டாம்.
அவளுடைய வாலிபர்கள்மேல் இரக்கம் காட்டாதீர்கள்.+
அவளுடைய படைகளை மொத்தமாக அழித்துவிடுங்கள்.
4 கல்தேயர்களின் தேசத்தில் அவர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.
குத்திப்போடப்பட்டவர்கள் அவளுடைய தெருக்களில் கிடப்பார்கள்.+
5 ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைப் பொறுத்தவரை, அவர்களுடைய தேசம்* குற்றங்களால் நிறைந்திருக்கிறது.
அதோடு, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் கைவிடவில்லை. அவர்கள் விதவைகளைப் போல ஆகவில்லை.+
அவள் செய்த குற்றத்துக்காக நீங்கள் அழிந்துபோகாதீர்கள்.
ஏனென்றால், இது யெகோவா பழிவாங்கும் நேரம்.
அவள் செய்ததற்குச் சரியான கூலியை அவர் கொடுக்கிறார்.+
7 பாபிலோன் யெகோவாவின் கையில் ஒரு தங்கக் கிண்ணத்தைப் போல இருந்தாள்.
பூமியிலுள்ள எல்லாரும் போதையேறக் குடிக்கும்படி அவள் செய்தாள்.
அவளுடைய திராட்சமதுவை எல்லா தேசத்து ஜனங்களும் போதையேறக் குடித்தார்கள்.+
அதனால்தான் பைத்தியக்காரத்தனமாக நடக்கிறார்கள்.+
8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கினாள்.+
அவளுக்காக அழுது புலம்புங்கள்!+
அவளுடைய வலியைக் குறைப்பதற்காக பரிமளத் தைலத்தை வாங்கி வாருங்கள்.
அவள் ஒருவேளை குணமாகலாம்.”
9 “பாபிலோனைக் குணப்படுத்த நினைத்தோம், ஆனால் முடியவில்லை.
அவளை விட்டுவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகலாம், வாருங்கள்.+
ஏனென்றால், அவளுடைய குற்றங்கள் வானத்தை எட்டிவிட்டன.
மேகங்களைத் தொட்டுவிட்டன.+
10 யெகோவா நமக்காக நியாயம் செய்திருக்கிறார்.+
வாருங்கள், நாம் சீயோனுக்குப் போய், நம் கடவுளான யெகோவா செய்ததை எல்லாருக்கும் சொல்லலாம்.”+
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.*
யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.
அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+
அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
12 பாபிலோனின் மதில்களுக்கு எதிராகக் கொடியை+ ஏற்றுங்கள்.*
பாதுகாப்பைக் கூட்டுங்கள்; காவலர்களை நிறுத்துங்கள்.
பதுங்கியிருந்து தாக்குவதற்கு ஆட்களைத் தயாராக்குங்கள்.
ஏனென்றால், யெகோவா அவளுக்கு எதிராகப் போர்த்தந்திரம் செய்திருக்கிறார்.
பாபிலோனின் ஜனங்களை என்ன செய்யப்போவதாகச் சொன்னாரோ அதைச் செய்வார்.”+
13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+
சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+
நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+
14 பரலோகப் படைகளின் யெகோவா உன்னிடம்,
‘வெட்டுக்கிளிகளைப் போல ஏராளமான ஆட்கள் உன்மேல் படையெடுத்து வரும்படி செய்வேன்.
அவர்கள் உன்னைத் தோற்கடித்து, வெற்றி முழக்கம் செய்வார்கள்’+ என்று தன்மீதே ஆணையிட்டுச் சொல்கிறார்.
16 அவர் குரல் கொடுக்கும்போது
வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*
பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.
17 மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள்.
சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப் போவார்கள்.+
அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை.
உயிர்மூச்சு இல்லாதவை.+
18 அவை ஒன்றுக்கும் உதவாதவை,+ கேலிக்குரியவை.
கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் நாளில் அவை அழிந்துபோகும்.
19 யாக்கோபின் கடவுளோ அந்தச் சிலைகளைப் போன்றவர் அல்ல.
அவர்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
அவருடைய விசேஷ சொத்தாகிய ஜனத்தை உருவாக்கியவரும் அவர்தான்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.”+
20 “நீதான் என் கையில் இருக்கிற தடி; நீதான் என்னுடைய போர் ஆயுதம்.
