யாத்திராகமம்
1 யாக்கோபு என்ற இஸ்ரவேல் எகிப்துக்குப் போனபோது, அவருடைய மகன்களும் அவரவர் குடும்பத்தோடு போனார்கள். அவருடைய மகன்களுடைய பெயர்கள் இவைதான்:+ 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா,+ 3 இசக்கார், செபுலோன், பென்யமீன், 4 தாண், நப்தலி, காத், ஆசேர்.+ 5 யோசேப்பு ஏற்கெனவே எகிப்து தேசத்தில் இருந்தார். யாக்கோபுடைய வம்சத்தார் மொத்தம் 70 பேர்.+ 6 பிற்பாடு, யோசேப்பும் அவருடைய சகோதரர்கள் எல்லாரும், அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் இறந்துபோனார்கள்.+ 7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+
8 பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 9 அவன் தன்னுடைய ஜனங்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேலர்கள் நம்மைவிட ஏராளமாகப் பெருகிவிட்டார்கள், பலத்திலும் நம்மை மிஞ்சிவிட்டார்கள்.+ 10 நாம் சாமர்த்தியமாக ஏதாவது செய்து அவர்கள் பெருகாதபடி தடுக்க வேண்டும். இல்லையென்றால், எதிரிகள் போர் செய்ய வரும்போது இவர்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டு நம்மைத் தோற்கடித்துவிட்டு இந்தத் தேசத்திலிருந்து தப்பித்துவிடுவார்கள்” என்றான்.
11 அதனால், இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகள் போல வேலை வாங்கி அடக்கி ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.+ பார்வோனுக்காகப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு பித்தோம் நகரத்தையும் ராமசேஸ் நகரத்தையும்+ கட்டும்படி இஸ்ரவேலர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 12 ஆனால், எகிப்தியர்கள் எந்தளவுக்கு அவர்களை அடக்கி ஒடுக்கினார்களோ அந்தளவுக்கு அவர்கள் பெருகினார்கள், எல்லா இடங்களிலும் பரவினார்கள். அதனால், இஸ்ரவேலர்களை நினைத்து எகிப்தியர்கள் பீதியடைந்தார்கள்.+ 13 அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தினார்கள்.+ 14 வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு அவர்களை வேலை வாங்கினார்கள். களிமண் சாந்தும் செங்கலும் தயாரிக்கிற வேலைகளையும், எல்லாவித வயல் வேலைகளையும் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். இப்படி, அவர்களைப் படாத பாடுபடுத்தி, சக்கையாகப் பிழிந்தெடுத்தார்கள்.+
15 பிற்பாடு, எகிப்தின் ராஜா எபிரெய மருத்துவச்சிகளான சிப்பிராளையும் பூவாளையும் கூப்பிட்டு, 16 “எபிரெயப் பெண்களுக்கு நீங்கள் பிரசவம் பார்க்கும்போது+ ஆண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்றுவிடுங்கள், பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு விட்டுவிடுங்கள்” என்று சொன்னான். 17 ஆனால், அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் எகிப்தின் ராஜா சொன்னபடி செய்யவில்லை. ஆண் குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டார்கள்.+ 18 பிற்பாடு, எகிப்தின் ராஜா அந்த மருத்துவச்சிகளைக் கூப்பிட்டு, “ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விட்டுவைத்தீர்கள்?” என்று கேட்டான். 19 அதற்கு அந்த மருத்துவச்சிகள், “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைப் போலக் கிடையாது. அவர்கள் துடிப்பானவர்கள், மருத்துவச்சி வருவதற்கு முன்பே குழந்தை பெற்றுவிடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.
20 அதனால், கடவுள் அந்த மருத்துவச்சிகளுக்கு ஆதரவாக இருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் பெருகிக்கொண்டே போனார்கள், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. 21 அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அவர் பிற்பாடு அவர்களுக்குப் பிள்ளைகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார். 22 கடைசியில், பார்வோன் தன்னுடைய ஜனங்களிடம், “எபிரெயர்களுக்குப் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் வீசிவிடுங்கள், பெண் குழந்தைகளை மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள்”+ என்று கட்டளை போட்டான்.
2 அந்தச் சமயத்தில், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அதே கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார்.+ 2 அந்தப் பெண் கர்ப்பமாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். குழந்தை மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்து, அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.+ 3 அதற்குமேல் அவனை ஒளித்துவைக்க முடியாததால்,+ ஒரு நாணல்* கூடையை எடுத்து, அதற்குத் தார் பூசி, அவனை அதில் படுக்க வைத்தாள். பின்பு, நைல் நதியோரம் இருந்த நாணற்புற்களுக்கு இடையில் கூடையை வைத்தாள். 4 அவனுக்கு என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக அவனுடைய அக்கா+ கொஞ்சத் தூரத்தில் நின்றுகொண்டாள்.
5 பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்கு வந்தாள். அவளுடைய பணிப்பெண்கள் நைல் நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது, நாணற்புற்களுக்கு இடையில் இருந்த அந்தக் கூடையை அவள் பார்த்தாள். உடனே தன்னுடைய அடிமைப் பெண்ணை அனுப்பி அதை எடுத்துவரச் சொன்னாள்.+ 6 பார்வோனின் மகள் அதைத் திறந்தபோது, அதற்குள் குழந்தை இருந்தது. அது அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தபோது அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. “இது எபிரெயர்களுடைய குழந்தை” என்று சொன்னாள். 7 அப்போது, அந்தக் குழந்தையின் அக்கா பார்வோனுடைய மகளிடம், “குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு எபிரெயப் பெண்ணை நான் போய்க் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள். 8 அதற்கு பார்வோனின் மகள், “சரி, போ!” என்றாள். அந்தக் குட்டிப் பெண் உடனடியாகப் போய், குழந்தையின் அம்மாவைக்+ கூட்டிக்கொண்டு வந்தாள். 9 அப்போது பார்வோனின் மகள் அந்தப் பெண்ணிடம், “இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போய், பால் கொடுத்து, நன்றாகக் கவனித்துக்கொள். நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண்ணும் குழந்தையை எடுத்துக்கொண்டு போய் பால் கொடுத்து வளர்த்தாள். 10 குழந்தை வளர்ந்த பின்பு, அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுவந்து விட்டாள். அவள் அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டாள்.+ “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி அவனுக்கு மோசே* என்று பெயர் வைத்தாள்.+
11 மோசே வளர்ந்து ஆளான பின்பு, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்கள் படுகிற கஷ்டங்களைப் பார்க்கப் போனார்.+ அப்போது, ஓர் எபிரெயனை ஓர் எகிப்தியன் அடித்துக்கொண்டிருந்தான். 12 அவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லையென்று தெரிந்தவுடன், அந்த எகிப்தியனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார்.+
13 அடுத்த நாள் அவர் வெளியே போனபோது, இரண்டு எபிரெயர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது தப்பு செய்தவனிடம், “நீ ஏன் உன்னுடைய சகோதரனை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.+ 14 அதற்கு அவன், “உன்னை எங்களுடைய தலைவனாகவும் நீதிபதியாகவும் யாராவது நியமித்தார்களா? நீ அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டது போல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?” என்று கேட்டான்.+ அதைக் கேட்டதும் மோசே பயந்துபோய், “நான் செய்தது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
15 நடந்ததை பார்வோன் கேள்விப்பட்டவுடன், மோசேயைக் கொலை செய்ய நினைத்தான். அதனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.+ அங்கே ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். 16 அந்தத் தேசத்தைச் சேர்ந்த குருவுக்கு+ ஏழு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய அப்பாவின் ஆடுகளுக்காகக் கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு தொட்டிகளை நிரப்புவதற்கு அங்கே வந்தார்கள். 17 ஆனால், வழக்கம்போல் மேய்ப்பர்கள் வந்து அவர்களை விரட்டினார்கள். உடனே, மோசே எழுந்துபோய் அந்தப் பெண்களுக்கு உதவி செய்தார்.* அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீரும் காட்டினார். 18 அவர்கள் வீட்டுக்குப் போனதும் அவர்களுடைய அப்பா ரெகுவேல்,*+ “இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டீர்களே, எப்படி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார். 19 அதற்கு அவர்கள், “ஒரு எகிப்தியர்+ எங்களை மேய்ப்பர்களிடமிருந்து காப்பாற்றினார், அதுமட்டுமல்ல ஆடுகளுக்குத் தண்ணீரையும் மொண்டு ஊற்றினார்” என்றார்கள். 20 அப்போது அவர் தன்னுடைய மகள்களிடம், “அவர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? உடனே போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள், அவர் நம்மோடு சேர்ந்து சாப்பிடட்டும்” என்றார். 21 அதன் பின்பு, மோசேயும் அங்கு வந்து அவரோடு தங்கியிருக்க ஒத்துக்கொண்டார். ரெகுவேல் தன்னுடைய மகள் சிப்போராளை+ மோசேக்குக் கல்யாணம் செய்து வைத்தார். 22 அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது மோசே, “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்”+ என்று சொல்லி அவனுக்கு கெர்சோம்*+ என்று பெயர் வைத்தார்.
23 பல வருஷங்களுக்குப் பின்பு எகிப்தின் ராஜா இறந்துபோனான்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவே இருந்ததால் வேதனையில் குமுறினார்கள், அழுது புலம்பினார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கேட்டு உண்மைக் கடவுளிடம் தொடர்ந்து கெஞ்சிக் கதறினார்கள்.+ 24 கடவுள் அவர்களுடைய குமுறலைக் கேட்டார்.+ ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.+ 25 கடவுள் இஸ்ரவேலர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பினார்; அவர்களுடைய கஷ்டத்தைக் கவனித்தார்.
3 மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார். 2 அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் அவருக்குத் தோன்றினார்.+ மோசே அந்த முட்புதரையே பார்த்தார். அது எரிந்துகொண்டிருந்தபோதிலும் கருகவே இல்லை. 3 அதனால் மோசே, “இந்த முட்புதர் கருகாமல் இருக்கிறதே! இந்த அற்புதக் காட்சியைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 4 அவர் அதன் பக்கத்தில் வருவதை யெகோவா பார்த்தபோது அந்த முட்புதரிலிருந்து, “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அதற்கு மோசே, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 5 அப்போது கடவுள் அவரிடம், “பக்கத்தில் வராதே. உன் செருப்பைக் கழற்று. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது” என்றார்.
6 அதோடு, “நான் உன் முன்னோர்களான* ஆபிரகாமின் கடவுளாகவும்,+ ஈசாக்கின் கடவுளாகவும்,+ யாக்கோபின் கடவுளாகவும்+ இருக்கிறேன்” என்றார். உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார். 7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+ 8 நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். 9 இஸ்ரவேல் ஜனங்கள் கதறுவதை நான் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதையும் பார்த்தேன்.+ 10 அதனால், இப்போது உன்னை பார்வோனிடம் அனுப்பப்போகிறேன். என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவாய்”+ என்றார்.
11 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 12 அதற்கு அவர், “நான் உன்னோடு இருப்பேன்.+ என்னுடைய ஜனங்களை எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த பின்பு, உண்மைக் கடவுளாகிய என்னை நீங்கள் எல்லாரும் இந்த மலையில் வணங்குவீர்கள்.+ நான்தான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.
13 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “நான் இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’+ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” என்று கேட்டார். 14 அதற்குக் கடவுள், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ* அப்படியெல்லாம் ஆவேன்”*+ என்று சொன்னார். அதோடு, “நீ இஸ்ரவேலர்களிடம், ‘ஆவேன்’ என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார் என்று சொல்”+ என்றார். 15 கடவுள் மறுபடியும் மோசேயிடம்,
“‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிற யெகோவா+ உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டும். என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்.+ தலைமுறை தலைமுறையாக இந்தப் பெயரால்தான் ஜனங்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள். 16 இப்போது நீ போய் இஸ்ரவேலின் பெரியோர்களை* ஒன்றுகூட்டி, அவர்களிடம், ‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் கடவுளாகிய யெகோவா எனக்குத் தோன்றி இப்படிச் சொன்னார்: “எகிப்தில் உங்களுக்குச் செய்யப்படுகிற கொடுமைகளையும் நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் நான் பார்த்தேன்.+ 17 அதனால், எகிப்தியர்களுடைய பிடியிலிருந்து உங்களை விடுதலை செய்து,+ கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும்+ பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்”’+ என்று சொல்.
18 அவர்கள் நீ சொல்வதை நிச்சயம் கேட்பார்கள்.+ நீயும் இஸ்ரவேலின் பெரியோர்களும் எகிப்தின் ராஜாவிடம் போய், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா+ எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ அதனால் தயவுசெய்து எங்களைப் போகவிடுங்கள்’ என்று கேட்க வேண்டும். 19 ஆனால், என்னுடைய கைபலத்தைக் காட்டினால்தான் எகிப்தின் ராஜா உங்களைப் போக விடுவான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.+ 20 அதனால், அதிர வைக்கும் அற்புதங்களைச் செய்து எகிப்தைத் தாக்குவேன். அதன் பின்பு, அவன் உங்களை அனுப்பிவிடுவான்.+ 21 நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+ 22 இஸ்ரவேல் பெண்கள் தங்களுடைய வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கிற எகிப்தியப் பெண்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்க வேண்டும். அவற்றைத் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் போட்டுவிட வேண்டும். இப்படி, நீங்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டு வர* வேண்டும்”+ என்று சொன்னார்.
4 அப்போது மோசே, “அவர்கள் நான் சொல்வதைக் கேட்காமலும் என்னை நம்பாமலும் போனால், என்ன செய்வது?+ ‘யெகோவா உன் முன்னால் தோன்றியிருக்க மாட்டார்’ என்று அவர்கள் சொல்வார்களே” என்றார். 2 அப்போது யெகோவா, “கையில் என்ன வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு கோலை வைத்திருக்கிறேன்” என்றார். 3 கடவுள் அவரிடம், “அதைத் தரையில் போடு” என்றார். மோசே அதைத் தரையில் போட்டதும் அது ஒரு பாம்பாக மாறியது.+ உடனே அவர் அங்கிருந்து பயந்து ஓடினார். 4 யெகோவா மோசேயிடம், “உன் கையை நீட்டி, அதன் வாலைப் பிடி” என்றார். அவரும் கையை நீட்டி அதைப் பிடித்தார், அந்தப் பாம்பு கோலாக மாறியது. 5 அப்போது கடவுள் அவரிடம், “அவர்களுடைய முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளும் யாக்கோபின் கடவுளுமான யெகோவா+ உன் முன்னால் தோன்றினார் என்பதை அவர்கள் நம்புவதற்கு இது ஒரு அடையாளம்”+ என்றார்.
6 யெகோவா மறுபடியும் அவரிடம், “தயவுசெய்து உன் கையை உன்னுடைய அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கியின் மடிப்புக்குள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது தொழுநோய் பிடித்து, பனி போல வெள்ளையாக மாறியிருந்தது!+ 7 அதன் பின்பு கடவுள் அவரிடம், “உன் கையை மறுபடியும் அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கிக்குள் கையை வைத்தார். பின்பு கையை வெளியே எடுத்தபோது, அது பழையபடி மாறியிருந்தது! 8 அப்போது கடவுள் அவரிடம், “நீ செய்த முதல் அற்புதத்தைப் பார்த்தும் அவர்கள் உன்னை நம்பாமல் போனால், அடுத்த அற்புதத்தைப் பார்த்து நிச்சயம் நம்புவார்கள்.+ 9 ஒருவேளை, இந்த இரண்டு அற்புதங்களைப் பார்த்த பின்பும் அவர்கள் உன் பேச்சைக் கேட்காமல் போனால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து காய்ந்த தரையில் ஊற்று. அது இரத்தமாக மாறும்”+ என்றார்.
10 அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார். 11 அதற்கு யெகோவா, “மனுஷர்களுக்கு வாயைக் கொடுத்தது யார்? அவனை ஊமையனாக, செவிடனாக, குருடனாக, அல்லது நல்ல கண்பார்வை உள்ளவனாக ஆக்க யாரால் முடியும்? யெகோவாவாகிய என்னால்தானே முடியும்? 12 அதனால் நீ புறப்பட்டுப் போ. நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன பேச வேண்டும் என்பதை நான் சொல்லிக்கொடுப்பேன்”+ என்றார். 13 ஆனால் மோசே, “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, தயவுசெய்து வேறு யாரையாவது அனுப்புங்கள்” என்றார். 14 அதனால், யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் மோசேயிடம், “உனக்குத்தான் லேவியனாகிய உன் அண்ணன் ஆரோன்+ இருக்கிறானே. அவன் நன்றாகப் பேசுவான் என்று எனக்குத் தெரியும். உன்னைப் பார்க்க அவன் வந்துகொண்டிருக்கிறான். உன்னைப் பார்க்கும்போது அவன் சந்தோஷப்படுவான்.+ 15 நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன். 16 அவன் உன்னுடைய சார்பில் ஜனங்களிடம் பேசுவான், நீ கடவுளுடைய சார்பில் அவனிடம் பேசுவாய்.*+ 17 நீ இந்தக் கோலை எடுத்துக்கொண்டு போய், இதை வைத்து அற்புதங்களைச் செய்வாய்”+ என்று சொன்னார்.
18 பின்பு, மோசே தன் மாமனார் எத்திரோவிடம்+ போய், “நான் போய் எகிப்திலுள்ள என் சகோதரர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். அப்போது எத்திரோ, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா” என்றார். 19 அதன் பின்பு யெகோவா மீதியானில் இருந்த மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போ. உன்னைக் கொலை செய்ய நினைத்த எல்லாரும் செத்துவிட்டார்கள்”+ என்றார்.
20 அதனால், மோசே தன் மனைவியையும் மகன்களையும் கழுதையின் மேல் உட்கார வைத்து, எகிப்துக்குப் புறப்பட்டார். உண்மைக் கடவுள் கொண்டுபோகச் சொன்ன கோலையும் எடுத்துக்கொண்டார். 21 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+ 22 அப்போது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் என்னுடைய மூத்த மகன்.+ 23 என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார்.
24 பின்பு, வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் யெகோவா+ அவர்முன் தோன்றி, அவனை* கொலை செய்யப் பார்த்தார்.+ 25 அப்போது, சிப்போராள்+ ஒரு கூர்மையான கல்லை* எடுத்து தன்னுடைய மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அந்த நுனித்தோலை அவர் பாதங்களில் வைத்து, “எனக்கு நீங்கள் இரத்தத்தின் மணமகன்” என்றாள். 26 அதனால், கடவுள் அவனை விட்டுவிட்டார். அப்போது அவள், விருத்தசேதனத்தின் காரணமாக, “இரத்தத்தின் மணமகன்” என்றாள்.
27 பின்பு யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காக வனாந்தரத்துக்குப் போ”+ என்றார். அதனால் அவர் புறப்பட்டுப் போய், உண்மைக் கடவுளுடைய மலையில்+ மோசேயைச் சந்தித்து, அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். 28 அப்போது மோசே, யெகோவா சொன்ன எல்லா விஷயங்களைப் பற்றியும், தன்னைச் செய்யச் சொன்ன எல்லா அற்புதங்களைப் பற்றியும் ஆரோனிடம் சொன்னார்.+ 29 அதன் பின்பு மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரையும் ஒன்றுகூட்டினார்கள்.+ 30 யெகோவா மோசேயிடம் பேசிய எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் சொன்னார். ஜனங்களுடைய கண் முன்னால் அவர் அற்புதங்களைச் செய்தார்.+ 31 அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.
5 பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “‘வனாந்தரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாட என் ஜனங்களை அனுப்பி வை’ என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள். 2 ஆனால் பார்வோன், “யார் அந்த யெகோவா?+ நான் எதற்காக அவருடைய பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை அனுப்ப வேண்டும்?+ யெகோவா யாரென்றே எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலர்களைக் கண்டிப்பாக அனுப்ப மாட்டேன்”+ என்றான். 3 ஆனால் அவர்கள், “எபிரெயர்களின் கடவுள் எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுள் யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும், தயவுசெய்து அனுமதி கொடுங்கள்.+ இல்லையென்றால், அவர் எங்களை நோயினாலோ வாளினாலோ கொன்றுவிடுவார்” என்றார்கள். 4 அதற்கு எகிப்தின் ராஜா, “மோசே! ஆரோன்! இந்த ஜனங்களுடைய வேலையை ஏன் கெடுக்கிறீர்கள்? போய் அவரவர் வேலையைப் பாருங்கள்!”+ என்றான். 5 அதோடு, “இந்தத் தேசத்தில் உங்களுடைய ஜனங்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள். அத்தனை பேருடைய வேலையையும் ஏன் கெடுக்கிறீர்கள்?” என்றான்.
6 ஜனங்களிடம் வேலை வாங்கிய அதிகாரிகளுக்கும் உதவியாளர்களுக்கும்* பார்வோன் அதே நாளில் இப்படிக் கட்டளை கொடுத்தான்: 7 “செங்கல் செய்ய நீங்கள் இனிமேல் ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கக் கூடாது.+ அவர்களே போய் வைக்கோலைக் கொண்டுவரட்டும். 8 ஆனால், முன்பு எத்தனை செங்கல் செய்தார்களோ அதே அளவுக்கு இப்போதும் செய்ய வேண்டும். அதில் ஒரு செங்கல்கூட குறையக் கூடாது. அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டார்கள்.* அதனால்தான், ‘நாங்கள் போக வேண்டும், எங்களுடைய கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டும்’ என்று சொல்கிறார்கள். 9 அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை கொடுங்கள், அவர்களை ஓய்வெடுக்க விடாதீர்கள். அப்போதுதான், வெட்டிப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்று சொன்னான்.
10 அதனால், அந்த அதிகாரிகளும்+ உதவியாளர்களும் ஜனங்களிடம் போய், “இனிமேல் உங்களுக்கு வைக்கோல் தரப்போவதில்லை என்று பார்வோன் சொல்லிவிட்டார். 11 நீங்களே போய் வைக்கோலைத் தேடி எடுத்துக்கொண்டு வர வேண்டும். ஆனால், உங்கள் வேலை கொஞ்சம்கூட குறைக்கப்படாது” என்றார்கள். 12 அதனால், வைக்கோலுக்காக வயல்களில் இருக்கும் தாள்களைத் தேடி ஜனங்கள் எகிப்து தேசமெங்கும் அலைந்தார்கள். 13 அவர்களுடைய அதிகாரிகள், “வைக்கோல் இருந்தபோது எந்தளவுக்கு வேலை செய்தீர்களோ அதே அளவுக்குத் தினமும் வேலை செய்தாக வேண்டும்” என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். 14 அதோடு, உதவியாளர்களாகத் தாங்கள் நியமித்த இஸ்ரவேலர்களை அடித்தார்கள்.+ அவர்களிடம், “முன்பு செய்துவந்த அளவுக்கு ஏன் நேற்றைக்கும் இன்றைக்கும் செங்கல் செய்யவில்லை?” என்று அதட்டினார்கள்.
15 அதனால், அவர்களுடைய உதவியாளர்களாக இருந்த இஸ்ரவேலர்கள் பார்வோனிடம் போய், “உங்கள் வேலையாட்களாகிய எங்களை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? 16 வைக்கோலே தராமல், ‘செங்கல் செய்யுங்கள்!’ என்று உங்கள் ஆட்கள் சொல்கிறார்கள். உங்கள் வேலையாட்களாகிய எங்களை அடிக்கிறார்கள். ஆனால், தப்பு உங்களுடைய ஆட்கள்மேல்தான் இருக்கிறது” என்று முறையிட்டார்கள். 17 அதற்கு அவன், “நீங்கள் சோம்பேறிகளாகிவிட்டீர்கள்,* சோம்பேறிகளாகிவிட்டீர்கள்!+ அதனால்தான், ‘நாங்கள் போக வேண்டும், யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும்’ என்று சொல்கிறீர்கள்.+ 18 போங்கள், போய் வேலையைப் பாருங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரவே மாட்டோம், ஆனால், நீங்கள் முன்பு செய்துவந்த அதே அளவுக்குச் செங்கல் செய்ய வேண்டும்” என்றான்.
19 வழக்கமாகச் செய்துவந்த செங்கலில் ஒன்றுகூட குறையக் கூடாது என்று ராஜா கட்டளை கொடுத்ததால், தாங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டதாக அந்த உதவியாளர்கள் நினைத்தார்கள். 20 அவர்கள் பார்வோனைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவர்களைச் சந்திக்க மோசேயும் ஆரோனும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். 21 உடனே அவர்களிடம், “பார்வோனும் அவருடைய ஆட்களும் எங்களை வெறுக்கும்படி செய்துவிட்டீர்கள். எங்களைக் கொலை செய்வதற்காக நீங்களே அவர்கள் கையில் வாளைக் கொடுத்துவிட்டீர்கள்.+ யெகோவா உங்களைப் பார்த்துக்கொள்ளட்டும், அவர் உங்களை நியாயந்தீர்க்கட்டும்” என்று சொன்னார்கள். 22 அப்போது மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, ஏன் இந்த ஜனங்களுக்குக் கஷ்டம் கொடுத்தீர்கள்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்கள்? 23 உங்கள் பெயரில் பேசுவதற்காக நான் பார்வோனிடம் போன+ சமயத்திலிருந்து அவன் இவர்களை இன்னும் அதிகமாகக் கொடுமைப்படுத்தி வருகிறானே.+ உங்கள் ஜனங்களை நீங்கள் ஏன் காப்பாற்றாமல் இருக்கிறீர்கள்?”+ என்றார்.
6 அதற்கு யெகோவா மோசேயிடம், “பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்.+ என்னுடைய கைபலத்தை நான் அவனுக்குக் காட்டுவேன், அப்போது இஸ்ரவேலர்களை அவன் அனுப்பிவிடுவான். என்னுடைய கைபலத்தைப் பார்த்து, இந்தத் தேசத்திலிருந்தே அவர்களைத் துரத்திவிடுவான்”+ என்றார்.
2 பின்பு மோசேயிடம், “நான் யெகோவா. 3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன்.+ ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப்+ பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.+ 4 அவர்கள் அன்னியர்களாகக் குடியிருந்த கானான் தேசத்தை அவர்களுக்கே தருவதாக நான் ஒப்பந்தம் செய்தேன்.+ 5 இப்போது, எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரவேலர்களின் குமுறல்களைக் கேட்டு, என்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறேன்.+
6 அதனால் நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் யெகோவா. எகிப்தியர்கள் உங்கள்மேல் சுமத்திய சுமைகளை நான் நீக்குவேன். அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பேன்.+ எகிப்தியர்களைக் கடுமையாகத் தண்டித்து, என்னுடைய மகா வல்லமையால் உங்களைக் காப்பாற்றுவேன்.+ 7 நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எகிப்தியர்கள் சுமத்திய சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள். 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நான் உறுதிமொழி தந்தேனோ அந்தத் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்.+ நான் யெகோவா’”+ என்றார்.
9 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேலர்களிடம் சொன்னார். ஆனால், அவர்கள் நொந்துபோயிருந்ததாலும் அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்ததாலும் மோசே சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை.+
10 பின்பு யெகோவா மோசேயிடம், 11 “இஸ்ரவேலர்களை இந்தத் தேசத்திலிருந்து அனுப்பும்படி எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய்ச் சொல்” என்றார். 12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார். 13 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் மறுபடியும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவது சம்பந்தமாக இஸ்ரவேலர்களுக்கும் பார்வோனுக்கும் என்னென்ன கட்டளைகள் கொடுக்க வேண்டுமென்று சொன்னார்.
14 இஸ்ரவேல் குடும்பங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: இஸ்ரவேலின் மூத்த மகனான ரூபனுடைய+ மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ இவர்கள்தான் ரூபனின் வம்சத்தார்.
15 சிமியோனின் மகன்கள்: எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணுக்குப் பிறந்த சாவூல்.+ இவர்கள்தான் சிமியோனின் வம்சத்தார்.
16 அவரவர் குடும்பங்களுக்குத் தலைவர்களாய் இருந்த லேவியின்+ மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+ இந்த லேவி 137 வருஷங்கள் வாழ்ந்தார்.
17 அவரவர் குடும்பங்களுக்குத் தலைவர்களாய் இருந்த கெர்சோனின் மகன்கள்: லிப்னி, சீமேயி.+
18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இந்த கோகாத் 133 வருஷங்கள் வாழ்ந்தார்.
19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூசி.
இவர்கள் எல்லாரும் லேவியின் மகன்களுடைய வழிவந்த வம்சத்தார்.+
20 அம்ராம் தன்னுடைய அப்பாவின் சகோதரி யோகெபேத்தைக் கல்யாணம் செய்தார்.+ அவள் ஆரோனையும் மோசேயையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.+ அம்ராம் 137 வருஷங்கள் வாழ்ந்தார்.
21 இத்சேயாரின் மகன்கள்: கோராகு,+ நெப்பேக், சிக்ரி.
22 ஊசியேலின் மகன்கள்: மீஷாவேல், எல்சாப்பான்,+ சித்ரி.
23 அம்மினதாபின் மகளும் நகசோனின்+ சகோதரியுமான எலிசபாளை ஆரோன் கல்யாணம் செய்தார். நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்+ என்ற மகன்களை அவள் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
24 கோராகுவின் மகன்கள்: ஆசீர், எல்க்கானா, அபியாசாப்.+ இவர்கள்தான் கோராகியர்களின் வம்சத்தார்.+
25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+
26 இந்த ஆரோனிடமும் மோசேயிடமும்தான், “எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அணி அணியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று யெகோவா சொன்னார்.+ 27 எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் பேசியது இந்த மோசேயும் ஆரோனும்தான்.+
28 எகிப்து தேசத்திலிருந்த மோசேயிடம் யெகோவா பேசிய அந்த நாளில், 29 யெகோவா அவரிடம், “நான் யெகோவா. நான் உன்னிடம் சொல்கிற எல்லாவற்றையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் சொல்” என்றார். 30 அப்போது மோசே யெகோவாவிடம், “நானே திக்கித்திணறிப் பேசுகிறேன், அப்படியிருக்கும்போது நான் சொல்வதை பார்வோன் கேட்பானா?” என்றார்.+
7 அதனால் யெகோவா மோசேயிடம், “நான் உன்னை பார்வோனுக்குக் கடவுளாக்கினேன்.* உன்னுடைய அண்ணன் ஆரோன் உன்னுடைய சார்பில் தீர்க்கதரிசனம் சொல்வான்.+ 2 நான் உனக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் உன் அண்ணன் ஆரோனிடம் நீ சொல்ல வேண்டும். அவன் பார்வோனிடம் பேசுவான். அப்போது, பார்வோன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடுவான். 3 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ எகிப்து தேசத்தில் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வேன்.+ 4 ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+ 5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார். 6 மோசேயும் ஆரோனும் யெகோவாவின் பேச்சைத் தட்டாமல் அப்படியே செய்தார்கள். 7 பார்வோனிடம் பேசிய சமயத்தில் மோசேக்கு 80 வயது, ஆரோனுக்கு 83 வயது.+
8 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 9 “ஒரு அற்புதம் செய்து காட்டும்படி பார்வோன் உங்களிடம் கேட்டால், நீ ஆரோனைப் பார்த்து, ‘உன் கோலை எடுத்து பார்வோனின் முன்னால் போடு’ என்று சொல்ல வேண்டும். அப்போது அது ஒரு பெரிய பாம்பாக மாறும்”+ என்றார். 10 உடனே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் தன்னுடைய கோலை பார்வோன் முன்னாலும் அவனுடைய ஊழியர்கள் முன்னாலும் போட்டார். அது ஒரு பெரிய பாம்பாக மாறியது. 11 அப்போது, பார்வோன் எகிப்திலிருந்த ஞானிகளையும் சூனியக்காரர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான்.+ அந்த மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள்.+ 12 அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோல்களைக் கீழே போட்டபோது அவை பெரிய பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கியது. 13 இருந்தாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே பார்வோனின் இதயம் இறுகிப்போனது.+ அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.
14 பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான்.+ என் ஜனங்களை அனுப்பாமல் வைத்திருக்கிறான். 15 காலையில் நீ அவனிடம் போ. அவன் நைல் நதிக்கு வருவான். அவனைப் பார்த்துப் பேசுவதற்காக நீ நதியோரத்தில் நின்றுகொள். முன்பு பாம்பாக மாறிய அந்தக் கோலையும் உன் கையில் எடுத்துக்கொள்.+ 16 நீ அவனிடம், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.+ வனாந்தரத்தில் அவரை வணங்குவதற்காக அவருடைய ஜனங்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், நீங்கள் இதுவரை அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படியவில்லை. 17 அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் யெகோவா என்று உனக்குக் காட்டுவேன்.+ என் கையிலுள்ள இந்தக் கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், அது இரத்தமாக மாறும். 18 நதியிலுள்ள மீன்கள் எல்லாம் செத்துவிடும், அதில் துர்நாற்றம் வீசும். எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது”’ என்று சொல்” என்றார்.
19 பின்பு யெகோவா மோசேயிடம், “எகிப்தின் நீர்நிலைகளாகிய ஆறுகள், கால்வாய்கள்,* குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் மேல் கோலை நீட்டும்படி நீ ஆரோனிடம் சொல்.+ அப்போது எகிப்து தேசமெங்கும் உள்ள தண்ணீர் இரத்தமாக மாறும். மரப் பாத்திரங்களிலும் கல் தொட்டிகளிலும் உள்ள தண்ணீர்கூட இரத்தமாக மாறும்” என்றார். 20 யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+ 21 நதியிலிருந்த மீன்கள் செத்துப்போயின.+ அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.+ எகிப்து தேசத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்தமாக இருந்தது.
22 ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மாயமந்திரத்தால் அதேபோல் செய்தார்கள்.+ அதனால் யெகோவா சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் கேட்கவே இல்லை.+ 23 பின்பு, பார்வோன் தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பிப் போனான். இந்தத் தடவை நடந்த அற்புதத்தையும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 24 எகிப்தியர்கள் எல்லாரும் நைல் நதியைச் சுற்றியிருந்த பகுதிகளில் மண்ணைத் தோண்டி, குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார்கள். ஏனென்றால், நைல் நதியின் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியவில்லை. 25 யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் ஆகியிருந்தன.
8 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போய் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.+ 2 அவர்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தால், நான் உன் தேசம் முழுக்க தவளைகளை வர வைத்துத் தண்டிப்பேன்.+ 3 நைல் நதி முழுக்க தவளைகளாக இருக்கும். அவை அங்கிருந்து வந்து உன் அரண்மனையிலும் உன் படுக்கை அறையிலும் உன் படுக்கையிலும் உன்னுடைய ஊழியர்களின் வீடுகளிலும் உன் ஜனங்கள்மேலும் அடுப்புகளிலும் மாவு பிசைகிற பாத்திரங்களிலும் ஏறிக்கொள்ளும்.+ 4 உன்மேலும் உன் ஜனங்கள்மேலும் உன் ஊழியர்கள் எல்லார்மேலும் அந்தத் தவளைகள் ஏறிக்கொள்ளும்”’” என்றார்.
5 பின்பு யெகோவா மோசேயிடம், “ஆறுகள்மேலும் கால்வாய்கள்மேலும் குளங்கள்மேலும் கோலை நீட்டி, எகிப்து தேசமெங்கும் தவளைகளை வர வைக்கும்படி நீ ஆரோனிடம் சொல்” என்றார். 6 உடனே, எகிப்தின் நீர்நிலைகள்மேல் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது, தவளைகள் நதியிலிருந்து வந்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன. 7 ஆனால், மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள். அவர்களும் எகிப்து தேசத்தில் தவளைகளை வர வைத்தார்கள்.+ 8 அதன்பின், மோசேயையும் ஆரோனையும் பார்வோன் வரவழைத்து, “நான் உங்களுடைய ஜனங்களை அனுப்பத் தயார். போய் யெகோவாவுக்குப் பலி செலுத்துங்கள். ஆனால், இந்தத் தவளைகள் என்னைவிட்டும் என் ஜனங்களைவிட்டும் போய்விட வேண்டுமென்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்”+ என்றான். 9 அப்போது மோசே பார்வோனிடம், “நான் எப்போது கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று நீங்களே சொல்லுங்கள். அதன்பின், உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் ஜனங்களையும் வீடுகளையும்விட்டுத் தவளைகள் போய்விடும், அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்” என்றார். 10 அதற்கு அவன், “நாளைக்கு வேண்டிக்கொள்” என்றான். உடனே மோசே, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன். எங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போல் வேறு யாரும் இல்லை என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 11 உங்களையும் உங்களுடைய வீடுகளையும் ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டுத் தவளைகள் போய்விடும். அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்”+ என்றார்.
12 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போனார்கள். தவளைகளை பார்வோனைவிட்டுப் போக வைக்கும்படி மோசே யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.+ 13 மோசே கேட்டபடியே யெகோவா செய்தார். வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின. 14 ஜனங்கள் அவற்றைக் குவியல் குவியல்களாகக் குவித்தார்கள், தேசமெங்கும் நாற்றம் அடித்தது. 15 தவளைகள் எல்லாம் ஒழிந்துவிட்டதை பார்வோன் பார்த்தபோது, யெகோவா சொல்லியிருந்தபடியே, அவன் இதயம் இன்னும் இறுகிப்போனது.+ அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.
16 அப்போது யெகோவா மோசேயிடம், “கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடிக்கும்படி ஆரோனிடம் சொல். அப்போது, எகிப்து தேசமெங்கும் இருக்கிற புழுதியெல்லாம் கொசுக்களாக* மாறும்” என்றார். 17 அப்படியே அவர்கள் செய்தார்கள். ஆரோன் தன் கையிலுள்ள கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடித்தார். அப்போது, கொசுக்கள் வந்து மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. எகிப்து தேசமெங்கும் இருந்த புழுதியெல்லாம் கொசுக்களாக மாறின.+ 18 அந்தக் கொசுக்கள் மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் கொசுக்களை வர வைக்கப் பார்த்தார்கள்,+ ஆனால் முடியவில்லை. 19 அப்போது அவர்கள் பார்வோனிடம், “கடவுளுடைய சக்தியால்* மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!”+ என்றார்கள். ஆனால், யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.
20 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ விடியற்காலையில் எழுந்து, பார்வோனைப் போய்ப் பார். அவன் நைல் நதிக்கு வருவான். நீ அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு. 21 நீ என்னுடைய ஜனங்களை அனுப்பாவிட்டால், உன்மேலும் உன் ஊழியர்கள்மேலும் ஜனங்கள்மேலும் வீடுகள்மேலும் கொடிய ஈக்களை* வர வைப்பேன். எகிப்தியர்களுடைய வீடுகளில் அந்த ஈக்கள் மொய்க்கும். அவர்கள் நிற்கிற தரைகளையும்கூட அவை மூடிவிடும். 22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+ 23 என்னுடைய ஜனங்களுக்கும் உன்னுடைய ஜனங்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டுவேன். நாளைக்கு இந்த அதிசயம் நடக்கும்”’ என்று சொல்” என்றார்.
24 யெகோவா அப்படியே செய்தார். பார்வோனுடைய அரண்மனையிலும் அவனுடைய ஊழியர்களின் வீடுகளிலும் எகிப்து தேசம் முழுவதிலும் கொடிய ஈக்கள் படையெடுத்து வந்தன.+ தேசமே அந்த ஈக்களால் பாழானது.+ 25 கடைசியில், மோசேயையும் ஆரோனையும் பார்வோன் வரவழைத்து, “இந்தத் தேசத்திலேயே உங்கள் கடவுளுக்குப் பலி செலுத்துங்கள்” என்றான். 26 ஆனால் மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல. ஏனென்றால், எங்களுடைய கடவுளான யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலி எகிப்தியர்களுக்கு அருவருப்பாக இருக்கும்.+ அவர்கள் அருவருப்பாக நினைக்கிற பலியை அவர்களுடைய கண் முன்னால் நாங்கள் செலுத்தினால், எங்கள்மேல் கல்லெறிய மாட்டார்களா? 27 எங்கள் கடவுளான யெகோவா சொன்னது போலவே, நாங்கள் மூன்று நாள் பயணம் செய்து வனாந்தரத்தில் அவருக்குப் பலி செலுத்துவோம்”+ என்றார்.
28 அப்போது பார்வோன், “சரி, உங்கள் கடவுளான யெகோவாவுக்கு வனாந்தரத்தில் பலி செலுத்த உங்களை அனுப்புகிறேன். ஆனால், ரொம்பத் தூரம் போய்விடாதீர்கள். எனக்காக உங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்றான். 29 அதற்கு மோசே, “நான் இப்போதே போய், யெகோவாவிடம் வேண்டிக்கொள்கிறேன். நாளைக்கு இந்தக் கொடிய ஈக்கள் பார்வோனாகிய உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் விட்டுப் போய்விடும். ஆனால், நீங்கள் மறுபடியும் எங்களை ஏமாற்றக் கூடாது.* யெகோவாவுக்குப் பலி கொடுப்பதற்காக ஜனங்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது”+ என்றார். 30 அதன்பின் மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், அந்தக் கொடிய ஈக்களைப் போக வைக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.+ 31 மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். பார்வோனையும் அவனுடைய ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டு அந்தக் கொடிய ஈக்கள் போய்விட்டன. ஒன்றுவிடாமல் எல்லாமே போய்விட்டன. 32 ஆனாலும், பார்வோனுடைய இதயம் மறுபடியும் இறுகிப்போனது, இஸ்ரவேல் ஜனங்களை அவன் அனுப்பவில்லை.
9 அதனால் யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போய் இப்படிச் சொல்: ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.+ 2 நீ அவர்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தால், 3 யெகோவாவாகிய நான் உன் கால்நடைகளைத் தாக்குவேன்.+ குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுமாடுகள் எல்லாவற்றையும் கொடிய கொள்ளைநோயால் தண்டிப்பேன்.+ 4 ஆனால், யெகோவாவாகிய நான் எகிப்தியர்களின் கால்நடைகளுக்குச் செய்வது போல இஸ்ரவேலர்களின் கால்நடைகளுக்குச் செய்ய மாட்டேன். இஸ்ரவேலர்களின் கால்நடைகள் எதுவுமே செத்துப்போகாது”’”+ என்றார். 5 யெகோவா அதற்கு ஒரு நாளையும் குறித்து, “யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் நாளைக்கு இதைச் செய்வேன்” என்றார்.
6 யெகோவா அடுத்த நாளே அதைச் செய்தார். எகிப்திலிருந்த எல்லா கால்நடைகளும் செத்துப்போயின.+ ஆனால், இஸ்ரவேலர்களுடைய கால்நடைகளில் ஒன்றுகூட சாகவில்லை. 7 பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பி விசாரித்தான். இஸ்ரவேலர்களின் கால்நடைகளில் எதுவுமே சாகவில்லை என்று தெரிந்த பின்பும், பிடிவாதமாகவே இருந்தான். ஜனங்களை அவன் அனுப்பவில்லை.+
8 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “சூளையிலுள்ள சாம்பலை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டு போங்கள். பார்வோனுடைய கண் முன்னால் மோசே அதைக் காற்றில் வீச வேண்டும். 9 எகிப்து தேசமெங்கும் அது தூசியாகப் பரவி, மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆகும்” என்றார்.
10 அதனால், சூளையிலிருந்த சாம்பலை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நின்றார்கள். மோசே அதைக் காற்றில் வீசியபோது, அது மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆனது. 11 மந்திரவாதிகள்மேலும் கொப்புளங்கள் வந்துவிட்டதால் மோசேக்குமுன் வந்து நிற்க அவர்களால் முடியவில்லை. எகிப்தியர்கள் எல்லார்மேலும் கொப்புளங்கள் வந்தன.+ 12 ஆனால், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். யெகோவா சொல்லியிருந்தபடியே அவர்கள் பேச்சை அவன் கேட்கவில்லை.+
13 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ விடியற்காலையில் எழுந்து, பார்வோனின் முன்னால் போய் நில். அவனிடம் இப்படிச் சொல்: ‘எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு. 14 இல்லாவிட்டால், உனக்கும்* உன் ஊழியர்களுக்கும் உன் ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன். அப்போது, இந்த முழு பூமியிலும் என்னைப் போல் யாருமில்லை என்பதை நீ தெரிந்துகொள்வாய்.+ 15 நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். 16 ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.+ 17 இன்னும் உன் அகம்பாவம் அடங்கவில்லை, என் ஜனங்களை அனுப்பாமல் வைத்திருக்கிறாய். 18 அதனால் நாளைக்கு இந்நேரத்தில், எகிப்தின் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் ஆலங்கட்டி* மழையைப் பெய்ய வைப்பேன். 19 நீ ஆள் அனுப்பி, வெளியில் இருக்கிற கால்நடைகளையும் ஆட்களையும் மற்ற எல்லாவற்றையும் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வரச் சொல். கூரைக்குள் இல்லாமல் வெளியில் இருக்கும் எல்லா மனுஷர்களும் மிருகங்களும் ஆலங்கட்டி மழைக்குப் பலியாகப்போவது உறுதி”’” என்றார்.
20 அப்போது, பார்வோனின் ஊழியர்களில் யாரெல்லாம் யெகோவாவுக்குப் பயந்தார்களோ அவர்கள் எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வேகவேகமாகக் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 21 ஆனால், யெகோவாவின் வார்த்தையைக் காதில் போட்டுக்கொள்ளாத எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டார்கள்.
22 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசமெங்கும் ஆலங்கட்டி மழை பெய்யும்.+ எகிப்து தேசத்திலுள்ள மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயிர்பச்சைகள்மேலும் ஆலங்கட்டிகள் விழும்”+ என்றார். 23 அப்படியே, மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கோலை நீட்டினார். உடனே யெகோவா இடி இடிக்கும்படியும், ஆலங்கட்டிகள் விழும்படியும், தீப்பிழம்புகள்* தாக்கும்படியும் செய்தார். எகிப்து தேசத்தின் மேல் ஆலங்கட்டிகள் விழுந்துகொண்டே இருக்கும்படி யெகோவா செய்தார். 24 ஆலங்கட்டி மழை பெய்தபோது இடையிடையே தீப்பிழம்புகள் பளிச்சிட்டன. அந்த மழை மிகவும் பலமாகக் கொட்டியது. எகிப்தின் சரித்திரத்தில் அப்படிப்பட்ட மழை பெய்ததே இல்லை.+ 25 எகிப்து தேசத்தில், மனிதர்கள்முதல் மிருகங்கள்வரை வெளியில் இருந்த அத்தனை உயிர்களுமே ஆலங்கட்டி மழைக்குப் பலியாகிவிட்டன. பயிர்பச்சைகள் நாசமாயின, எல்லா மரங்களும் முறிந்து விழுந்தன.+ 26 இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவே இல்லை.+
27 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, “இந்தத் தடவை நான் பாவம் செய்துவிட்டேன். யெகோவா நீதியுள்ளவர், நானும் என்னுடைய ஜனங்களும்தான் தப்பு செய்துவிட்டோம். 28 இடிமுழக்கத்தையும் ஆலங்கட்டி மழையையும் நிறுத்தச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். அதன்பின் நான் உங்களை அனுப்பிவிடுவேன், நீங்கள் இங்கே இருக்க வேண்டியதில்லை” என்றான். 29 அதற்கு மோசே, “நான் இந்த நகரத்தைவிட்டு வெளியே போனவுடன் என் கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். அதன்பின் இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிடும். அப்போது, இந்தப் பூமி யெகோவாவுக்குச் சொந்தம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 30 ஆனால், நீங்களும் உங்களுடைய ஊழியர்களும் அப்போதுகூட யெகோவாவுக்குப் பயப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார்.
31 அறுவடைக்குத் தயாராக இருந்த பார்லி பயிரும் அரும்புவிட்டிருந்த ஆளிவிதைச் செடியும்* ஆலங்கட்டி மழையில் நாசமாயின. 32 கோதுமையும் மாக்கோதுமையும்* கொஞ்சக் காலம் கழித்துதான் கதிர்விடும் என்பதால், அவை இரண்டும் சேதமாகவில்லை. 33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்துக்கு வெளியே போய்த் தன்னுடைய கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. அதன்பின் மழை பெய்யவில்லை.+ 34 மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் பார்த்தபோது, அவனும் அவனுடைய ஊழியர்களும் மறுபடியும் பாவம் செய்தார்கள். அவர்களுடைய இதயம் இறுகிப்போனது.+ 35 யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. இஸ்ரவேலர்களை அவன் அனுப்பவில்லை.+
10 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போ. அவனும் அவனுடைய ஊழியர்களும் பிடிவாதமாக இருக்கும்படி நான் விட்டுவிட்டேன்.+ என்னுடைய அற்புதங்களை அவன் கண் முன்னால் செய்து காட்டுவதற்காகவும்,+ 2 எகிப்தை நான் எந்தளவுக்குக் கடுமையாகத் தண்டித்தேன் என்பதையும், அங்கே என்னென்ன அற்புதங்கள் செய்தேன் என்பதையும் உங்கள் மகன்களுக்கும் பேரன்களுக்கும் நீங்கள் சொல்வதற்காகவும் அப்படிச் செய்தேன்.+ நான் யெகோவா என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
3 அதனால் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நீ எனக்கு அடங்காமல் இருப்பாய்?+ என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு. 4 அவர்களை அனுப்பாமல் நீ பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தால், நாளைக்கு உன்னுடைய தேசத்துக்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். 5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+ 6 உன் வீடுகளும் உன் ஊழியர்கள் எல்லாருடைய வீடுகளும் எகிப்திலுள்ள எல்லாருடைய வீடுகளும் அவற்றால் நிரம்பும். உங்களுடைய அப்பாக்களும் தாத்தாக்களும் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை இந்தத் தேசத்தில் பார்த்திருக்கவே மாட்டார்கள்’”+ என்றார்கள். பின்பு, மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
7 அதன்பின் பார்வோனிடம் அவனுடைய ஊழியர்கள், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த மனுஷன் நம்மை மிரட்டிக்கொண்டே இருப்பான்? அவர்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குவதற்காக அவர்களை அனுப்பிவிடுங்கள். ஏற்கெனவே எகிப்து தேசம் நாசமாகிவிட்டது. இது இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்றார்கள். 8 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் மறுபடியும் கூப்பிட்டு, “போய் உங்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குங்கள். ஆனால், யாரெல்லாம் போகப்போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என்றான். 9 அதற்கு மோசே, “எங்களுடைய கடவுளான யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட+ நாங்கள் சிறியவர்களையும் பெரியவர்களையும் மகன்களையும் மகள்களையும் ஆடுகளையும் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்”+ என்றார்கள். 10 அப்போது அவன், “நான் மட்டும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அனுப்பிவிட்டேன் என்றால், யெகோவா உங்களோடு இருக்கிறார் என்று அர்த்தம்!+ நீங்கள் கண்டிப்பாக ஏதோ சூழ்ச்சி செய்கிறீர்கள். 11 எல்லாரையும் நான் அனுப்ப மாட்டேன்! யெகோவாவை வணங்குவதற்கு ஆண்களை மட்டும்தான் அனுப்புவேன். நீங்களும் அப்படித்தான் என்னிடம் கேட்டீர்கள்” என்று சொன்னான். உடனே அவர்கள் பார்வோன் முன்னாலிருந்து துரத்தப்பட்டார்கள்.
12 அப்போது யெகோவா மோசேயிடம், “எகிப்து தேசத்தின் மேல் உன் கையை நீட்டு. தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரட்டும். ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்க்கட்டும்” என்றார். 13 உடனே மோசே எகிப்து தேசத்தின் மேல் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது யெகோவா, கிழக்குக் காற்று வீசும்படி செய்தார். அன்று பகலிலும் ராத்திரியிலும் காற்று வீசிக்கொண்டே இருந்தது. விடியற்காலையில், அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு வந்தது. 14 அந்த வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தையே மூடின. அவை பயங்கரமாகப் படையெடுத்து வந்து+ மூலைமுடுக்கெல்லாம் பரவின.+ அவ்வளவு ஏராளமான வெட்டுக்கிளிகள் அதற்குமுன் வந்ததே இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை. 15 அவை அந்தத் தேசத்தின் நிலப்பரப்பையே மூடிவிட்டன. அவற்றால் தேசமே இருண்டுபோனது. ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும், மரங்களிலிருந்த பழங்கள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்த்தன. எகிப்து தேசமெங்கும் இருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அவை மொட்டையாக்கிவிட்டன.
16 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக வரவழைத்து, “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். 17 அதனால், இந்த ஒரு தடவை மட்டும் என் பாவத்தை மன்னித்துவிட்டு, உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் தயவுசெய்து வேண்டிக்கொள்ளுங்கள். இந்தப் பயங்கரமான தண்டனையை எப்படியாவது நீக்கிவிடச் சொல்லுங்கள்” என்றான். 18 அதனால், அவர்* பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+ 19 உடனே யெகோவா, கிழக்குக் காற்றை மிகவும் பலமான மேற்குக் காற்றாக மாற்றினார். அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலில் தள்ளியது. எகிப்து தேசத்தில் ஒரு வெட்டுக்கிளிகூட மிஞ்சவில்லை. 20 ஆனாலும், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார்,+ இஸ்ரவேலர்களை அவன் அனுப்பவில்லை.
21 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசம் இருட்டாகிவிடும். அந்த இருட்டு படுபயங்கரமாக இருக்கும்” என்றார். 22 உடனடியாக மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டினார். அப்போது, எகிப்து தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கும்மிருட்டாக ஆனது.+ 23 மூன்று நாட்களுக்கு யாராலும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியவில்லை, இருந்த இடத்தைவிட்டு நகரவும் முடியவில்லை. ஆனால், இஸ்ரவேலர்கள் குடியிருந்த பகுதிகளில் வெளிச்சம் இருந்தது.+ 24 அதன்பின் பார்வோன் மோசேயை வரவழைத்து, “போய் யெகோவாவை வணங்குங்கள்.+ உங்கள் ஆடுமாடுகளை மட்டும் இங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்கள்” என்றான். 25 ஆனால் மோசே, “எங்கள் மிருகங்களையும் கொண்டுபோக நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவற்றை எங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ 26 அதனால் எங்கள் கால்நடைகளையும் நாங்கள் கொண்டுபோவோம். ஒரு மிருகத்தைக்கூட விட்டுவிட்டுப் போக மாட்டோம். ஏனென்றால், எங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கும்போது சில மிருகங்களைப் பலி கொடுப்போம். யெகோவாவுக்கு எதைப் பலி கொடுப்போம், எதைப் பலி கொடுக்க மாட்டோம் என்று அங்கு போகும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார். 27 அப்போது, பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவர்களை அனுப்ப அவன் ஒத்துக்கொள்ளவில்லை.+ 28 பார்வோன் மோசேயிடம், “என்னுடைய கண் முன்னால் நிற்காதே! இனி என் முகத்திலேயே முழிக்காதே, மீறினால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்” என்றான். 29 அதற்கு மோசே, “சரி, நீங்கள் சொன்னபடி இனி நான் உங்களுடைய முகத்தில் முழிக்கப்போவதில்லை” என்றார்.
11 பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோனுக்கும் எகிப்துக்கும் இன்னுமொரு தண்டனை கொடுப்பேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவான்.+ சொல்லப்போனால், உங்களை இங்கிருந்து துரத்தியே விடுவான்.+ 2 அதனால், எல்லா ஆண்களும் பெண்களும் மற்றவர்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் என்று என்னுடைய ஜனங்களிடம் போய்ச் சொல்”+ என்றார். 3 எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்படி யெகோவா செய்தார். அதுமட்டுமல்ல, எகிப்தில் மோசேயின் மதிப்புக் கூடியிருந்தது. பார்வோனின் ஊழியர்களும் ஜனங்களும் அவரை மிக உயர்வாக நினைத்தார்கள்.