உன்னை வைத்து நான் தேசங்களை நொறுக்குவேன்.
உன்னை வைத்து ராஜ்யங்களை அழிப்பேன்.
21 உன்னை வைத்து குதிரைகளையும் குதிரைவீரர்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து போர் ரதங்களையும் ரதவீரர்களையும் நொறுக்குவேன்.
22 உன்னை வைத்து ஆண்களையும் பெண்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து வயதானவர்களையும் சிறுவர்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து வாலிபப் பையன்களையும் வாலிபப் பெண்களையும் நொறுக்குவேன்.
23 உன்னை வைத்து மேய்ப்பர்களையும் மந்தைகளையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து உழவர்களையும் ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து ஆளுநர்களையும் துணை அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.
சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்
கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
25 “அழிவு உண்டாக்குகிற மலையே, நான் உன்னைத் தண்டிப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“முழு உலகத்தையும் அழிக்கிறவளே,+
என்னுடைய கையால் உன்னைப் பாறைகளிலிருந்து கீழே உருட்டிவிடுவேன்.
தீயில் கொளுத்திவிடுவேன்.”
26 “உன்னிடமிருந்து மூலைக் கல்லையோ அஸ்திவாரக் கல்லையோ யாரும் எடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால், நீ என்றென்றும் பாழாய்க் கிடப்பாய்”+ என்று யெகோவா சொல்கிறார்.
27 “தேசத்தில் கொடியை* ஏற்றுங்கள்.+
ஜனங்களின் நடுவே ஊதுகொம்பை ஊதுங்கள்.
அவளைத் தாக்குவதற்கு ஜனங்களைத் தயாராக்குங்கள்.
அரராத்,+ மின்னி, அஸ்கினாஸ்+ ராஜ்யங்களைக் கூப்பிடுங்கள்.
படைக்கு ஆள்சேர்க்க படை அதிகாரிக்குக் கட்டளை கொடுங்கள்.
குதிரைகளை இளம் வெட்டுக்கிளிகளைப் போல வரச் செய்யுங்கள்.
28 மேதியாவின் ராஜாக்களையும்,+ ஆளுநர்களையும், துணை அதிகாரிகளையும்,
அவர்கள் ஆட்சி செய்கிற எல்லா தேசங்களையும்
அவளோடு போர் செய்யத் தயாராகச் சொல்லுங்கள்.
29 பூமி அதிர்ந்து நடுநடுங்கும்.
யெகோவா பாபிலோனை என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்வார்.
அதற்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவார்; அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+
30 பாபிலோனின் வீரர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டு,
அவர்களுடைய கோட்டைகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய பலமெல்லாம் போய்விட்டது.+
அவர்கள் பெண்களைப் போல ஆகிவிட்டார்கள்.+
பாபிலோனின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
அவளுடைய தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டன.+
31 ஒரு அஞ்சல்காரன் இன்னொரு அஞ்சல்காரனிடமும்,
ஒரு தூதுவன் இன்னொரு தூதுவனிடமும் ஓடுகிறான்.
நகரம் எல்லா பக்கத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டது+ என்றும்,
32 ஆற்றுத்துறைகள்* கைப்பற்றப்பட்டன+ என்றும்,
நாணற்புல்* படகுகள் கொளுத்தப்பட்டன என்றும்,
வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்றும்
பாபிலோன் ராஜாவுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் ஓடுகிறார்கள்.”
33 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“பாபிலோன் மகள் ஒரு களத்துமேட்டைப் போல இருக்கிறாள்.
அவளை நன்றாக மிதிப்பதற்கு இதுதான் சமயம்.
ரொம்பச் சீக்கிரத்தில் அவளுடைய அறுவடைக் காலம் வந்துவிடும்.”
34 “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் என்னை விழுங்கிவிட்டான்.+
என்னைக் குழப்பத்தில் தவிக்க வைத்துவிட்டான்.
என்னை ஒரு காலியான பாத்திரத்தைப் போல ஆக்கிவிட்டான்.
ஒரு பெரிய பாம்பு விழுங்குவது போல அவன் என்னை விழுங்கிவிட்டான்.+
என்னிடமிருந்த நல்ல பொருள்களால் தன்னுடைய வயிற்றை நிரப்பிவிட்டான்.
என்னைக் கழுவி ஊற்றிவிட்டான்.