4 மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்று நடுராத்திரியில் நான் எகிப்து தேசத்துக்கு வருவேன்.+ 5 அப்போது, எகிப்து தேசத்திலுள்ள மூத்த மகன்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற பார்வோனின் மூத்த மகன்முதல் மாவு அரைக்கிற* அடிமைப் பெண்ணின் மூத்த மகன்வரை எல்லாரும் செத்துப்போவார்கள். மிருகங்களுடைய முதல் குட்டிகளும் செத்துப்போகும்.+ 6 எகிப்து தேசமெங்கும் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்கும். அப்படிப்பட்ட சத்தம் அதற்கு முன்பும் கேட்டிருக்காது, இனிமேலும் கேட்காது.+ 7 இஸ்ரவேல் ஜனங்களையோ அவர்களுடைய மிருகங்களையோ பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது. அப்போது, யெகோவா எகிப்தியர்களை எப்படி நடத்துகிறார், இஸ்ரவேலர்களை எப்படி நடத்துகிறார் என்று நீ தெரிந்துகொள்வாய்’”+ என்றார். 8 அதோடு மோசே அவரிடம், “உங்களுடைய ஊழியர்கள் எல்லாரும் கண்டிப்பாக என் முன்னால் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து, ‘நீங்களும் உங்களுடைய ஜனங்கள் எல்லாரும் தயவுசெய்து போய்விடுங்கள்’ என்று சொல்வார்கள்,+ அப்போது நான் போவேன்” என்று சொன்னார். பிறகு, கடும் கோபத்தோடு பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
9 யெகோவா மோசேயிடம், “நீங்கள் இரண்டு பேரும் சொல்வதை பார்வோன் கேட்க மாட்டான்.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் இன்னும் பல அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கும்”+ என்றார். 10 மோசேயும் ஆரோனும் பார்வோனின் முன்னால் எல்லா அற்புதங்களையும் செய்தார்கள்.+ ஆனால், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பவில்லை.+
12 பின்பு யெகோவா எகிப்து தேசத்திலிருந்த மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “இந்த மாதம் உங்களுக்கு வருஷத்தின் முதல் மாதமாக இருக்கும்.+ 3 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் இதைச் சொல்லுங்கள்: ‘இந்த மாதம் 10-ஆம் நாளில் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்காகவும் அவரவர் வீட்டுக்காகவும் ஒரு ஆட்டைத்+ தேர்ந்தெடுக்க வேண்டும். 4 முழு ஆட்டையும் சாப்பிட முடியாதளவுக்கு அந்தக் குடும்பம் சின்னதாக இருந்தால், பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து அதைச் சாப்பிட வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்து அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். 5 அந்த ஆடு எந்தக் குறையும் இல்லாத+ ஒருவயது கடாக் குட்டியாக இருக்க வேண்டும். அது செம்மறியாட்டுக் கடாக் குட்டியாகவோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியாகவோ இருக்கலாம். 6 இந்த மாதம் 14-ஆம் நாள்வரை அதை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.+ அன்றைக்குச் சாயங்காலம், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் தங்கள் ஆட்டை வெட்ட வேண்டும்.+ 7 அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, எந்த வீட்டில் சாப்பிடுகிறார்களோ அந்த வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களிலும் அவற்றின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.+
8 அதன் இறைச்சியை அன்றைக்கு ராத்திரி சாப்பிட வேண்டும்.+ அதை நெருப்பில் வாட்டி, புளிப்பில்லாத ரொட்டியோடும்+ கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+ 9 இறைச்சியைப் பச்சையாகவோ தண்ணீரில் வேக வைத்தோ சாப்பிடக் கூடாது. அதன் தலை, கால்கள், உள்ளுறுப்புகள் எல்லாவற்றையும் நெருப்பில் வாட்டித்தான் சாப்பிட வேண்டும். 10 இறைச்சி முழுவதையும் அந்த ராத்திரிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதில் ஏதாவது காலைவரை மீதியாக இருந்தால், தீயில் சுட்டெரிக்க வேண்டும்.+ 11 இடுப்பில் வார் கட்டிக்கொண்டும், கால்களில் செருப்பு போட்டுக்கொண்டும், கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டும். அது யெகோவாவின் பஸ்கா.* 12 ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா. 13 நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் நீங்கள் இருக்கிற வீடுகளுக்கு அடையாளமாக இருக்கும். நான் எகிப்து தேசத்தைத் தாக்கும்போது அந்த இரத்தத்தைப் பார்த்து உங்களைக் கடந்துபோய்விடுவேன்; நான் கொடுக்கும் தண்டனையால் நீங்கள் அழிந்துபோக மாட்டீர்கள்.+
14 அந்த நாளை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாய் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். என்றென்றும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 15 ஏழு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ முதல் நாளிலிருந்து ஏழாவது நாள்வரை, புளிப்பு சேர்க்கப்பட்டதை யாராவது சாப்பிட்டால் அவன் கொல்லப்படுவான். அதனால் முதல் நாளில், உங்கள் வீடுகளில் இருக்கிற புளித்த மாவைத் தூக்கியெறிந்துவிட வேண்டும். 16 முதல் நாளிலும் ஏழாவது நாளிலும் பரிசுத்த மாநாட்டுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். அந்த நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதை மட்டும் நீங்கள் செய்துகொள்ளலாம்.
17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், பெரிய படைபோல் இருக்கிற உங்களை அந்த நாளில்தான் எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வருவேன். தலைமுறை தலைமுறையாக நீங்கள் அந்த நாளைக் கொண்டாட வேண்டும். என்றென்றுமே இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 18 முதலாம் மாதத்தின் 14-ஆம் நாள் சாயங்காலத்திலிருந்து 21-ஆம் நாள் சாயங்காலம்வரை நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ 19 ஏழு நாட்களுக்கு உங்கள் வீடுகளில் புளித்த மாவு இருக்கக் கூடாது. யாராவது புளிப்பு சேர்க்கப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, உள்ளூர்க்காரனாக இருந்தாலும் சரி,+ கொல்லப்பட வேண்டும்.+ 20 புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. உங்களுடைய வீடுகளில் புளிப்பில்லாத ரொட்டிகளைத்தான் சாப்பிட வேண்டும்’” என்றார்.
21 உடனடியாக, மோசே இஸ்ரவேலின் பெரியோர்கள்*+ எல்லாரையும் கூப்பிட்டு, “உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை* தேர்ந்தெடுத்து, அதை வெட்டி, பஸ்கா பலி செலுத்துங்கள். 22 பின்பு, பாத்திரத்திலுள்ள இரத்தத்தில் ஒரு மருவுக்கொத்தை முக்கியெடுத்து, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் அதைத் தெளியுங்கள். காலைவரை யாருமே வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது. 23 எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக யெகோவா வரும்போது, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் இரத்தத்தைப் பார்த்தால், அந்த வீட்டைவிட்டுக் கடந்துபோய்விடுவார். உங்களுடைய வீடுகளில் சாவு விழுவதற்கு யெகோவா விடமாட்டார்.+
24 நீங்களும் உங்களுடைய மகன்களும் இந்த நிரந்தரக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.+ 25 யெகோவா சொன்னபடியே, அவர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போய்ச் சேரும்போது இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ 26 ‘இந்தப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?’ என்று உங்கள் மகன்கள் கேட்டால்,+ 27 ‘யெகோவாவுக்கு பஸ்கா பலி செலுத்துவதற்காகக் கொண்டாடுகிறோம். ஏனென்றால், அவர் எகிப்தியர்களைத் தண்டித்தபோது எங்களை மட்டும் ஒன்றும் செய்யாமல் எங்கள் வீடுகளைக் கடந்துபோய்விட்டார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
அப்போது, ஜனங்கள்* சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். 28 மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.+ அவர்கள் அப்படியே செய்தார்கள்.
29 நடுராத்திரியில், எகிப்து தேசத்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் யெகோவா கொன்றுபோட்டார்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த பார்வோனுடைய மூத்த மகன்முதல் சிறைச்சாலையில் இருந்த கைதியின் மூத்த மகன்வரை எல்லாரையும் கொன்றுபோட்டார். மிருகங்களுடைய முதல் குட்டிகளையும் கொன்றுபோட்டார்.+ 30 அன்றைக்கு ராத்திரி பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் எகிப்தியர்கள் எல்லாரும் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டார்கள். எகிப்தில் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்டது. ஏனென்றால், சாவு விழாத வீடு ஒன்றுகூட இருக்கவில்லை.+ 31 அந்த ராத்திரியே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டு,+ “புறப்பட்டுப் போங்கள். நீங்களும் மற்ற இஸ்ரவேலர்களும் என்னுடைய ஜனங்களின் நடுவிலிருந்து போய்விடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, போய் யெகோவாவை வணங்குங்கள்.+ 32 நீங்கள் சொன்னபடியே, உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள்.+ ஆனால், என்னை ஆசீர்வதிக்கும்படி உங்கள் கடவுளிடம் கேளுங்கள்” என்றான்.
33 தேசத்தைவிட்டு உடனடியாகப் போகும்படி இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் அவசரப்படுத்தினார்கள்.+ “நீங்கள் இங்கேயே இருந்தால் நாங்கள் எல்லாரும் செத்துவிடுவோம்!” என்று சொன்னார்கள்.+ 34 அதனால் இஸ்ரவேல் ஜனங்கள், பிசைந்த மாவைப் புளிக்க வைப்பதற்கு முன்பே அதைப் பாத்திரத்தோடு எடுத்து, தங்களுடைய சால்வையில் கட்டி, தோள்மேல் வைத்துக்கொண்டு போனார்கள். 35 மோசே சொன்னபடியே, எகிப்தியர்களிடமிருந்து தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.+ 36 அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி யெகோவா செய்தார். இப்படி அவர்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டார்கள்.*+
37 பின்பு, இஸ்ரவேலர்கள் ராமசேசிலிருந்து+ சுக்கோத்துக்குப்+ புறப்பட்டுப் போனார்கள். அவர்களில், பிள்ளைகள் தவிர ஆண்கள்* சுமார் ஆறு லட்சம் பேர் இருந்தார்கள்.+ 38 பலதரப்பட்ட ஜனங்களில்*+ ஏராளமானோரும் அவர்களோடு போனார்கள். எல்லாரும் ஏகப்பட்ட ஆடுமாடுகளையும் மற்ற கால்நடைகளையும் கொண்டுபோனார்கள். 39 அவர்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்திருந்த மாவை எடுத்து புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளைச் சுட்டார்கள். அவர்கள் அங்கிருந்து திடீரென்று துரத்தப்பட்டதால், மாவைப் புளிக்க வைக்கவோ மற்ற உணவுகளை எடுத்து வரவோ அவர்களால் முடியவில்லை.+
40 எகிப்திலிருந்து+ வந்த இஸ்ரவேலர்கள் மொத்தம் 430 வருஷங்கள் அன்னியர்களாக வாழ்ந்திருந்தார்கள்.+ 41 அந்த 430 வருஷங்கள் முடிந்த நாளில்தான், யெகோவாவின் ஜனங்கள் எல்லாரும் எகிப்து தேசத்தைவிட்டுப் படைபோல் திரண்டு போனார்கள். 42 யெகோவா அவர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்ததற்காக அவர்கள் அந்த ராத்திரியைக் கொண்டாட வேண்டியிருந்தது. யெகோவாவுக்காக இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் தலைமுறை தலைமுறையாய் அதைக் கொண்டாட வேண்டியிருந்தது.+
43 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “பஸ்கா பண்டிகைக்கான சட்டதிட்டம் இதுதான்: வேறு தேசத்து ஜனங்கள் யாரும் பஸ்கா உணவைச் சாப்பிடக் கூடாது.+ 44 விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரு அடிமை உங்களோடு இருந்தால், நீங்கள் அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ பின்புதான், அவன் அதைச் சாப்பிட வேண்டும். 45 உங்களோடு குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் உங்களிடம் கூலிக்கு வேலை செய்கிறவர்களும் அதைச் சாப்பிடக் கூடாது. 46 பஸ்கா உணவை ஒரே வீட்டில் சாப்பிட வேண்டும். இறைச்சியில் எதையும் வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக் கூடாது. அதன் ஒரு எலும்பைக்கூட முறிக்கக் கூடாது.+ 47 இஸ்ரவேலர்கள் எல்லாரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்துக்காரன் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவனுடைய வீட்டு ஆண்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். பின்பு, அவன் உங்களோடு சேர்ந்து அதைக் கொண்டாடலாம். அப்போது, அவன் இஸ்ரவேல் குடிமகனைப் போலவே ஆகிவிடுவான். ஆனால், விருத்தசேதனம் செய்யப்படாத யாரும் அதைச் சாப்பிடக் கூடாது.+ 49 இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் ஒரே சட்டம்தான்” என்றார்.+
50 அதனால், மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா சொன்னபடியே இஸ்ரவேலர்கள் எல்லாரும் செய்தார்கள். அவர்கள் அப்படியே செய்தார்கள். 51 அந்த நாளில், இஸ்ரவேலர்கள் எல்லாரையும்* எகிப்து தேசத்திலிருந்து யெகோவா வெளியே கொண்டுவந்தார்.
13 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ அதனால் அந்த எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்குட்டிகளையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
3 அதன்பின் மோசே ஜனங்களிடம், “எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து* விடுதலையான இந்த நாளை நீங்கள் நினைவில் வையுங்கள்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.+ அதனால், புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் சாப்பிடக் கூடாது. 4 ஆபிப்* மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறினீர்கள்.+ 5 யெகோவா உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நான் உங்களைக் கொண்டுபோன பின்பு, இதே மாதத்தில் நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற அந்தத் தேசத்துக்குப் போனதும் நீங்கள் தவறாமல் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 6 ஏழு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும்.+ ஏழாம் நாளில் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 7 ஏழு நாட்களும் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும்.+ புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் வைத்திருக்கக் கூடாது.+ புளித்த மாவு எதுவுமே உங்கள் எல்லைகளுக்குள் இருக்கக் கூடாது. 8 அந்த நாளில் உங்கள் மகன்களிடம், ‘யெகோவா எங்களை எகிப்திலிருந்து எப்படி விடுதலை செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத்தான் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்’ என்று சொல்லுங்கள்.+ 9 யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்திலிருந்து விடுதலை செய்ததை இந்தப் பண்டிகை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். இது உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும் நெற்றியில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் இருக்கும்.+ அதனால் யெகோவாவின் சட்டத்தைப் பற்றி எப்போதும் பேசுவீர்கள். 10 ஒவ்வொரு வருஷமும் குறித்த காலத்தில் நீங்கள் இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.+
11 கானானியர்களின் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா வாக்குறுதி தந்திருக்கிறார்.+ அங்கே அவர் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, 12 எல்லாரும் தங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டியையும் அர்ப்பணிக்க வேண்டும். எல்லா ஆண் குழந்தைகளும் ஆண்குட்டிகளும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ 13 கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+
14 ‘எதற்காக இப்படிச் செய்கிறோம்?’ என்று உங்கள் மகன்கள் கேட்டால், ‘நாங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது யெகோவா தன்னுடைய கைபலத்தால் எங்களை விடுதலை செய்தார்.+ 15 பார்வோன் எங்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தபோது,+ எகிப்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவா கொன்றுபோட்டார்;+ அதனால்தான், மிருகங்களுக்குப் பிறந்த முதல் ஆண்குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குப் பலி கொடுத்து, என்னுடைய மூத்த மகனை மீட்கிறேன்’ என்று சொல்லுங்கள். 16 இது உங்கள் கையிலும் நெற்றியிலும் ஒரு அடையாளம்போல் இருக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய கைபலத்தால் எகிப்திலிருந்து நம்மை விடுதலை செய்தார்” என்றார்.
17 இஸ்ரவேலர்களை பார்வோன் அனுப்பிய பின்பு, கடவுள் அவர்களை பெலிஸ்தியர்களுடைய தேசத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போகவில்லை. “அந்த வழியாகப் போனால் அங்கே இருக்கிறவர்கள் இவர்களோடு போர் செய்யலாம். உடனே இவர்கள் மனம் மாறி எகிப்துக்கே திரும்பிப் போய்விடலாம்” என்று கடவுள் சொன்னார். அதனால்தான், அது குறுக்கு வழியாக இருந்தாலும் அதன் வழியாகக் கூட்டிக்கொண்டு போகாமல், 18 செங்கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற வனாந்தரத்தின் வழியாகச் சுற்றிப் போக வைத்தார்.+ எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் ஒரு படையைப் போல அணிவகுத்துப் போனார்கள். 19 யோசேப்பின் எலும்புகளையும் மோசே எடுத்துக்கொண்டு போனார். ஏனென்றால் யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடம், “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். அதனால், நீங்கள் இங்கிருந்து போகும்போது என் எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி உறுதிமொழி வாங்கியிருந்தார்.+ 20 அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு வனாந்தரத்தின் எல்லையில் இருந்த ஈத்தாமில் கூடாரம் போட்டுத் தங்கினார்கள்.
21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+ 22 பகலில் மேகத் தூணும் ராத்திரியில் நெருப்புத் தூணும் ஜனங்களைவிட்டு விலகவே இல்லை.+
14 அப்போது யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்கள் திரும்பிப் போய், மிக்தோலுக்கும் கடலுக்கும்* இடையில், பாகால்-செபோனைப் பார்த்தபடி இருக்கிற பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால் முகாம்போட வேண்டுமென்று சொல்.+ அதற்கு எதிரில் இருக்கிற கடற்கரையிலே நீங்கள் முகாம்போட வேண்டும். 3 அப்போது பார்வோன், ‘இஸ்ரவேலர்கள் வழி தெரியாமல் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் வனாந்தரத்தில் மாட்டிக்கொண்டார்கள்’ என்று சொல்வான். 4 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
5 இஸ்ரவேலர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற செய்தி எகிப்தின் ராஜாவான பார்வோனுக்குச் சொல்லப்பட்டபோது, “ஏன்தான் இப்படிச் செய்தோமோ!+ நமக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை ஏன்தான் விடுதலை செய்தோமோ!” என்று அவனும் அவனுடைய ஊழியர்களும் நொந்துகொண்டார்கள். 6 அதனால் பார்வோன் தன்னுடைய போர் ரதங்களைத் தயார்படுத்தி, தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டான்.+ 7 விசேஷமான 600 ரதங்களோடும், எகிப்திலிருந்த மற்ற எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனான். அவை ஒவ்வொன்றிலும் வீரர்கள் இருந்தார்கள். 8 இப்படி, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனான். ஆனால், இஸ்ரவேலர்கள் வெற்றி நடைபோட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.+ 9 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லா ரதங்களோடும், குதிரை வீரர்களோடும், மற்ற எல்லா படைகளோடும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்.+ பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால், பாகால்-செபோனுக்கு எதிரில் இருந்த கடற்கரையில் முகாம்போட்டிருந்த இஸ்ரவேலர்களை அவர்கள் நெருங்கினார்கள்.
10 பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+ 11 பின்பு அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் கல்லறை இல்லையென்றா இந்த வனாந்தரத்தில் சாவதற்கு எங்களை இழுத்துக்கொண்டு வந்தீர்கள்?+ எதற்காக எங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? 12 எகிப்தில் இருக்கும்போதே நாங்கள் உங்களிடம், ‘எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எகிப்தியர்களுக்கே வேலை செய்கிறோம்’ என்று சொல்லவில்லையா? இந்த வனாந்தரத்தில் சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலை செய்வதே மேல்” என்றார்கள்.+ 13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+ 14 உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார்.
15 அப்போது யெகோவா மோசேயிடம், “ஏன் என்னிடம் கெஞ்சுகிறாய்? இஸ்ரவேலர்களை இங்கிருந்து புறப்படச் சொல். 16 நீ உன்னுடைய கோலை எடுத்து கடலுக்கு நேராக நீட்டு. அப்போது கடல் இரண்டாகப் பிளக்கும், இஸ்ரவேலர்கள் கடலின் நடுவில் காய்ந்த தரையிலே நடந்து போவார்கள். 17 எகிப்தியர்களுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன். அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அப்போது, பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மற்ற எல்லா படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ 18 பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்க்கும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார்.
19 பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+ 20 அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை.
21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+ 22 அந்தக் காய்ந்த தரை வழியாகக் கடலின் நடுவிலே இஸ்ரவேலர்கள் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+ 23 எகிப்தியர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனுடைய எல்லா குதிரைகளும் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் அவர்களுக்குப் பின்னாலேயே கடலுக்குள் வர ஆரம்பித்தன.+ 24 மூன்றாம் ஜாமத்தில்* மேகமும் நெருப்புமான தூணிலிருந்து+ யெகோவா எகிப்தியர்களைப் பார்த்து, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கினார். 25 அவர்களுடைய ரதங்களின் சக்கரங்களை அவர் கழன்றுபோக வைத்ததால், ரதங்களை ஓட்ட அவர்கள் படாத பாடுபட்டார்கள். அதனால், “இஸ்ரவேலர்களோடு நமக்கு எந்தச் சம்பந்தமும் வேண்டாம், அவர்களைவிட்டு ஓடிப்போய்விடலாம். அவர்களுக்காக யெகோவா நம்மை எதிர்த்துப் போர் செய்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்கள்.
26 பின்பு யெகோவா மோசேயிடம், “கடலுக்கு நேராக உன் கையை நீட்டு. தண்ணீர் பாய்ந்து வந்து எகிப்தியர்களையும் அவர்களுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மூழ்கடிக்கட்டும்” என்றார். 27 உடனே மோசே கடலுக்கு நேராகத் தன் கையை நீட்டினார். பொழுது விடிய ஆரம்பித்தபோது, கடல்நீர் பழைய நிலைக்குத் திரும்பியது. எகிப்தியர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக முயற்சி செய்தார்கள். ஆனால், யெகோவா அவர்களைக் கடலுக்குள் மூழ்கடித்தார்.+ 28 இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+
29 ஆனால், இஸ்ரவேலர்கள் கடலின் நடுவில் காய்ந்த தரையில் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+ 30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள். 31 எகிப்தியர்களுக்கு எதிராக யெகோவா காட்டிய மகா வல்லமையையும் பார்த்தார்கள். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாமேலும் அவருடைய ஊழியரான மோசேமேலும் விசுவாசம் வைத்தார்கள்.+
15 அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+
“நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்,
அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+
குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+
2 அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை.
அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+
அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+
4 பார்வோனின் படைகளையும் ரதங்களையும் அவர் கடலில் தள்ளினார்.+
அவனுடைய வீராதிவீரர்கள் செங்கடலில் மூழ்கினார்கள்.+
7 உங்களை எதிர்க்கிறவர்களை மகா கம்பீரத்தோடு வீழ்த்துவீர்கள்.+
உங்களுடைய கோபத் தீயினால் அவர்களை வைக்கோல் போலப் பொசுக்குவீர்கள்.
8 உங்களுடைய மூச்சுக்காற்றினால் தண்ணீர் குவிந்து நின்றது.
மாபெரும் கடல் மதில்போல் உயர்ந்து நின்றது.
புரண்டு ஓடிய தண்ணீர் கடலில் உறைந்துபோனது.
9 ‘அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப்பிடிப்பேன்!
கைப்பற்றிய பொருள்களை ஆசைதீர பங்குபோடுவேன்!
வாளை எடுத்து, அவர்களை வெட்டிச் சாய்ப்பேன்!’+ என்றெல்லாம் எதிரி சொன்னான்.
10 நீங்கள் உங்களுடைய மூச்சுக்காற்றை ஊதினீர்கள்.
கடல் அவர்களை மூழ்கடித்தது.+
அவர்கள் ஆழ்கடலில் ஈயம்போல் மூழ்கிப்போனார்கள்.
11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+
பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?
நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+
பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.
12 நீங்கள் வலது கையை நீட்டினீர்கள், அவர்கள் பூமிக்குள் புதைந்துபோனார்கள்.+
13 உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள்.+
மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்.
உங்கள் பலத்தால் உங்களுடைய பரிசுத்தமான இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவீர்கள்.
கானானில் வாழ்கிறவர்கள் கலக்கமடைவார்கள்.+
16 பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+
உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.
யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+
அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும்.
17 யெகோவாவே, உங்களுடைய ஜனத்தைக் கூட்டிக்கொண்டு வருவீர்கள்.
யெகோவாவே, உங்களுக்குச் சொந்தமான மலையிலே,
நீங்கள் தங்குவதற்குத் தயார் செய்த இடத்திலே,
உங்கள் கைகளால் உண்டாக்கிய புனித இடத்திலே,
18 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+
19 பார்வோனின் குதிரைகள் அவனுடைய ரதங்களோடும் வீரர்களோடும் கடலின் நடுவில் பாய்ந்தன.+
திரண்டுநின்ற தண்ணீரை யெகோவா அவர்கள்மேல் புரண்டுவர வைத்தார்.+
ஆனால், இஸ்ரவேலர்களைக் கடலின் நடுவில் காய்ந்த தரையில் நடக்க வைத்தார்.”+
20 ஆரோனின் சகோதரியும் தீர்க்கதரிசனம் சொல்கிறவளுமான மிரியாம் கஞ்சிராவைக் கையில் எடுத்துக்கொண்டாள். மற்ற எல்லா பெண்களும்கூட கஞ்சிராவை எடுத்துக்கொண்டு அவளுக்குப் பின்னால் போய் நடனம் ஆடினார்கள். 21 ஆண்கள் பாடப் பாட மிரியாமும்,
“யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+
குதிரைகளையும் வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்”+
என்று பதில்பாட்டுப் பாடினாள்.
22 பிற்பாடு, மோசே இஸ்ரவேலர்களை செங்கடலிலிருந்து ஷூர் வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர்கள் மூன்று நாட்கள் அந்த வனாந்தரத்தில் நடந்துபோனார்கள். ஆனால், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 23 பின்பு, மாரா* என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ அங்கிருந்த தண்ணீர் கசப்பாக இருந்ததால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான், அவர் அந்த இடத்துக்கு மாரா என்று பெயர் வைத்தார். 24 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்து,+ “நாங்கள் எதைத்தான் குடிப்பது?” என்றார்கள். 25 மோசே யெகோவாவிடம் கெஞ்சினார்.+ யெகோவா அவருக்கு ஒரு சின்ன மரத்தைக் காட்டினார். மோசே அதைத் தூக்கித் தண்ணீருக்குள் போட்டவுடன், அந்தத் தண்ணீர் தித்திப்பானது.
அங்குதான் கடவுள் ஜனங்களைச் சோதித்துப் பார்த்தார்.+ அங்கு நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தன, அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு சட்டம் போலவும் இருந்தன.* 26 கடவுள் அவர்களிடம், “யெகோவாவாகிய நான் சொல்லும் வார்த்தையை நீங்கள் கவனமாகக் கேட்டு, எனக்குப் பிரியமானதைச் செய்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிமுறைகள் எல்லாவற்றையும் பின்பற்றினால்,+ எகிப்தியர்கள்மேல் கொண்டுவந்த எந்தக் கொள்ளைநோயையும் நான் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்.+ யெகோவாவாகிய நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்”+ என்று சொன்னார்.
27 அதன்பின், அவர்கள் ஏலிமுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்தன. அந்த நீரூற்றுகளுக்குப் பக்கத்தில் அவர்கள் முகாம்போட்டார்கள்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் ஏலிமிலிருந்து புறப்பட்டார்கள். கடைசியில், அவர்கள் எல்லாரும் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையில் இருக்கிற சின் வனாந்தரத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட பின்பு, இரண்டாம் மாதம் 15-ஆம் நாளில் அங்கு வந்துசேர்ந்தார்கள்.
2 பின்பு, அந்த வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ 3 இஸ்ரவேலர்கள் அவர்களிடம் போய், “எகிப்து தேசத்தில் நாங்கள் இறைச்சியையும் ரொட்டியையும் திருப்தியாகச் சாப்பிட்டோமே, அப்போதே யெகோவாவின் கையால் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!+ எங்கள் எல்லாரையும் பட்டினிபோட்டு சாகடிப்பதற்காகத்தான் இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.+
4 அதனால் யெகோவா மோசேயிடம், “இப்போது நான் வானத்திலிருந்து உணவைப் பொழியப்போகிறேன்.+ ஒவ்வொருவரும் போய் அந்தந்த நாளுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.+ அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடக்கிறார்களா இல்லையா என்று நான் சோதித்துப் பார்ப்பேன்.+ 5 ஆனால் ஆறாம் நாளில்,+ மற்ற நாட்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக எடுத்து சமைத்துக்கொள்ளலாம்”+ என்றார்.
6 அதனால் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்களிடம், “யெகோவாதான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார் என்பதைச் சாயங்காலத்தில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 7 யெகோவாவுக்கு எதிராக நீங்கள் முணுமுணுத்ததை அவர் கேட்டார். அதனால், காலையில் யெகோவாவின் மகிமையைப் பார்ப்பீர்கள். ஏன் எங்களுக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்? நாங்களா முக்கியம்?” என்றார்கள். 8 பின்பு மோசே, “நீங்கள் திருப்தியாய்ச் சாப்பிடுவதற்காகச் சாயங்காலத்தில் இறைச்சியையும் காலையில் உணவையும் யெகோவா உங்களுக்குத் தருவார். யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முணுமுணுத்தது அவர் காதுக்கு எட்டியது என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். நாங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. உண்மையில் நீங்கள் எங்களுக்கு எதிராக முணுமுணுக்கவில்லை, யெகோவாவுக்கு எதிராகத்தான் முணுமுணுக்கிறீர்கள்”+ என்றார்.
9 பின்பு மோசே ஆரோனிடம், “நீங்கள் இஸ்ரவேலர்கள் எல்லாரையும் பார்த்து, ‘யெகோவாவுக்கு முன்னால் வாருங்கள், நீங்கள் முணுமுணுத்ததை அவர் கேட்டார்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார். 10 ஆரோன் இதை இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் சொன்னவுடன், அவர்கள் வனாந்தரம் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை மேகத்தில் தோன்றியது.+
11 யெகோவா மோசேயிடம், 12 “இஸ்ரவேலர்கள் முணுமுணுத்ததை நான் கேட்டேன்.+ நீ அவர்களிடம், ‘சாயங்காலத்தில் நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள், காலையில் உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று தெரிந்துகொள்வீர்கள்’+ என்று சொல்” என்றார்.
13 அன்றைக்குச் சாயங்காலம், காடைகள் பறந்து வந்து முகாமை மூடிக்கொண்டன.+ காலையில் முகாமைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது. 14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது. 15 இஸ்ரவேலர்கள் அதைப் பார்த்தபோது, “இது என்ன?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசே அவர்களிடம், “நீங்கள் சாப்பிடுவதற்காக யெகோவா தந்திருக்கிற உணவு இது.+ 16 யெகோவாவின் கட்டளை இதுதான்: ‘ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு ஒரு ஓமர் அளவு*+ என்ற கணக்குப்படி, உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்காக அதை எடுத்துக்கொள்ளலாம்’” என்றார். 17 இஸ்ரவேலர்கள் அப்படியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் எடுத்தார்கள். 18 அதை அவர்கள் ஓமரால் அளந்து பார்த்தபோது, அதிகமாக எடுத்தவரிடம் அதிகமாகவும் இல்லை, குறைவாக எடுத்தவரிடம் குறைவாகவும் இல்லை.+ ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்திருந்தார்கள்.
19 பின்பு மோசே அவர்களிடம், “அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்காக யாரும் அதை மிச்சம் வைக்கக் கூடாது”+ என்றார். 20 ஆனால் சிலர் மோசேயின் பேச்சைக் கேட்காமல், காலையில் சாப்பிடுவதற்காக அதை மிச்சம் வைத்தார்கள். அப்போது அது புழுபுழுத்து, துர்நாற்றம் வீசியது. அதனால் மோசேக்கு அவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. 21 தினமும் காலையில், ஒவ்வொருவரும் அவரவர் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்தார்கள். வெயில் ஏற ஏற அது உருகிப்போனது.
22 ஆறாம் நாளில் அதை இரண்டு மடங்கு எடுத்தார்கள்,+ அதாவது தலைக்கு இரண்டு ஓமர் அளவு எடுத்தார்கள். ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் வந்து அதை மோசேயிடம் சொன்னார்கள். 23 அதற்கு அவர், “யெகோவா சொல்லியிருப்பது இதுதான். நாளைக்கு முழு ஓய்வுநாள், அது யெகோவாவுக்கான பரிசுத்த ஓய்வுநாள்.+ அதனால், நீங்கள் சுட்டு வைக்க வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள், வேக வைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்.+ மீதியை அடுத்த நாள் காலைக்காக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். 24 மோசே கட்டளை கொடுத்தபடியே, அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்காக ஜனங்கள் அதை எடுத்து வைத்தார்கள். அது புழுபுழுக்கவும் இல்லை, துர்நாற்றம் வீசவும் இல்லை. 25 பின்பு மோசே அவர்களிடம், “நீங்கள் எடுத்து வைத்ததை இன்றைக்குச் சாப்பிடுங்கள். இன்று அதை வெளியில் எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், இன்று யெகோவாவுக்கான ஓய்வுநாள். 26 ஆறு நாளும் அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஏழாம் நாள் ஓய்வுநாளாக+ இருப்பதால் அன்றைக்கு ஒன்றுமே கிடைக்காது” என்றார். 27 இருந்தாலும், சிலர் ஏழாம் நாளிலும் அதை எடுப்பதற்காக வெளியே போனார்கள். ஆனால், ஒன்றுமே கிடைக்கவில்லை.
28 அதனால் யெகோவா மோசேயிடம், “இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் இருப்பீர்கள்?+ 29 யெகோவாவாகிய நான்தான் உங்களுக்கு ஓய்வுநாளைத் தந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ அதனால்தான், ஆறாம் நாளில் இரண்டு நாளைக்குத் தேவையான உணவைத் தருகிறேன். ஏழாம் நாளில், எல்லாரும் அவரவர் இடத்திலேயே இருக்க வேண்டும். யாரும் வெளியே போகக் கூடாது” என்றார். 30 அதனால், ஜனங்கள் ஏழாம் நாளில் ஓய்வுநாளை அனுசரித்தார்கள்.+
31 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உணவுக்கு “மன்னா”* என்று பெயர் வைத்தார்கள். அது வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும் இருந்தது. அதன் ருசி தேன் கலந்த அப்பத்தைப் போல இருந்தது.+ 32 பின்பு மோசே, “யெகோவா கட்டளையிடுவது இதுதான்: ‘இதில் ஒரு ஓமர் அளவு எடுத்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வையுங்கள்.+ ஏனென்றால், உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது வனாந்தரத்தில் நான் தந்த உணவை வருங்காலத் தலைமுறைகள் பார்க்க வேண்டும்’” என்றார். 33 அப்போது மோசே ஆரோனிடம், “நீங்கள் ஒரு ஜாடியை எடுத்து, அதில் ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பதற்காக யெகோவாவின் முன்னிலையில் வைக்க வேண்டும்” என்றார்.+ 34 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அதைப் பாதுகாப்பதற்காக ஒரு விசேஷப் பெட்டிக்கு*+ முன்னால் ஆரோன் அதை வைத்தார். 35 40 வருஷங்களாக இஸ்ரவேலர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.+ கானான் தேசத்தின்+ எல்லைக்கு வந்து சேரும்வரை+ அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். 36 ஒரு ஓமர் என்பது ஒரு எப்பா* அளவில் பத்திலொரு பாகம்.
17 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் சின் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஒவ்வொரு இடமாகப் பயணம் செய்தார்கள்.+ பின்பு, அவர்கள் ரெவிதீமுக்கு வந்து முகாம்போட்டார்கள்.+ ஆனால், அங்கே அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை.
2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார். 3 ஆனால், அந்த ஜனங்கள் தண்ணீருக்காக ரொம்பவும் தவித்தார்கள். அதனால், அவர்கள் மோசேக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களை எதற்காக எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும் ஆடுமாடுகளும் தாகத்தால் செத்துப்போவதற்கா?” என்று கேட்டார்கள். 4 கடைசியில் மோசே யெகோவாவிடம், “இந்த ஜனங்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? கொஞ்ச நேரத்தில் என்னைக் கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறதே!” என்று அலறினார்.
5 அப்போது யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலின் பெரியோர்கள்* சிலரைக் கூட்டிக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் நடந்து போ. நீ நைல் நதியை அடிக்கப் பயன்படுத்திய கோலையும்+ எடுத்துக்கொண்டு போ. 6 இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார். 7 அங்கே இஸ்ரவேலர்கள் அவரோடு தகராறு செய்ததாலும், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்ததாலும்,+ அவர் அந்த இடத்துக்கு மாசா*+ என்றும், மேரிபா*+ என்றும் பெயர் வைத்தார்.
8 பின்பு, அமலேக்கியர்கள்+ ரெவிதீமிலிருந்த+ இஸ்ரவேலர்களுடன் போர் செய்ய வந்தார்கள். 9 அப்போது மோசே யோசுவாவிடம்,+ “நம்முடைய ஆட்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு போய் அமலேக்கியர்களுடன் போர் செய். நாளைக்கு நான் உண்மைக் கடவுளின் கோலைக் கையில் பிடித்துக்கொண்டு குன்றின் உச்சியில் நிற்பேன்” என்றார். 10 மோசே சொன்னபடியே+ அமலேக்கியர்களுக்கு எதிராக யோசுவா போர் செய்தார். மோசேயும் ஆரோனும் ஹூரும்+ குன்றின் உச்சிக்குப் போனார்கள்.
11 மோசே தன்னுடைய கைகளை உயர்த்தி வைத்திருந்த வரைக்கும் போரில் இஸ்ரவேலர்கள் ஜெயித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அவர் தன்னுடைய கைகளைக் கீழே தொங்கவிட்டவுடன் அமலேக்கியர்கள் ஜெயிக்க ஆரம்பித்தார்கள். 12 மோசேக்குக் கைகள் வலித்தபோது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள், அவர் அதன்மேல் உட்கார்ந்தார். பின்பு, ஆரோனும் ஹூரும் மோசேயின் கைகளை ஆளுக்கு ஒரு பக்கமாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால், சூரியன் மறையும்வரை அவருடைய கைகள் அதே நிலையில் இருந்தன. 13 இப்படி, அமலேக்கியர்களையும் அவர்களோடு சேர்ந்தவர்களையும் யோசுவா வாளால் வீழ்த்தினார்.+
14 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார். 15 பின்பு மோசே ஒரு பலிபீடம் கட்டினார். அதற்கு யெகோவா-நிசி* என்று பெயர் வைத்து, 16 “அமலேக்கியர்கள் ‘யா’வின்*+ சிம்மாசனத்தை எதிர்ப்பதால், யெகோவா அவர்களோடு தலைமுறை தலைமுறையாகப் போர் செய்வார்”+ என்று சொன்னார்.
18 யெகோவா மோசேக்கும் தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் எப்படியெல்லாம் உதவினார் என்றும், அவர்களை எகிப்திலிருந்து எப்படிக் கூட்டிக்கொண்டு வந்தார் என்றும் எத்திரோ கேள்விப்பட்டார்.+ இவர் மீதியான் தேசத்தைச் சேர்ந்த குரு, மோசேயின் மாமனார்.+ 2 இவரிடம்தான் மோசே முன்பு தன்னுடைய மனைவி சிப்போராளையும் இரண்டு மகன்களையும்+ அனுப்பி வைத்திருந்தார். எத்திரோ அவர்களைக் கவனித்துக்கொண்டார். 3 மோசேயின் ஒரு மகனுடைய பெயர் கெர்சோம்.*+ “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார். 4 அவருடைய இன்னொரு மகனின் பெயர் எலியேசர்.* “பார்வோனின் வாளிலிருந்து+ என்னைக் காப்பாற்றிய என்னுடைய முன்னோர்களின் கடவுள்தான் எனக்குத் துணை” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார்.
5 வனாந்தரத்தில் உண்மைக் கடவுளின் மலைக்குப் பக்கத்தில்+ மோசே முகாம்போட்டிருந்தபோது, அவருடைய மனைவியையும் மகன்களையும் மோசேயின் மாமனார் எத்திரோ கூட்டிக்கொண்டு வந்தார். 6 அவர் மோசேயிடம் ஆள் அனுப்பி, “உன் மாமனார் எத்திரோ+ வந்துகொண்டிருக்கிறேன், உன் மனைவியையும் இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லச் சொன்னார். 7 உடனே மோசே தன்னுடைய மாமனாரைப் பார்க்கப் போனார். அவருக்கு முன்னால் தலைவணங்கி, அவருக்கு முத்தம் கொடுத்தார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துவிட்டு, கூடாரத்துக்குள் போனார்கள்.
8 யெகோவா இஸ்ரவேல் ஜனங்களுக்காக பார்வோனையும் எகிப்தையும் எப்படியெல்லாம் தண்டித்தார்+ என்றும், வழியில் இஸ்ரவேலர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள்+ என்றும், யெகோவா அவர்களை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்றும் மோசே தன்னுடைய மாமனாருக்கு விவரமாகச் சொன்னார். 9 யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து பல விதங்களில் ஆசீர்வதித்ததைப் பற்றி எத்திரோ கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார். 10 பின்பு எத்திரோ, “உங்களை எகிப்தின் பிடியிலிருந்தும் பார்வோனின் பிடியிலிருந்தும் விடுதலை செய்த யெகோவா புகழப்படட்டும்! 11 அவருடைய ஜனங்களை ஆணவத்தோடு அடக்கி ஒடுக்கியவர்களை அவர் அழித்துவிட்டார்! யெகோவாதான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்+ என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார். 12 மோசேயின் மாமனார் எத்திரோ, கடவுளுக்குத் தகன பலியையும் மற்ற பலிகளையும் கொண்டுவந்தார். ஆரோனும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் உண்மைக் கடவுளின் முன்னிலையில் எத்திரோவுடன் சேர்ந்து சாப்பிட அங்கே வந்தார்கள்.
13 அடுத்த நாள், மோசே வழக்கம்போல் ஜனங்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக உட்கார்ந்தார். காலையிலிருந்து சாயங்காலம்வரை ஜனங்கள் அவர் முன்னால் வந்து நின்றார்கள். 14 ஜனங்களுக்காக மோசே செய்த எல்லாவற்றையும் அவருடைய மாமனார் பார்த்தார். அதனால் அவர் மோசேயிடம், “ஜனங்கள் காலையிலிருந்து சாயங்காலம்வரை உன் முன்னால் வந்து நிற்கிறார்களே. அவர்களுக்காக நீ ஏன் தனியாளாய் எல்லாவற்றையும் செய்கிறாய்?” என்றார். 15 அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். 16 ஏதாவது வழக்கு இருந்தால், அதை என்னிடம் கொண்டுவருவார்கள். நான் விசாரணை செய்து, உண்மைக் கடவுளுடைய தீர்மானங்களையும் சட்டங்களையும் அவர்களுக்குச் சொல்வேன்”+ என்றார்.
17 அப்போது அவருடைய மாமனார், “நீ இப்படிச் செய்வது சரியல்ல. 18 இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள். 19 அதனால், உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். தயவுசெய்து அதைக் கேள். கடவுள் உன்னோடு இருப்பார்.+ நீ ஜனங்களுடைய சார்பாக உண்மைக் கடவுளிடம் பேசு,+ அவர்களுடைய வழக்குகளை அவரிடம் சொல்.+ 20 கடவுளுடைய விதிமுறைகளையும் சட்டங்களையும் அவர்களுக்குப் புரியவை.+ அவர்கள் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடு. 21 அதேசமயத்தில், திறமையான ஆண்களை ஜனங்களிலிருந்து தேர்ந்தெடு.+ அவர்கள் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களாகவும், ஆதாயத்துக்கு ஆசைப்படாத நம்பகமான ஆட்களாகவும் இருக்க வேண்டும்.+ அவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமனம் செய்.+ 22 அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும். சிக்கலான வழக்குகளுக்கு மட்டும் நீயே தீர்ப்பு சொல்.+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்கள் தீர்ப்பு சொல்லட்டும். இப்படி, உன்னுடைய சுமையை அவர்களுடன் பகிர்ந்துகொள், உன்னுடைய பாரம் குறையும்.+ 23 நீ இப்படிச் செய்தால், அதோடு கடவுளும் இப்படிச் செய்யச் சொல்லி உனக்குக் கட்டளை கொடுத்தால், இந்தச் சுமையை உன்னால் சுமக்க முடியும். ஜனங்களும் திருப்தியோடு திரும்பிப் போவார்கள்” என்றார்.
24 மோசே தன்னுடைய மாமனார் சொன்ன எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார். 25 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார். 26 அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொன்னார்கள். சிக்கலான வழக்குகளை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்,+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்களே தீர்ப்பு சொன்னார்கள். 27 அதன்பின், மோசே தன்னுடைய மாமனாரை வழியனுப்பி வைத்தார்,+ அவரும் தன்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போனார்.
19 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு மூன்றாம் மாதத்தில் சீனாய் வனாந்தரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து புறப்பட்ட+ அதே நாளில் சீனாய் வனாந்தரத்துக்கு வந்து, அங்கிருந்த மலையின்+ எதிரில் முகாம்போட்டார்கள்.
3 பின்பு, உண்மைக் கடவுள்முன் நிற்பதற்காக மோசே அந்த மலைமேல்+ ஏறிப்போனார். மலையிலிருந்து யெகோவா அவரைக் கூப்பிட்டு, “நீ யாக்கோபின் வம்சத்தாராகிய இஸ்ரவேலர்களிடம் போய் என் செய்தியைச் சொல். அவர்களிடம், 4 ‘கழுகு தன்னுடைய குஞ்சுகளைச் சிறகுகளில் சுமந்துகொண்டு வருவது போல நான் உங்களை என்னிடம் சுமந்துகொண்டு வருவதற்காக+ எகிப்தியர்களைத் தண்டித்தேன்; அதை உங்கள் கண்ணாலேயே பார்த்தீர்கள்.+ 5 நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக+ இருப்பீர்கள். ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்குத்தான் சொந்தம்.+ 6 நீங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாகவும் என்னுடைய பரிசுத்த ஜனமாகவும் இருப்பீர்கள்’+ என்று சொல். இந்த எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேலர்களிடம் சொல்” என்றார்.
7 அதனால், மோசே போய் இஸ்ரவேலின் பெரியோர்களை* கூப்பிட்டு, யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னார்.+ 8 அப்போது ஜனங்கள் எல்லாரும், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்று ஒருமனதாகச் சொன்னார்கள். உடனடியாக மோசே அதை யெகோவாவிடம் சொன்னார். 9 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் உன்னிடம் பேசுவதை ஜனங்கள் கேட்டு, உன்மேலும் எப்போதும் நம்பிக்கை வைப்பதற்காக நான் உன்னிடம் கார்மேகத்தில் வருவேன்” என்றார். ஜனங்கள் சொன்னதை மோசே யெகோவாவிடம் சொன்னார்.
10 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஜனங்களிடம் போய் இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் புனிதப்படுத்து. அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைக்க வேண்டும். 11 மூன்றாம் நாளுக்காக அவர்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், மூன்றாம் நாளில் யெகோவாவாகிய நான் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சீனாய் மலைமேல் இறங்குவேன். 12 ஜனங்கள் தாண்டி வராதபடி மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்துவை. அதன்பின் நீ அவர்களிடம், ‘யாரும் இந்த மலைமேல் ஏறாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் அதன்மேல் கால் வைக்கவும் கூடாது. அப்படி யாராவது கால் வைத்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்படுவான். 13 அவனை யாரும் தொடக் கூடாது, கல்லையோ ஆயுதத்தையோ* எறிந்துதான் கொல்ல வேண்டும். மலையைத் தொடுவது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, கொல்லப்பட வேண்டும்’+ என்று சொல். ஆனால், ஊதுகொம்பின்* சத்தம் கேட்கும்போது+ எல்லாரும் மலைக்குப் பக்கத்தில் வரலாம்” என்றார்.
14 பின்பு, மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடம் போய் அவர்களைப் புனிதப்படுத்தினார். அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைத்தார்கள்.+ 15 அவர் அவர்களிடம், “மூன்றாம் நாளுக்காகத் தயாராகுங்கள். உங்கள் மனைவியோடு உடலுறவு கொள்ளாதீர்கள்” என்றார்.
16 மூன்றாம் நாள் காலையில் இடி இடித்தது, மின்னல் வெட்டியது. மலைமேல் கார்மேகம் சூழ்ந்தது,+ ஊதுகொம்பின் சத்தம் பலமாக முழங்கியது. முகாமில் இருந்த எல்லாரும் நடுநடுங்கினார்கள்.+ 17 அப்போது, உண்மைக் கடவுளைச் சந்திப்பதற்காக முகாமிலிருந்த ஜனங்களை மோசே கூட்டிக்கொண்டு வந்தார். அவர்கள் மலை அடிவாரத்தில் நின்றார்கள். 18 அப்போது, யெகோவா சீனாய் மலைமேல் தீ ஜுவாலையுடன் இறங்கினார்.+ அதனால் அது புகைமண்டலமாக ஆனது. சூளையிலிருந்து புகை எழும்புவது போல மலையிலிருந்து புகை எழும்பியது. அந்த மலையே பயங்கரமாக அதிர்ந்தது.+ 19 ஊதுகொம்பின் சத்தம் பலமாகிக்கொண்டே போனது. அப்போது மோசே பேசினார், உண்மைக் கடவுள் அவருக்குப் பதில் சொன்னார்.*
20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+ 21 அப்போது யெகோவா மோசேயிடம், “ஜனங்கள் யெகோவாவாகிய என்னைப் பார்ப்பதற்காக எல்லையைக் கடந்து வரக் கூடாதென்று நீ கீழே போய் அவர்களுக்கு எச்சரிக்கை கொடு. இல்லாவிட்டால், அவர்களில் நிறைய பேர் அழிந்துபோவார்கள். 22 யெகோவாவாகிய என் பக்கத்தில் வழக்கமாக வருகிற குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், யெகோவாவாகிய நான் அவர்களைத் தண்டிக்க மாட்டேன்”+ என்றார். 23 அதற்கு மோசே யெகோவாவிடம், “சீனாய் மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து அதைப் புனிதமாக்கும்படி+ நீங்கள் ஏற்கெனவே எங்களை எச்சரித்ததால் ஜனங்கள் யாரும் அதன் பக்கத்தில் வர மாட்டார்கள்” என்றார். 24 இருந்தாலும் யெகோவா அவரிடம், “நீ கீழே போய் ஆரோனைக் கூட்டிக்கொண்டு வா. ஆனால், குருமார்களையும் ஜனங்களையும் என்னிடம் வர விடாதே. மீறி வந்தால் யெகோவாவாகிய நான் அவர்களைத் தண்டிப்பேன்”+ என்றார். 25 அதனால், மோசே இறங்கிப்போய் ஜனங்களிடம் இதைச் சொன்னார்.
2 “எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்.+ 3 என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+
4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 5 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன். 6 ஆனால், என்னை நேசித்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு+ ஆயிரம் தலைமுறைவரை மாறாத அன்பைக் காட்டுவேன்.
7 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+
8 ஓய்வுநாளைப் புனித நாளாக+ அனுசரிக்க மறந்துவிடாதீர்கள். 9 உங்களுடைய எல்லா வேலைகளையும் ஆறு நாட்களுக்குச் செய்யுங்கள்.+ 10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 11 ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார்.
12 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+
13 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+
14 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+
16 நீங்கள் அடுத்தவனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.+
17 நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார்.
18 அப்போது, ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கத்தைக் கேட்டார்கள், மின்னல் வெட்டுவதைப் பார்த்தார்கள், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டார்கள், மலையிலிருந்து புகை எழும்புவதைப் பார்த்தார்கள். அதனால் நடுநடுங்கிப் போய், தூரத்தில் நின்றுகொண்டார்கள்.+ 19 பின்பு மோசேயிடம், “நீங்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். ஆனால் கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் செத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது”+ என்றார்கள். 20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார். 21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+
22 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் பரலோகத்திலிருந்து உங்களிடம் பேசியதை உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ 23 என்னைத் தவிர உங்களுக்கு வேறே தெய்வம் இருக்கக் கூடாது. அதனால், வெள்ளியிலோ தங்கத்திலோ உங்களுக்காகத் தெய்வங்களை உண்டாக்காதீர்கள்.+ 24 எனக்காக மண்ணினால் ஒரு பலிபீடத்தைச் செய்யுங்கள். அதன்மேல் உங்கள் ஆடுமாடுகளைத் தகன பலிகளாகவும் சமாதான* பலிகளாகவும் செலுத்துங்கள். நான் தேர்ந்தெடுக்கிற எல்லா இடங்களிலும் இப்படிச் செய்யுங்கள். அப்போது, என்னுடைய பெயரை எல்லாரும் அங்கே நினைத்துப் பார்ப்பார்கள்.+ நானும் அங்கே வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 நீங்கள் கற்களால் எனக்குப் பலிபீடம் கட்டும்போது, உளிகளால் செதுக்கிய கற்களை வைத்துக் கட்டக் கூடாது.+ கற்களின் மேல் உளி பட்டால் அவை தீட்டுப்பட்டுவிடும். 26 என்னுடைய பலிபீடத்தின் மேல் நீங்கள் ஏறிப்போகும்போது உங்கள் அந்தரங்க உறுப்புகள் தெரியக் கூடாது; அதனால், அதற்குப் படிக்கட்டுகள் வைக்காதீர்கள்’” என்று சொன்னார்.
21 பின்பு அவர், “நீ இஸ்ரவேலர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நீதித்தீர்ப்புகள் இவைதான்:+
2 ஒரு எபிரெயனை நீங்கள் அடிமையாக வாங்கினால்,+ அவன் உங்களிடம் ஆறு வருஷங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் வருஷம் அவனிடமிருந்து எதையும் வாங்காமல் அவனை விடுதலை செய்துவிட வேண்டும்.+ 3 அவன் தனியாளாக வந்திருந்தால், தனியாளாகப் போக வேண்டும். மனைவியோடு வந்திருந்தால், அவளும் அவனுடன் போக வேண்டும். 4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை மனைவியாகத் தந்திருந்தால், அவள் அவனுக்கு மகன்களையோ மகள்களையோ பெற்றுக் கொடுத்திருந்தால், அந்த மனைவியும் பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமாவார்கள். அந்த அடிமை மட்டும் விடுதலையாகிப் போகலாம்.+ 5 ஆனால் அந்த அடிமை, ‘நான் என் எஜமானையும் மனைவிமக்களையும் நேசிக்கிறேன், விடுதலை பெற எனக்கு இஷ்டமில்லை’ என்று உறுதியாகச் சொன்னால்,+ 6 அவனுடைய எஜமான் அவனைக் கதவுக்குப் பக்கத்தில் அல்லது நிலைக்காலுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து, உண்மைக் கடவுளைச் சாட்சியாக வைத்து,* ஒரு ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். வாழ்நாள் முழுக்க அவன் அவருக்கு அடிமையாக இருப்பான்.
7 ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஒரு ஆண் அடிமை விடுதலையாகிப் போவதுபோல் அவளால் போக முடியாது. 8 அவளுடைய எஜமானுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் அவளைத் தன்னுடைய மறுமனைவியாக ஆக்கிக்கொள்ளாமல் வேறொருவனுக்கு விற்றுப்போடப் பார்த்தால், அவர் அவளுக்குத் துரோகம் செய்ததாக அர்த்தம். வேறு தேசத்தைச் சேர்ந்தவனிடம் அவளை விற்க அவருக்கு உரிமை இல்லை. 9 அவளை அவர் தன்னுடைய மகனுக்கு மனைவியாகக் கொடுத்தால், மகளின் உரிமைகளை அவர் தர வேண்டும். 10 அவருடைய மகன்* இன்னொரு பெண்ணையும் கல்யாணம் செய்துகொண்டால், உணவு, உடை, தாம்பத்தியக் கடன்+ என எதிலுமே முதல் மனைவிக்குக் குறை வைக்கக் கூடாது. 11 இந்த மூன்று பொறுப்புகளையும் அவன் செய்யாமல்போனால், பணம் எதுவும் கொடுக்காமல் அவள் விடுதலையாகிப் போகலாம்.
12 ஒருவன் யாரையாவது அடித்து அவன் செத்துப்போனால் அடித்தவன் கொல்லப்பட வேண்டும்.+ 13 ஆனால், அவன் தெரியாத்தனமாக அதைச் செய்திருந்தால், அப்படி நடக்கும்படி உண்மைக் கடவுளாகிய நான் விட்டிருந்தால், அவன் ஓடிப்போவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்வேன்.+ 14 ஒருவன் இன்னொருவன்மேல் கடும் கோபம்கொண்டு அவனை வேண்டுமென்றே கொலை செய்தால்,+ கொலைகாரனைச் சாகடிக்க வேண்டும். தப்பிப்பதற்காக அவன் என் பலிபீடத்திடம் வந்திருந்தாலும்கூட அவனை அங்கிருந்து பிடித்துக்கொண்டுபோய்ச் சாகடிக்க வேண்டும்.+ 15 அப்பாவையோ அம்மாவையோ அடிக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+
16 ஒருவன் யாரையாவது கடத்திக்கொண்டு+ போய் விற்றுவிட்டால் அல்லது அப்படிக் கடத்தும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால்,+ அவன் கொல்லப்பட வேண்டும்.+
17 அப்பாவையோ அம்மாவையோ சபிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+
18 சண்டை போடும்போது ஒருவன் இன்னொருவனைக் கல்லாலோ கைமுஷ்டியாலோ* அடித்ததால், அவன் படுத்த படுக்கையாகக் கிடந்து, 19 பின்பு மறுபடியும் எழுந்து ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு வெளியே நடமாட ஆரம்பித்தால், அடித்தவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது. ஆனால், அடிவாங்கியவன் முழுவதுமாகக் குணமாகி வேலைக்குப் போகும்வரை அவனுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவ வேண்டும்.
20 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ தடியால் அடிக்கும்போது அந்த அடிமை இறந்துபோனால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.+ 21 ஆனால், அந்த அடிமை ஒரு நாளோ இரண்டு நாளோ உயிரோடு இருந்தால், அடித்தவன் தண்டிக்கப்படக் கூடாது. ஏனென்றால், அந்த அடிமையை அவன் விலைகொடுத்து வாங்கியிருக்கிறான்.
22 ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும்போது ஒரு கர்ப்பிணிக்கு அடிபட்டு குறைப்பிரசவம்+ ஆகிவிட்டால், அதேசமயத்தில் அவளுடைய உயிருக்கோ குழந்தையின் உயிருக்கோ ஒன்றும் ஆகாவிட்டால், அடித்தவன் அந்தப் பெண்ணின் கணவர் கேட்கிற அபராதத்தை நியாயாதிபதிகளின் மூலம் கொடுக்க வேண்டும்.+ 23 ஆனால் தாயோ குழந்தையோ இறந்துவிட்டால், உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும்.+ 24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,+ 25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், அடிக்கு அடி கொடுக்க வேண்டும்.
26 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ அடிக்கும்போது அந்த அடிமையின் கண் போய்விட்டால், கண்ணுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.+ 27 அவன் தன்னுடைய அடிமையின் பல்லை உடைத்தால், பல்லுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.