35 ‘என்னையும் என் உடலையும் கொடுமைப்படுத்திய பழியை பாபிலோன் சுமக்கட்டும்’ என்று சீயோன் சொல்கிறாள்.+
‘என்னுடைய இரத்தத்தைச் சிந்திய பழியை கல்தேயர்கள் சுமக்கட்டும்’ என்று எருசலேம் சொல்கிறாள்.”
36 அதனால் யெகோவா சொல்வது இதுதான்:
அவளுடைய கடலையும் கிணறுகளையும் வற்றிப்போக வைப்பேன்.+
37 பாபிலோன் வெறும் கற்குவியலாகும்.+
அது நரிகள் தங்கும் இடமாகும்.+
அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.*
அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+
38 எல்லாரும் இளம் சிங்கங்களைப் போல ஒன்றாகக் கர்ஜிப்பார்கள்.
சிங்கக் குட்டிகளைப் போல உறுமுவார்கள்.”
39 “அவர்கள் குஷியாக இருக்கும்போது நான் அவர்களுக்கு விருந்து வைப்பேன்.
அவர்களைக் குடிக்க வைத்து போதையில் மிதக்க வைப்பேன்.+
அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.
எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
40 “செம்மறியாட்டுக் குட்டிகளையும், செம்மறியாட்டுக் கடாக்களையும், வெள்ளாட்டுக் கடாக்களையும் போல
அவர்களை நான் வெட்டுவதற்குக் கொண்டுபோவேன்.”
பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்குகிறார்களே!
42 கடல் பொங்கிவந்து பாபிலோனை மூழ்கடித்தது.
அதன் அலைகள் திரண்டு வந்து அவளை மூடிவிட்டன.
43 அவளுடைய நகரங்களுக்குக் கோரமான முடிவு வந்தது.
அவை தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டன.
அங்கு யாரும் குடியிருக்க மாட்டார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இருக்காது.+
மற்ற தேசங்களிலிருந்து இனி யாரும் அவனிடம் திரண்டுவர மாட்டார்கள்.
பாபிலோனின் மதில் விழுந்துவிடும்.+
45 என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்!+
யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது!+ தப்பித்து ஓடுங்கள்!+
46 தேசத்துக்கு வரப்போகிற செய்தியைக் கேட்டுப் பயந்து நடுங்காதீர்கள்.
ஒரு வருஷத்தில் அந்தச் செய்தி வரும்.
அடுத்த வருஷத்தில் இன்னொரு செய்தி வரும்.
தேசத்தில் வன்முறை நடப்பதையும், ஆட்சியாளர்கள் மோதிக்கொள்வதையும் பற்றிய செய்தியே அது.
47 இதோ, காலம் வருகிறது.
அப்போது, பாபிலோனின் சிலைகளை அழிப்பேன்.
அவளுடைய தேசத்துக்கு அவமானம் வரும்.
அவளுடைய ஜனங்கள் அங்கேயே வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
48 அவளை அழிப்பவர்கள் வடக்கிலிருந்து வருவார்கள்.+
பாபிலோனின் அழிவைப் பார்த்து
வானமும் பூமியும் அவற்றில் உள்ளவையும் சந்தோஷமாகப் பாடும்”+ என்று யெகோவா சொல்கிறார்.
49 “பாபிலோன் இஸ்ரவேலர்களை வெட்டி வீழ்த்தியதோடு நிற்கவில்லை,+
உலகத்திலுள்ள எல்லா ஜனங்களையுமே தன்னுடைய தேசத்தில் வெட்டி வீழ்த்தினாள்.
50 வாளுக்குத் தப்பியவர்களே, நிற்காமல் ஓடுங்கள்!+
தூர தேசத்திலிருந்து யெகோவாவை நினைத்துப் பாருங்கள்.
எருசலேமைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.”+
51 “எங்களுக்கு அவமானமாக இருக்கிறது; எங்களைப் பழித்துப் பேசுகிறார்கள்.
எங்களால் தலைநிமிரவே முடியவில்லை.
மற்ற தேசத்து ஜனங்கள்* யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து அதன் பரிசுத்தமான இடங்களை அழித்துவிட்டார்கள்.”+
52 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது.
அப்போது, அவளுடைய சிலைகளை அழிப்பேன்.
அவளுடைய தேசமெங்கும் குத்தப்பட்டுக் கிடக்கிறவர்கள் முனகுவார்கள்.”+
53 “பாபிலோன் வானம்வரை ஏறிப்போனாலும்,+
அவளுடைய உயரமான கோட்டைகளைப் பலப்படுத்தினாலும்,
அவளை அழிப்பதற்கு நான் ஆட்களை அனுப்புவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
54 “கேளுங்கள்! பாபிலோனில் அலறல் சத்தம் கேட்கிறது!+
கல்தேயர்களின் தேசத்தில் பேரழிவின் சத்தம் கேட்கிறது!+
55 யெகோவா பாபிலோனை அழிக்கிறார்.
அவளுடைய சத்தமான குரலை அவர் அடக்கிவிடுவார்.
அவளுடைய எதிரிகள் போடுகிற சத்தம் கடல் அலைகளின் சத்தத்தைப் போல இருக்கும்.
அவர்களுடைய குரல் எல்லாருக்கும் கேட்கும்.
56 ஏனென்றால், அழிக்கிறவன் பாபிலோனுக்கு எதிராக வருவான்.+
அவளுடைய வீரர்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+
அவர்களுடைய வில்லை உடைப்பான்.
ஏனென்றால், யெகோவா பழிதீர்க்கும் கடவுள்.+
அவர் கண்டிப்பாகப் பழிவாங்குவார்.+
57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்
போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+
அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.
எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார்.
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
58 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“பாபிலோனின் மதில் எவ்வளவு அகலமாக இருந்தாலும் அது தரைமட்டமாக்கப்படும்.+
அவளுடைய நுழைவாசல்கள் எவ்வளவு உயரமாக இருந்தாலும் அது சுட்டெரிக்கப்படும்.
ஜனங்களின் உழைப்பெல்லாம் வீணாகிப்போகும்.
தேசங்கள் படும் பாடுகளெல்லாம் நெருப்புக்குத்தான் பலியாகும்.”+
59 சிதேக்கியா யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்தான் மாசெயாவின் மகனான நேரியாவின்+ மகன் செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி இந்தக் கட்டளையைக் கொடுத்தார். அப்போது, செராயா சிதேக்கியாவுடன் சேர்ந்து பாபிலோனுக்குப் போயிருந்தார். ராஜாவின் அலுவல்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரியாக செராயா இருந்தார். 60 பாபிலோனுக்கு வரவிருந்த தண்டனைகளைப் பற்றிய இந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினார். 61 பின்பு எரேமியா செராயாவிடம், “நீங்கள் போய் பாபிலோனைப் பார்க்கும்போது இந்த எல்லா வார்த்தைகளையும் சத்தமாக வாசிக்க வேண்டும். 62 அதன்பின், ‘யெகோவாவே, இந்த நகரம் அழிக்கப்பட்டு மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி காலமெல்லாம் பாழாய்க் கிடக்கும்+ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே’ என்று சொல்ல வேண்டும். 63 இந்தப் புத்தகத்திலிருந்து வாசித்து முடித்த பின்பு, அதனோடு ஒரு கல்லைக் கட்டி, யூப்ரடிஸ்* ஆற்றின் நடுவே எறிந்துவிட வேண்டும். 64 பின்பு, ‘இப்படித்தான் பாபிலோன் மூழ்கிப்போகும். அவள் மறுபடியும் தலைதூக்க மாட்டாள்.+ ஏனென்றால் கடவுள் அவளைத் தண்டிக்கப்போகிறார். அவளுடைய ஜனங்கள் களைத்துப்போவார்கள்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிகின்றன.
52 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது. அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்.+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 2 யோயாக்கீமைப் போலவே சிதேக்கியாவும் யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+ 3 எருசலேமிலும் யூதாவிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து வந்ததால் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. கடைசியில் அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே ஒதுக்கித்தள்ளிவிட்டார்.+ பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்தார்.+ 4 அதனால், சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான். அவர்கள் நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினார்கள்.+ 5 சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது.