28 மாடு முட்டியதால் ஒரு ஆணோ பெண்ணோ செத்துப்போனால், அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.+ அதன் இறைச்சியை யாரும் சாப்பிடக் கூடாது. மாட்டின் சொந்தக்காரனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது. 29 ஆனால், ஒரு மாடு வழக்கமாக முட்டுகிற மாடாய் இருந்தால், அதன் சொந்தக்காரன் எச்சரிக்கப்பட்டும் அவன் அதைக் கட்டி வைக்காமல்போய் அது ஒருவனைக் கொன்றுபோட்டால், அந்த மாடும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும், அதன் சொந்தக்காரனும் கொல்லப்பட வேண்டும். 30 ஒருவேளை உயிருக்குப் பதிலாக ஒரு மீட்புவிலையைக் கொடுக்கும்படி அவனிடம் சொல்லப்பட்டால் அந்த மொத்த விலையையும் அவன் கொடுக்க வேண்டும். 31 ஒரு மாடு ஒருவருடைய மகனை முட்டினாலும் சரி, மகளை முட்டினாலும் சரி, மாட்டின் சொந்தக்காரனுக்கு இந்த நீதித்தீர்ப்பின்படியே செய்ய வேண்டும். 32 ஒரு மாடு அடிமையாக இருக்கும் ஒரு ஆணையோ பெண்ணையோ முட்டினால், அதன் சொந்தக்காரன் அந்த அடிமையின் எஜமானுக்கு 30 சேக்கல்* கொடுக்க வேண்டும். அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.
33 ஏற்கெனவே உள்ள குழியை அல்லது புதிதாகத் தோண்டிய குழியை ஒருவன் மூடாமல் இருந்து, அதில் ஒரு மாடோ கழுதையோ விழுந்து செத்துவிட்டால், 34 குழிக்குச் சொந்தக்காரன் மிருகத்தின் சொந்தக்காரனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ செத்த மிருகம் அவனுக்குச் சேர வேண்டும். 35 ஒருவனுடைய மாடு இன்னொருவனுடைய மாட்டை முட்டிக் கொன்றுபோட்டால், உயிருள்ள மாட்டை விற்று, அந்தத் தொகையை அவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். செத்துப்போன மாட்டையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 36 அந்த மாடு வழக்கமாக முட்டுகிற மாடாய் இருந்தும் அதன் சொந்தக்காரன் அதைக் கட்டி வைக்காமல் இருந்தால், அவன் நஷ்ட ஈடாக மாட்டுக்கு மாடு கொடுக்க வேண்டும். செத்த மாடு அவனுக்குச் சேர வேண்டும்” என்றார்.
22 பின்பு அவர், “ஒருவன் ஒரு மாட்டையோ ஆட்டையோ திருடி அதை வெட்டினால் அல்லது விற்றால், அந்த மாட்டுக்குப் பதிலாக 5 மாடுகளையும் அந்த ஆட்டுக்குப் பதிலாக 4 ஆடுகளையும்+ நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.
2 (ராத்திரியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடுகிறவனை+ ஒருவன் பிடித்து அடிக்கும்போது அவன் செத்துவிட்டால், அடித்தவன்மேல் எந்தக் கொலைப்பழியும்* இருக்காது. 3 ஆனால் சூரியன் உதித்த பின்பு அது நடந்தால், அடித்தவன்மேல் கொலைப்பழி வரும்.)
திருடுகிறவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நஷ்ட ஈடு கொடுக்க அவன் கையில் ஒன்றும் இல்லையென்றால், திருட்டுப் பொருளுக்கு ஈடுகட்ட அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். 4 அவன் திருடிய ஆடோ மாடோ கழுதையோ அவனிடம் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.
5 ஒருவன் தன் மிருகங்களை அடுத்தவருடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ மேய விட்டுவிட்டால், தன்னுடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ விளைந்த சிறந்த விளைச்சலைக் கொடுத்து அதற்கு ஈடுகட்ட வேண்டும்.
6 ஒருவன் தீ மூட்டும்போது அது முட்புதர்களில் பரவி, கதிர்க்கட்டுகளையோ விளைந்த பயிர்களையோ எரித்து நாசமாக்கிவிட்டால், தீ மூட்டியவன் அதற்கு ஈடுகட்ட வேண்டும்.
7 ஒருவன் மற்றொருவனிடம் பணத்தையோ பொருளையோ கொடுத்து வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடுபோனால், அதைத் திருடியவன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+ 8 அந்தத் திருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அந்தப் பொருளை வீட்டில் வைத்திருந்தவனே அதை எடுத்துக்கொண்டானா என்பதைத் தெரிந்துகொள்ள அவனை உண்மைக் கடவுள்முன் கொண்டுவர வேண்டும்.+ 9 காணாமல்போன ஒரு ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ துணிமணியையோ வேறெதாவது பொருளையோ இரண்டு பேர் சொந்தம்கொண்டாடி, ‘இது எனக்குத்தான் சொந்தம்!’ என்று சண்டைபோட்டால், அந்த இரண்டு பேருமே தங்கள் வழக்கை உண்மைக் கடவுள்முன் கொண்டுவர வேண்டும்.+ எவனைக் குற்றவாளி என்று கடவுள் சொல்கிறாரோ அவன் மற்றவனுக்கு இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+
10 ஒருவன் தன்னுடைய ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ வேறெதாவது மிருகத்தையோ மற்றொரு ஆளிடம் கொடுத்து வைத்திருக்கும்போது அது செத்துப்போனால், அல்லது ஊனமானால், அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் ஓட்டிக்கொண்டு போகப்பட்டால், 11 அதை வைத்திருந்த ஆள் தான் நிரபராதி என்று யெகோவாவுக்கு முன்னால் சத்தியம் செய்ய வேண்டும். மிருகத்தின் சொந்தக்காரன் அதை நம்ப வேண்டும். அதை வைத்திருந்த ஆள் அதற்காக ஈடுகட்ட வேண்டியதில்லை.+ 12 ஆனால் அதை வைத்திருந்த அந்த ஆளிடமிருந்து அது திருடப்பட்டிருந்தால், அதன் சொந்தக்காரனுக்கு அவன் ஈடுகட்ட வேண்டும். 13 அதை ஒரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருந்தால், அத்தாட்சிக்காக அதை அவன் கொண்டுவர வேண்டும். காட்டு மிருகத்தால் கடித்துக் குதறப்பட்ட மிருகத்துக்காக அவன் ஈடுகட்ட வேண்டியதில்லை.
14 ஆனால், ஒருவன் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கும்போது, அதன் சொந்தக்காரன் அதன் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அது ஊனமானாலோ செத்துப்போனாலோ, இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுகட்ட வேண்டும். 15 அதன் சொந்தக்காரன் அதன் பக்கத்தில் இருந்திருந்தால், அதற்கு அவன் ஈடுகட்ட வேண்டியதில்லை. அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால் வாடகைத் தொகையே நஷ்ட ஈடாக இருக்கும்.
16 நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் ஏமாற்றி அவளோடு உறவுகொண்டால், மணமகள் விலையை* கொடுத்து அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும்.+ 17 ஆனால், அவளுடைய அப்பா அவளைத் தர பிடிவாதமாக மறுத்துவிட்டால், மணமகள் விலைக்குச் சமமான தொகையை அவன் கொடுக்க வேண்டும்.
18 சூனியக்காரியை நீங்கள் உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+
19 மிருகத்தோடு உறவுகொள்கிற எவனும் நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+
20 யெகோவாவைத் தவிர வேறு தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+
21 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தவோ கொடுமைப்படுத்தவோ கூடாது.+ நீங்களும் மற்ற தேசத்தில், அதாவது எகிப்தில், தங்கியிருந்தீர்களே.+
22 விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+ 23 அப்படிக் கொடுமைப்படுத்தும்போது அவன் என்னிடம் முறையிட்டால், அதை நான் நிச்சயம் கேட்பேன்.+ 24 என் கோபம் பற்றியெரியும், நான் உங்களை வாளால் கொன்றுபோடுவேன். அப்போது, உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிப்பார்கள்.
25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+
26 நீங்கள் கொடுக்கும் கடனுக்காக ஒருவனுடைய சால்வையை அடமானமாக வாங்கினால்,+ சூரியன் மறைவதற்குள் அதை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 27 ஏனென்றால், அதைத்தான் அவன் போர்த்திக்கொள்ள வேண்டும். அது இல்லாவிட்டால் வேறு எதைப் போர்த்திக்கொண்டு தூங்குவான்?+ அவன் என்னிடம் முறையிட்டால் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால், நான் கரிசனை* காட்டுகிறவர்.+
28 கடவுளையோ மக்களின் தலைவரையோ நீங்கள் சபித்து* பேசக் கூடாது.+
29 உங்களுடைய நிலங்களில் அமோகமாக விளைகிறவற்றையும் உங்களுடைய ஆலைகளில்* பெருக்கெடுத்து ஓடுகிறவற்றையும் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கத் தயங்கக் கூடாது.+ உங்களுடைய மூத்த மகனை எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்.+ 30 உங்கள் ஆடுமாடுகளுடைய குட்டிகளும் கன்றுகளும்+ ஏழு நாட்கள் அவற்றின் தாயுடன் இருக்க வேண்டும். எட்டாம் நாளில் அவற்றை நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும்.+
31 நீங்கள் எனக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருக்க வேண்டும்.+ வெளியிலே காட்டு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட மிருகத்தை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ அதை நாய்களுக்குப் போட்டுவிட வேண்டும்” என்றார்.
23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+ 2 நிறைய பேர் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு தப்பு செய்யக் கூடாது. ஊர் உலகத்தோடு ஒத்துப்போவதற்காகப் பொய் சாட்சி சொல்லி நியாயத்தைப் புரட்டக் கூடாது. 3 ஏழைகளின் வழக்கில் பாரபட்சம் காட்டக் கூடாது.+
4 உங்கள் எதிரியின் மாடோ கழுதையோ வழிதவறித் திரிவதைப் பார்த்தால், அதை அவனிடம் கொண்டுபோய் விட வேண்டும்.+ 5 உங்களுடைய விரோதியின் கழுதை சுமையோடு கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தால், கண்டும்காணாமல் அங்கிருந்து போய்விடக் கூடாது. அந்தக் கழுதையின் சுமையை இறக்குவதற்கு நீங்கள் அவனுக்கு உதவ வேண்டும்.+
6 ஏழைகளின் வழக்கில் நியாயத்தைப் புரட்டி அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.+
7 மற்றவர்கள்மேல் பொய்க் குற்றம்சாட்டாதீர்கள். நிரபராதியும் நீதிமானும் சாவதற்குக் காரணமாகிவிடாதீர்கள். இப்படிப்பட்ட அக்கிரமம் செய்கிறவனை நான் குற்றத்திலிருந்து விடுவிக்கவே மாட்டேன்.+
8 நீங்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும், நீதிமான்களைக்கூட உண்மைக்கு முரணாகப் பேச வைத்துவிடும்.+
9 உங்களுடன் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது. இன்னொரு தேசத்தில் குடியிருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால், நீங்களும் எகிப்தில் அப்படிக் குடியிருந்தீர்களே.+
10 ஆறு வருஷங்களுக்கு உங்கள் நிலத்தில் பயிர் செய்து, விளைச்சலை அறுவடை செய்ய வேண்டும்.+ 11 ஆனால், ஏழாம் வருஷம் எதையும் பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாக விட்டுவிட வேண்டும். அதில் தானாக முளைப்பதை உங்களுடன் இருக்கும் ஏழைகள் சாப்பிடுவார்கள். அவர்கள் விட்டுவைப்பதை காட்டு மிருகங்கள் தின்னும். உங்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கும் ஒலிவத் தோப்புக்கும் இதேபோல் செய்ய வேண்டும்.
12 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. அப்போதுதான், உங்கள் மாட்டுக்கும் கழுதைக்கும் ஓய்வு கிடைக்கும்; உங்களுடைய அடிமைப் பெண்ணின் மகனுக்கும் உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.+
13 நான் உங்களிடம் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே செய்ய வேண்டும்.+ மற்ற தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாதீர்கள். அந்தப் பெயர்கள் உங்கள் வாயில்கூட வரக் கூடாது.+
14 வருஷத்தில் மூன்று தடவை எனக்காக நீங்கள் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 15 முதலாவதாக, புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப்* மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில் புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ அந்தச் சமயத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வந்தீர்கள். இந்தப் பண்டிகையின்போது யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.+ 16 இரண்டாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்த முதல் விளைச்சலை அறுத்து, அறுவடைப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ மூன்றாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்ததை வருஷக் கடைசியில் சேகரிக்கும்போது சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ 17 உண்மை எஜமானாகிய யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+
18 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தை, புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது. எனக்காகக் கொண்டாடும் பண்டிகைகளின்போது நீங்கள் செலுத்தும் கொழுப்பைக் காலைவரை அப்படியே விடக் கூடாது.
19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+
ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+ 21 அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவருடைய பேச்சை மீறாதீர்கள், இல்லாவிட்டால் அவர் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+ ஏனென்றால், அவர் என்னுடைய பெயரில் வருகிறார். 22 அவர் பேச்சை அப்படியே கேட்டு, நான் சொல்கிற எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிந்தால் உங்களை எதிர்க்கிறவர்களை எதிர்ப்பேன், உங்களைப் பகைக்கிறவர்களைப் பகைப்பேன். 23 எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடத்துக்கு என் தூதர் உங்களை நடத்திக்கொண்டு போவார், நான் அவர்களை அழிப்பேன்.+ 24 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ அவற்றுக்குப் பூஜை செய்யவோ கூடாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.+ அவர்களுடைய சிலைகளையும் பூஜைத் தூண்களையும் உடைத்துப்போட வேண்டும்.+ 25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+ 26 உங்கள் தேசத்துப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படாது, குழந்தை பாக்கியமும் இல்லாமல் போகாது.+ நான் உங்களை நீடூழி வாழ வைப்பேன்.
27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+ 28 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே அவர்கள் விரக்தி* அடையும்படி செய்வேன்.+ அதனால், ஏவியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் உங்களைவிட்டு ஓடிப் போவார்கள்.+ 29 நான் அவர்களை ஒரே வருஷத்தில் உங்களைவிட்டு ஒட்டுமொத்தமாகத் துரத்த மாட்டேன். அப்படிச் செய்தால், ஜனங்கள் யாரும் இல்லாமல் நிலம் பாழாகிவிடும், காட்டு மிருகங்களும் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும்.+ 30 அதனால் நீங்கள் ஏராளமாகப் பெருகி தேசத்தைச் சொந்தமாக்கும்வரை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களைத் துரத்தியடிப்பேன்.+
31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+ 32 அவர்களுடனோ அவர்கள் தெய்வங்களுடனோ நீங்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது.+ 33 அவர்கள் உங்களுடைய தேசத்தில் குடியிருக்கக் கூடாது. அப்படிக் குடியிருந்தால், எனக்கு எதிராக உங்களைப் பாவம் செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கினால், அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிடும்”+ என்றார்.
24 பின்பு அவர் மோசேயிடம், “நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும்+ இஸ்ரவேலின் பெரியோர்கள்* 70 பேரும் மலைமேல் ஏறிப் போங்கள். தூரத்தில் நின்று யெகோவாவை வணங்குங்கள். 2 அதன்பின், நீ மட்டும் யெகோவாவின் பக்கத்தில் போக வேண்டும், மற்றவர்கள் போகக் கூடாது. ஜனங்களும் உன்னோடு வரக் கூடாது”+ என்றார்.
3 அதன்பின் மோசே ஜனங்களிடம் போய், யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும் சொன்னார்.+ அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்றார்கள். 4 யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.+ பின்பு அவர் விடியற்காலையில் எழுந்து, அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிப்பதற்காக 12 கல்தூண்களையும் நாட்டினார். 5 அதன்பின், அவர் இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினார். அவர்கள் போய் யெகோவாவுக்குத் தகன பலிகளையும், சமாதான பலிகளாகக் காளைகளையும்+ செலுத்தினார்கள். 6 பின்பு, மோசே அந்த மிருகங்களின் இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் எடுத்து வைத்தார். இன்னொரு பாதியைப் பலிபீடத்தில் தெளித்தார். 7 அதன்பின், ஒப்பந்தப் புத்தகத்தை* எடுத்து அதை ஜனங்களுக்கு முன்னால் சத்தமாகப் படித்தார்.+ அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்”+ என்றார்கள். 8 அதனால் மோசே இரத்தத்தை எடுத்து ஜனங்கள்மேல் தெளித்து,+ “யெகோவா உங்களோடு செய்திருக்கிற ஒப்பந்தத்தின் வார்த்தைகளைக் கேட்டீர்களே, அந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தம் இதுதான்”+ என்றார்.
9 மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் பெரியோர்கள் 70 பேரும் மலைமேல் ஏறிப்போய், 10 இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்.*+ அவருடைய பாதத்தின் கீழே நீலமணிக் கல் பதிக்கப்பட்ட தரையைப் போல ஒன்று தெரிந்தது. அது தெள்ளத்தெளிவான வானத்தைப் போல இருந்தது.+ 11 இஸ்ரவேலின் முக்கியத் தலைவர்களான+ அவர்களை உண்மைக் கடவுள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவருடைய தரிசனத்தைப் பார்த்தார்கள், சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.
12 யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+ 13 அதனால், மோசேயும் அவருடைய உதவியாளரான யோசுவாவும் புறப்பட்டார்கள்.+ மோசே உண்மைக் கடவுளின் மலைமேல் ஏறிப் போவதற்கு+ முன்பு, 14 அங்கிருந்த பெரியோர்களிடம், “நாங்கள் திரும்பி வரும்வரை இங்கேயே காத்திருங்கள்.+ ஆரோனும் ஹூரும்+ உங்களுடன் இருக்கிறார்கள். யாருக்காவது வழக்கு இருந்தால் அவர்களிடம் போகலாம்”+ என்று சொன்னார். 15 மலையை மேகம் மூடியிருந்த சமயத்தில், மோசே அதன்மேல் ஏறிப் போனார்.+
16 யெகோவாவின் மகிமை+ சீனாய் மலையில் தங்கியிருந்தது.+ ஆறு நாட்களாக அந்த மலையை மேகம் மூடியிருந்தது. ஏழாம் நாளில் கடவுள் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17 யெகோவாவின் மகிமை மலை உச்சியில் பற்றியெரியும் நெருப்பைப் போல இஸ்ரவேலர்களின் கண்களுக்குத் தெரிந்தது. 18 மோசே அந்த மேகத்துக்குள் நுழைந்து, மலைமேல் ஏறினார்.+ 40 நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மலையிலேயே தங்கியிருந்தார்.+
25 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். உள்ளப்பூர்வமாகக் கொடுக்கிற ஆட்களிடமிருந்து நீங்கள் எனக்குக் காணிக்கை வாங்க வேண்டும்.+ 3 அவர்களிடமிருந்து நீங்கள் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவைதான்: தங்கம்,+ வெள்ளி,+ செம்பு,+ 4 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர், 5 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம்;+ 6 விளக்குகளுக்கான எண்ணெய்,+ அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+ 7 ஏபோத்திலும்*+ மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள். 8 நான் உங்கள் நடுவில் தங்குவதற்காக நீங்கள் எனக்கு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.+ 9 வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+
10 வேல மரத்தில் நீங்கள் ஒரு பெட்டியைச் செய்ய வேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும்,* அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்க வேண்டும்.+ 11 பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 12 தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலேயும் பொருத்த வேண்டும். இரண்டு வளையங்களை ஒரு பக்கத்திலும், மற்ற இரண்டு வளையங்களை இன்னொரு பக்கத்திலும் பொருத்த வேண்டும். 13 வேல மரத்தில் கம்புகள் செய்து, அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.+ 14 பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் அந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும். 15 அந்தக் கம்புகளைப் பெட்டியின் வளையங்களிலிருந்து கழற்றவே கூடாது.+ 16 நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளை அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்.+
17 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும் சுத்தமான தங்கத்தால் ஒரு மூடி செய்ய வேண்டும்.+ 18 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+ 19 மூடியின் ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் இன்னொரு கேருபீனும் இருக்க வேண்டும். 20 அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருக்க வேண்டும்.+ அந்தக் கேருபீன்கள் எதிரெதிரே இருக்க வேண்டும். அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருக்க வேண்டும். 21 நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, மூடியால் அதை மூட வேண்டும்.+ 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.
23 அதோடு, இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும் வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்ய வேண்டும்.+ 24 அதற்கு சுத்தமான தங்கத்தால் தகடு அடித்து, சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும். 25 அதாவது, நான்கு விரலளவு அகலத்துக்கு* சுற்றிலும் சட்டம் அடித்து, அந்தச் சட்டத்தின் ஓரங்களில் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும். 26 தங்கத்தில் நான்கு வளையங்களைச் செய்து, மேஜையின் நான்கு கால்கள் இருக்கிற நான்கு மூலைகளிலும் பொருத்த வேண்டும். 27 இந்த வளையங்களைச் சட்டத்துக்குப் பக்கத்தில் பொருத்த வேண்டும். மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளை அவற்றில் செருகி வைக்க வேண்டும். 28 அந்தக் கம்புகளை வேல மரத்தால் செய்து, அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அந்தக் கம்புகளால் மேஜையைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும்.
29 மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும்கூட செய்ய வேண்டும். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்ய வேண்டும்.+ 30 மேஜையின் மேல் படையல் ரொட்டிகளை எனக்கு முன்னால் எப்போதும் வைக்க வேண்டும்.+
31 சுத்தமான தங்கத்தால் ஒரு குத்துவிளக்கு+ செய்ய வேண்டும். அதன் அடிப்பகுதி, தண்டு, கிளைகள், புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாக சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும்.+ 32 விளக்குத்தண்டின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகள், இன்னொரு பக்கத்தில் மூன்று கிளைகள் என மொத்தம் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலும் வாதுமைப் பூ வடிவத்தில் மூன்று புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருக்க வேண்டும். விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளிலும் அதேபோல் இருக்க வேண்டும். 34 விளக்குத்தண்டிலும் வாதுமைப் பூ வடிவத்தில் நான்கு புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருக்க வேண்டும். 35 முதல் இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அதற்கடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு என்று விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளுக்கும் இருக்க வேண்டும். 36 குத்துவிளக்கின் மொட்டுகளையும் கிளைகளையும் தண்டு முழுவதையும் சுத்தமான தங்கத்தில் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும்.+ 37 அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்ய வேண்டும். முன்பக்கமாக ஒளிவீசும் விதத்தில் அந்த விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும்.+ 38 அதற்கான இடுக்கிகளும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட வேண்டும்.+ 39 குத்துவிளக்கையும் இந்த எல்லா சாமான்களையும் ஒரு தாலந்து* சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும். 40 மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* ஒவ்வொன்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்”+ என்றார்.
26 பின்பு அவர், “வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைக்க வேண்டும். உயர்தரமான திரித்த நாரிழை,* நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைச் செய்ய வேண்டும். இந்த விரிப்புகள்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 2 ஒவ்வொரு விரிப்பும் 28 முழ* நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். எல்லா விரிப்புகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.+ 3 ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் மற்ற ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு விரிப்பின் ஓரத்தில் நீல நிற நூலால் காதுகளை* தைக்க வேண்டும்; இணைக்கப்பட்ட மற்றொரு விரிப்பின் ஓரத்திலும் அதேபோல் காதுகளைத் தைக்க வேண்டும். இந்த இரண்டு விரிப்புகளையும் சேர்ப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும். 5 ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேர் இருக்க வேண்டும். 6 தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருக்கும்.+
7 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் விரிப்பதற்கு வெள்ளாட்டு மயிரால்+ 11 கம்பளிகளைச் செய்ய வேண்டும்.+ 8 ஒவ்வொரு கம்பளியும் 30 முழ நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். 11 கம்பளிகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும். 9 ஐந்து கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். ஆறாம் கம்பளியைக் கூடாரத்தின் முன்புறத்தில் பாதியாக மடித்துப் போட வேண்டும். 10 இணைக்கப்பட்ட ஒரு கம்பளியின் ஓரத்தில் 50 காதுகளைத் தைக்க வேண்டும். இணைக்கப்பட்ட மற்றொரு கம்பளியின் ஓரத்திலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு கம்பளியின் காதுகள் மற்ற கம்பளியின் காதுகளோடு இணையும்படி இருக்க வேண்டும். 11 செம்பினால் 50 கொக்கிகளைச் செய்து, அந்தக் கொக்கிகளால் காதுகளை இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரத்துக்கும் ஒரே கம்பளி இருக்கும். 12 நாரிழை விரிப்பைவிட நீளமாக இருக்கும் கம்பளியின் பகுதி தொங்கவிடப்பட வேண்டும். அதாவது, வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்தில் அது இரண்டு முழத்துக்கு தொங்கவிடப்பட வேண்டும். 13 வழிபாட்டுக் கூடாரத்தின் இரண்டு பக்கங்களிலும் நீண்டிருக்கும் ஒரு முழப் பகுதியும் அப்படியே தொங்கவிடப்பட வேண்டும். அவை கூடாரத்தின் இரண்டு பக்கங்களையும் மூட வேண்டும்.
14 அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும்.+
15 வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால் செங்குத்தான சட்டங்களை* செய்ய வேண்டும்.+ 16 ஒவ்வொரு சட்டமும் 10 முழ உயரமும், ஒன்றரை முழ அகலமுமாக இருக்க வேண்டும். 17 ஒவ்வொரு சட்டத்தின் அடிபாகத்திலும் இரண்டு புடைப்புகள்* அடுத்தடுத்து இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 18 வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக 20 சட்டங்கள் செய்ய வேண்டும்.
19 அந்த 20 சட்டங்களின் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை*+ செய்ய வேண்டும்; ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைக்க வேண்டும்.+ 20 வழிபாட்டுக் கூடாரத்தின் இன்னொரு பக்கத்துக்காக, அதாவது வடக்குப் பக்கத்துக்காக, 20 சட்டங்களையும், 21 அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்ய வேண்டும். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைக்க வேண்டும். 22 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஆறு சட்டங்களைச் செய்ய வேண்டும்.+ 23 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்திலுள்ள இரண்டு மூலைகளுக்கும் இரண்டு மூலைச்சட்டங்களைச் செய்ய வேண்டும். 24 ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைக்க வேண்டும். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 25 ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டிரண்டு பாதங்கள் இருக்க வேண்டும். அதாவது, 8 சட்டங்களுக்கு 16 வெள்ளிப் பாதங்கள் இருக்க வேண்டும்.
26 வேல மரத்தால் கம்புகளைச் செய்ய வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும்.+ 27 வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும். 28 சட்டங்களை இணைப்பதற்காக அவற்றின் நடுப்பகுதியில் செருகப்படும் கம்பு, ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை ஒரே கம்பாக இருக்க வேண்டும்.
29 சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்ய வேண்டும். கம்புகளுக்கும் தங்கத் தகடு அடிக்க வேண்டும். 30 மலையில் உனக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படியே* வழிபாட்டுக் கூடாரத்தைச் செய்ய வேண்டும்.+
31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும். 32 வேல மரத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் தகடு அடிக்கப்பட்ட நான்கு தூண்களில் இந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் இந்தத் தூண்களை நிறுத்த வேண்டும். 33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும். 34 சாட்சிப் பெட்டிக்கு மூடி போட்டு, அதை மகா பரிசுத்த அறையில் வைக்க வேண்டும்.
35 திரைச்சீலைக்கு வெளிப்பக்கம் மேஜையை வைக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில், மேஜைக்கு எதிரில் குத்துவிளக்கை வைக்க வேண்டும்.+ மேஜையை வடக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். 36 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி, கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்ய வேண்டும்.+ 37 திரையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தில் ஐந்து தூண்களைச் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். அவற்றுக்காக, செம்பில் ஐந்து பாதங்களை வார்க்க வேண்டும்” என்றார்.