6 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில்,+ நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது. குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+ 7 கடைசியில், நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது. கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் நகரத்திலிருந்து தப்பித்துப் போனார்கள். அவர்கள் அரபா வழியாகத் தப்பித்து ஓடினார்கள்.+ 8 ஆனால், கல்தேய வீரர்கள் சிதேக்கியாவைத் துரத்திக்கொண்டுபோய்,+ எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள். அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள். 9 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து, காமாத்திலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். ராஜா அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கினான். 10 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களை பாபிலோன் ராஜா படுகொலை செய்தான். யூதாவின் அதிகாரிகள் எல்லாரையும்கூட ரிப்லாவில் படுகொலை செய்தான். 11 பின்பு பாபிலோன் ராஜா, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி,+ அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர் சாகும்வரை காவலிலேயே வைத்திருந்தான்.
12 ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன். 13 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான். 14 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+
15 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். அதோடு, பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், திறமையான கைத்தொழிலாளிகளையும் கொண்டுபோனான்.+ 16 ஆனால், காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் கட்டாய வேலை செய்வதற்காக பரம ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.+
17 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பையெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+ 18 அதோடு சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள்,+ கோப்பைகள்+ ஆகியவற்றையும், ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செம்புப் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 19 சொக்கத்தங்கத்திலும் வெள்ளியிலும்+ செய்யப்பட்ட தொட்டிகளையும்,+ தணல் அள்ளும் கரண்டிகளையும், கிண்ணங்களையும், சட்டிகளையும், குத்துவிளக்குகளையும்,+ கோப்பைகளையும், காணிக்கைகளுக்கான கிண்ணங்களையும் காவலாளிகளின் தலைவன் கொண்டுபோனான். 20 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்துவைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டியின் கீழிருந்த 12 செம்புக் காளைகள்,+ தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.
21 ஒவ்வொரு தூணின் உயரமும் 18 முழம்.* ஒவ்வொரு தூணையும் அளவுநூல் கொண்டு அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழம் இருந்தது.+ அதன் தடிமன் நான்கு விரலளவு இருந்தது. உள்ளே வெற்றிடமாக இருந்தது. 22 அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. ஒரு கும்பத்தின் உயரம் ஐந்து முழம்.+ கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன. மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது, மாதுளம்பழ வடிவங்களும் இதேபோல் இருந்தன. 23 கும்பத்தைச் சுற்றிலும் 96 மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. மொத்தம், 100 மாதுளம்பழ வடிவங்கள் வலைப்பின்னலைச் சுற்றி இருந்தன.+
24 முதன்மை குரு செராயாவையும்,+ இரண்டாம் குரு செப்பனியாவையும்,+ காவலாளிகள்+ மூன்று பேரையும் நேபுசராதான் பிடித்துக்கொண்டு போனான். 25 போர்வீரர்களுக்குத் தலைவரான அரண்மனை அதிகாரி ஒருவரையும், நகரத்தில் இருந்த ராஜாவின் நெருங்கிய நண்பர்கள் ஏழு பேரையும், போருக்கு ஆட்களைத் திரட்டுகிற படைத் தளபதியின் செயலாளரையும், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களில் 60 ஆண்களையும் பிடித்துக்கொண்டு போனான். 26 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் இவர்களைப் பிடித்து ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான். 27 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில்+ பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா ஜனங்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
28 நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துக்கொண்டு போனவர்களின் விவரம் இதுதான்: நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில் 3,023 யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
29 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில்,+ எருசலேமிலிருந்து 832 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.
30 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+
மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.
31 ஏவில்-மெரொதாக் என்பவன் பாபிலோனின் ராஜாவான வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.+ அது, யோயாக்கீன் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன 37-ஆம் வருஷம்,+ 12-ஆம் மாதம், 25-ஆம் நாள். 32 யோயாக்கீனிடம் ஏவில்-மெரொதாக் அன்பாகப் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற ராஜாக்களைவிட அவருக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தான். 33 அதன்பின், யோயாக்கீன் கைதி உடையைப் போட்டுக்கொள்ளவில்லை; வாழ்நாள் முழுக்க ராஜாவுடன் சேர்ந்து சாப்பிட்டார். 34 பாபிலோன் ராஜாவின் கட்டளைப்படியே, யோயாக்கீன் உயிரோடு இருந்த நாளெல்லாம் அவருக்கு உணவுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன. அவர் சாகும்வரை தினமும் அவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.
ஒருவேளை இந்தப் பெயரின் அர்த்தம், “யெகோவா உயர்த்துகிறார்.”
வே.வா., “புனிதப்படுத்தினேன்.”
நே.மொ., “விழித்திருக்கும் ஒன்றின்.”
நே.மொ., “விழித்திருப்பேன்.” எபிரெயுவில் இதற்கான வார்த்தையும் “வாதுமை மரம்” என்பதற்கான வார்த்தையும் ஒரே மூலவார்த்தையிலிருந்து வந்தவை.
வே.வா., “தூபம் காட்டுகிறார்கள்.”
வே.வா., “அன்பாக.”
வே.வா., “தீவுகளுக்கு.”
வே.வா., “குடைந்துகொண்டார்கள்.” ஒருவேளை பாறையில் குடைந்திருக்கலாம்.
வே.வா., “மோப்.”
நே.மொ., “உன் உச்சந்தலையைத் தின்கிறார்கள்.”
இது நைல் நதியின் ஒரு கிளை.
அதாவது, “ஐப்பிராத்து.”
நே.மொ., “நீ சோடா உப்பினாலும் நிறைய சலவைத் தூளினாலும் கழுவினால்கூட.”
வே.வா., “எனக்கு முகத்தைக் காட்டுவதற்குப் பதிலாக முதுகைக் காட்டுகிறார்கள்.”
நே.மொ., “தன் மார்க்கச்சையை.”
அதாவது, “எருசலேமே.”
அதாவது, சீயோன் அல்லது எருசலேம்.
நே.மொ., “அரேபியனை.”
வே.வா., “வன்மம் வைத்திருக்கலாமா?”
வே.வா., “உண்மையற்ற இஸ்ரவேல், துரோகியான யூதாவைவிட தன்னை நீதியுள்ளவளாகக் காட்டியிருக்கிறாள்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
அல்லது, “கணவன்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலாலும்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
அதாவது, “யெகோவா.”
நே.மொ., “யெகோவாவுக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்.”
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “நெஞ்சில் அடித்துக்கொண்டு.”
நே.மொ., “கண்காணிப்பவர்கள்.” இவர்கள் நகரத்தை எப்போது தாக்கலாம் என்று கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “நான் மனம் வருந்த.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
நே.மொ., “முகத்தை.”
அதாவது, “எருசலேமை.”
அல்லது, “அப்படி ஒருவர் இல்லவே இல்லை.”
அதாவது, “எரேமியாவின்.”
அம்புகளை வைப்பதற்கான சாதனம்.
வே.வா., “இந்த ஜனங்களின் இதயம் பிடிவாதமுள்ளது, அடங்காதது.”
வே.வா., “மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்த பொருள்கள்.”
வே.வா., “முறிவுகளை.”
நே.மொ., “பழங்காலப் பாதைகளை.”
வே.வா., “அறிவுரையை.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “எரேமியாவை.”
நே.மொ., “துருத்திகள்தான் எரிந்துபோகின்றன.”
அதாவது, “வேண்டாத.”
வே.வா., “அநாதைகளையும்.”
வே.வா., “தூபம் காட்டிக்கொண்டு.”
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை, கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
வே.வா., “புண்படுத்துகிறார்கள்; கோபப்படுத்துகிறார்கள்.”
அதாவது, “அர்ப்பணிக்கப்பட்ட.”
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
தோப்பேத் என்பது எருசலேமுக்கு வெளியே இருந்த ஓர் இடம். அங்குதான் விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள்.
நே.மொ., “என் இதயத்தில்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அல்லது, “கொக்குவுக்கும்கூட.”
வே.வா., “இடம்பெயர.”
வே.வா., “அறிவுரை.”
வே.வா., “செயலாளர்களின்.”
வே.வா., “முறிவுகளை.”
வே.வா., “பொலிகுதிரைகள்.”
வே.வா., “தைல மருந்தே.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”
இந்த வசனம் முதன்முதலாக அரமேயிக் மொழியில் எழுதப்பட்டது.
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனால்.”
வே.வா., “முழங்குகிறது.”
வே.வா., “தண்ணீரை ஆவியாக.”
அல்லது, “மழைக்கு மதகுகளை வைக்கிறார்.”
வே.வா., “எனக்கு முறிவு ஏற்பட்டுவிட்டது.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “திறமை.”
அநேகமாக, “எரேமியா.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “தூபம் காட்டினார்களோ.”
அதாவது, “எரேமியா.”
நே.மொ., “சிறுநீரகங்களையும்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.”
வே.வா., “சோதித்தறிகிறவர்.”
நே.மொ., “சிறுநீரகங்கள்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகள்.”