27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+ 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள்+ வைக்க வேண்டும். அந்தக் கொம்புகள் பலிபீடத்துடன் இணைந்தபடி இருக்க வேண்டும். பலிபீடத்துக்கு செம்பினால் தகடு அடிக்க வேண்டும்.+ 3 பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+ 4 பலிபீடத்துக்காக செம்பினால் ஒரு கம்பிவலையைச் செய்ய வேண்டும். அந்தக் கம்பிவலைக்கு மேலாக நான்கு மூலைகளிலும் நான்கு செம்பு வளையங்களைப் பொருத்த வேண்டும். 5 அந்தக் கம்பிவலையைப் பலிபீடத்தின் விளிம்புக்குக் கீழே பாதி உயரத்தில் செருகி வைக்க வேண்டும். 6 பலிபீடத்துக்காக வேல மரத்தால் கம்புகள் செய்து, அவற்றுக்குச் செம்பினால் தகடு அடிக்க வேண்டும். 7 பலிபீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கிற வளையங்களில் இந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும்.+ 8 நான்கு பக்கங்களிலும் பலகைகள் அடித்து, கீழேயும் மேலேயும் திறந்திருக்கிறபடி இந்தப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* அதைச் செய்ய வேண்டும்.+
9 வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பிரகாரத்தையும்+ அமைக்க வேண்டும். பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* மறைப்புகளைச் செய்ய வேண்டும். இவற்றின் நீளம் 100 முழமாக இருக்க வேண்டும்.+ 10 பின்பு, 20 செம்புப் பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்த வேண்டும். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்ய வேண்டும். 11 வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்ய வேண்டும். அதோடு, 20 செம்புப் பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்த வேண்டும். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும் செய்ய வேண்டும். 12 பிரகாரத்தின் மேற்குப் பக்கத்துக்காக, 50 முழ அகலத்துக்கு மறைப்புகளைச் செய்ய வேண்டும். அவற்றுக்கு 10 கம்பங்களையும் 10 பாதங்களையும் செய்ய வேண்டும். 13 சூரியன் உதிக்கிற கிழக்குப் பக்கத்தில் பிரகாரத்தின் அகலம் 50 முழமாக இருக்க வேண்டும். 14 அதன் ஒரு பக்கத்தில் 15 முழத்துக்கு மறைப்புகள் இருக்க வேண்டும். அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் இருக்க வேண்டும்.+ 15 அதன் இன்னொரு பக்கத்தில் 15 முழத்துக்கு மறைப்புகள் இருக்க வேண்டும். அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் இருக்க வேண்டும்.
16 பிரகார நுழைவாசலில் ஒரு திரையைத் தொங்கவிட வேண்டும். நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை+ ஆகியவற்றால் 20 முழ நீளத்துக்கு அதைச் செய்ய வேண்டும். அதற்கு நான்கு கம்பங்களையும் நான்கு பாதங்களையும் செய்ய வேண்டும்.+ 17 பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா கம்பங்களுக்கும் வெள்ளி இணைப்புகளையும் வெள்ளிக் கொக்கிகளையும் செய்ய வேண்டும். ஆனால், அவற்றின் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும்.+ 18 உயர்தரமான திரித்த நாரிழையில் 100 முழ நீளத்திலும்,+ 50 முழ அகலத்திலும், 5 முழ உயரத்திலும் பிரகாரத்துக்குத் தடுப்பு அமைக்க வேண்டும். அதன் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும். 19 வழிபாட்டுக் கூடாரத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பாத்திரங்களையும், பொருள்களையும், கூடார ஆணிகளையும், பிரகாரத்துக்கான மற்ற எல்லா ஆணிகளையும் செம்பினால் செய்ய வேண்டும்.+
20 விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி நீ இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும்.+ 21 சந்திப்புக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் உள்ள திரைச்சீலைக்கு+ வெளியே அந்த விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அவை சாயங்காலத்திலிருந்து காலைவரை யெகோவாவின் முன்னிலையில் எரியும்படி ஆரோனும் அவருடைய மகன்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.+ இஸ்ரவேலர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் இது”+ என்றார்.
28 பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+ 2 உன் சகோதரன் ஆரோனுக்கு மதிப்பும் அழகும்+ சேர்க்கிற பரிசுத்த உடைகளை நீ செய்ய வேண்டும். 3 நான் யாருக்கெல்லாம் ஞானமும் திறமையும் தந்திருக்கிறேனோ அவர்கள் எல்லாரிடமும் பேசி ஆரோனுக்காக உடைகளைச் செய்யச் சொல்.+ குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோன் புனிதமாக்கப்பட்டிருப்பதை அந்த உடைகள் காட்டும்.
4 அவர்கள் செய்ய வேண்டிய உடைகள் இவைதான்: மார்ப்பதக்கம்,+ ஏபோத்,+ கையில்லாத அங்கி,+ கட்டம்போட்ட அங்கி, தலைப்பாகை,+ இடுப்புக்கச்சை.+ உன் அண்ணன் ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக இந்தப் பரிசுத்த உடைகளை அவர்கள் செய்ய வேண்டும். 5 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை* ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
6 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர்கள் ஏபோத்தைச் செய்து, அதில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 7 ஏபோத்துக்கு இரண்டு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைக்க வேண்டும். 8 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை+ இணைக்க வேண்டும். ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
9 இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து,+ அவற்றில் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களைப் பொறிக்க வேண்டும்.+ 10 ஒரு கல்லில் ஆறு பெயர்களையும் இன்னொரு கல்லில் ஆறு பெயர்களையும் பொறிக்க வேண்டும். அவர்கள் பிறந்த வரிசையின்படியே அந்தப் பெயர்களைப் பொறிக்க வேண்டும். 11 செதுக்கு வேலை செய்கிற ஒருவர் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்த இரண்டு கற்களிலும் முத்திரையைப் போலப் பொறிக்க வேண்டும்.+ பின்பு, அந்தக் கற்களைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும். 12 இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி, அந்த இரண்டு கற்களை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்த வேண்டும்.+ அவர்களுடைய பெயர்களை ஆரோன் தன்னுடைய இரண்டு தோள்பட்டைகளிலும் நினைவுச் சின்னமாக யெகோவாவின் முன்னிலையில் சுமக்க வேண்டும். 13 தங்கத்தில் வில்லைகளையும், 14 சுத்தமான தங்கத்தில் இரண்டு முறுக்குச் சங்கிலிகளையும் செய்ய வேண்டும்.+ அந்த முறுக்குச் சங்கிலிகளை வில்லைகளுடன் இணைக்க வேண்டும்.+
15 தையல் வேலைப்பாடு செய்கிறவரை வைத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய்ய வேண்டும்.+ ஏபோத்தைப் போலவே இதையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.+ 16 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளத்திலும் ஒரு சாண் அகலத்திலும் இருக்க வேண்டும். 17 அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதிக்க வேண்டும். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 18 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 19 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 20 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். இவற்றைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும். 21 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட வேண்டும்.
22 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்ய வேண்டும்.+ 23 அதோடு, இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளிலும் பொருத்த வேண்டும். 24 இரண்டு தங்க முறுக்குச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் மேல்முனைகளில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்ட வேண்டும். 25 அந்த இரண்டு முறுக்குச் சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும், ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளில் இருக்கிற இரண்டு வில்லைகளில் பொருத்த வேண்டும். 26 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் உள்பக்கத்திலுள்ள இரண்டு கீழ் முனைகளில் பொருத்த வேண்டும். இவை ஏபோத்தைத் தொட்டபடி இருக்கும்.+ 27 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து அவற்றை ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளின் கீழே, அது இணைக்கப்பட்டுள்ள இடத்துக்குப் பக்கத்தில், ஏபோத்தின் இடுப்புப்பட்டைக்குக் கொஞ்சம் மேலே பொருத்த வேண்டும்.+ 28 மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு நீல நிற நாடாவால் இணைக்க வேண்டும். அப்போதுதான், மார்ப்பதக்கம் இடுப்புப்பட்டைக்கு மேலேயே, ஏபோத்தின் மேல் அசையாமல் நிற்கும்.
29 ஆரோன் பரிசுத்த அறைக்குள் போகும்போது நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைப் போட்டுக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை யெகோவாவின் முன்னிலையில் நினைவுச் சின்னமாக எப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டு போக வேண்டும். 30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் ஊரீமையும் தும்மீமையும்*+ நீ வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் வரும்போது அவை அவர் நெஞ்சுக்கு மேலே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக ஆரோன் அவற்றை யெகோவாவின் முன்னால் எப்போதும் தன் நெஞ்சுக்கு மேலே சுமக்க வேண்டும்.
31 ஏபோத்துக்கு உள்ளே போடுவதற்காகக் கையில்லாத ஒரு அங்கியை முழுக்க முழுக்க நீல நிற நூலால் செய்ய வேண்டும்.+ 32 அதன் நடுவில் கழுத்துப் பகுதியை அமைக்க வேண்டும். அந்தக் கழுத்துப் பகுதியைச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் நெசவாளர் நெய்ய வேண்டும். அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதியைப் போல் இருக்க வேண்டும்; அப்போதுதான், அது கிழியாமல் இருக்கும். 33 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் மாதுளம்பழங்கள் போல செய்து, அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். தங்கத்தில் மணிகள்போல் செய்து இடையிடையே வைத்துத் தைக்க வேண்டும். 34 ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம், ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம் என அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். 35 குருத்துவச் சேவை செய்யும்போது ஆரோன் இந்த அங்கியைப் போட்டிருக்க வேண்டும். அவன் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே யெகோவாவின் முன்னிலையில் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அந்த மணிகளின் ஓசை கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவன் கொல்லப்படுவான்.+
36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும். 37 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்ட வேண்டும்.+ அது எப்போதும் தலைப்பாகையின் முன்பக்கம் இருக்க வேண்டும். 38 அது ஆரோனின் நெற்றிமேல் இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கிற பரிசுத்தமான காணிக்கைகளின் விஷயத்தில் யாராவது பாவம் செய்தால், அதற்கு ஆரோன் பொறுப்பேற்க வேண்டும்.+ ஜனங்களை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஆரோன் எப்போதும் தன் நெற்றியில் அந்தத் தகட்டைக் கட்டியிருக்க வேண்டும்.
39 கட்டம்போட்ட அங்கியையும் தலைப்பாகையையும் உயர்தர நாரிழையால் நெய்ய வேண்டும். அதோடு, இடுப்புக்கச்சையையும் நெய்ய வேண்டும்.+
40 ஆரோனின் மகன்களுக்கு மதிப்பும் அழகும் சேர்க்கிற அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், முண்டாசுகளையும்கூட நீ செய்ய வேண்டும்.+ 41 உன் அண்ணன் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவற்றை நீ போட்டுவிட வேண்டும். அவர்களை அபிஷேகம் செய்து,+ புனிதப்படுத்தி, குருமார்களாக நியமிக்க+ வேண்டும். 42 அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளை மறைப்பதற்காக நாரிழையில் கால்சட்டைகளைச் செய்ய வேண்டும்.+ அவை இடுப்பிலிருந்து தொடைவரை நீண்டதாக இருக்க வேண்டும். 43 ஆரோனும் அவனுடைய மகன்களும் சந்திப்புக் கூடாரத்துக்கு வரும்போதும், பரிசுத்த இடத்திலுள்ள பலிபீடத்தில் சேவை செய்ய வரும்போதும் அந்தக் கால்சட்டையைப் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தக் குற்றத்துக்காக அவர்கள் சாவார்கள். அவருக்கும் அவருடைய வருங்காலச் சந்ததிக்கும் இது நிரந்தரச் சட்டமாக இருக்கும்” என்றார்.
29 பின்பு அவர், “எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக நீ அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும். அதற்காக நீ செய்ய வேண்டியது இதுதான்: ஒரு இளம் காளையையும் எந்தக் குறையும் இல்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் தேர்ந்தெடு.+ 2 நைசான கோதுமை மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளையும், எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும்+ செய்து, 3 ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வா.+ அதோடு, நீ தேர்ந்தெடுத்த காளையையும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவா.
4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+ 5 பின்பு கட்டம்போட்ட அங்கியையும், கையில்லாத உள்ளங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் எடுத்து வந்து ஆரோனுக்குப் போட்டுவிடு. ஏபோத்தின் இடுப்புப்பட்டையைக் கட்டிவிடு.+ 6 தலைப்பாகையை அவன் தலையில் வை. அதன்மேல் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தைக் கட்டிவிடு.*+ 7 அபிஷேகத் தைலத்தை+ அவன் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்.+
8 பின்பு, அவனுடைய மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கும் அங்கிகளைப் போட்டுவிடு.+ 9 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்பில் கச்சையைக் கட்டிவிடு. அவர்களுடைய தலையில் முண்டாசையும் கட்டிவிடு. அவர்கள்தான் குருமார்களாக இருப்பார்கள், என்றென்றும் இதுதான் என் சட்டம்.+ எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இப்படித்தான் நீ நியமிக்க வேண்டும்.+
10 பின்பு, சந்திப்புக் கூடாரத்துக்கு முன்பு காளையைக் கொண்டுவா. ஆரோனும் அவனுடைய மகன்களும் அந்தக் காளையின் தலைமேல் தங்கள் கைகளை வைக்க வேண்டும்.+ 11 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில், யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையை வெட்டு.+ 12 காளையின் இரத்தத்தை உன் விரல்களில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசு.+ மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடு.+ 13 அதன் குடல்களைச் சுற்றியுள்ள எல்லா கொழுப்பையும்+ கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.+ 14 ஆனால், காளையின் சதையையும் தோலையும் சாணத்தையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரித்துவிடு. இந்தக் காளைதான் பாவப் பரிகார பலி.
15 பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவா. அதன் தலைமேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் கைகளை வைக்க வேண்டும்.+ 16 நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி.+ 17 செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவு.+ அதன் தலையையும் மற்ற எல்லா துண்டுகளையும் அதனதன் இடத்தில் வை. 18 முழு செம்மறியாட்டுக் கடாவையும் பலிபீடத்தின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.
19 பின்பு, இன்னொரு செம்மறியாட்டுக் கடாவையும் நீ கொண்டுவா. ஆரோனும் அவனுடைய மகன்களும் அதன் தலைமேல் கைகளை வைக்க வேண்டும்.+ 20 நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும் அவனுடைய மகன்களின் வலது காது மடலிலும் பூசு. அதோடு, அவர்களுடைய வலது கையின் கட்டைவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசு. மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி. 21 பின்பு, பலிபீடத்தின் மேலுள்ள அந்த இரத்தத்தில் கொஞ்சத்தையும் அபிஷேகத் தைலத்தில்+ கொஞ்சத்தையும் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவனுடைய உடைகள்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் தெளி. அப்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தமாவார்கள், அவர்களுடைய உடைகளும் பரிசுத்தமாகும்.+
22 அது குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடா என்பதால் அதன் கொழுப்பையும், கொழுப்பு நிறைந்த அதன் வாலையும், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும்,+ அதன் வலது காலையும் எடுத்துக்கொள்.+ 23 அதோடு, யெகோவாவின் முன்னிலையில் புளிப்பில்லாத ரொட்டிகள் வைக்கப்பட்டுள்ள கூடையிலிருந்து ஒரு வட்ட ரொட்டியையும், எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட ஒரு வட்ட ரொட்டியையும், ஒரு மெல்லிய ரொட்டியையும் எடுத்துக்கொள். 24 அவை எல்லாவற்றையும் ஆரோனின் கையிலும் அவருடைய மகன்களின் கையிலும் வைத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. 25 பின்பு, அவற்றை அவர்களுடைய கையிலிருந்து எடுத்து, பலிபீடத்திலுள்ள தகன பலியின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.
26 பின்பு, ஆரோனைக் குருவாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* எடுத்து,+ அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. அது உனக்குச் சேர வேண்டிய பங்கு. 27 நீ அசைவாட்டுகிற அந்த மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய கால் பகுதியையும் புனிதப்படுத்து. அவை ஆரோனையும் அவனுடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவிலிருந்து+ எடுக்கப்பட்டவை. 28 இஸ்ரவேலர்கள் அவற்றை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுக்க வேண்டும். இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகப் பின்பற்ற வேண்டும்.+ ஏனென்றால், அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பரிசுத்தமான பங்கு. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் சமாதான பலிகளைச் செலுத்தும்போதெல்லாம் அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த பங்காகக் கொடுக்கப்பட வேண்டும்.+
29 ஆரோனுக்குப்பின் அவனுடைய மகன்கள்* அபிஷேகம் செய்யப்பட்டு குருமார்களாக நியமிக்கப்படும்போது, அவனுடைய பரிசுத்த உடைகளை+ அவர்கள் போட்டுக்கொள்வார்கள்.+ 30 இப்படி, ஆரோனுக்குப்பின் குருவாக நியமிக்கப்பட்டு சந்திப்புக் கூடாரத்தின் பரிசுத்த இடத்தில் சேவை செய்ய வருகிறவர், இந்த உடைகளை ஏழு நாட்களுக்குப் போட்டுக்கொள்ள வேண்டும்.+
31 குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீ பரிசுத்தமான இடத்தில் வேக வைக்க வேண்டும்.+ 32 ஆரோனும் அவனுடைய மகன்களும், அந்த இறைச்சியையும் கூடையிலுள்ள ரொட்டிகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சாப்பிட வேண்டும்.+ 33 அவர்களை குருமார்களாக நியமிப்பதற்காகவும் புனிதப்படுத்துவதற்காகவும் செலுத்தப்பட்ட பாவப் பரிகாரப் பலிகளை அவர்கள் சாப்பிட வேண்டும். தகுதி இல்லாதவர்கள்* அவற்றைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை பரிசுத்தமானவை.+ 34 குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற பலியிலும் ரொட்டியிலும் காலைவரை ஏதாவது மீதியாக இருந்தால் அவற்றை நீ சுட்டெரிக்க வேண்டும்.+ அவை பரிசுத்தமானவை என்பதால் அவற்றைச் சாப்பிடக் கூடாது.
35 நான் உனக்குச் சொன்னபடியெல்லாம் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்ய வேண்டும். அவர்களைக் குருமார்களாய் நியமிப்பதற்காக ஏழு நாட்கள் எடுத்துக்கொள்.+ 36 பாவப் பரிகார பலியாகிய காளையைத் தினமும் பலி கொடுத்து பாவப் பரிகாரம் செய். பலிபீடத்தின் மேல் பலிகள் செலுத்தி அதைச் சுத்திகரி. அதைப் புனிதப்படுத்துவதற்காக அபிஷேகம் செய்.+ 37 பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக நீ ஏழு நாட்கள் எடுத்துக்கொள். அது மகா பரிசுத்த பலிபீடமாய் ஆவதற்காக நீ அதைப் புனிதப்படுத்த வேண்டும்.+ பரிசுத்தமாக இருக்கிறவர்கள் மட்டும்தான் அந்தப் பலிபீடத்தைத் தொட வேண்டும்.
38 ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைப் பலிபீடத்தின் மேல் தினமும் நீ பலி கொடு.+ 39 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைச் சாயங்காலத்திலும் பலி கொடு.+ 40 ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து. 41 காலையில் செய்தது போலவே சாயங்காலத்திலும் இரண்டாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியை உணவுக் காணிக்கையோடும் திராட்சமது காணிக்கையோடும் பலி கொடுக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடித்த வாசனையான தகன பலியாக அதைச் செலுத்த வேண்டும். 42 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தலைமுறை தலைமுறையாக அதைத் தினமும் யெகோவாவின் முன்னிலையில் எரிக்க வேண்டும். உன்னிடம் பேசுவதற்காக ஜனங்கள் முன்னால் நான் அங்கே தோன்றுவேன்.+
43 நான் அங்கே இஸ்ரவேலர்கள் முன்னால் தோன்றும்போது, அந்த இடம் என் மகிமையால் புனிதமாகும்.+ 44 சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் புனிதமாக்குவேன். எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வதற்காக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் புனிதமாக்குவேன்.+ 45 நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ 46 அவர்கள் நடுவில் தங்குவதற்காக அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ நானே அவர்கள் கடவுளாகிய யெகோவா” என்றார்.
30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+ 2 அது சதுரமாக இருக்க வேண்டும். அதன் நீளம் ஒரு முழமாகவும்,* அகலம் ஒரு முழமாகவும், உயரம் இரண்டு முழமாகவும் இருக்க வேண்டும். அதன் கொம்புகள் அதனோடு இணைந்திருக்க வேண்டும்.+ 3 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடி. அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய். 4 பீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்து. 5 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். 6 நான் உன் முன்னால் தோன்றும் இடத்துக்கு+ எதிரே, அதாவது சாட்சிப் பெட்டிக்கும் அதன் மூடிக்கும் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு எதிரே, அந்தப் பீடத்தை வைக்க வேண்டும்.+
7 ஆரோன்+ தினமும் காலையில் விளக்குகளைத் தயார்படுத்த+ வரும்போது அந்தப் பீடத்தில் தூபப்பொருளை+ எரிக்க வேண்டும்.+ 8 சாயங்காலத்தில் ஆரோன் விளக்கேற்றி வைக்கும்போதும் தூபப்பொருளை எரிக்க வேண்டும். இப்படி, தலைமுறை தலைமுறையாக யெகோவாவின் முன்னிலையில் தவறாமல் தூபப்பொருளை எரிக்க வேண்டும். 9 அந்தப் பீடத்தின் மேல் தூபப்பொருளை அத்துமீறி* எரிக்கக் கூடாது.+ அதன்மேல் தகன பலியையோ உணவுக் காணிக்கையையோ திராட்சமது காணிக்கையையோ செலுத்தக் கூடாது. 10 வருஷத்துக்கு ஒருமுறை ஆரோன் அந்தப் பீடத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.+ அதாவது, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அந்தப் பீடத்தின் கொம்புகள்மேல் பூசி அதைச் சுத்திகரிக்க வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட வேண்டும். இது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
11 பின்பு யெகோவா மோசேயிடம், 12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது. 13 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும் அரை சேக்கல்* கொடுக்க வேண்டும். பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி அதைக் கொடுக்க வேண்டும்.+ ஒரு சேக்கல் என்பது இருபது கேரா.* யெகோவாவுக்காகக் கொடுக்கப்படும் காணிக்கை அரை சேக்கல்.+ 14 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும், அதாவது 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லாரும், யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும்.+ 15 உங்களுடைய உயிரை மீட்பதற்காக* யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, பணக்காரன் அரை சேக்கலுக்கு* அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, ஏழை அதற்குக் குறைவாகவும் கொடுக்கக் கூடாது. 16 பாவப் பரிகாரத்துக்காக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற வெள்ளிக் காசை நீ வசூலித்து சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்குக் கொடுத்துவிடு. அப்போது யெகோவா அவர்களை நினைத்துப் பார்ப்பார், அவர்களுடைய உயிரும் மீட்கப்படும்” என்றார்.
17 பின்பு யெகோவா மோசேயிடம், 18 “ஒரு செம்புத் தொட்டியையும் அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செய்.+ சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் அந்தத் தொட்டியை வைத்து அதில் தண்ணீர் ஊற்று.+ 19 ஆரோனும் அவனுடைய மகன்களும் அங்கே தங்கள் கைகால்களைக் கழுவ வேண்டும்.+ 20 அவர்கள் சந்திப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போதோ, யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்தவும்* சேவை செய்யவும் பலிபீடத்துக்குப் போகும்போதோ தண்ணீரால் கைகால்களைக் கழுவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் சாக மாட்டார்கள். 21 அவர்கள் சாகாமல் இருப்பதற்காகத் தங்களுடைய கைகால்களைக் கழுவ வேண்டும். இது அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் நிரந்தரக் கட்டளையாக இருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.+
22 பின்பு யெகோவா மோசேயிடம், 23 “தரமான வாசனைப் பொருள்களை எடுத்துக்கொள். கெட்டியான வெள்ளைப்போளம்* 500 சேக்கல், வாசனையான லவங்கப்பட்டை 250 சேக்கல், வாசனையான வசம்பு 250 சேக்கல், 24 கருவாய்ப்பட்டை 500 சேக்கல் ஆகியவற்றைப் பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி+ எடுத்துக்கொள். அதோடு மூன்றரை லிட்டர்* ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள். 25 இதையெல்லாம் பக்குவமாக* கலக்கி, அபிஷேகத் தைலத்தைத் தயாரி.+ அதுதான் பரிசுத்த அபிஷேகத் தைலம்.
26 சந்திப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்.+ 27 அதோடு, மேஜையையும் அதனுடன் சேர்ந்த பாத்திரங்களையும், குத்துவிளக்கையும் அதனுடன் சேர்ந்த பொருள்களையும், தூபபீடத்தையும், 28 தகன பலிக்கான பலிபீடத்தையும் அதனுடன் சேர்ந்த பாத்திரங்களையும், தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய். 29 அவை மகா பரிசுத்தமாக ஆகும்படி நீ அவற்றைப் புனிதப்படுத்து.+ பரிசுத்தமாக இருக்கிறவர்கள் மட்டும்தான் அவற்றைத் தொட வேண்டும்.+ 30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+
31 நீ இஸ்ரவேலர்களிடம், ‘இது தலைமுறை தலைமுறைக்கும் எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்க வேண்டும்.+ 32 யாரும் இதை உடலில் பூசிக்கொள்ளக் கூடாது. இந்தத் தைலத்தின் கலவையைப் போல நீங்கள் வேறு எதையும் தயாரிக்கக் கூடாது, இது பரிசுத்தமானது. இது எப்போதும் உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். 33 இதேபோன்ற தைலத்தைத் தயாரிக்கிறவனும், தகுதி இல்லாதவன்மேல்* இதை ஊற்றுகிறவனும் கொல்லப்பட வேண்டும்’ என்று சொல்” என்றார்.+
34 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நறுமணப் பிசின், ஒனிக்கா, கல்பான், சுத்தமான சாம்பிராணி ஆகிய வாசனைப் பொருள்களைச்+ சரிசமமாக எடுத்துக்கொள். 35 அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து+ தூபப்பொருளாகத்+ தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். 36 நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நன்றாகப் பொடியாக்கி, நான் உனக்குமுன் தோன்றும் சந்திப்புக் கூடாரத்திலுள்ள சாட்சிப் பெட்டியின் எதிரே வை. அது உங்களுக்கு மகா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். 37 அதே போன்ற தூபப்பொருள் கலவையைச் சொந்த உபயோகத்துக்காக யாரும் தயாரிக்கக் கூடாது.+ யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அதைக் கருத வேண்டும். 38 அதன் வாசனையை அனுபவித்து மகிழ்வதற்காக அதே போன்ற தூபப்பொருள் கலவையைத் தயாரிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்” என்றார்.
31 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இதோ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை+ நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ 3 நான் அவனை என்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், 4 கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும், 5 கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும்,+ எல்லா விதமான மர வேலைகள் செய்யவும்+ அவனுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தருவேன். 6 அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+ 7 சந்திப்புக் கூடாரம்,+ சாட்சிப் பெட்டி,+ அதன் மூடி,+ கூடாரத்துக்கான பொருள்கள், 8 மேஜை,+ அதற்கான பாத்திரங்கள், சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட குத்துவிளக்கு, அதற்கான பாத்திரங்கள்,+ தூபபீடம்,+ 9 தகன பலிக்கான பலிபீடம்,+ அதற்கான பாத்திரங்கள், தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 10 நன்றாக நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள், குருமார்களாகச் சேவை செய்ய அவனுடைய மகன்களுக்கு அங்கிகள்,+ 11 அபிஷேகத் தைலம், வழிபாட்டுக் கூடாரத்துக்கான தூபப்பொருள் ஆகியவற்றைச் செய்வார்கள்.+ நான் உனக்குக் கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்” என்றார்.
12 பின்பு யெகோவா மோசேயிடம், 13 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் என் ஓய்வுநாளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ அது எனக்கும் உங்களுக்கும் இடையில் தலைமுறை தலைமுறையாய் ஒரு அடையாளமாக இருக்கும். யெகோவாவாகிய நான் உங்களைப் புனிதப்படுத்துகிறேன் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்வீர்கள். 14 நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 15 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் நீங்கள் முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அது யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஓய்வுநாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16 இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும், இது ஒரு நிரந்தர ஒப்பந்தம். 17 எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார்.
18 சீனாய் மலையில் அவர் மோசேயிடம் பேசி முடித்தவுடன், தன்னுடைய சக்தியால்*+ எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைத் தந்தார்.+ அவைதான் சாட்சிப் பலகைகள்.
32 பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள். 2 அதற்கு ஆரோன், “உங்களுடைய மனைவிமக்களின் காதுகளில் இருக்கிற தங்கத் தோடுகளைக்+ கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 3 அதனால், ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போட்டிருந்த தங்கத் தோடுகளைக் கழற்றி ஆரோனிடம் கொடுத்தார்கள். 4 ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+
5 ஆரோன் அதைப் பார்த்தபோது, அந்தச் சிலைக்கு முன்னால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். பின்பு, “நாளைக்கு யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவோம்” என்று அறிவித்தார். 6 அதனால், ஜனங்கள் விடியற்காலையிலேயே எழுந்து தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். அதன்பின் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள்.+
7 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த ஜனங்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள்.+ 8 இவ்வளவு சீக்கிரத்தில் என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்!+ கன்றுக்குட்டி சிலையைச் செய்து அதை வணங்குகிறார்கள். அதற்குப் பலி செலுத்தி, ‘இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார். 9 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள்*+ என்று எனக்குத் தெரியும். 10 இவர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, இவர்களை அடியோடு அழிக்கலாம் என்றிருக்கிறேன். அதேசமயத்தில், உன் மூலமாக ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கப்போகிறேன்”+ என்றார்.