அல்லது, “துக்கப்படுகிறது.”
நே.மொ., “இதயத்தில்.”
வே.வா., “தேய்ந்த பாதைகளின்.”
நே.மொ., “தொடுகிறார்கள்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
அதாவது, “லினன்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
நே.மொ., “மந்தை.”
வே.வா., “ராஜமாதாவிடமும்.”
வே.வா., “பாவாடை.”
வே.வா., “எத்தியோப்பியன்.”
அல்லது, “நியாயத்தீர்ப்புகளை.”
அல்லது, “என்னைவிட்டுப் பின்னால் போய்க்கொண்டே இருக்கிறாய்.”
அல்லது, “அது அவமானத்தில் கூனிக்குறுகுகிறது.”
வே.வா., “அதைச் சாப்பிட்டேன்.”
வே.வா., “தண்டனைத்தீர்ப்பின் செய்திகளால்.”
வே.வா., “என்னுடைய வாய்போல்.”
துக்கத்தைக் காட்டுவதற்காக விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பொய்மத பழக்கங்கள்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
அல்லது, “என் கோபத்தால் நீங்கள் தீ போலப் பற்ற வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.”
வே.வா., “இலை உதிராமல்.”
அல்லது, “அதைக் குணப்படுத்தவே முடியாது.”
நே.மொ., “சிறுநீரகங்களை.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளை.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்கிற.”
நே.மொ., “ஜனங்களின்.”
வே.வா., “தெற்கிலிருந்தும்.”
வே.வா., “தூபம் காட்டுகிறார்கள்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
வே.வா., “எரேமியாவை வார்த்தைகளால் தாக்கலாம்.”
வே.வா., “மூப்பர்களையும்.”
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
நே.மொ., “கேட்டால் எல்லாருடைய காதுகளும் கூசும்.”
நே.மொ., “என் இதயத்தில்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
அர்த்தம், “சுற்றிலும் திகில்.”
வே.வா., “முட்டாளாக்கிவிட்டீர்கள்.”
வே.வா., “முட்டாளாக்கிவிட்டீர்கள்.”
வே.வா., “என்னோடு சமாதானமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டவர்கள்கூட.”
நே.மொ., “சிறுநீரகங்களையும்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.”
வே.வா., “அவர்களை.”
வே.வா., “அநாதைகளுக்கும்.”
யோவாகாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.
யோயாக்கீன் என்றும் எகொனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “தேசமே.”
வே.வா., “வாரிசை.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடும்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
வே.வா., “தீட்டுப்பட்டிருக்கிறார்கள்.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்கிறது.”
வே.வா., “உங்களுக்குப் பொய் நம்பிக்கை தருகிறார்கள்.”
வே.வா., “மற்றவர்களிடமிருந்து என் வார்த்தைகளைத் திருடுகிற.”
வே.வா., “யெகோவாவின் பாரம் என்ன?” “பாரம்” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு இரட்டை அர்த்தம் உண்டு; அது பாரமான ஏதோவொன்றையோ கடவுளுடைய கடுமையான நியாயத்தீர்ப்பு செய்தியையோ குறிக்கலாம்.
யோயாக்கீன் என்றும் கோனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.
அல்லது, “கோட்டைக் கொத்தளங்கள் கட்டுகிறவர்களையும்.”
வே.வா., “எல்லா ஜனங்களிடமும்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
இது பாபேல் (பாபிலோன்) என்பதன் இன்னொரு பெயர் என்று கருதப்படுகிறது.
வே.வா., “அறிவுரையை.”
பழமையான சில கையெழுத்துப் பிரதிகளின்படி, “சிதேக்கியா.”
அதாவது, “ஆலயத்தின் தண்ணீர்த் தொட்டியையும்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
வே.வா., “மூப்பர்களுக்கும்.”
வே.வா., “ராஜமாதாவும்.”
அல்லது, “கோட்டைக் கொத்தளங்கள் கட்டுகிறவர்களும்.”
வே.வா., “சமாதானத்தை நாடுங்கள்.”
அல்லது, “வெடித்துப்போன.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
வே.வா., “வேறு தேசத்தார்.”
வே.வா., “நியாயமான.”
அல்லது, “அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.”
வே.வா., “சிரித்து மகிழ்கிறவர்களோடு.”
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளின்.”
வே.வா., “மீட்பார்.”