11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+ 12 எகிப்தியர்கள் உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவதற்கு ஏன் இடம் தர வேண்டும்? அவர்கள், ‘இஸ்ரவேலர்களை மலையில் கொன்றுபோட்டு இந்தப் பூமியிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுதான் அவர்களுடைய கடவுள் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்’ என்று சொல்வார்களே.+ அதனால் உங்களுடைய கடும் கோபத்தை விட்டுவிடுங்கள். தயவுசெய்து, இந்த ஜனங்களை அழிக்க வேண்டுமென்ற உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். 13 உங்கள் ஊழியர்களான ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்துப் பாருங்கள். அவர்களிடம், ‘உங்கள் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்,+ நான் தேர்ந்தெடுத்த இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததிக்கு நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்று உங்கள்மேல் சத்தியம் செய்து கொடுத்தீர்களே” என்றார்.
14 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தன் ஜனங்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+
15 அதன்பின், மோசே இரண்டு சாட்சிப் பலகைகளையும்+ கையில் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.+ அந்தக் கற்பலகைகளின் இரண்டு பக்கங்களிலும், அதாவது முன்புறத்திலும் பின்புறத்திலும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 16 அந்தக் கற்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. அதன்மேல் இருந்த எழுத்துக்கள் அவரால் பொறிக்கப்பட்டவை.+ 17 ஜனங்கள் போடுகிற சத்தத்தை யோசுவா கேட்டபோது அவர் மோசேயிடம், “முகாமில் போர் சத்தம் கேட்கிறதே” என்றார். 18 அதற்கு மோசே,
“அது வெற்றிப் பாடலின் சத்தம் போலவும் தெரியவில்லை,
தோல்விப் பாடலின்* சத்தம் போலவும் தெரியவில்லை.
வேறு விதமான பாடல் சத்தம்தான் கேட்கிறது”
என்றார்.
19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+ 20 பின்பு, அவர்கள் செய்த கன்றுக்குட்டி சிலையை நெருப்பில் சுட்டெரித்து, பொடிப் பொடியாக நொறுக்கி,+ தண்ணீர்மேல் தூவி, இஸ்ரவேலர்களைக் குடிக்கச் சொன்னார்.+ 21 அதன்பின் அவர் ஆரோனிடம், “இந்த ஜனங்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் இவ்வளவு பெரிய பாவத்தைச் சுமத்திவிட்டீர்களே” என்றார். 22 அதற்கு ஆரோன், “எஜமானே, கோபப்படாதீர்கள். இந்த ஜனங்களுடைய கெட்ட புத்தி உங்களுக்கே தெரியும்.+ 23 அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்’+ என்று கேட்டார்கள். 24 அதனால் நான் அவர்களிடம், ‘நீங்கள் போட்டிருக்கிற தங்க நகைகளைக் கழற்றிக் கொடுங்கள்’ என்றேன். அவர்கள் கொடுத்த தங்கத்தை நெருப்பில் போட்டேன், இந்தக் கன்றுக்குட்டி வந்தது” என்று சொன்னார்.
25 ஆரோன் கண்டிக்காமல் விட்டுவிட்டதால் அந்த ஜனங்கள் தறிகெட்டுப்போய், எதிரிகள்முன் அவமானத்தைத் தேடிக்கொண்டதை மோசே பார்த்தார். 26 பின்பு முகாமின் வாசலில் நின்றுகொண்டு, “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்? என்னிடம் வாருங்கள்!”+ என்றார். உடனே, லேவியர்கள் எல்லாரும் அவரிடம் கூடிவந்தார்கள். 27 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள், முகாமின் ஒவ்வொரு வாசலுக்கும் போய் உங்கள் சகோதரனையும் அக்கம்பக்கத்தில் இருப்பவனையும் நெருங்கிய நண்பனையும் வெட்டிப்போடுங்கள்’”+ என்றார். 28 மோசே சொன்னபடியே லேவியர்கள் செய்தார்கள். அதனால், அந்த நாளில் சுமார் 3,000 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். 29 அப்போது மோசே, “இன்று உங்களை யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணியுங்கள். சொந்த மகன் என்றோ சகோதரன் என்றோ பார்க்காமல் எல்லாரையும் கொன்றுபோட்டீர்களே.+ இன்று அவர் உங்களை ஆசீர்வதிப்பார்”+ என்றார்.
30 அடுத்த நாள் மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் மகா பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். உங்கள் பாவத்துக்கு நான் ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என்பதை யெகோவாவிடம் போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்”+ என்றார். 31 பின்பு மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “இந்த ஜனங்கள் மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்! தங்கத்தில் சிலை செய்து வணங்கியிருக்கிறார்கள்!+ 32 உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இவர்களுடைய பாவத்தை மன்னியுங்கள்.+ இல்லையென்றால், தயவுசெய்து உங்களுடைய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடுங்கள்”+ என்றார். 33 அதற்கு யெகோவா மோசேயிடம், “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன். 34 நீ இப்போது கீழே போ. நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்.+ என்னுடைய தீர்ப்பு நாளில், அந்த ஜனங்களுடைய பாவத்துக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றார். 35 அந்த ஜனங்கள் ஆரோன் மூலம் கன்றுக்குட்டி செய்ததற்காக யெகோவா அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்க ஆரம்பித்தார்.
33 பின்பு யெகோவா மோசேயிடம், “எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த ஜனங்களோடு இங்கிருந்து கிளம்பிப் போ. ‘உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்’ என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த இடத்துக்குப் போ.+ 2 நான் என் தூதரை உங்களுக்கு முன்னால் அனுப்பி+ கானானியர்கள், எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் துரத்திவிடுவேன்.+ 3 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு நீங்கள் போங்கள்.+ ஆனால், நான் உங்களோடு வர மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்;+ உங்கள் பிடிவாதத்தைப் பார்த்து வழியில் நான் உங்களை அழித்தாலும் அழித்துவிடலாம்”+ என்றார்.
4 இந்தக் கடுமையான வார்த்தைகளைக் கேட்டபோது ஜனங்கள் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள். யாருமே நகைகளைப் போட்டுக்கொள்ளவில்லை. 5 யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்.+ நான் நினைத்தால் உங்கள் நடுவில் வந்து ஒரே நொடியில் உங்களை அழிக்க முடியும்.+ அதனால், உங்களை என்ன செய்யலாம் என்று நான் முடிவுசெய்யும் வரையில், நகைகளைப் போட்டுக்கொள்ளாமல் இருங்கள்’” என்றார். 6 அதனால், ஓரேப் மலையில் கூடியிருந்த சமயத்திலிருந்து இஸ்ரவேலர்கள் நகைகளைப் போட்டுக்கொள்ளவில்லை.
7 அப்போது, மோசே தன் கூடாரத்தைப் பிரித்து முகாமுக்கு வெளியே கொஞ்சத் தூரத்தில் அமைத்தார். அதை அவர் சந்திப்புக் கூடாரம் என்று அழைத்தார். யெகோவாவிடம் விசாரிப்பதற்காக+ ஜனங்கள் முகாமுக்கு வெளியிலிருந்த அந்தச் சந்திப்புக் கூடாரத்துக்குப் போய் வந்தார்கள். 8 மோசே அந்தக் கூடாரத்துக்குப் போகும்போதெல்லாம் ஜனங்கள் அவரவர் கூடார வாசலில் எழுந்து நிற்பார்கள். அவர் அந்தக் கூடாரத்துக்குள் நுழையும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். 9 மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+ 10 கூடார வாசலில் மேகத் தூண் நிற்பதை ஜனங்கள் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் அவரவர் கூடார வாசலில் எழுந்து நின்று தலைவணங்குவார்கள். 11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார்.
12 மோசே யெகோவாவிடம், “‘இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ’ என்று சொல்கிறீர்கள். ஆனால், என்னோடு யாரை அனுப்புவீர்கள் என்று இன்னும் சொல்லவில்லையே. அதோடு, ‘உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்,* நீ எனக்குப் பிரியமானவன்’ என்று சொன்னீர்கள். 13 நான் உங்களுக்குப் பிரியமானவனாக இருந்தால், தயவுசெய்து உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.+ அப்போதுதான் நான் உங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும், எப்போதும் உங்களுக்குப் பிரியமானவனாக இருக்க முடியும். இந்தத் தேசத்தார் உங்களுடைய சொந்த ஜனங்கள் என்பதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்”+ என்றார். 14 அதற்கு அவர், “நான் உன்னோடு வருவேன்,+ உனக்கு ஓய்வு தருவேன்”+ என்றார். 15 அப்போது மோசே, “நீங்கள் எங்களோடு வரவில்லையென்றால், இங்கிருந்து எங்களைப் போகச் சொல்லாதீர்கள். 16 நீங்கள் என்மேலும் உங்களுடைய ஜனங்கள்மேலும் பிரியமாக இருக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? நீங்கள் எங்களோடு வந்தால்தானே தெரியும்?+ அப்போதுதானே நானும் உங்கள் ஜனங்களும் இந்தப் பூமியிலுள்ள மற்ற எல்லாரையும்விட விசேஷமானவர்களாக இருப்போம்?”+ என்று கேட்டார்.
17 அப்போது யெகோவா மோசேயிடம், “இந்தத் தடவையும் நீ கேட்கிறபடி செய்கிறேன். ஏனென்றால், நீ எனக்குப் பிரியமானவன். உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார். 18 அதற்கு மோசே, “தயவுசெய்து உங்கள் மகிமையை எனக்குக் காட்டுங்கள்” என்றார். 19 ஆனால் அவர், “நான் உன் முன்னால் கடந்துபோவேன். அப்போது, நான் எவ்வளவு நல்லவர் என்று நீ பார்ப்பாய். யெகோவா என்ற என் பெயரைப் பற்றி உன் முன்னால் அறிவிப்பேன்.*+ யாருக்குக் கருணை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கருணை காட்டுவேன். யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்”+ என்றார். 20 அதோடு, “நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால், என்னைப் பார்க்கிற எந்த மனுஷனும் உயிரோடு இருக்க முடியாது” என்றார்.
21 பின்பு யெகோவா, “இதோ, என் பக்கத்தில் ஒரு இடம் இருக்கிறது. இந்தப் பாறையின் மேல் நின்றுகொள். 22 என் மகிமை கடந்துபோகும்போது, உன்னை இந்தப் பாறையின் குகையில் வைப்பேன். நான் கடந்துபோகிற வரைக்கும் என் கையால் உன்னை மறைத்துப் பாதுகாப்பேன். 23 அதன்பின் என் கையை எடுத்துவிடுவேன், நீ என் பின்பக்கத்தைப் பார்ப்பாய். ஆனால், என் முகத்தைப் பார்க்க மாட்டாய்”+ என்றார்.
34 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+ 2 நீ நாளை காலையிலேயே சீனாய் மலை உச்சிக்கு ஏறிவந்து அங்கே என் முன்னிலையில் நிற்க வேண்டும். அதற்காகத் தயாராகிக்கொள்.+ 3 ஆனால், யாரும் உன்னோடு வரக் கூடாது. மலைமேல் வேறு யாரையுமே நான் பார்க்கக் கூடாது. அந்த மலைக்கு முன்னால் ஆடுமாடுகள்கூட மேயக் கூடாது”+ என்றார்.
4 அதனால், முதல் கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை மோசே வெட்டி எடுத்துக்கொண்டார். பின்பு விடியற்காலையிலேயே எழுந்து, யெகோவா சொன்னபடி அந்த இரண்டு கற்பலகைகளையும் கையில் எடுத்துக்கொண்டு சீனாய் மலைமேல் ஏறிப்போனார். 5 யெகோவா மேகத்தில் இறங்கி வந்து+ மோசேக்குப் பக்கத்தில் நின்றார். பின்பு, யெகோவா என்ற தன்னுடைய பெயரைப் பற்றி அறிவித்தார்.*+ 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+ 7 ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.+ ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.+ தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்”+ என்று சொன்னார்.
8 உடனே மோசே சாஷ்டாங்கமாக விழுந்தார். 9 பின்பு, “யெகோவாவே, என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து எங்களோடு வாருங்கள், எங்கள் நடுவில் இருங்கள்.+ யெகோவாவே, நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்,+ எங்கள் குற்றத்தையும் பாவத்தையும் மன்னியுங்கள்.+ எங்களை உங்களுடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். 10 அதற்கு அவர், “இதோ, நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். இதுவரை இந்த உலகத்தில் நடக்காத அற்புதங்களை உங்கள் எல்லாருக்கும் முன்னால் நடத்திக் காட்டுவேன்.+ வேறு எந்தத் தேசத்தார் முன்பாகவும் செய்யாத அதிசயங்களைச் செய்வேன். யெகோவாவாகிய நான் உங்களுக்காகச் செய்யும் பிரமிப்பூட்டுகிற செயல்களை உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் பார்ப்பார்கள்.+
11 இன்று நான் உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ எமோரியர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் உங்களைவிட்டுத் துரத்துவேன்.+ 12 நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+ 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+ 14 வேறொரு தெய்வத்தை நீங்கள் வணங்கக் கூடாது.+ யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள் என்பது எல்லாருக்கும் தெரியும். உண்மையில், அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.+ 15 மற்ற தேசத்து ஜனங்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால், அவர்கள் என்னை வணங்காமல் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலி செலுத்தும்போது,+ உங்களையும் கூப்பிடுவார்கள். அவர்கள் பலி செலுத்துவதை நீங்களும் சாப்பிடுவீர்கள்.+ 16 அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+
17 நீங்கள் சிலைகளைச் செய்து வணங்கக் கூடாது.+
18 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப்* மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில், புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள்.
19 உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் பிள்ளைகளும் சரி, உங்கள் ஆடுமாடுகள் போடுகிற முதல் ஆண்குட்டிகளும் கன்றுகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ 20 கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+ யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.
21 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாள் உங்களுக்கு ஓய்வுநாள்.+ உழுகிற காலத்திலும் சரி, அறுக்கிற காலத்திலும் சரி, ஏழாம் நாளில் நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.
22 உங்களுடைய கோதுமையின் முதல் விளைச்சலைச் செலுத்தி, வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். வருஷத்தின் முடிவில், சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+
23 உண்மை எஜமானும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+ 24 மற்ற தேசத்தாரை உங்கள் முன்பிருந்து நான் துரத்திவிடுவேன்.+ உங்கள் எல்லையை விரிவாக்குவேன். வருஷத்துக்கு மூன்று தடவை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சன்னிதிக்கு நீங்கள் போகும்போது, யாரும் வந்து உங்கள் தேசத்தைப் பிடிக்க மாட்டார்கள்.
25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+
26 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+
ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது”+ என்றார்.
27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார். 28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+
29 பின்பு, மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அந்தச் சாட்சிப் பலகைகள் இரண்டையும் கையில் வைத்திருந்தார்.+ அவர் அதுவரை கடவுளோடு பேசிக்கொண்டிருந்ததால், மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவருடைய முகம் ஒளிவீசியது. ஆனால், அது அவருக்குத் தெரியவில்லை. 30 அவர் முகம் ஒளிவீசியதை ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் பார்த்தார்கள். அதனால், அவருக்குப் பக்கத்தில் போகவே பயந்தார்கள்.+
31 ஆனால், மோசே அவர்களைக் கூப்பிட்டார். அப்போது, ஆரோனும் ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். மோசே அவர்களுடன் பேசினார். 32 அதன்பின், இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குப் பக்கத்தில் வந்தார்கள். சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவர் அவர்களுக்குச் சொன்னார்.+ 33 மோசே அவர்களோடு பேசி முடிக்கும்போது முகத்திரையைப் போட்டுக்கொள்வார்.+ 34 ஆனால், யெகோவாவிடம் பேசுவதற்காகப் போகும்போது அதை எடுத்துவிடுவார்.+ அதன்பின், அவர் வெளியே வந்து கடவுள் தந்த கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்குச் சொல்வார்.+ 35 இஸ்ரவேலர்கள் பார்க்கும்போது மோசேயின் முகம் ஒளிவீசும். மோசே முகத்திரையைப் போட்டுக்கொள்வார், கடவுளிடம் பேசுவதற்குப் போகும்போது மட்டும் அதை எடுத்துவிடுவார்.+
35 பிற்பாடு, மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் கூடிவரச் செய்து இப்படிச் சொன்னார்: “யெகோவா உங்களுக்கு இந்தக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்:+ 2 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாள். அது யெகோவாவுக்காக முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அந்த நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்படுவான்.+ 3 ஓய்வுநாளிலே, நீங்கள் குடியிருக்கிற எந்த இடத்திலும் நெருப்பு மூட்டக் கூடாது.”
4 பின்பு, மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும், “யெகோவாவின் கட்டளை என்னவென்றால், 5 ‘நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும்.+ யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்+ இதையெல்லாம் கொண்டுவரலாம்: தங்கம், வெள்ளி, செம்பு, 6 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர்,+ 7 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம், 8 விளக்குகளுக்கான எண்ணெய், அபிஷேகத் தைலத்துக்கும் தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+ 9 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள்+ மற்றும் பல ரத்தினக் கற்கள்.
10 உங்களில் திறமைசாலிகளாக இருக்கிற+ எல்லாரும் வந்து, யெகோவா சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 11 அதாவது, வழிபாட்டுக் கூடாரம், அதற்கான மேல்விரிப்புகள், கொக்கிகள், சட்டங்கள், கம்புகள், தூண்கள், பாதங்கள், 12 பெட்டி,+ அதன் கம்புகள்,+ அதன் மூடி,+ திரைச்சீலை,+ 13 மேஜை,+ அதன் கம்புகள், அதற்கான பாத்திரங்கள், படையல் ரொட்டிகள்,+ 14 குத்துவிளக்கு,+ அதற்கான பாத்திரங்கள், அகல் விளக்குகள், விளக்குகளுக்கான எண்ணெய்,+ 15 தூபபீடம்,+ அதன் கம்புகள், அபிஷேகத் தைலம், தூபப்பொருள்,+ வழிபாட்டுக் கூடார வாசலின் திரை, 16 தகன பலிக்கான பலிபீடம்,+ அதற்கான செம்புக் கம்பிவலை, கம்புகள், பாத்திரங்கள், தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 17 பிரகாரத்துக்கான மறைப்புகள்,+ கம்பங்கள், பாதங்கள், பிரகார நுழைவாசலுக்கான திரை, 18 கூடார ஆணிகள், பிரகாரத்துக்கான ஆணிகள், கயிறுகள்,+ 19 வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள்,+ குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவனுடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்’” என்றார்.
20 மோசே சொன்னதைக் கேட்ட பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் அங்கிருந்து போனார்கள். 21 பின்பு, யாருடைய உள்ளம் தூண்டியதோ, யாருடைய மனம் உந்துவித்ததோ,+ அவர்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அங்கு நடக்கிற வேலைகளுக்காகவும் பரிசுத்த அங்கிகள் செய்வதற்காகவும் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவந்து கொடுத்தார்கள். 22 தங்க ஊசிகளையும்,* தோடுகளையும், மோதிரங்களையும், மற்ற நகைகளையும், எல்லா விதமான தங்கச் சாமான்களையும் ஆண்கள், பெண்கள் எல்லாரும் உள்ளப்பூர்வமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாக* கொடுத்தார்கள்.+ 23 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை, வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல் ஆகியவற்றை வைத்திருந்தவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். 24 வெள்ளியும் செம்பும் வைத்திருந்த எல்லாரும் அவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். வேல மரத்துண்டுகள் வைத்திருந்த எல்லாரும் அவற்றைக் கூடார வேலைகளுக்காகக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
25 திறமையான பெண்கள்+ எல்லாரும் தங்கள் கைகளால் நூல் நூற்று, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். 26 திறமையான பெண்களில் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரை நூலாகத் திரித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
27 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள்,+ 28 பரிமளத் தைலம், விளக்குகளுக்கும் அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான எண்ணெய்+ ஆகியவற்றைத் தலைவர்கள் கொண்டுவந்தார்கள். 29 ஆண்களிலும் பெண்களிலும் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும், மோசே மூலம் யெகோவா செய்யச் சொல்லியிருந்த வேலைக்காக ஏதாவது ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு அவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்.+
30 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 31 அவரைத் தன்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், 32 கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும், 33 கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும், எல்லாவித மர வேலைப்பாடுகள் செய்யவும் அவருக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தந்திருக்கிறார். 34 கற்பிக்கும் திறமையை பெசலெயேலுக்கும் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபுக்கும்+ கடவுள் தந்திருக்கிறார். 35 எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றால் தையல்* வேலைப்பாடு செய்யவும், உடைகளை நெசவு செய்து வடிவமைக்கவும் அவர்களுக்குக் கடவுள் திறமை தந்திருக்கிறார்.+ அவர்கள் எல்லா விதமான வேலைகளையும் கலை வேலைப்பாடுகளையும் செய்வார்கள்” என்றார்.
36 அதோடு, “பெசலெயேலுடன் அகோலியாபும் மற்ற திறமைசாலிகளும் சேர்ந்து வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த வேலைகளைச் செய்வார்கள். யெகோவா சொன்னபடியே அந்த வேலைகளைச் சரியாகச் செய்ய யெகோவா அவர்களுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தந்திருக்கிறார்”+ என்று மோசே சொன்னார்.
2 பின்பு பெசலெயேலையும், அகோலியாபையும், யெகோவாவிடமிருந்து ஞானத்தைப் பெற்ற திறமைசாலிகள் எல்லாரையும்,+ அந்த வேலைகளை விருப்பப்பட்டு செய்ய யாருடைய உள்ளம் தூண்டியதோ+ அவர்கள் எல்லாரையும் மோசே கூப்பிட்டார். 3 அந்தப் பரிசுத்த வேலைகளுக்காக இஸ்ரவேலர்கள் கொடுத்த காணிக்கைகள்+ எல்லாவற்றையும் அவர்கள் மோசேயிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள். அதன் பின்பும், ஒவ்வொரு நாள் காலையிலும் ஜனங்கள் விருப்பத்தோடு காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
4 அவர்கள் அந்தப் பரிசுத்த வேலைகளை ஆரம்பித்த பின்பு, அந்தத் திறமைசாலிகள் எல்லாரும் ஒவ்வொருவராக வந்து, 5 மோசேயிடம், “யெகோவா செய்யச் சொன்ன வேலைக்காக, ஜனங்கள் தேவைக்கும் அதிகமான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள்” என்றார்கள். 6 அதனால் மோசே, “ஆண்கள், பெண்கள் யாருமே இனி எந்தப் பொருளையும் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டாம்” என்று முகாம் முழுக்க அறிவிப்பு செய்யச் சொன்னார். அதனால், ஜனங்கள் காணிக்கை கொண்டுவருவதை நிறுத்தினார்கள். 7 எல்லா வேலைகளுக்கும் தேவையான பொருள்கள் ஏற்கெனவே வந்து குவிந்திருந்தன. அவை தேவைக்கும் அதிகமாகவே இருந்தன.
8 அந்தத் திறமைசாலிகள் எல்லாரும்+ வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைத்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழை,* நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைத் தயாரித்தார்கள். இந்த விரிப்புகள்மேல் அவர்* கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்தார்.+ 9 ஒவ்வொரு விரிப்பும் 28 முழ* நீளத்திலும் 4 முழ அகலத்திலும் இருந்தது. எல்லா விரிப்புகளும் ஒரே அளவில் இருந்தன. 10 பின்பு, ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் மற்ற ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் அவர் இணைத்தார். 11 இணைக்கப்பட்ட ஒரு விரிப்பின் ஓரத்தில் நீல நிற நூலால் காதுகளை* தைத்தார். இணைக்கப்பட்ட மற்றொரு விரிப்பின் ஓரத்திலும் அதேபோல் காதுகளைத் தைத்தார். இந்த இரண்டு விரிப்புகளையும் சேர்ப்பதற்காக இப்படிச் செய்தார். 12 அந்த ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைத்தார். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேராக வைத்துத் தைத்தார். 13 தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைத்தார். இப்படி, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருந்தது.
14 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் விரிப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் 11 கம்பளிகளைச் செய்தார்.+ 15 ஒவ்வொரு கம்பளியும் 30 முழ நீளத்திலும் 4 முழ அகலத்திலும் இருந்தது. 11 கம்பளிகளும் ஒரே அளவில் இருந்தன. 16 ஐந்து கம்பளிகளை அவர் ஒன்றாக இணைத்தார். மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாக இணைத்தார். 17 இணைக்கப்பட்ட ஒரு கம்பளியின் ஓரத்தில் 50 காதுகளைத் தைத்தார். இணைக்கப்பட்ட மற்றொரு கம்பளியின் ஓரத்திலும் 50 காதுகளைத் தைத்தார். ஒரு கம்பளியின் காதுகள் மற்ற கம்பளியின் காதுகளோடு இணையும்படி அமைத்தார். 18 செம்பினால் 50 கொக்கிகளைச் செய்து, அந்தக் கொக்கிகளால் காதுகளை இணைத்தார். அப்போது, முழு கூடாரத்துக்கும் ஒரே கம்பளி இருந்தது.
19 அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்தார். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்தார்.+
20 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால்+ செங்குத்தான சட்டங்களை* செய்தார்.+ 21 ஒவ்வொரு சட்டமும் 10 முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாக இருந்தது. 22 ஒவ்வொரு சட்டத்தின் அடிபாகத்திலும் இரண்டு புடைப்புகள்* அடுத்தடுத்து இருந்தன. வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா சட்டங்களையும் இப்படித்தான் செய்தார். 23 வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக 20 சட்டங்கள் செய்தார். 24 அந்த 20 சட்டங்களுக்கும் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை* செய்தார். ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைத்தார்.+ 25 வழிபாட்டுக் கூடாரத்தின் இன்னொரு பக்கத்துக்காக, அதாவது வடக்குப் பக்கத்துக்காக, 20 சட்டங்களைச் செய்தார். 26 அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்தார். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைத்தார்.
27 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஆறு சட்டங்களைச் செய்தார்.+ 28 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்திலுள்ள இரண்டு மூலைகளுக்கும் இரண்டு மூலைச்சட்டங்களைச் செய்தார். 29 ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைத்தார். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்தார். 30 ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டிரண்டு பாதங்கள் இருந்தன. அதாவது, 8 சட்டங்களுக்கு 16 வெள்ளிப் பாதங்கள் இருந்தன.
31 பின்பு, அவர் வேல மரத்தால் கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார்.+ 32 வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்தார். 33 சட்டங்களை இணைப்பதற்காக அவற்றின் நடுப்பகுதியில் செருகப்படும் கம்பு ஒரு முனைமுதல் மறு முனைவரை ஒரே கம்பாக இருக்கும்படி செய்தார். 34 சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்தார். கம்புகளுக்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.+
35 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்தார். அதன்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 36 திரைச்சீலையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தால் நான்கு தூண்கள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்தார். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் அந்தத் தூண்களை நிறுத்தினார். 37 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்தார்.+ 38 அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்காக ஐந்து தூண்களையும் ஐந்து கொக்கிகளையும் செய்தார். தூண்களின் மேல்பகுதிகளுக்கும் இணைப்புகளுக்கும்* தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் ஐந்து பாதங்களைச் செம்பினால் செய்தார்.
37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+ 2 அதன் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் அவர் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார்.+ 3 பின்பு, தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலேயும் பொருத்தினார். இரண்டு வளையங்களை ஒரு பக்கத்திலும், மற்ற இரண்டு வளையங்களை இன்னொரு பக்கத்திலும் பொருத்தினார். 4 அடுத்ததாக, வேல மரத்தில் கம்புகள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார்.+ 5 பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த வளையங்களில் அந்தக் கம்புகளைச் செருகி வைத்தார்.+
6 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும்+ சுத்தமான தங்கத்தால் ஒரு மூடியைச்+ செய்தார். 7 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்தார்.+ அவை மூடியின்+ இரண்டு முனைகளிலும் இருந்தன. 8 ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் ஒரு கேருபீனும் இருந்தன. இப்படி, மூடியின் இரண்டு முனைகளிலும் கேருபீன்களைச் செய்து வைத்தார். 9 அந்த இரண்டு கேருபீன்களின் சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன.+ அந்தக் கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன.+
10 பின்பு, அவர் இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும்+ வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்தார். 11 அதற்குச் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார், விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 12 நான்கு விரலளவு அகலத்துக்கு* சுற்றிலும் சட்டம் அடித்து, அந்தச் சட்டத்தின் ஓரங்களில் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 13 பின்பு, தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, மேஜையின் நான்கு கால்கள் இணைக்கப்பட்டுள்ள நான்கு மூலைகளிலும் பொருத்தினார். 14 இந்த வளையங்களைச் சட்டத்துக்குப் பக்கத்தில் பொருத்தினார். மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக இந்த வளையங்களைச் செய்தார். 15 பின்பு, மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளை வேல மரத்தால் செய்து, தங்கத்தால் தகடு அடித்தார். 16 அதன்பின், மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும் செய்தார். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்தார்.+
17 பின்பு, சுத்தமான தங்கத்தால் குத்துவிளக்கு+ செய்தார். அதன் அடிப்பகுதி, தண்டு, புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார்.+ 18 விளக்குத்தண்டின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகள், இன்னொரு பக்கத்தில் மூன்று கிளைகள் என்று மொத்தம் ஆறு கிளைகள் இருந்தன. 19 ஒவ்வொரு கிளையிலும் வாதுமைப் பூ வடிவத்தில் மூன்று புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருந்தன. விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளிலும் அதேபோல் இருந்தன. 20 விளக்குத்தண்டிலும் வாதுமைப் பூ வடிவத்தில் நான்கு புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருந்தன. 21 முதல் இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அதற்கடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு என்று விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளுக்கும் இருந்தன. 22 குத்துவிளக்கின் மொட்டுகளையும் கிளைகளையும் தண்டு முழுவதையும் சுத்தமான தங்கத்தில் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார். 23 பின்பு, அதன் ஏழு அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தார். 24 குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் ஒரு தாலந்து* சுத்தமான தங்கத்தில் செய்தார்.
25 தூபம் போடுவதற்காக வேல மரத்தால் ஒரு பீடம் செய்தார்.+ அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஒரு முழமாகவும் அகலம் ஒரு முழமாகவும் உயரம் இரண்டு முழமாகவும் இருந்தது. அதனுடன் இணைந்தபடி கொம்புகள் இருந்தன.+ 26 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 27 அதைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்தினார். 28 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். 29 பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும்,+ சுத்தமான தூபப்பொருளையும்+ அவர் பக்குவமாக* தயாரித்தார்.
38 தகன பலிக்கான பலிபீடத்தை அவர் வேல மரத்தால் செய்தார். அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருந்தது.+ 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் வைத்தார். அந்தக் கொம்புகள் அதனுடன் இணைந்தபடி இருந்தன. பின்பு, அவர் அதற்குச் செம்பினால் தகடு அடித்தார்.+ 3 அதோடு, பலிபீடத்துக்கான எல்லா சாமான்களையும் அவர் செய்தார். வாளிகளையும், சாம்பல் அள்ளும் கரண்டிகளையும், கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்தார். இவை எல்லாவற்றையும் செம்பினால் செய்தார். 4 பலிபீடத்துக்காகச் செம்பினால் ஒரு கம்பிவலையைச் செய்தார். அந்தக் கம்பிவலையைப் பலிபீடத்தின் விளிம்புக்குக் கீழே பாதி உயரத்தில் செருகி வைத்தார். 5 கம்புகளைச் செருகுவதற்காக நான்கு வளையங்களை வார்த்து, செம்புக் கம்பிவலைக்குப் பக்கத்தில் நான்கு மூலைகளிலும் பொருத்தினார். 6 பின்பு, வேல மரத்தால் கம்புகள் செய்து, அவற்றுக்குச் செம்பினால் தகடு அடித்தார். 7 பலிபீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இந்தக் கம்புகளை வளையங்களில் செருகி வைத்தார். கீழேயும் மேலேயும் திறந்திருக்கிற ஒரு பெட்டியைப் போல் அந்தப் பலிபீடத்தைச் செய்தார்.
8 பின்பு, ஒரு தொட்டியையும்+ அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செம்பினால் செய்தார். சந்திப்புக் கூடார வாசலில் முறைப்படி சேவை செய்துவந்த பெண்கள் பயன்படுத்திய கண்ணாடிகளால்* அவற்றைச் செய்தார்.
9 அதன்பின், பிரகாரத்தை அமைத்தார்.+ பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* 100 முழத்துக்கு மறைப்புகளைச் செய்தார்.+ 10 செம்பினால் செய்யப்பட்ட 20 பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்தினார். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்தார். 11 வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்தார். அவற்றுக்கான 20 கம்பங்களையும் 20 பாதங்களையும் செம்பினால் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார். 12 பிரகாரத்தின் மேற்குப் பக்கத்துக்காக, 50 முழத்துக்கு மறைப்புகள் செய்தார். அவற்றுக்கு 10 கம்பங்களையும் 10 பாதங்களையும் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார். 13 பிரகாரத்தினுடைய கிழக்குப் பக்கத்தின் அகலம் 50 முழமாக இருந்தது. 14 அதன் ஒரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன. 15 அதன் இன்னொரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன. 16 பிரகாரத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்ட மறைப்புகள் எல்லாமே உயர்தரமான திரித்த நாரிழையால் செய்யப்பட்டன. 17 கம்பங்களுக்கான பாதங்கள் செம்பினால் செய்யப்பட்டன. கம்பங்களின் கொக்கிகளும் இணைப்புகளும் வெள்ளியால் செய்யப்பட்டன. அவற்றின் மேலே உள்ள குமிழ்களுக்கு வெள்ளித் தகடு அடிக்கப்பட்டது. பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா கம்பங்களுக்கும் வெள்ளி இணைப்புகள் செய்யப்பட்டன.+
18 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் பிரகார நுழைவாசலின் திரை நெய்யப்பட்டது. அது 20 முழ நீளத்திலும், பிரகாரத்தின் மறைப்புகளைப் போலவே 5 முழ உயரத்திலும் இருந்தது.+ 19 அவற்றின் நான்கு கம்பங்களும் நான்கு பாதங்களும் செம்பினால் செய்யப்பட்டன. அவற்றின் கொக்கிகளும் இணைப்புகளும் வெள்ளியால் செய்யப்பட்டன. மேலே உள்ள குமிழ்களுக்கு வெள்ளித் தகடு அடிக்கப்பட்டது. 20 கூடார ஆணிகளும் பிரகாரத்துக்கான மற்ற எல்லா ஆணிகளும் செம்பினால் செய்யப்பட்டன.+
21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள். 22 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்தார். 23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாப்+ அவருக்கு உதவியாக இருந்தார். கைவேலை செய்வதிலும், தையல்* வேலைப்பாடு செய்வதிலும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றை நெய்வதிலும் இவர் திறமைசாலியாக இருந்தார்.
24 பரிசுத்த இடத்தின் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கம் முழுவதும், அசைவாட்டும் காணிக்கையாகக் கிடைத்த தங்கமாகும்.+ அதன் எடை 29 தாலந்தும்,* 730 சேக்கலுமாக* இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது. 25 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஜனங்கள் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளி 100 தாலந்தும், 1,775 சேக்கலுமாக இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது. 26 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் 20 வயதிலும் அதற்கு அதிகமான வயதிலும் இருந்தவர்களும், பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி தலைக்கு அரை சேக்கல் கொண்டுவந்தார்கள்.+ அவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+
27 பரிசுத்த இடத்தின் பாதங்களையும் திரைச்சீலை தொங்கவிடப்பட்ட தூண்களின் பாதங்களையும் வார்க்க 100 தாலந்து ஆனது. ஒவ்வொரு பாதத்துக்கும்+ ஒரு தாலந்து என 100 பாதங்களுக்கு 100 தாலந்து ஆனது. 28 தூண்களுக்கான கொக்கிகள் 1,775 சேக்கலில் செய்யப்பட்டன. அவற்றின் மேல்பகுதிகள் தகடு அடிக்கப்பட்டு இணைக்கப்பட்டன.
29 காணிக்கையாக* கிடைத்த செம்பு 70 தாலந்தும் 2,400 சேக்கலுமாக இருந்தது. 30 அதை வைத்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கான பாதங்களையும், செம்புப் பலிபீடத்தையும், அதற்கான செம்புக் கம்பிவலையையும், அதற்கான எல்லா பாத்திரங்களையும், 31 பிரகாரத்தைச் சுற்றியுள்ள பாதங்களையும், பிரகாரத்தின் நுழைவாசலுக்கான பாதங்களையும், வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா ஆணிகளையும், பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா ஆணிகளையும்+ செய்தார்கள்.
39 பரிசுத்த இடத்தின் வேலைக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல்+ ஆகியவற்றால் அவர்கள் உடைகளை நன்றாக நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஆரோனுக்காகப் பரிசுத்த அங்கிகளைத் தயாரித்தார்கள்.+
2 அவர்* தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை* ஆகியவற்றால் ஏபோத்தைத்+ தயாரித்தார். 3 அவர்கள் தங்கத்தைச் சன்னமான தகடுகளாக அடித்தார்கள். பின்பு அவர் அந்த நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றோடு சேர்த்து தையல்* வேலைப்பாடு செய்வதற்காக அந்தத் தங்கத் தகடுகளைச் சரிகைகளாகப் பண்ணினார். 4 அதன்பின், அவர்கள் ஏபோத்துக்கு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைத்தார்கள். 5 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை இணைத்துத் தைத்தார்கள்.+ ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
6 தங்க வில்லைகளில் கோமேதகக் கற்களைப் பதித்தார்கள். முத்திரை பொறிப்பதுபோல் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்தக் கற்களில் பொறித்தார்கள்.+ 7 பின்பு அவர், இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி அவற்றை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்தினார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார். 8 அதன்பின், ஏபோத்துக்குச் செய்தது போலவே மார்ப்பதக்கத்துக்கும்+ தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 9 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருந்தது. 10 அவர்கள் அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதித்தார்கள். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதித்தார்கள். 11 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 12 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 13 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். இவற்றைத் தங்க வில்லைகளில் பதித்தார்கள். 14 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட்டன.
15 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்தார்கள்.+ 16 இரண்டு தங்க வில்லைகளையும் இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளிலும் பொருத்தினார்கள். 17 பின்பு, இரண்டு தங்க முறுக்குச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் மேல்முனைகளில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டினார்கள். 18 அதன்பின், அந்த இரண்டு முறுக்குச் சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும், ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளில் இருக்கிற இரண்டு வில்லைகளில் பொருத்தினார்கள். 19 பிறகு, தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் உள்பக்கத்திலுள்ள இரண்டு கீழ் முனைகளில் பொருத்தினார்கள். இவை ஏபோத்தைத் தொட்டபடி இருந்தன.+ 20 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து அவற்றை ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளின் கீழே, அது இணைக்கப்பட்டுள்ள இடத்துக்குப் பக்கத்தில், ஏபோத்தின் இடுப்புப்பட்டைக்குக் கொஞ்சம் மேலே பொருத்தினார்கள். 21 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு நீல நிற நாடாவால் இணைத்தார்கள். இதனால், மார்ப்பதக்கம் இடுப்புப்பட்டைக்கு மேலேயே, ஏபோத்தின் மேல் அசையாமல் நின்றது.
22 பின்பு அவர், ஏபோத்துக்கு உள்ளே போடுவதற்காகக் கையில்லாத ஒரு அங்கியை முழுக்க முழுக்க நீல நிற நூலால் நெய்தார்.+ 23 அதன் நடுவில் கழுத்துப் பகுதி இருந்தது. அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதி போல இருந்தது. கிழியாமல் இருப்பதற்காகச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் வைக்கப்பட்டிருந்தது. 24 அதன்பின் அவர்கள் நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றைத் திரித்து மாதுளம்பழங்களைப் போல செய்தார்கள். அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைத்தார்கள். 25 அதோடு, சுத்தமான தங்கத்தில் மணிகள்போல் செய்து, அந்த அங்கியின் கீழ் மடிப்பைச் சுற்றிலும் மாதுளம்பழங்களுக்கு இடையிடையே வைத்துத் தைத்தார்கள். 26 ஒரு மணி, ஒரு மாதுளம்பழம், ஒரு மணி, ஒரு மாதுளம்பழம் என்று குருத்துவச் சேவைக்கான அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைத்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
27 ஆரோனுக்காகவும் அவருடைய மகன்களுக்காகவும் உயர்தர நாரிழையால் நெய்யப்பட்ட அங்கிகளையும்,+ 28 தலைப்பாகையையும்,+ அலங்கரிக்கப்பட்ட முண்டாசையும்+ செய்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழையால் அரைக் கால்சட்டைகளையும்+ செய்தார்கள். 29 அதோடு, உயர்தரமான திரித்த நாரிழை, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இடுப்புக்கச்சையை நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
30 கடைசியாக, சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, முத்திரை பொறிப்பது போல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்”* என்று அதில் பொறித்தார்கள்.+ அதுதான் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்.* 31 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்டினார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
32 இப்படி, வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், அதாவது சந்திப்புக் கூடாரத்துக்கான எல்லா வேலைகளும், செய்து முடிக்கப்பட்டன. மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.+ அவர் சொன்னபடியே செய்தார்கள்.
33 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தை+ மோசேயிடம் அவர்கள் கொண்டுவந்தார்கள். அதாவது கூடாரம்,+ அதற்கான பொருள்கள், கொக்கிகள்,+ சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள், பாதங்கள்,+ 34 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால்+ செய்த மேல்விரிப்பு, கடல்நாய்த் தோலினால் செய்த மேல்விரிப்பு, திரைச்சீலை,+ 35 சாட்சிப் பெட்டி, அதன் கம்புகள்,+ மூடி,+ 36 மேஜை, அதன் பாத்திரங்கள்,+ படையல் ரொட்டிகள், 37 சுத்தமான தங்கத்தில் குத்துவிளக்கு, அதன் அகல் விளக்குகள்,+ அதற்கான பாத்திரங்கள்,+ விளக்குகளுக்கான எண்ணெய்,+ 38 தங்கப் பீடம்,+ அபிஷேகத் தைலம்,+ தூபப்பொருள்,+ கூடார வாசலுக்கான திரை,+ 39 செம்புப் பலிபீடம்,+ அதற்கான செம்புக் கம்பிவலை, கம்புகள்,+ பாத்திரங்கள்,+ தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 40 பிரகாரத்துக்கான மறைப்புகள், அவற்றின் கம்பங்கள், பாதங்கள்,+ பிரகார நுழைவாசலுக்கான திரை,+ கூடாரக் கயிறுகள், கூடார ஆணிகள்,+ வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்தில் பயன்படுத்துவதற்கான பாத்திரங்கள், 41 வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவருடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
42 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.+ 43 அவர்களுடைய வேலைகள் எல்லாவற்றையும் மோசே பார்வையிட்டார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர்கள் செய்திருந்ததைப் பார்த்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
40 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரத்தை, அதாவது சந்திப்புக் கூடாரத்தை, நீ அமைக்க வேண்டும்.+ 3 அதற்கு உள்ளே சாட்சிப் பெட்டியை வைத்து,+ திரைச்சீலை போட்டு அதை மறைத்துவிடு.+ 4 மேஜையை+ உள்ளே கொண்டுவந்து அதன்மேல் வைக்க வேண்டிய பொருள்களை வை. குத்துவிளக்கை+ உள்ளே கொண்டுவந்து வைத்து, அதன் அகல் விளக்குகளை+ ஏற்று. 5 சாட்சிப் பெட்டிக்கு முன்பக்கம் தங்கத்தாலான தூபபீடத்தை+ வைத்து, வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிடு.+
6 தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வாசலுக்கு முன்பக்கம் வை. 7 சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்று.+ 8 பின்பு, சுற்றிலும் பிரகாரம் அமைத்து,+ அதன் நுழைவாசலில் திரையைத் தொங்கவிடு.+ 9 அதன்பின், அபிஷேகத் தைலத்தை+ எடுத்து வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து,+ அதையும் அதிலுள்ள பாத்திரங்கள் எல்லாவற்றையும் புனிதப்படுத்து. அப்போது, அது பரிசுத்தமாகும். 10 தகன பலிக்கான பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து அந்தப் பலிபீடத்தைப் புனிதப்படுத்து. அப்போது, அது மகா பரிசுத்த பலிபீடமாகும்.+ 11 பின்பு, தொட்டியையும் அதை வைப்பதற்கான தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்து.
12 பிற்பாடு, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்தில் கூட்டிக்கொண்டு வந்து குளிக்க வை.*+ 13 பரிசுத்த உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டு,+ அவனை அபிஷேகம் செய்து,+ அவனைப் புனிதப்படுத்து. அவன் எனக்குக் குருத்துவச் சேவை செய்வான். 14 அதன்பின், அவனுடைய மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கும் அங்கிகளைப் போட்டுவிடு.+ 15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார்.
16 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே எல்லாவற்றையும் செய்தார்.+ அவர் அப்படியே செய்தார்.
17 இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட்டது.+ 18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார். 19 பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்மேல் விரிப்புகளை+ ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+ 21 பின்பு, சாட்சிப் பெட்டியை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் கொண்டுவந்து, திரைச்சீலை+ போட்டு அதை மறைத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
22 அடுத்ததாக, வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வடக்குப் பக்கத்தில் திரைச்சீலைக்கு வெளியே மேஜையை+ வைத்தார். 23 பின்பு, ரொட்டிகளை+ மேஜைமேல் அடுக்கி யெகோவாவின் முன்னிலையில் வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார். 25 யெகோவாவின் முன்னிலையில் விளக்குகளை+ ஏற்றினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
26 அடுத்ததாக, தங்கத்தாலான தூபபீடத்தை+ சந்திப்புக் கூடாரத்தில் திரைச்சீலைக்கு முன்னால் வைத்தார். 27 தூபப்பொருளை+ எரிப்பதற்காக+ அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
28 அதன்பின், வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலில் திரையைத்+ தொங்கவிட்டார்.
29 பின்பு, தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலாகிய சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வைத்தார். தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும் செலுத்துவதற்காக அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
30 அதன்பின், சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் தொட்டியை வைத்து, கைகால் கழுவுவதற்காக அதில் தண்ணீர் ஊற்றி வைத்தார்.+ 31 மோசேயும் ஆரோனும் அவருடைய மகன்களும் அந்தத் தண்ணீரை எடுத்துத் தங்கள் கைகால்களைக் கழுவினார்கள். 32 சந்திப்புக் கூடாரத்துக்கோ பலிபீடத்துக்கோ போகும்போதெல்லாம் அவர்கள் கைகால் கழுவினார்கள்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்துவந்தார்கள்.
33 கடைசியாக, வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிரகாரம்+ அமைத்து அதன் நுழைவாசலில் திரை+ போட்டார்.
இப்படி, எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தார். 34 அப்போது, சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது. வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 35 சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியிருந்ததாலும், வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவின் மகிமை நிறைந்திருந்ததாலும் மோசேயால் அதற்குள் நுழைய முடியவில்லை.+
36 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம், வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு மேகம் எழும்பிய சமயங்களில் மட்டுமே தங்கள் இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.+ 37 ஆனால், மேகம் கூடாரத்தின் மேல் தங்கியிருந்த சமயங்களில், அது மேலே எழும்பும் நாள்வரை புறப்படாமல் காத்திருந்தார்கள்.+ 38 பகலில் யெகோவாவின் மேகமும் ராத்திரியில் நெருப்பும் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் இருப்பதை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம் பார்த்தார்கள்.+
அதாவது, “பாப்பிரஸ் புல்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அர்த்தம், “எடுக்கப்பட்டவன்,” அதாவது, “தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவன்.”
வே.வா., “அந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசினார்.”
அதாவது, “எத்திரோ.”
அர்த்தம், “அங்கே ஓர் அன்னியன்.”
நே.மொ., “தகப்பனாகிய.”
வே.வா., “நான் என் கவனத்தைத் திருப்பி.”
வே.வா., “விரும்புகிறேனோ.”
இணைப்பு A4-ஐப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்களை.”
வே.வா., “சொத்துகளைச் சூறையாட.”
வே.வா., “நீ அவனுக்குக் கடவுளாக இருப்பாய்.”
ஒருவேளை, “மோசேயின் மகனை.”
நே.மொ., “சிக்கிமுக்கிக் கல்லை.”
வே.வா., “மூப்பர்கள்.”
இந்த உதவியாளர்கள் இஸ்ரவேலர்களின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வே.வா., “வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.”
வே.வா., “வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.”
அதாவது, “பார்வோன்மேல் அதிகாரம் உள்ளவனாக்கினேன்.”
அதாவது, “நைல் நதியின் கால்வாய்கள்.”
இதற்கான எபிரெய வார்த்தை, எகிப்தில் பொதுவாகக் காணப்பட்ட கொசுவைப் போன்ற ஒருவித பூச்சியைக் குறிக்கிறது.
நே.மொ., “விரலால்.”
இவை ஒருவகையான கடிக்கும் ஈக்கள்.
வே.வா., “எங்களோடு விளையாடக் கூடாது.”
நே.மொ., “உன் இதயத்துக்கும்.”
அதாவது, “பனிக்கட்டி.”
இவை ஒருவேளை பயங்கர மின்னல்களாக இருந்திருக்கலாம்.
இந்தச் செடியின் நாரிலிருந்துதான் லினன் என்ற நாரிழைத் துணி தயாரிக்கப்பட்டது.
பூர்வ எகிப்தில் பயிரிடப்பட்ட ஒருவகையான தரம்குறைந்த கோதுமை.
அதாவது, “பனிக்கட்டி.”
அநேகமாக, “மோசே.”
வே.வா., “திரிகைக் கல்லில் அரைக்கிற.”
அர்த்தம், “கடந்துபோகுதல்.”
வே.வா., “மூப்பர்கள்.”
அதாவது, “செம்மறியாட்டுக் குட்டியையோ வெள்ளாட்டுக் குட்டியையோ.”
ஒருவேளை, “பெரியோர்கள்.”
வே.வா., “சூறையாடினார்கள்.”
நே.மொ., “கால்நடையாகப் போன ஆண்கள்.” அநேகமாக, படை சேவைக்குத் தகுதி பெற்ற ஆண்கள்.
அதாவது, “எகிப்தியர்கள் உட்பட மற்ற தேசத்தாரில்.”
நே.மொ., “இஸ்ரவேலர்களையும் அவர்களுடைய எல்லா படைகளையும்.”
நே.மொ., “அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
அநேகமாக, “செங்கடலுக்கும்.”
அதாவது, “அதிகாலை சுமார் 2 மணிமுதல் 6 மணிவரை.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
நே.மொ., “நட்டு வைப்பீர்கள்.”
அர்த்தம், “கசப்பு.”
நே.மொ., “அங்குதான் கடவுள் அவர்களுக்கு ஒரு விதிமுறையையும் சட்டப்பூர்வ முன்னோடியையும் வகுத்துக் கொடுத்தார்.”
அதாவது, “சுமார் இரண்டு லிட்டர்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
“இது என்ன?” என்பதற்கான எபிரெய வார்த்தைகளிலிருந்து இந்தப் பெயர் அநேகமாக வந்திருக்கலாம்.
நே.மொ., “ஒரு சாட்சிக்கு.” இது ஒருவேளை முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பெட்டியாக இருந்திருக்கலாம்.
ஒரு எப்பா என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்கள்.”
அர்த்தம், “சோதித்துப் பார்த்தல்.”
அர்த்தம், “தகராறு செய்தல்.”
வே.வா., “எல்லாரும் நினைவில் வைப்பதற்காக.”
அர்த்தம், “யெகோவா என் கொடிக் கம்பம்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அர்த்தம், “அங்கே ஓர் அன்னியன்.”
அர்த்தம், “என் கடவுள்தான் எனக்குத் துணை.”
வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “மூப்பர்களை.”
ஒருவேளை, “அம்பையோ.”
அதாவது, “செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட ஊதுகொம்பின்.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் குரல் அவருக்குப் பதில் தந்தது.”
அதாவது, “ஆண் அடிமையையும், பெண் அடிமையையும்.”
வே.வா., “நல்லுறவு.”
அதாவது, “உண்மைக் கடவுளுக்கு முன்பாக.”
அல்லது, “அவர்.”
அல்லது, “கருவியாலோ.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “இரத்தப்பழியும்.”
கல்யாணம் செய்துகொள்ளப்போகிற பெண்ணுக்காக மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் பணம் இது.
வே.வா., “அநாதையையோ.”
வே.வா., “கனிவு.”
வே.வா., “கேவலமாக.”
அதாவது, “எண்ணெய் மற்றும் திராட்சரச ஆலைகளில்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வாரங்களின் பண்டிகை அல்லது பெந்தெகொஸ்தே பண்டிகை என்றும் இது அழைக்கப்பட்டது.
கூடாரப் பண்டிகை என்றும் இது அழைக்கப்பட்டது.
அல்லது, “பீதி.”
வே.வா., “மத்தியதரைக் கடல்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆறு.”
வே.வா., “மூப்பர்கள்.”
அநேகமாக, யாத்திராகமம் 20:22–23:33-ல் உள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய புத்தகமாக இருக்கலாம்.
அதாவது, “கடவுளின் மகிமையைப் பார்த்தார்கள்.”
அதாவது, “லினன்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “வடிவத்திலேயே.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பூ இதழ்களின் அடியில் உள்ளதும் அவற்றைத் தாங்குவதுமான இலை போன்ற பகுதிகள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “வடிவத்திலேயே.”
அதாவது, “லினன்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “நூல் வளையங்களை.”
இவை செங்கோண வடிவ சட்டங்கள்.
வே.வா., “கால்கள்.”
அதாவது, “சட்டங்களின் புடைப்பான பகுதிகளைப் பொருத்துவதற்கு ஏற்ற குழிகள்கொண்ட அடிபீடங்கள்.”
வே.வா., “வடிவத்திலேயே.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “வடிவத்திலேயே.”
அதாவது, “லினனில்.”
வே.வா., “வளையங்களையும்.”
அதாவது, “லினன்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
எபிரெயுவில், “லேசேம்.” இது உண்மையில் எந்தக் கல் என்பது தெரியவில்லை.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “பரிசுத்தம் யெகோவாவுடையது.”
ஒருவேளை, “குளிக்கச் சொல்.”
அதாவது, “அதன்மேல் பரிசுத்த மகுடத்தை வை.”
அதாவது, “நெஞ்சுப் பகுதியை.”
அதாவது, “அவனுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.”
அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவர்கள்.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தகாத விதத்தில்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு கேரா என்பது 0.57 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “உயிருக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தூபம் காட்டவும்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
நே.மொ., “ஒரு ஹின்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தைலம் தயாரிப்பவர் செய்வதைப் போல.”
அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவன்மேல்.”
நே.மொ., “விரலால்.”
நே.மொ., “வளையாத கழுத்து உள்ளவர்கள்.”
வே.வா., “தோல்வியினால் பாடும் ஒப்பாரிப் பாடலின்.”
வே.வா., “உன் பெயரை.”
வே.வா., “நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”
வே.வா., “உன் பெயரை.”
வே.வா., “நான் எப்படிப்பட்டவர் என்று சொல்வேன்.”
வே.வா., “தான் எப்படிப்பட்டவர் என்று சொன்னார்.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “நம்பிக்கையானவர்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “அவற்றைக் கும்பிட்டு எனக்குத் துரோகம் பண்ணும்படி செய்துவிடுவார்கள்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
கூடாரப் பண்டிகை என்றும் இது அழைக்கப்பட்டது.
அதாவது, “லினன்.”
இவை அநேகமாக உடைகளில் குத்திக்கொள்ளும் அலங்காரப் பின்களாக இருந்திருக்கலாம்.
வே.வா., “அசைவாட்டும் காணிக்கையாக.”
வே.வா., “எம்பிராய்டரி.”
அதாவது, “லினன்.”
அநேகமாக, “பெசலெயேல்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “நூல் வளையங்களை.”
இவை செங்கோண வடிவ சட்டங்கள்.
வே.வா., “கால்கள்.”
அதாவது, “சட்டங்களின் புடைப்பான பகுதிகளைப் பொருத்துவதற்கு ஏற்ற குழிகள்கொண்ட அடிபீடங்களை.”
அதாவது, “வளையங்களுக்கும்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பூ இதழ்களின் அடியில் உள்ளதும் அவற்றைத் தாங்குவதுமான இலை போன்ற பகுதிகள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தைலம் தயாரிப்பவர் செய்வது போல.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “நன்கு பளபளப்பாக்கப்பட்ட உலோகக் கண்ணாடிகளால்.” அவை முகம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.
அதாவது, “லினனில்.”
வே.வா., “வளையங்களையும்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “அசைவாட்டும் காணிக்கையாக.”
இந்த வசனத்திலும் 3, 7, 8, 22 ஆகிய வசனங்களிலும் “அவர்” என்பது அநேகமாக பெசலெயேலைக் குறிக்கலாம்.
அதாவது, “லினன்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
எபிரெயுவில், “லேசேம்.” இது உண்மையில் எந்தக் கல் என்பது தெரியவில்லை.
நே.மொ., “பரிசுத்தம் யெகோவாவுடையது.”
வே.வா., “அதுதான் பரிசுத்த மகுடம்.”
ஒருவேளை, “குளிக்கச் சொல்.”