வே.வா., “அவருடைய நல்மனதால்.”
நே.மொ., “குடல்கள்.”
நே.மொ., “ஒரு பெண் ஒரு ஆணை.”
அல்லது, “கணவராக.”
வே.வா., “அவர்களுக்குள்ளே.”
வே.வா., “பலிகளின் கொழுப்பு கலந்த சாம்பலும்.”
அல்லது, “சித்தப்பா.”
நே.மொ., “ஏழு சேக்கலையும் பத்து வெள்ளியையும்.” ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “நோக்கங்கள்.”
வே.வா., “எனக்கு முகத்தைக் காட்டுவதற்குப் பதிலாக முதுகைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள்.”
வே.வா., “அவர்களுக்குப் புத்தி சொல்லி, அவர்களைக் கண்டித்துத் திருத்த.”
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்கள்.”
நே.மொ., “என் இதயத்தில்.”
வே.வா., “உண்மையையும்.”
வே.வா., “நன்மைகளையும்.”
வே.வா., “வாரிசை.”
வே.வா., “புத்தகத்திலிருந்து.”
வே.வா., “எழுத்தராகிய.”
அதாவது, “அரண்மனை அதிகாரிகளும்.”
அதாவது, “நவம்பர் மாத பிற்பகுதியும் டிசம்பர் மாத முற்பகுதியும்.” இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
யோயாக்கீன் என்றும் எகொனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.
நே.மொ., “அண்ணகரான.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அல்லது, “நெர்கல்-சரேத்சேர், சம்கார்-நேபோ, சர்சேகிம், ரப்சாரிஸ்.”
அதாவது, “தலைமை மந்திரவாதி (ஜோதிடர்).”
அல்லது, “கட்டாய வேலை வாங்கினான்.”
வே.வா., “அரண்மனையின் முக்கிய அதிகாரி.”
அதாவது, “தலைமை மந்திரவாதி (ஜோதிடர்).”
அல்லது, “பெரிய குளத்துக்கு”
வே.வா., “கொஞ்சக் காலத்துக்கு அங்கே போய்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
நே.மொ., “சமாதானத்தோடு.”
வே.வா., “சூரியனின் கோயில்.” அதாவது, ஹெலியோபாலிஸ்.
வே.வா., “மோப்பிலும்.”
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
வே.வா., “நினைப்பூட்டுதல்களை.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
வே.வா., “எதிர்பார்க்கிறாய்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
வே.வா., “ஆட்களைக் கொன்று குவிக்கப்போகிறார்.”
வே.வா., “மோப்பிலும்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அதாவது, “எகிப்தை ஜெயிக்கப்போகிறவர்.”
வே.வா., “மோப்புக்கு.”
அல்லது, “பொட்டல் காடாகும்.”
அதாவது, “தீப்ஸ்.”
வே.வா., “நியாயமான.”
வே.வா., “பொலிகுதிரைகள்.”
அதாவது, “கிரேத்தா.”
நே.மொ., “காசா மொட்டையடிக்கப்படும்.”
அல்லது, “வறண்ட நிலத்தில்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா, “அவளைச் சுற்றியுள்ள ஊர்கள்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன் உள்ளவர்களால்.”
வே.வா., “ஞானம்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
ஒருவேளை, “ஏதோமை.”
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
நே.மொ., “நீதி குடியிருக்கும்.”
வே.வா., “பொலிகுதிரைகள்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
வே.வா., “போலித் தீர்க்கதரிசிகளை.”
இது கல்தேயாவின் இன்னொரு பெயர் என்று கருதப்படுகிறது.
அதாவது, “கல்தேயர்களுடைய தேசம்.”
அல்லது, “அம்புகளை அம்புக்கூடுகளில் நிரப்புங்கள்.”
வே.வா., “கொடிக் கம்பத்தை நாட்டுங்கள்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனால்.”
வே.வா., “முழங்குகிறது.”
வே.வா., “தண்ணீரை ஆவியாக.”
அல்லது, “மழைக்கு மதகுகளை வைக்கிறார்.”
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.
அதாவது, “பாப்பிரஸ் புல்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
இது பாபேல் (பாபிலோன்) என்பதன் இன்னொரு பெயர் என்று கருதப்படுகிறது.
வே.வா., “முன்பின் தெரியாதவர்கள்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
ஒரு முழம் என்பது 44.5 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.